Saturday, June 26, 2010

பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!


1.
"பைபிள் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்." என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் என்றால் அதையே "தமது மதம் ஆண்டவரால் தெரிவு செய்யப்பட்டது" என்று நிரூபிக்க உதாரணமாக காட்டுவார்கள். 

இவர்கள் ஒன்றை மறந்து விட்டு பேசுகிறார்கள். உலக வரலாறு காலனிய காலகட்டம் என்ற ஒன்றைக் கண்டுள்ளது. பிரிட்டிஷ், ஒல்லாந்து, பிரெஞ்சு, ஸ்பானிய, போர்த்துகீச ஐரோப்பியர்கள் உலகம் முழுவதையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தார்கள். அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். அவர்கள் கைப்பற்றிய புதிய பிரதேசங்களில் கிறிஸ்தவ மதத்தை பரப்பினார்கள். அதற்கு இலகுவாக பைபிளை பல உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்து போதித்தார்கள்.

பைபிள் என்பது ஆங்கில உச்சரிப்பு. பிபிலியோ (Biblio) என்றால் கிரேக்க மொழியில் புத்தகம் என்று அர்த்தம். போர்த்துகீச மொழிப் பெயரான பிபிலியா (Bíblia) என்ற சொல் தான் தமிழில் "விவிலியம்" என்று மாறியது. ஐரோப்பாவில் கிரேக்க, லத்தீன் மொழிகளைத் தவிர்ந்த பிற மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே இருந்தன. 

பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களுக்கு தெரிந்த முதலாவது நூலும் பைபிள் தான். தனது பெயரைக் கூட எழுதப், படிக்கத் தெரியாத மக்கள் தான் ஞாயிறு பூசைக்கு தேவாலயங்களுக்கு சமூகமளித்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு புத்தகத்தை காட்டி, இது ஆண்டவர் எமக்கு வழங்கியது என்று சொன்னால், கண்ணை மூடிக் கொண்டு நம்புவார்கள்.

லத்தீன் மொழியில் கைகளால் எழுதப்பட்டிருந்த பைபிளை, லத்தீன் மொழி படித்த பாதிரிகள் மட்டுமே வாசிக்க முடிந்தது. பைபிள் எழுதும் அல்லது பிரதி பண்ணும் வேலையில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க துறவிகள் ஈடுபட்டிருந்தார்கள். மடாலயத்தில் வசித்த அவர்களின் வேலை அது மட்டும் தான். 

அது ஒன்றும் இலகுவான காரியமல்ல. நாள் முழுக்க உட்கார்ந்து மையைத் தொட்டுத் தொட்டு எழுதிக் கொண்டிருக்க வேண்டும். இன்று நாம் கிறுக்குவது போல எழுத முடியாது. நுணுக்கமாக படம் வரைவது போன்ற, அழகான கையெழுத்தாக இருக்க வேண்டும். தாளுக்கு பதிலாக பதனிடப்பட்ட மாட்டுத் தோல் பயன்படுத்தப் பட்டது. நெதர்லாந்து மொழியில் Monniken werk (துறவியின் வேலை) என்று ஒரு சொல் வழக்கத்தில் உள்ளது. ஒரே இடத்தில் இருந்து செய்யும் நுணுக்கமான வேலையை அப்படி சொல்வார்கள்.

ஆனால் துறவிகள் எழுதும் பைபிளை வாசிப்பதற்கு பொது மக்களுக்கு அனுமதி இருக்கவில்லை. கத்தோலிக்க மதகுருக்களுக்கு மட்டுமே உள்ள விசேஷ உரிமை அது. அது மட்டுமல்ல, பைபிளை மொழிபெயர்ப்பது தடைசெய்யப்பட்டு இருந்தது. ஐரோப்பாவில் லத்தீன் மேட்டுக்குடியினர் பேசும் மொழியாக இருந்தது. சாதாரண மக்கள் வேறு மொழிகளைப் பேசினார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு எல்லாம் அந்தக் காலத்தில் "பட்டிக்காட்டான் பேசும் தாழ்ந்த பாஷைகளாக" இருந்தன. 

சாதாரண குடிமகனும் பைபிளை படித்து புரிந்து கொள்வதை வத்திகான் விரும்பவில்லை. கத்தோலிக்க தலைவர் பாப்பரசர் (போப்பாண்டவர்) "மொழிபெயர்ப்புத் தடை" உத்தரவைப் பிறப்பித்திருந்தார். பைபிள் லத்தீன் மொழியிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும். அதனை வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பது ஆண்டவருக்கு எதிரான பாவகாரியம் என்று அறிவித்தார். பாப்பரசரின் உத்தரவை மீறி மொழிபெயர்க்க முனைந்தவர்கள் கிறிஸ்தவ மதத் துரோகிகளாக கருதப்பட்டனர். துரோகத்திற்கு தண்டனை மரணம். விவிலிய நூலில் எழுதியிருக்கும், கர்த்தரின் நற்செய்தியை வாசித்தவர்கள் அனைவரும், உயிரோடு கொளுத்தப்பட்டு பரலோகம் சென்றனர்.


2.
இன்று லத்தீன் மொழி வழக்கொழிந்து விட்டது. இதனால் லத்தீன் பைபிளை வாசித்து புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மிகக் குறைவாகவே இருப்பர். வத்திக்கானில் கடமையாற்றும் போப்பாண்டவர், கார்டினல்கள், மற்றும் உலகெங்கும் கிறிஸ்தவ இறையியல் கற்கும் மாணவர்கள் லத்தீன் மொழி படித்துள்ளனர். விரல் விட்டு எண்ணக் கூடிய இந்த சிறு கூட்டத்தை தவிர வேறு யாருக்கு லத்தீன் மொழி தெரியும்? பைபிளை மொழிபெயர்க்கக் கூடாது என்ற தடைச்சட்டம் இன்று வரை தொடர்ந்திருந்தால், இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும்? 

கிறிஸ்தவ மதத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட "நாஸ்திக" ஐரோப்பாவில், இன்று லத்தீன், கிரேக்க மொழிகள் அனைத்து பள்ளிப் பிள்ளைகளுக்கும் போதிக்கப்படுகின்றன. (முன்னாள் சோஷலிச நாடுகளிலும் அந்த பாடத்திட்டம் பின்பற்றப் பட்டது.)பலர் இவற்றை படிப்பதில் அக்கறை காட்டா விட்டாலும், குறைந்த பட்சம் விவிலிய நூலில் எழுதியுள்ள சொற்களின் அர்த்தங்களை புரிந்து கொள்ளவாவது உதவுகின்றது. நானும் தான் கிரேக்க, லத்தீன் மொழிகளைப் படித்திருக்கிறேன்.ஆனால் எனது கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகளை எதிர்க்கும் எத்தனை பேருக்கு இந்த மொழிகள் தெரியும்?

மொழிபெயர்க்கும் பொழுது தவிர்க்கவியலாது சில இடங்களில் அர்த்தம் மாறுபடுவதும் நடந்துள்ளது. இன்று ஆங்கிலத்தில் மட்டும் இரண்டு டசின் மொழிபெயர்ப்புகள் (
Timeline of Bible Translation History) வந்து விட்டன. (கர்த்தரே! எது சரியானது?) ஒவ்வொன்றும் எங்கோ ஒரு இடத்தில் வித்தியாசப்படும். 19 ம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு அன்க்லிகன் திருச்சபையை சேர்ந்த இறையியல் அறிஞர்கள் (Brooke Foss Westcott; Fenton John Anthony Hort) பைபிளை கிரேக்க மொழியில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்தார்கள். அதுவே இன்று சிறந்த மொழிபெயர்ப்பாக (The New Testament In The Original Greek) கருதப்படுகின்றது. 

அனேகமாக தமிழ் விவிலிய நூலும் அதை தழுவியே மொழிபெயர்த்திருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், உலகில் மிகச் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பை செய்த அறிஞர்கள் மத நம்பிக்கையற்றவர்கள்! டார்வினின் பகுத்தறிவுக் கொள்கையிலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு காட்டியவர்கள். பரிபூரணமான பைபிள் மொழிபெயர்ப்புக்காக, கிறிஸ்தவர்கள் இரண்டு நாஸ்திகர்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது.வெட்கக்கேடு.

பைபிள் ஆண்டவரால் அருளப்பட்ட நூல் என்பதால், எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் ஒன்றாகவே இருக்கும் என்று பல கிறிஸ்தவர்கள் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்னர், ஒரு புரட்டஸ்தாந்து சபையினர் ஒழுங்கு செய்த பைபிள் வகுப்புகளில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. 

அந்த இடம், நெதர்லாந்து நாட்டுப்புறக் கிராமம் என்பதால், அருகில் இருந்த அகதி முகாமை சேர்ந்த பன்னாட்டு அகதிகள் கலந்து கொண்டார்கள். அரபு, ரஷ்ய, ஜோர்ஜிய, தமிழ் மொழி பேசுவோர் தம்மோடு அந்தந்த மொழிகளில் இருந்த பைபிளையும் கையோடு எடுத்து வந்திருந்தார்கள். பைபிள் வகுப்பை ஒழுங்கு படுத்தியவர்கள், டச்சு, ஆங்கில மொழிப் பிரதிகளுடன் காத்திருந்தார்கள்.

பைபிளை வாசிக்கும் பொழுது, அது அங்கே பல மொழிகளிலும் புரிந்து கொள்ளப்பட்டது. ஆயினும் டச்சு, ஆங்கில மொழிகள் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்டன. (நானே ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கில, டச்சு மொழி பைபிள்களை மாறி, மாறி வாசித்திருக்கிறேன்.) ஒரே அத்தியாயத்தை சேர்ந்த, ஒரே வரிகள் ஒவ்வொரு மொழியிலும் எவ்வாறு மாறுபடுகின்றது என்பதை அப்பொழுது புரிந்து கொள்ள முடிந்தது. வகுப்பை ஒழுங்கு படுத்திய கிறிஸ்தவ சபையை சேர்ந்த நெதர்லாந்துக்காரர்கள் சிறிது குழம்பிப்போனார்கள். 

"கர்த்தர் எதற்காக தனது சொந்த நூலிலேயே அடிக்கடி முரண்படுகிறார்?" எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. (பல அப்போஸ்தலர்கள் எழுதிய சுவிசேஷங்களுக்கிடையில் முரண்பாடுகள் காணப்படுவது வேறு விடயம்.)எல்லோருக்கும் பொதுவாகத் தெரிந்த பைபிளைத் தவிர, மோர்மன், ஜெஹோவா பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தமக்கென தனியான பைபிளை தயாரித்துள்ளார்கள். மோர்மன்களின் பைபிளில் மோர்மன் என்ற சொல்லும், ஜெஹோவாக்களின் பைபிளில் அடிக்கடி ஜெஹோவா என்ற சொல்லும் இடம்பெறும்.


3.
பைபிளின் மூல நூல் லத்தீன் மொழியில் மட்டும் எழுதப்படவில்லை. லத்தீன் பைபிள் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். பழைய ஏற்பாடு ஹீபுரு (எபிரேய), அரமைக் மொழிகளில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு முழுக்க முழுக்க கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இயேசுவின் பன்னிரு சீடர்களும் ஒன்றில் யூதர்களாக, அல்லது கிரேக்கர்களாக இருந்தனர். 

இயேசு என்பது அரமைக் பெயர், கிறிஸ்து என்பது கிரேக்கப் பெயர். இயேசுவின் போதனைகளை ஐரோப்பாவுக்கு பரப்பச் சென்றவர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள். அப்போஸ்தலர்கள் கிரேக்க மொழியில் எழுதிய சுவிசேஷங்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் யூதாஸ் எழுதிய சுவிசேஷம் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அது பைபிளில் சேர்க்கப்படவில்லை.

இன்று பைபிளில் காணப்படும் சுவிசேஷங்கள் மட்டும் தான் எழுதப்பட்டன, என்று நம்புவது வரலாறு தெரியாதவர்களின் அறியாமை. கிறிஸ்தவ மதம் நிறுவனமயப்பட்ட காலங்களில் எத்தனையோ சுவிசேஷங்கள் அழிக்கப்பட்டு விட்டன.கிரேக்கத்தில் (இன்று துருக்கி இருக்கும் இடம்) ஞானவாத கிறிஸ்தவ பிரிவு (Gnosticism) பரவலான மக்கள் ஆதரவை பெற்றிருந்தது. "இனோசிஸ்" (ஆங்கிலத்தில் : knowledge)என்ற கிரேக்க சொல்லில் இருந்து அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது. ஆனால் இன்றுள்ள கிரேக்க பழமைவாத (ஓர்தோடொக்ஸ்) கிறிஸ்தவ பிரிவு அரச ஆதரவைக் கொண்டிருந்தது. 

இரண்டு மதப் பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி தத்துவப் போர்கள் நடந்தன. ஞானவாத கிறிஸ்தவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். சபையை சேர்ந்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் எழுதி வைத்த தத்துவங்களும் அழிக்கப்பட்டன. "நன்மைகளின் உலகம், தீமைகளின் உலகம்" என்ற ஈருலகக் கோட்பாடு அவர்களுடையது. ஞானவாத கிறிஸ்தவர்கள் பொருளாயவாத உலகை சாத்தானின் படைப்பாக கருதினார்கள். தேவாலயம் கூட ஒரு பொருள் என்பதால், அதனை அவர்கள் எற்றுக் கொள்ளவில்லை.

ஏற்கனவே பைபிளில் சேர்க்கப்பட்டுள்ள "வெளிப்பாடு" (இறுதி அத்தியாயம்) என்ற சுவிசேஷத்தை என்ன காரணத்திற்காகவோ, கிறிஸ்தவர்கள் படிக்க விரும்புவதில்லை. "கத்தோலிக்க மடாதிபதி பாப்பரசர் சாத்தானின் அவதாரம்." என்ற அர்த்தம் வரும் சில வரிகள் அதிலே எழுதப்பட்டுள்ளன. (நேரடியாக குறிப்பிடவில்லை.) அதற்காக வத்திகான் அந்த இறுதி அத்தியாயத்தை மக்களின் கண்களில் இருந்து மறைத்து வைக்க விரும்பியதாக கூறப்படுகின்றது. 

"வெளிப்பாடு" எழுதிய அப்போஸ்தலர் யானிஸ் ("ஜோன்" என்று ஆங்கிலத்தில் சொன்னால் தான் உங்களுக்கு புரியும்) பட்மொஸ் தீவில் அந்த சுவிசேஷத்தை எழுதினார். அவர் அங்கே மறைந்து வாழ்ந்ததாக கருதப்படுகின்றது. துருக்கிக்கு அருகில் உள்ள அந்த சிறு தீவில் இருந்து கொண்டே, பல எதிர்காலக் காட்சிகளை மனக்கண்ணால் கண்டுள்ளார். ஊழிக்காலத்தை எதிர்வு கூறிய ஒரு தீர்க்கதரிசியின் வாசகங்களைப் படிப்பதற்கு பல கிறிஸ்தவர்கள் பயப்படுகிறார்கள்.


4.
மேற்கு ஐரோப்பாவில், லத்தீனை தவிர வேறு எந்த மொழியும் எழுத்து வடிவம் கொண்டிருக்கவில்லை. அனேகமாக மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் அந்த மொழிகளில் எழுதப்பட்ட முதலாவது நூலாக இருக்கும். கத்தோலிக்க அதிகாரத்திற்கு எதிராக, செல்வச் செழிப்பில் வாழ்ந்த ஊழல்மய மதகுருக்களுக்கு எதிராக மார்ட்டின் லூதர் போர்ப் பிரகடனம் செய்தார். 

ஜெர்மன் மொழியில் எதிர்ப்பு எனப் பொருள்படும் "Protest" என்ற பெயரில் புதிய இயக்கம் பைபிளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தது. அதன் பின்னரே, டச்சு, பிரெஞ்சு, ஆங்கில மொழிபெயர்ப்புகள் துணிச்சலுடன் வெளிவந்தன. புரட்டஸ்தாந்து அமைப்பு தோன்றும் வரையில், மொழிபெயர்த்த பைபிளை வைத்திருப்பது பாரதூரமான குற்றமாக கருதப்பட்டது. 

1517 ம் ஆண்டு, அதாவது புரட்டஸ்தாந்து கிளர்ச்சி இடம்பெற்ற அதே காலப்பகுதியில், இங்கிலாந்தில் ஏழு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். உள்ளூர் கத்தோலிக்க தேவாலயத்தால் மரண தண்டனை வழங்கப்படும் அளவிற்கு அவர்கள் செய்த குற்றம் என்ன? அந்த ஏழு குற்றவாளிகளும் யாரையாவது கொலை செய்தார்களா? இல்லை. தமது பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியில் ஜெபம் செய்ய சொல்லிக் கொடுத்தது தான் அவர்கள் செய்த மாபெரும் குற்றம்! ஆமாம், அந்தக் காலத்தில் ஜெபம் செய்வது கூட லத்தீன் மொழியில் தான்.

1380 ம் ஆண்டு, இங்கிலாந்தை சேர்ந்த
John Wycliffe, என்ற கிறிஸ்தவ இறையியல் பயின்ற அறிஞர் பைபிளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். பாப்பரசர் எத்தனை தடை போட்டும், மிரட்டியும் அஞ்சாமல் தனது முயற்சியை தொடர்ந்தார். அவரும், அவரது ஆதரவாளர்களும் கையால் எழுதி பூர்த்தி செய்த பைபிளை மேலும் பல பிரதிகள் எடுத்தார்கள். முதன் முதலாக ஆங்கில மொழியில் வெளியான பைபிள் அது தான். John Wycliffe இறந்த பின்னரும் பாப்பரசரின் கோபம் அடங்கவில்லை. "கிறிஸ்தவ மதத்துரோகி" யின் புதைக்கப்பட்ட உடல் தோண்டியெடுக்கப்பட்டு எலும்புகள் பொடிப்பொடி ஆக்கப்பட்டன.

John Wycliffe பைபிளை படித்து மொழிபெயர்த்ததுடன் மட்டும் நிற்கவில்லை. கத்தோலிக்க தேவாலய மதகுருக்களின் ஊழலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடினார். உண்மையான கிறிஸ்தவன் ஏழ்மையில் வாழ வேண்டும் என நம்பியவர். ஒரு நேர்மையான கனவானின் பின்னால் மக்கள் அணிதிரண்டதில் வியப்பில்லை. 

அப்படியானால் அன்றைக்கு கத்தோலிக்க மதகுருக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகளை தன்னலம் கருதும் ஊழல் பெருச்சாளிகளாக நீங்கள் பார்க்கிறீர்கள். அதே போலத்தான், அன்றைக்கிருந்த ஐரோப்பிய மக்கள் கத்தோலிக்க மதகுருக்களை பார்த்தார்கள். ஆமாம், கத்தோலிக்க மதவாதிகள் ஆட்சி செய்த ஐரோப்பா, தேவகுமாரனின் பரிசுத்த ராஜ்ஜியமாக இருக்கவில்லை.


5.
இன்றைக்கு கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பிஷப், பாதிரிகள் துறவற வாழ்க்கை வாழ்கின்றனர். கர்த்தரின் திருப்பணிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்று, நீங்கள் அவர்கள் மீது பெரு மதிப்பு வைத்திருக்கிறீர்கள். ஆனால் ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் அவ்வாறான நிலை இருக்கவில்லை. வத்திகானில் முடிசூடா மன்னனாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த முதலாவது போப்பாண்டவர் பீட்டர் திருமணம் செய்தவர். அது வரலாற்றில் பதியப்படுமளவிற்கு, எல்லோருக்கும் தெரியும். 

பிஷப்கள் முதல் சாதாரண கிராமப்புற பாதிரி வரையில் திருமணம் செய்து குழந்தைகளை பெற்று குடும்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஒரு காலத்தில் மதகுருக்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கத்தோலிக்க திருச்சபை சுற்றறிக்கை அனுப்பியது. அதற்குப் பிறகு ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. சட்டப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்வதை விட, பல பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வது அவர்களுக்கு இலகுவாக இருந்தது.

சுவிட்சர்லாந்துக்கு அருகில் உள்ள பிரான்சின் நகரமான லியோனில் இருந்து ஆட்சி செய்த கத்தோலிக்க மதகுரு, சினிமாவில் வரும் வில்லன் போல அனைத்து கெட்ட பழக்கங்களையும் கொண்டிருந்தார். அக்கம் பக்கம் இருந்த ஊரெல்லாம் அவரது அட்டகாசம் கொடி கட்டிப் பறந்தது. "லியோன் தாதா" வின் கொடுமை கண்டு பொங்கி எழுந்த வால்டோ
(Peter Waldo) என்ற வர்த்தகர், மக்களை திரட்டி சீர்திருத்த இயக்கம் ஒன்றை தொடங்கினார்(1170)தனது சொத்தை எல்லாம் தேவாலயத்திற்கு என எழுதிக் கொடுத்து விட்டு, களத்தில் இறங்கினார். 

ஆரம்பத்தில் வால்டோவின் சீர்திருத்த இயக்கத்திற்கு போப்பாண்டவர் அனுமதி வழங்கினார். (மதப் பிரசங்கம் செய்பவர் போப்பாண்டவரின்  அனுமதி பெற்றே செய்ய வேண்டும்.) ஆனால் வால்டோவின் போராட்டம் லியோன் ஊழல் பெருச்சாளிக்கு எதிராக திரும்பியதும் அனுமதியை ரத்து செய்து விட்டார்.

இதற்கிடையே வால்டோ பைபிளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் வேலையிலும் ஈடுபட்டார். (அபச்சாரம்! அபச்சாரம்!!) அது மட்டுமல்ல வால்டோ குழுவினரின் தேவாலயங்களில் பெண்களும் மதகுருக்களாக பூசை செய்ய முடிந்தது. (தெய்வ குற்றம்! கர்த்தருக்கே பொறுக்காதே!!) வால்டோ குழுவினருக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களும் போதுமானதாக இருந்தன. 

போப்பாண்டவர் அனுப்பிய சிறப்புப் படையணி வால்டோ குழுவினரின் இருப்பிடங்களை முற்றுகையிட்டு வேட்டையாடியது. வால்டோ குழு உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்ட போதிலும், மலைகளுக்குள் மறைந்து கொண்டனர். வால்டோ குழுவினர், சுவிட்சர்லாந்தின் வொட் (Vaud) என்ற மாநிலத்தில் நீண்டகாலம் தாக்குப் பிடித்தனர். பிரெஞ்சு மொழியில் வோடுவா (Vaudois) என்ற பெயரே பின்னர், (ஜெர்மன் மொழியில்) வல்டோ குழு என்று திரிபுற்றதாக சொல்லப்படுகின்றது.

கிறிஸ்தவ மதம் தோன்றி ஆயிரம் வருடங்கள் கழிந்த பின்னர் தான் பைபிளை மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடந்துள்ளன. அதற்கு என்ன காரணம்? அந்தக் காலகட்டத்தில் தான் ஐரோப்பாவில் புதிய நகரங்கள் உருவாகின. நகரமயமான சமுதாயத்தில் புதிய சிந்தனைகளுக்கான தேடல் ஏற்பட்டது. வர்த்தகர்கள் தொழில் நிமித்தம் உலக அறிவு கைவரப் பெற்றிருந்தனர். சிலர் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டனர். 

மறுபக்கத்தில் நிலப்பிரபுத்துவ பொருளாதார முறை தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. அரசியல் அதிகாரம் (கத்தோலிக்க) மதகுருக்களின் கைகளில் இருந்து, மன்னர்களின் கைகளுக்கு மாறிக் கொண்டிருந்தது. சுருக்கமாக, ஐரோப்பா ஒரு சமூகப் புரட்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. தவிர்க்கவியலாது மதம் குறித்த அறிவுத் தேடலும் அந்தப் புரட்சியின் ஒரு அங்கமாகியது. 

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிறிஸ்தவர்களை விட, இன்றுள்ள கிறிஸ்தவர்கள் தமது மதத்தைப் பற்றி அதிகம் அறிந்து வைத்துள்ளனர். அதற்கு அவர்கள் தமது உயிரை துச்சமாக மதித்து போராடிய சில சமூக விடுதலைப் போராளிகளுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர்.


கிறிஸ்தவ மதம் குறித்த மேலதிக வாசிப்புக்கு உதவும் முன்னைய பதிவுகள்:
1.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
3.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்

63 comments:

Pragash said...

கலையகத்தில் இன்னொரு விறுவிறுப்பான விவாத மேடையை எதிர்பார்க்கலாம் போல் தெரிகிறது.ஐரோப்பிய மதவரலாறுகள் பற்றி அறிய மேலும் ஆவலாய் இருக்கிறேன். நிச்சயமாய் மதவாதிகள் இவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

FRIENDS said...

GREAT ARTICLE....CARRY ON... IM WITH U...

Kalaiyarasan said...

பிரகாஷ், மதவாதிகள் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் அவர்களே இதையெல்லாம் இப்போது தான் புதிது புதிதாக அறிந்து கொள்கிறார்கள்.

Foods4Smart said...

இப்படியான பல சுவாரசியமான கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன். நன்றி

Sunthar Sharma said...

Still original bible manuscripts which are written 150 A.D are there and all those resources are on the internet you can do a small search about it! Also Roman Catholism started after 350 A.D But chritians and Christianity was there before that! I'm a Bhramin writting this first study the HISTORY first there are lots of information given wrong!

Kalaiyarasan said...

சுந்தர் சர்மா, என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்த கட்டுரையில் உள்ள தகவல்களும் இணையத்தில் காணப்படுகின்றன. அதற்கான உசாத்துனைகளையும் கொடுத்துள்ளேன். மேலும் இவையெல்லாம் ஒரு சாதாரண ஐரோப்பியனுக்கு புதிய விஷயங்கள் அல்ல. ஐரோப்பிய பாடநூல்களில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவை தான்.

Haazi said...

வாழ்த்துக்கள்,

தயவுசெய்து கிருகிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் பிரச்சினை பற்றி ஒரு முழுமையான கட்டுரை தர முடியுமா?
Advance..நன்றிகள்

Kalaiyarasan said...

//தயவுசெய்து கிருகிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் பிரச்சினை பற்றி ஒரு முழுமையான கட்டுரை தர முடியுமா?
Advance..நன்றிகள்//

அந்தப் பிரச்சினை குறித்த தகவல்களை இரண்டு மாதங்களுக்கு முன்பே சேர்த்து வைத்திருந்தேன். நேரம் கிடைக்காததால் எழுதவில்லை. இப்போது அந்தப் பிரச்சினை ஓய்ந்து விட்டதால் கொஞ்சம் தாமதிக்க வேண்டியுள்ளது.

Sabarinathan Arthanari said...

முக்கிய தகவல்கள்

நன்றி

Anonymous said...

”மதவாதிகள் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக தெரியவில்லை”

உண்மைதான் கலையரசன். இருந்தபோதிலும் இந்தியாவில் ஜாகிர் நாயக்கும், பீஜேவும் சற்று ரீல் விட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுபோன்று இஸ்லாம் பற்றிய வரலாற்றுப் பதிவு ஒன்றை எழுதினால் நன்றாக இருக்கும்.
நன்றி.

A man said...

I agree many parts of your article. However, there are a few irrelevant information.

Examples:
// நானும் தான் கிரேக்க, லத்தீன் மொழிகளைப் படித்திருக்கிறேன்.ஆனால் எனது கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகளை எதிர்க்கும் எத்தனை பேருக்கு இந்த மொழிகள் தெரியும்?//

எனக்கு மூல வேதாகம மூலமொழிகளாகிய எபிரேயமும் கிரேக்கமும் தெரியும்.

//இயேசு என்பது அரமைக் பெயர், கிறிஸ்து என்பது கிரேக்கப் பெயர்.//

இயேசு மற்றும் கிறிஸ்து என்பன தமிழ் பெயர்கள். ஆங்கிலத்தில் ஜீசஸ் (Jesus) என்றும் கிரைஸ்ட் (Christ) என்றும அழைப்பர். மூல மொழியாகிய எபிரேயத்தில் யோசுவா (יֵשׁוּעַ) என்றும் மெசியா (מָשִׁיחַ) அழைக்கப்படும்.

I do a research about Bible translation and I plan to write a book. Definitely, many Christian will roar.

//ஏற்கனவே பைபிளில் சேர்க்கப்பட்டுள்ள "வெளிப்பாடு" (இறுதி அத்தியாயம்) என்ற சுவிசேஷத்தை என்ன காரணத்திற்காகவோ, கிறிஸ்தவர்கள் படிக்க விரும்புவதில்லை.//

I am a Christian. I do read often. You can’t simply point your fingers brother.


//கிறிஸ்தவ மதம் நிறுவனமயப்பட்ட காலங்களில் எத்தனையோ சுவிசேஷங்கள் அழிக்கப்பட்டு விட்டன.//

சுவிசேஷங்கள் என்பன கிறிஸ்தவ உண்மைகளின் அடிப்படையில் அமைந்திருக்கும். அவ்வாறு இல்லாதவை சுவிசேஷங்கள் அல்ல.

Sunthar Sharma said...

கிறிஸ்தவமும் ரோமன் கத்தோலிக்கமும் இரு வேறு மதப்பிரிவுகள் உதாரணமாக இந்து புத்த மதங்களை போன்றன அவற்றை வேறுபடுத்தி வரலாற்றை ஆராய்ந்து எழுதுவீர்களாயின் பின்வருமாறு எழுதியிருக்கவேண்டியிருக்காது
"ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிறிஸ்தவர்களை விட, இன்றுள்ள கிறிஸ்தவர்கள் தமது மதத்தைப் பற்றி அதிகம் அறிந்து வைத்துள்ளனர். அதற்கு அவர்கள் தமது உயிரை துச்சமாக மதித்து போராடிய சில சமூக விடுதலைப் போராளிகளுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர்."

Rathna said...

இங்கே நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் ஆதாரப் பூர்வமானவைகள் என்று சொன்னாலும் மதம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயமாக கருதுவதே மதவாதிகளின் முதல் விவாதமாக இருக்கும் என்றால் விசுவாசம் ஒன்று மட்டுமே போதுமானது, ஏனென்றால் பைபிளில் கூறி இருப்பது போல 'விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியானது' மட்டுமே.

எனக்கு ஆதாரங்கள் பற்றிய உண்மைகளையோ விவாதங்களின் தீர்வைப்பற்றியோ அறிந்து கொள்ளும் ஆவல் இருப்பதில்லை ஏனெனில் எனக்குள் அல்லது என்னில் இருக்கிறவர் நடத்துகிற அதிசயமிக்க காரியங்களை என்னால் நன்கு உணர முடிகிறது மட்டுமே எனக்கு தீர்வான, போதுமான ஆதாரங்கள், இதனால் நான் பைபிளில் எழுதபட்டிருக்கும் செய்திகளை உதாசீனப்படுத்துவதில்லை, அவற்றை மட்டுமே நம்பி நான் ஏசு கிறிஸ்த்துவை ஏற்றுக்கொள்ளவில்லை, இதனால் எனது நம்பிக்கையின் மூலப் பொருள் எனக்குள் அவர் செய்யும் கிரியைகள் மட்டுமே.

என்னைப்போன்ற கோடானு கோடி மக்களும் அப்படித்தான் ஏசு கிறிஸ்த்துவை வணங்குகின்றனர் என்பதும் நான் அறிந்த உண்மை. இதைவிட வேறு அத்தாட்ச்சிகளோ வரலாறுகளோ தேவைப்படுவதில்லை.

Sunthar Sharma said...

இயேசு கிறிஸ்த்துவின் பின்னர் வாழ்ந்த கிறிஸ்த்தவர்கள் ஒரே நம்பிக்கையையே அன்றிலிருந்து இன்றுவரை கொண்டிருக்கின்றனர். அவர்கள் வேதாகமத்தை மொழிப்பெயர்ப்பதை வரவேற்கின்றனர் அனால் ரோமன் கத்தொலிகமோ அதை எதிர்த்தது காரணம் வேதாகமத்தை மக்கள் வாசிப்பின் தங்களது பிழைகளை அறிந்துவிடுவர் என்று. ரோமன் கத்தோலிக்க பாதிரியாரான மார்டின் லூதர் அவ்வாறு வாசிக்கும் போதுதான் 95 பிழைகளை கண்டுபிடித்தார்.

"கிறிஸ்தவ மதம் நிறுவனமயப்பட்ட காலங்களில் எத்தனையோ சுவிசேஷங்கள் அழிக்கப்பட்டு விட்டன"
இதுவரையில் கிறிஸ்த்தவ மதம் நிறுவனமயப்படவிலை ரோமன் கத்தோலிக்கம் தான் நிறுவனமயப்படுள்ளது கிறிஸ்த்தவர்கள் எப்போதும் சபையும் அரசாங்கமும் வெவ்வேறாக செயற்படுவதையே வலியுறுத்தியிருக்கின்றனர்.

Foods4Smart said...

இது போன்ற இஸ்லாமிய கட்டுரைகளையும் எழுத வேண்டுகிறேன்.

Anonymous said...

ரத்னாபீட்டர்ஸ்,
காற்று, நெருப்பு, போன்றவற்றை வணங்கிய மனிதன் அவற்றின் சக்தியைப் பற்றி அறிந்துகொண்ட பிறகு ப்பூ இவ்வளவுதானா என்று அவற்றைத் தங்களது கடவுள் லிஸ்டில் இருந்து எடுத்துவிட்டான். பின்புதான் கடவுள் என்பவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றும் ஒரு அமானுஷ்ய சக்தி நம்மை கட்டுப்படுத்துகிறது என்பதாகவும் கதையளந்தார்கள். இந்த அமானுஷ்ய சக்தியின் முடிச்சைத்தான் அறிவியல் அவிழ்த்துக் கொண்டு வருகிறது.
”என்னில் இருக்கிறவர் நடத்துகிற அதிசயமிக்க காரியங்களை என்னால் நன்கு உணர முடிகிறது.” என்று நீங்கள் கூறுவது உங்களினுள் ஏற்படும் ஒரு பிரம்மை அல்லது மற்றவர்களை ஏமாற்றப் பயன்படுத்தும் வார்த்தை ஜாலங்கள். அதையே கோடானகோடி மக்களும் நம்புகின்றனர் என்பது உங்களுடைய பித்தலாட்டம். தங்களது இன்னல்களுக்கு விடைதெரியாத மக்கள், தங்களை கடவுள் காப்பாற்றமாட்டாரா? என்றுதான் மதங்களிடம் சரணடைகின்றார்.
ஒரு ஆதாரத்தின் மூலம் கடவுள் நம்பிக்கையை ஒழித்துவிடமுடியாதுதான். இச்சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வான பொருளாதார உறவுகள், நாளைய உணவு குறித்த அச்சம், நோய் குறித்த அச்சம் போன்ற இவைகள் களையப் படும்போது மதம் மனித மூளையிலிருந்து ஒழிந்துவிடும். ஒழிக்கப்படும்.

Kalaiyarasan said...

A man
//இயேசு மற்றும் கிறிஸ்து என்பன தமிழ் பெயர்கள். ஆங்கிலத்தில் ஜீசஸ் (Jesus) என்றும் கிரைஸ்ட் (Christ) என்றும அழைப்பர். மூல மொழியாகிய எபிரேயத்தில் யோசுவா (יֵשׁוּעַ) என்றும் மெசியா (מָשִׁיחַ) அழைக்கப்படும்.//

தங்களது விபரமான பின்னூட்டத்திற்கு நான் மரியாதை கொடுக்கிறேன்.
இருப்பினும் இயேசுவின் பெயர் பற்றிய விபரம் கிறிஸ்தவ மதவாதிகளின் பிரச்சாரத்திற்கு உட்பட்டதாக கருதுகின்றேன். முதலில் நான் கூறியது இயேசு கிறிஸ்து என்ற பெயர் பற்றிய விபரம். அதன் உச்சரிப்பு வெவ்வேறு மொழிகளில் மாறுபடுகின்றது. அதைத் தான் நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். பைபிளில் வரும், பெத்லஹெமில் பிறந்த இயேசு என்ற நபர் பற்றி தான் நான் குறிப்பிட்டேன். அந்தக் காலம் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த இஸ்ரேலில் வாழ்ந்த யூதர்கள் அரமைக் மொழி பேசினார்கள். இயேசுவும் அந்த மொழி பேசியிருக்கலாம் என்பது பல ஆராய்ச்சிகளின் பின்னர் நிரூபிக்கப்பட்டது. ஆகையினால் அரமைக் மொழி பேசும் இனத்தில் பிறந்த பலருக்கு இயேசு என்ற பெயர் இருந்திருக்க வாய்ப்புண்டு அல்லவா?

நீங்கள் இயேசுவுக்கு எபிரேய மொழியில் மேசியா என்று பெயர் என்று சொல்வதை யூதர்கள் எதிர்ப்பார்கள். (நான் கூட அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வேறு விடயம்.) யூதர்கள் இன்று வரை இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. கிறிஸ்தவர்கள் மட்டுமே இயேசுவை மேசியா (மீட்பர்) என்று அழைக்கிறார்கள். ஆனால் இயேசுவை அப்படி அழைப்பதை யூதர்கள் வெறுக்கிறார்கள். ( யூத நண்பர்களுடன் பழகும் பொழுது நானே நேரடியாக பார்த்திருக்கிறேன்) யூதர்களைப் பொறுத்த வரையில் "இயேசு ஒரு யூத மதத் துரோகி. தன்னைத் தானே மேசியா என்று அழைக்கும் மோசடிக்காரன்." அதனால் தான் அவரை சிலுவையில் அறைய வேண்டும் என்று யூதர்கள் ஒற்றைக் காலில் நின்றார்கள். (இதெல்லாம் பைபிளில் புதிய ஏற்பாட்டில் எழுதப் பட்டுள்ளன.)
அப்படி இருக்கையில் அவருக்கு எபிரேய மொழியில் மேசியா என்று பெயர் என்று அர்த்தம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

யோசுவா என்பது இயேசுவின் காலத்திற்கு முன்னர் வாழ்ந்த யூத தீர்க்கதரிசி ஒருவரின் பெயர். யூதர்களின் மேசியா யோசுவாவும், இயேசுவும் ஒன்றல்ல. பைபிளை மீண்டும் ஒரு தடவை ஆறுதலாக வாசிக்கவும்.

It is important that we understand what’s happening in the NT and where the name Jesus comes from and what its usage is intended to achieve.

Jesus was not the name of Jesus Christ i.e. the Messiah. His name was Yoshua or Joshua in the English usage, which is not a hard J but a soft J. The name Joshua has been consistent in English usage for thousands of years. It applies to the OT and the NT characters. The Greek of the NT uses the forms, which were found in the Septuagint translation of the Hebrew Scriptures, which were translated in Alexandria some three hundred years before Christ.
(http://www.ccg.org/english/s/p134.html)

Anonymous said...

"இயேசுவும் அந்த மொழி பேசியிருக்கலாம் என்பது பல ஆராய்ச்சிகளின் பின்னர் நிரூபிக்கப்பட்டது"

ஆனால் இயேசு வாழ்ந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்று http://senkodi.wordpress.com/2010/04/25/cave-bhuddah/ இப்பதிவு உணர்த்துகிறதே.

A man said...

//அரமைக் மொழி பேசும் இனத்தில் பிறந்த பலருக்கு இயேசு என்ற பெயர் இருந்திருக்க வாய்ப்புண்டு அல்லவா?//

நீங்கள் இயேசுவுக்கு எபிரேய மொழியில் மேசியா என்று பெயர் என்று சொல்வதை யூதர்கள் எதிர்ப்பார்கள்.//

True.

As you said Yeshua is a common name for Hebrew/Aramaic person. Christians believe Jesus (Yeshua) as Messiah. எனக்கு அதிகமான, பலதரப்பட்ட யூத நண்பர்கள் உண்டு. அதற்காக இயேசுவை மெசியா என்று சொல்வதை நிறுத்த முடியாது. வரலாற்றைப் பார்த்தீர்கள் என்றால் இதற்காக உயிர்விட்டோர் அதிகம். அவர்களால் கொல்ல மட்டுந்தான் முடியும்.


// யோசுவா என்பது இயேசுவின் காலத்திற்கு முன்னர் வாழ்ந்த யூத தீர்க்கதரிசி ஒருவரின் பெயர். யூதர்களின் மேசியா யோசுவாவும், இயேசுவும் ஒன்றல்ல.//

பெத்தலகேமில் பிறந்து, நாசரேத்தில் வளர்ந்து, ஜெருசலேமில் சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விட்ட பின்பு, உயிர்த்தெழுந்த யோசுவாதான் (Jesus) மெசியா. அவர்தான் யூதர்கள் எதிர்பார்த்த மெசியா. அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர் மெசியாவின்றி விடுவாரா?


//பைபிளை மீண்டும் ஒரு தடவை ஆறுதலாக வாசிக்கவும்.//

என் வாழ்வில் தவிர்க்க முடியாத பகுதி வேதாகமம். நீங்கள் குறிப்பிடும் பகுதி அங்கு இல்லை.

Kalaiyarasan said...

கலை, "இயேசு என்ற ஒருவர் வாழ்ந்திருந்தால்" என்பது ஒரு அனுமானம் மட்டுமே. அதனை இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் கிறிஸ்தவர்களைப் பொறுத்த வரை இயேசு என்ற ஒருவர் வாழ்ந்ததாக நம்புகின்றனர். முஸ்லிம்களும் நம்புகின்றனர். யூதர்களைப் பொறுத்தவரை இயேசுவைப் பற்றி பேசுவதே சம்பந்தமில்லாத ஒன்று.
முன்னர் ஒரு நண்பர் குறிப்பிட்டது போல புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பு இயேசுவை யோசுவாவுடன் சேர்த்துக் குழப்புகின்றது. இது ஒன்றில் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறாக இருக்கலாம். அல்லது அந்தக் காலத்தில் யூதர்கள் மத்தியில் வாழ்ந்த பல தீர்க்கதரிசிகளில் (கவனிக்கவும்) ஒருவர் பின்னர் எமக்கு எல்லாம் தெரிந்த இயேசு கிறிஸ்துவாக மாற்றப்பட்டிருக்கலாம்.

ஞானவாத கிறிஸ்தவ பிரிவு இந்த கோட்பாட்டை தத்துவார்த்த அடிப்படையில் விளக்குகின்றது. இயேசு என்பது மனிதனுக்குள் இருக்கும் கடவுள் என்று கூறுகின்றது. இது பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போம்.

A man said...

//இயேசு வாழ்ந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்று http://senkodi.wordpress.com/2010/04/25/cave-bhuddah/ இப்பதிவு உணர்த்துகிறதே.//

கலை & கலையரசன் …

யூத வரலாற்றாசிரியர் Yosef Ben Matityahu (காலம் 37 – 100 AD) ஆதாரப்படுத்துகிறார். மேலும் பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. அவற்றையும் படித்துப்பாருங்கள்

Rathna said...

நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் அதாவது //ஏமாற்றப் பயன்படுத்தும் வார்த்தை ஜாலங்கள்//, //உங்களுடைய பித்தலாட்டம்// போன்றவற்றிலிருந்து, விவாதத்தில்
அவரவர் கருத்துக்களை முன் வைக்கலாம் ஆனால் அடுத்தவரை இழிவுபடுத்தக் கூடாது என்கின்ற தனி மனித ஒழுக்கம் இல்லை என்பது தெளிவாகிறது, அறிவியலை நம்பிக்கொண்டிருக்கும் மனித இனம் எவ்வாறு அவற்றால், இறுமாப்பால் அழியப் போகிறது என்பதையும் நாம் கண் கூடாக காணப்போகிறோம்.
அறிவியலால் மழை நீர் காற்று செடி கொடி வான் சூரியன் சந்திரன் கடல் இன்னும் எல்லாவற்றையும் படைக்க அல்லது உண்டாக்க முடியுமா, அல்லது இறக்கவிருக்கும் ஒருவனை இறக்காமல் எப்போதும் வாழச் செய்வதற்கு இயலுமா, அண்டார்டிக்காவில் உருகும் பனி மலைகளை உருகாமல் காக்க இயலுமா, ஆங்காங்கே அதிர்வுகளை ஏற்ப்படுத்தி மக்களை பிணங்களாக்கும் பூமியதிர்ச்சியை நிறுத்த இயலுமா, எரிமலை சீற்றத்தை கட்டுபடுத்த முடிகிறதா, அறிவியலின் சக்த்தியால் கடவுள் இல்லை என்று சொல்லும் அறிவியலுக்கு இந்த சக்திகள் எல்லாம் உண்டா, அப்படி இருக்குமென்றால் இவற்றை எல்லாம் சரியாக்க வேண்டியது தானே. ஏன் செய்யவில்லை.

Anonymous said...

//பரிபூரணமான பைபிள் மொழிபெயர்ப்புக்காக, கிறிஸ்தவர்கள் இரண்டு நாஸ்திகர்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது.வெட்கக்கேடு.//

கொமினிச சார்பு பேசும் நீங்கள் முதலாளித்துவ நாட்டை அண்டி பிழைப்பது உங்களுக்கு வெட்கக்கேடாகத் தெரியவில்லையா? உங்கள் வெறுப்புக்களை வெறும் கடின மற்றும் கிண்டல் சொற்களாக பாவிப்பதை விட்டுவிட்டு ஆக்க பூர்வமான கருத்துக்ளை முன் வையுங்கள்.

Sunthar Sharma said...

"ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிறிஸ்தவர்களை விட, இன்றுள்ள கிறிஸ்தவர்கள் தமது மதத்தைப் பற்றி அதிகம் அறிந்து வைத்துள்ளனர். அதற்கு அவர்கள் தமது உயிரை துச்சமாக மதித்து போராடிய சில சமூக விடுதலைப் போராளிகளுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர்."

"பைபிளை படித்ததின் முலமே சாதாரண மக்கள் கிறிஸ்தவர்களானார்கள் பின்னர் அவர்கள் சமூக விடுதலைப் போராளிகளானார்கள்"

கிறிஸ்தவ சீர்திருத்தவாதிகள் தான் மதசுதந்திரத்தை உலகுக்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டாம்.

இந்நாட்களில், அநேகருக்குத் தெரிந்திராத, சிலருக்கு மட்டுமே பரிச்சயமான, “கிருபையின் போதனைகள்” (The Doctrines of Grace) என்று அழைக்கப்படுகின்ற போதனைகள்தான் கிறிஸ்தவத்திற்க்கு அடிப்படையாய் அமைந்துள்ளன அவற்றை ஆராய்ந்து பார்க்க முடியுமாயின் மாத்திரமே கிறிஸ்தவம் என்ன்றால் என்ன என்பதை அறிந்துகொள்ளமுடியும்.
அவ்வாறு இல்லாதவிடத்து கிறிஸ்தவமும் ரோமன் கத்தோலிக்கமும் கலந்த சாம்பாறுதான் ஆக்கங்களாகும்.

இவ் ஆக்கத்தில் கிறிஸ்தவர்கள் என்ன செய்தார்கள் ரோமன் கத்தோலிக்கம் என்ன செய்தது என்பதை பிரித்துக்காட்ட முடிந்தால் நீங்கள் விட்டிருக்கும் தவறுகள் உங்களுக்கே தெரியவரும்.

Kalaiyarasan said...

//கொமினிச சார்பு பேசும் நீங்கள் முதலாளித்துவ நாட்டை அண்டி பிழைப்பது உங்களுக்கு வெட்கக்கேடாகத் தெரியவில்லையா? உங்கள் வெறுப்புக்களை வெறும் கடின மற்றும் கிண்டல் சொற்களாக பாவிப்பதை விட்டுவிட்டு ஆக்க பூர்வமான கருத்துக்ளை முன் வையுங்கள்.//
அனானி நண்பரே, நீங்கள் சொல்வது இனவாதம் சார்ந்தது என்பதால், அதனை திருத்திக் கொள்ள வேண்டுகிறேன். "வளைகுடா முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும். இந்து நாடான இந்தியாவில் இருந்தும், பௌத்த நாடான சிறி லங்காவில் கிறிஸ்தவர்களுக்கு என்ன வேலை?" என்று யாராவது கேட்டால் அதனை ஆதரிப்பீர்களா? எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக பாடுபடுபவர்கள் கொம்யூனிஸ்ட் தான். அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.
மேலும் முதலாளித்துவ நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் முதலாளிகளா? கொம்யூனிசம் தொழிலாளர்களின் அல்லது ஏழைகளின் சித்தாந்தம் என்பதை நீங்கள் படிக்கவில்லையா? முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர்கள், ஏழைகள் யாரும் இல்லையா? இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை ஆக்கபூர்வமான கருத்துகள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?(சரித்திரபூர்வமான சான்றுகள் பல கொடுக்கப்பட்டுள்ளன) அல்லது புரிந்தும் புரியாதது மாதிரி நடிக்கிறீர்களா?

Kalaiyarasan said...

சுந்தர் சர்மா, உங்கள் கருத்துகளில் இருந்து நீங்கள் பெந்தெகொஸ்தே (எவன்கேலி) சபையை சேர்ந்தவராக தெரிகின்றது. அவர்கள் தான் கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்று கூறுகிறார்கள். அதே போல கத்தோலிக்கர்கள் தாம் மட்டுமே உண்மையான கிறிஸ்தவர்கள் என்று சொல்கிறார்கள். பெந்தெகொஸ்தே சபைகளை சேர்ந்தவர்கள் மத அடிப்படைவாதிகள் (தாலிபான், பின்லாடன் வகையறா) என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். கத்தோலிக்கர்களும் நீங்களும் ஒருவரை மற்றவர் கிறிஸ்தவர் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், உலகில் கிறிஸ்தவர் என்று யாருமே இல்லை.

சுந்தர் சர்மா, நீங்கள் ஒரு உண்மையை உணர மறுக்கிறீர்கள். கத்தோலிக்க மதம் நிறுவனப் படுத்தப் படாதிருந்தால், இன்றைக்கு நீங்களே இப்படி எல்லாம் எழுதியிருக்க மாட்டீர்கள். கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவிலும், பின்னர் உலகம் முழுவதும் பரவுதற்கு கத்தோலிக்க மத அரசியல் அதிகாரம் நிலை நாட்டப்பட்டமை முக்கிய காரணம். மேலும் இன்று கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் அனைவரும் கத்தோலிக்க மதம் எழுதிய பைபிளில் உள்ள சுவிசேஷங்கள் மட்டுமே உண்மை என்று நம்புகிறார்கள். கிறிஸ்தவ மதம் தோன்றிய காலத்தில் எழுதப்பட்ட வேறு சில சுவிசேஷங்கள் கத்தோலிக்க அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன. கத்தோலிக்க மதவெறியர்களால் அழிக்கப்பட்ட சுவிசேஷங்களை நீங்கள் இன்றும் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக கத்தோலிக்க மதத்திற்கு முந்திய "ஞானவாத கிறிஸ்தவம்", "யூதாஸ் எழுதிய சுவிசேஷம்" பற்றிய உங்கள் கருத்து என்ன? ஒன்றுமேயில்லை.

Anonymous said...

//எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக பாடுபடுபவர்கள் கொம்யூனிஸ்ட் தான்.//


நீங்கள் குறிப்பிட்ட வளைகுடா முஸ்லிம் நாடுகள், இந்தியா, இலங்கை போன்றவற்றில் உதாரணம் காட்டுங்கள். ஏன் கொமினிச நாடுகளில்தானும் உங்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?

Kalaiyarasan said...

//நீங்கள் குறிப்பிட்ட வளைகுடா முஸ்லிம் நாடுகள், இந்தியா, இலங்கை போன்றவற்றில் உதாரணம் காட்டுங்கள். ஏன் கொமினிச நாடுகளில்தானும் உங்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?//

அனானி நண்பரே, வளைகுடா முஸ்லிம் ஆட்சியாளர்களும் உங்களைப் போல கம்யூனிச வெறுப்பாளர்கள் தான். அவர்கள் தமது நாடுகளில் கம்யூனிசத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார்கள். அப்படி இருந்தும் ஓமானில் கம்யூனிச புரட்சியாளர்கள் பல வருடங்களாக போராடினார்கள். அவர்கள் பெரும்பாலும் தென் ஓமானை சேர்ந்த சிறுபான்மை இனக்குழுவை சேர்ந்தவர்கள். ஈராக், சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் முக்கியமாக கிறிஸ்தவர்களும், வேறு சில மதச் சிறுபான்மையினரும் கம்யூனிஸ்ட்களாக இருந்தார்கள்.

இந்தியாவில் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் இனவழிப்பு கலவரத்தை கம்யூனிஸ்ட்கள் கடுமையாக கண்டித்து வந்துள்ளனர். இந்துத்வா மத வெறியர்களுக்கு எதிராக போராடினார்கள். இலங்கையில் சிங்கள பேரினவாதம் தமிழ் சிறுபான்மையினர் மீது தொடுத்த முதலாவது தாக்குதல், மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது. அதற்கு காரணம், பெரும்பாலான மலையகத் தமிழர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்து வந்தார்கள். யாழ்ப்பாணத்தில் தம்மை சிறுபான்மைத் தமிழர் என்று அழைத்துக் கொண்ட தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் உரிமைகளுக்காக கம்யூனிஸ்ட்கள் போராடினார்கள். அந்தக் காலங்களில் உயர்த்தப்பட்ட சாதியினர் பேரினவாத அரசின் அடக்குமுறை இயந்திரமான போலிசை வைத்து அடக்குமுறையை ஏவி விட்டார்கள். (அன்று யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய சிறி லங்கா போலீஸ்காரர்கள் அனைவரும் உயர்சாதி வெள்ளாளர்கள்.)

சோவியத் யூனியன் உருவான காலத்தில் சிறுபான்மை இனங்களுக்கு தனியான சுயாட்சிப் பிரிவுகள் கொண்டுவரப்பட்டன. அந்த சுயாட்சிப் பிரதேசங்கள் இன்றைக்கும் உள்ளன. இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இன்னொரு சோஷலிச நாடான யூகோஸ்லேவியாவிலும் ஒவ்வொரு இனத்திற்கும் தனியான சுயாட்சிப் பிரதேசங்கள் இருந்தன.

Sunthar Sharma said...

ஒருவர் சொலுகிறார் என்பதற்காக அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இங்கு யார் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதை பற்றிச் சொல்ல வரவில்லை. மாறாக ஒரு ஆக்கம் எழுதும்போது சரியாக ஆராய்ந்து (யார் என்ன செய்தார்கள் என்பதை )எழுதவேண்டும் அதை விடுத்து உங்களது குறுகிய அறிவை எல்லோரும் ஏற்றுக்கொள்ள எதிபார்ப்பதுதான் தவறு.

பெந்தெகொஸ்தே சபைகளை சேர்ந்தவர்கள் - http://www.bible.ca/tongues-encyclopedia-pentecostal-preachers.htm , http://www.bible.ca/tongues-kundalini-shakers-charismastics.htm எவ்வாறு கிறிஸ்தவர்களால் வேறேபடுத்தப்படுகிறார்கள் என்பதை மேலுள்ள இணைப்பில் பார்க்கவும்

"உங்கள் கருத்துகளில் இருந்து நீங்கள் பெந்தெகொஸ்தே (எவன்கேலி) சபையை சேர்ந்தவராக தெரிகின்றது."

கிறிஸ்தவத்திற்ரு சார்பாக கருத்து சொலும்போது "அவர் கிறிஸ்த்தவன்னயிருப்ப்பதால் தான் இவ்வாறு சொல்லுகிறார்" என்கிற உங்கள் அனுமானம் இங்கே பிழைக்கிறது.
இன்றும் ரோமன் கத்தோலிக்க மதத்தினருடைய பைபிள் 72 புத்தகங்களை கொண்டுள்ளது கிறிஸ்தவர்களுடயது 66 புத்தகங்களை கொண்டுள்ளது.

"கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவிலும், பின்னர் உலகம் முழுவதும் பரவுதற்கு கத்தோலிக்க மத அரசியல் அதிகாரம் நிலை நாட்டப்பட்டமை முக்கிய காரணம்."
எவ்வாறு? கத்தோலிக்க மத அரசியல் அதிகாரம் பைபிளளை மக்கள் வாசிக்கவிடாது தடுத்ததின் மூலமாகவ?

"கிறிஸ்தவ மதம் தோன்றிய காலத்தில் எழுதப்பட்ட வேறு சில சுவிசேஷங்கள் கத்தோலிக்க அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன."
இவற்றை பற்றின ஆதரங்களோடு கிறிஸ்தவகளை அணுகினால் ஒருவேளை கிறிஸ்தவர்கள் ஏற்ற்றுக்கொளுவார்கள்

"இதனால் நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், உலகில் கிறிஸ்தவர் என்று யாருமே இல்லை."
அப்படியானால் ஏன் "கிறிஸ்தவர்" என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளீர்கள்

Kalaiyarasan said...

சுந்தர் சர்மா, அடிக்கடி உண்மையான கிறிஸ்தவர்கள் பற்றி பேசுகின்றீர்கள். அவர்கள் யார்? எங்கே இருக்கிறார்கள்? ஒரு வேளை நீங்கள் மட்டும் தான் அந்த உண்மையான கிறிஸ்தவராக இருக்கலாம்.

//இவற்றை பற்றின ஆதரங்களோடு கிறிஸ்தவகளை அணுகினால் ஒருவேளை கிறிஸ்தவர்கள் ஏற்ற்றுக்கொளுவார்கள்.//

நான் ஏற்கனவே இது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். (கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏ சரி, உங்களைப் பொறுத்த வரை எனக்கு தான் குறுகிய அறிவு. எகிப்தில் நாஜ் ஹமாடி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சுவடிகளைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது ஒரு காலத்தில் கத்தோலிக்க அல்லது கிரேக்க கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்ட பைபிள். எப்படியோ ஒரு பிரதியை கவனமாக பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார்கள். அது தான் நாஜ் ஹமாடியில் கண்டெடுக்கப்பட்ட ஆவணம்.

Gospel of Thomas

Anonymous said...

திரு. கலையரசன் அவர்களே, தங்களின் வாதத்தில் நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக உங்களது எதிர்ப்பை எல்லா கிறிஸ்தவர்கள் மேலும் மேற்கொள்வது எவ்வகையில் நியாயம்? குற்றவாளிகளை குற்றப்படுத்துங்கள் நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

உங்களுக்கு கிறிஸ்தவத்தில் உள்ள குறைகள் மட்டும்தான் தெரிகின்றன. நிறைகளும் இருக்கின்றன நண்பரே! இயேசு கூறிய ஒன்றை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்

'உங்களில் பாவமில்லாதவன் ... முதலாவது கல்லெறியக்கடவன்'

Anonymous said...

//இன்று கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் அனைவரும் கத்தோலிக்க மதம் எழுதிய பைபிளில் உள்ள சுவிசேஷங்கள் மட்டுமே உண்மை என்று நம்புகிறார்கள்.//

கிறிஸதவம் நிறுவனமயப்பட முன்னரே 4 சுவிசேஷங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அத்தோடுகூட அந்நான்கு சுவிசேஷங்கள் பழைய ஏற்பாட்டு உண்மைக்கு ஏற்ப காணப்படுகின்றன. இதுபோன்ற பல காரணங்கள் 4 சுவிசேஷங்களை ஏற்றுக் கொள்ளச் செய்தன. ஆகவே அவற்றை வேறுபிரிக்க வேண்டியதல்ல.


//கத்தோலிக்க மதத்திற்கு முந்திய "ஞானவாத கிறிஸ்தவம்", "யூதாஸ் எழுதிய சுவிசேஷம்" பற்றிய உங்கள் கருத்து என்ன? ஒன்றுமேயில்லை.//

// நாஜ் ஹமாடியில் கண்டெடுக்கப்பட்ட ஆவணம். - Gospel of Thomas//


திருமுறை சாராத பகுதிகளை பைபிளில் சேர்ப்பதில்லை. அதாவது பழைய ஏற்பாட்டு உண்மைக்கு ஏற்ப அமையப்படாதவை. முழு பைபிளையும் படித்து ஆராந்தாலன்றி இவற்றை விளங்கிக் கொள்வது கடினம்.

Kalaiyarasan said...

//அதற்காக உங்களது எதிர்ப்பை எல்லா கிறிஸ்தவர்கள் மேலும் மேற்கொள்வது எவ்வகையில் நியாயம்?//
நண்பரே, இயேசுவை கிறிஸ்தவர்களிடமிருந்து விடுதலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இயேசு சொன்ன பல நல்ல கருத்துகளை நானும் வரவேற்கிறேன். அவற்றில் பல புரட்சிகரமானவை. இந்த கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரில் ஒரு மதத்தை உருவாக்கி விட்டார்கள். நிச்சயமாக இயேசு இன்று இருந்தால் கிறிஸ்தவர்களின் செயலைப் பார்த்து வேதனைப் பட்டிருப்பார்.

ஒரு வியாபாரி தான் விற்கும் பொருளைப் பற்றி எப்போதும் நிறைவாக சொல்லிக் கொண்டிருந்தால் என்ன கூறுவோம்? அவர் தனது பொருளை விற்று லாபம் சம்பாதிக்கும் தன்னலத்திற்காக அப்படி செய்கிறார் என்று சொல்லுவோம் அல்லவா? ஆனால் ஆன்மீகவாதிகளான மத நம்பிக்கையாளர்கள் எதற்காக தமது மதத்தின் நிறைகளைப் பற்றி மட்டுமே கூறிக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் தமது மதத்தில் உள்ள குறை, நிறை இரண்டையும் சொல்லிக் கொண்டிருந்தால் அவர்களது நேர்மையை பாராட்டலாம். ஆனால் அப்படி நேர்மையாக நடக்கும் மதவாதியை எங்கேயாவது கண்டிருக்கிறீர்களா? இது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல எல்லா மதத்தை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

//குற்றவாளிகளை குற்றப்படுத்துங்கள் நானும் ஏற்றுக் கொள்கிறேன்.//

எனது கட்டுரைகள் குற்றவாளிகளைப் பற்றி மட்டுமே பேசியிருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தின் பெயரால் கொடுமை செய்த குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட அப்பாவி கிறிஸ்தவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஒரு உண்மையான கிறிஸ்தவன் நான் எழுதியவற்றோடு முரண்பட மாட்டான்.

//உங்களுக்கு கிறிஸ்தவத்தில் உள்ள குறைகள் மட்டும்தான் தெரிகின்றன. நிறைகளும் இருக்கின்றன நண்பரே! இயேசு கூறிய ஒன்றை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்
'உங்களில் பாவமில்லாதவன் ... முதலாவது கல்லெறியக்கடவன்'//

இயேசு மத நிறுவனத்திற்கு எதிரானவர். ஆலயத்தை சந்தையாக்கிய கயவர்களைப் பார்த்து கோபம் கொண்டவர். கர்த்தரின் பெயரால் பணம் சேர்ப்பதை எதிர்த்தார். தானே அப்படிப்பட்டவர்கள் மீது வன்முறை பிரயோகித்தார். அப்படிப் பட்ட ஒரு புரட்சிக்காரனின் பெயரால் தேவாலாயம் கட்டுவதும், ஒரு மதம் இயங்குவதும் பாவமாக தெரியவில்லையா? எல்லோரிலும் குறை இருக்கிறது தானே, எல்லோரும் பாவம் செய்தவர்கள் தானே என்று கூறி விட்டு போக முடியாது. மதத்தின் பெயரால் கொடுமை செய்யும் கயவர்களுக்கு எதிரான போராட்டம் நியாயமானது. அன்று இயேசு சொன்னதை அதே கருத்துகளை நான் இன்று சொல்கிறேன்.

Kalaiyarasan said...

//திருமுறை சாராத பகுதிகளை பைபிளில் சேர்ப்பதில்லை. அதாவது பழைய ஏற்பாட்டு உண்மைக்கு ஏற்ப அமையப்படாதவை. முழு பைபிளையும் படித்து ஆராந்தாலன்றி இவற்றை விளங்கிக் கொள்வது கடினம்.//

எது திருமறை சார்ந்தவை, எது சாராதவை என்று கூறுவதற்கு யாருக்கும் ஏகபோக உரிமை கிடையாது. அப்படி ஒரு ஏகபோக உரிமையை கர்த்தர் யாருக்கும் வழங்கவில்லை. (இது என்ன வியாபாரமா ஏகபோக உரிமை கொண்டாடுவதற்கு?)
யூதர்களின் புனித நூலான "தோரா" வை தான் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாடு என்று அழைக்கிறார்கள். புதிய ஏற்பாடு மட்டுமே இயேசுவின் சரிதத்தையும், போதனைகளையும் கூறுகின்றது. புதிய ஏற்பாட்டை யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை அவர்கள் உங்கள் பாணியிலேயே "திருமறை சாராத பகுதிகள்" என்று கூறி வருகின்றனர். முழு பைபிளையும் இன்று வரை யாரும் படிக்கவில்லை. ஏனென்றால் பைபிளின் பல பகுதிகள் அதிகாரத்திற்கான சண்டையால் அழிக்கப்பட்டு விட்டன. மதப்போரில் வென்றவர்கள் தமக்கு சார்பான பகுதிகளை மட்டுமே பைபிளில் சேர்த்துக் கொண்டார்கள். எப்போதும் வென்றவர்கள் தானே சரித்திரத்தை எழுதுகிறார்கள்? தோற்றவர்களின் பக்க நியாயங்களை வருங்கால சந்ததி அறியாதவாறு மூடி மறைப்பார்கள். கிறிஸ்தவ மத வரலாற்றிலும் அது தான் நடந்தது.

Anonymous said...

//மதத்தின் பெயரால் கொடுமை செய்யும் கயவர்களுக்கு எதிரான போராட்டம் நியாயமானது.//

சாத்தியமா? ஏளனமாக கேட்கவில்லை, ஆவலில் கேட்கிறேன். எப்போதும் மக்கள் கூட்டம் பலமுள்ளவர்களையே சாரும். வரலாறு எமக்கு புகட்டும் பாடம் இது. நான் கூட அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். புரட்சியாளர்கள் மிகவும் குறைவு. அவர்களுக்கான ஆதரவும் அப்படியே.

Anonymous said...

//இயேசு சொன்னதை அதே கருத்துகளை நான் இன்று சொல்கிறேன்.//


இயேசு மெசியா இல்லையென்றும் அவர் சரித்திரத்தில் வாழவே இல்லையென்றும் வாதிட்ட நீங்கள் இப்போது அவர் கருத்தை சொல்ல முற்படுவது சற்று நெருடலாக உள்ளது. முன்னுக்குப் பின் முரண்பாடு கூடாது நண்பரே.

Kalaiyarasan said...

//இயேசு மெசியா இல்லையென்றும் அவர் சரித்திரத்தில் வாழவே இல்லையென்றும் வாதிட்ட நீங்கள் இப்போது அவர் கருத்தை சொல்ல முற்படுவது சற்று நெருடலாக உள்ளது.//

இதில் எந்த முரண்பாடும் இல்லை நண்பரே. இயேசு என்ற ஒருவர் சொன்ன கருத்துகள் என்று பைபிளில் எழுதி வைத்துள்ளார்கள். இயேசு என்பது ஒரு கற்பனைப் பாத்திரமாக இருந்தாலும், அவர் சொன்னதாக சில நல்ல கருத்துகளும் எழுதப்பட்டுள்ளன. அந்தக் கருத்துகள் பல நியாயமானவை. அவற்றைக் சுட்டிக் காட்டி கூறினால், இயேசுவை என்று ஒருவர் வாழ்ந்ததாக ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் அல்ல. அவற்றை ஏற்றுக் கொள்பவர் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே என்பது உங்கள் அறியாமையைக் காட்டுகின்றது. மதம் என்ற கிணற்றில் இருந்து வெளியே வந்தால் தான் இதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

Anonymous said...

//அவற்றை ஏற்றுக் கொள்பவர் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே என்பது உங்கள் அறியாமையைக் காட்டுகின்றது.//

உங்கள் கட்டுரைகள், பதில்கள் என்பவற்றை கூர்ந்து நோக்கினால்: உங்கள் உணர்வுபூர்வ வெளிப்பாடுகளை காணக்கூடியதாக உள்ளது. மற்றவரை எளிதில் தீர்ப்பிடும் உங்களை செயற்பாடுகளை கைவிட்டு கருத்தினால் தீர்ப்பிட கற்றுக் கொள்ளுங்கள். எனக்கு அறியாமை என்று கூற உங்கள் அறியாமை கூட காரணமாகலாமல்லவா?

//மதம் என்ற கிணற்றில் இருந்து வெளியே வந்தால் தான் இதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.//


நாஸ்தீகம் என்ற கிணற்றில் இருந்து வெளியே வந்தால் தான் இதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

Anonymous said...

// மதப்போரில் வென்றவர்கள் தமக்கு சார்பான பகுதிகளை மட்டுமே பைபிளில் சேர்த்துக் கொண்டார்கள். எப்போதும் வென்றவர்கள் தானே சரித்திரத்தை எழுதுகிறார்கள்? தோற்றவர்களின் பக்க நியாயங்களை வருங்கால சந்ததி அறியாதவாறு மூடி மறைப்பார்கள். கிறிஸ்தவ மத வரலாற்றிலும் அது தான் நடந்தது.//இது உங்கள் வாதம். கிறிஸ்தவர்கள் போரில் ஈடுபட முன்னரே அதாவது அவர்கள் மற்றவர்களால் வேட்டையாடப்படும்போது எழுதப்பட்டவைதான் அவை. வீணாக திரிபுபடுத்தக் கூடாது.

Anonymous said...

//எது திருமறை சார்ந்தவை, எது சாராதவை என்று கூறுவதற்கு யாருக்கும் ஏகபோக உரிமை கிடையாது. அப்படி ஒரு ஏகபோக உரிமையை கர்த்தர் யாருக்கும் வழங்கவில்லை. (இது என்ன வியாபாரமா ஏகபோக உரிமை கொண்டாடுவதற்கு?)//


உங்களுக்கு யார் தந்தது நாஜ் ஹமாடியில் கண்டெடுக்கப்பட்ட ஆவணம் (Gospel of Thomas) மற்றும் பிற நூல்கள் எல்லாம் பைபிளின் பகுதிகள் என்று உரிமைகோர?

என்னால் விளக்கமளிக்க முடியும் ஏன் அவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று? உங்களால் முடியுமா ஏன் அவை சேர்த்துக் கொள்ள முடியும் என்று?

Anonymous said...

//யூதர்களின் புனித நூலான "தோரா" வை தான் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாடு என்று அழைக்கிறார்கள்.//

உங்களுக்கு இருக்கும் பைபிள் பற்றிய அறியாமைக்கு உங்கள் கூற்றே சிறந்த உதாரணம். 'தோரா' என்பது யூதர்களின் புனித நூலின் ஒரு பகுதி. அவர்களின் புனித நூலைத்தான் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாடு என்று அழைக்கிறார்கள்

Anonymous said...

//யூதர்களைப் பொறுத்த வரையில் "இயேசு ஒரு யூத மதத் துரோகி. தன்னைத் தானே மேசியா என்று அழைக்கும் மோசடிக்காரன்." அதனால் தான் அவரை சிலுவையில் அறைய வேண்டும் என்று யூதர்கள் ஒற்றைக் காலில் நின்றார்கள்.//

இது அவர்களின் விதண்டாவாதம். கருத்தளவில் அவர்களால் நிரூபிக்க முடியாது.

Anonymous said...

((நீங்கள் குறிப்பிட்ட வளைகுடா முஸ்லிம் நாடுகள், இந்தியா, இலங்கை போன்றவற்றில் உதாரணம் காட்டுங்கள். ஏன் கொமினிச நாடுகளில்தானும் உங்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?))

என்ற பகுதிக்கு நீங்கள் கொடுத்த உதாரணங்கள் ஏதோ ஒரு காலத்தில் நடந்தவை. தற்போதைய கொமினிஷ யதார்த்தத்தைப்பாருங்கள். தமிழீழ விடயத்தில் அவர்கள் சிறிலங்காவிற்கு கொடுத்த ஆதரவைப்பாருங்கள். ஆனால், கொமினிஷம் ஒன்றும் சிறந்ததல்ல. அதிகாரத்திற்கு வருபவர்கள் அடக்கி ஆளுகிறார்கள். மதமோ, அரசோ இதுதான் யதார்த்தம். சுயநலமிக்க உலகமிது. இதில் கொமினிஷம் என்ன? முதலாளித்துவம் என்ன?

Kalaiyarasan said...

//என்ற பகுதிக்கு நீங்கள் கொடுத்த உதாரணங்கள் ஏதோ ஒரு காலத்தில் நடந்தவை. தற்போதைய கொமினிஷ யதார்த்தத்தைப்பாருங்கள். தமிழீழ விடயத்தில் அவர்கள் சிறிலங்காவிற்கு கொடுத்த ஆதரவைப்பாருங்கள்.//

தமிழீழ தேசியவாதிகள் என்றைக்கும் தம்மை கம்யூனிஸ்ட்களாக காட்டிக் கொண்டதில்லை. கம்யூனிச நாடுகளின் ஆதரவை எதிர்பார்த்ததுமில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதுமில்லை. அவர்கள் எப்போதும் அமெரிக்காவையும் பிற மேற்குலக நாடுகளையும் தான் நம்பியிருந்தார்கள்.

நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டு பேசுகின்றீர்கள். சிறிலங்கா அரசுக்கு எதிரெதிரான கொள்கை கொண்ட நாடுகள் எல்லாம் ஒரே அணியில் நின்று ஆதரவளித்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், அமெரிக்கா, பிரிட்டன் இப்படிப் பல. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதரவை நீங்கள் குறிப்பிட்டு பேச மாட்டீர்கள். ஏனென்றால் இன்று நேற்றல்ல, காலங்காலமாக நீங்கள் ஒரு மேற்குலக அபிமானி, கம்யூனிசத்தை வெறுப்பவர்.

Anonymous said...

//தமிழீழ தேசியவாதிகள் என்றைக்கும் தம்மை கம்யூனிஸ்ட்களாக காட்டிக் கொண்டதில்லை. கம்யூனிச நாடுகளின் ஆதரவை எதிர்பார்த்ததுமில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதுமில்லை. அவர்கள் எப்போதும் அமெரிக்காவையும் பிற மேற்குலக நாடுகளையும் தான் நம்பியிருந்தார்கள்.//

அதற்காக ஒதுக்கப்படும் தமிழ் மக்களுக்கு எதிராக கொமினிஷ நாடுகள் ஈடுபடலாமா? இது கொமினிஷ சித்தாந்தமா?


//இன்று நேற்றல்ல, காலங்காலமாக நீங்கள் ஒரு மேற்குலக அபிமானி, கம்யூனிசத்தை வெறுப்பவர்.//

இல்லை. பாடசாலையில் படித்த காலம் தொட்டு கொமினிஷத்தின்பால் ஈர்க்கப்பட்டவன். என்னைப் பொறுத்தவரையில் அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே, கனடா போன்ற நாடுகள் ரவுடிகள். ஆனால் கொமினிசம் பேசிய நாடுகள் ஈழத்தமிழர் விடயத்தில் ரவுடிகளாக போனது எவ்வகையில் நியாயம்? சுயநல கொள்கையல்லவா? கடைசியாக நான் மதித்த ஒரே கொமினிச வீரன் சேகுவேரா. அதற்கு பின் கொமினிசமும் செத்துவிட்டது.

Kalaiyarasan said...

//அதற்காக ஒதுக்கப்படும் தமிழ் மக்களுக்கு எதிராக கொமினிஷ நாடுகள் ஈடுபடலாமா? இது கொமினிஷ சித்தாந்தமா? //

தமிழ் மக்களின் தலைவர்கள் தங்களுக்கு தேவையில்லை என்று புறக்கணித்த கம்யூனிச நாடுகளை நீங்கள் வம்புச் சண்டைக்கு இழுப்பது ஏன்?

Anonymous said...

//தமிழ் மக்களின் தலைவர்கள் தங்களுக்கு தேவையில்லை என்று புறக்கணித்த கம்யூனிச நாடுகளை நீங்கள் வம்புச் சண்டைக்கு இழுப்பது ஏன்? //


கொமினிசம் தலைவர்களைப் பார்க்கிறதா? மக்களைப் பார்க்கிறதா?

Kalaiyarasan said...

//கொமினிசம் தலைவர்களைப் பார்க்கிறதா? மக்களைப் பார்க்கிறதா?//

தமிழ் தேசியவாத தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அது தான் வெளியுலகில் எடுபடுகின்றது. ஏனென்றால் அவர்களிடம் தான் ஊடக பலம் உள்ளது. தமிழ் மக்களுக்கு என்று தனியான குரல் இல்லை. இருந்திருந்தால் தமிழ் மக்களிடையே காலங்காலமாக இருந்து வரும் தொழிலாளர் பிரச்சினை, சாதிப்பிரச்சினை, வறுமைப் பிரச்சினை எல்லாம் முன்னுக்கு வந்திருக்கும். தமிழ் மக்களுக்கு இப்படியான பிரச்சினை இருப்பதாக தமிழ் தலைவர்கள் காட்டிக் கொள்ள விரும்பியதில்லை. அவர்கள் தமிழர்கள் அனைவரும் ஒரே இனமாகப் பார்த்தார்கள். தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு பேசினார்கள். தமிழீழம் கிடைத்தால் சிங்கப்பூராக்கி காட்டுவோம் என்றனர். (தமிழீழம் இன்னொரு முதலாளித்துவ தேசமாகும் என்பதை ஒரு நாளும் மறைக்கவில்லை.)

தமிழ் மக்களிடையே வர்க்க வேறுபாடு இருப்பதாக எந்தவொரு தமிழ் தலைவராவது கூறியிருக்கிறாரா? கம்யூனிசத்தின் அடிப்படையே அது தானே?

ஷாகுல் said...

//இந்து நாடான இந்தியாவில் இருந்தும்//

India not belongs to hindus it is belongs to peoples. this is stupid statement.

Unknown said...

சர்மா ஏன் இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கிறார்?
குர் ஆனில் 1400 வருடங்கள்ககு முன் கூறப்பட்டுள்ள விடயங்களை தற்போதைய விஞ்ஞானம் புதிதாக கண்டுபிடிக்கிறது. என்னைப் பொருத்த வரை குர் ஆன் ஒன்றே உண்மையான வேதநூல். அது இறைவனின் படைப்புகளைப்பற்றி மனிதர்கள் சிந்திப்பதை தூண்டுகிறது. இதங்கு என்ன பதில் கலை?

Anonymous said...

//என்னைப் பொருத்த வரை குர் ஆன் ஒன்றே உண்மையான வேதநூல். //

இப்படித்தான் ஒவ்வொருவரும் கூறிக்கொள்கிறார்கள். குர் ஆன் இல் உள்ள பிழைகள் உங்களுக்குத் தெரியுமா? அத்தோடு குர் ஆன் யூதர்களினதும் கிறிஸ்தவர்களினதும் எச்சம் தானே. இந்துக்களைப் போன்று தனியான வேத நூல் இருந்தால் நீங்கள் பெருமையடிக்கலாம்.

Anonymous said...

//கம்யூனிசத்தின் அடிப்படையே அது தானே?//

கம்யூனிச நாடுகளுக்கு எதுவுமே தெரியாததுபோல் பேசாதீகள். அங்கு இருந்து கொண்டு கட்டுரை எழுதும் உங்களுக்கு எங்கள் வலி தெரியாது. அடிபட்டவர்கள் எங்களுக்கு உள்ள வேதனையும் கோபமும் உங்களுக்கு புரியாது. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் புரியும்.

Kalaiyarasan said...

//தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் புரியும்.//

மிகச் சரியாக சொன்னீர்கள். தாயகத்தில் போரினால் துன்பத்தை அனுபவித்த தமிழர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் சமூகத்தை பார்த்து அப்படித்தான் சொல்கிறார்கள். போரினால் ஏற்படும் வலிகளை உணரமுடியாத புலம்பெயர் தமிழர்கள் இப்போதும் தீவிர தமிழ் தேசியவாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Anonymous said...

"சுந்தர் சர்மா, அடிக்கடி உண்மையான கிறிஸ்தவர்கள் பற்றி பேசுகின்றீர்கள். அவர்கள் யார்? எங்கே இருக்கிறார்கள்? ஒரு வேளை நீங்கள் மட்டும் தான் அந்த உண்மையான கிறிஸ்தவராக இருக்கலாம்."

Soon i like to add my name as well in that list!

Yes! there are "உண்மையான கிறிஸ்தவர்கள்" Check
John Piper - http://www.desiringgod.org/AboutUs/JohnPiper/CurriculumVitae/

Augustine - http://en.wikipedia.org/wiki/Augustine_of_Hippo

John Calvin, Charles H. Spurgeon, etc.

I don't have much time to write if you could add me on skype sunthar.sharma i could explain more!

Sunthar.sharma said...

Mohamed said...சர்மா ஏன் இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கிறார்?

If you can compare the Bible and you Qur'an you would see the difference of the history but the problem is Qur'an is not allowing you to read the Bible isn't it? So how can you know the truth?

Now on the internet everything is there - the positive and the negative So do a proper research!

Sunthar Sharma said...

This is by Sunthar Sharma

Anonymous said...

"சுந்தர் சர்மா, அடிக்கடி உண்மையான கிறிஸ்தவர்கள் பற்றி பேசுகின்றீர்கள். அவர்கள் யார்? எங்கே இருக்கிறார்கள்? ஒரு வேளை நீங்கள் மட்டும் தான் அந்த உண்மையான கிறிஸ்தவராக இருக்கலாம்."

profit500 said...

அறியாமையை போக்கவே மதங்கள் தோன்றியிருக்க வேண்டும் , ஆதி மனிதனை கட்டுபடுத்த ஏற்படுத்தப்பட்ட சூத்திரம் , ஆனால் மதவாதிகள், மக்களை நெறி படுத்தி நாகரிக படுத்தமால் , அவர்களின் சுயநலத்தால் , மதம் என்ற சொல் இன்று கூவம் போல் பயமுறுத்துகிறது . எல்லா மதங்களும் தன் நிலை மாறி பயணம் மேற்கொள்கின்றன . அருமையான பதிவு நண்பரே , வாழ்த்துக்கள் !!! இனி ஒரு விதி செய்வோம் !

ராஜதுரை குணசீலன் said...

நான் அறிந்த ஒருவிடயம் என்னவெனில்
ஜேசு நாதர் பேசிய அரமிக் மொழிக்கு எழுத்துவடிவம் இல்லையெனவும்
அதனால்த்தான் கிரேக்கமொழியில் எழுதப்பட்டது என்று வரலாறாம்
கட்டுரை நன்றாக செல்கிறது ...
நீங்கள் என்ன மதம் அறிய ஆவல் ........

Kalaiyarasan said...

//நான் அறிந்த ஒருவிடயம் என்னவெனில்
ஜேசு நாதர் பேசிய அரமிக் மொழிக்கு எழுத்துவடிவம் இல்லையெனவும்
அதனால்த்தான் கிரேக்கமொழியில் எழுதப்பட்டது என்று வரலாறாம்
கட்டுரை நன்றாக செல்கிறது ...
நீங்கள் என்ன மதம் அறிய ஆவல் ........//

ராஜதுரை குணசீலன்,

இயேசு, கிறிஸ்தவ மதம் குறித்து ஆழமான ஆய்வுகள் செய்த பின்னர் தான் இந்தக் கட்டுரையை எழுதினேன். சிறுபான்மையினர் பேசிய அரமிக் மொழியை, ஆதிக்க மொழியான கிரேக்கம் (நமது காலத்தில் பேரினவாதம் என்று அழைப்பார்கள்) புறக்கணித்ததாக வரலாறு கூறுகின்றது. கிரேக்க சக்கரவர்த்தியின் அரசவையில் தான் முதன் முதலாக விவிலிய நூல் எழுத்து வடிவம் பெற்றது. அவர்கள் கிரேக்க மொழியில் தான் எழுதியிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள அதிக சிரமம் எடுக்கத் தேவையில்லை.

உலகில் பிறந்த எல்லோரும் ஏதாவது மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமா? நான் எந்த மதத்தையும் சேராதவர் என்பதால் தான், பக்கச் சார்பற்ற ஆய்வு செய்து பல உண்மைகளை வெளிக் கொணர முடிகின்றது.

Prithiviraj kulasinghan said...

சில குறிப்புகள்:
ஜோசுவா என்பது எபிரேயப் பெயர். அவர் பல நூற்றாண்டுகளிற்கு முன்பு வாழ்ந்தவர். இயேசு என்பது அதே பெயரின் கிரேக்க அல்லது அரமேய மொழிபெயர்ப்பு என்று கருதப்படுகிறது.
ஜோன் பட்மொஸ் தீவில் மறைந்து வாழ்ந்ததாக அல்ல நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்ததாகவே நம்பப் படுகிறது.
அவரது வெளிப்பாடு (வேதாகமத்தின் கடைசி நூல்) சித்திர மொழியில் இருப்பதால் விளங்கிக் கொள்வது சிரமம். ஆனால் கிறிஸ்தவத்தினர் கூறும் இயேசுவின் 2ம் வருகை பற்றிய பல குறிப்புகள் அங்கே உண்டு.
இது கிறிஸ்தவர்களிற்கு முக்கியமான
புத்தகம்.
முதலாவது பாப்பரசரான பீட்டர் திருமணமானவர். ஆனால் அவர் முடி சூடா மன்னனாக இருக்கவில்லை. அக்காலத்தில் கிறிஸ்தவம் ஒடுக்கப்பட்டவர்களின் மதம். 3ம் நூற்றாண்டின் பின்னரே அரசர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தனர்.
பீட்டர் தலை கீழாக சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்று கூறப்படுகிறது.
பொதுவான இக்கட்டுரையின் கருத்துக்களோடு எனக்கு முரண்பாடில்லை. சில தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளேன். அவ்வளவே.

Nasar said...

Sundar sharma said: பெந்தெகொஸ்தே சபைகளை சேர்ந்தவர்கள் - http://www.bible.ca/tongues-encyclopedia-pentecostal-preachers.htm , http://www.bible.ca/tongues-kundalini-shakers-charismastics.htm எவ்வாறு கிறிஸ்தவர்களால் வேறேபடுத்தப்படுகிறார்கள் என்பதை மேலுள்ள இணைப்பில் பார்க்கவும்//
கிறிதுவத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் அந்த மதத்துக்கு பொதுவான பெயர் கிறித்துவம் ( CHRISTIANITY)
தான். SUNDER SHARMA சொல்வது திரிக்கப்பட்ட உண்மை ...மேலும் கிறித்துவமும் ,ரோமன் கதொலிக்கமும் வேவேரானவை அல்ல ......உண்மையில் அவருக்கு அதைப்பற்றிய KNOWLEDGE
குறைவாகவே இருக்கிறது
--

Nasar said...

Anonymous said...
//என்னைப் பொருத்த வரை குர் ஆன் ஒன்றே உண்மையான வேதநூல். // //இப்படித்தான் ஒவ்வொருவரும் கூறிக்கொள்கிறார்கள். ஆன் இகுர் ல் உள்ள பிழைகள் உங்களுக்குத் தெரியுமா? அத்தோடு குர் ஆன் யூதர்களினதும் கிறிஸ்தவர்களினதும் எச்சம் தானே. இந்துக்களைப் போன்று தனியான வேத நூல் இருந்தால் நீங்கள் பெருமையடிக்கலாம்.//
பைபளின் எச்சம் அல்ல குரான் . பழைய விவிலியத்தின் COPY+PASTE=BIBLE..... //குர் ஆன் இல் உள்ள பிழைகள் உங்களுக்குத் தெரியுமா? //
அய்யா இப்படி மொக்கையா சொல்லாதிர்கள் ,பிழை இருந்தால் ஆதாரத்துடன் காட்டுங்களேன் .......

Unknown said...

கலையரசன் அவர்களே நான் கலையகத்திற்கு புதியவன். யார் இந்த ஆரியர்கள்? அவர்கள் எங்கிருந்து வந்தனர். திராவிட நாகரிகமான சிந்துசமவெளி நாகரீகத்தினை வட இந்தியர்கள் ஆரிய நாகரீகம் என்று குறிப்பிடுகின்றனர். அதற்க்கு சான்றுகள் இல்லை என்பது தெரியும். அங்கு கிடைத்திட்ட எழுத்துருக்கள் சமஸ்கிருதத்துடன் தொடர்புடையது கிடையாது. மேலும் தமிழ்நாட்டிலே திருநெல்வேலியில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு சிந்துசமவெளி நாகரிகம் திராவிடத்தொடு தொடர்புடையது என்று கூறுகிறது ஆரியர்களின் வரலாறு முழுமையாக தெரிய வேண்டும்