Tuesday, May 29, 2012

சிதம்பரத்தின் துரோகம்: ஜான் மிர்தால் இந்தியா வரத் தடைஜான் மிர்தால் (Jane Myrdal)ஒரு புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர்உலகின் பல நாடுகளில் நடைபெற்று வரும் அமைதி இயக்கங்களில் ஆர்வமுடன் பங்கெடுத்து சர்வாதிகாரகொடுங்கோல் அரசுகளைக் கண்டித்தும் இயக்கம் நடத்தி வருபவர்என்பத்தி ஐந்து வயதான இந்த உலகறிந்த அரசியல் அறிஞரை இனிமேல் இந்தியாவுக்குள் நுழையக் கூடாதுஎன அறிவித்துள்ளது இந்திய அரசுமாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை வழங்கினார்’ என்று குற்றத்திற்காக இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிதம்பரம் தலைமை அமைச்சராக இருக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
யார் இந்த ஜான் மிர்தால்?

ஜான் மிர்தால் புகழ் பெற்ற ஆசிய நாடகம் (Asian Drama) என்ற பொருளாதார நூலை இயற்றிய மறைந்த குன்னர் மிர்தால் (Gunner Myrdal) அவர்களின் புதல்வர்அவரது தாய் ஸ்வீடன் நாட்டின் புகழ் பெற்ற அமைச்சராகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணிகளுக்காகவும் பாராட்டப் பெற்ற காலம் சென்ற ஏவா மிர்தால் (Eva Myrdal). கொள்கை அடிப்படையில் இருவரும் சமுக ஜனநாயக வாதிகள், மக்களின் நல்வாழ்வுக்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை உடையவர்கள்இவர்கள் இருவரது பணிக்காகவும் தனித்தனியாக உலகின் அதி உயர்ந்த பரிசாகக் கருதப்படும் நோபெல் பரிசு தரப்பட்டுள்ளதுஇத்தகைய மிகவும் உயர்ந்த சமுக லட்சியங்களுக்காக வாழ்ந்து மறைந்த இந்தக் குடும்பத்தில் பிறந்தவர் ஜான் மிர்தால்.

தமது பெற்றோரைப் போலவே தாமும் உலக மக்களின் நல்வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜான் மிர்தால்தம் வாழ்வின் பெரும் பகுதியை அதாவது சுமார் அறுபது ஆண்டுகளாக ஜான் மிர்தால் மக்கள் பணி ஆற்றி வருகிறார்உலகின் பலபகுதிகளில் நடைபெறும் அமைதி போராட்டங்களுக்குஇயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்போராடும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை எப்போதும் ஆதரித்து வருபவர்தமது நாட்டு அரசாங்கத்தையும் வெளிப்படையாகக் கண்டித்து இவர் பெரிய அளவில் இயக்கங்கள் நடத்தி உள்ளார்அடிப்படையில் இவர் ஒரு ஆய்வாளர்ஜனநாயகவாதி, எழுத்தாளர்பேச்சாளர்.

இவர் சில காலம் இந்தியாவில் தங்கியும்பல முறை பயணம் செய்தும் பிரபலமான நூல்களை எழுதியிருக்கிறார்1983 ம் ஆண்டு இவர் எழுதிய இந்தியா காத்திருக்கிறது(India Awaits) என்ற நூல் தமிழ் உள்பட பல மொழிகளில்பல பதிப்புகள் வெளிவந்துள்ளதுஇதே போலவே கடந்த ஆண்டில் இந்தியாவின் மீதொரு சிவப்பு நட்சத்திரம் அடிமைப்பட்ட மக்கள் விழித்தெழும்காலையில் நமது பார்வைகள்,பிரதிபலிப்புகள்விவாதங்கள்(Red Star Over India. Impressions, Reflections and Discussions when the Wretched of the Earth are Rising.) என்ற நூலை வெளியிட்டுள்ளார்இந்த நூல் இந்தியாவின் கல்கத்தாடில்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இவர் நேரடியாகக் கலந்து கொண்ட கூட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்மாணவர்கள்முன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
ஆங்கிலத்தில் மட்டும் தற்போது கிடைக்கும் இந்த நூல் இந்திதெலுங்குவங்காளிதமிழ்,பஞ்சாபி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் அச்சில் வெளிவர இருக்கின்றது.முன்னெப்போதும் இல்லாத அளவில் வரவேற்புப் பெற்ற இந்த நூலையும் அதன் மொழி பெயர்ப்புகளையும் கண்டு கிலி கொண்ட மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் அதன் எழுத்தாளரையே தடை செய்துவிட்டனர்இது மட்டும் அல்லாது தம்மைஅறிவாளிகளாககருதிக் கொள்ளும் மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளியுமான சிதம்பரமும் செய்து வரும் படுகொலைகள் பேராசை பிடித்த தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் செய்து வரும் சேவை என்ற விபரத்தை ஜான் மிர்தால் உலகின் பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்பல ஐரோப்பியஆசிய மொழிகளில் வெளியாகும் அவரது எழுத்துகள் சமீப காலமாக இந்திய அரசியல்வாதிகள் குறிப்பாக மன்மோகன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் (அவ)மானப் பிரச்சனையாகியுள்ளதுஎனவே,இவரது எழுத்துகளைத் தடை செய்ய ஒரு வழியாக அவரையே தடை செய்து விட்டனர்.


மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை?

மாவோயிஸ்டுக் கட்சியினரின் கருத்துகளை இந்தியப் பத்திரிகைகள்தொலைக் காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது இயக்கம் பணி செய்யும் பகுதிகளுக்குச் சென்று இயக்கத்தின் தலைவர்களையும் மக்களையும் நேரடியாகக் கண்டு பேட்டியெடுத்து வெளியிட்டவர் ஜான் மிர்தால்அவரது பேட்டிகளும் குறிப்புகளும் மத்திய இந்தியாவில் நடக்கும் அடக்குமுறை பற்றிய விபரங்களை சர்வதேசத்திற்கும் சிறப்பாக அறிமுகம் செய்ததுஇதில் இருந்து தான் உலகம் மாவோயிஸ்டுகளின் உண்மையான நிலைபாடுகளை அவர்களின் வெட்டிச் சிதைக்கப் படாத முழுமையான பேட்டிகள் மூலம் நேரான வழியில் அறிந்து கொள்ள முடிந்ததுஅப்போதிருந்தே அவரைக் குறி வைத்திருந்த இந்திய அரசு காரணம் எதுவும் கண்டுபிடிக்க முடியாததால் மாவோயிஸ்டுகளுக்கு அவர் ஆலோசனை சொன்னதாக குற்றம் சாட்டியுள்ளதுதாம் ஆலோசனை எதுவும் சொல்லவில்லை என்றும் தான் பேசிய அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதுமாணவர்கள்இளைஞர்கள்,அறிவாளிகள் பங்கேற்ற அரங்கக் கூட்டங்கள் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று மறுத்து இருக்கிறார். 


பொய்யே தொழிலாகக் கொண்ட சிதம்பரம் இந்த மட்டும் ஒரு வரியில் தம் பொய்யை நிறுத்தியது நமக்கு வியப்பு இல்லை.

இவருடைய சமீபத்திய நூல்மத்திய இந்தியப் பழங்குடிகளுக்குச் சொந்தமான நிலங்களை சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் பிடுங்கி வருவதை விளக்குகிறது.இந்தியாவின் போலீசையும்ராணுவத்தையும் கொண்டு பழங்குடி மக்களை வெளியேற்றி அவர்களது நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதை இந்த நூல் தமது கள ஆய்வு விபரங்களுடன் வெளியிட்டுள்ளதுமாவோயிஸ்டுகளுக்கு எதிராக போர் நடத்துகிறோம் என்று சிதம்பரம் சொல்வது உண்மையில் பழங்குடிகளின் நிலத்திற்கான போர் என்ற விபரங்களை மீண்டும் ஒருமுறை இந்த நூல் நிறுவியுள்ளதுகுறிப்பாக மாணவர்கள்அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மத்தியில் இந்த நூல் பிரபலம் அடைந்து வருவதைக் கண்டு சகிக்காத சிதம்பரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.இதுவரை இந்த நூலை இந்திய அரசு தடை செய்யவில்லைஆயினும்அது குறித்துப் பேசவோ மீண்டும் ஆய்வுக்கான விபரங்கள் சேகரிக்கவோ ஜான் மிர்தால் இந்தியாவுக்குள் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் தடையை விதித்துள்ளது.ஸ்வீடனும் இந்தியாவும்

ஸ்வீடன் நாட்டு பீரங்கிக் கம்பெனியான போபார்ஸ் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் சிதம்பரத்தின் எஜமான் ராஜிவ் காந்தி லஞ்சம் பெற்றதை அறிந்த அளவுக்கு ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளை அறியவில்லைஇது துரதிர்ஷ்டமே.

ஸ்வீடன் நாட்டின் அறிவாளிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மிகப்பெரும் பங்கு ஆற்றியுள்ளனர்ஐரோப்பிய மக்களுக்கு இந்தியாஇலங்கைமலேசியா போன்ற அடிமைப்பட்ட நாடுகளில் வெள்ளையின அரசாங்கங்கள் நடத்தும் படுகொலைகளையும் கொடுங்கோல் ஆட்சியையும் வெளிக் கொண்டுவந்ததில் இவர்களது பணி மிகவும் முக்கியமானதுஇந்த வகையில் ஜான் மிர்தால் அவர்களின் குடும்பம் அளப்பறிய பணியாற்றியிருக்கிறது.

அடிப்படைப் பொருளாதாரக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள்அரசியல் ஊழியர்கள் தாம் அவசியம் படித்துத் தேற வேண்டிய அடிப்படை நூல்கள்ஆய்வுகள் பலவும் ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளால் வெளியிடப் பட்டுள்ளது என்றால் அது மிகையல்லஅதிலும் குறிப்பாகஇன்றளவும் இந்திய அரசு பொருளாதார ரீதியாக விவசாயிகளைப் பிரித்து ஆராயவும்அதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தும் மூல விபரங்கள் குன்னர் மிர்தால் எழுதிய ஆசிய நாடகம்என்ற ஆய்வு நூலில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளதுஅவர் வழங்கிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தான் இந்திய அரசால் விவசாயிகள் தரம் பிரிக்கப்பட்டு சிறிய (small)நடுத்தர (medium), பெரிய (Big)விவசாயிகள்நிலச்சுவான்தார்கள்(Landlords)என்று வகைப் படுத்தப் பட்டுள்ளனர்.இதனையே அரசின் திட்டங்கள் அடிப்படியாகக் கொண்டுள்ளன.

இவரைப்போலவேவெள்ளையர் ஆட்சியின் பொழுதுஇந்தியாவின் வறுமையின் காரணம் என்ன?, நாடு எப்படி வெள்ளையர்களால் கொள்ளையிடப் படுகிறது என்பதை ஒரு நீண்ட ஆய்வின் அடிப்படையில் மிகப் பெரும் புள்ளி விபரங்களுடன்இன்றைய இந்தியா (India Today)” என்ற ஒரு மிகப் பெரிய நூல் வெளியிட்ட ரஜனி பாமி தத் (Rajani Palme Dutt) என்ற அறிஞரும் ஸ்வீடன் நாட்டு வம்சாவழியில் வந்தவரே.சிதம்பரமும் ஜான் மிர்தாலும்

இந்தியாவை ஒட்டச் சுரண்டும் ஐரோப்பியக் கம்பெனிகள்அமெரிக்கக் கம்பெனிகளின் அதிகாரிகள்சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் ஆட்டக் காரர்கள்அழகிப் போட்டி நடத்தும் நிறுவனங்கள்மூட நம்பிக்கையைப் பரப்பும் மதவெறிப் பிரச்சாரகர்கள்ஆபாசப் படங்களில் நடிக்கும் நடிகர்கள்நடிகைகள் இந்தியாவில் பயணம் செய்யவும்கூட்டங்கள் நடத்தவும்தொழில் நடத்தவும் சிதம்பரம் தலைமையிலான உள்துறை அமைச்சகம் சிறப்புச் செய்து அவர்களுக்குப் பாதுகாப்புத் தருகிறதுஏன்உலகறிந்த கொலைகாரன் ராஜ பக்சேவும் அவன் சகோதரர்களும் இந்தியாவுக்கு வரவும் அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கவும் இதே சிதம்பரம் தயங்கியதில்லைஇப்படிக் கொள்ளையர்கள்,கொலைகாரகள்சரச சல்லாபத் தொழில் செய்வோரை வரவேற்று அவர்களுக்கு ஜமுக்காளம் விரித்துஉடனிருந்து பாதுகாப்பும் உபச்சாரமும் செய்யும் சிதம்பரத்தின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவாளியை இந்தியாவுக்குள் வரக் கூடாது என்ற அறிவிப்புச் செய்துள்ளது நமக்கு வியப்பைத்தரவில்லை.

இந்தியப் பாரம்பரியம் பற்றி அடிக்கடி பேசும் சிதம்பரத்தின் முன்னோர்கள் கந்து வட்டிக்குக் கடன் கொடுத்து வந்த பரம்பரை என்பது தமிழர்கள் அறிந்த விஷயம்.தமிழரான சிதம்பரத்தின் முன்னோர்கள் (நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்இந்தியா,மலேசியாபர்மா போன்ற உலகின் பல நாடுகளில் வெள்ளையர்களின் துணையோடு வட்டிக் கடைகள் நடத்தச் சென்ற போது ஐரோப்பியரான ஜான் மிர்தாலின் குடும்பம் உலகெங்கும் உள்ள அடிமைப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்ததுபோராடியதுஅது இன்றும் தொடர்கிறதுசிதம்பரம் கொள்ளைக்காரக் கம்பெனிகளுக்கு எடுபிடியாக,துணைவனாக இருந்து நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார்மிர்தால் போராடும் மக்களுக்கு துணையாக இருந்து அவர்களது நியாயத்தை பேசுகிறார்எழுதுகிறார்.

சிதம்பரத்தின் முன்னோர்கள் வெள்ளையர்களுக்கு சேவகம் செய்த காலத்தில் அதற்கு எதிராக சர்வதேச மக்களுக்காகக் குரல் கொடுத்த ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளின் மரபில் வந்தவர் ஜான் மிர்தால்சிதம்பரம் தன் முன்னோர்கள் சென்ற அதே துரோகப் பாதையில் செல்கிறார்மிர்தால் மக்களுக்காக பாடுபடுகிறார்.

எப்படி வேசமிட்டாலும் சிதம்பரம் போன்றவர்கள் இனம் இனத்தோடே சேரும் என்ற விதியை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.


தடையை விலக்குக

கிடைக்கும் இடங்களில் எல்லாம் தம்மை ஒரு படிப்பாளியாக அறிவாளியாகக் காட்டிக் கொள்ளும் சிதம்பரம் தாம் உண்மையில் ஒரு ஒரு பொய்யர் மட்டும் அல்ல அறிவாளிகளின் எதிரி என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியுள்ளார்.அறிவாளிகளைஆய்வாளர்களை இந்தியாவுக்குள் நுழையவும்ஆய்வு செய்யவும்,பேசவும்எழுதவும் அனுமதியில்லை என்று அறிவிப்புச் செய்திருக்கும் மன்மோகன் சிங் சிதம்பரத்தின் கூட்டணி ஒரு நேர்மையில்லாத ஒரு அயோக்கியர்களின் கூட்டணி என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்இதை இந்திய மாணவர்கள் அறிவாளிகள் அனுமதிக்க முடியாதுகூடவும் கூடாதுஇந்திய அறிவாளிகள்,மாணவர்கள்இளைஞர்கள் பலவாறாக ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளுக்கு கடன் பட்டுள்ளார்கள்இந்த அநீதிக்கும் சிதம்பரத்தின் துரோகத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது தமிழ் நாட்டு மாணவர்கள்இளைஞர்கள்அறிவாளிகளது கடமை

இந்திய அரசின் இந்த தடையை கண்டிக்க வேண்டியது அனைத்து சனநாயக சக்திகளின் கடமையும்கூட.

ஜான் மிர்தால் தமது வாழ்வின் நீண்ட பயணம் பற்றிய பேட்டி இங்கே:

Saturday, May 26, 2012

ஒரு தமிழ் மன்னனின், "சிங்கள-பௌத்த" நிலப்பிரபுத்துவ சமுதாயம்


"சிங்கள- பௌத்த பேரினவாதம்" என்று எல்லோரும் சொல்கிறார்களே, அது யாரால் உருவாக்கப் பட்டது என்று தெரிந்து வைத்திருக்கிறார்களா? சிங்கள-பௌத்த மேலாதிக்கம் என்ற சமுதாயக் கட்டமைப்பை உருவாக்கியவன் ஒரு தமிழன்! இந்த உண்மையை, சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ் இனவாதிகளும் அறிந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.


18ம் நூற்றாண்டில், கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் என்ற தமிழ் மன்னன், இலங்கையின் நிலப்பிரபுத்துவ கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைத்தான். ஒவ்வொரு ஊரிலும் உள்ள பௌத்த விகாரையின் கீழ், நிலங்களை பகிர்ந்தளித்தான். இதனால், பௌத்த சங்கங்களின் மடாதிபதிகள், நிலவுடமையாளர்களாக மாறினார்கள். சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்னர் உருவான புதிய நிலவுடமையாளர்களின் சமூகம், இன்றைக்கும் இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உருப்பெற்றுள்ளது. இவர்களின் பொருளாதார அடித்தளத்தை தகர்ப்பதற்கான சமூகப் புரட்சி ஒன்று அவசியமாகின்றது. இலங்கையில் ஒரு சமூகப் புரட்சியை முன்னெடுக்காமல், "சிங்கள-பௌத்த பேரினவாத மேலாதிக்கம்" பற்றி ஐ.நா. சபை வரையில் சென்று முறையிட்டாலும், எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.


இலங்கை இன்றைக்கும் ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரைக் காலனித்துவ நாடாகும். அங்கே இன்னமும் நிலப்பிரபுத்துவம் முற்றாக ஒழிக்கப் படவில்லை. மாறாக, முன்னை நாள் நிலப்பிரபுக்கள், உள்நாட்டு முதலாளிகளாக, அல்லது அரசியல்வாதிகளாக தம்மை மாற்றிக் கொண்டுள்ளனர். பெரும்பாலான சிங்கள - தமிழ் அரசியல் தலைவர்கள், நிலவுடமைக் குடும்பங்களில் இருந்து, அல்லது "வெள்ளாளர்கள்" என்ற உயர்சாதியில் இருந்து வந்தவர்கள் என்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. 


அதே போன்று, பௌத்த மதகுருக்கள் ஒரு காலத்தில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தினார்கள். இரு தசாப்தங்களுக்கு முன்னர், "ஜாதிக ஹெல உறுமய" என்ற கட்சியின் கீழ் அணி சேர்ந்தார்கள். "என்ன இது? புத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடலாமா?" என்று ஆச்சரியப் படுபவர்கள், ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் சிங்களப் பகுதிகளில், ஏராளமான நிலங்கள் புத்த விகாரைகளுக்கு சொந்தமாக இருந்துள்ளன. பௌத்த மடாதிபதிகள் நிலப்பிரபுக்களாகவும் இருந்துள்ளனர். இன்றைய முதலாளித்துவ உலகில், தமது இருப்பை நிச்சயப் படுத்திக் கொள்ளவும், சந்தர்ப்பம் கிடைத்தால் அதிகாரத்தை கைப்பற்றவும் விரும்புகின்றனர்.


திபெத் நாட்டிலும், இது போன்றே பௌத்த மடாதிபதிகள் நிலப்பிரபுக்களாக அதிகாரம் செலுத்தினார்கள். சீனக் கம்யூனிஸ்டுகளின் கலாச்சாரப் புரட்சியின் பின்னர் தான், திபெத்தில் பௌத்த நிலப்பிரப்புகளின் ஆதிக்கம் முற்றாக மறைந்தது. இந்த உண்மையை உணராத, மேற்கத்திய பிரச்சாரங்களால் மதி மயங்கி தலாய் லாமாக்களை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகள், தாம் அறியாமலே சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் இருப்பையும் நியாயப் படுத்துகின்றனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்ற போக்கைப் பார்க்கலாம். அங்கு ஒரு காலத்தில் பெரும் நிலவுடமையாளர்களாக இருந்த கிறிஸ்தவ மதகுருக்கள், இன்று கிறிஸ்தவ கட்சிகள், பாசிச இயக்கங்கள் மூலம் தமது இழந்த அதிகாரத்தை மீளப் பெற விரும்புகின்றனர். ஹெல உறுமய, ஆர்.எஸ்.எஸ்., முஸ்லிம் சகோதரத்துவம் ஆகிய மதவாத பாசிசக் கட்சிகளின் சித்தாந்தங்கள் ஒன்றாகவே இருக்கின்றன. "இழந்த தாயகம், பண்பாட்டுப் பெருமைகள், அந்நிய இனத்தவரின் ஆக்கிரமிப்பு" , இது போன்ற கதையாடல்களும் பொதுவாகவே உள்ளன.


சுமார் 500 ஆண்டுகள், இலங்கை ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது. அதனால், தனித்துவமான சமூக, சாதிய, பொருளாதார மாற்றங்களுக்குட்பட்டது. இந்தியாவில் உள்ள, அல்லது தமிழ் நாட்டில் இருப்பது மாதிரியான, அதே மாதிரியான சாதியமைப்பு படிமுறை இலங்கையில் இல்லாததற்கான காரணமும் அது தான். ஐரோப்பியர்களுடன் ஒத்துழைத்த, அவர்களுக்கு காட்டிக் கொடுத்து சலுகைகள் பெற்ற, சாதிகள் தான் இன்று மேன் நிலையில் உள்ளன. சில சாதிகள் ஐரோப்பியராலேயே புதிதாக உருவாக்கப் பட்டன. 


முதலாவது ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கேயர்கள் வந்த காலத்தில், இலங்கையில் மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன. ஆனால், இன்று பலர் நினைப்பதற்கு மாறாக, அந்த ராஜ்ஜியங்கள் "சிங்கள ஸ்ரீலங்கா, தமிழ் ஈழம்" என்று பிரிந்திருக்கவில்லை. (அவ்வாறான மொழிப்பிரிவினை ஆங்கிலேயர் காலத்தில் தான் தோன்றியது.) விகிதாசாரம் மாறுபட்ட போதிலும், மூன்று ராஜ்ஜியங்களிலும் சிங்கள, தமிழ் மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்ந்தனர். குறிப்பாக, தமிழ் பேசுவோரை பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம், நீண்ட நெடுங் காலமாக கண்டி ராஜ்ஜியத்தின் பகுதியாக இருந்தது.


அன்றைய இலங்கையில், மொழியுணர்வை விட, சாதி உணர்வு பிரதானமாகக் கருதப் பட்டது. (சிங்கள மொழியில் இன்றைக்கும்  இனம் என்பதை  ஜாதி  என்று அழைக்கின்றனர்.) மன்னர் பரம்பரைகள் கூட ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தான். இந்தியாவில் உள்ளதைப் போல, இந்து மத வர்ணாச்சிரம அடிப்படையில், சத்திரிய சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே மன்னர்களாக சிம்மாசனத்தில் அமர முடியும். தமிழ் ராஜ்ஜியமாக இருந்தாலும், சிங்கள ராஜ்ஜியமாக இருந்தாலும் அது பொது விதியாக இருந்தது. உண்மையில், இலங்கையின் "ஆண்ட பரம்பரையை" சேர்ந்தவர்கள் யாரும் இன்று உயிரோடு இல்லை. அனைவரும் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் அழித்தொழிக்கப் பட்டு விட்டனர்.


ஏற்கனவே , கரையோரமாக இருந்த, யாழ்ப்பாண ராஜ்ஜியத்தையும், கோட்டே ராஜ்ஜியத்தையும் போர்த்துக்கேயர்கள் அழித்திருந்தார்கள். மலைகளை இயற்கையான பாதுகாப்பு அரண்களாக கொண்டிருந்த, கண்டி ராஜ்ஜியத்தை அவர்களால் அசைக்க முடியவில்லை. கோட்டே ராசதானியை ஆண்ட மன்னன், கிறிஸ்தவனாக மாறி, போர்த்துக்கேயரின் கைப்பொம்மையாக ஆட்சி செய்தான். இருப்பினும், ஒரு "கிறிஸ்தவ சகோதர மன்னன்" என்பதற்காக அவனை விட்டு வைக்கவில்லை. யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன், இதற்கு நேரெதிர் கொள்கையை பின்பற்றினான். ஒரு இந்து மத அடிப்படைவாதி போன்று நடந்து கொண்டான். மன்னாரில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தான்.


அதைக் காரணமாக காட்டியே, போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாண ராஜ்ஜியம் மீது படையெடுத்து ஆக்கிரமித்தார்கள். போர்த்துக்கேயர்களும் பதிலுக்கு பல யாழ்ப்பாண மக்களை இனப்படுகொலை செய்தனர். சங்கிலி மன்னனின் குடும்ப உறுப்பினர்களை, கத்தோலிக்கர்களாக கட்டாய மத மாற்றம் செய்து, கோவா (இந்தியா) வுக்கு நாடுகடத்தினார்கள். போர்த்துகேய ஆட்சிக் காலத்தில், யாழ் குடாநாட்டில் வாழ்ந்த 90 சதவீத தமிழர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்தனர். போர்த்துக்கேயர்கள் அதனோடு திருப்தியடையவில்லை. இலங்கை முழுவதும், (கண்டி ராஜ்ஜியம் தவிர) ஆயிரக் கணக்கான சைவக் கோயில்களையும், பௌத்த ஆலயங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். அந்தக் கற்களை வைத்து தேவாலயங்களை கட்டினார்கள்.


இந்த சரித்திரப் பின்புலத்துடன், கண்டி ராஜ்ஜியத்தின் அன்றைய நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். போர்த்துகேய காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உயிராபத்தை எதிர்நோக்கிய புத்தபிக்குகள் கண்டி ராஜ்ஜிய பரிபாலன எல்லைக்குள் தப்பியோடி புகலிடம் கோரினார்கள். கண்டி ராஜ்ஜியத்திலும் புத்த மதம் பலவீனமடைந்திருந்தது. இதற்கிடையே கண்டி மன்னனின் பரம்பரையில் தகுதியான வாரிசு கிடைக்கவிலை. 


அதனால், தமிழகத்தில், மதுரையை ஆண்ட நாயக்கர் பரம்பரையில் இருந்து ஒருவரை வரவழைத்தார்கள். அவன் தான், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் என்ற பெயரில், கண்டி அரசனாக முடி சூட்டிக் கொண்டான். தென்னிந்தியாவை ஆண்ட விஜய நகரப் பேரரசிற்குட்பட்ட சிற்றரசர்களாக, நாயக்கர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தனர். இந்து வர்ணாச்சிரம தர்மப் படி, சத்திரியர்கள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்பதை இங்கே நினைவு படுத்த விரும்புகின்றேன். (இலங்கையின் தேரவாத பௌத்தம், பிராமண மேலாண்மையை ஏற்றுக் கொண்ட மதமாகும்.)


கீர்த்தி ஸ்ரீ, மன்னனான முடி சூட்டிக் கொண்டவுடன் செய்த முதல் வேலை, ராஜ்ஜியத்தின் சமுதாயக் கட்டமைப்பை அடியோடு மாற்றியது தான். அன்றைய காலங்களில், பிற உலக நாடுகளில் இருந்ததைப் போன்று, இலங்கையிலும் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு நிலவியது. மன்னன் மிகப்பெரிய நிலப்பிரபுவாகவும், அவனுக்கு கீழே சிற்றரசர்கள், சிறிய நிலப்பிரபுக்களாகவும் விவசாயப் பொருளாதாரத்தின் நிர்வாக மையமாக விளங்கினார்கள். பௌத்த மதகுருக்கள், மடாலயங்களிலும், விகாரைகளையும் காலத்தைக் கழித்தார்கள். 


ஆனால், ஐரோப்பிய காலனியாதிக்கம் அவர்களது அரசியல் நிலையை அடியோடு மாற்றியது. கரையோர மாகாணங்களை ஆண்ட போர்த்துக்கேயர்கள், தீவிரமான கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளாக இருந்தனர். இலங்கைத் தீவு முழுவதும், பௌத்த, சைவ மதங்களை வேரோடு அழித்து விடும் வெறியுடன் செயற்பட்டார்கள். இதன் எதிர் விளைவாக, கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னனுக்கும், பௌத்த மடாதிபதிகளுக்கும் இடையில் அரசியல் நெருக்கம் ஏற்பட்டது. இன்றைக்கு இலங்கை ஆளும் சிங்கள ஆட்சியாளர்கள் போன்று, கண்டிய அரசனும் தன்னை ஒரு பௌத்த மதக் காவலனாக நிலை நிறுத்திக் கொண்டான். நமது கால அரசியல் மொழியில் கூறினால், "இலங்கையின் முதலாவது சிங்கள-பௌத்த பேரினவாத ஆட்சியாளன், "ஒரு தமிழனான" கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன்!"


கீர்த்தி ஸ்ரீ மன்னன், கண்டி ராஜ்யத்தின் ஆளுகைக்குட்பட்ட நிலங்களை மறு சீரமைத்தான். நிலப்பிரபுக்களிடமிருந்த நிலங்களை பறித்தெடுத்து, அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை பௌத்த விகாரைகளிடம் ஒப்படைத்தான். அதனால், ஒவ்வொரு ஊரிலும், பௌத்த மடாலயங்கள், நிலப்பிரபுத்துவ ஸ்தாபனங்களாக மாறின. பௌத்த மடாலயத்தின் தலைமை மதகுருக்கள், புதிய நிலப்பிரபுவாக அரசியல்-பொருளாதார அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். 


நிலப்பிரபுவாக மாறிய தலைமை மதகுரு, "விகாராதிபதி" என்று அழைக்கப்பட்டார். இதனால் அதிகாரமிழந்த, பழைய நிலப்பிரபுக்கள் பொறாமை கொண்டனர். ஆயினும், காலப்போக்கில் அவர்களும் பௌத்த துறவிகள் வேடத்தில் மடாலயங்களுக்கு ஊடுருவி, அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டனர். இலங்கையில் இன்று ஆதிக்க சாதியாகவிருக்கும் வெள்ளாளர்கள் (சிங்களத்தில்: கொவிகம), அவ்வாறு தான் பௌத்த சங்கங்களின் தலைமையை கைப்பற்றினார்கள். இன்றைக்கு, பௌத்த சங்கங்களின் தலைமை மதகுரு வெள்ளாள சாதியை சேர்ந்திருக்க வேண்டுமென்பது, எழுதாத விதியாகும். வட இலங்கையிலும், சைவக் கோயில்களை நிர்வகிக்கும் ஆலய பரிபாலன சபை, வெள்ளாளரின் ஆதிக்கத்தில் இருக்கின்றது.


கோயில் திருவிழாக்களில் சாதிகளின் பங்களிப்பு என்பது, இலங்கையின் சிங்களப் பகுதிகளிலும், தமிழ்ப் பகுதிகளிலும், இன்றைக்கும் நிலவும் கலாச்சார ஒற்றுமை ஆகும். யாழ்ப்பாணத்தில் சைவக் கோயில்கள் வெள்ளாளரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும், ஏழாம் திருவிழா, பத்தாம் திருவிழா என்று, பிற சாதிகளுக்காக ஒதுக்கப் பட்ட திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இலங்கையின் பிரபல பௌத்த விகாரையான, கண்டி தலதா மாளிகையிலும், இது போன்று சாதிக்கொரு திருவிழா கொண்டாடுவது கடைப் பிடிக்கப் படுகின்றது. திருவிழாக்கள் மட்டுமல்ல, கோயில்களில் பணிவிடைகள் செய்வதும் அந்தந்த சாதியை சேர்ந்தவர்களின் கடமையாகும். சிங்களத்தில் அதனை "நில காரியம்" என்று கூறுகின்றனர். இடைநிலைச் சாதிகளை சேர்ந்தவர்கள் தான், நில காரியம் என்ற கோயில் பணிவிடைகள் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். சைவக் கோயில்களில் கிரியைகள் செய்யும் இசை வேளாளர்கள், பண்டாரங்கள் போன்ற சாதிகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


அன்றைய கண்டிய ராஜ்யத்தில் மன்னனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள், "அதிகார்கள்" என்ற பிரபுக்கள். அரசவையில் மந்திரிகளாகவும், அதே நேரம் பெரும் நிலவுடமையாளர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த படியாக, அன்றைய ஆதிக்க சாதியாக இருந்தவர்கள், ராதலர்கள். (பிற்காலத்தில் இந்த ராதல சாதியினர், வெள்ளாளரின் உட்பிரிவாக மாறி விட்டனர்.) கீர்த்தி ஸ்ரீ கொண்டுவந்த சீர்திருத்தம், அதிகார்களினது பொருளாதார பலத்தைக் குறைத்தது. சில அதிகார்கள், மன்னன் கீர்த்தி ஸ்ரீ யை கொலை செய்ய சூழ்ச்சி செய்தனர். மல்வத்த விகாரைக்கு விஜயம் செய்யவிருந்த மன்னனை, ஈட்டிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்த மரணப் பொறி ஒன்றுக்குள் தள்ளி விட திட்டம் தீட்டினார்கள். அதற்கு மல்வத்த விகாரையை சேர்ந்த பிக்குகளும் உடந்தையாக இருந்தனர். ஆயினும், அந்த அரசவை சூழ்ச்சிகளிலும், "சிங்கள-தமிழ் வேற்றுமை" துளியும் தலைகாட்டியிருக்கவில்லை.


(தொடரும்)

Monday, May 21, 2012

ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்!

உலகில் இரண்டு இனங்கள், முற்றாக அழித்தொழிக்கப் பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவுக்கு கீழே உள்ள தாஸ்மானியா தீவில் வாழ்ந்த பழங்குடி இனம், ஆங்கிலேயரால் ஒருவர் விடாமல் இனவழிப்பு செய்யப் பட்டது. இது நடந்தது 19 ம் நூற்றாண்டில். அது ஒரு கருப்பினம். ஆனால், வெள்ளைத் தோல், நீல நிறக் கண்களைக் கொண்ட, வெள்ளையினம் ஒன்றும் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் இனவழிப்பு செய்யப் பட்டது. யாருக்காவது தெரியுமா? உங்களுக்கு இன்னுமொரு அதிசயம் காத்திருக்கின்றது. அந்த வெள்ளையினம் ஆபிரிக்காவில் வாழ்ந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் பேசிய மொழி திராவிட குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது.

காலனிய காலகட்ட வரலாற்றின் தொடக்கத்தில் நடந்த சம்பவம் இது. 16 ம் நூற்றாண்டில், ஆபிரிக்க கண்டத்திற்கு அருகில் உள்ள தீவொன்றில் வாழ்ந்த தனித்துவமான இனம் ஒன்றும் முற்றாக அழிக்கப் பட்டது. இன்னும் சொல்லப் போனால், அதுவே "ஐரோப்பியரின் முதலாவது காலனியப் படையெடுப்பும், முதலாவது காலனிய இனப்படுகொலையும் ஆகும். அங்கிருந்து தான், அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங்களை காலனித்துவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வரும் பயணம் தொடங்கியது. "கிரான் கனாரியா" என்று அழைக்கப்படும் அந்த தீவுக் கூட்டம், இன்று ஐரோப்பிய உல்லாசப் பயணிகளின் மனத்தைக் கவர்ந்த உல்லாச விடுதிகளால் நிரம்பியுள்ளது. அங்கு உல்லாசமாக பொழுதைக் களிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அந்த மண்ணில் நடந்த இனவழிப்பு பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Tenerife, Fuerto Ventura , இந்தப் பெயர்களை அறிந்திராத இளந் தலைமுறையை சேர்ந்த ஐரோப்பியர்கள் மிகக் குறைவு. வெதுவெதுப்பான காலநிலை, வெள்ளை மணல் கடற்கரை, இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் தீவுகள். காதல் ஜோடிகள், இளம் தம்பதிகள் தேனிலவை இன்பமாக கழிப்பதற்கு அங்கே தான் அடிக்கடி செல்வார்கள். இன்று அந்த தீவுகள் ஸ்பெயினுக்கு சொந்தமானவை. ஆனால், ஸ்பெயின் பெருநிலப் பரப்பில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன! அதே நேரம், ஆப்பிரிக்க கண்டத்திற்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன. மொரோக்கோ கரையில் இருந்து, வெறும் நூறு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே! அதன் பூகோள அமைவிடம் காரணமாக, ஸ்பெயின் ஆபிரிக்காவுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று, ஆப்பிரிக்க கூட்டமைப்பு கோரி வருகின்றது. இன்று அந்த தீவின் சனத்தொகையில் பெரும் பகுதி, ஸ்பெயினில் இருந்து வந்து குடியேறியவர்களின் வம்சாவளியினர் ஆவர். ஸ்பெயின் தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்திரா விட்டால், அதுவும் தென் ஆப்பிரிக்கா போன்று ஒரு "வெள்ளையர் குடியேறிய நாடாக" கணிக்கப் பட்டிருக்கும்.

15 ம் நூற்றாண்டில், அமெரிக்கக் கண்டத்தை கண்டுபிடிக்க கிளம்பிய கொலம்பஸின் கப்பல்கள், முதலில் கிரான் கனாரியா தீவுகளுக்கு சென்று தான் பயணத்தை தொடர்ந்தன. அந்த தீவுகளுக்கு அருகில் ஓடும் கடல் நீரோட்டம், தென் அமெரிக்கா வரையில் கொண்டு சென்று விடும். அதற்கு முன்னரே, போர்த்துகீசிய அல்லது ஸ்பானிய மாலுமிகள், அந்த தீவை கண்டு பிடித்திருந்தனர். அப்போதிருந்தே, ஸ்பானிய குடியேற்றவாசிகள் வந்து சேர ஆரம்பித்து விட்டனர். அவர்களின் வருகையின் போது, அந்த தீவுகள் வெறுமையாக இருக்கவில்லை. அங்கு "குவாஞ்சே" (Guanche) என்றழைக்கப்படும் இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். அடுத்து வந்த நூறாண்டுகள், பூர்வீக மக்களும், ஸ்பானிய குடியேற்றவாசிகளும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். ஆயுதபலம் மிக்க ஐரோப்பியர்கள், கண்ணில் பட்ட குவாஞ்சே மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். நூறாண்டுகளாக தொடர்ந்த இனவழிப்புப் போரின் இறுதியில், மோசமான தொற்று நோய் ஒன்று பரவியது. வெட்ட வெளியில் கொன்று போடப்பட்ட சடலங்களில் இருந்தே, அந்த நோய்கிருமிகள் தோன்றி இருக்க வேண்டும். 16 ம் நூற்றாண்டின் இறுதியில், அந்த தீவுகளில் ஒருவர் கூட மிஞ்சாமல், பூர்வகுடி மக்கள் முற்றாக துடைத்தழிக்கப் பட்டனர்.

கிரான் கனாரியாவின் பூர்வ குடிகள் பற்றிய தகவல்கள், மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. அதனால் இன்றளவும், அவர்களை "மர்மமான பழங்குடி இனம்" என்றே குறிப்பிடுகின்றனர். பெருமளவு தகவல்கள், ஸ்பானிய குடியேற்றவாசிகளிடம் இருந்தே கிடைக்கப் பெற்றாலும், ரோமர் காலத்தில் மொரிட்டானியாவை (அல்லது மொரோக்கோ) ஆட்சி செய்த மன்னன் ஜூபா, சில குறிப்புகளை எழுதியுள்ளான். அதிலும், அந்த தீவுகளின் அமைவிடம் பற்றியே குறிப்பிடப் படுகின்றது. பூர்வகுடிகளான குவாஞ்சே மக்கள், முன்பு ஆப்பிரிக்க பெருநிலத்தில் வாழ்ந்து வந்ததாகவும், ஜூபா மன்னனால் சிறைப் படுத்தப் பட்டு நாடு கடத்தப் பட்டதாகவும் சிலர் நினைக்கின்றனர். முன்பு வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பூர்வகுடிகள், ரோம சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக ஒடுக்கப் பட்டு, கிரான் கனாரியா தீவுகளுக்கு தப்பியோடி, அவற்றை தமது புகலிடமாக்கி இருப்பார்கள், என்று இன்னொரு ஆய்வு தெரிவிக்கின்றது. எது எப்படி இருப்பினும், கிரான் கனாரியாவின் பூர்வீக மக்களுக்கும், ஆபிரிக்காவுக்கும் சம்பந்தம் உள்ளது. அதனை உறுதிப் படுத்தும் தரவுகளை பின்னர் பார்ப்போம்.

கிரான் கனாரியா பூர்வகுடி மக்கள், கற்கால மனிதர்களைப் போல குகைகளில் வாழ்ந்தார்கள். ஆனால், சில தீவுகளில் கற்களைக் கொண்டு வீடுகள் கட்டப் பட்டிருந்தன. அனேகமாக, எல்லா தீவுகளிலும் பரவலாக காணப்பட்ட விசாலமான குகைகள், வீடு கட்டி வாழ வேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்க மாட்டாது. அந்த மக்கள் குகைகளில் வாழ்ந்தாலும், ஆட்டுத் தோல் உடுத்தினாலும், "நாகரீகம் அடைந்திருக்கவில்லை" என்று கூற முடியாது. குடிமக்களை ஆட்சி செய்ய அரசர்களும், சட்டவிதிகளும் இருந்துள்ளன. அரசர்களும் குகைகளில் தான் வாழ்ந்தனர். பொதுவுடமைப் பொருளாதாரம் நிலவியது. குவாஞ்சே மக்கள், சிறந்த போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். சுமார் பத்தடி நீளமான தடியொன்றை ஊன்றிய படி, மலைப் பாறைகளை தாண்டி பாய்வதில் வல்லவர்கள். குவாஞ்சே மக்கள், தமது இறந்த உறவினர்களின் உடல்களை, எகிப்திய 'மம்மி' போன்று பாதுகாத்து வைத்திருக்கும் மருத்துவக் கலை அறிந்திருந்தனர். பிற்காலத்தில் குடியேறிய ஸ்பானிஷ்காரர்கள், ஏராளமான மம்மிகளை அழித்து விட்டனர். இருந்தாலும், இன்றைக்கும் சில அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. எகிப்தில் இருப்பதைப் போன்று, கனாரி தீவுகளிலும் "பிரமிட்" கட்டிடங்கள் காணப்படுகின்றன. இன்றைக்கும் அழியாமல் பேணிப் பாதுகாக்கப் படும், பிரமிட்களை கட்டியவர் யார் என்ற சர்ச்சை நீடிக்கின்றது.
குவாஞ்சே மக்கள், பல தீவுகளில் தனித்து வாழ்ந்தாலும், ஒரே மொழி பேசினார்கள். அவர்கள் பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது என்பது ஒரு சிறப்பம்சம்! கிட்டத்தட்ட அதே மாதிரியான மொழி பேசும் மக்கள் இன்றைக்கும் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். எழுத்து கூட ஒற்றுமையைக் கொண்டுள்ளது. வட ஆப்பிரிக்காவில் வாழும், துவாரக் இன மக்கள், பெர்பர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர். இவர்களது அமாசிக் மொழியும், எழுத்தும் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளன. (துவாரக் இனமக்களைப் பற்றி அறிவதற்கு, நான் முன்பு எழுதிய சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை என்ற கட்டுரையை வாசிக்கவும்.) இன்றைய மொரோக்கோ, அல்ஜீரியா, லிபியாவில் வாழும் "பெர்பர்கள்" என்ற இனம், ஒடுக்கப்படும் சிறுபான்மையினமாக உள்ளது. "பெர்பர்கள்" என்ற சொல், அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் சூட்டிய இழிவுப் பெயராகும். இன்று, அவர்கள் பேசும் மொழியின் பேரில், "அமாசிக்" இனம் என்று அழைக்கப் படுகின்றனர். அமாசிக் மொழிக்கும், அந்த பிராந்தியத்தில் பேசப்படும் அரபி மொழிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரு சொல் கூட ஒற்றுமையில்லை! எழுத்து வடிவத்தில் கூட, ஆங்கிலமும், சீன மொழியும் போன்று, மிகப் பெரிய வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. அதே நேரம், அமாசிக் மொழிக்கும், கிரான் கனாரியா பூர்வகுடிகளின் மொழிக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது.

மொழியியல் அறிஞர்கள் இன்னொன்றையும் குறிப்பிடுகின்றார்கள். கனாரி தீவுகளில் பேசப்பட்ட மொழிக்கும், திராவிட மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான ஒற்றுமையை சுட்டிக்காட்டுகின்றனர். பல சொற்களுக்கு இடையில் ஒற்றுமை இருப்பது, ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. குவாஞ்சே மக்கள் பேசிய மொழியின் சரியான உச்சரிப்பு யாருக்கும் தெரியாது. அநேகமான சொற்கள், பிற்காலத்தில் குடியேறிய ஸ்பானிஷ்காரரால், அவர்களின் உச்சரிப்புக்கேற்ப தொகுக்கப் பட்டன. பொதுவாகவே, ஐரோப்பிய மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையிலான வேறுபாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல சொற்களின் ஒற்றுமை மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கின்றன. Ere (குவாஞ்சே) - ஏரி(தமிழ்), Atidamane (அரசி) - ஆதி அம்மன், Xerco (காலணி) - செருப்பு, Irrichen (தானியம்) - அரிசி.... இப்படிப் பல. (மேலதிக தகவல்களுக்கு: குவாஞ்சே மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகள்) இந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு, "முன் தோன்றிய மூத்த குடி தமிழினம்" என இனப் பெருமிதம் பேசுவது எமது அறியாமையைக் காட்டுகின்றது. மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். அது குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஒரு மொழியானது பல்வேறு இனங்களுக்குள்ளும் பரவக் கூடியது.

வட ஆப்பிரிக்காவின் அமாசிக் மக்களுக்கும், கிரான் கனாரியாவின் குவாஞ்சே மக்களுக்கும் இடையிலான இன்னொரு ஒற்றுமை, அவர்களது தோற்றம். இன்றைக்கும் அல்ஜீரியா, மொரோக்கோ, லிபியாவில் வாழும், அமாசிக் (பேர்பர்) மக்கள், ஐரோப்பிய வெள்ளயினத்தின் உடற்கூறுகளை கொண்டுள்ளனர்! வெள்ளயினத்திற்கே உரிய சிறப்பம்சம் என்று கருதப்படும், வெளுப்பான தோல் நிறம், நீலக் கண்கள், செந்நிறத் தலைமுடி, போன்ற உடற்கூறுகளை கொண்ட மக்களை நீங்கள் இன்றைக்கும் அங்கே பார்க்கலாம். கிரான் கனாரியா தீவுக் கூட்டத்தில் வாழ்ந்த பூர்வகுடி இனமும், வெள்ளையரைப் போன்ற தோற்றம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதனை பிற்காலத்தில் வந்த ஸ்பானிய குடியேற்றவாசிகளும் குறித்து வைத்துள்ளனர். பெரும்பாலும் கருநிற மேனியைக் கொண்ட மக்களைக் கொண்ட ஆபிரிக்க கண்டத்தில், பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் வெள்ளையினம் எப்படித் தோன்றியது? இந்தக் கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. உலகில் இன்னமும் துலங்காத மர்மங்களில் அதுவும் ஒன்று.

நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும். மனிதர்களை கருப்பு, வெள்ளை என்று இனம் பிரித்துப் பார்க்கும் வழக்கம், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோன்றியது. அண்ணளவாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கு, தோல் நிறம் முக்கியமானதாகத் தெரியவில்லை. அதனால், "வெள்ளையர்கள் எங்கே இருந்து வந்தார்கள்? கருப்பர்கள் எங்கே இருந்து வந்தார்கள்?" என்றெல்லாம் அன்று யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை. இயற்கை வளங்களுக்கான போட்டியே, மனித இன வரலாற்றில் முக்கியமானதாக இருந்துள்ளது. இனத் தூய்மை பற்றி பேசும் கடும்போக்காளர்கள் கூட, இறுதியில் பொருளாதாரத்தில் குறியாக இருப்பார்கள். வரலாறு அதனைத் தான் எமக்கு கற்பித்துள்ளது.

காலனித்துவ காலம் முழுவதும், வெள்ளையின நிறவெறியை நிலைநிறுத்த பாடுபட்ட காலனியாதிக்கவாதிகள், எதற்காக ஒரு வெள்ளயினத்தை பூண்டோடு அழித்தார்கள்? அது மட்டுமா? வட ஆப்பிரிக்காவில் இலட்சக் கணக்கில் வாழ்ந்த வெள்ளையின மக்களையும், காலனிய அடிமைகளாகத் தானே வைத்திருந்தார்கள்? அவர்களை "சகோதரர்களாக" நடத்தும் எண்ணம் ஏன் தோன்றவில்லை? பூமியில் அரிதாகக் கிடைக்கும் நிலம், உணவு போன்ற வளங்களை கைப்பற்றுவதற்கான போட்டி, மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்கின்றது. "இனவுணர்வு","மொழியுணர்வு", "தேசிய உணர்வு", "மத உணர்வு"..... இவை எல்லாம், ஒரு குறிப்பிட்ட குழுவின் பொருளாதார ஆதிக்கத்தை மறைப்பதற்காக போடப்படும் திரைகள் ஆகும்.

Tuesday, May 15, 2012

மே 15 - 18 : பேரழிவை நினைவுகூரும் தமிழ்-பாலஸ்தீன சகோதரர்கள்

ஈழத் தமிழரும், பாலஸ்தீனர்களும், மே மாத நடுப் பகுதியை, தமது இனத்திற்கு பேரழிவு ஏற்பட்ட மாதமாக நினைவுகூருகின்றனர். தமிழ் இன உணர்வாளர்கள், மே 18 ம் தேதியை நினைவுகூரும் தினமாக அறிவித்துள்ளனர். 

கடந்த 64 வருடங்களாக, மே 15 ம் தேதியை, "நக்பா (Al Nakba) தினம்" என்று பாலஸ்தீனர்கள் அறிவித்துள்ளனர். யூதர்கள் அதனை இஸ்ரேலிய சுதந்திர தினமாக கொண்டாடுகின்றனர். அதே போன்று, 1967 யுத்தத்தின் வெற்றியையும் யூதர்கள் கொண்டாடினார்கள். இவ்விரண்டு சம்பவங்களின் பின்னணியில், பாலஸ்தீன அரேபிய மக்களை இனப்படுகொலை செய்து, இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட கொடுமைகள் மூடி மறைக்கப் படுகின்றன. 2009 ம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், யூதர்களைப் போன்று தென்னிலங்கை சிங்களவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிகழ்வு இங்கே ஒப்பிடத் தக்கது. 

1948 ம் ஆண்டு, பிரிட்டிஷ் பாதுகாப்புக்குட்பட்ட பாலஸ்தீன நாடு, யூதர்களிடம் கையளிக்கப் பட்டது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், பிரிட்டிஷ் காலனியான இலங்கை, சிங்களவர்களிடம் கையளிக்கப் பட்டது இவ்விடத்தே நினைவு கூறத் தக்கது. சிங்கள ஆட்சியாளர்கள், இஸ்ரேலிய யூத ஆட்சியாளர்களை பின்பற்றி நடந்து வருவதும் குறிப்பிடத் தக்கது. இஸ்ரேலிய யூத அரசின் இன ஒடுக்குமுறை கொள்கை பன்மடங்கு வீச்சைக் கொண்டது.

1948 ம் ஆண்டு, யூதர்களின் மரபு வழி இராணுவம் என்ற ஒன்று இருக்கவில்லை. தனித் தனியான ஆயுதக் குழுக்களாக இயங்கிக் கொண்டிருந்தன. மே 15 , அன்று தாக்குதலை தொடங்கிய யூத ஆயுதக்குழுக்கள் , சுமார் 600 பாலஸ்தீன கிராமங்களை இனச் சுத்திகரிப்பு செய்தனர். வெளியேறிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் காலனிய அரசு வழங்கிய ஆயுத தளபாடங்களும், யூத ஆயுதக் குழுக்களுக்கு பெரிதும் உதவியிருந்தன.

மே 18 நினைவுகூரலை, இலங்கை நாட்டு எல்லைக்குள் எங்கேயும் நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதே போன்று, மே 15 நினைவுகூரலை, இஸ்ரேலிய நாட்டு எல்லைக்குள் எங்கேயும் நடத்த முடியாது. அரபு மொழியில் பேரழிவு என்ற அர்த்தம் தரும், "அல் நக்பா" என்ற சொல், மே 15 நினைவுகூரல் தினத்திற்கு பெயராக வைக்கப் பட்டுள்ளது. ஜனவரி மாதம், இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஒன்று, அல் நக்பா நினைவுகூரலை தடை செய்துள்ளது. எந்தவொரு நிறுவனமாகிலும், இது போன்ற நினைவுகூரலை அனுமதிக்குமானால், அரச நிதியை இழக்க வேண்டியிருக்கும்.

இத்தகைய தடைகளையும் மீறி, பாலஸ்தீனர்கள் அல் நக்பா தினத்தை நினைவுகூர்ந்துள்ளனர். டெல் அவிவ் நகர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பாலஸ்தீன மாணவர்கள், வளாகத்தினுள் சிறிய ஒன்றுகூடலை ஒழுங்கு படுத்தினர். அதில், இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன கிராமங்களின் பெயர்களை வாசித்தார்கள். அதே நேரம், பாலஸ்தீன அதிகார சபைக்குட்பட்ட பிரதேசத்தில், பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இஸ்ரேலிய பாட நூல்களிலும், சரித்திர நூல்களிலும், 1948 க்கு முன்னர் பாலஸ்தீனர்கள் வாழ்ந்ததாக, எங்கேயும் குறிப்பிடப் படவில்லை. ரோமர் காலத்தில் இருந்து, யூதர்கள் மட்டுமே பாலஸ்தீனப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்ததாக எழுதப் பட்டுள்ளது. சிங்கள-பௌத்த பேரினவாதிகள், இலங்கை முழுவதும் தமது என்று உரிமை கோருவது, இவ்விடத்தே குறிப்பிடத் தக்கது. இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனத்திற்கு உரிமை கோருவது மட்டுமல்ல, அப்படி ஒரு நாடு சரித்திரத்தில் இருந்ததை மறுத்து வருகின்றது. சரித்திர சான்றுகளை மறுப்பதற்கு வசதியாக, புதிய காடுகள் உருவாக்கப் படுகின்றன.

1948 ல் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன கிராமங்களில், ஐரோப்பாவில் இருந்து புலம்பெயர்ந்த யூதர்கள் குடியேற்றப் பட்டனர். அந்தக் கிராமங்களின் அரபுப் பெயர்களை அழித்து விட்டு, ஹீபுரு பெயர்களை சூட்டினார்கள். கிழக்கிலங்கையிலும், வவுனியாவிலும், தமிழ்க் கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை வெளியேற்றி விட்டு, அங்கெல்லாம் சிங்களவர்களை குடியேற்றியது குறிப்பிடத் தக்கது. இஸ்ரேலில் நடந்ததைப் போன்று, அந்தக் கிராமங்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப் பட்டன.

இன்று பாலஸ்தீன பிரதேசமாக கருதப்படும் காஸா வில் வாழும் என்பது வீதமானோர், இஸ்ரேலியப் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்த அகதிகளாவர். 1948 ம் ஆண்டு, காஸாப் பிரதேசம் எகிப்தின் பகுதியாக இருந்தமை, இங்கே குறிப்பிடத் தக்கது. அதே போன்று, அதே காலகட்டத்தில் ஜோர்டானின் கட்டுப்பாட்டில் இருந்த, மேற்குக் கரை பிரதேசத்தில் வாழும் நாற்பது சதவீதமான பாலஸ்தீனர்களின் பூர்வீகமும் இஸ்ரேல் ஆகும். பிற்காலத்தில், காஸா, மேற்குக்கரை மீது போர் தொடுத்த இஸ்ரேலிய படைகள், அந்தப் பிரதேசங்களை ஆக்கிரமித்தன.

இன்று வரையில், 1948 ம் ஆண்டு, இஸ்ரேலிய தேசத்திற்குள் அகப்பட்ட சில நூறு பாலஸ்தீன குடும்பங்களுக்கு மட்டுமே பிரஜாவுரிமை உள்ளது. காஸா, மேற்குக்கரை பிரதேசங்களில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு எந்த நாட்டு பிரஜாவுரிமையும் கிடையாது. அதாவது, "நாடற்றவர்கள்".

இன்று இஸ்ரேல் என்று அறியப்பட்ட தேசத்தில் உள்ள, 418 பாலஸ்தீன கிராமங்கள் பாழடைந்து போயுள்ளன. ஏனென்றால், அங்கே குடியேறுவதற்கு போதுமான அளவு யூதர்கள் கிடைக்கவில்லை. ஆகவே, பாழடைந்த பாலஸ்தீன கிராமங்களை காடுகளாக மாற்றும் திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப் பட்டு வருகின்றது. சைப்ரஸ் மரம் போன்று, வறண்ட பிரதேசத்தில் விரைவாக வளரும் மரச் செடிகள் கொண்டு வந்து நடப் படுகின்றன.

சில வருடங்களில் அவை 2 , 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட காடுகளாக மாறி விடும். அந்தக் காடுகளுக்கு இஸ்ரேலிய தலைவர்களின் நாமங்கள் சூட்டப் படுகின்றன. காடு வளர்க்கும் திட்டத்திற்கு, மேற்கத்திய நாடுகளும் உதவி வருவதால், சில காடுகளுக்கு மேற்குலக இஸ்ரேலிய நண்பர்களின் பெயர்களும் சூட்டப் படுகின்றன.

டெல் அவிவிலிருந்து ஜெருசலேம் செல்லும் வழியில், சாரிஸ்(Saris), பெய்த் துல் (Beit Thul) என்ற கிராமங்களில், பெல்ஜிய யூதர்களால் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. அன்றைய கார்டினல் டானியல், காடுகளில் விவிலிய வாசகங்களை பொறித்துள்ளார்.

நாசரேத் நகருக்கு அருகில், மலூல் (Malul), முஜெய்டில் (Mujeidil) என்ற கிராமங்களும் காடுகளாக மாறியுள்ளன. இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால், இவ்விரண்டு கிராமங்களிலும் கிறிஸ்தவ பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வந்தனர். அங்கே இப்பொழுதும், பாலஸ்தீன கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. அறுபதுகளில் அந்தக் கிராமங்களுக்கு சென்ற, கிறிஸ்தவ மதப் பற்றாளர்களான பெல்ஜிய அரசனும், அரசியும், அங்கே முப்பதாயிரம் மரச் செடிகளை நாட்டினார்கள். மேலேயுள்ள படத்தில், அழிவடைந்த நிலையில் உள்ள பாலஸ்தீன கிறிஸ்தவ தேவாலயமும், அருகில் காடும் இருப்பதை பார்க்கலாம்.

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடும் புத்திஜீவிகள், தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைக்கின்றனர். தமிழ் தேசியம் பேசுவோரில் கணிசமான அளவு கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்கள் பாலஸ்தீன கிறிஸ்தவர்களுடன், தோழமை உணர்வை காண்பிக்க வேண்டும். இஸ்ரேலின் சுதந்திர தினம், பாலஸ்தீனர்களால் அல் நக்பா தினமாக நினைவுகூரப் படும் தகவலை தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பாலஸ்தீன கிறிஸ்தவர்கள், யூத ஆயுதக் குழுக்களால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட உண்மைகள் தெரிந்தாலும், மேலைத்தேய கிறிஸ்தவ மேட்டுக்குடி இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது எதற்காக? அவர்களைப் பொறுத்த வரையில், "ஐரோப்பிய வெள்ளை இனத்தவர் மட்டுமே கிறிஸ்தவராக இருக்க முடியும்", என்ற இனவாத சிந்தனை கொண்டவர்கள். பாலஸ்தீன கிறிஸ்தவ சகோதரர்களுடன், தமிழ் கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள உணர்வுத் தோழமை, வெள்ளையின மேலாதிக்கத்திற்கு சாவுமணி அடிக்க வேண்டும்.

Sunday, May 13, 2012

யூத ராஜ்ஜியம் இனப்படுகொலை செய்த சவூதி கிறிஸ்தவர்கள்

"யூதர்களும், கிறிஸ்தவர்களும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, நண்பர்களாக வாழ்ந்து வருவது போலவும், அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மட்டுமே பரம்பரைப் பகை நிலவியது போலவும்," நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு தெரியாத உண்மைக் கதை இது. மதவெறியர்கள் பல உண்மைகளை மறைத்தும், திரிபுபடுத்தியும் பிரச்சாரம் செய்து வருவதால், இந்தக் கதையும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டுக் கிடந்தது. சவூதி அரேபியாவில், யூதர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட, இருபதாயிரம் கிறிஸ்தவர்களைப் பற்றி, நம்மில் எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறார்கள்? ஒரு காலத்தில், சவூதி அரேபியாவில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்பதையே அறியாத பலர் உண்டு.

இன்று, நூறு வீதம் முஸ்லிம் மக்கட்தொகை கொண்ட நாடான சவூதி அரேபியாவில், ஒரு காலத்தில் கிறிஸ்தவ மதம் பரவி இருந்தது. ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் (Wikipedia: கி.பி. 5 ம் நூற்றாண்டு), அரபு மொழி பேசும் இனக்குழு ஒன்று, கிறிஸ்தவ ராஜ்ஜியம் ஒன்றை ஸ்தாபித்து இருந்தது. சர்வதேச வாணிபம் காரணமாக, நாகரிக வளர்ச்சி கண்டிருந்தது. அன்று, ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் இருந்த கிறிஸ்தவ சாம்ராஜ்யங்களுடன், இராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தது. அதன் வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட யூதர்கள், அந்த நாட்டின் மீது படையெடுத்து, அங்கிருந்த மக்கள் அனைவரையும் இனப்படுகொலை செய்தார்கள். சுமார் இருபதாயிரம் கிறிஸ்தவர்கள் இனவழிப்புகுள்ளான  சம்பவம், திருக் குர்ஆனில் கண்டிக்கப் பட்டுள்ளது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், உலக நாடுகளின் வரைபடம் வேறு மாதிரி இருந்தது. அன்றிருந்த நாடுகள் பல இன்று இல்லை. இன்றிருக்கும் நாடுகள் அன்று இருக்கவில்லை. அரேபியா தீபகற்பத்தின், மேற்குப் பகுதியும், தென் கிழக்குப் பகுதியும் மட்டுமே நாகரீகமடைந்த சமுதாயங்களைக் கொண்டிருந்தன. மேற்கில் பாலஸ்தீனப் பகுதி நாகரீகம் குறித்து, உலகம் முழுவதும் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், இன்று யேமன் என்ற தேசமாகவுள்ள, தென் கிழக்கு அரேபியாவின் நாகரீகம் குறித்து அறிந்தவர்கள் மிகக் குறைவு. விவிலிய நூலில், சாலமன் மன்னனின் காதலியான ஷீபா (அல்லது சபா) எனும் அரசி பற்றிய கதை வருகின்றது. கருநிற அழகியான ஷீபா இராணி ஆட்சி செய்த நாடு, இன்றைய யேமனில் இருந்துள்ளது. அந்த ராஜ்ஜியம் அழிந்து பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஹிம்யாரித் (Himyarite) ராஜ்ஜியம் தோன்றியது.

ஹிம்யாரித் ராஜ்ஜியம், ஷீபாவின் நாட்டையும் கைப்பற்றி விரிவடைந்து கொண்டு சென்றது. இன்றைய யேமன் நாட்டின் பெரும்பகுதி, ஹிம்யாரித் ராஜ்யத்திற்குள் அடங்கியது. ஆப்பிரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலானசர்வதேச வர்த்தகம் காரணமாக, பலமான நாடாக விளங்கியது. ஹிம்யாரித் ராஜ்யத்தின் பிரஜைகளும் அரபு அல்லது அது போன்ற மொழியைப் பேசி வந்தனர். ஹிம்யாரித் அரச பரம்பரையில் கடைசி மன்னன் யூசுப் அசார் து நவாஸ் (Yusuf As'ar Dhu Nuwas), யூத மதத்தை தழுவிக் கொண்டான். மன்னன் எவ்வழி, அதுபோல மக்களும் அவ்வழியே யூதர்களாக மாறினார்கள். "யூதர்கள் ஒரே மரபணு கொண்ட ஓரின மக்கள்" என்ற கட்டுக்கதை, இன்றைக்கும் படித்தவர்களால் கூட நம்பப் படுகின்றது. கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களைப் போன்று, யூத மதமும் பிறரை மத மாற்றம் செய்து சேர்த்துக் கொண்ட உண்மையை மறைக்கின்றனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், பாலஸ்தீனத்தில் நிறுவன மயபட்ட மதமாக திகழ்ந்த யூத மதம், பல மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாது, எத்தியோப்பியா வரை பரவியது.

ஹிம்யாரித் மன்னன் து நவாஸ் யூத மதத்திற்கு மாறியதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. உலக வரலாற்றில், பல மன்னர்களின் மத மாற்றத்திற்கு அது காரணமாக இருந்துள்ளது. சர்வதேச வர்த்தகம், அதனால் கிடைக்கும் அனுகூலங்களை அனுபவிப்பதற்கு, குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவது நன்மை அளித்தது. அன்றைய காலத்தில், ஏற்றுமதி வர்த்தகத்தில், அதிக வருமானத்தை ஈட்டித் தரும் பொருளாக இருந்தது, சாம்பிராணி! தங்கம், வைரம் போன்று, சாம்பிராணி விற்று கோடீஸ்வரரானவர்கள் பலர். ஆலயங்களில் இறைவனை வழிபடுவதற்கு மட்டுமல்ல, வீடுகளில் நறுமணம் கமழச் செய்வதற்கு, அல்லது கிருமிநாசினியாக, இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காக சாம்பிராணி பயன்படுத்தப் பட்டது. சாம்பிராணி விளையும் மரம், ஒமானிலும், யேமனிலும் மாத்திரமே காணப்பட்டது. அதனால் தான் அதற்கு அந்தளவு கிராக்கி. சாம்பிராணி ஏற்றுமதி செய்யும் வணிகர்கள், ஹிம்யாரித் நாட்டின் ஊடாகத் தான் பயணம் செய்ய வேண்டும். அவர்கள் கட்டும் வரிப் பணத்தினால், அரசாங்கத்தின் கஜானா நிரம்பி வழிந்தது. 

கிறிஸ்தவ மதம் பரவிய ஆரம்ப காலங்களில், கத்தோலிக்க தேவாலய வழிபாடுகளிலும் சாம்பிராணி பயன்படுத்தப் பட்டது. பல நூறு வருடங்களுக்குப் பின்னர், புதிதாக முளைத்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் சாம்பிராணி வர்த்தகத்தை கட்டுப்படுத்தியதால் தான், கத்தோலிக்க திருச்சபை அந்த வழக்கத்தை கை விட்டது. அதன் பிறகு தான், மெழுதிரி கொளுத்தும் வழக்கத்தை அறிமுகப் படுத்தினார்கள். சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகத் தான், தாங்கள் மெழுகுதிரி கொளுத்தி வழிபடுகிறோம் என்பது, இன்றும் கூட பல கிறிஸ்தவர்களுக்கு தெரியாது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்கு முன்னர், யூதர்களின் ஹிம்யாரித் ராஜ்ஜியம் சாம்பிராணி வர்த்தகத்தை கட்டுப்படுத்தியது. எனினும், கிறிஸ்தவ மதம் பரவிய காலத்தில், அந்தப் பிரதேசத்தில் தோன்றிய கிறிஸ்தவ தேசம் ஒன்று, சாம்பிராணி வர்த்தகத்தில் பங்கெடுத்துக் கொண்டது. இதனால், கிறிஸ்தவ உலகிற்கான சாம்பிராணி ஏற்றுமதி தடையின்றி நடப்பதற்கு உறுதிப் படுத்தப் பட்டது. இருப்பினும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, அரபு கிறிஸ்தவ நாட்டின் வீழ்ச்சியை தடுப்பதற்கு, எந்தவொரு கிறிஸ்தவ நாடும் முன்வராத காரணம் இது வரை துலங்கவில்லை.

சவூதி அரேபியாவில், யேமன் நாட்டு எல்லையோரம் அமைந்திருக்கிறது, நஜ்ரான் (Najran) என்ற நகரம். இன்று அது வளர்ந்து கொண்டிருக்கும் நவீன நகரம். பாலைவன சவூதி அரேபியாவில், இயற்கை எழில் கொஞ்சும் சோலைக்குள் அமைந்திருக்கும் நஜ்ரான், விவசாயத்திற்கேற்ற மண் வளம் கொண்டது. நஜ்ரான் நகரில், அல்லது அதற்கு அருகாமையில் பண்டைய நகரமான "அல் உக்தூத்" (Al-Ukhdood) அமைந்திருந்தது. இன்று சில இடிபாடுகளை மட்டுமே கொண்டிருக்கும் அந்தப் பகுதி, ஒரு காலத்தில் உன்னத நாகரிக வளர்ச்சி கண்ட நகரமாக திகழ்ந்தது. அந்த நகரில் வாழ்ந்த மக்கள், அந்த நகரோடு சேர்த்து அழிக்கப் பட்டு விட்டனர். உலக வரலாற்றில் இடம்பெற்ற மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் அதுவும் ஒன்று.

யூத மன்னனான து நவாஸ், முதலில் பலம் பொருந்திய அக்சும் (இன்றைய எத்தியோப்பியா) சாம்ராஜ்யத்தின் மீது தான் படையெடுத்தான். அந்தப் படையெடுப்பின் போது பல கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப் பட்டன. அக்சும் சாம்ராஜ்யத்தின் படைகளை போரில் பலவீனப் படுத்திய பின்னர் தான், அயலில் இருந்த நஜ்ரான் (அல் உக்தூத்) முற்றுகையிடப் பட்டது. நஜ்ரானுக்கு, கிறிஸ்தவ சகோதர நாடான அக்சுமிலிருந்து உதவி கிடைப்பதை தடுப்பது, முதலில் அவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். அந்த வியூகம் சரியான கணிப்புடன் போடப் பட்டிருந்தது. முற்றுகைக்குள்ளானஅல் உக்தூத்அரசு உதவி கேட்டு, கிரேக்கத்தில் இருந்த கிறிஸ்தவ ரோம சாம்ராஜ்யத்திற்கு தகவல் அனுப்பியது. ஆனால், அங்கிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. சில நேரம், தகவல் தாமதமாகப் போய்ச் சேர்ந்திருக்கலாம்.

கி.பி. 524 ம் ஆண்டு,அல் உக்தூத் யூதப் படைகளால் முற்றுகையிடப் பட்டது. தமது அயலில் ஒரு கிறிஸ்தவ தேசத்தின் அபாரமான வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட யூதர்களும், து நவாசின் படையெடுப்புக்கு உதவி செய்தனர். அன்று யூதர்களின் வெறுப்புணர்வு எந்தளவு தீவிரமாக இருந்தது என்பதற்கு, அடுத்து வரும் சம்பவங்கள் சாட்சியம் கூறும். முற்றுகைக்குள் மாட்டிக் கொண்ட அல் உக்தூத் பிரஜைகள் அனைவரும், யூதர்களாக மதம் மாற வேண்டும், அல்லது மரணத்தை தழுவிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இறுதிக் கணம் வரையில் போராடி மடிய விரும்பியஅல் உக்தூத்பிரஜைகள், மதம் மாற மறுத்தனர். யூதப் படைகள்,அல் உக்தூத்நகரை சுற்றி அகழி வெட்டி, சிதை அடுக்கி தீ மூட்டினார்கள். அல் உக்தூத்மக்களை, ஒருவர் விடாது எல்லோரையும் உயிரோடு நெருப்பில் போட்டுக் கொளுத்தினார்கள்.

மொத்தம் இருபதாயிரம் பேர், இனவழிப்புக்கு பலியானதாக கூறப் படுகின்றது. ரோம சாம்ராஜ்யத்தின் கிறிஸ்தவ தலைமைச் செலகத்திற்கு அனுப்பப் பட்ட கடிதத்திலும் இது தெரிவிக்கப் பட்டுள்ளது. அல்உக்தூத் நகரின் தியாகிகள், ஒவ்வொரு வருடமும் கிறிஸ்தவ உலகில் நினைவுகூரப் பட்டனர். இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனில், அல் உக்தூத் இனப்படுகொலை பற்றி பதிவு செய்யப் பட்டுள்ளது. (Surat al-Buruj of the Q'uran 85:4–8 ) 

இனப் படுகொலைக்குப் பின்னர், அல் உக்துக் ஹிம்யாரித் யூத ராஜ்யத்திற்குள் உள் வாங்கப் பட்டிருந்தது. ஆயினும், நஜ்ரானிலும், சவூதி அரேபியாவின் பிற பகுதிகளிலும் கிறிஸ்தவ சமூகம் தொடர்ந்திருந்தது. மெக்காவில் இருந்து பரவிய இஸ்லாம் என்ற புதிய மதம், அந்தப் பிரதேசத்தையும் வந்தடைந்தது. இறைதூதர் முகமது நபி காலத்தில், கிறிஸ்தவர்களும், யூதர்களும் புனித நூலின் மக்களாக சிறப்புரிமை கொடுக்கப் பட்டு பாதுகாக்கப் பட்டனர். முகமது நபியின் காலத்திற்குப் பின்னர், அரேபிய தீபகற்பம் முழுவதும் ஒரு இஸ்லாமிய அரசினால் ஆளப் பட்டது. அப்போது செய்யப் பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், நஜ்ரான் கிறிஸ்தவர்கள் ஈராக்கிற்கு நாடு கடத்தப் பட்டனர். இஸ்லாமிய ராஜ்யத்திற்குள் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்கள், பிற்காலத்தில் முஸ்லிம்களாக மாறி விட்டனர். யேமன் தேச யூதர்களின் சமூகம், இருபதாம் நூற்றாண்டு வரை அந்த இடத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தது. நவீன இஸ்ரேல் உருவான பின்னர், பெரும்பான்மையான யேமன் யூதர்கள், இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.

 மேலதிக தகவல்களுக்கு:
Najran 
Christian Community of Najran 
Himyarite KingdomWednesday, May 09, 2012

அரேபியருக்கு ஜனநாயகம் தெரியாது!

உலகில் எதுவுமே நிலைத்து நின்றதில்லை. எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன. துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தை ஒரு சில மாதங்களுக்குள் மாற்றி விட்டது. எந்த நாட்டில் இந்த புரட்சி அலை கரை சேரும், என்று ஆளாளுக்கு ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில், அரபுலகை அடக்கியாள, அல்கைதா பயங்கரவாதம் தேவைப்பட்டது. இல்லை, அது அரபுகளை பயமுறுத்தவல்ல. அரபுக்களை காட்டி, ஐரோப்பியர்களையும், அமெரிக்கர்களையும் பயமுறுத்தி வைப்பதற்காக, மேற்கத்திய அரசுகளால் பேணி வளர்க்கப் பட்டது. 

எட்வர்ட் சையித் போன்ற பிரபல அறிவுஜீவிகள், கீழைத்தேய "ஓரியண்டலிசம்" குறித்து ஐரோப்பியர் கொண்டுள்ள அச்சத்தை ஆவணப் படுத்தியுள்ளனர். உலக நாகரீகங்களின் வரலாற்றில், ஐரோப்பியரின் நாகரீகம் காலத்தால் பிந்தியது. பெரும்பாலும் அரேபிய நாகரீகம் ஐரோப்பாவுக்கு வழங்கிய கொடைகள் ஏராளம். அறிவியலுக்கும், பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும், ஐரோப்பியர் அரேபியருக்கு கடமைப் பட்டுள்ளனர். உலக வரலாற்றில், கொலை பாதகச் செயல்களுக்கு அஞ்சாத தேசங்கள், தம்மை விட நாகரீகத்தில் முன்னேறிய நாடுகளை அடிமை கொண்டுள்ளன. அதன் பின்னர், தாமே நாகரீகத்தில் சிறந்தவர்களாக பிரகடனம் செய்து கொள்ளும். அரபுலகிற்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவும் அப்படிப் பட்டதே.

இரண்டாம் உலகப்போர் முடிந்த காலத்தில் இருந்து, இன்று வரை அரேபிய நாடுகளில் சர்வாதிகாரிகளின் ஆட்சி நடப்பது சர்வசாதாரணம். பல சர்வாதிகாரிகள் மேற்குலகின் அடிவருடிகளாக இருந்ததால், "ஜனநாயகம் பேசும் கனவான்கள்" மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதற்குப் பதிலளித்தவர்கள், "அரேபியர்கள் இன்னும் ஜனநாயக அரசியலுக்கு பக்குவப் படவில்லை." என்று கூறி வந்தார்கள். ஆப்பிரிக்கர்கள் குறித்தும் அதே போன்ற நிலைப்பாட்டை வைத்திருந்தார்கள்.

துனிசியாவில் புரட்சி செய்த மக்கள், மேலைத்தேய கற்பிதங்களை பொய்யாக்கியுள்ளனர். "ஜனநாயகம் என்பது மேற்கு ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியப்படும்." என்ற கருதுகோளை தவறென நிரூபித்துள்ளனர். "துனிசியாவில் நடந்தது புரட்சி இல்லை!" என்று, வலதுசாரி அறிவுஜீவிகளும், இடதுசாரி அறிவுஜீவிகளும் பல்வேறு காரணங்களுடன் விளக்கி வருகின்றனர். மேற்கத்திய சார்பு சர்வாதிகாரிக்கு எதிரான மக்கள் எழுச்சி, வலதுசாரிகள் எதிர்பாராத ஒன்று. இடதுசாரிகளோ வரட்டுத்தனமான மார்க்சிய விளக்கங்களை கொடுக்கின்றனர். இவ்விரு தரப்பினரும், அரபுலகின் கடந்த கால வரலாற்று உண்மைகளை கணக்கில் எடுக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனை நினைவூட்டவே, அரபுலகை காலனிப்படுத்திய ஐரோப்பியரின் வருகையுடன் இந்தக் கட்டுரையை தொடங்கினேன்.

மேற்குலக நாடுகள், எப்போதும் தமக்கு சார்பான ஆட்சி மாற்றம் இடம்பெறும் பட்சத்தில் தான், அதனை "புரட்சி" என்று அழைப்பார்கள். மற்றவை எல்லாம், "சதிப்புரட்சி", "இராணுவ சதி", "ஆட்சிக் கவிழ்ப்பு", "காடையர் கும்பலின் வன்முறை" என்று அழைக்கபப்டும். இன்றைக்கும் மேற்குலக பாடநூல்கள், "லெனின் தலைமையில் 1917 ல் ரஷ்யாவில் இடம்பெற்ற சதிப்புரட்சி" என்று தான் எழுதி வருகின்றன. அவர்களைப் பொறுத்த வரையில், முன்னாள் சோஷலிச நாடுகளில் புரட்சி நடக்கவில்லை. அவையெல்லாம் "ஆயுதமேந்திய சிறு குழுவினரின் ஆட்சிக் கவிழ்ப்பு" மாத்திரமே.

பெர்லின் மதில் உடைப்பையும், சோவியத் யூனியனின் வீழ்ச்சியையும் தான், அவர்கள் புரட்சி என்று கொண்டாடுகிறார்கள். அடுத்தடுத்து செர்பியாவில், ஜோர்ஜியாவில், உக்ரைனில் எல்லாம் "புரட்சி" இடம்பெற்றது. மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்த வரையில், "சிரிய இராணுவ ஆக்கிரமிப்பை" எதிர்த்து லெபனாலில் புரட்சி நடந்தது. அதே லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேலை எதிர்த்த போராட்டம், "ஹிஸ்புல்லாவின் பயங்கரவாதம்" என்று அழைக்கிறார்கள். இடதுசாரி சிந்தனை கொண்டோர், இது போன்ற "பிரச்சார யுக்திகளை" அவதானிப்பதில்லை. மாறாக, பாமர மக்களை கவரும் முதல் கட்ட அரசியலிலேயே பலவீனமாகவுள்ளனர். இந்த வெற்றிடத்தை, தீவிர வலதுசாரிகள் இலகுவாக நிரப்பிக் கொள்கின்றனர்.


வட ஆப்பிரிக்க நாடுகளில் நடந்தவை எல்லாம் புரட்சிகள் இல்லை. ஆனால் புரட்சிக்கேற்ற சூழ்நிலை நிலவியது. ஆண்டாண்டுகால வறுமை, வேலையின்மை, உணவுப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைக்குள் வாழ்ந்த மக்களின் எழுச்சி, என்ன சொல்ல வருகின்றது? மார்க்சியமோ, வேறெந்த சித்தாந்தமோ அறிந்திராத மக்கள் தலைவர்கள் தான் அவர்களை வழிநடாத்தினார்கள். அவற்றை அறிந்தவர்களின் பங்களிப்பு இருந்த போதிலும், எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தனர். மூன்று தசாப்த கால வலதுசாரி சர்வாதிகார ஆட்சிக்குள் வார்ந்த இளந்தலைமுறையிடம், அவற்றை எல்லாம் எதிர்பார்ப்பது அறிவீனம். இன்று ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலில், மார்க்ஸியம் போன்ற மாற்றுக் கருத்துகளை ஆர்வமாகக் கேட்கும் அறிவுத் தேடல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிக் கருத்துக்கள் ஆழமாக ஊடுருவியுள்ள அல்ஜீரியாவில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தோல்வியடைந்தமை, இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கது. "முஸ்லிம் நாடுகள் என்றாலே பழமைவாதிகள், அல்லது மதவெறியர்களைக் கொண்டுள்ளன." அரேபியர் என்றாலே, அத்தகைய தவறான முத்திரை குத்தப் பட்டு விடும்.


இருபதாம் நூற்றாண்டில் உலகை வலம் வந்த "கம்யூனிச அலை", அரபு நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. ஈராக் முதல் மொரோக்கோ வரை, கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத நாடுகளைக் காண்பதரிது. தென் யேமனை, ஒரு மார்க்சிய லெனினிசக் கட்சி ஆட்சி செய்தது. தென் ஓமானில் ஆயுதமேந்திப் போராடிய கம்யூனிசப் புரட்சியாளர்களை ஒடுக்க பிரிட்டிஷ் SAS படையினர் களமிறங்கினார்கள். பனிப்போர் உச்சத்தில் இருந்த நாட்களில், மேலதிக அரபு நாடுகளும் சோவியத் அணியில் சேருவதை, மேற்குலகம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. கம்யூனிசப் பேயை எதிர்த்துப் போராடுவதற்காக, மேற்குலகம் இஸ்லாமிய மதவெறியர்களை ஆதரித்தது. "உனக்கு இறை நம்பிக்கை இருந்தால், நாஸ்திக கம்யூனிஸ்டுகளுடன் சேராதே!" என்று அவர்களே மக்களை அடக்கி வைத்தார்கள். வேறு சில நாடுகளில், மேற்குலகின் சொற்கேட்டு நடக்கும் சர்வாதிகாரிகள், அந்தப் பணியை திறம்படச் செய்தனர்.


சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர் , அமெரிக்கா தன்னிகரற்ற ஏகாதிபத்திய வல்லரசாகியது. குறிப்பாக 11 செப். 2001 க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களால், அமெரிக்கா லிபியா மீது படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் கடாபி மேற்குலகின் உத்தரவுகளுக்கு அடிபணிந்தார். பேரழிவு விளைவிக்கும் ஆயுத உற்பத்தியை தானாகவே நிறுத்திக் கொண்டார். புன்முறுவல் பூக்கும் மேற்கத்திய தலைவர்களின் அன்புக்கு மயங்கினார். "இஸ்லாமிய சோஷலிச அரசு" அமைப்பது குறித்து, அவர் எழுதிய "பசுமை நூல்" இன், கொள்கைக்கு மாறாக நடந்து கொண்டார். எந்த அளவு நல்ல பிள்ளையாக நடந்தாலும், ஐரோப்பியர்கள் பழசை மறப்பதில்லை. "ஒரு சுதந்திரமாக சிந்திக்கும் தலைவர்", காலனிய அடிமை நாட்டை ஆளுவதை அவர்கள் மன்னிக்கப் போவதில்லை. ஈரானில் மொசாடேக், ஈராக்கில் சதாம் ஹுசைன், எல்லோரும் குறிப்பிட்ட காலத்தில் மேற்குலக நலன்களுக்கு எதிராக ஆள விரும்பியவர்கள். அதற்காகவே பதவியிறக்கி தண்டிக்கப்பட்டார்கள்.  கடாபிக்கு நடந்ததும் அது தான். ஆக்கவும், அழிக்கவும் வல்ல இறைவன் இந்தப் பூமியில் தான் வாழ்கிறான்.


வட ஆப்பிரிக்க அரபு நாடுகளில் நடந்தவை எல்லாம் புரட்சி அல்ல. துனிசியாவிலும், எகிப்திலும் பொருளாதார நெருக்கடியால் வீதிக்கு வந்து போராடிய மக்களுடன், லிபிய கிளர்ச்சியாளர்களை ஒப்பிட முடியாது. அவர்களில் யாரும் லிபியர்கள் போல, மன்னர் கால கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை. இன,மத, குல வேறுபாடுகளை மறந்து அனைவரும் தேசியக் கொடியை முத்தமிட்டனர். எகிப்திலும், துனிசியாவிலும், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும், இராணுவத்துடன் மோதும் எண்ணம் யாருக்கும் இருக்கவில்லை. லிபியாவில், ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் கைகளில் ஆயுதங்கள் காணப்பட்டன. வெகு விரைவிலேயே, போர்கோலம் பூண்டு, இராணுவத்துடன் மோதினார்கள். லிபிய இராணுவத்தின் தாக்குதல்களை, "கடாபியின் ஆப்பிரிக்க கூலிப்படை" தாக்குகிறது என்று பிரச்சாரம் செய்தார்கள். லிபியர்கள் ஆப்பிரிக்கர்கள் என்ற உண்மையை மறந்து விட்டுப் பேசுகின்றனர். லிபியாவில் கறுப்பின மக்கள் வாழ்கின்றனர், அவர்கள் அரசு இராணுவத்திலும் இருந்தார்கள். இந்த உண்மைகளை மறைத்து விட்டுப் பேசியதால்,  "லிபிய மக்கள் எழுச்சி" பற்றிய விம்பத்தின் மீது சந்தேகம் எழுந்தது. இவர்கள் லிபியாவின் எந்த மக்களைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்?


உலகில் ஐரோப்பிய காலனியாதிக்கம் முழுமையாக மறைந்து விட்டதா? இன்றைக்கும் முன்னாள் காலனிகள் மீதான ஐரோப்பியரின் ஆதிக்கம் தொடர்கின்றது. தமக்குப் பிடிக்கும், தமது நலன் காக்கும் ஆட்சியாளர் பதவியில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதற்காக தம்மிடம் இருக்கும் வளங்கள் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். இராஜதந்திர அழுத்தங்கள் கொடுப்பதற்கு, ஊடகங்கள், மனித உரிமை நிறுவனங்கள், ஐ.நா. சபை என்பன உள்ளன. இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ என்ற அமைப்பு உள்ளது. முன்பெல்லாம் காலனிகளை பங்கு போடுவதற்காக, ஐரோப்பிய வல்லரசுகள் தமக்குள் மோதிக் கொண்டன. இன்று அவர்கள் ஒற்றுமையாக ஓரணியில் செயற்படுகின்றார்கள். "ஆண்டவரின் சூழ்ச்சிக்கு" பலியான, அடிமை நாடுகளின் மக்களோ, வேள்விக்கு வளர்க்கப் படுவதை உணராத மந்தைகளாக வாழ்கின்றனர்.