Monday, May 17, 2010

விரைவில்: "கிரேக்க மக்கள் சோஷலிச குடியரசு"?


(Athens, 15-5-2010)"கிரீசில் புதிய அரசியல் நிர்ணயச் சட்டம். நீதிபதிகள் மக்களால் தெரிவு செய்யப் படுவர். தொழிலகங்களும், அலுவலகங்களும் தொழிலாளர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் தலைமை தாங்கப்படும். கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் இலவசம். பாடசாலைகளிலும், தொழிலகங்களிலும் இலவச மதிய உணவு வழங்கப்படும். வேறு பல திட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும்." - கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகம் திருமதி பபாரிகாவின் உரையில் இருந்து சில பகுதிகள். KKE அணிவகுப்பும், பபாரிகாவின் உரையும் அடங்கிய வீடியோ இது:

50000 தொடக்கம் 70000 வரையிலான KKE என்ற கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஏதென்ஸ் நகரின் மையப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்தை கூட சுற்றி வளைத்திருந்தனர். கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரின் உரையானது, லெனின் தலைமையிலான போல்ஷெவிக் கட்சி முன்மொழிந்த ஏப்ரல் தீர்மானத்தை ஒத்திருந்ததாக பார்வையாளர்கள் கூறினார்கள். போல்ஷெவிக் கட்சியினர், 1917 ம் ஆண்டு, இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து விட்டு "பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை" நிலைநிறுத்த விரும்பினர். லெனினின் "என்ன செய்ய வேண்டும்?" கோட்பாடு கிரீசில் நடைமுறைப் படுத்தப்படுமா?

35 comments:

Jai said...

1989 கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கு பிறகும் இவர்கள் கனவுலகில் இருந்து மீளவில்லை என்பது தெரிகிறது.

Kalaiyarasan said...

ஜெய், கம்யூனிசம் எங்கேயும் விழவில்லை. கம்யூனிசத்தின் பெயரில் ஆட்சி செய்த அதிகார வர்க்கம் தான் வீழ்ந்தது. ஐரோப்பாவில் அதிகாரத்தில் இருந்த கிறிஸ்தவ மத அரசுகள் விழுந்தாலும், இன்றைக்கும் கோடிக்கணக்கான மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறார்கள்.

மக்கள் தமது நலன் பேணும் அரச அமைப்பை நாடுவது இயற்கை. அதை நீங்கள் கம்யூனிசம் என்று சொன்னாலும் சரி, வேறு எந்தப் பெயரில் அழைத்தாலும் சரி. கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள "நலன்புரி அரசுகளும்" ஒரு வகை கம்யூனிசம் தான். அது இல்லாமல் போகும் பொழுது மக்கள் மாற்று வழிக்காக போராடுவார்கள்.

ஜெய் உங்களை மட்டும் வைத்துக் கொண்டு உலகத்தைப் பார்க்காதீர்கள். உங்களுக்கு நிலையான வருமானம் இருக்கிறது, வசதியான வாழ்க்கை கிடைக்கிறது. (தினசரி நீங்கள் பின்னூட்டமிட உதவும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி கூட பல கோடிப் பேருக்கு கிட்டுவதில்லை.) உலகில் எல்லோருக்கும் உங்களைப் போல வாழ்க்கை அமைந்து விட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. எல்லோரும் கம்யூனிசத்தையும், பொதுத் துறையையும் திட்டித் தீர்த்துக் கொண்டே காலம் தள்ளலாம்.

Jai said...

//ஜெய், கம்யூனிசம் எங்கேயும் விழவில்லை. கம்யூனிசத்தின் பெயரில் ஆட்சி செய்த அதிகார வர்க்கம் தான் வீழ்ந்தது. ஐரோப்பாவில் அதிகாரத்தில் இருந்த கிறிஸ்தவ மத அரசுகள் விழுந்தாலும், இன்றைக்கும் கோடிக்கணக்கான மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறார்கள். //

பொருத்தமில்லாத ஒப்பீடு.ஆனால் லெனின்,ஸ்டாலின் சிலையை உடைத்து ரஷ்யமக்கள் ஊர்வலம் விட்டது போல ஏசுகிறிஸ்து சிலைகளை உடைத்து ஐரோப்பிய மக்கள் ஊர்வலம் விடவில்லையே?



//கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள "நலன்புரி அரசுகளும்" ஒரு வகை கம்யூனிசம் தான்.//

அதேவகை கம்யூனிசம் அங்கே தொடரட்டும்:-)

//ஜெய் உங்களை மட்டும் வைத்துக் கொண்டு உலகத்தைப் பார்க்காதீர்கள். உங்களுக்கு நிலையான வருமானம் இருக்கிறது, வசதியான வாழ்க்கை கிடைக்கிறது. (தினசரி நீங்கள் பின்னூட்டமிட உதவும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி கூட பல கோடிப் பேருக்கு கிட்டுவதில்லை.) //

நிலையான வாழ்க்கை? வருமானம்??உங்கள் வாய்முகூர்த்தம் பலித்தாவது எனக்கு நிரந்தர வருமானமும், வேலையும் கிட்டட்டும்.

Kalaiyarasan said...

//பொருத்தமில்லாத ஒப்பீடு.ஆனால் லெனின்,ஸ்டாலின் சிலையை உடைத்து ரஷ்யமக்கள் ஊர்வலம் விட்டது போல ஏசுகிறிஸ்து சிலைகளை உடைத்து ஐரோப்பிய மக்கள் ஊர்வலம் விடவில்லையே? //
இரண்டுமே பொருந்துகின்ற ஒப்பீடுகள் தான். மதத்தில் இருந்து கடவுளை பிரித்து விட்டால், கிறிஸ்தவம் எங்களது வாழ்க்கை நெறி என்று சொல்வார்கள். ஐரோப்பாவில் அரசியல் அதிகாரம் இன்றி கிறிஸ்தவ மதம் பரவியிருக்க வாய்ப்பில்லை. லெனின், ஸ்டாலின் சிலையை உடைத்தது கம்யூனிச எதிர்ப்பாளர்கள். அவர்களது ஆட்சிக் காலம் வந்தவுடன் தமது எதிரிகளின் சிலைகளை உடைத்தார்கள். அவர்களை மக்கள் என்று பொத்தாம் பொதுவில் குறிப்பிடுவது தவறு. அதே போல ரஷ்யாவில் கம்யூனிஸ்ட்கள் (அவர்களும் பிறப்பால் கிறிஸ்தவர்கள் தான்) ஆட்சிக்கு வந்த பொழுது ஏசு கிறிஸ்து சிலைகள் என்ன, தேவாலயங்கள் கூட உடைக்கப்பட்டதாக புத்தகம் புத்தகமாய் எழுதி வைத்திருக்கிறார்களே, படிக்கவில்லையா? மேற்கு ஐரோப்பாவில் கத்தோலிக்க அரசு அதிகாரத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் ஏசு சிலைகளை உடைத்து ஊர்வலம் போனார்கள். நேரமிருந்தால் ஐரோப்பிய சரித்திரத்தை ஒரு முறை படித்துப் பாருங்கள்.

Jai said...

சரி.பொருத்தமான உவமை என்றே வைத்துகொள்வோம்.

கம்யூனிசம் தன் வீழ்ச்சியிலிருந்து என்ன பாடம் கற்றுகொண்டது? மீண்டும் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தால் அதை ஓட்டுசீட்டின் மூலம் மக்கள் அகற்ற முடியுமா? பத்திரிக்கை சுதந்திரம் இருக்குமா? கருத்து சுதந்திரம் இருக்குமா? எதிர்கட்சிகள் இயங்க அனுமதிக்கபடுமா?

Kalaiyarasan said...

//கம்யூனிசம் தன் வீழ்ச்சியிலிருந்து என்ன பாடம் கற்றுகொண்டது?//
மன்னிக்கவும். ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் ஆளும்வர்க்கம் என்று திருத்திக் கொள்ளவும். அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி சந்தைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியாக கருதப் பட்டது. (தீவிர பக்தர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.) அதிலிருந்து முதலாளித்துவ ஆதரவாளர்கள் என்ன பாடம் கற்றுக் கொண்டார்கள்? ஐரோப்பாவில் கத்தோலிக்க அரசுகளின் வீழ்ச்சியில் இருந்து வத்திக்கான் என்ன பாடம் கற்றுக் கொண்டது? எல்லோரும் தவறு விடுவதுண்டு. புஷ் தவறு விட்டதாக கூறி ஒபாமா திருத்திக் கொள்கிறார். கம்யூனிச இயக்கத்திலும் தொடர்ச்சியாக தவறுகளை விமர்சிப்பதும் பாடம் கற்றுக் கொள்வதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. தான் தவறே செய்வதில்லை என்று நினைப்பது தனி மனித குணாம்சம். அப்படியானவர்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள்.

//மீண்டும் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தால் அதை ஓட்டுசீட்டின் மூலம் மக்கள் அகற்ற முடியுமா?//
இன்றைய (முதலாளித்துவ) ஜனநாயக நாடுகள் சிலவற்றில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஓட்டுச் சீட்டு மூலம் மக்கள் அகற்றினார்கள். அது பத்தோடு பதினோராவது கட்சியாக தான் ஆட்சிக்கு வந்ததே தவிர வேறெந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடவில்லை. அரச நிர்வாக முறையை, பொருளாதாரத்தை மாற்றுவதென்றால் அது சாதாரணமாக தெரிவு செய்யப்படும் எந்தக் கட்சியாலும் முடியாது. அதற்கு கடுமையான எதிர்ப்பு வரும். வன்முறை கூட பிரயோகிப்பார்கள். எத்தனையோ நாடுகளில் ஜனநாயக வழியில் வந்த அரசுகள் வன்முறை மூலம் அகற்றப்பட்டுள்ளன. நீங்கள் நினைப்பதைப் போல ஓட்டுச் சீட்டின் மூலம் மாற்றம் கொண்டு வருவது சொகுசு அரசியல்.

//பத்திரிக்கை சுதந்திரம் இருக்குமா? கருத்து சுதந்திரம் இருக்குமா? எதிர்கட்சிகள் இயங்க அனுமதிக்கபடுமா?//
உலகில் முதலாளித்துவமும், சந்தைப் பொருளாதாரமும் 500 ஆண்டுகளாக தான் நடைமுறையில் உள்ளன. நீங்கள் கேட்கும் சுதந்திரம் எல்லாம் அண்மைக்காலமாக, அதாவது கடந்த 100 வருடங்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள். அது வரையும் சர்வாதிகாரம், அடக்குமுறை தான். ஓட்டுப் போடும் உரிமை, எதிர்க்கட்சி, பத்திரிகை சுதந்திரம் பற்றி எல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாத காலம் ஒன்று இருந்தது.

Jai said...

//மன்னிக்கவும். ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் ஆளும்வர்க்கம் என்று திருத்திக் கொள்ளவும். அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி சந்தைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியாக கருதப் பட்டது. (தீவிர பக்தர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.) அதிலிருந்து முதலாளித்துவ ஆதரவாளர்கள் என்ன பாடம் கற்றுக் கொண்டார்கள்? ஐரோப்பாவில் கத்தோலிக்க அரசுகளின் வீழ்ச்சியில் இருந்து வத்திக்கான் என்ன பாடம் கற்றுக் கொண்டது? எல்லோரும் தவறு விடுவதுண்டு. புஷ் தவறு விட்டதாக கூறி ஒபாமா திருத்திக் கொள்கிறார். கம்யூனிச இயக்கத்திலும் தொடர்ச்சியாக தவறுகளை விமர்சிப்பதும் பாடம் கற்றுக் கொள்வதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. தான் தவறே செய்வதில்லை என்று நினைப்பது தனி மனித குணாம்சம். அப்படியானவர்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள். //

ஆக ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை ஒத்துகொள்கிறீர்கள்.அது என்ன என்பதை இன்னும் சொல்லவில்லை.கம்யூனிசம் கற்ற பாடம் என்ன என்பதையும் சொல்லவில்லை.கம்யூனிச அரசுக்கும் கம்யூனிசத்துக்கும் சின்ன,சின்ன வித்தியாசம் உண்டு என்பதுசரி.ஆனால் மீண்டும் கம்யூனிசத்தை அதிகாரத்துக்கு கொண்டுவர உங்களுக்கு அரசு அமைப்பு தானே தேவைபடுகிறது? அடிப்படையே கோளாறாக இருந்ததால் தான் சீட்டுகட்டுகள் போல அத்தனை கம்யூனிச அரசுகளும் சரிந்தன?இன்றும் இருக்கும் வடகொரியா, கியூபா போன்ற கம்யூனிச அரசுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.(உலகின் அனைத்து நாடுகளையும் அலசி ஆராயும் நீங்கள் ஏனோ வடகொரியாவை பற்றி எழுதவே இல்லை.)உங்கள் கொள்கையின் தவறுகளை அலசி ஆராயும் அளவுக்கு சார்பற்ற நிலை கம்யூனிஸ்டுகளுக்கு உள்ளதா?இதுவரை அப்படி ஒரு ஆய்வும் நடந்ததாக தெரியவில்லை.

மக்களிடம் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய மக்களிடம் மீண்டும் கம்யூனிச ஆட்சிமுறையை நோக்கி போக இருக்கிறோம் என கூறும் கம்யூனிஸ்டு கட்சிகள் இப்படி ஒரு ஆய்வை நடத்தி அதை மக்கள் முன்வைக்க வேண்டியது அவசியம் இல்லையா? ஸ்டாலினின், மாவோவின் படுகொலைகள் எல்லாம் மீண்டும் நிகழாது என உத்திரவாதம் அளிக்கவேண்டும் அல்லவா? இன்னும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என தான் கம்யூனிஸ்டுகள் கூறி வருகிறார்கள். உங்கள் நிலை என்னவோ?

//அரச நிர்வாக முறையை, பொருளாதாரத்தை மாற்றுவதென்றால் அது சாதாரணமாக தெரிவு செய்யப்படும் எந்தக் கட்சியாலும் முடியாது. அதற்கு கடுமையான எதிர்ப்பு வரும். வன்முறை கூட பிரயோகிப்பார்கள். எத்தனையோ நாடுகளில் ஜனநாயக வழியில் வந்த அரசுகள் வன்முறை மூலம் அகற்றப்பட்டுள்ளன. நீங்கள் நினைப்பதைப் போல ஓட்டுச் சீட்டின் மூலம் மாற்றம் கொண்டு வருவது சொகுசு அரசியல். //

ஆக நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஓட்டுசீட்டு மூலம் அரசை மாற்றும் உரிமை மக்களுக்கு கிடையாது என புரிந்துகொள்கிறேன்.சரியா,தவறா?

//உலகில் முதலாளித்துவமும், சந்தைப் பொருளாதாரமும் 500 ஆண்டுகளாக தான் நடைமுறையில் உள்ளன. நீங்கள் கேட்கும் சுதந்திரம் எல்லாம் அண்மைக்காலமாக, அதாவது கடந்த 100 வருடங்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள். அது வரையும் சர்வாதிகாரம், அடக்குமுறை தான். ஓட்டுப் போடும் உரிமை, எதிர்க்கட்சி, பத்திரிகை சுதந்திரம் பற்றி எல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாத காலம் ஒன்று இருந்தது.//

அந்த கற்காலத்துக்கு மீண்டும் மக்களை அழைத்து செல்வதுதான் கம்யூனிஸ்டு கட்சிகளின் செயல்திட்டமா? ஓட்டுரிமை, எதிர்கட்சி, பத்திரிக்கை சுதந்திரம் அனைத்தையும் ஏற்கிறீர்களா, மறுக்கிறீர்களா?

Kalaiyarasan said...

ஜெய், நீங்கள் ஏற்கனவே எடுத்து வைத்துக் கொண்டுள்ள முடிவுகளிலேயே (அது சரியா, பிழையா என்பதைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லை) இப்போதும் நின்று கொண்டிருக்கிறீகள். எதையும் புரிந்து கொள்ளக் கூடாது தனது மனதிற்கு தானே பூட்டு போட்டுக் கொள்பவர்களிடம் பேசிப் பயனில்லை.

//ஆக ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை ஒத்துகொள்கிறீர்கள்.அது என்ன என்பதை இன்னும் சொல்லவில்லை.//
நீங்கள் தீவிரமாக ஆதரவளிக்கும் முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம், தனியார் துறை போன்ற சித்தாந்தங்களில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? அது என்ன என்பதை சொல்வீர்களா? அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலக நாடுகள் எல்லாம் பரவி சீட்டுக் கட்டுகள் போல சரிந்ததற்கு அடிப்படை கோளாறு தான் காரணம் என்று ஒத்துக் கொள்கிறீர்களா? கிறீஸ் திவாலானால் பொதுத்துறையில் குற்றம் கண்டுபிடிப்பீர்கள். பாகிஸ்தான் திவாலானால் ஆட்சியாளரின் குளறுபடி என்பீர்கள். ஆனால் எப்போதாவது பொருளாதார அடிப்படை கோளாறு தான் காரணம் ஏற்றுக்கொண்டிருக்கிரீர்களா? இல்லையே!

//இன்றும் இருக்கும் வடகொரியா, கியூபா போன்ற கம்யூனிச அரசுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.(உலகின் அனைத்து நாடுகளையும் அலசி ஆராயும் நீங்கள் ஏனோ வடகொரியாவை பற்றி எழுதவே இல்லை.)//
வட கொரியாவை பற்றி குறைந்தது இரண்டு பதிவுகளாவது போட்டிருக்கிறேன். பார்க்கவில்லையா? வடகொரியா, கியூபா போன்ற நாடுகளுடன் உலகில் யாரும் தொடர்பு வைக்கக் கூடாது என்று ஒதுக்கி வைப்பவர்களும், அதை ஆதரிப்பவர்களுக்கும் மோசமான நிலை குறித்து பேச தகுதியற்றவர்கள்.
//உங்கள் கொள்கையின் தவறுகளை அலசி ஆராயும் அளவுக்கு சார்பற்ற நிலை கம்யூனிஸ்டுகளுக்கு உள்ளதா?இதுவரை அப்படி ஒரு ஆய்வும் நடந்ததாக தெரியவில்லை.//
நீங்கள் எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியில் எத்தனை வருடம் இருந்திருக்கிரீகள்? நீங்கள் சார்ந்த முதலாளித்துவ முகாமில் தவறுகளை அலசி ஆராயததால் தானே இப்போதும் கிறீஸ் தனியார் கையில் போனால் சுபீட்சம் அடையும் என்று மந்திரம் ஓதிக் கொண்டிருக்கிறீர்கள்? அதன் அர்த்தம் தனியார் துறையில் அப்படி ஒரு ஆய்வும் நடக்கவில்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள்.

//ஸ்டாலினின், மாவோவின் படுகொலைகள் எல்லாம் மீண்டும் நிகழாது என உத்திரவாதம் அளிக்கவேண்டும் அல்லவா? இன்னும் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என தான் கம்யூனிஸ்டுகள் கூறி வருகிறார்கள். உங்கள் நிலை என்னவோ?//
அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற பூர்வீக மக்களின் இனப்படுகொலைகள் மீண்டும் நடக்காது என்று யாராவது உத்திரவாதம் அளிப்பார்களா? ஜப்பானில் அணுகுண்டு படுகொலைகள், ஈராக்கில் எண்ணைக்காக நடந்த படுகொலைகள், கொங்கோவில் கனிம வளத்திற்காக நடந்த படுகொலைகள் எல்லாம் மீண்டும் நிகழாது என்று உத்திரவாதம் கொடுப்பார்களா? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று முதலாளித்துவ/தனியார் துறை ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். உங்கள் நிலை என்னவோ?

//ஆக நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஓட்டுசீட்டு மூலம் அரசை மாற்றும் உரிமை மக்களுக்கு கிடையாது என புரிந்துகொள்கிறேன்.சரியா,தவறா?//
உண்மையில் ஓட்டுச் சீட்டு மூலம் அரசை மாற்றுவது சாத்தியமற்றது (ஆட்கள் மாறுவார்கள், ஆட்சிமுறை அப்படியே இருக்கும்) என்று நீங்கள் ஒத்துக் கொள்வதாக புரிந்து கொள்கிறேன். சரியா, தவறா?

//அந்த கற்காலத்துக்கு மீண்டும் மக்களை அழைத்து செல்வதுதான் கம்யூனிஸ்டு கட்சிகளின் செயல்திட்டமா? ஓட்டுரிமை, எதிர்கட்சி, பத்திரிக்கை சுதந்திரம் அனைத்தையும் ஏற்கிறீர்களா, மறுக்கிறீர்களா? //
இன்றைய முதலாளித்துவ/ தனியார்துறை தனக்கென ஒரு கற்காலத்தை கொண்டிருந்தது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். அதற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எதற்கு முடிச்சுப் போடுகிறீர்கள்? ஓட்டுரிமை, எதிர்க்கட்சி, பத்திரிகை சுதந்திரம் எல்லாம் குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே சாத்தியம். அவர்களுக்கு பூரண சுதந்திரம் இருந்திருந்தால் உங்கள் சிந்தனையிலும் மாற்றம் வந்திருக்கும். சில பத்திரிகைகள் திணிக்கும் தவறான கருத்துகளை உண்மை என்று நம்பி, என்னோடு வாதிட்டுக் கொண்டிருக்க மாட்டீர்கள். இவை எல்லாம் மாயை என்பதை நிரூபிக்க உங்களையே உதாரணமாக காட்டலாம்.

Anonymous said...

//கனடா மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள "நலன்புரி அரசுகளும்" ஒரு வகை கம்யூனிசம் தான்.//
இவ்வளவு காலமும் முதளாளித்துவ சுரண்டல் நாடுகள் என்று கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகளை துற்றினார்கள். இப்போ கதை மாறுதே! நல்லது. கனடா,மேற்கு ஐரோப்பிய நாடுகளை பின்னற்றும் வழிதான் கிரீசுக்கும் நல்லது, உலகத்திற்கும் நல்லது.

Kalaiyarasan said...

//கனடா,மேற்கு ஐரோப்பிய நாடுகளை பின்னற்றும் வழிதான் கிரீசுக்கும் நல்லது, உலகத்திற்கும்//
அவர்களது நாடுகளில் அவர்களின் மக்களை பாதுகாக்க நலன்புரி அரசு என்ற அமைப்பைக் கொண்டுள்ளார்கள். ஆனால் அதையே கிறீஸ் உட்பட பிற நாடுகளும் பின்பற்ற விரும்பினால் விட மாட்டார்கள். ஏழைகளை சுரண்டும் முதலாளி தனது குடும்பத்தையும், உறவினர்களையும் நன்றாகப் பராமரிப்பதில்லையா? அது போலத் தான் இதுவும். ஆமாம் இந்த இரட்டை அளவுகோலை தான் ஒவ்வொரு விஷயத்திலும் பின்பற்றுகிறார்கள். அதனால் அவற்றை முதலாளித்துவ சுரண்டல் நாடுகள் என்று சொல்வதும் சரி தான்.

Jai said...

கேள்விக்கு பதில் கேள்விதான் பதிலா?

என் எந்த கேள்விக்கும் நீங்கள் பதில் கூறவே இல்லை.எங்கோ இந்தோனேசியாவில் 1947ல் நானூறு பேரை டச்சுகாரர்கள் கொன்றதை பற்றி ஆவேசமாக பதிவு போட்டீர்கள். அதே காலகட்டத்தில் நடந்த உக்ரெயின் படுகொலைகள், கலாசார புரட்சி, வடகொரியாவில் இன்னமும் நடக்கும் பட்டினிசாவுகள், அரசியல் கைதிகளை விசாரணையின்றி கொல்லுதல், ஜெயிலில் சித்ரவதைபடுத்தல்..அனைத்துக்கும் உங்களிடம் இருக்கும் பதில் "காங்கோவை பார், இராக்கை பார்" என்பதுதானா?

கலையரசன் என்ற மனித உரிமையாளரிடம் (அப்படித்தான் இதுகாறும் நினைத்திருந்தேன்) இதுசம்பந்தமாக வரும் பதில்கள் நிறையவே ஏமாற்றம் அளிக்கின்றன.

ஜனநாயகம், பத்திரிக்கை சுதந்திரம்,எதிர்கட்சி என அனைத்தையும் மறுக்கிறீர்கள் என்பதை உங்கள் பதில்கள் மூலம் புரிந்துகொள்கிறேன்.இதனாலேயே முன்பு கம்யூனிச அரசுகள் வீழ்ந்தன.அவற்றின் தவறுகளை சுட்டிகாட்டும் எந்த அமைப்பும் அந்த நாடுகளில் இல்லை.இருந்தவை எல்லாம் தணிக்கை செய்யப்பட்ட அரசு செய்திதாள்களே.உங்கள் ஆட்சி வந்தால் மீண்டும் அதே நிலையே தொடரும் என்பதுதான் உங்கள் பதில்கள் மூலம் தெரிகிறது.(தவறாக புரிந்துகொண்டிருந்தால் விளக்கவும்)

ஓட்டுசீட்டு மூலம் ஒருநாட்டின் ஆட்சிமுறையை, அரசியல் சட்டத்தையே மாற்றி அமைக்கலாம்.அதற்கு தேவை பெருவாரியான மக்கள் ஆதரவு.அதை தக்கவைக்கும் அரசியல் தலைமை.தொடர்ந்து தேர்தல்களில் ஜெயிக்கும் அளவுக்கு செயல்பாடு.இதை செய்வதுதான் நிஜமான புரட்சி.மக்களுக்கு ஒன்றும் தெரியாது,நாம் புரட்சி செய்து ஆட்சியை பிடிக்கலாம் என ஓட்டுசீட்டை விட்டுவிட்டு ஆயுத உதவியை நாடுவது மேட்டிமைதனம்.மக்களின் தேர்வை நீங்கள் இந்த இடத்தில், அது எத்தனை அபத்தமாக உங்கள் கண்ணுக்கு பட்டாலும், நீங்கள் ஏற்கவில்லை,உங்கள் தேர்வை அவர்கள் மேல் திணிக்க விரும்புகிறீர்கள் என்றே பொருள் ஆகிறது.

முதலில் கேள்வி கேட்டவன் என்ற முறையில், என் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கேள்வி கேட்காமல் நேரடியான பதில்களை அளித்தால் நீங்கள் கேட்ட ஐரோப்பிய/அமெரிக்க பொருளாதார மந்தநிலை,அதில் தனியார்துறையின் பங்கு அனைத்துக்கும் நான் பதில் அளிக்க தயார்.அப்படி பதில் அளிக்கும்போது "சோவியத் பொருளாதாரத்தை விட கோல்ட்மென் சாக்ஸ் நல்லது" என்று கட்டாயமாக உங்கள் பாணியில் ஒப்பிட்டு பதில் கேள்வி மூலம் பதில் அளிக்கமாட்டேன்.

பதில் கேள்விகளை விடுத்து கீழ்காணும் என் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியுமா என முயன்று பாருங்கள்.ஆம், இல்லை என ஒருவரி பதிலே போதும்.

1) ஓட்டுரிமை, எதிர்கட்சி, பத்திரிக்கை சுதந்திரம் அனைத்தையும் ஏற்கிறீர்களா, மறுக்கிறீர்களா?

2) ஸ்டாலின்,மாவோ காலத்தில் படுகொலைகள் நிகழ்ந்தனவா இல்லையா?

Kalaiyarasan said...

ஜெய், "கம்யூனிஸ்ட்கள் படுகொலை செய்தார்கள். எதிர்க்கட்சிகளுக்கு, பத்திரிகைகளுக்கு சுதந்திரம் கொடுக்க மறுத்தார்கள்" இப்படி சொல்லிச் சொல்லியே மக்களுக்கு கம்யூனிச பூச்சாண்டி காட்டுபவர்கள், அவர்களை விட தாம் சிறந்தவர்கள் என்று சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இந்தோனேசியப் படுகொலை, ஈராக் படுகொலைகளை மக்களுக்கு சொல்லாமல் மறைக்க எத்தனிப்பவர்களுக்கு உக்ரைன், வடகொரியா பற்றி பேச தகுதி இல்லை.
இப்போதும் அமெரிக்க/ஐரோப்பிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை என்று தான் சொல்கிறீர்கள். பொருளாதாரமே அடிப்படையில் கோளாறு என்று ஒத்துக் கொள்ளவில்லை.

ஓட்டுச் சீட்டு மூலம் ஒரு நாட்டின் ஆட்சியை மாற்றலாம் என்றால், ஏன் சிலி, இந்தோனேசியா, குவாதமாலா ஆகிய நாடுகளில் பெருவாரியான மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசு தூக்கி எறியப்பட்டது? சதிப்புரட்சியில் ஜனநாயக அமெரிக்கா பங்கெடுக்க காரணம் என்ன? இவற்றை எல்லாம் நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள். அப்படியான ஒருவருக்கு எதைச் சொல்லியும் புரிய வைக்க முடியாது. எத்தனை விளக்கம் கொடுத்தாலும் சுவரில் எறிந்த பந்து போல திரும்பி வரும். ஜனநாயகம், பத்திரிக்கை சுதந்திரம் பற்றி பேசும் ஒருவர் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். மறுபக்க கருத்துகளை கேட்க மாட்டேன் என்று தனது மனதுக்கு பூட்டு போட்டுக் கொண்டால், அந்த சுதந்திரத்திற்கு மதிப்பு இல்லை என்று அர்த்தம். அப்படிப்பட்ட சுதந்திரம் இருந்தாலும் ஒன்று தான், இல்லாவிட்டாலும் ஒன்று தான்.

Jai said...

என் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லாததன் மூலம் கம்யூனிச ஆட்சியில் மீண்டும் ஜனநாயகம்,பத்திரிக்கை சுதந்திரம், எதிர்கட்சி ஆகியவை இருக்காது எனவும், ஸ்டாலின், மாவோ காலத்திய படுகொலைகள் நடந்ததை நீங்கள் மறுக்கவிரும்பவில்லை என்றும் புரிந்துகொள்கிறேன்.இல்லை என்றால் அறியதாருங்கள்.

இது குறித்து மேலே விவாதம் நடத்த நீங்கள் பதில் அளிக்க மறுப்பது தடையாக உள்ளது.அதனால் நான் முன்பு வாக்களித்தபடி நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு உங்கள் பாணியில் பதில் கேள்வி கேட்காமல் நேரடியாக பதில் சொல்கிறேன்:-)))

வங்கிகள் சரிவு/பொருளாதார மந்தநிலை:

இந்த நிலை உருவாக காரணம் ரியல் எஸ்டேட்டில் நடந்த கண்மூடிதனமான முதலீடுகள்.சிட்டி வங்கி, பான்க் ஆப் அமெரிக்கா முதலிய வங்கிகள் நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு மார்ட்கேஜ் செக்யூரிட்டிகளை ஏ கிளாஸ் முதலீடாக சந்தையில் பரிவர்த்தனை செய்தன.ரியல் எஸ்டேட் விழுந்தபோது இந்த வங்கிகளில் மக்கள் செய்திருந்த முதலீடும் ஆபத்துகுள்ளாகும் சூழல் நேர்ந்தது.பொருளாதாரம் பாதிக்கபட்டது.

அமெரிக்க பெடெரல் ரிசர்வ் இவ்விஷயத்தில் பல நல்ல முயற்சிகளை எடுத்து அமெரிக்க வங்கிகளை சரிவிலிருந்து காப்பாற்றியது.இன்று இந்த வங்கிகள் மேல் அதிக கட்டுபாடுகள் விதிக்கும் நிதிமசோதா அமெரிக்க செனெட், காங்கிரஸில் விவாதிக்கபட்டு வருகிறது.வங்கிகளில் இருப்பது பொதுமக்கள் முதலீடு என்பதால் இத்தகைய கட்டுபாடுகள் நியாயமானவையே என்றே கருதுகிறேன்.பல வங்கிகளின் தலைவர்கள் பதவி விலகினர்.பல வங்கிகளின் பங்குமதிப்பு அதிரடியாக வீழ்ந்து பங்குதாரர்களின் பணம் துடைத்தெறீயப்பட்டது.தவறான நிர்வாகம் செய்தால் இதுதான் அந்த நிறுவனங்களூக்கு கிடைக்கும் தண்டனை என்பதால் இதில் நான் வருத்தப்பட ஒன்றுமில்லை.

இது குறித்து மேலதிக கேள்விகள் உள்ளனவா? இருந்தால் கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.

Kalaiyarasan said...

ஜெய், உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இதோ. உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா பார்ப்பாபோம்.
1) ஓட்டுரிமை, எதிர்கட்சி, பத்திரிக்கை சுதந்திரம் அனைத்தையும் ஏற்கிறீர்களா, மறுக்கிறீர்களா?
நீங்கள் கேட்கும் அனைத்தும் சோஷலிச நாடுகளில் இருந்துள்ளன. இது குறித்து ஒவ்வொரு நாடு நாடாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. அந்தந்த நாடுகளில் ஆட்சியில் இருப்பவர்களைப் பொறுத்து சுதந்திரம் கூடலாம் குறையலாம். தற்போது மேற்கு ஐரோப்பாவில் அதிக சுதந்திரமும் சிறி லங்கா, சிங்கப்பூரில் அடக்குமுறையும் இருக்கின்றதல்லவா? அது போலத் தான். அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இரண்டு கட்சிகளில் ஒன்று மட்டுமே தெரிவாகும். மற்ற சிரியா கட்சிகள் ஏதோ பெயருக்கு போட்டியிடுகின்றன. அதே போல தான் சோஷலிச நாடுகளில் ஒரு கட்சி ஆட்சியில் நிலைக்கின்றது. இரண்டு கட்சி ஆட்சிக்கும், ஒரு கட்சி ஆட்சிக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. அரசு இயந்திரத்திற்கு ஆபத்தான ஊடகங்கள் அடக்கப்படுவது வழமை. அமெரிக்காவில் பின்லாடனின் ஜிகாத்திற்கு ஆதரவாக பத்திரிகை நடத்த முடியுமா? அதற்கு சுதந்திரம் கொடுத்து விடுவார்களா ? இந்தியாவில் சிமி உட்பட பல அரசியல் அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. அது போலத் தான் சோஷலிச நாடுகளில் பாசிசத்தை, அல்லது முதலாளித்துவ பயங்கரவாதத்தை வளர்க்கும், ஆதரிக்கும் கட்சிகள், பத்திரிகைகள் மட்டும் தடை செய்யப்படுகின்றன.

2) ஸ்டாலின்,மாவோ காலத்தில் படுகொலைகள் நிகழ்ந்தனவா இல்லையா?
ஒரு நாட்டில் புரட்சி நடைபெறும் காலத்தில் புரட்சிக்கு எதிரான அரசியலை கொண்டிருப்பவர்கள் கொல்லப்படுவது வழக்கம். ரஷ்யப் புரட்சியிலும், சீனப் புரட்சியிலும் மக்களை அடிமைகளாக நடத்திய எஜமானர்கள், மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் கந்துவட்டிக்காரர்கள், மக்களின் நிலங்களை அபகரிக்கும் நிலப்பிரபுக்கள், மக்களை சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகள்.... இப்படி எத்தனையோ மக்கள் விரோதிகள் மக்களால் கொல்லப்பட்டனர். மக்களுக்கு கொடுமை செய்தவர்களை அழிப்பதில் தவறில்லை. ஸ்டாலினையும், மாவோவையும் புரட்சியாளர்களாக ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு நீங்கள் சார்ந்த அரசியல் கொள்கை தான் காரணம். உங்கள் அரசியல் கொள்கைக்கு எதிரானதால் கொலைகாரர்கள் என்று தூற்றுவீர்கள். அதே நேரம் உங்கள் அரசியலை சார்ந்தவர்கள் படுகொலை செய்தால் அதை எல்லாம் கண்டுகொள்ள மாட்டீர்கள். அல்லது நியாயப் படுத்துவீர்கள். ஐரோப்பாவில் பாப்பரசராக இருந்தவர்கள் சிலுவைப் போரின் போது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றாதவர்களை படுகொலை செய்தார்கள். அமெரிக்காவில் புரட்சியின் போது வாஷிங்க்டன் (அமெரிக்க ஸ்டாலின்) பலரை படுகொலை செய்தார். பிரெஞ்சுப் புரட்சியின் போது மன்னராட்சியை ஆதரித்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

நிதி நெருக்கடிக்கு காரணம் முதலாளித்துவ பொருளாதார அமைப்பே அடிப்படையில் கோளாறு கொண்டது என்பதால் தான். அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் துறையில் வங்கிகள் தகுதி இல்லாதவர்களுக்கு கடன் கொடுத்தன. அதனை தெரிந்து கொண்டே தான் செய்தன. ஏனென்றால் கடனால் கிடைக்கும் வட்டித் தொகை. ஆனால் திடீரென்று பலரால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை தோன்றினால் என்ன ஆகும்? அது தான் நெருக்கடிக்கு உண்மையான காரணம். கடன் கொடுக்காமல் வங்கிகள் லாபம் சம்பாதிக்க முடியாது. நெருக்கடியில் இருந்து மீண்டாலும் திரும்பவும் அதையே செய்வார்கள். பொருளாதாரத்தின் அடிப்படையே கோளாறு.

Jai said...

//ஒரு நாட்டில் புரட்சி நடைபெறும் காலத்தில் புரட்சிக்கு எதிரான அரசியலை கொண்டிருப்பவர்கள் கொல்லப்படுவது வழக்கம்.//

முற்றிலும் தவறான வாதம்.உக்ரெயினின் லட்சகணகான அப்பாவி பொதுமக்கள் ஸ்டாலினால் படுகொலை செய்யபட்டனர்.அவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கி புரட்சி நடத்தவில்லை.

மேற்கத்தியநாடுகளில் அரசியல் கைதிகள் கொல்லபடுவது இல்லை.ஆயுதம் தாங்கிய குழுக்களில் போராடியவர்கள் மட்டுமே கைது செய்யபடுவது வழக்கம்.தற்போது ஐரோப்பாவில் மரணதண்டனையும் பெரும்பாலும் இல்லை.

//ரஷ்யப் புரட்சியிலும், சீனப் புரட்சியிலும் மக்களை அடிமைகளாக நடத்திய எஜமானர்கள், மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் கந்துவட்டிக்காரர்கள், மக்களின் நிலங்களை அபகரிக்கும் நிலப்பிரபுக்கள், மக்களை சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகள்.... இப்படி எத்தனையோ மக்கள் விரோதிகள் மக்களால் கொல்லப்பட்டனர். //

இது போக கோடிகணகான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.அதை வசதியாக மறைக்கிறீர்கள்.கந்துவட்டிகாரர்கள் கொல்லபடுவதை நீங்கள் மிகவும் சர்வசாதாரணமாக நியாயபடுத்துவது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.

//மக்களுக்கு கொடுமை செய்தவர்களை அழிப்பதில் தவறில்லை. //

மக்களுக்கு கொடுமை செய்தவர்கள் என்ற டைட்டிலை யாருக்கு வேண்டுமனாலும் சூட்ட அரசு அதிகாரம் கையில் இருப்பதே போதும்.இதுபோல நீங்கள் கூறுவது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.

//ஸ்டாலினையும், மாவோவையும் புரட்சியாளர்களாக ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு நீங்கள் சார்ந்த அரசியல் கொள்கை தான் காரணம். //

இல்லை.அவர்கள் செய்த படுகொலைகள்,ஜனநாயக மறுப்பு,சர்வாதிகாரம் ஆகியவையே காரணம்.கொள்கை உடன்பாடாக இருந்தால் ஹிட்லர் செய்ததையும் நீங்கள் கூறும் அதே வாதங்களின்படி நியாயபடுத்த இயலும்.நாஜிக்கள் நீங்கள் இப்போது எடுத்து வைத்த அனைத்து வாதங்களையும் எடுத்து வைத்து தங்கள் படுகொலைகளை நியாயபடுத்த இயலும்.

//உங்கள் அரசியல் கொள்கைக்கு எதிரானதால் கொலைகாரர்கள் என்று தூற்றுவீர்கள். அதே நேரம் உங்கள் அரசியலை சார்ந்தவர்கள் படுகொலை செய்தால் அதை எல்லாம் கண்டுகொள்ள மாட்டீர்கள். //

இதை நான் எங்கும் செய்ததில்லை.எந்த படுகொலையையும் நியாயபடுத்தியதில்லை.

//நிதி நெருக்கடிக்கு காரணம் முதலாளித்துவ பொருளாதார அமைப்பே அடிப்படையில் கோளாறு கொண்டது என்பதால் தான். //

இல்லை.உலகம் தோன்றியது முதல் பல்வேறு மாற்ரங்களுடன் இந்த பொருளாதார அமைப்பே நிலவி வருகிறது.அடிப்படையில் குறைபாடுள்ளது இத்தனை லட்சம் ஆண்டுகளாக நீடித்திருக்க இயலது

//கடன் கொடுக்காமல் வங்கிகள் லாபம் சம்பாதிக்க முடியாது. நெருக்கடியில் இருந்து மீண்டாலும் திரும்பவும் அதையே செய்வார்கள்.//

அந்த சாத்தியகூற்றை நான் மறுக்கவில்லை.பங்குசந்தை முதலீடுகள் ரிஸ்குகளுக்கு உட்பட்டதே என்பதை மக்கள் மறக்காமல் இருந்தால் போதும்.

Jai said...

பதிலுக்கு நன்றி கலையரசன்.

1989க்கு முன்பு எந்த கம்யூனிச நாட்டிலும் பத்திரிக்கை சுதந்திரம் இல்லை.எல்லா நாடுகளை பற்றியும் விவாதிக்க முடியாது என்றாலும் முக்கிய நாடுகளான சீனா, சோவியத் யூனியன் ஆகியவற்றை எடுத்துகொண்டால் அவற்றில் பத்திரிக்கை தணிக்கை முறை கடுமையாக அமுலில் இருந்தது.ஸ்டாலினுக்கெதிராக, மூச்சுவிட்டாலே அவர்களுக்கு குலாகுகளும் தண்டனையும் நிச்சயம் என்ர நிலையே அங்கே நிலவியது
சிங்கப்பூர் சர்வாதிகார நாடு.அதையும் மேற்கு ஐரோப்பியநாடுகளையும் ஒப்பிட இயலாது.உண்மையான பத்திரிக்கை சுதந்திரம் என்பது மேற்கத்தியநாடுகளில் மட்டுமே உள்ளது.முந்தைய சோவியத் யூனியனில் இருந்தது போல ஆட்சியாளருக்கெதிராக பேசினாலே தண்டனை எனும் முறை அங்கே இல்லை.

//அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இரண்டு கட்சிகளில் ஒன்று மட்டுமே தெரிவாகும். மற்ற சிரியா கட்சிகள் ஏதோ பெயருக்கு போட்டியிடுகின்றன. அதே போல தான் சோஷலிச நாடுகளில் ஒரு கட்சி ஆட்சியில் நிலைக்கின்றது. இரண்டு கட்சி ஆட்சிக்கும், ஒரு கட்சி ஆட்சிக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை.//

முற்றிலும் தவறு.இரண்டுகட்சிகள் மட்டும் தான் இருக்கவேண்டும் என அங்கே சட்டம் இல்லை.மூன்றவாது கட்சி ஆரம்பிக்க எந்த தடையும் இல்லை.அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் மூன்றாவது,நான்காவது கட்சிகள் ஆரம்பிப்பவர்களை கொல்வதோ,சிறையில் அடைப்பதோ இல்லை.

//அரசு இயந்திரத்திற்கு ஆபத்தான ஊடகங்கள் அடக்கப்படுவது வழமை. அமெரிக்காவில் பின்லாடனின் ஜிகாத்திற்கு ஆதரவாக பத்திரிகை நடத்த முடியுமா? அதற்கு சுதந்திரம் கொடுத்து விடுவார்களா ? //

ஆயுதம் தாங்கிய இயக்கங்களுக்கு ஆதரவாக பத்திரிக்கை நடத்த இயலாது.அரசு இயந்திரத்துக்கு எதிராக தாராளமாக பத்திரிக்கை நடத்தலாம்.அமெரிக்க அரசை,அதிபரை கண்டித்து, விமர்சனம் செய்து பத்திரிக்கை நடத்தலாம்.அல்ஜசீரா அமெரிக்காவில் ஒளிபரப்பாக தான் செய்கிறது.அமெரிக்க கம்யூனிஸ்டு கட்சி சுதந்திரமாக தன் கருத்துக்களை வெளியிடத்தான் செய்கிறது.

//இந்தியாவில் சிமி உட்பட பல அரசியல் அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. அது போலத் தான் சோஷலிச நாடுகளில் பாசிசத்தை, அல்லது முதலாளித்துவ பயங்கரவாதத்தை வளர்க்கும், ஆதரிக்கும் கட்சிகள், பத்திரிகைகள் மட்டும் தடை செய்யப்படுகின்றன. //

ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஆதரிக்கும் அமைப்புகள் மாத்திரமே தடை செய்யபடுவது நியாயம்.அதிபரை,அரசை,கம்யூனிஸ்டு கட்சியை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசதுரோகி முத்திரை சூட்டபட்டு சிரையில் அடைக்கபடுவதும், பத்திரிக்கை தணீக்கை கடுமையாக அமுலில் இருந்ததுமே சோவியத்யூனியனின் வரலாறு

Kalaiyarasan said...

//முற்றிலும் தவறான வாதம்.உக்ரெயினின் லட்சகணகான அப்பாவி பொதுமக்கள் ஸ்டாலினால் படுகொலை செய்யபட்டனர்.அவர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கி புரட்சி நடத்தவில்லை.//

ஸ்டாலினுக்கு எதிரான நாஜிகளின் பிரச்சாரத்தில் இருந்து இந்த தகவல் பெறப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. உக்ரைனில் ஏற்பட்ட பஞ்சத்தால் மக்கள் இறந்தது உண்மை. அவர்கள் எல்லாம் ஸ்டாலினால் கொல்லப்பட்டனர் நாஜிகளின் அவதூறு. ஜெய் அதையே மேற்கோள் காட்டுகின்றார்.

//1989க்கு முன்பு எந்த கம்யூனிச நாட்டிலும் பத்திரிக்கை சுதந்திரம் இல்லை.//
நீங்களே ஏற்றுக் கொண்டது போல முதலாளித்துவ பயங்கரவாத செயல்களை ஆதரிப்பவர்களுக்கு பத்திரிகை சுதந்திரம் வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசலாம். யாரும் தடுக்க மாட்டார்கள்.
//முற்றிலும் தவறு.இரண்டுகட்சிகள் மட்டும் தான் இருக்கவேண்டும் என அங்கே சட்டம் இல்லை.மூன்றவாது கட்சி ஆரம்பிக்க எந்த தடையும் இல்லை.//
சட்டம் போட்டு விட்டால் போதுமா? புதிதாக வரும் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க வேண்டாமா? அதற்கு பண பலம் வேண்டுமே? இரண்டு பெரிய கட்சிகள் அள்ளிக் கொட்டும் அளவிற்கு அவர்களிடம் பணம் இருக்குமா? பணம் இல்லாதவன் வெல்லுவது சாத்தியமா? நடக்கக் கூடிய கதையைப் பற்றி பேசுங்கள். சோஷலிச நாடுகளிலும் எத்தனையோ கட்சிகள் இருந்தன. அவர்களது அரசியல் கொள்கைக்கு உட்பட்ட கட்சிகள். பணத்தை கொட்டி மக்களை விலைக்கு வாங்கும் கட்சிகளுக்கு மட்டும் அங்கே இடமிருக்கவில்லை.

//ஆயுதம் தாங்கிய இயக்கங்களுக்கு ஆதரவாக பத்திரிக்கை நடத்த இயலாது.//
என்ன ஆச்சரியம்? பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடும் ஜெய் இப்படிப் பேசுகிறாரே. ஆக மொத்தத்தில் அவர் ஆதரிக்கும் நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறார். இப்போதாவது உண்மை பேசியதற்கு நன்றி.

//அல்ஜசீரா அமெரிக்காவில் ஒளிபரப்பாக தான் செய்கிறது.அமெரிக்க கம்யூனிஸ்டு கட்சி சுதந்திரமாக தன் கருத்துக்களை வெளியிடத்தான் செய்கிறது.//
அல் ஜசீரா அமெரிக்காவின் எதிரி என்று யார் உங்களுக்கு சொன்னார்கள்? அமெரிக்க அரசு அதனை சி.ஏன்.என். னுக்கு போட்டியாக பார்த்தது. அதனால் எத்தனையோ தடைகளைக் கொண்டுவந்தது. அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான அடக்குமுறைக்குள்ளாகி சீரழிந்து விட்டது. இப்போதுள்ள கட்சிக்கு அரசை விமர்சிக்கும் எல்லை என்னவென்று தெரியும்.

Jai said...

//ஸ்டாலினுக்கு எதிரான நாஜிகளின் பிரச்சாரத்தில் இருந்து இந்த தகவல் பெறப்பட்டது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. உக்ரைனில் ஏற்பட்ட பஞ்சத்தால் மக்கள் இறந்தது உண்மை. அவர்கள் எல்லாம் ஸ்டாலினால் கொல்லப்பட்டனர் நாஜிகளின் அவதூறு. ஜெய் அதையே மேற்கோள் காட்டுகின்றார். //

உக்ரைன் இனபடுகொலையை நினைவுகூறும் வகையில் உக்ரெய்ன் அரசு இன்றைக்கும் நவம்பர் 25 அன்று கொடிகளை அரைகம்பத்தில் பறக்கவிட்டு மக்களை மவுன அஞ்சலி செலுத்த சொல்லி உத்தரவிட்டுள்ளது. உக்ரெயின் அரசு அந்த படுகொலையை நினைவுகூறும் வகையில் நாணயங்களை வெளியிட்டுள்ளது. உக்ரேனியர்களும் நாஜி பிரசாரத்துக்கு பலியாகிவிட்டர்கள் என ஜோக் அடிக்க போகிறீர்களா?

போலந்தில் 1940ல் 22,000 போலந்து மக்களை கொல்ல ஸ்டாலினே நேரடியாக கையெழுத்திட்ட ஆவணம் உள்ளது.(Katyn massacre).கொல்லப்பட்ட 22,000 பேரும் அப்பாவி பொதுமக்கள். இதற்கான நினைவிடங்கள் போலந்து மக்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் உள்ளன.இதையும் நாஜி பிரசாரம் என மறுப்பீர்களோ என்னவோ?

//நீங்களே ஏற்றுக் கொண்டது போல முதலாளித்துவ பயங்கரவாத செயல்களை ஆதரிப்பவர்களுக்கு பத்திரிகை சுதந்திரம் வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசலாம். யாரும் தடுக்க மாட்டார்கள்.//

பயங்கரவாதம் என ஒன்றை முத்திரை குத்த அரசு அதிகாரம் மட்டுமே தேவை.உங்களுக்கு அரசு இயந்திரம் இழைக்ககூடிய கொடுமைகளை பற்றி நன்றாக தெரியும்.ஆயுதம் ஏந்தாத, வன்முறைக்கு தூண்டாத ஒரு விஷயத்தை பயங்கரவாதம் என எப்படி நீங்கள் கூறமுடியும்?மேலும் சோவியத்ருஷ்யாவில் முதலாளித்துவம் மட்டுமல்ல,,,அரசை விமர்சிக்கவே மக்களுக்கு, ரஷ்ய பொதுமக்களுக்கு அனுமதி மறூக்கபட்டது.அரசை விமர்சித்தவர்கள்,அதிபரை கண்டித்தவர்கள் எல்லோரும் குலாகுகளுக்கு அனுப்பபட்டு கொல்லபட்டார்கள்.

//சட்டம் போட்டு விட்டால் போதுமா? புதிதாக வரும் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க வேண்டாமா? அதற்கு பண பலம் வேண்டுமே? இரண்டு பெரிய கட்சிகள் அள்ளிக் கொட்டும் அளவிற்கு அவர்களிடம் பணம் இருக்குமா? பணம் இல்லாதவன் வெல்லுவது சாத்தியமா? நடக்கக் கூடிய கதையைப் பற்றி பேசுங்கள். சோஷலிச நாடுகளிலும் எத்தனையோ கட்சிகள் இருந்தன. அவர்களது அரசியல் கொள்கைக்கு உட்பட்ட கட்சிகள். பணத்தை கொட்டி மக்களை விலைக்கு வாங்கும் கட்சிகளுக்கு மட்டும் அங்கே இடமிருக்கவில்லை. //

கட்சி நடத்த பணத்தை மக்களிடம் தான் திரட்ட வேண்டும்.உங்கள் கொள்கை மக்களுக்கு பிடித்திருந்தால் அள்ளி அள்ளி தருவார்கள்.உங்கள் கொள்கை மோசமாக இருந்தால் பணம் வராது.எத்தனையோ உலக ஜனநாயக்நாடுகளில் கம்யூனிஸ்டு கட்சிகள் இயங்கிகொண்டும் ஆட்சிக்கு வந்தும்,போயும் தான் இருக்கின்றன...மற்றபடி பெயரளவுக்கு கூட எதிர்கட்சிகளை இயங்க சோவியத்யூனியனோ சீனாவோ அனுமதிக்கவில்லை.

//என்ன ஆச்சரியம்? பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடும் ஜெய் இப்படிப் பேசுகிறாரே. ஆக மொத்தத்தில் அவர் ஆதரிக்கும் நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறார். இப்போதாவது உண்மை பேசியதற்கு நன்றி. //

ஆழமாக ஒவ்வொரு பிரச்சனையையும் அலசி எழுதும் கலையரசனா இத்தனை மேம்போக்காக ஒரு விஷயத்தை அணுகுவது?கலையரசன்....பதில் எழுதும்போது ஒரு நிமிடம் நெஞ்சின் மேல் கை வைத்து உங்கள் அந்தராத்மா என்ன சொல்கிறது என பார்த்துவிட்டு எழுதுங்கள்.அல்கொய்தாவை அனுமதிக்காத மேற்கத்தியநாடுகளின் பத்திரிக்கை சுதந்திரமும், அரசுகெதிரான சொந்த நாட்டு மக்களின் விமர்சனங்களை அனுமதிக்காத சோவியத்யூனியனின் பத்திரிக்கை சுதந்திரமும் ஒரே தட்டில் வைத்து எடைபோடகூடியவை என கூறுகிறீர்களா?

ஆயுதம் ஏந்தாத,அமைதியான அரசுக்கெதிரான எழுத்துக்களை...சொந்த நாட்டு மக்களின் அரசுகெதிரான விமர்சனங்களை மேற்கத்தியநாடுகள் முழுவதும் அனுமதிக்கின்றன. சோவியத்யூனியன் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. அல்கொய்தாவை சோவியத்யூனியனே தற்போது இருந்தாலும் தன்நாட்டில் பத்திரிக்கை நடத்த அனுமதித்திருக்காது என உங்களுக்கு நன்கு தெரியும்.

Kalaiyarasan said...

//ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஆதரிக்கும் அமைப்புகள் மாத்திரமே தடை செய்யபடுவது நியாயம்.அதிபரை,அரசை,கம்யூனிஸ்டு கட்சியை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசதுரோகி முத்திரை சூட்டபட்டு சிரையில் அடைக்கபடுவதும், பத்திரிக்கை தணீக்கை கடுமையாக அமுலில் இருந்ததுமே சோவியத்யூனியனின் வரலாறு.//
சோஷலிச நாடுகளில் ஆயுதமேந்திய குழுக்கள் இருக்கவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது? சோவியத் யூனியனில் புரட்சி நடந்து பத்து வருடங்களுக்கு பின்னரும் அரசுக்கு எதிரான வெள்ளை இராணுவத்தின் ஆயுதமேந்திய போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் தோன்றுவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே சோவியத் யூனியனில் ஜிஹாதிகளின் போராட்டம் நடைபெற்றது. இந்த வரலாறு உங்களுக்கு தெரியாது.

Kalaiyarasan said...

//மேற்கத்தியநாடுகளில் அரசியல் கைதிகள் கொல்லபடுவது இல்லை.ஆயுதம் தாங்கிய குழுக்களில் போராடியவர்கள் மட்டுமே கைது செய்யபடுவது வழக்கம்.தற்போது ஐரோப்பாவில் மரணதண்டனையும் பெரும்பாலும் இல்லை.//
ஆமாம், கனவான் வேஷம் போட்டால் அதற்கு ஏற்ற படி நடிக்கவும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? எத்தனை ஆயுதம் தாங்கிய குழுக்களை சேர்ந்தவர்கள் அரச படைகளால் கொல்லப்பட்டனர் தெரியுமா? சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் தெரியுமா? நாகரிக கனவான்களான அமெரிக்கர்கள் எதற்காக ஈராக் அபுகிரைப் சிறையில் கைதிகளை சித்திரவதை செய்து போட்டோ எடுத்தார்கள்? குவாந்தனமோ சிறையில் சித்திரவதை அனுபவிப்பவர்களை இன்னும் விடுவிக்காத காரணம் என்ன?

//இது போக கோடிகணகான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.அதை வசதியாக மறைக்கிறீர்கள்.கந்துவட்டிகாரர்கள் கொல்லபடுவதை நீங்கள் மிகவும் சர்வசாதாரணமாக நியாயபடுத்துவது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.//
ஆயிரம் வருடங்களாக மக்களை அடிமைகளாக நடத்தியவர்களையும், மக்களின் உழைப்பை சுரண்டியவர்களையும், திருடர்களையும், கொள்ளை அடிப்பவர்களையும் ஒன்றும் செய்யாமல் விட்டு விடும் படி நீங்கள் கெஞ்சுவது வியப்பாக உள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான திருடர்கள், கொள்ளையர்கள், கயவர்கள் இருக்கலாம். அவர்களை எல்லாம் நீங்கள் அனைத்து மக்கள் என்று செல்லம் பொழிவது அநியாயம். நீங்கள் வேண்டுமானால் அயோக்கியர்களுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டிருங்கள்.

//மக்களுக்கு கொடுமை செய்தவர்கள் என்ற டைட்டிலை யாருக்கு வேண்டுமனாலும் சூட்ட அரசு அதிகாரம் கையில் இருப்பதே போதும்.இதுபோல நீங்கள் கூறுவது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.//
அது சரி தான். அந்த அதிகாரத்தை கையில் எடுப்பது மக்கள் தான். மக்கள் தங்களை காலங்காலமாக சுரண்டிய, வன்முறை கொண்டு அடக்கிய, சாதி என்ற பெயரில் தாழ்த்திய கல்நெஞ்சுக்கார கயவர்களை பழிதீர்த்துக் கொள்கிறார்கள். நீங்கள் ஏன் குறுக்கே போகிறீர்கள்? பெரும்பான்மை மக்களின் ஜனநாயக உரிமைக்கு மதிப்புக் கொடுங்கள்.

//இல்லை.அவர்கள் செய்த படுகொலைகள்,ஜனநாயக மறுப்பு,சர்வாதிகாரம் ஆகியவையே காரணம்.//
அடிமைகள் கிளர்ந்து எழுந்து ஆண்டாண்டு காலம் தங்களை அடக்கி ஆண்டவர்களின் மீது அதிகாரம் செலுத்தும் காலம் வந்தால் அப்படித் தான் நடக்கும். நீங்கள் எஜமானர்களுக்காக பரிந்து பேசுவது வெளிப்படையாக தெரிகின்றது.

Kalaiyarasan said...

//கொள்கை உடன்பாடாக இருந்தால் ஹிட்லர் செய்ததையும் நீங்கள் கூறும் அதே வாதங்களின்படி நியாயபடுத்த இயலும்.நாஜிக்கள் நீங்கள் இப்போது எடுத்து வைத்த அனைத்து வாதங்களையும் எடுத்து வைத்து தங்கள் படுகொலைகளை நியாயபடுத்த இயலும்.//
நிச்சயமாக அமெரிக்காவில் நடந்த செவ்விந்திய மக்கள் இனப் படுகொலையையும், அவுஸ்திரேலியாவில் அபோரிஜின மக்களின் இனப் படுகொலையையும் நியாயப் படுத்துபவர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கும் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடந்த படுகொலைகளை அமெரிக்கா நியாயப் படுத்துகின்றனர்.

//இதை நான் எங்கும் செய்ததில்லை.எந்த படுகொலையையும் நியாயபடுத்தியதில்லை.//
சரி, நீங்களாவது மேற்குறிப்பிட்ட படுகொலைகளை எடுத்துக் கூறியிருக்கலாம் அல்லவா? எங்கேயோ உக்ரைனில் எப்போதோ நடந்த படுகொலைகளுக்காக கண்ணீர் வடிக்கின்றீர்கள். உங்களது காலத்திலேயே உங்களுக்கு அருகில் இருக்கும் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் புஷ் செய்த படுகொலைகள் கண்ணில் படவில்லையா? இப்போதாவது சொல்லுங்கள். புஷ்ஷின் படுகொலைகளை நியாயப்படுத்துகிறீர்களா?


//இல்லை.உலகம் தோன்றியது முதல் பல்வேறு மாற்ரங்களுடன் இந்த பொருளாதார அமைப்பே நிலவி வருகிறது.அடிப்படையில் குறைபாடுள்ளது இத்தனை லட்சம் ஆண்டுகளாக நீடித்திருக்க இயலது.//
உலகம் தோன்றியது முதல் இதே பொருளாதாரம் நிலவி வருவதாக உங்களுக்கு யார் சொன்னது. எந்தப் பாடசாலையில் இப்படி பிழையான பாடங்களை சொல்லிக் கொடுக்கிறார்கள்? மனிதனை மனிதன் சுரண்டிப் பிழைக்கும் கேவலமான குணம் மிருகங்களிடம் கூட இல்லை. இதைத் தான் நீங்கள் சிறந்த பொருளாதாரம் என்று கொண்டாடுகிறீர்கள்.

Kalaiyarasan said...

//பயங்கரவாதம் என ஒன்றை முத்திரை குத்த அரசு அதிகாரம் மட்டுமே தேவை.உங்களுக்கு அரசு இயந்திரம் இழைக்ககூடிய கொடுமைகளை பற்றி நன்றாக தெரியும்.ஆயுதம் ஏந்தாத, வன்முறைக்கு தூண்டாத ஒரு விஷயத்தை பயங்கரவாதம் என எப்படி நீங்கள் கூறமுடியும்?//
இன்று பயங்கரவாதிகள் என்று நீங்கள் கருதிக் கொள்ளும் நபர்கள் எல்லோரும் வன்முறைக்கு தூண்டுகிறார்களா? அவ்வாறு அரசு மட்டும் தானே கூறுகின்றது? சோவியத் யூனியன் ஸ்தாபித்த ஆரம்ப காலங்களில் தானியக் களஞ்சியங்களை தீயிடும் படியும், கால்நடைகளைக் கொல்லும் படியும் எத்தனையோ எதிர்ப்புரட்சி சக்திகள் பிரச்சாரம் செய்தன. அப்படி நடந்தும் உள்ளன. அதனால் தான் பஞ்சம்மேற்பட்டு உக்ரைனில் பல லட்சம் மக்கள் மடிந்தார்கள். (அப்படி பஞ்சத்தால் செத்த மக்களை ஸ்டாலின் கொன்றதாக நாஜிகள் பொய்ப்பரப்புரை செய்த வாய்ப்பு கிடைத்தது.) அது எல்லாம் பயங்கரவாதம் இல்லையா? எண்பதுகளில் நிக்ராகுவாவில் கம்யூனிச ஆட்சி இருந்த காலத்தில் சி.ஐ.ஏ. ஒரு சிறு நூலை மக்கள் மத்தியில் விநியோகித்தது. பயங்கரவாத வன்முறைகளில் ஈடுபடுவது எப்படி என்று அதில் விளக்கம் கூறப்பட்டிருந்தது. வயல்களில் விளைந்திருக்கும் தானியங்களை எரிப்பது முதல் பாடசாலை ஆசிரியர்களை கொலை செய்வது வரை அதில் விளக்கமாக எழுதப் பட்டிருந்தது. இவ்வாறு பகிரங்கமாக பயங்கரவாத வன்முறையை தூண்டுபவர்களுக்கு ஜெய் சுதந்திரம் கொடுக்கச் சொல்கிறார். அவரது கட்சி ஆட்சிக்கு வந்தால் அல்கைதாவுக்கு சுதந்திரம் கொடுப்பார்களா என்று பார்ப்போம்.

Jai said...

//சோஷலிச நாடுகளில் ஆயுதமேந்திய குழுக்கள் இருக்கவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது? சோவியத் யூனியனில் புரட்சி நடந்து பத்து வருடங்களுக்கு பின்னரும் அரசுக்கு எதிரான வெள்ளை இராணுவத்தின் ஆயுதமேந்திய போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் தோன்றுவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே சோவியத் யூனியனில் ஜிஹாதிகளின் போராட்டம் நடைபெற்றது. இந்த வரலாறு உங்களுக்கு தெரியாது.//

நான் அவர்களுக்கு பேச்சுரிமை தராததற்கு சோவியத்யூனியனை குறைகூறவில்லை.ஆயுதம் ஏந்தாத சோவியத் பிரஜைகளுக்கு ஏன் அரசை விமர்சிக்கும் உரிமையோ, பத்திரிக்கை, எழுத்து சுதந்திரம் ஆகியவை சோவியத் ரஷ்யாவில் தரப்படவில்லை என தான் கேட்கிறேன்.

//ஆமாம், கனவான் வேஷம் போட்டால் அதற்கு ஏற்ற படி நடிக்கவும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? எத்தனை ஆயுதம் தாங்கிய குழுக்களை சேர்ந்தவர்கள் அரச படைகளால் கொல்லப்பட்டனர் தெரியுமா? சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் தெரியுமா? நாகரிக கனவான்களான அமெரிக்கர்கள் எதற்காக ஈராக் அபுகிரைப் சிறையில் கைதிகளை சித்திரவதை செய்து போட்டோ எடுத்தார்கள்? குவாந்தனமோ சிறையில் சித்திரவதை அனுபவிப்பவர்களை இன்னும் விடுவிக்காத காரணம் என்ன? //

ஆயுதம் ஏந்தாத குழுக்கள் ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளால் கொல்லபடுவது இல்லை என கூறினால் ஆயுதகுழுக்களின் உதாரணத்தை கொடுகீறீர்கள். ஆயுதகுழுக்கள் மேற்கத்தியநாடுகளில் தடுக்கபடுவது/கொல்லபடுவது கிடையாது என நான் எங்கே கூறினேன்?அப்பாவி பொதுமக்களுக்கு இருக்கும் எழுத்துரிமை,பேச்சுரிமை ஆகியவற்றை பற்றிதன் நான் பேசுகிறேன்.

//ஆயிரம் வருடங்களாக மக்களை அடிமைகளாக நடத்தியவர்களையும், மக்களின் உழைப்பை சுரண்டியவர்களையும், திருடர்களையும், கொள்ளை அடிப்பவர்களையும் ஒன்றும் செய்யாமல் விட்டு விடும் படி நீங்கள் கெஞ்சுவது வியப்பாக உள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான திருடர்கள், கொள்ளையர்கள், கயவர்கள் இருக்கலாம். அவர்களை எல்லாம் நீங்கள் அனைத்து மக்கள் என்று செல்லம் பொழிவது அநியாயம். நீங்கள் வேண்டுமானால் அயோக்கியர்களுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டிருங்கள். //

மனித உயிரை எடுப்பவனுக்கு மட்டுமே மரணதண்டனை தருவதில் ஓரளவு நியாயம் இருக்கமுடியும்...அதிலும் எனக்கு அறம்சார்ந்த பல பிரச்சனைகள் உள்ளன. கணநேர கோபத்தில் செய்த கொலை, வாய்க்கால் வெட்டு தகராறு, போன்றவற்றுக்கு மரணதண்டனை தருவது எனக்கு மனிததன்மையற்ற செயலாக படுகிறது.

கந்துவட்டியை சட்டரீதியாக தடை செய்யலாம்.ஒன்று இரண்டு வருடம் அதிகபட்சம் ஜெயிலில் போடலாம். மரணதண்டனை...ஆர் யு சீரியஸ்?

//அது சரி தான். அந்த அதிகாரத்தை கையில் எடுப்பது மக்கள் தான். மக்கள் தங்களை காலங்காலமாக சுரண்டிய, வன்முறை கொண்டு அடக்கிய, சாதி என்ற பெயரில் தாழ்த்திய கல்நெஞ்சுக்கார கயவர்களை பழிதீர்த்துக் கொள்கிறார்கள். நீங்கள் ஏன் குறுக்கே போகிறீர்கள்? பெரும்பான்மை மக்களின் ஜனநாயக உரிமைக்கு மதிப்புக் கொடுங்கள். //

கந்துவட்டிகாரனை, பெருமுதலாளிகளை கொல்லலாமா என ஐரோப்பாவில் ஒரு கருத்துகணிப்பு நடத்தினால் என்ன முடிவு வரும் என நினைக்கிறீர்கள்? அந்த முடிவை மனபூர்வமாக ஏற்க நான் தயார். நீங்கள் மனபூர்வமாக ஏற்க தயாரா?

//
அடிமைகள் கிளர்ந்து எழுந்து ஆண்டாண்டு காலம் தங்களை அடக்கி ஆண்டவர்களின் மீது அதிகாரம் செலுத்தும் காலம் வந்தால் அப்படித் தான் நடக்கும். நீங்கள் எஜமானர்களுக்காக பரிந்து பேசுவது வெளிப்படையாக தெரிகின்றது.//

ஸ்டாலினால் கொல்லப்பட்ட உக்ரெயின் மக்களும், போலந்து மக்களும் குற்றம் இழைத்தவர்கள், அவர்கள் கொல்லபட்டது சரிதான் என்கிறீர்களா?

Kalaiyarasan said...

//உக்ரைன் இனபடுகொலையை நினைவுகூறும் வகையில் உக்ரெய்ன் அரசு இன்றைக்கும் நவம்பர் 25 அன்று கொடிகளை அரைகம்பத்தில் பறக்கவிட்டு மக்களை மவுன அஞ்சலி செலுத்த சொல்லி உத்தரவிட்டுள்ளது. உக்ரெயின் அரசு அந்த படுகொலையை நினைவுகூறும் வகையில் நாணயங்களை வெளியிட்டுள்ளது. உக்ரேனியர்களும் நாஜி பிரசாரத்துக்கு பலியாகிவிட்டர்கள் என ஜோக் அடிக்க போகிறீர்களா?//
இரண்டாம் உலகப்போர் காலத்தில் உக்ரைன் நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. அப்போது உக்ரைனிய தேசியவாதிகள் நாஜிகளுடன் கூட்டுச் சேர்ந்து லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார்கள். (இந்த இனப்படுகொலைகளை பற்றி ஜெய் எங்கேயுமே குறிப்பிடவில்லை. நாஜிகளின் குற்றங்களை ஜெய் ஏன் மறைக்க வேண்டும்?) உக்ரெயின் சுதந்திரமடைந்த பின்னர் முன்னாள் நாஜிச கைக்கூலிகளின் வாரிசுகள் ஆட்சிக்கு வந்தார்கள். (ஆமாம் நாஜிகளுக்கும் சுதந்திரம் வேண்டும் என்று தானே ஜெய் இத்தனை பாடுபடுகிறார். ) சோவியத் விரோதிகளான உக்ரைன் தேசியவாதிகள் ஸ்டாலின் அது செய்தார், இது செய்தார் என்று நினைவுகூருவதில் வியப்பில்லை. நாஜிகளிடம் ஜெய் எதற்காக இவ்வளவு பரிவு காட்டுகின்றார் என்பது தான் புரியவில்லை.

//போலந்தில் 1940ல் 22,000 போலந்து மக்களை கொல்ல ஸ்டாலினே நேரடியாக கையெழுத்திட்ட ஆவணம் உள்ளது.(Katyn massacre).கொல்லப்பட்ட 22,000 பேரும் அப்பாவி பொதுமக்கள். இதற்கான நினைவிடங்கள் போலந்து மக்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் உள்ளன.இதையும் நாஜி பிரசாரம் என மறுப்பீர்களோ என்னவோ?//

இரண்டாவது உலகப்போர் காலத்தில் போலந்தில் போலிஷ் தேசியவாதிகள் ஆட்சியில் இருந்தார்கள். அவர்கள் சோவியத் யூனியனுக்கும் எதிரிகள். இன்று உக்ரைனை போலந்து பகுதியில் செம்படையுடன் நடந்த கடுமையான சண்டையில் தோற்ற போலிஷ் இராணுவ வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இராணுவவீரர்களை ஜெய் மக்கள் என்று திரிக்கிறார். இதே திரிப்பு வேலையை அன்று நாஜிகள் செய்தார்கள்.

Jai said...

//நிச்சயமாக அமெரிக்காவில் நடந்த செவ்விந்திய மக்கள் இனப் படுகொலையையும், அவுஸ்திரேலியாவில் அபோரிஜின மக்களின் இனப் படுகொலையையும் நியாயப் படுத்துபவர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கும் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடந்த படுகொலைகளை அமெரிக்கா நியாயப் படுத்துகின்றனர். //

ஐரோப்பா,அமெரிக்காவில் இதற்கெதிராக வலுவான எதிர்குரல் எழுந்தது.நானும் இதை நியாயபடுத்தவில்லை.கடுமையாக எதிர்க்கிறேன்.

//சரி, நீங்களாவது மேற்குறிப்பிட்ட படுகொலைகளை எடுத்துக் கூறியிருக்கலாம் அல்லவா? எங்கேயோ உக்ரைனில் எப்போதோ நடந்த படுகொலைகளுக்காக கண்ணீர் வடிக்கின்றீர்கள். உங்களது காலத்திலேயே உங்களுக்கு அருகில் இருக்கும் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் புஷ் செய்த படுகொலைகள் கண்ணில் படவில்லையா? இப்போதாவது சொல்லுங்கள். புஷ்ஷின் படுகொலைகளை நியாயப்படுத்துகிறீர்களா?//

நான் எங்கே நியாயபடுத்தினேன்? அதை நான் வன்மையாக, கடுமையாக எதிர்க்கிறேன்.

//உலகம் தோன்றியது முதல் இதே பொருளாதாரம் நிலவி வருவதாக உங்களுக்கு யார் சொன்னது. எந்தப் பாடசாலையில் இப்படி பிழையான பாடங்களை சொல்லிக் கொடுக்கிறார்கள்? மனிதனை மனிதன் சுரண்டிப் பிழைக்கும் கேவலமான குணம் மிருகங்களிடம் கூட இல்லை. இதைத் தான் நீங்கள் சிறந்த பொருளாதாரம் என்று கொண்டாடுகிறீர்கள்.//

ஆதிமனித காலம் முதல் இன்றுவரை சுதந்திரமான வர்த்தகமும், நிலவுடமை சமூகமும் தான் நிலவி வந்தது.கம்யூனிசத்தின் வரலாறு வெறும் 70 ஆண்டுகள் மட்டுமே.

//இன்று பயங்கரவாதிகள் என்று நீங்கள் கருதிக் கொள்ளும் நபர்கள் எல்லோரும் வன்முறைக்கு தூண்டுகிறார்களா? அவ்வாறு அரசு மட்டும் தானே கூறுகின்றது?//

ஒருவர் பயங்கரவாதியா, விடுதலை வீரரா என்பதை காலம் தீர்மானிக்கும்.ஆயுதம் ஏந்தி ஒரு அரசை எதிர்த்து போரிடும் எந்த குழுவுக்கும் அந்த அரசு பத்திரிக்கை சுதந்திரம் அளிக்காவிடில் அதை நான் ஒரு குறையாக பார்க்கவில்லை...அது எத்தனைதூரம் நியாயமான போராட்டமாக இருப்பினும். குடிமக்களுக்கு எழுத்துரிமை, பேச்சுரிமை,அரசை, அதிபரை விமர்சிக்கும் உரிமை உள்ளதா இல்லையா?இருந்தால் அதுவே பத்திரிக்கை சுதந்திரத்துகான அளவுகோல்.

//இவ்வாறு பகிரங்கமாக பயங்கரவாத வன்முறையை தூண்டுபவர்களுக்கு ஜெய் சுதந்திரம் கொடுக்கச் சொல்கிறார். அவரது கட்சி ஆட்சிக்கு வந்தால் அல்கைதாவுக்கு சுதந்திரம் கொடுப்பார்களா என்று பார்ப்போம்.//

ஆயுதம் ஏந்தாத ரஷ்ய பொதுமக்களுக்கு ஏன் பேச்சுரிமை, அதிபரை,அரசை விமர்சிக்கும் உரிமை இல்லை என கேட்டால் அமெரிக்காவுக்கு ரஷ்யாவில் ஏன் பேச்சுரிமை இல்லை என நான் கேட்பதாக புரிந்துகொள்கிறீர்கள்.

ஒரு நாட்டின் குடிமகனுக்கு அரசை, அதிபரை, ஆளும்கட்சியை பகிரங்கமாக ஊடகங்களில் விமர்சிக்கும் உரிமை உள்ளதா?இல்லையா?இதுதான் என் கேள்வி.

Jai said...

//இரண்டாம் உலகப்போர் காலத்தில் உக்ரைன் நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. அப்போது உக்ரைனிய தேசியவாதிகள் நாஜிகளுடன் கூட்டுச் சேர்ந்து லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார்கள். (இந்த இனப்படுகொலைகளை பற்றி ஜெய் எங்கேயுமே குறிப்பிடவில்லை. நாஜிகளின் குற்றங்களை ஜெய் ஏன் மறைக்க வேண்டும்?) உக்ரெயின் சுதந்திரமடைந்த பின்னர் முன்னாள் நாஜிச கைக்கூலிகளின் வாரிசுகள் ஆட்சிக்கு வந்தார்கள். (ஆமாம் நாஜிகளுக்கும் சுதந்திரம் வேண்டும் என்று தானே ஜெய் இத்தனை பாடுபடுகிறார். ) சோவியத் விரோதிகளான உக்ரைன் தேசியவாதிகள் ஸ்டாலின் அது செய்தார், இது செய்தார் என்று நினைவுகூருவதில் வியப்பில்லை. நாஜிகளிடம் ஜெய் எதற்காக இவ்வளவு பரிவு காட்டுகின்றார் என்பது தான் புரியவில்லை.//

அதை ஏன் கண்டிக்கவில்லை,இதை ஏன் கண்டிக்கவில்லை,அதை ஏன் மறைத்தாய்,இதை ஏன் மறைத்தாய் என கேட்காதீர்கள்.நான் எழுதுவது 10,15 வரி பின்னூட்டம்.இதில் நான் எழுதாததை ஏன் எழுதவில்லை என கேட்டால் அதற்கு முடிவே இல்லை.நான் எந்த படுகொலையையும் ஆதரிக்கவும் இல்லை,நியாயபடுத்தவும் இல்லை.

உக்ரெயின் மக்கள், ஐநா சபை, ரஷ்ய வரலாற்று ஆசிரியர்கள், ஐரோப்பிய உலக வரலாற்று ஆசிரியர்கள் அறுதி பெரும்பான்மையினர் ஏற்றுகொண்ட ஒரு இனபடுகொலையை நடக்கவே இல்லை என சாதிக்கிறீர்கள்.போலந்தில் கொல்லப்பட்ட 22,000 பேரில் பலர் ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள். இது குறித்து ஸ்டாலினின் கையெழுத்து இருந்த ஆவணம் உள்ளது.இதை பின்னாட்களில் ரஷ்ய அரசு பகிரங்கமாக ஒத்துகொண்டு மன்னிப்பும் கேட்டது (நாள் 13 april 1990).மூன்று இடங்களில் பெருமளவிலான போலந்து மக்களின் சவகுழிகள் கண்டுபிடிக்கபட்டு அவை இன்று போலந்து மக்களால் நினைவிடங்களாக மாற்றபட்டுள்ளன.

இது எல்லாம் உங்களுக்கு தெரியாமல் இருக்கும் என நான் நம்பவில்லை.நீங்களே முன்பு குறிப்பிட்டது போல "சுய விமர்சனம் என்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான்" இல்லையா?

Kalaiyarasan said...

//மேலும் சோவியத்ருஷ்யாவில் முதலாளித்துவம் மட்டுமல்ல,,,அரசை விமர்சிக்கவே மக்களுக்கு, ரஷ்ய பொதுமக்களுக்கு அனுமதி மறூக்கபட்டது.அரசை விமர்சித்தவர்கள்,அதிபரை கண்டித்தவர்கள் எல்லோரும் குலாகுகளுக்கு அனுப்பபட்டு கொல்லபட்டார்கள்.//

அரசை விமர்சித்த எல்லோரும் தண்டிக்கப் பட்டார்கள் என்பது தவறு. நீங்கள் புல்லாக தண்ணியைப் போட்டு விட்டு குடி வெறியில் அரசை விமர்சித்தால் ஒன்றும் பாதகமில்லை. நாஜிச ஆதரவாளர்கள், அல்கைதா அனுதாபிகள் என்று பலர் பொதுமக்கள் என்ற பெயரில் அரசை விமர்சிப்பார்கள். அவர்களை தண்டித்து சிறைமுகாமுக்கு அனுப்பினார், "ஐயோ பொது மக்களை கொள்கிறார்களே!" என்று அலறுவீர்கள். மேலும் குலாக் என்பது மரணத்திற்காக அனுப்பப்பட்ட இடமல்ல. அது ஒரு தனிமைப் படுத்தப்பட்ட தடுப்பு முகாமாக இருந்தது. ஆனால் அங்கே வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கிடைத்தது. இன்றுள்ள சைபீரிய நகரங்கள் எல்லாம் குலாக்வாசிகள் கட்டி எழுப்பியது தான். அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் அந்த நகரங்களில் வசிக்கிறார்கள். உங்களால் முடிந்தால் ஒரு முறை சைபீரியா சென்று அவர்களை சந்தித்து பேசிப் பாருங்கள். உங்களது தவறான கருத்துகளுக்காக வருந்துவீர்கள்.

//கட்சி நடத்த பணத்தை மக்களிடம் தான் திரட்ட வேண்டும்.உங்கள் கொள்கை மக்களுக்கு பிடித்திருந்தால் அள்ளி அள்ளி தருவார்கள்.உங்கள் கொள்கை மோசமாக இருந்தால் பணம் வராது.//
ஆஹா என்னே அழகான கற்பனை. ஜெய் உங்களுக்கு அனுபவம் போதாது என்பதையும், எட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதையும் நிரூபிக்கிறீர்கள். எந்த ஒரு முதலாளித்துவ நாட்டில் ஆட்சிக்கு வரும் கட்சியும் வெறும் மக்கள் பணத்தில் மட்டும் அதனை சாதிக்கவில்லை. எத்தனையோ முதலாளிகள் அள்ளிக்கொடுக்கிறார்கள். ஆட்சிக்கு வரும் கட்சியால் தமக்கு லாபம் என்பதால் தான் முதலாளிகள் நிதி கொடுக்கிறார்கள். சந்தேகம் இருந்தால் பெரிய கட்சிகளின் நிதி கொடுத்த புரவலர்களின் பட்டியலை ஒரு தடவை வாங்கிப் பாருங்கள்.

//எத்தனையோ உலக ஜனநாயக்நாடுகளில் கம்யூனிஸ்டு கட்சிகள் இயங்கிகொண்டும் ஆட்சிக்கு வந்தும்,போயும் தான் இருக்கின்றன...மற்றபடி பெயரளவுக்கு கூட எதிர்கட்சிகளை இயங்க சோவியத்யூனியனோ சீனாவோ அனுமதிக்கவில்லை.//

ஆமாம், இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. முடிந்தாலும் சோஷலிச பொருளாதாரத்தை கொண்டு வர முடியாது. அப்படியே கொண்டு வந்தாலும் அந்த ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை, வன்முறையை, சதிப்புரட்சிகளை தூண்டி விடுவார்கள். குவாதமாலா முதல் வெனிசுவேலா வரை இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ஜெய் எப்போது உங்களது கூட்டை விட்டு வெளியே வந்து உலகத்தைப் பார்க்கப் போகிறீர்கள்?

//அல்கொய்தாவை அனுமதிக்காத மேற்கத்தியநாடுகளின் பத்திரிக்கை சுதந்திரமும், அரசுகெதிரான சொந்த நாட்டு மக்களின் விமர்சனங்களை அனுமதிக்காத சோவியத்யூனியனின் பத்திரிக்கை சுதந்திரமும் ஒரே தட்டில் வைத்து எடைபோடகூடியவை என கூறுகிறீர்களா?//
அல்கைதாவை ஆதரிக்கும் ஒரு குழு எப்போதும் எங்கேயும் இருக்கின்றது. அவர்கள் தாங்கள் கூற நினைக்கும் கருத்துகளை சொல்ல போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் அதை பொது மக்களின் பெயரில் தான் செய்கிறார்கள். (நீங்களும் அப்படித்தானே?) மேற்கத்திய நாடுகள் அதனை அல்கைதா பயங்கரவாதம் என்று முத்திரை குத்தி ஒடுக்குகின்றன. குவாந்தனமோ போன்ற குலாக்குகளுக்கு அனுப்பி சித்திரவதை செய்கிறன்றன. சோவியத் யூனியனில் அரசுக்கு எதிராக வன்முறைப் பிரச்சாரம் செய்து வந்த நாஜி/ஜிகாத்/முதலாளித்துவ பயங்கரவாதத்தை ஆதரித்த பத்திரிகைகள் மட்டும் தடை செய்யப்பட்டன. அதை நீங்கள் பொது மக்கள் என்று திரித்து நியாயப்படுத்த முடியாது. உங்களது அளவுகோலின் படி அல்கைதா, தாலிபானும் பொது மக்கள் தான். அவர்களின் கருத்து சுதந்திரத்திற்காகவும் நீங்கள் போராடலாம் அல்லவா? உங்களது நேர்மையைப் பாராட்டும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

Jai said...

//அரசை விமர்சித்த எல்லோரும் தண்டிக்கப் பட்டார்கள் என்பது தவறு. நீங்கள் புல்லாக தண்ணியைப் போட்டு விட்டு குடி வெறியில் அரசை விமர்சித்தால் ஒன்றும் பாதகமில்லை. நாஜிச ஆதரவாளர்கள், அல்கைதா அனுதாபிகள் என்று பலர் பொதுமக்கள் என்ற பெயரில் அரசை விமர்சிப்பார்கள். அவர்களை தண்டித்து சிறைமுகாமுக்கு அனுப்பினார், "ஐயோ பொது மக்களை கொள்கிறார்களே!" என்று அலறுவீர்கள். //

இதை எழுதும்போது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா?பின்னாட்களில் ரஷ்ய அரசே குலாகுகளில் நடந்த கொலைகளை ஒத்துகொண்டது.ரஷ்ய ரகசியபோலிஸ் என்கேவிடி தலைமையகத்தில் இன்று குலாகில் இறந்த மில்லியன்கணகான மக்களுக்கான நினைவிடம் உள்ளது.அதை வருடந்தோறும் அக்.30 அன்று பல ஆயிரம் மக்கள் கூடி அஞ்சலி செலுத்துகின்றனர்.

//இன்றுள்ள சைபீரிய நகரங்கள் எல்லாம் குலாக்வாசிகள் கட்டி எழுப்பியது தான். அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் அந்த நகரங்களில் வசிக்கிறார்கள். உங்களால் முடிந்தால் ஒரு முறை சைபீரியா சென்று அவர்களை சந்தித்து பேசிப் பாருங்கள். உங்களது தவறான கருத்துகளுக்காக வருந்துவீர்கள். //

சைபீரியாவில் நகரம் கட்டுவது எத்தனை கொடுமையான விஷயம் என்பது உலகுக்கே தெரியும்.சைபீரிய குளிரின் தன்மை எத்தகையது என்பது உங்களுக்கு தெரியாதா கலையரசன்?அதை ஏதோ பிக்னிக் போனமாதிரி கூறுகிறீர்களே?

//ஆமாம், இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. முடிந்தாலும் சோஷலிச பொருளாதாரத்தை கொண்டு வர முடியாது. அப்படியே கொண்டு வந்தாலும் அந்த ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை, வன்முறையை, சதிப்புரட்சிகளை தூண்டி விடுவார்கள். குவாதமாலா முதல் வெனிசுவேலா வரை இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ஜெய் எப்போது உங்களது கூட்டை விட்டு வெளியே வந்து உலகத்தைப் பார்க்கப் போகிறீர்கள்? //

மக்கள் ஆதரவு இருந்தால் அனைத்து யுத்தங்களையும் ஜெயிக்கலாம்.அது இல்லாமல் போனதால் தான் உங்கள் கட்சி உலகம் முழுவதும் தோற்றது. மக்கள் ஆதரவை திரட்டி வெல்ல இயலாது என்றால் உங்கள் கட்சியும்,கொள்கையும் ஆட்சிக்கு வருவதில் துரும்பளவு கூட நியாயம் இல்லை.மக்கள் ஏற்காத எந்த கோட்பாடும் நிராகரிப்புக்கு உட்பட்டதே.

//அல்கைதாவை ஆதரிக்கும் ஒரு குழு எப்போதும் எங்கேயும் இருக்கின்றது. அவர்கள் தாங்கள் கூற நினைக்கும் கருத்துகளை சொல்ல போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் அதை பொது மக்களின் பெயரில் தான் செய்கிறார்கள். (நீங்களும் அப்படித்தானே?) மேற்கத்திய நாடுகள் அதனை அல்கைதா பயங்கரவாதம் என்று முத்திரை குத்தி ஒடுக்குகின்றன. //

இல்லையே?அல்கொய்தாவின் கோரிக்கைகளை (பாலஸ்தீன விடுதலை, இராக்,ஆப்கன் போர் நிறுத்தம், அரேபியாவிலிருந்து அமெரிக்க படை வெளியேற்றம்) பகிரங்கமாக எழுப்பும் பல அமெரிக்கர்கள் , ஐரோப்பியர்களுள்ளனர்.அவர்களுக்கு அரசுகள் எந்த வாய்பூட்டும் போடப்படவில்லை.அவர்கள் கைது செய்யபடவில்லை.

Kalaiyarasan said...

//மக்கள் ஆதரவு இருந்தால் அனைத்து யுத்தங்களையும் ஜெயிக்கலாம்.அது இல்லாமல் போனதால் தான் உங்கள் கட்சி உலகம் முழுவதும் தோற்றது. மக்கள் ஆதரவை திரட்டி வெல்ல இயலாது என்றால் உங்கள் கட்சியும்,கொள்கையும் ஆட்சிக்கு வருவதில் துரும்பளவு கூட நியாயம் இல்லை.மக்கள் ஏற்காத எந்த கோட்பாடும் நிராகரிப்புக்கு உட்பட்டதே.//

நாஜிகளின் மீதான சோவியத் செம் படையின் வெற்றி மக்கள் ஆதரவு இன்றி சாத்தியமாகி இருக்குமா? ஹிட்லர் படையெடுத்த பொழுது புற முதுகிட்டு ஓடிய ஐரோப்பிய அரசாங்கங்கள் எத்தனை? உலகில் எந்த ஒரு புரட்சியும் மக்கள் ஆதரவு இன்றி வெற்றி பெறவில்லை. நீங்களே ஒத்துக் கொல்லும் 70 ஆண்டு சோவியத் யூனியன் மக்கள் ஆதரவின்றி நிலைத்து நிற்கவில்லை. ஆனால் மக்கள் மீது தாக்கம் செலுத்தும் புறக் காரணிகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும். மக்களுக்கு காசைக் காட்டி, வசதியைக் காட்டி சோஷலிச நாடுகளின் மக்களை கவர்ந்திழுக்க பல முயற்சிகள் நடந்தன. மேற்குலக நாடுகளில் பாலும், தேனும் ஆறாக ஓடுவதாக வானொலி மூலம் பிரச்சாரம் செய்தார்கள். ஆசை யாரைத் தான் விட்டது?

Kalaiyarasan said...

//ஒரு நாட்டின் குடிமகனுக்கு அரசை, அதிபரை, ஆளும்கட்சியை பகிரங்கமாக ஊடகங்களில் விமர்சிக்கும் உரிமை உள்ளதா?இல்லையா?இதுதான் என் கேள்வி.//
சோஷலிச நாடுகளின் பாராளுமன்றத்தில், கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும். தலைமையில் இருப்பவர்களின் தலை அங்கே உருளும். அது மட்டுமல்ல தொழிற்சாலைகளில், பாடசாலைகளில், அலுவலகங்களில் உள்ள கமிட்டிகளில் அரசின் கொள்கை பற்றி விமர்சிக்கப்படுகிறது. (இதை எல்லாம் உங்கள் அயலில் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.) இப்போதும் கியூபாவில் கிராமிய மட்டத்தில் கூட அரசியல் விவாதங்கள் நடக்கின்றன. பத்திரிகைகளில் வருவது இந்த விவாதங்களின் ஒரு பகுதி மட்டுமே. உங்களுக்கு இவற்றை புரிந்து கொள்ள ரஷ்ய மொழியோ, சீன மொழியோ தெரியாது என்பது உண்மை தான். ஆனால் அதற்காக ஆங்கிலத்தில் வரும் மேற்குலக பரப்புரைகளை அப்படியே நம்ப வேண்டுமா? ம்ம்ம்...இனியாவது வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பாதீர்கள்.

Kalaiyarasan said...

//கந்துவட்டிகாரனை, பெருமுதலாளிகளை கொல்லலாமா என ஐரோப்பாவில் ஒரு கருத்துகணிப்பு நடத்தினால் என்ன முடிவு வரும் என நினைக்கிறீர்கள்?//
எதற்காக ஐரோப்பா எல்லாம் போகிறீர்கள்? இந்தியாவிலேயே எத்தனையோ பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். உயர்சாதி என்று அதிகாரம் செலுத்தியவர்களால் ஆயிரம் வருடங்கள் அடிமைப்படுத்தப் பட்ட தலித் மக்களைக் கேளுங்கள். இவர்கள் எல்லோரும் தம்மை அடக்கி சுரண்டிப் பிழைத்த எஜமானர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று தீர்ப்புக் கூறட்டும்.

//ஆதிமனித காலம் முதல் இன்றுவரை சுதந்திரமான வர்த்தகமும், நிலவுடமை சமூகமும் தான் நிலவி வந்தது.கம்யூனிசத்தின் வரலாறு வெறும் 70 ஆண்டுகள் மட்டுமே.//
ஜெய், நிலவுடமை பொருளாதாரமும், முதலாளித்துவ பொருளாதாரமும் ஒன்றல்ல. அவற்றிற்கு இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தை தாண்டி தான் முதலாளித்துவம் வந்தது. 500 வருடங்களுக்கு முன்னர் மேற்குலகில் முதலாளித்துவ ஸ்டாலின்களும், மாவோக்களும் கொண்டு வந்த புரட்சி, கோடிக்கணக்கான மக்கள் படுகொலை இவற்றிக்கு பிறகு தான் முதலாளித்துவ பொருளாதாரம் நடைமுறைக்கு வந்தது. கம்யூனிச பொருளாதாரம் ஆதி காலத்தில் இருந்துள்ளது. மனிதன் குழுவாக சேர்ந்து பொருளாதார உற்பத்தியை செய்த நேரம் கம்யூனிச சமுதாயமே இருந்தது. அதைப் பற்றி எல்லாம் நீங்கள் படித்த கல்லூரிகளில் கற்பிக்க மாட்டார்கள். அப்புறம் நீங்கள் புத்திசாலியாகி விடுவீர்கள். முதலாளித்துவத்திற்கு தேவையான கூலிப்பட்டாளத்தை உருவாக்குவது தான் கல்லூரிகளின் கடமை. அப்படிப் பட்ட ஒரு இடத்தில் புரோகிராம் செய்யப்பட்டு வெளியே அனுப்பப்பட்ட கோடிக்கணக்கான ரோபோக்களில் நீங்களும் ஒருவர். சொல்லிக் கொடுத்த பாடத்தை ஒப்புவிக்காமல், வேறு எப்படிப் பேசுவீர்கள்? நீங்கள் முதலாளித்துவத்தை எதிர்த்தால் அது தான் ஆச்சரியம்.

Prasanna said...

ஆனந்த விகடனில் தங்கள் வலைத்தளம் குறிப்பிடப்பட்டுள்ளது.. வாழ்த்துக்கள் :)

Kalaiyarasan said...

தகவலுக்கு நன்றி பிரசன்னா

Jai said...

//எதற்காக ஐரோப்பா எல்லாம் போகிறீர்கள்? இந்தியாவிலேயே எத்தனையோ பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். உயர்சாதி என்று அதிகாரம் செலுத்தியவர்களால் ஆயிரம் வருடங்கள் அடிமைப்படுத்தப் பட்ட தலித் மக்களைக் கேளுங்கள். இவர்கள் எல்லோரும் தம்மை அடக்கி சுரண்டிப் பிழைத்த எஜமானர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று தீர்ப்புக் கூறட்டும். //

இந்தியாவில் கேட்டாலும் பெரிதாக மாற்றம் இருக்காது.இங்கே தலித்துகள் ஓட்டு இரட்டை இலைக்கோ, உதய சூரியனுக்கோதான்.

//ஜெய், நிலவுடமை பொருளாதாரமும், முதலாளித்துவ பொருளாதாரமும் ஒன்றல்ல. அவற்றிற்கு இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தை தாண்டி தான் முதலாளித்துவம் வந்தது. 500 வருடங்களுக்கு முன்னர் மேற்குலகில் முதலாளித்துவ ஸ்டாலின்களும், மாவோக்களும் கொண்டு வந்த புரட்சி, கோடிக்கணக்கான மக்கள் படுகொலை இவற்றிக்கு பிறகு தான் முதலாளித்துவ பொருளாதாரம் நடைமுறைக்கு வந்தது. //

சந்தையின் செயல்பாட்டை அரசு தீர்மானிக்காதவரை, உற்பத்தி ஸ்தானங்கள் அரசுடமையாக்கபட்டாதவரை சந்தையின் விலை அரசால் நிர்ணயிக்கபட்டாதவரை அது சுதந்திரமான வர்த்தகமே.தொழில்புரட்சி ஏற்பட்ட பிறகு சுதந்திர வர்த்தகம் பெரிதும் மாற்றமடைந்தது.ஆனால் அது அன்று புதிதாக பிறக்கவில்லை.ஆதிமனிதன் என்று இறைச்சியை தோலுக்கு பரிவர்த்தனை செய்துகொண்டானோ அன்றே சுதந்திர வர்த்தகம் தொடங்கிவிட்டது.குழுவாக சேர்ந்து வேட்டையாடினாலும் அந்த குழுக்களுக்குள் வலுத்தவனுக்கு அதிக இறைச்சி, பெரிய குகை, அடுப்பருகே வசதியான இடம், நல்ல பெரிய தடித்த மிருக தோல்கள் என சமூக ஏற்றதாழ்வும் ஒரு குழுவின் இறைச்சி,வாழ்விடத்தை அடுத்த குழு அடித்து பிடுங்குவதும் நடந்தன. விவசாயம் அறிமுகமானதும் நல்ல வளமான நிலங்கள், நிறைய கால்நடைகளை வலுத்தவர்கள் எடுத்துகொண்டார்கள்.அதில் அனைவரிலும் மிக வலுத்தவன் அரசனானான்.அப்புறம் அவன் வைத்தது சட்டமானது.இந்த முறையின் பரிணாம வளர்ச்சியே இன்றைய முதலாளித்துவமாகும்.

Jai said...

பதில்களுக்கு நன்றி கலையரசன்.

//நாஜிகளின் மீதான சோவியத் செம் படையின் வெற்றி மக்கள் ஆதரவு இன்றி சாத்தியமாகி இருக்குமா? ஹிட்லர் படையெடுத்த பொழுது புற முதுகிட்டு ஓடிய ஐரோப்பிய அரசாங்கங்கள் எத்தனை? //

நாஜிக்களை அன்று கடைசிவரை அடிபணியாமல் எதிர்த்து நின்ற ஐரோப்பிய அரசுகள் ப்ரிட்டனும், ரஷ்யாவும்.இந்த நாடுகள் பாசிசத்துக்கு எதிராக அடைந்த வெற்றி அந்த நாட்டு மக்களின் வெற்றியே

//உலகில் எந்த ஒரு புரட்சியும் மக்கள் ஆதரவு இன்றி வெற்றி பெறவில்லை. நீங்களே ஒத்துக் கொல்லும் 70 ஆண்டு சோவியத் யூனியன் மக்கள் ஆதரவின்றி நிலைத்து நிற்கவில்லை.//

சோவியத்யூனியனுக்கு முதல் 20 ஆண்டுகள் மக்கள் ஆதரவு இருந்திருக்கலாம்.உக்ரெயின்,போலந்து படுகொலைகள் நடந்தபோதே மக்கள் ஆதரவு சுத்தமாக போயிருக்கும்.அதன்பின் நடந்தது சர்வாதிகார ஆட்சியே என கருதுகிறேன்.

//ஆனால் மக்கள் மீது தாக்கம் செலுத்தும் புறக் காரணிகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும். மக்களுக்கு காசைக் காட்டி, வசதியைக் காட்டி சோஷலிச நாடுகளின் மக்களை கவர்ந்திழுக்க பல முயற்சிகள் நடந்தன. மேற்குலக நாடுகளில் பாலும், தேனும் ஆறாக ஓடுவதாக வானொலி மூலம் பிரச்சாரம் செய்தார்கள். ஆசை யாரைத் தான் விட்டது?//

பிரச்சாரம் உங்கள் எதிரிகளும் செய்யதான் செய்வார்கள்.மேற்கே பாலாறும், தேனாறும் ஓடுதான்னு பார்த்துவிட்டு வா என மக்களை அனுமத்திருக்கலாம்.ரஷ்ய ஊடகங்களை சுதந்திரமாக வெளிநாட்டுகளுக்கு அனுப்பியிருக்கலாம்.வெளிநாட்டு தொலைகாட்சிகளை,செய்திதாள்களை ரஷ்யாவில் அனுமதித்திருக்கலாம். மக்கள் குச்சிமிட்டாயை கண்டுமயங்கும் குழந்தைகள் அல்லர். தமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்களின் தேர்வை மதிப்பதே ஜனநாயகம்.

//சோஷலிச நாடுகளின் பாராளுமன்றத்தில், கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும். தலைமையில் இருப்பவர்களின் தலை அங்கே உருளும். அது மட்டுமல்ல தொழிற்சாலைகளில், பாடசாலைகளில், அலுவலகங்களில் உள்ள கமிட்டிகளில் அரசின் கொள்கை பற்றி விமர்சிக்கப்படுகிறது. (இதை எல்லாம் உங்கள் அயலில் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.)//

மேற்கத்தியநாடுகளின் பாராளுமன்றத்தில்,கல்விசாலைகளில் இதெல்லாம் நடைபெறவில்லை என கூறுகிறீர்களா?

இந்த விவாதம் சரிவர நடக்கவே முதலில் சுதந்திரமான செய்திதாள்களும், ஊடகங்களும் வேண்டும்.அரசு தணிக்கை செய்து வெளியிடும் செய்திகளை மட்டும் வைத்துகொண்டு மக்கள் என்னவென தமக்குள் விவாதிப்பார்கள்?அதிபரை, அரசை மாற்றும் உரிமை, விமர்சிக்கும் உரிமை மக்களுக்கு இருக்கவேண்டும்.அதுதான் உண்மையான ஜனநாயகம்.