Monday, August 31, 2020

நாஸிகள் ஆக்கிரமித்த நெதர்லாந்து, அறியாத தகவல்கள்

Part - 1 

2ம் உலகப் போர் காலத்தில் நாஸி ஜெர்மனி நெதர்லாந்து மீது படையெடுத்த காலத்தில் அங்குள்ள நிலைமை எப்படி இருந்தது என்பது பற்றிய சிறு விளக்கம். ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள இந்த மியூசியம், நாஸி ஆக்கிரமிப்புக் காலகட்டத்தையும், அன்னிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தையும் காட்சிப் படுத்தி உள்ளது. நீங்கள் அறிந்திறாத பல முக்கியமான வரலாற்றுத் தகவல்களை ஆவணப் படங்களுடன் தமிழில் எடுத்துக் கூறி இருக்கிறேன். 

 

 

Part - 2  

ஜேர்மன் நாஸிகளுடன் ஒத்துழைத்த டச்சு நாஸி கட்சியான NSB, அதன் "தேசியத் தலைவர்" முசெர்ட் பற்றிய அரிய தகவல்கள். ஐரோப்பாவில் நாஸிகள் தான், அனைவரும் அடையாள அட்டை கொண்டு திரிய வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தார்கள்! அத்துடன் அடையாள அட்டையில் விரல் ரேகை பதிவு செய்வதும் நாஸிகளின் கண்டுபிடிப்பு தான் என்பது பலர் அறியாத தகவல். 

 

 

Part - 3 

யூதர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவதற்கு முன்னர் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக சொல்லி கூட்டிச் சென்றனர். ஆரம்ப காலங்களில் நெதர்லாந்தை ஆக்கிரமித்த ஜெர்மன் நாஸிகள் யூதர்களை தனிமைப் படுத்தினார்களே தவிர கொடுமைப் படுத்தவில்லை. அதனால் அவர்கள் இலகுவாக ஏமாற்றப் பட்டனர். 

 

 

Part - 4 

நெதர்லாந்தை ஆக்கிரமித்த ஜெர்மன் நாஸிகளுக்கு எதிராக நடந்த விடுதலைப் போராட்டம் துரோகி அழிப்புடன் தொடங்கியது. அதாவது ஜெர்மன் ஆக்கிரமிப்பு அரசுடன் ஒத்துழைத்த டச்சுக் காரர்கள் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

 

Sunday, August 30, 2020

சிரியாவில் அமெரிக்க - ரஷ்ய படையினர் மோதல்!

அமெரிக்க - ரஷ்ய பனிப்போரின் விளைவாக அண்மைக் காலத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் நிஜப் போருக்கு வழி வகுக்குமா? இது தொடர்பாக ஒரு சிறிய ஆய்வு.

 

 

Saturday, August 29, 2020

ஆங்கிலம் பெரிதென்பர் போலித் தமிழ்த் தேசியவாதிகள்!

ஆங்கிலம் பேசினால் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெறலாம் என்பது கஜன், விக்கி போன்ற போலித் தமிழ்தேசியவாதிகளின் தப்பெண்ணம். அதை தமிழில் பேசியே சாதிக்கலாம். உண்மையான தேசியவாதிகள் எப்படி இருப்பார்கள் என்பதை, துருக்கியின் முதலாவது குர்திஷ் பாராளுமன்ற உறுப்பினர் லைலா ஜானாவின் வாழ்க்கைக் கதை மூலம் விளக்கி உள்ளேன். 

Thursday, August 27, 2020

மூடர் ஊடகம் வெளியிட்ட வட கொரிய நாய்க் கதை!

 வட கொரியா பற்றிய கட்டுக்கதைகள் எங்கிருந்து வருகின்றன? எவ்வாறு வலதுசாரி தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களை முட்டாள்கள் ஆக்குகின்றன? ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறேன். 

Wednesday, August 26, 2020

இராவணன் தமிழனா, சிங்களவனா அல்லது திபெத்தியனா?

 

இராவணன் யாருக்கு சொந்தம்? தமிழருக்கா அல்லது சிங்களவருக்கா? இராவணன் என்ற பெயர் வரக் காரணம் என்ன? பல புதிய தகவல்களுடன் மாறுபட்ட கோணத்தில் ஓர் ஆய்வு. 

Tuesday, August 25, 2020

மரணித்த கிம்ஜாங்உன் உயிர்த்தெழும் அதிசயம்!

வதந்திகள் ஓய்வதில்லை! மீண்டும் வட கொரிய அதிபர் கிம்ஜாங்உன் இறந்து விட்டதாக அல்லது கோமாவில் கிடப்பதாக ஒரு பொய்யான தகவல் நமது தமிழ் ஊடகங்களால் பரப்பப் படுகின்றது. அது பொய் வதந்தி என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை இந்த ஒளிப் பதிவில் தந்துள்ளேன்.