Tuesday, January 01, 2019

மதச்சார்பற்ற சர்வதேச புத்தாண்டு வாழ்த்துக்கள் 2019


அனைவருக்கும் சர்வதேச மதச் சார்பற்ற புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தயவுசெய்து, யாராவது இதனை "ஆங்கிலப்" புத்தாண்டு அல்லது 'கிறிஸ்தவப்" புத்தாண்டு என்று சொல்லிக் கடுப்பேற்றாதிங்க.... விரும்பினால் "லத்தீன் புத்தாண்டு" என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

வத்திக்கானால் அறிமுகப் படுத்தப் பட்ட கிரகோரியன் கலண்டர் கத்தோலிக்க ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே நடைமுறைக்கு வந்தது. ஆங்கிலேயர்களுக்கே 1752 ம் ஆண்டு தான் அறிமுகமானது. ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் உலகம் முழுவதும் இருந்த காலனிகளில் பரப்பப் பட்டது.

ரஷ்யா போன்ற கிரேக்க கிறிஸ்தவத்தை பின்பற்றிய நாடுகளில் ஜூலியான் கலண்டர் இருந்தது. ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், கம்யூனிஸ்டுகளும் கிரகோரியன் கலண்டரை பின்பற்றினார்கள்.

ஓட்டோமான் சாம்ராஜ்யமாக இருந்த துருக்கியில், நவீனமயமாக்கலை ஆதரித்த இளம் துருக்கி தேசியவாதிகள், இஸ்லாமியக் கலண்டரை கைவிட்டு விட்டு கிரகோரியன் கலண்டரை ஏற்றுக் கொண்டார்கள்.

இன்றைய ஜனவரி 1 புது வருடப் பிறப்பானது, உலகம் முழுவதும் மதச் சார்பற்ற புத்தாண்டு தினமாகக் கொண்டாடப் படுகின்றது. ஆகவே, இது "ஆங்கிலப்" புத்தாண்டுமல்ல, "கிறிஸ்தவப்" புத்தாண்டும் அல்ல. சர்வதேச மதச் சார்பற்ற புத்தாண்டு.