Thursday, September 30, 2010

பிரேசில்: வர்க்கங்களின் கால்பந்து மைதானம்

"இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா" தொடர் - 3
(பிரேசில், பகுதி 1)

"நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!" - Dom Hélder Pessoa Câmara (கத்தோலிக்க மேற்றிராணியார், பிரேசில்)

உலகம் முழுவதும் உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு பிடித்த நாடு பிரேசில். அதற்கப்பால் உலகின் மிகப் பெரிய நாடுகளில் (8.511.965 km) ஒன்றான பிரேசிலை அறிந்து வைத்திருப்பவர்கள் அரிது. மேற்குலகில் பிரேசில் கேளிக்கைகளின் சொர்க்கம். வர்ணமயமான கார்னிவல் அணிவகுப்புகள். பாலியல் பண்டமாக நோக்கப்படும் அழகிய பெண்கள். இவை தான் பலருக்கு நினைவுக்கு வரும். கொஞ்சம் "சமூக அக்கறை கொண்டவர்கள்" என்றால், தெருக்களில் வளரும் குழந்தைகள், நாற்றமடிக்கும் சேரிகளை பார்த்து, வறிய பிரேசில் மீது அனுதாபப் படுவார்கள். ஆனால் எண்ணெய் வளத்தை தவிர உலகின் அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. என்றோ லத்தீன் அமெரிக்காவின் வல்லரசாக வந்திருக்க வேண்டியது. மொழி, இன, மதப் பிரச்சினை என்று பிரிவினையை தூண்டும் காரணிகளும் கிடையாது. அப்படிப்பட்ட பிரேசில் ஏன் இன்றைக்கும் பின்தங்கிய வறிய நாடாக உள்ளது?

மொத்த சனத்தொகையில் இருபது வீதமான பணக்காரர்கள், தேசத்தில் மொத்த உற்பத்தியில் அறுபது வீதத்தை நுகர்கிறார்கள். சனத்தொகையில் நாற்பது வீதமாக உள்ள ஏழைகளின் நுகர்வு பத்து வீதம் மட்டுமே. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு மூல காரணம். சாவோ பாவுலோ, ரியோ டெ ஜனைரோ போன்ற உலகத் தரம் வாய்ந்த நகரங்கள், தென்னகத்து நியூ யார்க் போல காட்சி தரும். விண்ணை எட்டத் துடிக்கும் கட்டிடங்கள், கான்க்ரீட் காடுகளாக காணப்படும். பிராடா, ஷனேல், அடிடாஸ்... உலகில் சிறந்த பிராண்ட் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும் ஆடம்பர அங்காடிகள். அவற்றை வாங்குவதற்கு மொய்க்கும் பணக்காரக் கும்பல். வீதி வழியாக கடைக்கு சென்றால், வாகன நெரிசலில் சிக்க நேரிடலாம், அல்லது கிரிமினல்களின் தொல்லை. இதனால் தமது பங்களாக்களில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்து வந்து "ஷாப்பிங்" செய்கிறார்கள்.

பிரேசில் மக்களில் பெரும்பான்மையானோர் நகரங்களில் வாழ்கின்றனர். நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நகரங்களின் எண்ணிக்கையை வைத்து பிரேசிலின் வளர்ச்சியை கணக்கிட்டு விட முடியாது. பொருளீட்டுவதற்காக நாள் தோறும் லட்சக்கணக்கான நாட்டுப்புற ஏழைகள் பெரு நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். அதிர்ஷ்டத்தை தேடி ஓடி வரும் மக்களை அரவணைக்க நகரங்களில் யாரும் இல்லை. இருப்பிடம், வேலை எல்லாம் அவர்களாகவே தேடிக் கொள்ள வேண்டும். இதனால் நகரத்தின் ஒதுக்குப் புறமாக சேரிகள் பெருகி வருகின்றன. அந்த இடத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கொள்வது. மின் கம்பங்களில் கம்பியைப் போட்டு மின்சாரத்தை திருடுவது. தண்ணீருக்காக குழாய்யடியில் சண்டை போடும் குடும்பங்கள். சுருக்கமாக, இவை "உலகத்தரம் வாய்ந்த சேரிகள்." புகழ் பெற்ற மும்பையின் தாராவி சேரி பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு அதிகம் விளக்கத் தேவை இல்லை. பிரேசிலில் இவற்றை "பவேலா" (Favela ) என்றழைப்பார்கள்.

பவேலா வாழ் மக்கள் நகரங்களில் பணக்கார வீடுகளில் வேலை செய்வார்கள். டாக்சி ஓட்டுனர்கள், நடைபாதை வியாபாரிகள், ஹோட்டல் பணியாட்கள் என்று உழைத்து முன்னுக்கு வந்த சிலர் சேரிகளிலேயே வசதியான சிறு வீடு கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள். இதைவிட பணம் சேர்க்க சட்டவிரோதமான தொழில்களில் ஈடுபடுவோருக்கும் அது தான் புகலிடம். பாலியல் தொழிலாளர்கள், போதைவஸ்து விற்பவர்கள், மற்றும் மாபியா குழுக்களுக்கு வேலை செய்பவர்கள் என்று பலர். கிரிமினல்களின் தொல்லை தாங்காமல் போலிஸ் அந்தப் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை. அந்த அளவுக்கு பவேலாவில் கிரிமினல்களின் ஆட்சி நடக்கிறது. ஒரு ஜீவன் வாழ்வதற்கு போராட வேண்டிய சூழலில், தாய்மார்களால் கைவிடப்பட்ட குழந்தைகள், தெருக்களில் அனாதைகளாக கிடக்கும். தெருவிலேயே வளரும் குழந்தைகள் பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன. விபச்சாரம், போதைப்பொருள், திருட்டு, கொலை என்று எல்லாவித குற்றச் செயல்களிலும் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களை மாபியக் குழுக்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. பிடிபட்டால் சிறுவர்கள் என்று சிறு தண்டனையுடன் தப்பி விடுவார்கள். இருப்பினும் நாள் தோறும் குறைந்தது பத்து சிறுவர்களாவது, போலிஸ் - மாபியா சண்டையில் மடிகின்றனர்.

லத்தீன் அமெரிக்க கண்டத்தில் தெளிவாகத் தெரியும் வர்க்க முரண்பாடுகளை பிரேசிலிலும் அவதானிக்கலாம். பணக்காரர்கள் தங்களது நலன்களை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். சுரண்டலில் சேகரித்த செல்வத்தை எப்படி செலவழிப்பது என்பது மாத்திரமே அவர்களது கவலை. ஏழைகளும் தமக்குத் தெரிந்த வழியில் பணத்தை சேர்க்க விளைகிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு தொடரும் வரை கிரிமினல்களும் பெருகிக் கொண்டே இருப்பார்கள். "திருடுவது பாவம்" என்று ஏழைகளுக்கு மட்டுமே போதித்துக் கொண்டிருந்த தேவாலயங்களும் பிற்காலத்தில் இந்த யதார்த்தை புரிந்து கொண்டன. எழுபதுகளில் இராணுவ சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் முற்போக்கு பாதிரிகள் தோன்றினார்கள். அவர்களில் Dom Hélder Câmara பிரேசிலுக்கு வெளியிலும் பலரால் அறியப்பட்டார். "நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!" என்ற அவரின் வாசகம் உலகப் புகழ் பெற்ற பொன்மொழியாகியது.

பிரேசிலில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் சில உள்நாட்டு தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும் உள்வாங்கியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து பிடித்து வரப்பட்ட கறுப்பின அடிமைகள், தங்களது மதத்தை பின்பற்ற தடை இருந்தது. இதனால் சில ஆப்பிரிக்க தெய்வங்கள் கத்தோலிக்க புனிதர்களாக வழிபடப்பட்டன. அதே போல பிரேசிலில் பேசப்படும் போர்த்துகீச மொழியும் பல ஆப்பிரிக்க, செவ்விந்திய பழங்குடி சொற்களையும் கொண்டுள்ளது. அனேகமாக கொய்யாப்பழம், போர்த்துக்கேயருடன் பிரேசிலில் இருந்து நமது நாட்டிற்கு வந்திருக்கலாம். பிரேசில் செவ்விந்திய பழங்குடியினர் அந்தக் கனியை "கொய்யாவா" (Goiaba ) என்று பெயரிட்டிருந்தனர். செவ்விந்திய பூர்வகுடிகளின் பிரதான உணவான "மண்டியோக்" போத்துக்கேயரால் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்களத்தில் அதனை திரிபடைந்த போர்த்துக்கேய பெயரால் "மைஞோக்கா" என்பார்கள். தமிழில் அதன் பெயர் மரவள்ளிக் கிழங்கு.

பிரேசிலின் மதமும், மொழியும், கலாச்சாரமும் செவ்விந்திய பழங்குடியின மற்றும் ஆப்பிரிக்க கூறுகளைக் கொண்டிருந்த போதிலும், தேசத்தின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. இந்த இரு சிறுபான்மை இனங்களும் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன. அவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் குறைவு. இதனால் பெரும்பான்மையானோர் ஏழைகளாக வருந்துகின்றனர். சல்வடோர் என்ற வடக்கத்திய நகரத்தில் ஆப்பிரிக்க அடிமைகளின் வழித்தோன்றல்கள் அதிகமாக வாழ்கின்றனர். சல்வடோர் ஒரு காலத்தில் பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. பிரேசிலின் வட மேற்கை சேர்ந்த அமேசன் நதிப் பிராந்தியத்தில் செவ்விந்திய பழங்குடியினர் வாழ்கின்றனர். இன்றைய பிரேசிலின் வடக்குப் பகுதி மிகவும் பின்தங்கியுள்ளது. எல்லா வித உற்பத்தியும் நின்று போய், வறுமை தாண்டவமாடுகின்றது. இருப்பினும் அமேசன் ஆற்றுப்படுகைகளில் தங்கத் துகள்களை எடுத்து திடீர் பணக்காரனாகும் ஆசையில் இன்றும் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர் போர்த்துக்கல்லில் இருந்து தங்கம் தேடி வந்தவர்கள் பிரேசிலில் நிரந்தரமாக குடியேறி விட்டனர். கடற்கரையோரம் தங்கம் கிடைக்காததால் உள்நாட்டிற்குள் புகுந்தார்கள். அங்கே தங்கத்தை விட வேறு பல வளங்களையும் கண்டு கொண்டார்கள். குறிப்பாக பலகை ஏற்றுமதிக்காக காடுகளில் இருந்த பிரேசில் மரங்கள் தறிக்கப்பட்டன. பிரேசில் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த பலகைகள் வெளிநாட்டில் தரமானதாக மதிக்கப்பட்டன. ரப்பர், கோப்பி, கரும்பு ஆகிய பயிர்களுக்கான பெருந்தோட்ட செய்கைக்காகவும் காடுகள் அளிக்கப்பட்டன. காடழிப்பு பிற்காலத்தில் மழை வீழ்ச்சிக் குறைபாட்டையும், அதன் நிமித்தம் பிரேசிலுக்கு பொருளாதார பின்னடைவையும் கொண்டு வந்தது. பிரேசில் இன்று வறுமையான நாடாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

"சரித்திரம் எமக்கு அவசியமில்லை", என்று சில நடுத்தர வர்க்க புத்திஜீவிகள் வாதிடுவார்கள். பிரேசிலில் கறுப்பினத்தவர்களும், செவ்விந்தியர்களும் வறுமையில் வாடுவதற்கு வரலாற்றில் நேர்ந்த ஒரு பாரிய இடப்பெயர்வு காரணமாக உள்ளது. போர்த்துக்கேய காலனியாதிக்கவாதிகள் செவ்விந்தியர்களை தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை வாங்கினார்கள். அவர்களின் உழைப்பை சாகும் வரை பிழிந்து எடுத்தார்கள். பின்னர் ஆப்பிரிக்காவில் (அங்கோலா, கினியா) இருந்து லட்சக்கணக்கான கறுப்பின அடிமைகளை பிடித்து வந்தார்கள். அவர்களின் உழைப்பில் பெருந்தோட்டத் துறை செழித்தது. போர்த்துக்கேயர்கள் மட்டும் பெருந்தோட்ட முதலாளிகளாக இருக்கவில்லை. ஆங்கிலேயர்கள், யூதர்கள் என்று பல்லின முதலாளிகளின் வர்க்கமாக இருந்தது.

ஒரு சாதாரண வெள்ளையின ஐரோப்பியருக்கு கூட பிரேசில் சென்று செல்வந்தனாகும் யோகம் அடித்தது. அடிமையை வைத்து வேலை வாங்குவது என்பது மாடு வாங்கி உழுவதைப் போன்றது. அடிமையை வாங்குவதற்கு சிறிதளவு பணமும், பராமரிக்கும் செலவையும் பொறுப்பெடுத்தால் போதும். யாரும் பெருந்தோட்ட முதலாளியாகி விடலாம். நிலம் கூட வாங்கத் தேவை இல்லை. பூர்வகுடிகளை விரட்டி விட்டு அபகரித்த நிலம் தாராளமாக கிடைக்கும். இவ்வாறு குறைந்த முதல் போட்டு நிறைந்த லாபம் சம்பாதிக்கும் துறையால் பலர் கோடீஸ்வரர் ஆனார்கள். ஒரு கரும்புத் தோட்டம் போட்டாலே போதும். பணம் மழையாகப் பொழியும். ஐரோப்பிய சந்தையில் கரும்புச் சீனி அதிக விலையில் விற்கப்பட்ட ஆடம்பரப் பொருளாக இருந்தது. கடைகளில் ஒரு கிராம் சீனி மருந்து மாதிரி விற்பனையானது.

போர்த்துக்கல் அன்று பிரேசிலை தனது குடியேற்றக் காலனியாக அறிவித்து இருந்தது. குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவிப்பவர்களையும், பொது மன்னிப்பு அளித்து குடியேற அனுப்பி வைத்தார்கள். காலனிகளில் கிரிமினல் குடியேறிகளின் சேவை, காலனியாதிக்கவாதிகளுக்கு வெகுவாக தேவைப்பட்டது. முதலாவதாக, செவ்விந்திய பூர்வகுடிகளை அழித்தொழிக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டார்கள். இரண்டாவதாக, பெருந்தோட்டங்களில் இருந்து தப்பியோடிய அடிமைகளை பிடித்து வரும் பணி ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய அடிமையின் தலையைக் கொய்து வந்தால் சன்மானம் வழங்கப்பட்டது. இந்த பெருந்தோட்டக் காவலர்கள் எல்லாம் முன்னாள் கிரிமினல்கள் அல்லவா? அதனால் அடிமைகளை ஈவிரக்கம் பாராமல் அடக்கினார்கள். Bandeirantes என அழைக்கப்பட்ட இந்தப் போர்த்துக்கேய கிரிமினல்களை நாயகர்களாக சித்தரிக்கும் கதைகளும் அந்தக் காலத்தில் உலாவின. சாவோ பவுலோ நகரில் கொடிய Bandeirantes கிரிமினல்களுக்கு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டுள்ளது.

(தொடரும்)

Wednesday, September 29, 2010

ஈராக் போர்க் குற்றங்களை மூடி மறைக்கும் CNN

ஈராக்கில் அமெரிக்கப் படையினர் புரிந்த போர்க் குற்றங்களை, சுதந்திரமான செய்தி ஊடகமாக கருதப்படும் CNN மூடி மறைத்து வருகின்றது. CNN செய்தியாளர் Michael Ware ஈராக்கில் இருந்து அனுப்பிய வீடியோ ஒன்றை CNN வெளியிட மறுத்து வருகின்றது. அமெரிக்க இராணுவ வீரன் கொடூரமான முறையில் ஒரு அப்பாவி ஈராக் சிறுவனை கொலை செய்யும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை ஒளிபரப்ப மறுப்பதன் மூலம் CNN னும் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாகியுள்ளது. CNN செய்தியாளரின் முறைப்பாடுகளை வெளிக் கொணர்ந்த அவுஸ்திரேலிய தொலைக்காட்சி வீடியோ கீழே:



Multisource political news, world news, and entertainment news analysis by Newsy.com


கொழும்பு நகரில் கலையகம் பற்றிய கலந்துரையாடல்

பிரபல வலைப்பதிவரும், சர்வதேச அரசியல் ஆய்வாளருமான கலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” நூல்பற்றியதும், அவரது வலைப்பதிவுகள் பற்றியதுமான கலந்துரையாடல்
2010 – செப்ரெம்பர்- 30, வியாழக்கிழமை
ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ளலாம்.

Social Science Studies Circle – An Open Discussion Platform
(சமூக விஞ்ஞான கல்வி வட்டம் – ஒரு திறந்த கலந்துரையாடற் களம்(வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 5:45 மணியிலிருந்து.)

முற்று முழுதாக கலந்துரையாடல் வடிவிலமைந்த ஒரு வாராந்த சந்திப்பு!

இடம் :
தேசிய கலை இலக்கியப் பேரவை,
571/15. காலி வீதி,
வெள்ளவத்தை

முதலாளித்துவத்தின் சொல்லப்படாத இரகசியங்கள்


Ha-Joon Chang ஒரு முதலாளித்துவ பொருளியல் அறிஞர். முதலாளித்துவத்தை சரியான பாதையில் கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கையோடு "23 things they don’t tell you about capitalism" என்ற நூலை எழுதியுள்ளார்.

2008 ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி, தாராள பொருளாதாரம் என்ற சாத்தியப் படாத ஒன்றின் மீதான நம்பிக்கையின் சரிவு என்கிறார். சுதந்திரமான திறந்த சந்தை ஒரு நாளும் சாத்தியமில்லை என்று வாதிடுகின்றார்.

  • யதார்த்தத்தில் திறந்த சந்தை என்பது ஒரு கனவு மட்டுமே.
  • சந்தை எவ்வளவு சுதந்திரமானது என்பது அரசியல் தலைமையின் முடிவில் தங்கியுள்ளது.
  • சந்தையை ஒழுங்குபடுத்துவது எமது அறம் சார்ந்தது. சந்தை எமது நெறிகளை மீறுவதை ஏற்றுக் கொள்வதில்லை.
  • குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை இன்று ஏற்றுக்கொள்வதில்லை. நூறு வருடங்களுக்கு முன்னர், சிறுவர்கள் செய்யும் வேலையை 12 மணி நேரம் ஆக குறைத்ததையே திறந்த சந்தைக்கு ஆபத்தாக கருதினார்கள்.
  • ஏன் போதைவஸ்து, உடலுறுப்புகள், வாக்குச் சீட்டுகள் என்பனவற்றை விற்கக் கூடாது? அவற்றிற்கான திறந்த சந்தை சாத்தியமில்லையா? ஏன்?
  • அரசாங்கம் வங்கிகளை காப்பாற்றினால் திறந்த பொருளாதார சித்தாந்தவாதிகள் மகிழ்ச்சியடைய முடியுமா?
  • முரண்நகையாக முதலாளித்துவத்தின் வரலாறு முழுவதும் கட்டுப்பாடுகளை வரையறை செய்வதிலேயே செலவிட்டுள்ளனர்.

நூலாசிரியர் எடுத்துரைக்கும்,
கவனிக்கப்பட வேண்டிய பொருளாதாரக் குறைபாடுகள் பின்வருமாறு:

  • நிறையப் பேருக்கு அவர்களது தகுதிக்கு மீறி நிறைய ஊதியம் கொடுக்கப்படுகின்றது.
  • ஏழை நாடுகளில் மக்கள் வறுமையில் வாழ்வதற்கு அவர்கள் பொறுப்பல்ல. பணக்காரர்களே பொறுப்பேற்க வேண்டும்.
  • இன்டர்நெட் உலகை மாற்றியதை விட சலவை இயந்திரம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
  • பல்கலைக்கழக பட்டங்கள் பொருளாதார உற்பத்தியை அதிகரிக்கவில்லை.

நூலை வாசிப்பதற்கு:’23 things they don’t tell you about capitalism’

Tuesday, September 28, 2010

ஊடகங்கள் எவ்வாறு எம்மை ஏமாற்றுகின்றன?


சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், சோவியத் யூனியனில் லெனின், ஸ்டாலின் சிலைகளை தள்ளி விழுத்தும் காட்சிகளை தொலைக்காட்சிகள் காண்பித்தன. தொலைக்காட்சி என்ற சக்தி வாய்ந்த ஊடகம் வளர்ச்சியடைந்த காலகட்டம். உலகம் முழுவதும் பரவலாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்து விட்டது. மேற்குலகில் கேபிள் தொடர்பு வீடுகளை இணைத்து விட்டிருந்தது.

கம்யூனிச வீழ்ச்சியின் அடையாளமாக சிலை உடைப்பு வைபவங்களை உலகம் முழுவதும் மக்கள் கண்டுகளித்தார்கள். ஊடகங்கள் சொல்ல வந்த செய்தி கச்சிதமாக மக்கள் திரளிடம் போய்ச் சேர்ந்தது. கம்யூனிச நாடுகளிலேயே மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கம்யூனிசத்தை வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசி விட்டார்கள். நல்லது. உண்மையில் உலகில் நடப்பதை மட்டுமே ஊடகங்கள் தெரிவிக்கின்றனவா? ஊடகங்கள் எமக்கு சொல்லாத சேதிகள் பல உள்ளன.

முன்னை நாள் கம்யூனிச நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை யாரும் மறுக்கவில்லை. கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்த காலத்தில் பலதரப்பட்ட அரசியல் அமைப்புகள் இரகசியமாக இயங்கி வந்தன. லிபரல்கள், சமூக ஜனநாயகவாதிகள், பாசிஸ்ட்கள், தேசியவாதிகள் இவ்வாறு பலதரப்பட்ட அரசியலை சேர்ந்தவர்கள் தமது காலம் வரும் வரை காத்திருந்தார்கள்.

கோர்பசேவ், யெல்சின் கும்பல் கம்யூனிசத்தை கைவிட்டு விட்டு முதலாளித்துவத்தை தழுவிக் கொண்டனர். தொடர்ந்து அனைத்து அரசியல் அமைப்புகளுக்கும் சுதந்திரம் வழங்கி ஆதரவை தேடிக் கொண்டனர். புதிதாக சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் லெனின், ஸ்டாலின் சிலைகளை நெட்டித் தள்ளினார்கள். அதுவும் மாஸ்கோ போன்ற சில முக்கிய நகரங்களில் மட்டுமே இடம்பெற்றது. இதைத் தான் "பெருந்திரள் மக்கள் சிலைகளை விழுத்தியதாக" ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன.

எதற்கும் நாம் இதனை இன்னொரு கோணத்தில் இருந்து பார்ப்போம். ஈராக் போரை எதிர்த்து அமெரிக்காவிலேயே லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற அரச எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்தன. அவர்கள் நியூயோர்க் நகரில் அமெரிக்க குடியரசை நிறுவிய ஜோர்ஜ் வாஷிங்டன் சிலையை உடைக்கிறார்கள் என்று வைப்போம். அப்போது இந்த ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொள்ளும்? அந்த செயலை மாபெரும் தேச விரோத செயலாக சொல்லிக் கொண்டிருப்பார்கள். சிலை உடைத்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அறிவுறுத்துவார்கள்.

கிட்டத்தட்ட அப்படியொரு சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றது. லண்டன் மாநகரில் ஈராக் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடந்த சமயம் சேர்ச்சில் சிலை மீது சிவப்பு சாயம் பூசப்பட்டது. உடனே அரசும், ஊடகங்களும் நடக்கக் கூடாத அசம்பாவிதம் நடந்ததைப் போல கண்டிக்க ஆரம்பித்து விட்டார்கள். பெல்ஜியத்திலும் இதே போல முன்னாள் மன்னர் போதுவாவின் சிலைக்கு சிவப்பு சாயம் பூசப்பட்ட பொழுதும், அது பொறுப்பற்ற விஷமிகளின் வேலையாக பார்க்கப்பட்டது.

சோவியத் யூனியனில் சிலை உடைத்தால் அது மக்கள் எழுச்சி. மேற்குலகில் அரசியல் தலைவர்களின் சிலைகள் மீது சாயம் பூசினாலே குற்றம். தப்பித் தவறி உடைத்து விட்டால், உடனே ஊடகங்கள் சாமியாடி இருக்கும். "சுதந்திர ஊடகம்", "நடுநிலை ஊடகம்" எல்லாம் மக்களை ஏமாற்ற பாவிக்கப்படும் வெறும் அலங்காரச் சொற்கள். உலகில் எந்த ஊடகமும் ஒரே தன்மை கொண்டதாக இல்லை.

சோவியத் யூனியனின் லெனின் சிலை உடைந்த பொழுது தொலைக்காட்சி கமெராக்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சின. அப்போதே நகரம் நகரமாக, கிராமம் கிராமமாக லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதாக பலர் கற்பனைக் குதிரையை தட்டி விட்டார்கள். இன்று முன்னாள் சோவியத் யூனியனில் எங்குமே லெனின் சிலையை காண முடியாது என்று பலர் இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். (ஊடகங்கள் அப்படி நம்ப வைத்தன.)

சோவியத் குடியரசுகளான ரஷ்யாவில் மட்டுமல்ல, பெலாரஸ், உக்ரைன், மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும் இன்றைக்கும் லெனின் சிலைகள் நிமிர்ந்து நிற்கின்றன. அதுவும் பெரிய நகரங்களின், பிரதான வீதிகளில் காட்சியளிக்கின்றன. நான் சொல்வதை நம்பாதவர்கள் கீழ் குறிப்பிட்ட இடங்களுக்கு நேரே சென்று பார்க்கலாம்.

உக்ரைனில் கிரீமியா பகுதி, மொல்டேவியாவில் டிரான்ஸ் நிஸ்திரியா பகுதி, பெலாரஸ் குடியரசு, ரஷ்யாவில் சைபீரிய நகரமான நொறில்ஸ்க்.... இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். ஜோர்ஜியாவில் ஸ்டாலின் பிறந்த இடமான கோரியில் இருந்த ஸ்டாலின் சிலை, கடந்த வருடம் தான் அகற்றப்பட்டது. (தீவிர மேற்குலக சார்பு ஜனாதிபதி ஷாகாஷ்விலி தனது விசுவாசத்தைக் காட்ட வேண்டாமா?)

மேற்கத்திய ஊடகங்கள் எப்போதும் உண்மை சொல்கின்றன என்று நம்பும் பாமரர்கள் வாழும் உலகம் இது. அதனால் தான் மக்களை மூளைச் சலவை செய்வதும் அவர்களுக்கு இலகுவாக உள்ளது. பல ஊடகங்கள் எந்த வித சமூகப் பொறுப்புணர்வும் இன்றி செயற்படுகின்றன. அவர்கள் தமக்குக் கிடைக்கும் செய்தி உண்மையா என்று நிச்சயப் படுத்திக் கொள்வதில்லை. சில நேரம் வதந்திகளையும் உண்மை போல கூறுகின்றார்கள். அதற்கு பல உதாரணங்களை காட்டலாம்.

ஒரு முறை அமெரிக்காவில் பிளேர் என்ற இடத்தில் சில மாணவர்களைக் காணவில்லை என்ற செய்தி வந்தது. தொடர்ந்து அந்த இடத்தில் சூனியக்காரர்களின் நடமாட்டம், குழந்தைகளின் புதைகுழி போன்ற திகில் செய்திகளும் வந்தன. அதை எல்லாம் உண்மை என்றே பலரும் நம்பினார்கள். சில மாதங்களுக்கு பின்னர் தான் உண்மை வெளிவந்தது. "Blair Witch Project" என்ற ஆங்கிலப் படத் தயாரிப்பாளர்கள், தமது திரைப்படத்துக்கான விளம்பரத்திற்காக கட்டி விட்ட கதை அது.

ஒரு தடவை, நெதர்லாந்து பத்திரிகைகள் அனைத்திலும் ஒரு பரபரப்புச் செய்தி வெளியானது. அநேகமாக ஜெர்மன் ஊடகங்களில் இருந்து அந்த தகவல் வந்திருக்கலாம். முன்னை நாள் கிழக்கு பெர்லினில், பெர்லின் சுவருக்கு அருகில் இருந்த வீடொன்று இருபது வருடமாக ஆளரவம் இல்லாமல் திறந்து கிடந்ததாம். அங்கே வாழ்ந்த மக்கள் பெர்லின் மதில் உடைந்த செய்தி கேள்விப் பட்ட உடனேயே மேற்கு பெர்லினுக்கு ஓடியிருக்கலாமாம். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுப் பொருட்கள் கூட மேசையில் அப்படியே இருந்தனவாம்.

கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம். இருபது வருடங்களுக்கு முன்னர் மிஞ்சிய உணவுப்பொருட்கள் அப்படியே கெடாமல் இத்தனை வருடங்களாக இருந்திருக்கிறது, என்று பத்திரிகைகள் நமது காதில் பூச் சுற்றுகின்றன. இருபது வருடங்கள் அந்த வீட்டின் வாடகை, மின்சார, தண்ணீர் பில்களை எவன் கட்டினான் என்று யாரும் கேட்கவில்லை. இப்படியான செய்திகள் உலகம் முழுவதும் வாழும் கம்யூனிச எதிர்ப்பாளர்களின் மனங்களை குளிர்விப்பதற்காக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஒரு தடவை, "பிடல் காஸ்ட்ரோ, கம்யூனிசம் தோற்று விட்டதாக ஏற்றுக் கொண்டார்" என்ற செய்தி உலகம் முழுவதும் அடிபட்டது. கியூபா சென்று காஸ்ட்ரோவை பேட்டி கண்ட பத்திரிகையாளர் வெளியிட்ட ஒரு சிறு டிவிட்டர் தகவல் தான் அது. பின்னர் வெளியான காஸ்ட்ரோவின் முழுமையான நேர்காணலை வாசித்தவர்கள் நிச்சயமாக ஏமாற்றமடைந்திருப்பார்கள். இருந்தாலும் யார் அதையெல்லாம் வாசிக்கவில்லை என்று கவலைப்பட்டார்கள்? 

இத்தனை காலம் அவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் கியூபா சோஷலிசத்தை கைவிட்டு விட்டது என்ற செய்தியைத் தான். அத்தகைய மகிழ்ச்சிகரமான செய்தியை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? மக்களுக்கு போதையேற்றுவது மட்டுமே ஊடகங்களின் பணியாகி விட்ட காலம். இருந்தாலும் அல்கஹோல் விகிதாசாரம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

Sunday, September 26, 2010

10.10.10 டென்மார்க்கில் நூல் அறிமுகம்

வருகிற 10 அக்டோபர் 2010, டென்மார்க் Vejen நகரில் நடைபெற இருக்கும் "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" நூல் அறிமுக விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.



நூல் அறிமுகம் நடைபெறும் இடம்:
lindetorvet 2,
6600 Vejen,
Denmark


காலம்: 10.10.10 பி.ப. 3 மணி

தொடர்புகளுக்கு :
Thas : 004541427562 (Denmark)
Kalaiy : 0031642344458 (The Netherlands)

Saturday, September 25, 2010

இணையத்தில் மக்கள் இயக்கம் கட்டிய இத்தாலி பதிவர்

"முதலாளித்துவம் தோல்வியடைந்து விட்டது. அவர்கள் இதனை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். தோல்விக்கான காரணங்களை ஆராயவும், தவறுகளை ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. இப்போதும் 2007 ம் ஆண்டில் (நிதி நெருக்கடிக்கு முந்திய காலம்) வாழ்ந்து கொண்டிருப்பதாக பாசாங்கு செய்கிறார்கள்."
- இத்தாலியில் மாற்று அரசியல் இயக்கத்தை தோற்றுவித்த பிரபல பதிவர் Beppe Grillo, நெதர்லாந்து தொலைக்காட்சி (VPRO) நேர்காணலின் போது தெரிவித்த கருத்துகள்.
பெப்பே கிரிலோ ஒரு சமூக ஆர்வலர். 2007 ம் ஆண்டில் இருந்து வலைப்பூ மூலம் பல்லாயிரம் இத்தாலி இளைஞர்களின் மனங்களை வென்றெடுத்துள்ளார்.
Beppe Grillo's Blog இத்தாலி அரசுக்கும், முதலாளித்துவத்துக்கும் எதிரான மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வருகின்றது. ஐந்து வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட வலைப்பூ இன்று அறுபது மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
நேர்காணலில் பெப்பே கிரிலோ தெரிவித்த கருத்துகளில் சில:
- இன்றைய உலகில், பொது மக்கள் ஊடகம் என்ற ஒன்று இல்லை. அனைத்தும் விளம்பரதாரரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அண்மைய வரவான இணையம் மட்டுமே சுதந்திர கருத்துப் பரிமாற்றத்திற்கான ஊடகமாக உள்ளது.
- இத்தாலியர்களை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அனைத்து தீமைகளையும் அவர்கள் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் முதலாவது வங்கி இத்தாலியில் தான் உருவானது. இத்தாலியர்கள் தான் பாசிசத்தையும் கண்டுபிடித்தார்கள்.
- தற்போதைய இத்தாலி ஜனாதிபதி பெர்லுஸ்கோனி விபச்சார தரகு அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார். இத்தாலியின் பிரதான ஊடகங்கள் பெர்லுஸ்கோனி எவ்வாறு உடலுறவு கொள்கிறார், எப்படி விந்து வெளியேற்றுகிறார், என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. எமக்கு அதெல்லாம் தேவையில்லை.
- எமது இயக்கத்திற்கு என்று ஒரு யாப்பு கிடையாது. தலைவர், செயலாளர் யாரும் இல்லை. பணப் புழக்கம் இல்லாத படியால் பொருளாளரும் கிடையாது. இது ஒரு வலைப்பின்னல். நோபல் பரிசு வென்றவர் முதல் சாதாரண தொழிலாளி வரை சமமாக கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர். தமது சுற்றாடலில் நடக்கும் சமூகப் பிரச்சினைகளை விவாதிக்கின்றனர்.
- இது ஒரு மக்கள் இயக்கம். தேர்தலில் போட்டியிடும் கட்சியல்ல.

காளி கேட்டது பலி! இந்து-பௌத்த மத அடிப்படைவாதிகள் கிலி!!


2010 ஆகஸ்ட் மாதம், இலங்கையில், முனீஸ்வரம் கோயிலில் மிருகங்களை பலி கொடுக்கும் சடங்கு பரபரப்பாக பேசப்பட்டது. ( Mass Animal Slaughter At Arulmigu Sri Maha Bathrakaliyam Kovil) பலி கொடுக்கும் சடங்கை எதிர்ப்பதில், இந்து மத அடிப்படைவாதிகளுக்கும்(All Ceylon Hindu Congress), பௌத்த மத அடிப்படைவாதிகளுக்கும் (Association of Sangas) இடையில் ஒற்றுமை நிலவுகின்றது. (இலங்கையில் இந்து - பௌத்த மத அடிப்படைவாதிகள் ஒரே குரலில் பேசுவது இது தான் முதல் தடவை அல்ல.) 

தனி நபர்களைப் பொறுத்த வரை, நாகரீகமடைந்த இந்தக் காலத்திற்கு ஒவ்வாத செயல் என்று, தாம் எந்த உயிரினத்தையும் கொல்லாத காலகட்டத்தில் வாழ்வது போல பாசாங்கு செய்தனர். இதற்கு மாறாக, மத நிறுவனங்கள் தமது மதங்களின் அடிப்படையின் மேலிருந்து கொண்டு இந்தப் பிரச்சினையை பார்த்தார்கள். அதனால் தான் அவர்களை, மிகச் சரியாக மத அடிப்படைவாதிகள் என அழைக்கிறேன்.

தற்போது போர் ஓய்ந்த சூழலில், யாழ் குடாநாட்டிலும் வைரவர் போன்ற சிறு தெய்வங்களுக்கு கோழி பலி கொடுக்கும் சடங்கு நடந்து வருகின்றது. இதை காட்டுமிராண்டி கால பழக்கம் என்று யாழ்ப்பாணத்தில் வாழும் "இந்துக்கள்" எதிர்க்கின்றார்கள். இந்து சமூகத்தில் மாறாத சாதீய முரண்பாடு மத வழிபாட்டிலும் புகுந்துள்ளது. எனக்கு தெரிந்த வரையில், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களே இன்றைக்கும் சிறு தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். ஆதிக்க சாதியினர் பெரும்பாலும் இவற்றை தவிர்த்து வந்துள்ளனர். பிராமணர்களால் ஆகம முறையில் குடமுழுக்கு செய்யப்பட்ட "ஹை-டெக் கோயில்கள்" அவர்களுக்காக கதவுகளை திறந்து வைத்திருன்றன.

பலியிடும் சர்ச்சை ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடிக்க காரணமாக இருந்த முனீஸ்வரம் ஆலயம், மேற்கிலங்கையில் சிலாபம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. தமிழீழம் கோரும் வரைபடத்தில் அந்தப் பிரதேசம் அடங்கிய போதிலும், இதுவரை காலமும் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும் ஒரு தடவை எதிர்பாராத அசம்பாவிதம் இடம்பெற்றது. சிலாபத்தை சேர்ந்த கிறிஸ்தவ தமிழர்கள், இலங்கை அரசால் முல்லைத்தீவுக்கு அருகில் கொக்கிளாய் எனுமிடத்தில் குடியேற்றப் பட்டனர். அங்கே, 1984 ம் ஆண்டு, சிங்களத்தை தாய்மொழியாக பேசிய ஒரே குற்றத்திற்காக படுகொலை செய்யப்பட்டார்கள். 


மேற்கிலங்கை தமிழர்கள், குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள், சிங்களத்தை முதன் மொழியாக கொண்டுள்ளனர். புதிய தலைமுறை மாறும் பொழுது இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வரலாற்று ரீதியாக, மேற்கிலங்கை தமிழருக்கும், வட இலங்கை தமிழருக்கும் இடையில் பெருமளவு தொடர்புகள் இருக்கவில்லை. யாழ்ப்பாணத் தமிழர்கள் சாதிய படி நிலையில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்ததாக கருதிக் கொண்டதும் உறவுக்கு தடைக் கல்லாக இருந்தது.

சிலாபம் முனீஸ்வரம் ஆலயம், இலங்கைத் தீவின் புராதன சிவாலயங்களில் ஒன்று. வட-மேற்கே மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம், வடக்கே கீரிமலையில் உள்ள நகுலேஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் திருக்கோணேஸ்வரம், ஆகியன பிற பழமை வாய்ந்த ஆலயங்கள். இவற்றில் திருக்கேதீஸ்வரம், திருக்கோனேஸ்வரம் என்பன, சைவ சமய நாயன்மார்களான அப்பரும், சுந்தரரும் பாடிய தேவாரங்களில் இடம்பெற்றுள்ளன. "மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த முனீஸ்வரம் எதற்காக அவர்களால் கவனிக்கப்படாமல் விடப்பட்டது?" என்பதற்கான பதில் யாருக்கும் தெரியாமல் போகலாம். 


முனீஸ்வரத்தில் எழுந்தருளியிருப்பது சிவபெருமான் என்று சைவ மத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. குளக்கோட்டன் என்ற சோழ மன்னன் ஆலயத்திற்கு நிதி வழங்கியதாக சரித்திரக் குறிப்புகளும் உண்டு. முனீஸ்வர மூலவர் "முன்னை நாதர்" என்ற நாமத்துடன் அழைக்கப்படுவதானது, ஆலயத்தின் புராதன (இந்து மதத்திற்கு முந்திய) வேர்களை சுட்டி நிற்பதாக கருதப்படுகின்றது. ஆயினும் ஆதி கால தமிழர்கள் வழிபட்ட முனி என்ற தெய்வமே பின்னர் முனீஸ்வரனாக சமஸ்கிருதமயமாக்கப் பட்டது என்று வாதிடுவோரும் உள்ளனர்.

இவ்வருடம் ஆடு, கோழி பலி கொடுக்கப்படவிருந்த இடம் காளி கோயில். முனீஸ்வரம் என்பது, பல ஆலயங்களைக் கொண்ட தொகுதிக்கு பொதுவான பெயர். அங்கே சிவன் கோயில் மட்டுமல்ல, ஒரு காளி கோயிலும், ஒரு பௌத்த ஆலயமும் அமைந்துள்ளன. பௌத்த ஆலயத்தில் இருக்கும் தெய்வத்தின் பெயர் ஐயனார் என்பது வியப்பில் ஆழ்த்தும் தகவல். ஐயனார் ஆலயம் முழுக்க முழுக்க பௌத்த சங்கத்தால் பராமரிக்கப் படுவதால், அது பௌத்த ஆலயமாக மாறியிருக்கலாம். (சிவன் கோயிலும், காளி கோயிலும், இந்து தமிழ் குடும்பங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன.) 


முனீஸ்வரம் காளி கோயில் இந்துக்களால் மட்டுமல்ல, பௌத்தர்களாலும் நம்பிக்கையுடன் வழிபடப் பட்டு வருகின்றது. முன்னொரு காலத்தில் இந்துக்களாக இருந்து புத்தர்களாக மாறிய (அல்லது தமிழர்களாக இருந்து சிங்களவர்களாக மாறிய) மக்கள், தமது முன்னோரின் பழக்க வழக்கத்தை எளிதில் விட்டு விடவில்லை. காளி கோயிலில் சாமியாடுவதும் குறி சொல்வதும் பாமர மக்களின் சிறு பிரச்சினைகளை தீர்க்க உதவுகின்றது போலும்.

இவ்வருடம் ஆகஸ்ட் 24 ம் தேதி, முனீஸ்வரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வருவோம். காளி கோயிலில் ஆடு, கோழி பலியிடுவது தலைமுறை தலைமுறையாக, ஆண்டு தோறும் பின்பற்றப் படும் வழக்கம். பௌத்த சங்கங்களின் சம்மேளனமும், மிருக உரிமை ஆர்வலர்களும் இம்முறை எதிர்ப்புக் காட்ட கிளம்பிய போதே, அது ஊடகங்களின் கவனத்தை பெற்றது. 


கோயில் முன்னால் குழுமிய பௌத்த பிக்குகள், மிருகங்களை பலி கொடுப்பது இந்து மதத்திற்கே உரிய சிறப்பம்சமாக காட்ட முனைந்தனர். அவர்களை பொறுத்தவரை, இந்து மதம் படு பிற்போக்கான, மூட நம்பிக்கை கொண்ட மதம் என்பதைக் காட்ட, இது ஒரு அரிய சந்தர்ப்பம். காளி கோயிலில் மிருகங்களை பலி கொடுப்பதற்காக, பௌத்த மதத்தை பின்பற்றும் சிங்கள மக்களும் வந்திருந்தார்கள். அந்த விஷயம் புத்த பிக்குகளுக்கு தெரியாமல் இல்லை. அவர்களது நோக்கம் எல்லாம், மத அடிப்படைவாதத்தை வரையறை செய்வது தான். (பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள், புத்தரை மட்டுமே வழிபட வேண்டும்.)

புத்த பிக்குகள் செய்த அதே வேலையை மறு பக்கத்தில் இந்து மத அடிப்படைவாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரை, சிறு தெய்வங்களை வழிபடுபவர்கள் இந்துக்கள் அல்ல. இந்துக்கள் சிவன், விஷ்ணு, விநாயகர் என்று பார்ப்பன கடவுள்களை மட்டுமே வழிபட வேண்டும். அதே நேரம், இலங்கையில் பௌத்தர்களும் இந்து தெய்வங்களை வழிபடுகின்றனர், போன்ற உண்மைகளை கூற மாட்டார்கள். (ஆனால் விஷ்ணுவின் தசாவதாரங்களில் புத்தரின் அவதாரமும் ஒன்று என்று பித்தலாட்டம் செய்வார்கள்.) 


தமது முன்னோர்கள் இந்துக்களாக இருந்ததால், இயேசு கிறிஸ்துவுக்கு பக்கத்தில், இந்து கடவுளர் படங்களை வைத்து வழிபடும் கிறிஸ்தவர்கள் நிறைய உண்டு. அதே போலத்தான் பௌத்தர்களும், புத்தரோடு இந்துக் கடவுள்களையும் வணங்கி விட்டு செல்கின்றனர். எங்கேயும் பாமர மக்களின் இறை நம்பிக்கை அப்படித் தான் இருக்கும். உழைக்கும் மக்களுக்கு மத நூல்களையும், தத்துவங்களையும் கற்றுத் தெளிவதற்கு போதுமான அறிவோ, நேரமோ கிடைப்பதில்லை.

இறுதியாக, வாய் பேசா ஜீவன்கள் மீது கருணை காட்டும் மத நம்பிக்கையாளர்களே! உயிர்களைக் கொல்வது பாவம் என்ற, உங்கள் உயரிய லட்சியத்திற்கு மதிப்பளிக்கிறோம். இந்த ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்கள். இவ்வளவு காலமும், போர் என்ற பெயரில் லட்சக்கணக்கான மனிதர்கள் பலி கொடுக்கப்பட்ட நேரம், நீங்கள் எங்கே ஒளிந்து கொண்டீர்கள்? மனித உயிர்களை பலி கொடுப்பதை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம் வேண்டாம், ஒரு அறிக்கையாவது விட்டிருக்க கூடாதா?

Thursday, September 23, 2010

தாஜிகிஸ்தான் தாக்குதல்கள் : ஒரு செய்தி அறிக்கை

தாஜிகிஸ்தான் படையினர் சென்ற வாகனத் தொடரணி மீது நடந்த அதிரடித் தாக்குதலில் நாற்பது சிப்பாய்கள் பலி. 19 செப்டம்பர் 2010 , இந்த சம்பவம் நடந்துள்ளது. (பார்க்க: Soldiers die in Tajikistan ambush)ராஷ்ட் பள்ளத்தாக்கில் போர் நடவடிக்கைக்காக துருப்புகளை காவிச் சென்ற வாகனம் ஒன்று, மறைந்திருந்த போராளிகளால் தாக்கப்பட்டது. கிரனேட், சிறு இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம் குன்றுகள் மேலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் நிலை குலைந்த இராணுவம் சிதறி ஓடியது. வாகனத் தொடரணியில் 75 படையினர் இருந்துள்ளனர். தாஜிகிஸ்தான் மேற்கில் உள்ள தலைநகரமான டுஷான்பெயில் இருந்து அவர்கள் வந்துள்ளனர்.

நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ராஷ்ட் பள்ளத்தாக்கு பகுதி, பல்வேறு இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களின் புகலிடமாக உள்ளது. அயல்நாடான உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமிய இயக்கம் ( Islamic Movement of Uzbekistan ) தாக்குதல் நடத்தியதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தான் துஷான்பே சிறைச்சாலை உடைக்கப்பட்டது. அங்கே தடுத்து வைத்திருந்த இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 25 சந்தேகநபர்கள் சிறை உடைப்பின் போது தப்பி ஓடி விட்டனர். அவர்கள் அனைவரும் போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ராஷ்ட் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று விட்டனர். தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்காகத் தான் அங்கு இராணுவம் அனுப்பப்பட்டது.

சோவியத் யூனியனில் இருந்து தனி நாடாக பிரிந்து சென்ற தாஜிகிஸ்தானில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. சோவியத் உடைவின் பின்னரும், முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரமுகர்களே ஆட்சிக் கட்டிலில் அமர்திருந்தனர். எதிர்க்கட்சிகளும், இஸ்லாமியக் குழுக்களும் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தன. பல வருடங்களாக நீடித்த போரின் முடிவில் யாரும் வெல்லவில்லை. இறுதியில் ரஷ்யாவின் மத்தியஸ்தத்தால் போரில் ஈடுபட்டவர்கள் சமரசத்திற்கு வந்தார்கள். 1997 ம் ஆண்டு, சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டது. போராளிக் குழுக்கள் ஆயுதங்கை களைந்து விட்டு அரசியல் அமைப்புகளாக மாறி விட்டன. Islamic Revival Party of Tajikistan (IRPT), United Tajik Opposition (UTO), என்பன அவ்வாறு ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்பிய அமைப்புகள் ஆகும். (பார்க்க:Civil war in Tajikistan)

மலைவாழ் மக்களான தாஜிக்கியர்கள் பேசும் மொழி (ஈரான்) பார்சி மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. தாஜிகியர்கள் தோற்றத்தில் அயலில் வாழும் துருக்கிய இனங்களில் இருந்து மாறுபட்ட உருவத் தோற்றம் கொண்டவர்கள். தாஜிகிஸ்தான் சோவியத் காலத்தில் கம்யூனிச நாடாக இருந்தது. சோவியத் குடியரசில், இஸ்லாமிய மத நிறுவனங்கள் அடக்கப்பட்டன. தாஜிக் முஸ்லிம்கள் சூபிசம் எனப்படும் ஆன்மீகத்தை தேடும் இஸ்லாமிய மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள். சூபிசத்தை பின்பற்றுபவர்கள் மதக் கட்டுப்பாடுகளை கொண்டிராதவர்கள். இருப்பினும் தொன்னூறுகளில் மத நிறுவனங்கள் புதிதாக பெற்ற சுதந்திரத்தால் மீள் உயிர்த்த மொழுது, சூபி இஸ்லாம் பெரிதாக பரவவில்லை. சூபிசம் முழுக்க முழுக்க உள்நாட்டு மத நம்பிக்கையாளர்களின் நிதியில் இயங்கி வந்தது. முன்னாள் மத்திய ஆசிய சோவியத் குடியரசுகளில் மிகவும் ஏழைகளான தாஜிக்கியர்களிடம் மதம் வளர்க்க பணம் இல்லை. ஆனாலும் தாஜிகிஸ்தானில் புதிய மசூதிகள் கட்டப்பட்டன. இஸ்லாமிய பிரச்சாரகர்கள் அதிகரித்தார்கள். அவர்களிடம் தாரளமாக பணம் புழங்கியது. சவூதி அரேபியா பணக்கார இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடுகளில் இருந்து அந்தப் பணம் வந்தது.

சவூதிகள் தமது இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்டப்படுகிறார்களே என்று, பரிதாபப்பட்டு பணம் கொடுக்கவில்லை. கடும்போக்கு வஹாபிச இஸ்லாமிய பிரிவுக்கு ஆதரவாளர்களை திரட்டுவதே அவர்கள் நோக்கம். சவூதிகள் எதிர்பார்த்த படியே, தாஜிகிஸ்தானில் ஏராளமான முஸ்லிம்கள் வாஹபிச பிரிவை தழுவிக் கொண்டனர். இன்று இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் யாவும் வஹாபிச இஸ்லாமை பின்பற்றுகின்றன. இவற்றின் உறுப்பினர்கள் இராணுவ பயிற்சிக்காக ஆப்கானிஸ்தான் சென்று வருகின்றனர். தாலிபான், அல்கைதா போன்றவர்களுடன் நட்புறவு பூண்ட Islamic Movement of Uzbekistan (IMU), மத்திய ஆசியாவில் இஸ்லாமிய குடியரசு அமைக்க போராடி வருகின்றது. இந்த இயக்கத்தின் பூர்வீகம் உஸ்பெகிஸ்தான் என்ற போதிலும், அயலில் உள்ள குடியரசுகளிலும் கிளை பரப்பி வருகின்றது.

தாஜிகிஸ்தானில் நடந்த தாக்குதல் குறித்து உங்களில் பலர் இப்போது தான் முதன் முதலாக கேள்விப்படுகின்றீர்கள். உலக ஊடகங்களில் இந்த செய்தி வராமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இதே மாதிரியான தாக்குதல், ஆப்கானிஸ்தானிலோ, அல்லது பாகிஸ்தானிலோ நடந்தால் முந்திக் கொண்டு செய்தி வெளியிடும் ஊடகங்கள், தாஜிகிஸ்தானை கண்டுகொள்ளவில்லை. தாஜிகிஸ்தான் இரு பெறும் வல்லரசுகளான ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இடையில் சிக்கியுள்ள பிரதேசம் ஆகும். ஒரே மொழி பேசும் சகோதர்கள் என்று கூறிக் கொண்டு, ஈரானும் அடிக்கடி மூக்கை நுளைக்கின்றது. போதாக்குறைக்கு தெற்கே ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நிலை கொண்டுள்ளன. தாஜிகிஸ்தான் பூகோள ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. மேலும், எண்ணெய், எரிவாயு போன்ற இயற்கை வளங்களை கொண்ட மத்திய ஆசியாவின் ஒரு பகுதியாகும். இவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான வல்லரசுப் போட்டி, சில நேரம் பனிப்போராகவும், சில நேரம் பதிலிப்போராகவும் நடந்து கொண்டிருக்கிறது. அல்கைதாவும், இஸ்லாமிய தீவிரவாதமும், அமெரிக்காவையும், மேற்குலகையும் இலக்கு வைத்திருப்பதாக, ஊடகங்கள் எம்மை மூளைச் சலவை செய்கின்றன. ஆனால் உண்மையான பிரச்சினை வேறெங்கோ இருக்கின்றது. இன்று ஊடகங்களால் அறிவிக்கப்படாத இரகசிய யுத்தம் ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது.

Tuesday, September 21, 2010

இஸ்ரேலில் பாஸிசம்: யூத பேரினவாத சட்டம்

"இஸ்ரேலை யூத இனத்தவருக்கான நாடாக ஏற்றுக் கொண்டு விசுவாச சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்", என்ற சட்ட மசோதா தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றது. தீவிர வலதுசாரிக் கட்சியான Yisrael Beiteinu வின் நாடாளுமன்ற உறுப்பினர் David Rotem இந்த பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார். இந்த சட்டம் அமுலுக்கு பட்சத்தில், இஸ்ரேலில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் "விசுவாச சத்தியப் பிரமாணம்" எடுக்க வேண்டும். அல்லாவிட்டால் அவர்களது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது. இஸ்ரேலின் மொத்த சனத்தொகையில் இருபது வீதமானோர் பாலஸ்தீன பிரஜைகள். அவர்களின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் முகமாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பாலஸ்தீன-அரபு சிறுபான்மை இன மக்கள், இஸ்ரேலின் யூத பேரினவாதத்தின் கீழ் அடிபணிவதாக சத்தியம் செய்ய வேண்டும். ஏற்றுக் கொள்ளாதவர்கள் சட்டப்படி குடியுரிமைகளை இழப்பார்கள். (பார்க்க:Palestinians may soon have to swear loyalty to 'Jewish' state)

ஒவ்வொரு பிரஜையும் பின்வருமாறு சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்:
"நான் ஹாஷேம் (யூத கடவுள்) பெயரால் உறுதிமொழி எடுக்கிறேன். யூத தேசமான இஸ்ரேலுக்கும், அதனது தலைவர்களுக்கும், தளபதிகளுக்கும், இராணுவத்திற்கும் எனது நிபந்தனையற்ற விசுவாசத்தை வழங்குகிறேன். யூத தேசத்தின் விசுவாசியாக எந்த நேரத்திலும் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன்."

நாஜி ஜெர்மனியில் ஒவ்வொரு பிரஜையும், ஜெர்மன் தேசத்திற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்களை வேட்டையாடிய மக்கார்த்தி சட்டம், ஒவ்வொரு பிரஜையும் அரச விரோத செயல்களில் ஈடுபடவில்லை என்று உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்தித்தது. இலங்கையில் ஈழப்போர் ஆரம்பமான காலத்தில், அரசாங்க ஊழியர்கள் "பிரிவினைக்கு ஆதரவளிப்பதில்லை என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாகவும்" சத்தியப் பிரமாணம் எடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டனர். இந்த சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. முன்னொரு தடவை வட-கிழக்கு மாகாணங்களில் தெரிவான ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்த உறுதிமொழி எடுக்க மறுத்ததால் தமது பதவிகளை இழந்தார்கள். இப்போதுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், "பிரிவினைக்கு எதிரான" உறுதிமொழி எடுக்காமல் பதவிகளை தக்க வைத்திருக்க முடியாது.

இன்றைக்கும் இஸ்ரேலின் யூத பேரினவாத அரசுக்கு, நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தமிழர்கள் இருப்பது வேதனைக்குரியது. இஸ்ரேலின் உதாரணத்தை பின்பற்றி, "சிறிலங்கா என்ற சிங்கள-பௌத்த தேசத்திற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்குமாறு" இலங்கை அரசு சட்டம் கொண்டு வராதா? அப்போது இலங்கையில் வாழும் 20 வீதமான தமிழ் சிறுபான்மையினரின் நிலைமை என்னவாகும்?

பாசிச சட்ட மசோதாவிற்கு இஸ்ரேலியர்கள் எந்த அளவிற்கு ஆதரவு வழங்குகின்றனர்? இதை அறிவதற்காக எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்பு வீடியோவை ஒரு தடவை பார்வையிடவும்.

ஈராக் சிறைச்சாலை சித்திரவதைக் காட்சிகள்

ஈராக் சிறைச்சாலை ஒன்றினுள் கைதியை சித்திரவதை செய்யும் காட்சி இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கைதியை நிர்வாணமாக்கி மின்சார அதிர்ச்சி அளிக்கும் கொடுமையான காட்சிகள். (எச்சரிக்கை: இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. )


Iraq - Tortures in prisons
Geüpload door kasman1. - Nieuwe video's uit de hele wereld.

Monday, September 20, 2010

காவிய நாயகர்களா? கடற்கொள்ளையர்களா?


"பீட் ஹைன் பீட் ஹைன்
அவரது பெயர் சிறிது
செயல் பெரிது"

17 ம் நூற்றாண்டு நெதர்லாந்து நாட்டில், மக்களால் விரும்பிப் பாடப்பட்ட பாடல். அந்தப் பெருமைக்குரிய தேசிய நாயகன் பீட் ஹைன் நினைவாக பல வீதிகளுக்கு பெயர் சூட்டப்பட்டன. இன்றைக்கும் பாடசாலை நூல்கள் பீட் ஹைனை ஒரு வீர புருஷனாக சித்தரிக்கின்றன. மேற்கிந்திய வர்த்தக கழகத்தில் அட்மிரல் ஸ்தானத்தில் பணியாற்றிய பீட் ஹைன், 1629 ல் ஆம்ஸ்டர்டாம் துறைமுகத்தை வந்தடைந்த பொழுது, நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. அவர் சார்பாக ஒவ்வொரு நாளும் களியாட்ட விழாக்கள் நடந்தன. நெதர்லாந்து மக்களால் தேசிய நாயகனாக போற்றப்படும் அளவிற்கு "அட்மிரல்" பீட் ஹைன் செய்த செயற்கரிய செயல் எது? வேறொன்றுமில்லை. அவர் செய்ததெல்லாம் கரீபியன் கடலில் ஸ்பானிய சரக்குக் கப்பலை கொள்ளை அடித்தது தான். ஆமாம், ஒரு கடற்கொள்ளைக்காரன் தான் நெதர்லாந்து தேசத்தின் காவிய நாயகன்.

அன்று ஸ்பானிய காலனியாக இருந்த கியூபா அருகில், தங்கம், வெள்ளி போன்ற விலைமதிக்க முடியாத சரக்குகளை ஏற்றிக் கொண்டு கப்பல்கள் அணி ஒன்று ஸ்பெயின் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பல்களை வழிமறித்து தாக்கி, (1629 ) அத்தனை கப்பல்களையும் நெதர்லாந்து டெல்ப் துறைமுகத்திற்கு கொண்டு வந்தார்கள். அவர்கள் கொள்ளையடித்த சரக்குகளின் பெறுமதி அன்றைய மதிப்பில் பன்னிரண்டு மில்லியன் கில்டர்கள். (கிட்டத்தட்ட ஆறு மில்லியன் யூரோ) அன்றைய உலக பொருளாதார நிலவரப்படி அது ஒரு மாபெரும் கடற்கொள்ளை. அந்தப் பணத்தால், ஏழை நாடாக இருந்த நெதர்லாந்து ஒரே நாளில் பணக்கார நாடாகியது. இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கடற்கொள்ளைக்கு நெதர்லாந்து அரசு வழங்கிய அங்கீகாரம். அன்று நெதர்லாந்தும், ஸ்பெயினும் போரில் ஈடுபட்டிருந்தன. ஸ்பெயினின் மேலாதிக்கத்தில் இருந்து போராடிக் கொண்டிருந்த நெதர்லாந்திடம் பெரிய அளவு பணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. போர் வேறு சொத்துகளை அழித்துக் கொண்டிருந்தது. இதனால் ஸ்பெயினுக்கு எதிரான போருக்கான நிதியாக, ஸ்பெயின் கப்பல்களை கொள்ளையடிப்பதை நியாயம் என்று வாதாடினார்கள்.

கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் வாழ்ந்த மோர்கன் என்ற கடற்கொள்ளைக்காரனின் புகழ் இங்கிலாந்தின் பட்டிதொட்டி எங்கும் பரவியிருந்தது. ஜமைக்காவில் ஒரு பள்ளத்தாக்குக்கு மோர்கனின் பெயர் சூட்டப்படது. ஜமைக்கா ஒரு காலத்தில் ஆங்கிலேய கடற்கொள்ளையர்களின் புகலிடமாக இருந்தது. போர்த்துகீசியர்களும், ஸ்பானியர்களும் அமெரிக்க கண்டத்தில் தங்கம் அள்ளுகின்றார்கள் என்றால், ஆங்கிலேயருக்கு அந்த ஆசை இருக்காதா? ஆங்கிலேயர்கள் கனடா சென்றார்கள். அங்கே தங்கத்தை காணாமல் ஏமாற்றமடைந்தார்கள். அதற்காக வருந்தவில்லை. கரீபியன் கடலில் சென்ற ஸ்பானிய கப்பல்களை கொள்ளையடித்து தங்கம் சேர்த்தார்கள். ஸ்பானியர்கள் தென் அமெரிக்க செவ்விந்திய குடிகளை அடிமைகளாக வேலை வாங்கி தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றார்கள். அதனால் "கொள்ளையர்களிடம் இருந்து தானே கொள்ளையடித்தோம்", என்று இங்கிலாந்து ஒரு காரணம் சொல்லலாம்.

அன்றைய ஒல்லாந்து அரசியல்வாதிகள் கணிப்பிடதைப் போலவே, ஒரு மாபெரும் கடற்கொள்ளை உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை உருவாக்கியது. போருக்கு தேவையான வளங்களும் குறைந்து ஸ்பெயின் பலவீனமடைந்தது. மறுபக்கத்தில் ஒரு சிறிய நாடான நெதர்லாந்து வல்லரசு ஸ்தானத்திற்கு உயர்ந்து செல்வத்தை பெருக்கியது. ஒரு காலத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளை சுரண்டி பலம் வாய்ந்த வல்லரசாக இருந்த ஸ்பெயின் கடற்கொள்ளைகளால் செல்வம் அனைத்தையும் இழந்தது. ஒல்லாந்துக்காரர்கள் மட்டும் ஸ்பெயினிடம் கொள்ளை அடித்து பணக்காரர்கள் ஆகவில்லை. ஆங்கிலேயர்களும் அதே வழியை பின்பற்றித் தான் "சூரியன் மறையாத" சாம்ராஜ்யத்தை நிறுவினார்கள். நெதர்லாந்தும், இங்கிலாந்தும் ஆரம்பத்தில் பெரும் படை அனுப்பி, வீரர்களாக போரிட்டு சாம்ராஜ்யம் கட்டவில்லை. கொள்ளையடித்து குறுக்கு வழியில் பணம் சேர்த்து முன்னுக்கு வந்தார்கள். அப்பாவி ஏழை மக்கள் தான், கொள்ளையடிப்பது, திருடுவது பாவ காரியம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கடற்கொள்ளயர்களை அனுப்பி கொள்ளையடிப்பது படையெடுப்பை விட இலாபகரமானது. நமது காலத்தில், சோமாலிய கடற்கொள்ளையர்கள் தமது மேற்கத்திய எஜமானர்களை பின்பற்றி வருகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களை கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கிறோம், அடக்கப்பட வேண்டிய கிரிமினல்களாக பார்க்கிறோம். அதே நேரம் ஒல்லாந்து, ஆங்கிலேய கடற்கொள்ளையர்களை காவிய நாயகர்கள் என்று புகழ்கிறோம். அவர்களை மேன் மக்கள், கனவான்கள், நாகரீகத்துடன் பிறந்தவர்கள் என்று நம்புகிறோம்.
மேலதிக தகவல்களுக்கு:
Piet Hein (zeevaarder)
Henry Morgan


Sunday, September 19, 2010

மார்க்ஸியத்தால் எதிர்காலத்தை கணிக்க முடியுமா?

"மார்சிய சமூக விஞ்ஞானத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் அரசியல் மாற்றங்களை கணிப்பிட முடியும்.", என்று ஜெர்மன் மார்சிஸ்ட் Franz J, T, Lee நிரூபித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் எதிர்காலம் குறித்து அவர் எழுதிய அரசியல் விஞ்ஞானக் கட்டுரைகள் 1976 ம் ஆண்டு, "Suedafrika am Vorabend der Revolution" என்ற தலைப்பிலான நூலாக வெளிவந்தது. இந்த நூலில், தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி Apartheid ஆட்சி முறை வீழும் என்று இரு தசாப்தங்களுக்கு முன்னரே எதிர்வு கூறியுள்ளார். தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கறுப்பின மத்தியதர வர்க்க பிரிவினரின் ஆட்சி உருவாகும், வர்க்க முரண்பாடுகள் தோன்றும் என்றும் சரியாக கணிப்பிட்டுள்ளார். இத்தகைய சமூக மாற்றங்களை நமது காலத்தில் கண்கூடாக பார்க்கலாம். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சிக் காலத்தில் இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு (translated by
W. F. Feuser) விநியோகிக்கப்பட்டது. அன்றைய நிறவெறி பாசிச அரசு நூலை உடனடியாக தடை செய்தது. தென் ஆப்பிரிக்க புரட்சி பற்றி நூலில் எழுதப்பட்ட ஒரு பகுதியை கீழே தருகிறேன். நூலை முழுமையாக வாசிக்க இங்கேயுள்ள சுட்டியை சொடுக்கவும். SOUTH AFRICA ON THE EVE OF SOCIAL CHANGE Concerning Marxism & National Liberation

***********************************


Here is the full text of the epilogue in which we predicted the coming betrayal of the South African Revolution:

Epilogue

"A focal point of this whole strategy of the South African government is the creation of a submissive black bourgeoisie among the various African "nations". These elite classes are used to broaden the base of the South African capitalist state. They will all try to conquer and preserve "their own" “national" market in their rural (and partially urban) ghettos. They will represent the economic base and the last resort for the ideology of "nationalism" of the Xhosa, Zulu, etc.. To create such a class requires prudence, time and stability. Even parts of the liberation movement and some of its charismatic leaders will be used in this process, even when they have to repatriate them from exile or release them from the concentration camp Robben Island. " (Franz J. T. Lee, 1976)


ABOUT THE FORMULATION OF A REVOLUTIONARY THEORY FOR SOUTH AFRICA

1. Economic structural change since the 60’s

As we have seen, the South African Republic had its origin in a British colony. For the economy, this meant an extreme foreign dependency, because as a colony, an area is of high interest to its motherland due to a few but important raw materials to be exchanged for manufactured goods.

Now, the Republic of South Africa has been a sovereign country for several decades, but its economy is still stuck to the old structures from the colonial period. This is all the more important than it has to pay high freight rates for the trade with the developed countries because of its geographical location.

For the conversion of the economy from the export of raw products to industrially manufactured goods, the Republic of South Africa requires a high degree of imports of capital goods, which it covered during a long period with gold exports. But meanwhile, the South African gold mining is decreasing, and the trade deficit has seen a growing trend. (1)

For the Republic of South Africa, which is more a police state than a republic, apart from the gold and diamond mines, there is a second source of wealth: the Apartheid. Originally intended as a support of the white workers in competition with their African colleagues, the various 'race' laws or proclamations, such as the "Industrial Conciliation Act” (1924), the "Bantu Labor (Settlement of Disputes) Act. No. 53" of 1953, the “Industrial Conciliation Act No. 28" of 1956, etc., finally were a good chance to employ about 80% of the population at wages that do not even cover the minimum subsistence. In the early 60’s the white rulers finally transformed South Africa in a "democratic police state" (Heribert Adam), in a huge prison for African slave laborers, temporarily even undercutting the minimal cost of reproduction of cheap labor, that is, 60% of the black wage-workers vegetated on the bare physical (not civilized) subsistence level and partially even below it. The generation of an identity between economic super-exploitation and political discrimination (Apartheid) has enabled the "crisis-free” and continuous expansion of economic growth.

The apartheid laws not only cause the extremely low wage level, but also guarantee, in relation with the contract worker system and the "Bantustans", a labor market, which the industrial nations have not seen for a long time. Especially countries with long-lasting shortage of manpower, as the Federal Republic of Germany - now No. 1 trading partner of the South African Herrenvolk (master race) State - are keen to exploit this favorable situation in South Africa through the outsourcing of production sites.

Thus, for example "the direct investments of the Federal Republic of Germany in South Africa are currently the largest, and they also have the highest growth rates.” The West German investments rose from “60 million DM in 1956, to 630 million DM in 1968. So they showed an increase of about 950 percent." (2)

The Federal Republic of Germany, which as one of the strongest industrial nations does not possess own colonies since the First World War, due to its traditional relations with Southern Africa, is especially committed there. Meanwhile, over 100 West German companies have branches in the apartheid State. (3)

Much closer than in the field of direct investments are the economic ties between the Federal Republic of Germany (FRG) and South Africa in the field of trade relations: only in the last eight years, the FRG-exports to South Africa tripled - it increased by a total of 1.2 billion DM in 1967 to 3.6 billion DM in 1974 (in the crisis year of 1975 there was a slight decline to 3.4 billion DM). (3a)

On the other hand, of course also the United Kingdom , the United States of America and France have strong ties with the Republic of South Africa. (4)

One could assume that by the investment boom during the 60’s, the differentiation in salary levels in South Africa would be repealed. Just the opposite is the case, because the large reserves of labor have not been exhausted at all. The direct consequences for the African population are well known, malnutrition, disease and an infant mortality, which is up to ten times higher than that of the 'whites' in South Africa. (5)

In this way, Africans are increasingly relegated to a "lumpen-proletariat", which has no more opportunities to determine their own destiny through political activities. This makes the social-revolutionary work of emancipation movements very difficult. The "master race" however is enabled by the racist laws to hold, expand and consolidate its own position.


2. "Consultation" and "dialogue policy”

In the early 70’s, the Republic of South Africa called the politically independent African states to a "dialogue" about a possible collaboration, and offered them the opportunity to establish diplomatic relations. This seemed inconsistent with the threats of the "Unholy Alliance" (South Africa, Rhodesia and Portugal) raised in 1970 against members of the Organization of African Unity (OAU). This "alliance" was born out of common economic and political interests of the 'white' minority governments.

In order to prevent the spread of the influence of these liberation movements and to stabilize the "inner peace" that foreign investors appreciate so much, the military cooperation of the "alliance" and a military expansion seemed necessary.

The objective of a "dialogue" between South Africa and "Black Africa", which found acceptance in some African countries (Ivory Coast, Ghana, Malawi, Madagascar, Central African Republic and Uganda), but was rejected by the OAU, had then (as now) concrete economic reasons.

With an increasing level of accumulation, the capital of the Republic of South Africa meets the borders of the internal market. The rapid "development" contrasts with the purchasing power of African wage earners. The establishment of always newer production capacities leads to an ever-increasing mass of use values, which at some point in the national context can only realize its exchange value, if the effective, that is, the solvent demand is increased.

If the current unjust distribution of the total product of the country between labor (wage earners) and capital (companies) does not want to be changed, there is only one solution: increasing the size of the market and thus of the demand by regional expansion.

South Africa’s need for such an expansion was reflected in the efforts to establish a "Common Market of Southern Africa". The "new" policy of President J. B. Vorster (1974/75) towards countries like Liberia, has to be seen under this aspect, too. It is clear that the South African economy (and thus the one of Rhodesia) permanently finds itself in crisis, which it overcomes only with the help of a larger African market.

At the end of the 60’s South Africa found itself in the following position: on one hand, the long-term decline in export prices led to an ever-increasing trade deficit. From 1965 till 1969, it expanded to an annual average of 312 pounds sterling. (6)

This deficit could be covered during some time by gold exports. In 1960, gold worth of 309 million pounds sterling was exported, in 1969 it was for 473 million pounds sterling. But the goldmines are exhausted: "The gold production in 1969 was only 0.5% higher than 1968. It is expected that production will begin to fall from mid-1970."

Exactly this was the case since then. Far more threatening than the production decline, now even live threatening for the South African economy is the current price decline. The gold price boom at the beginning of the world economical recession and as a result of the global currency crisis, where the price increased to over $ 200 per ounce and where the then South African Minister of Finance loudly announced a future price of 250-300 dollars, was followed by an incredibly sharp price decline to $ 100 per troy ounce Gold in the middle of 1976; a further decline to $ 80 is expected. This threatens the existence of the current gold production in South Africa - the productivity of the often obsolete equipment is low, which means in some cases at current prices: they no longer work profitable; as a result, in 1976 there was a rapid drop in prices of mining shares (in the first half of 1976 the rates were halved). (6b)

This current crisis in the gold production, which is the lifeblood of the South African economy has a contrary effect on the "reasonable" positions of industrial circles to loosen the policy of apartheid and to increase the consumption capacity of the masses through higher wages: the low wages in the gold mines are urgently required if profitability is not to be further limited.

The very low incomes of the Africans thus restrict the demand and with it the market of the South African industry, which in turn did not allow a cost-reducing mass production. As a South African study showed, only a common market in southern Africa could help the Republic of South Africa with its trade balance dilemma, that was not solved until today.

But what would be the implications for African countries with economic relations to the Republic of South Africa?

The history of Western Europe and North America shows that industrialization in a capitalist country always means the economic exploitation of other countries. It is always the economically and militarily stronger state, which first absorbs his "partner’s” food and raw materials (whether by theft or by trade), then appropriates the production factor of labor through outsourcing of industries or migrant workers and, finally, acquires the monopoly for the distribution of its own manufactured goods in the exploited country.

Thus, Rhodesia’s industry was not able to develop because of the close connection with South Africa. Only the Central African Federation made it possible for Rhodesia to protect itself against this economic pressure. With the decline of the Federation and the binding to the "Alliance" Rhodesia fell again in the wake of the South African economy. (7)

The 60-year-long commitment of Namibia to the Republic of South Africa has as a result that the economy of this country is based solely on mining, agriculture, fisheries - i.e. primary production - and a little tourism.

Similarly, the consequences are catastrophic for the "Bantustans" Transkei, Lesotho, Botswana and Swaziland. Migrant workers from these "independent" African countries but also from countries such as Mozambique and Malawi, are an inherent part of the South African strategy to create an economic metropolitan area in southern Africa. Because of its economic dependence the new FRELIMO government in Mozambique is forced to surrender the already traditional 200,000 migrant workers to the apartheid system of economic exploitation in the mines of South Africa, in spite of its revolutionary victory, otherwise threatens a very dire economic crisis in the country; also the internationally very controversial Cabora Bassa Barrage project is (still) running at full speed with the approval of FRELIMO and will supply electrical power to South Africa as it had been agreed with the Portuguese colonialists. A very expensively won political-military emancipation from Portuguese colonialism by a bloody 15-year guerrilla struggle appears at first to fail due to the international economic system and to end in an economic dependence on the Republic of South Africa.

One can summarize the general situation as follows: "relaxation" and "Bantustan policy” are two sides of the same counter-revolutionary strategy. Looking at the "relaxation" as a ‘purely’ political step, then it’s clear that it represents nothing else than an attempt by the Boer National Party to break out of the international isolation, that various international organizations had been imposed on South Africa after its withdrawal from the Commonwealth.

As shown above, the motive for this policy results from economic and domestic political constraints. The Republic of South Africa is a sub-imperialist metropolis and forms the center of an economically integrated and / or associated association of countries of Southern Africa (from Zaire, Zambia, Mozambique to Zimbabwe and other countries). Some of these countries, for example Zambia, for political reasons have previously opposed themselves to the entry of goods and capital from South Africa. However, as was made clear, the capitalist South African economy depends on the search for new export markets for products, mining technology, mining capital, etc.. Global inflation has enabled some of the South African products to compete in African markets, so that the sub-Saharan countries see themselves obliged to trade with the apartheid regime. Social problems (e.g. monocultures) or social unrest have forced countries such as Zambia and Zaire to trade with South Africa.

The problems of the national liberation movements in southern Africa, but also the obvious failure of some of them (such as the ANC or the UNITA) made it necessary and possible for countries like Zambia, to find means and ways with which to test the theories of the Lusaka Manifesto. Certainly the timely isolation from the "white South" carried out for political reasons by the ruling elite of Zambia, brought about many “victims".

The drive to find markets in Africa, required an expansion of the internal market, which simply means the full integration of the African consumers into the "Western" consumer pattern of the "white" South Africa. Shortage of skilled workers, irregular and decreasing immigration of whites, rising economic expectations and the evolving political consciousness of the urban black workers have forced the Vorster government to allow them former inaccessible professions and raise their wages so that they can buy the products launched from the conveyor belts of the consumer goods industry.

Apart from the fact that this questioned seriously the heart of apartheid – namely job reservation (the reservation of qualified professions for whites) - and threatened the electoral base of the ruling Nationalist Party, it is of great importance for the revolutionary theory: millions of African workers reach thus the same socio-economic development stage, which the Boer and British workers had acquired immediately before and after the Second World War, which will result in comparable political consequences.



3. Bantustan policy and "anti-Communist alliance" in Southern Africa


The Bantustan policy has maintained basically the function of the reserve system, that is, keeping ready cheap African labor for the purpose of increased exploitation, while satisfying at the same time the growing political demands of an urbanized black working class (e.g. in Soweto) without undermining the white capitalist hegemony.

Converting the urban blacks to strangers in the "white" South Africa and giving them "civil rights" in pseudo-"States", the Bantustans, is a magnificent trick.

These "states" will forever remain mere vassals and slums of the South African metropolis - as seen on the development of Lesotho, Swaziland and Botswana. The total economic and political-military power will remain in the hands of the white ruling class in South Africa.

In the coming decades of "peaceful" development and stability - if this will ever be the case; the events in the summer of 1976 speak another language - the Africans in South Africa will be regarded as foreigners, they themselves indeed will feel and be treated as such. Therefore, the structure of social apartheid can gradually be eliminated and the world will be rid of the stinking smell of apartheid. But whatsoever, only a very thin layer of the black middle-class had access to the troughs of the "white and Western civilization" in South Africa; the overwhelming majority of Africans has vegetated on the edge of subsistence. For these millions, it is irrelevant whether there is social apartheid or not, the class barriers show them their place. As long as the whites are not set under pressure by a looming expansion of a militant black working class, apparently they need not mourn the softening apartheid. A focal point of this whole strategy of the South African government is the creation of a submissive black bourgeoisie among the various African "nations". These elite classes are used to broaden the base of the South African capitalist state. They will all try to conquer and preserve "their own" “national" market in their rural (and partially urban) ghettos. They will represent the economic base and the last resort for the ideology of "nationalism" of the Xhosa, Zulu, etc.. To create such a class requires prudence, time and stability. Even parts of the liberation movement and some of its charismatic leaders will be used in this process, even when they have to repatriate them from exile or release them from concentration camp Robben Island.

But here arise the problems for the strategy of the ruling class. The events in Angola, Zimbabwe and Mozambique offered the white rulers a brilliant opportunity to show their counter-revolutionary tactics as a broad pan-African anti-communist alliance of South African countries, that are allegedly threatened by the "Russian-Cuban imperialism”.

Economic necessity, ideological pressure and the challenge of working class and student unrest in their countries have led the governments of countries such as Zambia, Malawi and Botswana, to join in fact this alliance.

This development has a dialectical effect on the domestic policies of the government in Pretoria. Because Kaunda & Co. must be considered anti-communist in their own countries, without giving up their "anti-apartheid" attitude. This means that increased pressure is exerted on the domestic junta to throw over board the offensive aspects of apartheid in the eyes of the West (so as the liberal circles in the "first world" understand it), so that for the agents of neo-colonialism in South Africa it is possible, as blacks to maintain some credibility with their people.

Another factor of great importance in the near future is the urgent need of Vorster to keep the armed struggle away from South Africa. Therefore it is urgent to defuse the situation in Namibia, even if this means that the territory is handed over to any 'Africanist', pro-capitalist black government. A similar situation is developing in Zimbabwe (Rhodesia). What is happening actually in Namibia, is a main rehearsal for what is planned in the Republic of South Africa. The ideologues of the Nationalist Party know that if they abolish the appearance form and certain obvious aspects of apartheid, they sooner or later have to do the same in South Africa. This is an additional means by which the white ruling class tries to prepare the white electorate for the acceptance of an arrangement of black pro-capitalist elements in the various liberation movements of this region and with their "homeland puppets” Matanzima, Buthelezi and Co. This overall strategy has adopted concrete forms only since the early seventies, and it has to be dealt with carefully at the level of revolutionary theory.

So we can summarize:

Vorster's detente policy, which now also controls Zambia, more and more seems to aim at chaining economically the whole of Africa south of Sahara to the "sub-metropolis" of South Africa and to turn politically independent countries into "Bantustans"; the late capitalist super-colonialism, which operates by means of imperialist sub-centers in the former colonial world, shows its "new" face: it is the same old, only with cosmetic changes. This sub-metropolis of the western world in Africa has the historic task of protecting the international capital militarily and economically. The international conflict in Angola, 1975/76, which once more is reflecting precisely the various world movements: Western capital interests, the division of international communism, the nationalist liberation movements that have got into the political and strategic calculations of the superpowers, and the total disagreement and hopelessness of the formal politically independent African states. This conflict was only the revolutionary prologue to the all-decisive drama in the Republic of South Africa itself in the coming years.

Written in Summer, 1976.
¨¨¨¨
Footnotes:
(1) Entwicklungspolitik, Frankfurt/Main, Nr. 11/12, 1971, p. 51
(2) Informationszentrum Dritte Welt: Die Unterstuetzung des suedafrikanischen Nazismus durch Westdeutschland, eine Studie ueber Wirtschaftsbeziehungen BRD-Suedafrika, Dokument des Konsulats der Republik von Zambia, Freiburg/Br. 1970. See also: United States Corporate Investments and Social Change in South Africa, unpublished study, 1972; Morrison: Westdeutschlands wirtschafliche Verkettung mit der Apartheid, in: Pan African Journal (aus: Africa and the World, London), Jan/Feb. 1972
(3) See: Dritte Welt Information, Frankfurt/Main July 1972, "Apartheid und neokoloniale Expansion garantieren Gewinne", by Franz J.T. Lee, p.2
(3a) Commerzbank, Aussenhandelsblaetter. See also: Die Wochenzeitung, Was tun, Nr. 118/120, 26.8.1976
(4) Ueberblick ueber Aussmass und Bedeutung nordamerikanischer Investitionen in dem unter weisser Herrschaft stehenden suedlichen Afrika, ORK Unit II, Dokument Nr. 3, Cunene Dam Symposium, 1972.
(5) See: Franz J.T. Lee, Anatomy of Apartheid in Southern Africa, New York 1966, pp. 13f.
(6) See the extensive study: Robert Molteno, Africa y South Africa - Economic Background of South Africa's Outward Looking Policy, London 1971, p.19f. Also: Franz J.T. Lee, Hintergruende des Dialogs Suedafrika - Schwarzafrika, in: Afrika im Westdeutschen Fernsehen, Hannover 1972, p. 46-50.
(6b) See: Frankfurter Allgemeine Zeitung, 24.8.1976, Kurssturz der suedafrikanischen Goldminen-Aktien.
(7) See: Financial Mail, 29.5.1970
****

Wednesday, September 15, 2010

கியூபர்கள் சோஷலிசத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்களா?


பிடல் காஸ்ட்ரோ அண்மையில் வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து பல வதந்திகளை கிளப்பி விட்டது. கியூபாவின் சோஷலிச மாதிரியில் காஸ்ட்ரோவுக்கு நம்பிக்கை இல்லை என்ற தலைப்புச் செய்தி அநேகமான உலக ஊடகங்களில் பவனி வந்தது. ஓரிரு நாட்களின் பின்னர், கியூபாவில் அரை மில்லியன் அரசாங்க ஊழியர்களை பணி நீக்கம் செய்யவிருக்கும் செய்தியும், எதிர்பார்ப்பை அதிகரித்தது. 

வழக்கமாகவே வெறும் வாய் மென்று கொண்டிருந்த கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு, இந்த செய்திகள் அவல் கிடைத்தது போலானது. பிறகென்ன? "கடைசியாக காஸ்ட்ரோ கூட சோஷலிசம் குறைபாடுடையது, அது கியூபர்களுக்கு உதவவில்லை." என்று கூறி விட்டார். கியூபா இனி முதலாளித்துவ பொருளாதாரத்தை தழுவிக் கொள்ளும். இவ்வாறு எல்லாம் கனவு கண்டிருப்பார்கள். அது எவ்வளவு தவறானது என்பது காஸ்ட்ரோவை நேர்கண்ட "அட்லாண்டிக்" பத்திரிகை நிருபரே எழுதுகின்றார். " கியூபாவில் யாரும் ரியல் எஸ்டேட் வாங்கலாம் சட்டம் வருகிறது. ஆனால் அமெரிக்கர்கள் மட்டும் வாங்க முடியாது. அமெரிக்கர்களை வாங்க விடாமல் தடுப்பது கியூப சட்டமல்ல, மாறாக முட்டாள்தனமான அமெரிக்க அரசு."(Fidel: 'Cuban Model Doesn't Even Work For Us Anymore')

பிடல் காஸ்ட்ரோ கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு வருவோம். "கியூப மாதிரி இப்போதும் ஏற்றுமதி செய்யப் படக் கூடியதா?" என்பது பத்திரிகையாளரின் கேள்வி. "கியூப மாதிரி எங்களுக்கே செயல்படுவதில்லை." என்று பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார். முதலில் கியூபாவில், "மாதிரி (Model)" என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை. எப்போதும் "சமூகத் திட்டமிடல்", அல்லது " சமூக விஞ்ஞானம்" போன்ற சொற்களையே பயன்படுத்துவார்கள். 


நீண்ட காலமாக கியூபா, புரட்சியை ஏற்றுமதி செய்வது வந்துள்ளமை ஒன்றும் இரகசியமல்ல. அமெரிக்காவில் அதனை "கியூப மாதிரி புரட்சி" என்று தான் அழைப்பார்கள். மேலும் முதலாளித்துவ கல்விக்கழகங்களில் கற்பவர்களுக்கு ஒரு "மாதிரி" தான் சிந்திக்கத் தோன்றும். இவையெல்லாம் காஸ்ட்ரோ அறியாததல்ல. தான் கூறிய அர்த்தத்தை திரிபுபடுத்தி வெளியிட்டதாக காஸ்ட்ரோ பின்னர் தெரிவித்தார்.(Castro 'misinterpreted' on Cuba economic model quote

அட்லாண்டிக் பத்திரிகை நிருபரை அழைத்துச் சென்ற Julia Sweig இன்னொரு விதமாக மொழிபெயர்க்கிறார். இன்றைய ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக பிடல் காஸ்ட்ரோ அவ்வாறு கூறியிருக்கலாம் என்கிறார். எது எப்படியிருப்பினும், "கியூபா சோஷலிசத்தை கைவிடுகின்றது" என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஒரு சாதாரண பத்திரிகை நிருபருடனான உரையாடலில் வெளிப்படுத்தியிருக்க முடியாது. அத்தகைய அறிவிப்புகளுக்கு வேறு இடங்களும், நிகழ்வுகளும் இருக்கின்றன.

இருப்பினும், பிடல் காஸ்ட்ரோவின் கொள்கையுடன் முரண்படும் கருத்துகள் சில, ராஜதந்திர நோக்கங்களுக்காக தெரிவித்திருக்கலாம். இரண்டு மாதங்களுக்கு முன்னர், கியூபாவில் அரச எதிர்ப்பாளர்கள் சிலர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பான உலகச் செய்தியாகியது. அதே நேரம் பெருமளவு சந்தேக நபர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அந்த செய்தி மட்டும் எந்தவொரு ஊடக நிர்வாகியின் கண்ணுக்கும் புலப்படவில்லை.(Cuba's Prisoner Release) அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள், கியூபாவில் மனித உரிமைகள் மேம்பட வேண்டுமென்றும், பொருளாதாரம் தனியார்மயமாக்கப் படவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்கின்றன. அப்போது தான் கியூபாவுக்கு சர்வதேச சமூகத்தில் சம அந்தஸ்து வழங்குவார்கள். இந்த பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையிலேயே, கியூபாவின் அண்மைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. காஸ்ட்ரோ ஒரு முதலாளித்துவ நலன் சார்ந்த அமெரிக்க பத்திரிகையாளருக்கு வழங்கிய பேட்டியையும் அந்த வெளிச்சத்தின் கீழ் தான் பார்க்க வேண்டும். 


கியூபாவின் உத்தியோகபூர்வ கொள்கைக்கு மாறாக, காஸ்ட்ரோ ஈரான் அதிபர் அஹ்மதிநிஜாத் மீதும் விமர்சனங்களை வைத்துள்ளார். இஸ்ரேலின் இருப்பிற்கு நியாயம் இருப்பதாகவும், அஹ்மதிநிஜாத் யூதர்களை அவதூறு செய்வது சரியல்ல என்றும் காஸ்ட்ரோ கூறியுள்ளார். (Fidel to Ahmadinejad: 'Stop Slandering the Jews') அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டிக் பத்திரிகையாளர் ஏற்கனவே இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை பற்றி நூல் ஒன்றை எழுதியுள்ளார். ஒரு ஊடகவியாளரின் பின்புலம் குறித்து அறியாமல், காஸ்ட்ரோ உரையாடியிருக்க வாய்ப்பில்லை. ஆகவே, நான் கூற வருவது இதைத்தான். கியூபா மேற்குலக நலன்களுக்கு இடையூறாக நிற்கவில்லை என்று பிடல் காஸ்ட்ரோ சமிக்ஞை கொடுத்திருக்கலாம்.

விரைவில் அமெரிக்கா இஸ்ரேலை பயன்படுத்தி ஈரான் மீது படையெடுக்க இருப்பதாக அனல் பறக்கும் உரையாற்றிய காஸ்ட்ரோ, தீர்க்கதரிசனத்துடன் கியூபாவுக்கு வரவிருக்கும் ஆபத்தை தவிர்க்க நினைத்திருக்கலாம். அமெரிக்கா ஈராக் மீது படையெடுப்பதற்கு தயார் செய்து கொண்டிருந்த காலத்தில், லிபியா இது போன்ற ராஜதந்திர அணுகுமுறையை கடைப்பிடித்தது. "பயங்கரவாத்திற்கு எதிரான போரில் லிபியாவும் பங்குபற்றுவதாக" பகிரங்கமாக அறிவித்த கடாபி, அதன் மூலம் லிபியா மீதான பொருளாதார தடைகளை அகற்றிக் கொண்டார். வெறி கொண்ட காளை மாடொன்று தெருவில் போவோர் வருவோரை எல்லாம் இடிக்கிறது என்றால், நாமாக ஒதுங்கிக் கொள்வோம். அமெரிக்கா என்ற இராணுவ பலம் வாய்ந்த ராட்சதனோடு நேரடியாக மோத முடியாது. சமயத்தில் ஒதுங்கிக் கொள்வது புத்திசாலித்தனம்.

கியூபா அடுத்த வருடம் அரை மில்லியன் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்று மேற்குலக ஊடகங்கள் சிலாகித்து பேசுகின்றன. அதிலும் குறிப்பாக பணி நீக்கம் செய்யப்படும் அரச ஊழியர்கள் தாமாகவே வர்த்தக முயற்சியில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க வேண்டும். கடின உழைப்பாளிகளுக்கு தகுதிக்கேற்ப அதிக சம்பளம் வழங்கப்படும். ஒரு வர்த்தக நிறுவனம் தொடங்குவதற்கு இலகுவாக சட்டங்கள் மாற்றப்படும். 


இதை எல்லாம் கேள்விப்படும் போது, கியூபா சோஷலிசத்தை கைவிட்டு விட்டது போலத் தோன்றும். முதலாளித்துவமே சிறந்தது என்று தெரிவு செய்து விட்டதாக சிலர் சந்தோஷப்படுவார்கள். ஆனால் இந்த கருதுகோள்கள் எதுவுமே உண்மையல்ல. முதலாவதாக கியூப அரசு அடுத்த ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த பொருளாதார திட்டத்தை அறிவித்துள்ளது. இரண்டாவதாக, கியூபாவின் அரச சார்பு தொழிற்சங்கம் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை நியாயப் படுத்தியுள்ளது.

சீனாவில், வியட்நாமில் நடந்ததைப் போன்ற பொருளாதார மாற்றங்கள் கியூபாவில் இடம்பெறும் என்று பலர் எதிர்வுகூறினார்கள். ஒரு வகையில், அண்மைய அறிவிப்பு அந்த நாடுகளின் அனுபவங்களை கவனமாக ஆராய்ந்த பின்பே வெளியாகியுள்ளது. ஒரு வகையில் கியூபப் பொருளாதாரம் அந்தப் பாதையில் பயணப்படுவதாக இருந்தாலும், தீய விளைவுகள் கவனமாக தவிர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீனாவில் அனைத்து தொழிலாளர்களும் பெரிய நிறுவனங்களின் தயவில் விடப்பட்டனர். தொழிலாளர் நலப் பாதுகாப்பில் அரசாங்கத்தின் பொறுப்பு குறைக்கப்பட்டது. ஆனால் கியூபாவில் நடைபெறப் போவது அதுவல்ல. 


தொழிலாளர்கள் கட்டம்கட்டமாக பணி நீக்கம் செய்யப் படுவர். அவர்கள் தாமாகவே வர்த்தக முயற்சியில் ஈடுபட அரசாங்கமே ஊக்குவிக்கும். ஊழியர் சேம நிதியத்தில் இருந்தோ, அல்லது வங்கிக் கடனாகவோ கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு கம்பெனி தொடங்கலாம். ஆனால் வர்த்தக முயற்சியில் அனைவரும் வெற்றி பெறப் போவதில்லை. எப்படியும் என்பது வீதமானோர் அனைத்தையும் இழந்து வந்து நிற்பார்கள். அப்படியானவர்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அதை விட பணிநீக்கம் செய்யப்பட்டாலும் வர்த்தக முயற்சியில் இறங்க விரும்பாதவர்களுக்கு, அரசே வேறு தொழில் தேடித் தர வேண்டும். ஏற்கனவே உள்ள தங்குவிடுதிகள் போன்ற தனியார் துறையிலும் வேலை தேடலாம்.

உண்மையில் கியூப அரசு, சீனாவை பின்பற்றுவதை விட, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மாதிரியை பின்பற்றுவதாகவே தோன்றுகின்றது. கடந்த வருடம் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மில்லியன் கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தன. பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்த பொருளாதார நெருக்கடி, இன்றுள்ள கியூப நிலையை விட மோசமாக இருந்தது. இருப்பினும் பணி நீக்கம் செய்யப் பட்டவர்களுக்கு அரசாங்க கொடுப்பனவு வழங்குவது பல குறைபாடுகளை கொண்டிருந்தது. 


முன்பு மாதிரி வேலையற்ற அனைவருக்கும் படியளந்த காலம் மலையேறி விட்டது. வேலையில்லாமல், வருமானமில்லாமல், (தற்காலிகமாக) அரசின் உதவியும் கிடைக்காமல் வறுமையில் வாடிய குடும்பங்கள் அதிகம். அத்தகைய பிரச்சினைகளை மேற்கு ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு சமாளித்து முன்னேறின? வேலையிழந்த மக்கள் சக்தியை, பொருளாதாரத்திற்கு புத்துயிர்ப்பு ஊட்ட எப்படி பயன்படுத்தினார்கள்? கியூபா அதிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடொன்றில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற பலருக்கு, கியூபாவில் நடைபெறும் மாற்றம் புதுமையாக தெரியவில்லை. இங்கே என்ன நடந்ததோ, அது தான் அங்கேயும் நடக்கின்றது.(Cuba lay-offs reveal evolving communism)

மேற்கு ஐரோப்பாவில் நூறு வீத முதலாளித்துவம் நிலவவில்லை. தவிர்க்கவியலாது சில சோஷலிசக் கூறுகளைக் கொண்டுள்ளன. எத்தனை வீதம் சோஷலிசம் என்பது, நாடுகளைப் பொறுத்து கூடலாம், அல்லது குறையலாம். உதாரணத்திற்கு சுவீடனின் சோஷலிசத்தின் அளவு பிற நாடுகளை விட அதிகம். இவ்வாறு முதலாளித்துவ நாடுகள் என்று பேரெடுத்த நாடுகள், சோஷலிச பரிசோதனை செய்வதை யாரும் தவறாக எடுக்கவில்லை. "ஆஹா, பார்த்தீர்களா! அவர்கள் முதலாளித்துவத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்கள்." என்று சந்தோஷப்படவில்லை. 


மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் அசைக்க முடியாத இடத்தில் வைக்கப் பட்டுள்ளது. அதே நேரம் உழைப்பாளரின் வசதிவாய்ப்புகள் அதிகரிக்கும் வண்ணம் செல்வம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன. இதை புரிந்து கொள்ள நீங்கள் பொருளாதார சூத்திரம் எதையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டியதில்லை. கியூபாவிலும் அதே மாதிரியான பொருளாதார மாற்றமே நடந்து கொண்டிருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் அப்படியே இருக்கும். மார்க்சிச-லெனினிசம் அரச கொள்கையாக தொடர்ந்திருக்கும். அத்தியாவசிய பொருளாதார நிறுவனங்கள் அரசாங்கத்திடம் இருக்கும். ஏற்கனவே தொழில்நுட்ப அறிவு தேவைப்படும் துறைகளில், அரசு வெளிநாட்டு நிறுவனங்களுடன் Joint Venture ஒப்பந்தங்கள் போட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச மூலதனத்தை நிர்வகிக்கும் ஸ்தாபனங்களுக்கு கட்டுப்பாடு உள்ளது. 


சிறு வணிகர்களைக் கொண்ட தனியார்துறை ஒரு நாளும் அரசுக்கு போட்டியாக மாற முடியாது. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. சிறு வணிகர்கள், அரசுக்கு வரி கட்டியே தேய்ந்து போவார்கள். பெருமளவு பணம் சேர்த்து பெரிய முதலாளி ஆகும் கனவு ஒரு நாளும் பலிக்கப் போவதில்லை. "எல்லையற்ற பணம் சேர்க்க சுதந்திரம் கொடுக்கும்" முதலாளித்துவ நாடுகளிலேயே அது தான் நிலைமை.

*****************************
கியூபா தொடர்பான முன்னைய பதிவொன்று:
கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்

Sunday, September 12, 2010

ஊழியர்களின் ஊதியத்தை திருடும் முதலாளிகள்

(மேற்கு ஐரோப்பா சென்று, என்ன வேலை செய்தாவது சம்பாதிக்க விரும்பும் இளைஞர்கள் உரிமைகளற்ற தொழிலாளர்களாக சுரண்டப்படுகின்றனர். சட்டப் பதிவின்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு தொழிற்சங்க உதவியும் கிடைப்பதில்லை. பெல்ஜிய முதலாளிகளால் சுரண்டப்படும் உரிமைகளற்ற தொழிலாளருக்கு உதவி செய்யும் நிறுவனம் ஒன்று வழங்கிய தகவல்கள் கீழே உள்ளன. பெல்ஜியத்தின் நெதர்லாந்து மொழி சஞ்சிகை ஒன்றில் வந்த கட்டுரையை இங்கே சுருக்கமாக மொழிபெயர்த்துள்ளேன்.)

45 வயது அப்தர் ரஹீம் 2001 ம் ஆண்டு, மொரோக்கோவில் இருந்து தனது பல்கலைக்கழக சான்றிதழுடன் பெல்ஜியம் வந்தார். சட்டப்படி வேலை செய்து வீட்டுக்கு பணம் அனுப்புவதே அவரது குறிக்கோளாக இருந்தது. எந்த வேலைக்கும் தயாரான, மலிவான உழைப்பாளர்கள், சட்டவிரோத தொழில்துறையை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்தர்ரஹீம் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் எட்டு உழைப்பாளிகளைக் கொண்ட அடுக்கு மாடி வீடொன்றுக்கு குடிபெயர்ந்தார். புருசெல் மாநகரின் வெளிநாட்டவர்களின் வட்டாரமாக கருதப்படும் அந்தப் பகுதியில், பல முதலாளிகளின் கீழ் தற்காலிகமாக வேலை பார்த்துள்ளார். முதலாளிகள் பெல்ஜியர்கள் மட்டுமல்ல, மொரோக்கோ, துருக்கி போன்ற பல்லினத்தவர்கள். சட்டவிரோதமான தொழில் என்பதால், ஒரு நாளைக்கு 25 - 30 யூரோ கிடைத்தாலும், நிரந்தரமான வேலை இல்லை. அவர் கடைசியாக செய்த வேலையில் ஓரளவு நல்ல வருமானம் வந்து கொண்டிருந்தது. (ரெஸ்டாரன்ட்) சமையல்காரனாக, உபசரிப்பாளனாக சுதந்திரமாக வேலை செய்ய முடிந்தது. முதலாளியும் அன்பாக, கனிவுடன் நடந்து கொண்டான். (அல்லது அப்தர்ரஹீம் அப்படி நினைத்துக் கொண்டிருந்தார்.)

டிசம்பர் 2009 ல், ஒரு நாள் வேலையில் இருந்த அப்தர் ரஹீம் படியால் தவறி விழுந்தார். பல நாட்கள் ஓய்வற்ற உழைப்பும் விபத்துக்கு காரணமாக இருந்தது. நிலை தடுமாறி விழுந்ததால் தலை அடிபட்டு காதால் ரத்தம் கொட்டியது. சுயநினைவற்ற நிலையில் இருந்த போதிலும் முதலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை. ஆரம்பத்தில் ரஹீமும் அதனை விரும்பவில்லை. மருத்துவ உதவி கிடைக்காததை விட, சட்டவிரோதமாக வேலை செய்த குற்றத்திற்காக தண்டனை கிடைக்கலாம் என்ற அச்சம் அதிகமாக இருந்தது. இருப்பினும் உடைந்த பற்கள், தோள்மூட்டு வலி, தாங்க முடியாத இடுப்பு வலி, என்று வேதனையின் உச்சியில் வலி போருக்க மாட்டாமல் மருத்துவமனை செல்ல வேண்டி நேரிட்டது. ஸ்கேன் செய்து பார்த்த பொழுது மண்டை உடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சைக்கு அதிக பணம் (2100 யூரோ) செலவாகும் என்பதால், முதலாளி ரஹீமை கைவிட்டு விட்டார். அது வரை காலமும் முதலாளி தான் மீது பாசமாக இருப்பதாக நம்பிய அப்தர்ரஹீம் அதனை எதிர்பார்க்கவில்லை. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, முதலாளி கடைசி மூன்று மாத சம்பளப்பணத்தை கொடுக்கவில்லை.

வேண்டிய அளவு வேலை வாங்கி விட்டு, இப்போது உடைந்து போன பொருளை தூக்கி வீசுவதைப் போல நடந்து கொள்ளும் முதலாளியிடம் இருந்து, சல்லிக்காசு கூட பெற முடியாது என்று உணர்ந்த ரஹீம், உதவி நிறுவனம் ஒன்றை நாடினார். PAG-ASA என்ற தொண்டு நிறுவனத்திடம் தனது பிரச்சனைகளை எடுத்துக் கூறினார். அவர்கள் ரமீமை ORCA (Organisatie voor Clandestiene Arbeidsmigranten ) என்ற உரிமைகளற்ற தொழிலாளர்களின் சங்கத்திடம் ஒப்படைத்தனர். இவர்களின் உதவியால் பல சட்ட ஆலோசனைகளை பெற முடிந்தது. பொருளாதார சுரண்டலால் ரஹீமுக்கு ஏற்பட்ட பாதிப்பை அளவிடும் ஆய்வு இன்னும் முடியவில்லை. ரஹீமைப் போன்ற நூற்றுக்கணக்கான உரிமைகளற்ற தொழிலாளரின் கதைகள் அந்த நிறுவனத்திடம் உள்ளன.

பெல்ஜியத்தில் பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக வேலை செய்த பதினேழு உழைப்பாளிகளுக்கு சேர வேண்டிய பணம் இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. அதன் படி இந்த பதினேழு பேருக்கும், 83.870 யூரோ அவர்களது முதலாளிகள் கொடுக்க வேண்டியுள்ளது. பெல்ஜியத்தில் வாழும் பெரும்பாலான வெளிநாட்டு உழைப்பாளர்களுக்கு இப்படியான தொழிற்சங்கம் இருப்பதே தெரியாது. தெரிந்தாலும் பலர் நேரே வந்து முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர். தாம் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்வது தெரியவந்தால், தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சம் நிலவுகின்றது. அரசால் பதியப்படாத தொழிலாளர்கள், கூலித் தொகையை முதலாளிகளுடன் பேசி முடிவு செய்கின்றனர். அது அநேகமாக சட்டப்படி தீர்மானிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தை விட குறைவாகவே இருக்கும். இப்படியான முறைப்பாடுகளை அரசும், நீதிமன்றமும், ஆட்கடத்தல் குற்றத்தின் கீழ் பதிவு செய்கின்றன. ஆனால் ORCA விடம் உதவி கோரி வந்தவர்களில், ஒருவரைத் தவிர எல்லோரும் முதலாளிகள் திருடிய சம்பளப் பணம் குறித்து முறையிடுகின்றனர்.

(நன்றி: Mondiaal Nieuws, 25-08-2010)

Thursday, September 09, 2010

மேற்கில் சுரண்டப்படும் கிழக்கைரோப்பிய உழைப்பாளிகள்

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த பின்னர், அவை மேற்குலக காலனிகளாக மாறி வருகின்றன. ஒரு புறம், மேற்கைரோப்பிய பெரும் வர்த்தக நிறுவனங்கள் அந்த நாடுகளின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மறு புறம், கிழக்கு ஐரோப்பிய உழைப்பாளிகள் மேற்கைரோப்பாவில் குறைந்த கூலிக்கு சுரண்டப் படுகின்றனர். முன்னொரு காலத்தில் துருக்கி, மொரோக்கோ நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது அகதிகள் செய்து வந்த அடி மட்ட வேலைகளை தற்போது கிழக்கு ஐரோப்பிய தொழிலாளருக்கு கொடுக்கிறார்கள். உழைப்புச் சுரண்டலுக்கு தயாரான புதிய தொழிலாளர் படை ஒன்று அருகிலேயே, அதுவும் ஐரோப்பா என்ற சாம்ராஜ்யத்தினுள் கிடைக்கின்றது. இதனால் ஆசிய, ஆப்பிரிக்க குடியேறிகள் விரட்டப்படுகின்றனர். இஸ்லாமிய எதிர்ப்பு, அகதிகள் தடுப்பு போன்ற கிளர்ச்சியூட்டும் அரசியலுக்கும் அதுவே அடிப்படைக் காரணம்.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்று, இங்கே கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் மிக மோசமாக சுரண்டப்படுவதை எடுத்துக் காட்டியுள்ளது.
Klaas Gaat Illegaal ஒரு செய்தியாளர் போலந்து நாட்டு தொழிலாளரின் அவலத்தை நேரில் கண்டு படமாக்கியுள்ளார். போலந்துக்காரரும் ஐரோப்பிய யூனியன் பிரஜைகள் தாம். ஆனால் போலந்தில் கிடைக்கும் ஊதியத்தை விட, நெதர்லாந்தில் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் வருகின்றனர். அவர்களுக்கு வேலை தேடிக் கொடுக்கும் முகவர் நிறுவனம், ஆறு மாதம் தொடக்கம் ஒரு வருட ஒப்பந்தம் போட்டு விடுகின்றன. வேலை கடுமை காரணமாக இடை நடுவில் நாடு திரும்பிடா வண்ணம் தண்டப்பணம் அறவிடுகின்றன. அவற்றை செலுத்துவதற்காகவே தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்.

ஊருக்கு ஒதுக்குப் புறமாக "கரவன்" குடியிருப்புகளில் தொழிலாளர்கள் தங்க வைக்கப் படுகின்றனர். ஒடுக்கமான அறைகளைக் கொண்ட ஒவ்வொரு குடியிருப்பிலும் ஆறு பேர் தங்க வைக்கப் படுகின்றனர். மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் தொழிலாளரின் முகாம்களை பார்த்தவர்களுக்கு இதனை விளக்கத் தேவையில்லை. வசதிக் குறைபாடுகளைக் கொண்ட சிதிலமடைந்த கரவன் குடியிருப்புகளுக்கு குறைந்தது ஆயிரம் யூரோக்கள் வாடகை அறவிடுகிறார்கள். (வெளியே நகரத்தில் ஐநூறு யூரோவுக்கு வசதியான வீடு வாடகைக்கு எடுக்கலாம். ஆனால் அதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. முகவர்கள் ஒப்பந்தத்தைக் காட்டி மிரட்டி வைக்கின்றனர்.) அதை விட குடியிருப்புகளில் வசிக்கும் தொழிலாளர்கள் விடும் சிறு சிறு தவறுகளுக்காக தண்டப் பணம் அறவிடும் கொடுமையும் நடக்கின்றது. துப்பரவு செய்யா விட்டால், அல்லது வீட்டினுள் உணவு வீசிக் கிடந்தால், இப்படி எத்தனையோ தவறுகளை கண்டுபிடித்து தண்டப்பணம் வசூலித்து விடுவார்கள்.

சிறு சிறு தவறுக்கெல்லாம் தண்டப்பணம் பிடித்துக் கொள்வதால் மாத இறுதியில் சம்பளப் பணம் சொற்பமாகவே மிஞ்சும். அதுவும் நிச்சயமில்லை. இரண்டு மாத சம்பளப்பணத்தை பிடித்து வைத்துக் கொள்வது சாதாரணம். தினசரி வேலைக்கு போவது மட்டுமே அவர்களுக்கு நிச்சயமான வாழ்வு. அனேகமாக காய்கறித் தோட்டங்களிலேயே போலந்து தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து சென்று விட வேண்டும். அதிக நேரம் வேலை செய்ய வேண்டும். சில நேரம் ஒரு நாளைக்கு 22 மணிநேரம் வேலை செய்ததாக ஒரு உழைப்பாளி தெரிவித்தார். பயமுறுத்தல் காரணமாக பலர் தமக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். தேவாலயம் ஒன்றில் அடைக்கலம் புகுந்த ஒரு பெண் உழைப்பாளி, தான் பாலியல் ரீதியாக சுரண்டப் பட்டதாக தெரிவித்தார். இவையெல்லாம் இந்த ஆவணப் படத்தில் பதிவாகி உள்ளன.

நெதர்லாந்து செய்தியாளர், தனது உருவத்தை மாற்றி ருமேனிய தொழிலாளி போல நடித்து (under cover), இந்த தகவல்களை எல்லாம் சேகரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய மக்கள், சோஷலிச சர்வாதிகாரத்தில் இருந்து விடுதலையடைந்ததாக பலர் மகிழ்ச்சியில் துள்ளினார்கள். அதே கிழக்கு ஐரோப்பிய மக்கள், ஜனநாயக ஐரோப்பிய யூனியனில் அடிமைகளான அவலத்தை இந்த வீடியோவில் காணலாம்.

ஆவணப்படத்தை இங்கேயுள்ள சுட்டியில் பார்வையிடலாம். (குறிப்பு: நெதர்லாந்து மொழி பேசும் வீடியோ)
Klaas Gaat Illegaal

Monday, September 06, 2010

அவுஸ்திரேலியா உங்களை வரவேற்கின்றது

அவுஸ்திரேலியாவுக்கு ஒரு வரலாறு உண்டு. 19 ம் நூற்றாண்டின் சட்டவிரோதக் குடியேறிகளான ஆங்கிலேயரின் வருகையுடன் ஆரம்பிக்கிறது அந்த வரலாறு. வந்தவுடனேயே இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு என்று தொடங்கி, அவுஸ்திரேலியாவுக்கு பெருமை சேர்த்தார்கள். நவீன உலக வரலாற்றில் இதுவரை யாரும், இனப்படுகொலை செய்வதில் ஆங்கிலேயரின் சாதனையை முறியடிக்கவில்லை. அவுஸ்திரேலியாவின் தெற்கே ஒரு பெரிய தீவு இருந்தது. (உலகில் 26 வது பெரிய தீவு) ஒல்லாந்து மாலுமி ஒருவரின் பெயரான தாஸ்மானியா என்று பெயர் சூட்டப்பட்டது. காலங்காலமாக அங்கே வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை, (சட்டவிரோத) பிரிட்டிஷ் குடியேறிகள் வேட்டையாடி அழித்து விட்டனர். நவீன உலக வரலாற்றில் முதன்முறையாக, மனித இனம் ஒன்று முற்றாக அழித்தொழிக்கப் பட்டது. அந்த அரும்பெரும் சாதனையை, பிற்காலத்தில் ஹிட்லராலும் முறியடிக்க முடியவில்லை. இருபதாம் நூற்றாண்டில் அவுஸ்திரேலியா வெள்ளையரை பெரும்பான்மையாக கொண்ட நாடாகி விட்டது. அவர்களுக்கு அண்மையில் ஆசியாக் கண்டம் இருந்தது. ஆனால் வெள்ளையின குடியேறிகள் பழுப்பு நிற ஆசியராக இனங்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதனால் அயலில் இருக்கும் நியூசிலாந்தையும் சேர்த்துக் கொண்டு, அவுஸ்திரேலியா என்ற தனிக் கண்டத்தை அறிவித்தனர்.

அதன் பின்பு, அவுஸ்திரேலியாவில் ஐரோப்பிய மக்களின் குடியேற்றம் அதிகரித்தது. அந்த நாட்டில், அதாவது புதிய கண்டத்தில், "வெள்ளையர்கள் மட்டுமே குடியேறலாம்" என்ற சட்டம் 1970 ம் ஆண்டு வரை அமுலில் இருந்தது. அமெரிக்கா, கனடா கூட ஒரு காலத்தில் "வெள்ளையர் மட்டும்" சட்டத்தை கொண்டிருந்தன. நாகரீக உலகின் மாற்றங்களுக்கேற்ப, இடதுசாரி தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் அவுஸ்திரேலியா சட்டத்தை மாற்றியது. தொழிலாளர் கட்சி ஆசிய நாடுகளுடனான வர்த்தக உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இதனால் தவிர்க்கவியலாமல் ஆசிய மக்களின் குடியேற்றங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டது. இதற்கிடையே இரண்டாம் உலகப் போரின் பின்னர், ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் காரணமாக ஐரோப்பிய குடியேறிகளின் வருகை வெகுவாக குறைந்திருந்தது.

புதிய குடியேற்றக்காரரை அனுமதிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து அவுஸ்திரேலியா பல்லின கலாச்சாரத்தைக் கொண்ட நாடாக மாறி விட்டது. ஆசிய நாட்டவரின் குடியேற்றம் வர வர அதிகரித்துக் கொண்டே போனது. சீனர்கள், வியட்நாமியர்கள், இந்தியர்கள், இலங்கையர்கள் ஆகியோர் புதிய சிறுபான்மை இனங்களாக பெருகத் தொடங்கினர். இவர்களில் பலர் சிறந்த கல்வித் தகமைகளை பெற்றிருந்தனர். குறிப்பாக சீன வர்த்தகர்கள் பங்குச் சந்தையிலும் ஊடுருவி விட்டனர். இதனால் வெள்ளையர்களின் மனதில் இனத்துவேஷம் வேர் விட்டது. அன்றிலிருந்து இன்று வரை, சீன- வியட்னாமியரைக் குறிக்கும் மஞ்சள் அபாயம் பற்றி பேசப் படுகின்றது. அண்மைக் காலமாக இந்தியர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. மறு பக்கத்தில் அரசாங்கமோ, இனவாதம் கூடாது என்று பிரச்சாரம் செய்யவில்லை. வெள்ளையின பிரஜைகளின் அச்சத்தை மெய்ப்பிப்பது போல புதிய சட்டங்களை கொண்டு வந்து குடியேறிகளை தடுக்கப் பார்க்கின்றது.

2001 ம் ஆண்டு, ஆகஸ்ட் மாத இறுதியில் 438 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று அவுஸ்திரேலியா நோக்கி வந்தது. பாராளுமன்றத்தில் அகதிக் கப்பலை என்ன செய்வதென்ற விவாதம் சூடு பிடித்தது. பிரதமர் அகதிகளை உள்ளே விட மாட்டேன் என்று சூளுரைத்தார். இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு கப்பம் கட்டும் சிற்றரசான நவ்று தீவில் கொண்டு சென்று இறக்கி விட்டார்கள். கப்பலில் ஆப்கானிஸ்தான், இலங்கையை சேர்ந்த அகதிகள் இருந்தனர். அந்த நாடுகளில் எல்லாம் மனித உரிமைகள் மீறப்படுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் அவுஸ்திரேலிய அரசு, அகதிகளுக்கு உதவ முன்வரவில்லை.

சர்ச்சைக்குரிய அகதிக் கப்பல் விவகாம் வரலாற்றில் ஒரு முன்னுதாரணத்தைக் கண்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் வெடிப்பதற்கு முன்னர், இதே போல யூத அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அட்லாண்டிக் சமுத்திரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. யூத இன வெறுப்பு அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் பரவிருந்த காலம் அது. அதனால் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் என்று எந்தவொரு நாடும் யூத அகதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. மேற்குலகம் அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியான அரசியலை தான் பின்பற்றி வருகின்றன. நாம் தான் அவர்கள் மாறி விட்டார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுள்ளோம்.

சட்டவிரோதமாக வரும் அகதிகளை அவுஸ்திரேலிய அரசு தடுப்பு முகாம்களுக்கு அனுப்புகின்றது. இந்த தடுப்பு முகாம்கள் ஒன்றில் பாலைவனத்தின் மத்தியில் இருக்கும். அல்லது முதலைகள் உலாவும் காட்டினுள் அமைந்திருக்கும். பன்னாட்டு அகதிகளைக் கொண்ட முகாம்களில், பெண்கள், குழந்தைகள் என்று பாரபட்சம் இல்லாமல் அடைத்து வைக்கின்றனர். முகாமில் சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக செய்திகள் கசிந்துள்ளன. அதிகாரிகள் அகதிகளை இலக்கம் சொல்லியே அழைக்கின்றனர். மருத்துவ வசதிகள் கிடைப்பது அரிது. கடும் நோய்வாய்ப் பட்டவர் எனில் அடிக்கடி தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தப் படுகின்றனர். முகாமில் வைத்தே தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப் படுகின்றனர்.

நிலைமையை மோசமடைய வைப்பது போல, தடுப்பு முகாம்களை ACM என்ற தனியார் வர்த்தக நிறுவனம் நிர்வகிக்கின்றது. இது ஒரு அமெரிக்க நிறுவனம் என்பதும், அமெரிக்காவில் சிறைச்சாலைகளை பராமரித்து வருவதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் முகாம்கள் "Department of Immigration and Multicultural Affaires" என்ற அரசு நிறுவனமே நிர்வகிப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. தடுப்புமுகாம்களை சென்று பார்வையிட மனித உரிமை நிறுவனங்கள் அனுமதி கேட்ட போதிலும், அரசு விடவில்லை. அதற்கு குடிவரவு அமைச்சு கூறும் காரணம் இது:"நாம் எப்படி முகாம்களை நிர்வகிக்க வேண்டும் என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை." உலகில் மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் அவுஸ்திரேலியாவும் இடம்பெறுகின்றமை, அந்த நாட்டுக்கு பெருமை சேர்க்கலாம். ஆனாலும் என்ன? அவுஸ்திரேலியா மீது அமெரிக்காவோ, ஐ.நா. சபையோ எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்கப் போவதில்லை.