Friday, November 12, 2010

மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து


கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு முந்திய "மாண்டிய மதம்" இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றது. மாண்டிய மத போதகர்களில் ஒருவரான யோவான் (Yahya ibn Zakariyya அல்லது John the Baptist) இடமே, இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. 

மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்றைய ஈராக்கை (முன்னை நாள் பாபிலோனியா) தாயகமாக கொண்டவர்கள். இயேசு கிறிஸ்துவின் தாய் மொழியாக கருதப்படும் அரமிய மொழியை இன்றும் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். இன்றும் மாண்டிய மத வழிபாடுகள் யாவும் அந்த மொழியில் இடம்பெறுகின்றன.

அரமிய கிளை மொழியான, "மாண்டா" என்ற மொழியில் இருந்தே மாண்டியர்கள் என்ற பெயர் வந்தது. "அறிவு" என்று அர்த்தம் கொண்ட மாண்டா மொழி, அரமிய மொழியை ஒத்தது. இன்று நடைமுறையில் உள்ள, மத்திய கிழக்கு பிராந்திய மொழிகளான ஹீபுரு, அரபு, ஆகியனவும் ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இதனால் மாண்டியர்கள் யூத, அல்லது கிறிஸ்தவ மதப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று தவறாக கணிப்பிடப் படுகின்றனர். குறிப்பாக பண்டைய காலத்தில் நிலவிய "ஞோடிக்" (Gnostics) என்ற கிறிஸ்தவ பிரிவுடன் சேர்த்துப் பார்க்கப் படுகின்றனர். ஆயினும் மாண்டியிசம் ஒரு தனி மதம். கிரேக்கர்கள் பயன்படுத்திய ஞோடிக் என்ற சொல்லும், தமிழ் சொல்லான ஞானம், ஆங்கில சொல்லான know எல்லாம் ஒரே அடிப்படையை கொண்டவை.

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான தீர்க்கதரிசிகள் பலரை மாண்டிய மதத்தவர்களும் கொண்டுள்ளனர். குறிப்பாக நோவாவின் நேரடி வழித்தோன்றல்களாக தம்மை கருதிக் கொள்கின்றனர். மாண்டிய மதகுருக்கள் தலைப்பாகை கட்டி, தாடி வளர்த்திருப்பார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகத்தைக் கொண்ட பாபிலோனிய நாட்டில் இருந்த மதம் ஒன்றின் எச்சசொச்சம் அது என்று கருதப் படுகின்றது. 


பாபிலோனியர் காலத்தில் மதகுருக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரிய வேண்டுமானால், இன்றைய மாண்டிய மதகுருவைப் பார்த்தால் போதும். அவர்களின் மதச் சடங்குகளும் பாபிலோனிய காலத்தில் இருந்து, அப்படியே மாறாமல் தொடர்கின்றன. திருக்குரானிலும் மாண்டிய மதம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இஸ்லாமியரின் புனித நூல் அவர்களை "சபியர்கள்" என்று குறிப்பிடுகின்றது. அதனால் இன்று அதற்கு "சபிய மதம்" என்று இன்னொரு பெயரும் உண்டு.

இயேசுவுக்கு ஞானஸ்நானம் அளித்த ஜோன், மாண்டியர்களின் பிரதான ஆன்மீக ஆசான்களில் ஒருவர். இருப்பினும் அவர் அந்த மத நிறுவனர் அல்ல. மாண்டியர்களின் மத வழிபாட்டில் ஞானஸ்நானம் பெறுவது முக்கியமான சடங்கு. மாண்டிய மத குருக்கள், ஓடும் ஆற்று நீரில் நிற்க வைத்து ஞானஸ்நானம் கொடுப்பார்கள். இயேசுவும் ஜோர்டான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. அநேகமாக, மாண்டிய மதத்தவர்களை பின்பற்றியே ஞானஸ்நானம் எடுக்கும் சடங்கை கிறிஸ்தவர்களும் தமது மதத்தில் சேர்த்துக் கொண்டனர். 


இருப்பினும் மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுக்கும் நோக்கம் வேறு. அது ஒரு மனிதன் முக்தி பேறடைவதைப் போன்றது. அதாவது மாண்டிய சித்தாந்தப்படி பொருளாயுத உலகை துறந்து, மெய்யுலகை காண்பது. இந்த அடிப்படை தத்துவம் மாண்டிய மதத்தை, கிறிஸ்தவ மதத்தில் இருந்து வேறுபடுத்துகின்றது. கிறிஸ்தவ மதமானது ஒரு மீட்பர் வரும் வரை காத்திருக்கச் சொல்கின்றது. இயேசு கிறிஸ்து ஒரு இரட்சகர் ஆவார். ஆனால் மாண்டிய மத மகான்களின் கடமை, மக்களுக்கு அறிவைப் புகட்டுவது.

Ginza Rba மாண்டிய மதத்தவர்களின் புனித நூல் ஆகும். இரண்டு பகுதிகளைக் கொண்ட நூலில், மாண்டியரின் வரலாறு, செய்யுள்கள், நன்மையின் தோற்றம், தீமையின் தோற்றம், போன்ற விடயங்கள் உள்ளன. அந்த நூல் இன்று வரை மாண்டா-அரமிய மொழியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஒரேயொரு மேற்கத்திய மொழிபெயர்ப்பு ஜெர்மன் மொழியில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. மாண்டிய மதம் உலகை இரண்டு பிரிவாக பிரிக்கின்றது. நன்மை - தீமை, பொருள் - ஆன்மா, ஒளி - இருள், போன்ற ஒன்றுக்கொன்று முரண்பாடான பிரிவுகளுக்கு இடையே சமரசம் ஏற்பட முடியாது என்று போதிக்கின்றது. 


அதே மாதிரியான அறிவியல் கோட்பாடுகள், "ஞோடிக் கிறிஸ்தவ" பிரிவினரிடையே காணப்பட்டது. ஆனால் மத அதிகாரத்திற்கான போரில் இன்றைய கிறிஸ்தவ மதம் வென்றதால், அந்தக் கோட்பாடு மறைந்து விட்டது. கிறிஸ்தவ மதம், மாண்டிய (அல்லது ஞோடிக்) கோட்பாட்டுடன் முற்றிலும் முரண்படுகின்றது. அது ஏழை - பணக்காரன், ஆண்டான் - அடிமை, போன்ற வர்க்க எதிரிகளும் சமரசமாக வாழ வேண்டும் எனப் போதிக்கின்றது. மேற்குலகில் பிற்காலத்தில் தோன்றிய மார்க்ஸியம் மட்டுமே அந்த வர்க்க சமரசத்தை எதிர்த்தது. 

மாண்டிய மத உறுப்பினர்கள் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்றும், வன்முறையில் இறங்கக் கூடாது என்றும், கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் பிற மதத்தவர்களின் வன்முறைக்கு இலகுவாக ஆளாகி அழிந்து வருகின்றனர். இன்றைய துருக்கி, கிரேக்க பகுதிகளில் வாழ்ந்த ஞோடிக் பிரிவினரை கிறிஸ்தவர்கள் அழித்து விட்டார்கள். அண்மைக் காலம் வரையில், ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் மட்டுமே மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக முன்னாள் பாபிலோனிய நாடான, இன்றைய ஈராக்கில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சிக் காலம் வரையில் ஓரளவு நிம்மதியாக வாழ முடிந்தது. அமெரிக்க படையெடுப்பின் பின்னர், நிலைமை மோசமடைந்தது. 

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள், மாண்டிய மத உறுப்பினர்களை இலக்கு வைத்துக் கொன்றார்கள். இந்தப் படுகொலைகளுக்கு சாமானிய இஸ்லாமிய மக்களின் ஆதரவும் இருந்தது. அதற்கு காரணம், காலங்காலமாக இஸ்லாமியர்கள் மாண்டிய மதத்தினரை, மத நம்பிக்கையற்றவர்கள் எனக் கருதி வந்தனர். சாதாரண இஸ்லாமிய அயல் வீட்டுக்காரன் கூட, மாண்டிய மதத்தவர் மீது வெறுப்புக் காட்டுவது வழமை. உயிரச்சம் காரணமாக, மாண்டிய மதத்தவர்கள் பெருமளவில் ஈராக்கை விட்டு வெளியேறி விட்டனர். இன்று அவர்கள் மேற்குலக நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். இன்று உலகில் அழிந்து வரும் புராதன மதங்களில் மாண்டிய மதமும் ஒன்று.

மேலதிக தகவல்களுக்கு:
Mandaeism
Ginza Rba


பின்னிணைப்பு: 

ஈரானில் வாழும் மாண்டிய மதத்தவர் பற்றி நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப் படத்தில் பார்க்கக் கிடைத்த தகவல்கள்:

மாண்டிய மதத்தை பின்பற்றுவோர் இன்றைக்கும் உள்ளனர் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. ஈரானில், ஈராக் எல்லையோரம் உள்ள அரபு மொழி பேசும் பகுதியில், இன்றைக்கும் சில நூறு மாண்டியர்கள் வாழ்கிறார்கள்.

அவர்களுக்கென்று தனியான புனித நூல் உள்ளது. அவர்கள் அரபு போன்றதொரு மொழியை பேசுகின்றார்கள். மாண்டி - அரைமைக் என்று அதனை அழைக்கலாம். படித்தவர்கள் மட்டும் அரபு அல்லது பார்சி பேசுகின்றார்கள். ஆனால், மாண்டியர்கள் பேசும் மொழியை அரேபியர்கள் புரிந்து கொள்வது கடினம்.

ஈரானிய அரசு, மாண்டிய மதத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால், அவர்கள் தமது மதச் சடங்குகளை பின்பற்றுவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாக தமது மதத்தை பின்பற்றலாம். ஆனாலும், அரசு அங்கீகாரம் கிடைக்காத படியால், ஈரானில் அவர்களது எண்ணிக்கை குறைந்து வருகின்றது. பலர் அமெரிக்கா, ஐரோப்பா என்று புலம்பெயர்ந்து செல்கிறார்கள்.

ஈரானில் அரசுத் துறையில் வேலை செய்வதற்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மேலும் தொழிற்துறையிலும் பாரபட்சம் காட்டப் படுகின்றது. மாண்டேயர்கள் எல்லா தொழில் முயற்சிகளிலும் ஈடுபட முடியாது. அவர்களை நகைக்கடைகள் வைத்திருப்பதற்கு மட்டும் அனுமதிக்கிறார்கள். இதனால் அந்தப் பிரதேசத்தில் தங்க நகைகள் விற்கும் கடைகள் எல்லாம் மாண்டியர்களுக்கு சொந்தமானவை. 

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான இணைப்பு:

31 comments:

Anonymous said...

//"மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து"//

//மாண்டிய மதத்தவர்களை பின்பற்றியே ஞானஸ்நானம் எடுக்கும் சடங்கை கிறிஸ்தவர்களும் தமது மதத்தில் சேர்த்துக் கொண்டனர்.//

எந்த ஆதாரமுமற்ற கட்டுரை. வழக்கம்போல கிறிஸ்தவ எதிர்ப்பு உங்கள் கட்டுரையில் பிரதிபலிக்கிறது அவ்வளவுதான.

மாண்டியம் கி.பி 1 அல்லது 2 இல் தான் உருவானது என்ற கருத்துத்தான் உள்ளது. இதிலிருந்துதான் கிறிஸ்தவம் உருவானது போன்ற தோற்றப்பாட்டை உடைய உங்கள் கட்டுரை சரித்திர ஆதாரமற்றது.

RMD said...

வணக்கம் நண்பரே,
நிறைய மதங்கள்,கடவுள்கள் காணாமல் போய் விட்டார்கள் போல இருக்கிறது. அரசியல் ,பொருளாதார ஆதரவு இல்லாத மத்ங்கள் அழிகிறது.

ஜான் என்பவரை கூட கடவுளின் அவதாரம்(மேசியா) என்று நம்பும் மதம் ஒன்று உண்டென்று படித்த ஞாபகம் .

அது இந்த மாண்டியா மதம்தானா அல்லது வேறு மதமா?

ஒசை said...

வன்முறையை கற்காத மதம் அழிவது உறுதி என்பதே வரலாறு புகட்டும் பாடம் என்பதால் தான் என்னவோ, இன்றைய மதங்கள் வன்முறை வெறிபிடித்து ஆடுகின்றனவோ. ,

Kalaiyarasan said...

//எந்த ஆதாரமுமற்ற கட்டுரை. வழக்கம்போல கிறிஸ்தவ எதிர்ப்பு உங்கள் கட்டுரையில் பிரதிபலிக்கிறது அவ்வளவுதான.//

உண்மைகளை மறைக்கும் அல்லது வரலாற்றை திரிக்கும் நீங்கள் தான் நிஜமான கிறிஸ்தவ எதிர்ப்பாளர். இங்கே கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் போதாது என்றால் நீங்களாகவே தேடித் பார்க்க வேண்டும்.

Kalaiyarasan said...

//ஜான் என்பவரை கூட கடவுளின் அவதாரம்(மேசியா) என்று நம்பும் மதம் ஒன்று உண்டென்று படித்த ஞாபகம் .

அது இந்த மாண்டியா மதம்தானா அல்லது வேறு மதமா?//

விவிலிய நூலில் இரண்டு ஜான்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஒன்று: இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த ஜான். அவர் மாண்டிய மதத்தை சேர்ந்தவர். மற்றவர் இயேசுவின் சீடரான ஜான். அவர் பின்னாளில் கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தவர்களில் முக்கியமானவர்.

மாண்டிய மதத்தில் ஜான் ஒரு மேசியா அல்லர்.(அந்த மதத்தில் மேசியா என்ற சொல்லே கிடையாது.) அவர் ஒரு தத்துவ ஆசிரியர். கிறிஸ்தவர்கள் எல்லோரையும் மேசியா என்று தவறாக புரிந்து கொண்டனர்.

Anonymous said...

//உண்மைகளை மறைக்கும் அல்லது வரலாற்றை திரிக்கும் நீங்கள் தான் நிஜமான கிறிஸ்தவ எதிர்ப்பாளர். இங்கே கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் போதாது என்றால் நீங்களாகவே தேடித் பார்க்க வேண்டும்.//

ஞானஸ்நானம் பற்றியும் ஜான் சொல்ல வந்த கருத்து தெரியாமல் 1ம், 2ம் நூற்றாண்டில் உருவான மதம் பற்றி அலட்டிக் கொள்ளும் நீங்கள் கிறிஸ்தவ எதிர்ப்பாளர் என்று அழைப்பதுதான் வேடிக்கையானது. "மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து" என்ற உங்கள் தலைப்பே உங்கள் குரோத உணர்வைக் காட்டுகிறது. கிறிஸதவம் பற்றி நிறைவான அறிவற்ற நீங்கள்தான் கிறிஸ்தவம் பற்றித் தேடிப்படிக்க வேண்டும். உங்களைப் போன்ற கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள் கூறும் திரிப்புக் கட்டுரைகளும் எல்லாமே உண்மையாகாது.

Kalaiyarasan said...

//ஞானஸ்நானம் பற்றியும் ஜான் சொல்ல வந்த கருத்து தெரியாமல் 1ம், 2ம் நூற்றாண்டில் உருவான மதம்//

திரும்ப திரும்ப ஒரு பொய்யை கூறுவதால் அது உண்மையாகி விடாது. மாண்டிய மதம் கிறிஸ்தவத்திற்கு முந்தியது என்பதற்கான ஆதாரங்கள் பல இங்கே கொடுக்கப்பட்டிருந்தும் அவற்றை புறக்கணித்து விட்டு பேசுகின்றீர்கள். இயேசு ஒரு கிறிஸ்தவன் அல்ல. அவரது காலத்தில் கிறிஸ்தவ மதம் இருக்கவில்லை. அப்படி இருக்கையில் "இயேசு மாண்டிய மதத்தை சேர்ந்த ஜானிடம் ஞானஸ்நானம் எடுத்தார்" என்று கூறியதில் என்ன தவறு? இது எனது சொந்தக் கருத்து அல்ல, பைபிளிலே எழுதப்பட்டுள்ளது. ஜான் மாண்டிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்த தகவல் மட்டும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டிருக்கலாம்.
இந்த உண்மைகளை மறுக்கும் ஒருவர் நிச்சயமாக கிறிஸ்தவ எதிர்ப்பாளராகத் தான் இருக்க முடியும்.

Anonymous said...

//"இயேசு ஒரு கிறிஸ்தவன் அல்ல. அவரது காலத்தில் கிறிஸ்தவ மதம் இருக்கவில்லை."//

உங்கள் ஆக்கபூர்வமான விளக்கம் தேவை. தவறாமல் எழுதவும். எனக்கு இன்னும் சில கேள்விகள் உள்ளன.

இயேசுவுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் அல்லது கிரேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்?? ஏனெனில் பைபிள் மூலங்கள் அங்கிருந்துதான் திரட்டப்படுகின்றன.

கிறிஸ்தவம் எப்போது யாரால் உருவாக்கப்பட்டது??

கிறிஸ்தவம் இஸ்லாம் ஒற்றுமைகள் வேற்றுமைகள் அல்லது இவை இரண்டிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா??

Kalaiyarasan said...

//கிறிஸ்தவம் எப்போது யாரால் உருவாக்கப்பட்டது??//

இயேசுவின் தாயும், தந்தையும் யூதர்கள், அவரது உறவினர்கள், அயலார், ஊரார் அனைவரும் யூதர்கள் என்று பைபிளில் எழுதப் பட்டுள்ளது. இயேசுவின் போதனைகளால் கவரப்பட்ட இரண்டொருவரைத் தவிர அனைவரும் யூதர்கள். அநேகமாக இயேசுவும், அவரது சீடர்களும் யூத மதத்தை சீர்திருத்த எண்ணினார்கள். ஆனால் கடும்போக்கு யூதர்களிடம் இருந்து எதிர்ப்பை சம்பாதித்தார்கள். அது இறுதியில் இயேசுவை சிலுவையில் அறைவதில்
போய் முடிந்தது. இயேசுவின் மரணத்தின் பின்னர், அவரது சீடர்கள் யூத மதத்தை துறந்து புதிய மதத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியிருக்கலாம். ஆரம்பத்தில் பல்வேறு சமயப் பிரிவுகளாக இயங்கி வந்த சிறு சிறு குழுக்கள் ஒன்று சேர்ந்து கிறிஸ்தவ மதமாகியது. கிறிஸ்து என்றால் எள்ளில் வடித்த எண்ணையால் (நல்லெண்ணெய்?) ஆசீர்வதிக்கப் பட்டவர்
(ஞானஸ்நானம் பெற்றவர்) என்று அர்த்தம். (மூலம் : கிரேக்க மொழி)

//இயேசுவுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் அல்லது கிரேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்?? ஏனெனில் பைபிள் மூலங்கள் அங்கிருந்துதான் திரட்டப்படுகின்றன.//

இயேசுவுக்கும் ஆங்கிலேயருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ரோமர்களிடம் இருந்து தான் ஆகிலேயர்கள் கிறிஸ்தவ மதம் குறித்து அறிந்து கொண்டார்கள். இயேசுவின் சீடர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். கிரேக்க மக்கள் மத்தியில் அவர்களது பிரச்சாரம் ஈடுபட்டது. ஆரம்பத்தில் கிரேக்க மொழி பேசிய யூதர்கள் (ஆங்கிலத்தை முதன்மொழியாக கொண்ட தமிழர்கள் போல) பெருமளவில் புதிய மதத்தில் சேர்ந்தார்கள். கடும்போக்கு யூதர்கள் மேலான வெறுப்பு அதற்கு மூல காரணம். கிரேக்க மொழி பேசிய சக்கரவர்த்தி கொன்ஸ்டாண்டின் கிறிஸ்தவராக மாறிய பிறகு, அவனது சாம்ராஜ்யத்தில் கிறிஸ்தவ மதம் பரவியது. அதனால் பைபிளும் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டது.

//கிறிஸ்தவம் இஸ்லாம் ஒற்றுமைகள் வேற்றுமைகள் அல்லது இவை இரண்டிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?? //

கிறிஸ்தவம், இஸ்லாம் மட்டுமல்ல, யூத மதமும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. இந்த மூன்று மதத்தவர்களின் புனித நூல்களில் ஒரே மாதிரியான கதைகள் வருகின்றன. யூதர்கள் கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. கிறிஸ்தவர்கள் முகமதுவின் போதனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இவை தான் வித்தியாசத்திற்கு அடிப்படைக் காரணம்.

RMD said...

வணக்கம் நண்பரே
தோரா,பைபிள்(பழைய மற்றும் புதிய‌ ஏற்பாடுகள்) தொகுக்கப் பட்ட வரலாறு எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி
தனராஜ்

kumar said...

அனானி போட்டது எல்லாம் நோ பால்.
ஆனால் நீங்கள் அடித்ததென்னவோ சிக்சர் தான்.அவர் இந்த தளத்திற்கு புதியவராயிருக்கலாம்.

Sunthar Sharma said...

நீங்கள் கூறுகிற கிறிஸ்த்தவர்களுடைய பைபிள் தான் பின் வருமாறு கூறுகிறது அப்படியானால் கிறிஸ்து கடவுள்தானோ????


Joh 3:22 இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்.
Joh 3:23 சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
Joh 3:24 அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.
Joh 3:25 அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று.
Joh 3:26 அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
Joh 3:27 யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.
Joh 3:28 நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
Joh 3:29 மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.
Joh 3:30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
Joh 3:31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.
Joh 3:32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
Joh 3:33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.
Joh 3:34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
Joh 3:35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
Joh 3:36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

Mat 3:13 அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.
Mat 3:14 யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
Mat 3:15 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
Mat 3:16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
Mat 3:17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.


Joh 1:29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
Joh 1:30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
Joh 1:31 நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான்.
Joh 1:32 பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.
Joh 1:33 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
Joh 1:34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.
Joh 1:35 மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது,
Joh 1:36 இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
Joh 1:37 அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.

RMD said...

//கிரேக்க மொழி பேசிய சக்கரவர்த்தி கொன்ஸ்டாண்டின் கிறிஸ்தவராக மாறிய பிறகு, அவனது சாம்ராஜ்யத்தில் கிறிஸ்தவ மதம் பரவியது. அதனால் பைபிளும் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டது.//

புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் என்ழுதப் பட்டது.

புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வரலாற்றைக் கூறும் நான்கு நற்செய்தி நூல்களும், அப்போஸ்தலரின் பணிகள் திருத்தூதர் பணிகள் கூறும் ஒரு நூலும், 21 படிப்பினை வழங்கும் மடல்களும் மற்றும் ஒரு தீர்க்கதரிசன நூலும் காணப்படுகின்றன.

கிபி 50களில், எபிரேய மற்றும் கிரேக்க கலாச்சாரம் நிலவிய பகுதிகளில் பேச்சு மொழியாயிருந்த கொயினே கிரேக்கத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள் எழுதப்பட்டன. திருவிவிலியத்தில் இணைக்கப்பட்ட அனைத்து நூல்களும் கி.பி. 150க்குள் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.முதலாம் கான்ஸ்டன்டைன் என்று பொதுவாக அழைக்கப்படும் பிளேவியஸ் வலேரியஸ் ஒரேலியஸ் கான்ஸ்டன்டினஸ் (27 பெப்ரவரி 272 – 22 மே 337) ரோமப் பேரரசர் ஆவார். இவர்தான் கிறித்தவத்திற்கு மாறியதாக அறியப் படும் அரசர்.

கான்ஸ்டன்டைன் காலத்திற்கு முன்பே புதிய ஏற்பாடு தொகுக்கப் பட்டு விட்டது.

புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுத்ப் பட்டதற்கு காரணம் அப்போது கிரேக்க யூதர்களே கிறித்தவர்களாக மாறியிருந்தனர் என்பதே சரி.

Sunthar Sharma said...

இது தமிழர்களின் ஒரு பிரச்சனை ஏதாவது ஒரு வழியில் தாங்கள் நினைப்பது தாங்கள் கண்டுபிடித்ததோடு பொருந்திவிட்டால் அதுவே மிகச்சரியானது என்று மார்தட்டுவது அதை விடுத்து எல்லா வழிகளிலும் சென்று சரியானதை ஆராயிந்து சரியான முடிபுக்கு வருவதே சிறந்தது

உங்களுக்கு ஒரு சவால்! யார் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதை முதலில் எழுதவும் அதன் பின் வேறு யாரெல்லாம் கிறிஸ்தவர்கள் என்கிறார்கள் அவர்கள் விட்ட தவறுகள் என்ன என்பதும் எழுதவும் அதன் பின்னர் எந்தக்க் கிறிஸ்த்தவக்க் குழுவால் சொல்லபப்ட்டத்தை அடிப்படையாக வைத்து எழுதுகின்றீர்கள் என்பதை சொல்லவும்

அப்போது நீங்கள் எழுதுவதற்கு ஒரு பெறுமதி இருக்கும்

Kalaiyarasan said...

சுந்தர் சர்மா, உலகில் நூற்றுக் கணக்கான கிறிஸ்தவ மதப்பிரிவுகள் இருக்கின்றன. அவை எல்லாம் தாமே உண்மையான கிறிஸ்தவர்கள் என்று மார்தட்டுகின்றனர். யார் கிறிஸ்தவர்? என்று அவர்களே ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளட்டும். நம்மால் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்.
அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான சிறப்பம்சம் இருக்கிறது. அவர்கள் ஒரு குறுகிய வட்டத்தின் உள்ளே வாழ்பவர்கள். கிறிஸ்தவத்திற்கு வெளியே உள்ள உலகத்தை காண மறுப்பவர்கள். இயேசு கிறிஸ்து மட்டுமே கடவுள், அவர் மட்டுமே மேசியா என்று நம்புவார்கள். இயேசு போன்று மத போதனைகளை செய்த மற்றவர்களை புறக்கணிப்பார்கள். பைபிள் மட்டுமே ஆண்டவனால் அருளப்பட்ட உண்மையான வேதம் என்பார்கள். பைபிளை ஒத்த மற்றைய மத நூல்களை நிராகரிப்பார்கள். Dogmatism என்றும் அழைக்கலாம். ஒரு சர்வாதிகாரிக்கு பின்னால் அணிதிரளும் விசுவாசமான கூட்டம் போன்றவர்கள் தான் மதவாதிகளும்.

Anonymous said...

//திரும்ப திரும்ப ஒரு பொய்யை கூறுவதால் அது உண்மையாகி விடாது.//

இது உங்களுக்கு மிகப் பொருந்தும்.

//"இயேசு மாண்டிய மதத்தை சேர்ந்த ஜானிடம் ஞானஸ்நானம் எடுத்தார்" என்று கூறியதில் என்ன தவறு? இது எனது சொந்தக் கருத்து அல்ல, பைபிளிலே எழுதப்பட்டுள்ளது.//

இயேசு மாண்டிய மதத்தை சேர்ந்த ஜானிடம் ஞானஸ்நானம் எடுத்தார் என்று பைபிளில் எங்கே உள்ளது. கதைவிட வேண்டாம்.

//மாண்டிய மதம் கிறிஸ்தவத்திற்கு முந்தியது என்பதற்கான ஆதாரங்கள் பல இங்கே கொடுக்கப்பட்டிருந்தும் அவற்றை புறக்கணித்து விட்டு பேசுகின்றீர்கள்.//

இது நீங்கள் கொடுத்த ஆதாரம். ஆனால் வரலாற்றாளர்களிடையே இது பற்றிய முடிந்த முடிவாவான கருத்து இல்லை என்பதை படிக்கவில்லையா?

//உங்களைப் போன்ற கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள் கூறும் திரிப்புக் கட்டுரைகளும் எல்லாமே உண்மையாகாது//

இது உங்களுக்கு மிக கச்சிதமாக பொருந்தும்! ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய் வேஷம் போடாதீர்கள் கலையரசன்!

Anonymous said...

//அனானி போட்டது எல்லாம் நோ பால்.
ஆனால் நீங்கள் அடித்ததென்னவோ சிக்சர் தான்.அவர் இந்த தளத்திற்கு புதியவராயிருக்கலாம்//

அனானி எல்லாம் ஒன்றல்ல!

Anonymous said...

//கிறிஸ்து என்றால் எள்ளில் வடித்த எண்ணையால் (நல்லெண்ணெய்?) ஆசீர்வதிக்கப் பட்டவர்
(ஞானஸ்நானம் பெற்றவர்) என்று அர்த்தம். (மூலம் : கிரேக்க மொழி)//

வெற்றுப் புலம்பல்! ஆதாரம் காட்ட முடியுமா?

Kalaiyarasan said...

அனானியாக பின்னூட்டமிடும் அதி புத்திசாலி நண்பருக்கு,
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்ட தகவல்கள் யாவும் கீழே உள்ள உசாத்துணை இணைப்புகளில் உள்ளன. விக்கிபீடியா மேலதிகமாக பல அறிஞர்களின் நூல்களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளது. பி.பி.ஸி. செய்தியாளர் நேரில் சென்று எடுத்த வீடியோ இணைக்கப் பட்டுள்ளது. நான் சொல்வது பொய் என்றால் இவர்கள் அத்தனை பேரும் பொய்யர்கள் தான். அனானி நண்பர், எந்த வாதத்தையும் முன் வைக்காமல், என் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார்.

Anonymous said...

@ கலையரசன்,

உங்கள் பொய்களை மறைக்க கதைவிடாதீர்கள். விபரமாக வாதிட முடியாவிட்டால் முடியாதென்று சொல்லுங்கள். என் கேள்விக்கான பதிலை தரமுடியாம் ஏன் சுற்றி வளைக்கிறீர்கள்?

//"இயேசு மாண்டிய மதத்தை சேர்ந்த ஜானிடம் ஞானஸ்நானம் எடுத்தார்" என்று கூறியதில் என்ன தவறு? இது எனது சொந்தக் கருத்து அல்ல, பைபிளிலே எழுதப்பட்டுள்ளது.//

பைபிளில் எங்கேயுள்ளது? உங்களால் காட்ட முடியாது. காரணம் உங்கள் கூற்று பொய். என் இதற்கு BBC, வீக்கிபீடியா, அறிஞர்களையெல்லாம் துணைக்கழைத்து உங்கள் பொய்யை மறைக்கிறீர்கள். திரும்பவும் கேட்கிறேன், பைபிளில் எங்கேயுள்ளது?

Anonymous said...

//கிறிஸ்து என்றால் எள்ளில் வடித்த எண்ணையால் (நல்லெண்ணெய்?) ஆசீர்வதிக்கப் பட்டவர்
(ஞானஸ்நானம் பெற்றவர்) என்று அர்த்தம். (மூலம் : கிரேக்க மொழி)//

இதற்கும் BBC, வீக்கிபீடியா, அறிஞர்கள் துணை தேவையா? உங்கள் வீக்கிபீடியா அப்படி எதுவும் கூறவில்லையே.

கிறித்து அல்லது கிறிஸ்த்து என்ற தமிழ்ப் பதம் கிரேக்க மொழி சொல்லான Χριστός (கிறிஸ்தோஸ்), என்ற ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற பொருளுடைய சொல்லில் இருந்து தமிழுக்கு எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்டதாகும். இச் சொல் எபிரேய மொழிப் பதமான מָשִׁיחַ (மெசியா) என்பதன் கிரேக்க மொழிப்பெயர்ப்பாக வழங்கப்பட்டது.

The term Christ (or similar) appears in English and most European languages, owing to the Greek usage of Christós (transcribed in Latin as Christus) in the New Testament as a description for Jesus. In the Septuagint version of the Hebrew Bible, it was used to translate into Greek the Hebrew mashiach (messiah), meaning "anointed."


இது இப்படியிருக்க உங்கள் வக்கிர உணர்வை ஏன் பொய்யாகக் கொட்டுகிறீர்கள்?

Kalaiyarasan said...

//"இயேசு மாண்டிய மதத்தை சேர்ந்த ஜானிடம் ஞானஸ்நானம் எடுத்தார்" என்று கூறியதில் என்ன தவறு? இது எனது சொந்தக் கருத்து அல்ல, பைபிளிலே எழுதப்பட்டுள்ளது.//

இதற்கு அடுத்ததாக நான் எழுதியதை மறைத்துக் வைத்துக் கொண்டு விதண்டாவாதம் புரியாதீர்கள்.
// ஜான் மாண்டிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்த தகவல் மட்டும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டிருக்கலாம்.//
இயேசு கிறிஸ்து ஜானிடம் ஞானஸ்நானம் எடுத்தார் என்று மட்டுமே பைபிள் குறிப்பிடுகின்றது. அதே நேரம் ஜான் மாண்டிய மத தீர்க்கதரிசி என்பதையும், அந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கே ஜான் ஞானஸ்நானம் கொடுத்து வந்தார் என்ற உண்மையும் பைபிள் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளது. உங்கள் குற்றச்சாட்டு பைபிளை நோக்கி வைக்கப் பட்டிருக்க வேண்டும். மாறாக உண்மையை கூறி விளக்கியதற்காக என் மீது அவதூறு செய்வதன் மூலம் நீங்கள் ஒரு கிறிஸ்தவ எதிர்ப்பாளர் என்பதை நிரூபிக்கின்றீர்கள்.

Anonymous said...

கலையரசன், புத்திசாலி நண்பருக்கு,

உங்கள் மீது எவ்வித தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை. உங்களுக்குத்தான் கிறிஸ்தவர்கள் மேலுள்ளது. ஏற்றுக் கொள்கிறீர்களா?

Anonymous said...

உங்களுக்கு கேள்வி விளங்கவில்லையா? 'இயேசு மாண்டிய மதத்தை சேர்ந்த ஜானிடம் ஞானஸ்நானம் எடுத்தார்' என்று கூறியதில் என்ன தவறு? இது எனது சொந்தக் கருத்து அல்ல, பைபிளிலே எழுதப்பட்டுள்ளது என்றீர்களே, இது எங்குள்ளது?

//அந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கே ஜான் ஞானஸ்நானம் கொடுத்து வந்தார் என்ற உண்மையும் பைபிள் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளது.//

இதை எப்படி உங்களால் அறுதியாகக் கூறமுடியும்?

Anonymous said...

//மாறாக உண்மையை கூறி விளக்கியதற்காக என் மீது அவதூறு செய்வதன் மூலம் நீங்கள் ஒரு கிறிஸ்தவ எதிர்ப்பாளர் என்பதை நிரூபிக்கின்றீர்கள்//

புலம்பாமல் நான் கேட்ட இரு கேள்விகளுக்குமான விடையைத் தாருங்கள் அல்லது உங்கள் பொய்யை ஒத்துக் கொள்ளுங்கள்!

Kalaiyarasan said...

//உங்களுக்கு கேள்வி விளங்கவில்லையா?//

எதையும் புரிந்து கொள்ள விரும்பாதவர்களிடம் பேசுவதில் பயனில்லை.
ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் இரண்டு என்றால், "அந்த இரண்டு எங்கே இருக்கிறது காட்டு பார்ப்போம்?" என்று கேட்கும் குழந்தையின் மனநிலையில் இருக்கிறது நீங்கள் கேட்கும் கேள்வி.

Kalaiyarasan said...

//கிறித்து அல்லது கிறிஸ்த்து என்ற தமிழ்ப் பதம் கிரேக்க மொழி சொல்லான Χριστός (கிறிஸ்தோஸ்), என்ற ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற பொருளுடைய சொல்லில் இருந்து தமிழுக்கு எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்டதாகும். இச் சொல் எபிரேய மொழிப் பதமான מָשִׁיחַ (மெசியா) என்பதன் கிரேக்க மொழிப்பெயர்ப்பாக வழங்கப்பட்டது.//

திரு. புத்திசாலி அவர்களே,
கிறிஸ்து என்றால் என்ன அர்த்தம் என்பதை மட்டுமே நீங்கள் படித்திருக்கிறீர்கள். நான் கூறியது கிறிஸ்து என்ற கிரேக்க சொல்லின் விளக்கம். இயேசுவுக்கு முன்னமே அந்தச் சொல் பாவனையில் இருந்து வந்துள்ளது. முதலில் உங்களை சுற்றியுள்ள குறுகிய வட்டத்தில் இருந்து வெளியேற முயற்சி பண்ணுங்கள்.

Anonymous said...

//எதையும் புரிந்து கொள்ள விரும்பாதவர்களிடம் பேசுவதில் பயனில்லை./

விடயம் சாராத பதிலை திரும்பத்திரும்ப சொல்லும் நீங்கள் ஏன் விடயத்திலிருந்து தூர நிற்கின்றீர்கள்?

Anonymous said...

//கிறிஸ்து என்றால் என்ன அர்த்தம் என்பதை மட்டுமே நீங்கள் படித்திருக்கிறீர்கள். நான் கூறியது கிறிஸ்து என்ற கிரேக்க சொல்லின் விளக்கம்//

இப்போது அர்த்தம், விளக்கம் என்று புது வரைவிலக்கணம் கொடுக்க முயன்று உங்களை நீங்களே அதி புத்திசாலியாக காட்டிக் கொள்ள முயல்கின்றீர்கள். உங்கள் விளக்கத்திற்கான ஆதாரத்தை வைக்க முடியுமா?

//முதலில் உங்களை சுற்றியுள்ள குறுகிய வட்டத்தில் இருந்து வெளியேற முயற்சி பண்ணுங்கள்//

எனக்கு புத்தி சொல்ல முன், அதி புத்திசாலி நீங்கள் முயற்சி செய்யலாமே? மற்றவரை கேலி செய்து விடயத்தை திசை திருப்பாமல் விடயத்தோடு பதில் சொல்ல முயற்சியுங்கள்!

Prithiviraj kulasinghan said...

First of all, my regrets for not typing in Tamil.
1. Most of the leaders of Mandaeism including John the Baptist are considered as prophets by many religions including Islam and Christianity. Judaism accepts most of the Pre- Jesus Leaders.
2. There were many religions and religious groups during John the Baptists time.
3. There is no proof to say John the Baptist belongs to Mandaeism. Most of the religious leaders were followers of same religion of their parents. It is only after them the new religions started. This is true for Christianity too.
4. Jesus was a Jew and he followed Judaism. Christianity started years after Jesus's death.
5. The name Christ means The anointed one. Jews were using Olive oil or perfumed oil to anoint a person. (It means appointing a person for a job or position. - a spiritual act something like taking oaths.) Usually the oil is poured on the person's head. But pouting of oil is also used when accepting people into judaism, re-accepting people who had been ex-communicated (Others are not supposed to have any links with these people. This includes people of certain deceases and committed some crimes) or even when praying for certain sickness.

பிரபு ராஜ் said...

ஐயா ஞானஸ்நானம் பற்றி தான முழுமையான விளக்கம் தரமுடியுமா அதன் துவக்கம் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பதை பற்றி முழுமையான தகவல் தேவை படுகிறது.இயேசுகிறிஸ்துவிற்கு பின்னர் உள்ளதை பற்றி வேண்டாம் .இயேசுகிறிஸ்துவுக்கு உள்ள தகவல் வேண்டும்