Friday, November 28, 2008

யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு


“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)

பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும்.

சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார்.

பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர்.

புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.

ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை).

அதன் படி, ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.

சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.

பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியாளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை.

மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.

1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.

கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர்.

முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.

டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை.

இருப்பினும், அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள். (யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், "யாஹ்வே" அல்லது "எல்" (ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.

கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும்.

இன்று, இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.

யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது.

முதலில், யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா (மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரையில்,  யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர்.

குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும் (அல்ஜீரியா-மொரோக்கோ), குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.

நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை.

யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.

இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது.

முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள்.

இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.

கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது.

புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.

இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது.

உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது.

தமது ஆக்கிரமிப்பு, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமினை (அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.


உசாத்துணை தொடுப்புகள் :
Jew from Wikipedia
A Resource for Turkic and Jewish History in Russia and Ukraine
Israel deliberately forgets its history ________________________________________

83 comments:

Anonymous said...

உங்களுடைய தகவல்களுக்கு நன்றி

VIKNESHWARAN ADAKKALAM said...

வணக்கம் ஐயா,,

நான் நேற்று தான் யார் இந்த கடற்கொல்லையர்கள் எனும் தலைப்பில் தமிழ் ஓசை நாளிகைக்கு ஒரு கட்டிரையை எழுதி அனுப்பினேன்... :) உங்கள் தலைப்பு யார் இந்த யூதர்கள்... :)

விஜய்கோபால்சாமி said...

நிஜமாகவே யாரும் அறியாத செய்தியாகத்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Kalaiyarasan said...

வாசுகி, விக்கினேஸ்வரன், விஜய் கோபால்சாமி உங்கள் அனைவரது வருகைக்கும், கருத்துரைத்தற்கும் நன்றிகள். உங்களைப் போன்றவர்களது ஒத்துழைப்பால் தான் இது போன்ற அரிய தகவல்களை என்னால் பதிவிட முடிகின்றது. மீண்டும் நன்றி.

GNU அன்வர் said...

இதுவரூ யாரும் தொடாத செய்தி இதுபோல் இன்னும் தோடர வேண்டும்

Anonymous said...

சிறப்புமிக்க தகவல், ரொம்ப நன்றி. இதுவரை அரைகுறையாத்தான் யூதர்களைப்பற்றி தெறிந்து வைத்திருந்த , எனக்கு யூதர்களின் வறலாற்றையேபடித்தமாத்ரி , இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Kalaiyarasan said...

குமார், நட்டு உங்கள் வருகைக்கு நன்றி. அதிகமானோர் அறியாத தகவல்களை தருவதே கலையகத்தின் சிறப்பம்சம்.

sargunan said...

Mr.Kalaiy
You provide more info about Jews which are partly true.But not all.
This kind of information started out of your heart or out of other's idea which may be published as a book. If i say "Mr.Hitler won Mr.Napolean" (both are of defferent period, definately some people who are of nazisim will accept. No matter it was correct or not , but simply pleasing their heart.
In your article, it is mentioned that Jews are disappeared.
Haplogroup of European & Middle East Jews are name.
I will give you more info if you ask
Regards
Sargunan Narayanan.

Anonymous said...

DEAR KALAIYAGAM, PLS ETHU POLEA AARIYAR(PARPANARKAL) PATRI ELUTHAVUM,,, VIJAYCREATE@GMAIL.COM

Anonymous said...

really looks good bro ,keep it up ur good work.

Kalaiyarasan said...

//Mr.Kalaiy
You provide more info about Jews which are partly true.But not all.
This kind of information started out of your heart or out of other's idea which may be published as a book. If i say "Mr.Hitler won Mr.Napolean" (both are of defferent period, definately some people who are of nazisim will accept. No matter it was correct or not , but simply pleasing their heart.
In your article, it is mentioned that Jews are disappeared.
Haplogroup of European & Middle East Jews are name.
I will give you more info if you ask
Regards
Sargunan Narayanan.//

Dear Sargunan,
Thank you for visiting my blog and commenting on it. Whatever I mentioned here are not my ideas. My article is based on research of historians, and archeologists, some of them are even secular Jews scholars. I had some European Jewish friends (from East and West Europe), whose culture was similar to other Europeans. I can understand your dillema to accept my article, because of the manipulated history, tought in schools and media.

Kalaiyarasan said...

Thanks for the comments Vijay and another annonymous.

Anonymous said...

யுதர்களின் தற்போதைய இஸ்ரேல் அவர்களின் நாடாக இல்லாத போதும் யூதர்களும் தற்போதைய சவூதி , யேமன், எகிப்து போன்ற நாடுகளில் அடிமைகளாகவும், காலம் காலமாக அங்கு வாழ்ந்துள்ளார்கள். இதனை எகிப்திய முஸ்லிமே என்னிடம் கூறியுள்ளார்.

Kalaiyarasan said...

உங்களது கருத்திற்கு நன்றி.
என்னால் இந்தக் கூற்றை ஒப்புக் கொள்ள முடியாதுள்ளது. இன்றைய இனவாத உலகில் ஒரு இனம் மற்ற இனத்தை அடிமைகளாக வைத்திருந்ததாக, இன மேலாதிக்க கருத்துகளும் உலவுகின்றன.
வரலாற்றுக் குறிப்புகளின் படி, யேமன், எகிப்து போன்ற இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் இரண்டாம்தரப் பிரசைகளாக நடத்தப்பட்டனர். சில நேரம் சாதிப் படிநிலையில் கீழே வைத்திருக்கலாம், ஆனால் "அடிமைகளாக இருந்தது" என்பது மிகைப்படுத்தப் பட்ட கூற்று.

Anonymous said...

அண்ணா அருமை அண்னா பதிவு, இப்ப தான் உங்க வ்லை பாகம் வந்திருக்கன், எதினையே பெரிடம் யூத்ரை பத்தி விச்சரிச்சுடன் ஆனா யரும் இப்டி சொன்னதில்லை நல்ல இருக்கு
...

Kalaiyarasan said...

கவின்,உங்கள் வருகைக்கு நன்றி.

Anonymous said...

I have gone thru your articles.I find most of them are distorted. Please write only the facts that will help you. mrs

Kalaiyarasan said...

Dear Anonymous, I don't write fictions. These are facts, which are double checked by other sources. What you call "facts", the ideas in which you are believeing, are mostly manipulated stories.

Anonymous said...

ஆரூரன் விசுவநாதன்

aruran@rediffmail.com


வாழ்த்துக்கள் கலையரசன். தங்கள் பதிவுகள் மேற்கு பற்றிய

ஒரு புதிய பரிணாமத்தை எங்களுக்கு காட்டுகிறது.

சரித்திரமாக இதுவரை படித்ததெல்லாம் ஆட்சியாளர்களின்

அல்லது மதங்களின் புரட்டுரை என்பது தெளிவாகிறது.

Kalaiyarasan said...

நன்றி, ஆரூரன், எனது கட்டுரைகள் உங்களை சிந்திக்க தூண்டியதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

Abdul Nasar said...

Muslims are not following old testament or new testament, and Quran is the final testament

Anonymous said...

it is not said by research. it is who don't like jews said one. don't believe his words. even if you think it is true i really promise you that the present israel is the home land for jews. they are the original people belongs to israel. the outcoming of truth may be delayed. but it is true. time will tell that jews are the original people for israel.

Anonymous said...

One side logic, but not true. You have to analyse all fact, not fiction

அஸ்குபிஸ்கு said...

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் யூத வெறுப்பு ஒன்றை மட்டும் மூலதனமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை. அரைகுறை அறிவு ஒன்றுக்கும் உதவாது.

kumar said...

வணக்கம்! உண்டு களிப்பதில் பெரும் நாட்டமுடைய எந்த கூட்டமும் அதற்குரிய விலையை கொடுத்துதான் ஆகவேண்டும்.
வட்டிக்கு கடன் வாங்கியே தம் நாட்டை இழந்தவர்கள் பாலஸ்தீனியர்கள்.யூதர்களின் புத்திசாலித்தனமும் அரபுக்களின் முட்டாள்தனமும்
ஒரு நேர்கோட்டில் சந்தித்த போது உருவான மன்னிக்கவும் உருவாக்கப்பட்ட நாடு இஸ்ரேல்.இங்கென்றில்லை,உலகம் முழுவதுமே
என் இனத்தவர் சாப்பாட்டு பிரியர்களாகவே இருப்பது பெரும் எரிச்சலையும்,ஆயாசத்தையும் தருகிறது.வயிறு புடைக்க தின்னும் கூட்டத்திற்கு மூளை எங்கே வேலை செய்யும்?

பார்ப்பனர்கள் வரிந்து கட்டிக்கொண்டு யூதர்களை ஆதரிப்பதன் காரணம் முஸ்லீம்களின் மீதான வெறுப்பு மட்டும் தானா?
ஆரியர்கள் உலகாளப்பிறந்தவர்கள் என்ற ஹிட்லரின் வெறிமுழக்கம் எந்த அடிப்படையிலானது?
நேரம் கிடைக்கும்போது இது தொடர்பாக ஒரு பதிவிடுங்களேன்.
நன்றி.

John Ponraj said...

Your scribblings are against the belief of both Jews and Christianity. Gnayitrai kai maraippar il (Sooriyanai verum kaiyal maraithal iyaladhu)...

irukkam said...

பஷீரின் ஆதங்கத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. பெரும்பாலான அரபுக்கள்தான் இன்று உலகில் இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளுக்கும் அழிவுகளுக்கும் தெரிந்தோ தெரியாமலோ அனுசரணையாளர்களாகத் தொழிற்பட்டு வருகின்றனர். ஆனால் ஈரான் போன்ற ஒரு சில நாடுகள் இத்தகைய முட்டாள்தனமான போக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டு அபிவிருத்தி மற்றும் விஞ்ஞான வளர்ச்சி என்று துரிதமாக முன்னேறி வருகின்றன. ஈரானுக்கு உளப்ப10ர்வமாகவும் உறுதியாகவும் ஒத்துழைப்பு வழங்கும் இன்னும் நான்கைந்து நாடுகள் தோன்றுமானால் அநீதியிலிருந்து நீதிக்கு என உலகத்தின் தலைவிதியை மாற்றி எழுதலாம்.

நிற்கää கலையரசனின் இப்பதிவு உண்மையில் மிகவும் அற்புதமானது. ஆராய்ச்சிகள் மற்றும் தேடல்களுக்குப் பின்னால்தான் இதனைத் தொகுத்துள்ளீர்கள் என்ற உண்மையை என்னால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியும்.

ய10தர்கள்ää தமது ஜீவிதத்தின் ஆரம்பம் தொடக்கமே இறைவனுக்கும் தமது தலைவருக்கும் கட்டுப்படுவதிலிருந்து முற்றாக விலகி நடந்தவர்கள்ää தம்மை வழிநடத்த வந்தவர்களைத் துரத்தியடித்தவர்கள். பிறரை ஏளனமாக எள்ளி நகையாடியவர்கள். தமக்குக் கிடைத்த அருட்கொடைகளையெல்லாம் அற்பமெனக் கருதி எறிந்தவர்கள். நன்றி கெட்டவர்கள். இன்றுää தமது சதிகள் மற்றும் குரூர சிந்தனைகளினூடாக உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஹிட்லரின் யுத்த முயற்சிகளில் தமக்குச் சாதகமான வரலாற்றுச் சான்றொன்றை திட்டமிட்டு உருவாக்கிக் கொண்ட இந்த ய10தர்கள் இப்போலிச் சரித்திரத்தினூடாக உலகத்தில் பெரும் அனுதாப அலையொன்றை தமக்கெனத் திரட்டிக் கொண்டனர்.

ய10தர்களின் அடாவடித்தனங்களையும் பலஸ்தீனர்கள் மீதான அவர்களது கொடூரங்களையும் கண்டு மிரளும் சர்வதேச சமூகங்கள்ää தமது பிரதிபலிப்புகளை அடக்கி வாசிப்பதற்கு இந்த அனுதாபமும் ஒரு காரணம்தான்.

ஹிட்லர் லட்சக்கணக்கான ய10தர்களைää இரண்டாம் உலக யுத்தத்தின் போது கொன்று குவித்ததாக அவர்கள் திட்டமிட்டு உருவாக்கிய வரலாற்றுச் சான்று எவ்வளவு தூரம் போலியானது என்பது பல ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆய்வாளர்கள்ää கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் மேற்குலகத்தினாலும் அமெரிக்காவினாலும் கொடுமைகளுக்கும் தடைகளுக்கும் உட்படுத்தப்பட்டமை அதிகம் வெளிவராத தகவல்களாகும்.

இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால்ää மத்திய கிழக்கு நாடுகளை எப்போதும் இரத்தகளமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அதன் மூலமே அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதற்கான கடிவாளத்தை அரபுத் தலைவர்களிடமிருந்து பறித்து வைத்திருக்க முடியும் என்றும் கண்டறிந்த அமெரிக்க மற்றும் மேற்குல சக்திகள் மத்திய கிழக்கின் இதயமான பலஸ்தீனில் திட்டமிட்டு உருவாக்கிய ஈனப்பிறவியே இந்த இஸ்ரேல் எனும் நாடு எனலாம்.

அதர்மம் என்றும் நிலைக்காது.

easy life said...

மிக விரிவான, தெளிவான, ஆழமான கருத்துக்களை நாங்கள் அறிந்துக்கொள்ள தாங்கள் எடுத்த முயற்சிக்கு நன்றி...

sadiq ibnu abukubais said...

Dear kalaiarasan, ungalathu article mihavum arumai. analum nan silavatrai ungaludan bahirndhukolla virumbukiren. 1.david arasain keel isreliyargal adimaikalaga irundadhaga aadharamillai yengireergal. unmai. KUR-AN varalarin padi, iraithoodhar ibrahim-in(abraham-as per bible) santhathikalthan isravelargal.(king-david utpada)andha isravel samookathai 'piravn'(paravon-as per bible) endar sarvathikari-yidamirundhu kakka vanthavar than iraithoothar 'moosa'(moses-as per bible). 2.yudarkalidamirunthu orirai kolgaiyai cristis & muslims pinpatriyathaga thangal kooriyiruppathum bible&kur-an adippadaiyil thavaragum. ulagin mudhal manithar 'ADHAM'(adam-as per bible) matrum ibrahim aagiya iruvarum kooda orirai kolgaiyai kondavargal than. nandri.

sam said...

I read your Article about the Jewish People,
It shows that you Misrepresented the Jewish people and you gave many wrong information about The Jewish people.
And you quoted that,In the Bible it says the prophet moses delivers the people of israel from Egypt is irrelevant and many said these things were never happened.
But your comment is false. Bible is the Only Book which gives the pure data of History of Mankind.The Bible only shows that the Creation of the world,The Man's Destiny,Redemption of Mankind....And Even it reveals the ONE TRUE GOD WHO CREATES THE WHOLE WORLD.
And finally i conclude that in the Bible there is book called "The gospel of John". In John 4:22 The Lord Jesus christ said that "Through Jews only the world is going to get the salvation from God .
So this will defentely fulfilled through Jews only the whole mankind is going to Get the salvation through their Messiah the King of kings and Lord of lords and By the Omnipotent Almighty God.


vanlig said...

I could find your site just befor 3 days through hayyram`s and til now I have read more than 15 articles of yours. The all are very interesting and believable. I will continue this site every week end.
Sarvam sivamayam
Regards
Subramaniam Logan

kingston said...

kingston said: தங்களது இந்த பதிவிற்கு ரொம்ப நன்றி! ஆனால் ஒன்றை மறந்து விட்டிர்கள் முதலாவது பரிசுத்த வேதாகமத்தை நன்றாக படியுங்கள் படிக்கும் போது தப்பான கண்ணோட்டத்தோடு படிக்காமல் அதன் துவகத்திலிருந்து முடிவு வரை சொல்லப்பட்ட காரியமும் தற்போது நடைபெறும் காரியமும் எப்படி நிறைவேற்கிறது என்பதை எருசலேமுக்காக தேவன் எப்படியெல்லாம் யுத்தம் செய்வார் என்பதை குறித்து வாசித்து மெய் சத்தியத்தை அறிந்துகொள்ளும் படியாக தங்களை அன்புடன் கேட்கிறேன்...நன்றி

kingston said...

kingston said: தங்களது இந்த பதிவிற்கு ரொம்ப நன்றி! ஆனால் ஒன்றை மறந்து விட்டிர்கள் முதலாவது பரிசுத்த வேதாகமத்தை நன்றாக படியுங்கள் படிக்கும் போது தப்பான கண்ணோட்டத்தோடு படிக்காமல் அதன் துவகத்திலிருந்து முடிவு வரை சொல்லப்பட்ட காரியமும் தற்போது நடைபெறும் காரியமும் எப்படி நிறைவேற்கிறது என்பதை எருசலேமுக்காக தேவன் எப்படியெல்லாம் யுத்தம் செய்வார் என்பதை குறித்து வாசித்து மெய் சத்தியத்தை அறிந்துகொள்ளும் படியாக தங்களை அன்புடன் கேட்கிறேன்...நன்றி

kingston said...

kingston said.. தங்களுடைய இந்த பதிவிற்கு ரொம்ப நன்றி.. முதலாவது நீங்கள் பரிசுத்த வேதாகமத்தை நன்றாக (தவறான கண்ணோட்டத்தில் அல்ல) ஆராய்ந்து படித்து அதில் சொல்லப்பட்ட காரியங்கள் தொடக்கத்திலிருந்து இந்த நாள் வரை எப்படி நிறைவருகிறது என்பதையும் தேவன் எருசலேமுக்காக எப்படியெல்லாம் யுத்தம் செய்கிறார் இன்னும் வரும் நாளில் என்ன நடக்க இருக்கிறது என்பதையும் கவனத்துடன் படித்து மெய்யான சத்தியத்தை நீங்கள் அறிந்து கொள்ளும்படி கேட்கிறேன். நன்றி

yuvajebaraj said...

”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
வேதாகமத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நம் கண்முன்னே நிறைவேறிக்கொண்டு வருவது நாம் எல்லாரும் அறிந்ததே. ஆனாலும் ஒரு நாட்டின் பிரதமரே வேதாகமத்தின் வசனத்தை மேற்க்கோள்காட்டி இவ்வசனங்கள் நிறைவேறியிருக்கின்றன எனக் கூறுவது சற்று அரிதான விசயமே. சமீபத்தில் போலந்து நாட்டில் ஆஸ்விச் எனும் இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 65-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வேதாகமத்தில் எசேக்கியேலின் உலர்ந்த எலும்புகள் தரிசனத்தை மேற்க்கோள்காட்டி அது நம் காலங்களில் நிறைவேறி விட்டதாக அறிவித்தார்.

அவர் பேசும் போது “யூதர்கள் படுகொலைக்கு பின், நாம் சாம்பலிலிருந்தும் அழிவிலிருந்தும் எழுந்து, என்றைக்கும் தீர்க்கமுடியாத வலியிலிருந்து மீண்டுவந்தோம். யூத இன பாசத்தாலும், மனித நேய உணர்வுகளாலும், தீர்க்கதரிசிகளின் தரிசனங்களாலும் உந்தப்பட்ட நாம் புதிதாக துளிர்விட்டோம். ஆழமாய் வேரூண்றத்தொடங்கினோம். உலர்ந்த எலும்புகள் மாமிசத்தால் மூடப்பட்டது. அதிலே ஆவி புகுந்தது. உயிர்பெற்று நாம் சொந்த காலிலே நின்றோம். எசேக்கியல் தீர்க்கதரிசனம் உரைத்தபடி “மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்கு வரவும்பண்ணுவேன்.” நான் இப்போது நின்று கொண்டிருப்பது இப்படி பல்லாயிரம் யூதர்கள் மாண்ட இடம்.நான்
மட்டுமல்ல என்னோடு கூட சேர்ந்து இஸ்ரேல் தேசமும் எல்லா யூதர்களும் நிற்கிறார்கள். உங்கள் நினைவுகளில் நாங்கள் தலைவணங்குகிறோம். எல்லோரும் பார்க்க. எல்லோரும் கேட்க. எல்லோரும் அறிய, நீலமும் வெண்மையும், நடுவே தாவீதின் நட்சத்திரமும் கொண்ட
கொடியேற்றி நாங்கள் இப்போது நிமிர்ந்து நிற்கிறோம். நம் நம்பிக்கை வீண்போகவில்லை.” என இஸ்ரேல் நாட்டின் உதயத்தை உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்ற எசேக்கியேலின் தரிசனத்தோடு ஒப்பிட்டு பேசினார்.
எசேக்கியேலின் 37-ம் அதிகாரம் நம் காலத்தில் நிறைவேறினதென்றால் 38ம்,39ம் நம் காலத்திலேயே நிறைவேறலாம் என்பது அதிக நிச்சயமல்லவா?

HANIBEE said...

தவறான பல தகவல்களை கொண்ட பதிவு. ஆபிரஹாம் சந்ததியினரே யூதர்களும் அரேபியர்களும். இயேசு கிறிஸ்து யூத வம்சத்தில் வந்தவர். மேலும், யூத மதத்தில் மதப்பரவல், மத மாற்றம் எதுவும் கிடையாது. மேலும் பல தகவல்களுக்கு 'நிலமெல்லாம் ரத்தம் - ராகவன்' என்ற புத்தகம் படிக்கவும். நன்றி.

Unknown said...

//யூத மதத்தில் மதப்பரவல், மத மாற்றம் எதுவும் கிடையாது.//

Unknown said...

//யூத மதத்தில் மதப்பரவல், மத மாற்றம் எதுவும் கிடையாது.//

காரிகன் said...

Completely biased and a half-baked article. Mr. Kalaiyarasan, you'd better get the historical facts right before setting down to type your "vision of truth".

DEVAPRIYA said...

யூதர்கள் யார்? பழைய ஏற்பாடு அனைத்தும் புழுத்துப்போன மோசடிகதைகள்

http://pagadhu.blogspot.in/2014/07/blog-post_28.html

Unknown said...

Very Good Article,

Unknown said...

Very Good Information

tamilchrist.com said...

பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள்
Noah's Ark Discovered
http://news.nationalgeographic.com/news/bigphotos/47307210.html

ஆதியில் பாம்புகள் கால்களுடன் வாழ்ந்தன
காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து தொடக்க நூல் 3.14 மாலைமலர் http://www.maalaimalar.com/2011/02/09110742/snake-live-with-leg-skeleton-i.html

எபிரெயர்-11:3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும் இவ்விதமாய் காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

இந்த வசனத்தை வாசித்த விஞ்ஞானிகள் 'இது ஒரு முட்டாள்தனமான வசனம்' என்றனர். காணப்படுகிறவைகள் கண்களுக்கு காணப்படாதவைகளால் உண்டானதா?' ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இப்படி வேதாகமத்தை விஞ்ஞானிகள் குறை சொல்லி வந்தனர்.

நாம் கண்ணால் பார்க்கக் கூடிய பந்து, பேனா. கதிரை, மேசை எல்லாம் கண்களால் காணப்படாதவைகளால் உண்டானதென்று எப்படி சொல்ல முடியும்? என்று இவ்வசனத்தை வாசிக்கும் எல்லாரும் கேள்வி எழுப்பினார்கள். கிறிஸ்தவா்களும் பதில் கூற முடியாமல் திணறினார்கள்.

ஆனால் வேதாகமம் சொன்னது உண்மை என விஞ்ஞானம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒத்துக்கொண்டது.

இன்று விஞ்ஞானம் கூறுவது- 'கண்ணால் காணும் எல்லாவற்றையுமே கடைசியாக அணுஅளவு வரை பிரிக்கலாம் அணுவை கூட புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் என்று பிரிக்கலாம். இவை கண்களுக்குத் தெரியாது.

எண்ணிக்கைக்கு அடங்காத அணுக்கள் சேர்க்கப்பட்டே பொருட்கள் உண்டாகியுள்ளன. இப்படியாக கண்களால் காண முடியாத அணுக்களால் தான் காணக்கூடிய எல்லாம் உருவாகியுள்ளன.

இதே உண்மையை வேதம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னபோது நம்ப முடியாதென்ற விஞ்ஞானிகள் இப்போது நம்புகிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் வேதாகமம் சாதாரண மனிதனால் எழுதப்பட்டிருக்குமா? 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த எந்த அறிவாளியான மனிதனும் “புலப்படும் யாவும் புலப்படாத பொருட்களால்தான் உருவாகியுள்ளன“ என்று சொல்ல முடிந்திருக்குமா?

ஏசாயா 40:22-ன் மூலபாஷை வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்க்கையில், தமிழ் மொழிபெயர்ப்பு கூறுகிறபடி “பூமி உருண்டை” என்றில்லாமல் “பூமி வட்டம்” என்றே இருப்பதாக அறிகிறோம். எனவே ஏசாயா 40:22-ல் “தேவன் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்” எனும் வாசகங்கள், “தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்” என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

யோபு 26:7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
பூமி அந்தரத்திலே தொங்குகிறது என்னும் கண்டுபிடிப்பை கூறும் இவ்வசனத்தை இதைவிட விளக்கி கூற வேண்டுமா?

“உயிரினங்களின் உயிர் எங்கு இருக்கின்றது?” என்ற கேள்விக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்பே மோசேயின் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களில் விடை கூறப்பட்டுள்ளது. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது என்பதை மோசே ஆதி.9:4, லேவி.17:11,14 என்ற வசனங்களில் எழுதியுள்ளார். ஆனால் உலகில் இருந்த அறிவியல் வல்லுநர்கள் யாவரும் “மனிதனின் உயிர்

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் (1962 ஆம் ஆண்டு) இருதுய மாற்று அறுவை சிகிச்சையின் பயனாக மரணமடைந்த ஒருவரின் இருதயத்தை மற்றொருவருக்குப் பொருத்தி வெற்றி கண்டனர். இவ்வாறு இருதயம் மாற்றப்பட்ட பின் உயிரோடிருப்பவா் யார்? இருதயத்தைக் கொடுத்தவரா, அல்லது இருதுயத்தைப் பெற்றுக்கொண்டவரா என்ற கேள்வி எழுந்தது.

எனவே அறிவியல் வல்லுநர்கள் கூடி மனிதனின் உயிர் இருதயத்தில் இல்லை, மூளையில் இருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மூளையிலிருந்து உடலுக்கு வரும் முக்கியமான தொடர்புகள் அற்றுப் போன பின்பும் மக்கள் நினைவின்றி உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்ததோடு மீண்டும் தங்கள் கொள்கையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

உலகின் பல அறிவியல் வல்லுநர்கள் கூடி “உயிர் இரத்தத்தில் உள்ளது” என்ற கொள்கையை கூறியுள்ளனர். வேதம் இந்த அறிவியல் உண்மையை 3400 ஆண்டுகட்கு முன்பே கூறியுள்ளது.

Unknown said...

தகவலுக்கு நன்றி

ப.திருநாவுக்கரசு said...

கிட்டத் தட்ட இனம் மதம் இரண்டின் குழப்பமாகவே தெரிகிறது. இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் பற்றியும் எழுதுங்கள். அருமையான முயற்சி அதுவும் தமிழில் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி.பெறுபேறு?

GOPI VN said...

இது புணயபட்ட வரலாறு......

Unknown said...

samuga seerthirutha vaathigal matrum nattunilai vaathigal ippadi oru katturaiyai munn vaikkai virumppa aatragal!! neengal inivarum ungal kaaturaigalukku ungal veri piditha thalaippugalai vaiyungal..one side point of view!!

yuthargal pannakaaragal entral varusa varusam varura billionare padiyal fulla avanga thaana vanthirukkanum!! indiya'la brhamins maathiri anga yuthargal nu sollureenga appadi thaanae!! illa brahims thaan unmaiyana kadavulai sitharithu ooru vaaki koduthaargala!!!

Unknown said...

bible'la mosai kaalathula oru thevaimnu oru sorupham onnu venum'nu konja jannangal oru kantru kuttiyai(pasu,pasupathi vali paadu) vazhi pattargal entra kootru ullathu...ithukku enna kathai thara pogireergal...

ASHAK SJ said...

முஹம்மது யூதர்ஜ்களை பின்பற்றவில்லை அதம் தான் முதல் முஸ்லிம் மனிதர் முஸ்லிம்களின் ஒரு இறைதூதர் மூசா அவரை பின்பற்றி பின்பு வழி தவறியவர்களே யூதர்கள்

V M Chandiran said...

Super Amazing WOW, I have Also This related doubt at long time, one of Biggest important History news

SOWNDARYAN said...

என் சந்தேகம் தீர்ந்தது. மிக்க நன்றி.

raja said...

உங்கள் பெயர் கலையரசன் இல்லை... கொலையரசன். ஒரு தகவல் சொன்னா உண்மைய சொல்லணும். நீ சொன்னதுல 90% பொய்தான் இருக்கு. முதல நீ வரலாற நல்ல தெரிஞ்சுட்டு அப்பறம் வந்து இங்க எழுது. நீ இங்க எழுதியதற்கு முதல ஆதாரம் கொடு...

raja said...

நீ எழுதியது........

//சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம்.//

Unknown said...

பொய் மூட்டை

Unknown said...

many wrong infromations .you dont have enough knowledge
be neutral when you write

Unknown said...

You dont know enough knowledge about what you write,be neutral when you write

Unknown said...

அற்ப ஆசை யரவிட்டது,நிறம் வேறு பாடு உள்ள யூத இனமக்கள் ஒரு நிழல் கோட்பாட்டையுடைய யூதற்களால் உருவாக்கப்பட்ட ஒரு வெளி அல்லது பலிகடா , நினைத்தது ஒன்று அங்கு நடந்தது ஒன்று எல்லாம் பணம் , ஆதிக்கம் , பொழுதுபோக்கு செய்யும் ஒரு சிக்கல் விளையாட்டு .

Unknown said...

நல்ல கருத்து

Unknown said...

எகிப்திற்கு சென்ற முன்னோர்கள் 70பது பேர்அப்போது இஸ்ரேலியர்களாகவும் இல்லை யூதர்களாகவும் இல்லை 400 ஆண்டுகால அடிமைவாசம், பிறகே மோசஸ் மூலம் வெளி வருகின்றனர்

அந்த 70பது பேரும் எகிப்த்தின் ராஜாவிற்கு அடுத்தபடியாக அதிகாரத்தில் இருந்த யோசேப்பின் மூலமாக சென்றவர்கள்

பிறகு எப்படி யூதர்களை அடிமைகளாக வைத்திருந்ததாக எகிப்து குறிப்புகளில் இருக்கும்


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
உங்கள் பதிவு பைபிள் மீதான அவதூறு
சொல்லும் நோக்கில் காழ்புனர்ச்சியால் வந்திருக்கிறது

Dr.Anburaj said...

வணக்கம்! உண்டு களிப்பதில் பெரும் நாட்டமுடைய எந்த கூட்டமும் அதற்குரிய விலையை கொடுத்துதான் ஆகவேண்டும்.
வட்டிக்கு கடன் வாங்கியே தம் நாட்டை இழந்தவர்கள் பாலஸ்தீனியர்கள்.யூதர்களின் புத்திசாலித்தனமும் அரபுக்களின் முட்டாள்தனமும்
ஒரு நேர்கோட்டில் சந்தித்த போது உருவான மன்னிக்கவும் உருவாக்கப்பட்ட நாடு இஸ்ரேல்.இங்கென்றில்லை,உலகம் முழுவதுமே
என் இனத்தவர் சாப்பாட்டு பிரியர்களாகவே இருப்பது பெரும் எரிச்சலையும்,ஆயாசத்தையும் தருகிறது.வயிறு புடைக்க தின்னும் கூட்டத்திற்கு மூளை எங்கே வேலை செய்யும்?


--------------------------------------------------------------------------------
The great and grand city of MATHINA - Arab /Islamic centrre - is once called YATHRIP.Its inhabitants are completely JEWS and JEWS ONLY.Mohamed the Captain of Arab imperialism - had duputed his son in Law Mr, Ali to negotiate with the Jews about the possibilities of converting them into Muslims.In spite of Best efforts by ALI the Jews were firm in their native religion. Aggrived Mohammed had launched a Military offence against the innocent and armless Jews without any notice/surprise. More than 1000 Jews were killed in the operation and the women were ensalved as concubines for Muslims and Muslims soldiers.Mohammed has a share of 5% both in looted money and war captive women.The Jews were subjected to cruel apathy and injustice and they left the city in search of thier fortune elsewhere.That city is now called Mathina.
Have a have the guts to make a request to Arab leaders to ababdon the city of MECCA AND HAND IT OVER TO JEWS????????????
MUSLIMS WEB SUVANAPRIYAN had written a article about Jews .In that it is said JEWS HAVE WON 108 NOBEL PRIZES AND ARABS HAVE WON 0 NOBEL PRIZES.IS IT TRUE
Swami Vivekanada "s chicako address is worth remembering.

Dr.Anburaj said...


muslims always trys to imitate Arabs in all counts. They can be called ARAB

SALVES.They strive to justifyand glorify Arab culture Arab Leaders and hence they

have stagnated in all walks of life.They need a New Quran -ameliorated Super Quran to

guide them.

Unknown said...

இவர் உண்மையான பெயர் கலையரசனா இருக்கமுடியாது உண்மையான பெயர் முகம்மதுவாதான் இருக்கும் .சொல்லுவதெல்லாம் பொய், புனித பைபிள்ல வர்ற வசனத்தை கதை என்று குறிப்பிடுகிறார்

Unknown said...

இந்த கட்டுரை ஆதாரமற்றது

Unknown said...

கொலையரசன் தான்

Unknown said...
This comment has been removed by the author.
Dr.Anburaj said...

யுதா்கள் இன்றைய மக்கா மதினா மற்றும் அரபு பகுதிகளில் பலவற்றில் பெரும்

எணணிக்கையில் வாழ்ந்து வந்தாா்கள்.முஹம்மது வின் வரலாற்றை படித்தால் இது

தொியும்.தனது தலைமையை ஏற்க மறுத்ததால் ராணுவ நடவடிக்கை மூலம் வன்முறை மூலம்

யுதா்களை அழித்தொழித்தாா் முஹம்மது.யுதா்களைக் கொன்று சோபியா என்று யுத பெண்ணை மணந்து கொண்டாா்

Unknown said...

Enna santhagam ungalakku theeranthathu

Unknown said...

Enna ariya thagaval your article is wrong

Tamil Christin said...

Good

Tamil Christin said...

இது உங்களுடைய அறியாமை

Unknown said...

Yenna oru arivu?

Unknown said...

அப்படியே கி.பி கி.பி அர்த்தம் கூறினால் நலமாயிருக்கும். கர்த்தராகிய கிறிஸ்து இயேசு உங்களுக்கு அறிவை தருவாராக.

Unknown said...

தகவல்களுக்கு நன்றி
சில செய்திகள் விடுபட்டு விட்டது
என தோன்றுகிறது

Sathish said...

எகிப்தியர்களிடம் யூதர்கள் அடிமைகளாக இல்லை என்கிறீர்கள்.... அன்றைய காலத்தில் அவர்கள் எபிரேயர்கள் (எபிரேய (ஹீப்ரூ) பாஷை பேசியதால்) என்று அழைக்கப்பட்டனர். அதனால் எகிப்திய வரலாற்று மொழி பெயர்ப்புகளில் யூதர்கள் என்று இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் தான் யூதர்கள் இப்பொழுதும் ஹீப்ரூ மொழியை தாய் மொழியாக பின்பற்றுகின்றனர்..

Sathish said...

எகிப்தியர்களிடம் யூதர்கள் அடிமைகளாக இல்லை என்கிறீர்கள்.... அன்றைய காலத்தில் அவர்கள் எபிரேயர்கள் (எபிரேய (ஹீப்ரூ) பாஷை பேசியதால்) என்று அழைக்கப்பட்டனர். அதனால் எகிப்திய வரலாற்று மொழி பெயர்ப்புகளில் யூதர்கள் என்று இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் தான் யூதர்கள் இப்பொழுதும் ஹீப்ரூ மொழியை தாய் மொழியாக பின்பற்றுகின்றனர்..

Nan pavi said...

இப்படியும் ஒரு கோமாளி எழுதி இருக்கான்

Amuthan said...

ஏராளமான தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. எளிமையாக வாசிக்க முடிகிறது.

Unknown said...

என்னுடைய தேடலை தெளவாக கொடுத்துவிட்டீர்கள் நன்றி

அ. வேல்முருகன் said...

அருமையான தேவையான வரலாற்று தகவல்கள் கசார் பேரரசை செங்கிஸ்கான் கைப்பற்றி அவனது வாரிசுகள் ஆட்சி செய்ததாக ஒரு தகவல் உள்ளது

John Britto said...

நான் பைபிள் உண்மை என்று நம்புகிறேன்
அதனால் யூத குலம் இருந்தது என்பதையும் நம்புகிறேன்

Prithiviraj kulasinghan said...

//சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம்.//
But you failed to prove any of the told history as missing.
But you yourself admit that there was a person called David who had a kingdom in that place.
//டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன.//
So now you admit that Jews lived in that area thousands of years back.

// இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை. //
Bible never says that all Jews were taken to Babylon. Please check the facts. If you disagree show where the Bible says that?
//இருப்பினும், அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். //
Bible says so.

யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள்
Any proof?
If you read the Bible, you can understand, that one God and multi God concepts were there at the same time.

However, I like to have a chat with you on this matter, if you are interested. Please let me know.

Unknown said...

நீ என்ன பைத்தியமா முதல்ல போய் டாக்டர்ர பாரு

Unknown said...

பாலஸ்தீன அரபிகள் பழைய யூதர்கள் என்றால் தொள் பொருள் ஆராய்சசி ஏன் யூதர்களுக்கு சாதகமாக இல்லை