Thursday, May 13, 2010

அமெரிக்க மண்ணில் ரகசிய தடுப்பு முகாம்கள்!

அமெரிக்காவில் அகதிகள் அல்லது சட்டவிரோதமாக தங்கியிருப்போர் இரகசிய தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பல இடங்களில் ரகசியமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிறை முகாம்களில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. சிறையில் தாம் மோசமாக நடத்தப் பட்டதாக அங்கிருந்து விடுதலையானவர்கள் தெரிவிக்கின்றனர். Russia Today தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படம்.

Part 1

Part 2



அமெரிக்க மாநிலமான அரிசோனா சட்டவிரோதமாக தங்கியிருப்போரை கண்டுபிடிப்பதற்காக ஒரு சட்டம் கொண்டுவந்துள்ளது. புதிய சட்டத்தின் படி தெருவில் காணப்படும் ஒரு நபர் சட்டவிரோத குடியேற்றக்காரர் என்ற சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் போதும். காவலர்கள் அவரது அடையாள அட்டையை காட்டுமாறு கேட்கலாம். இதனால் கருப்பு நிறத்தவர்கள், ஊதா நிறத்தவர்கள், அல்லது லத்தீன் அமெரிக்கரைப் போல தோன்றும் எவரும் போலிஸ் சோதனைக்கு உள்ளாக வாய்ப்புண்டு. அரிசோனா மாநிலம் கொண்டு வந்த சட்டம், நிறவாத பாரபட்சம் கொண்டது என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். Arizona passes tough illegal immigration law

No comments: