Friday, October 29, 2010

ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்

"1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும், இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்."(By Way of Deception: The Making of a Mossad officer)

"இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் இருந்தே இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வந்துள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரையில் யுத்தத்தை நடத்துவதற்கு மொசாட் வழிகாட்டி வந்துள்ளது. இலங்கையில் ஈழப்போரை முடிக்க விடாது தொடர்வதற்காக, மொசாட் இந்தியாவிலும் செல்வாக்கு மிக்க பெரும்புள்ளிகளை வளைத்துப் போட்டது. RAW விற்குள்ளும் மொசாட் ஆட்கள் இருந்தனர். இந்தியப் படைகளை அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்ததாலும், இஸ்ரேலிய ஆயுதங்கள் பிடிபட்டதாலும், ராஜீவ் காந்தியை மொசாட் தீர்த்துக் கட்டியிருக்கலாம். பழியை புலிகள் மீது சுமத்துவதற்கு சுப்பிரமணிய சுவாமி போன்ற மொசாட் கையாட்கள் உதவினார்கள்."

இதுவரை வெளிவராத பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை முன்னாள் மொசாட் அதிகாரி Victor Ostrovsky தனது நூலில் வெளிக் கொணர்ந்துள்ளார். By Way Of Deception என்ற அந்த நூலில், ஈழப்போரில் மொசாட்டின் பங்களிப்பு பற்றி வந்த குறிப்புகளை சுருக்கமாக தொகுத்துத் தருகிறேன்.

இலங்கையில் மொசாட் இரண்டு தரப்பினருக்கும் பயிற்சியளித்து ஆயுதங்களை கொடுத்து வந்தது. கம்போடியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் உள்ள இஸ்ரேலியரின் நிறுவனங்கள் ஆயுதங்களை விநியோகம் செய்தன. இலங்கையை அதிக இலாபம் தரும் ஆயுத சந்தையாக மாற்றுவதே மொசாட்டின் நோக்கம்.

1983 ல் தமிழர்கள், சிங்களவர்களிடம் இருந்து சுதந்திரம் கோரி போராடத் தொடங்கினார்கள். சிங்கள ஜனாதிபதி ஜெயவர்தனே 50 மொசாட் அதிகாரிகளை பயிற்சிக்காக அழைத்திருந்தார். அவர்கள் மாதுறு ஓயா என்னும் இடத்தில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளித்தனர். அது ஒன்றும் இரகசியம் அல்ல. அன்று எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்த செய்தி தான்.

1984 லிலும் 1985 லிலும் தமிழ்ப் போராளிகள் இஸ்ரேலுக்கு பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த நூலின் ஆசிரியரான விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி அவர்களை பயிற்சி முகாம்களுக்கு கொண்டு சென்று, பயிற்சி முடிந்தவுடன் அனுப்பி விடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இந்தியாவில் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருந்த மொசாட் ஆள் ஒருவர், பயிற்சிக்கு அனுப்பி வைக்கும் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். இலங்கையில் யுத்தம் வெடித்தவுடனே RAW அதிகாரிகளை மொசாட் அணுகியது.

1984 ஜூலை மாதம் RAW வில் இருந்த சில அதிகாரிகள் தமிழர்களை கொமாண்டோ பயிற்சிக்காக அனுப்பும் பொறுப்பை ஏற்றனர். அவ்வாறு பயிற்சிக்கு அனுப்பப்பட்ட தமிழ்ப் போராளிகள் TELO அமைப்பை சேர்ந்தவர்கள். இந்தியாவுடன் நெருங்கிய உறவை பேணி வந்ததாலேயே அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்த ஒழுங்குகளை மேற்கொண்ட RAW அதிகாரிகளுக்கு மொசாட் BCCI வங்கி இலக்கம் ஒன்றின் ஊடாக பணம் அனுப்பியது.

அதே நேரம் தமிழர்களின் எதிரிகளான சிங்கள இராணுவத்திற்கும் இஸ்ரேலில் பயிற்சி வழங்கப்பட்டது. இஸ்ரேலியர்கள் இந்த தகவலை தமிழர்களுக்கோ, இந்திய அரசுக்கோ தெரிவிக்காது இரகசியமாக வைத்திருந்தனர். பயிற்சிக்கு வந்த இரண்டு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத படி பிரித்து வைக்கப்பட்டனர். டெல் அவிவ் நகரத்திற்கு அருகில் Kfar Sirkin எனும் தளத்திலேயே அந்த இரண்டு வார கொமாண்டோ பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இரண்டு வார பயிற்சிக்கு பின்னர், ஹைபா நகருக்கு அருகில் உள்ள Atlit என்ற மிக இரகசியமான கடற்படை முகாமுக்கு தமிழர்களை கொண்டு சென்றனர். அங்கு வைத்து மேலதிக பயிற்சிகளை வழங்கி விட்டு திருப்பி அனுப்பினார்கள். அவர்களை அனுப்பி விட்டு அந்த இடத்திற்கு சிங்களப் படையினரை கொண்டு வந்தார்கள். தமிழ் போராளிகளிகளுக்கு சொல்லிக் கொடுத்த போர்த்தந்திரங்களை எவ்வாறு சமாளிப்பது என்று கற்றுக் கொடுத்தனர்.

இஸ்ரேலியர்கள் பயிற்சிக்காக சிங்களப் படையினரிடம் பெருமளவு பணத்தை அறவிட்டார்கள். ஒவ்வொரு சிங்களவரும் ஒரு நாள் பயிற்சிக்கு 300 டாலர் கட்ட வேண்டும். சிறிலங்கா இராணுவக் குழு ஒன்றுக்கான மூன்று மாத பயிற்சிக்கு ஒன்றரை மில்லியன் டாலர்கள் அறவிட்டார்கள். ஹெலிகாப்டர் பயிற்சிக்கு ஒரு மணித்தியாலம் 5000 டாலர்கள். கனரக ஆயுத பயிற்சிக்கு பாவிக்கப்பட்ட ஷெல்களுக்கும் இஸ்ரேலியர்கள் பணம் வசூலித்தார்கள். உதாரணத்திற்கு பசூக்கா (ரொக்கட் லோஞ்சர் போன்ற சுடுகருவி) பயிற்சிக்கு பாவிக்கப்பட்ட ஷெல் ஒன்று 220 டாலர். கனரக மோர்ட்டார் பயிற்சிக்கு பாவித்த ஷெல் ஒன்று 1000 டாலர்.

தமிழ் போராளிகள் மத்தியில் நிதிப்பற்றாக்குறை காணப்பட்டதால், இஸ்ரேலியர்கள் அவர்களிடம் பணம் கேட்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக தமிழர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மிகப் பெரிய போருக்கு முதலீடு செய்வதாக கருதிக் கொண்டனர். யுத்தம் தீவிரமடைந்தால் ஆயுதங்களின் தேவை அதிகரிக்கும். அப்போது இலங்கை இராணுவத்திற்கு பல கோடி பெறுமதியான ஆயுதங்களை விற்று பெரும் இலாபம் சம்பாதிக்கலாம் என கணக்குப் போட்டார்கள்.

1985 ல், இலங்கையில் உளவு நடவடிக்கைகளுக்கான இணைப்பு அதிகாரியாக Rafi Eytan அனுப்பி வைக்கப்பட்டார். இஸ்ரேலிய வேதியல் நிறுவனம் ஒன்றின் உத்தியோகத்தர் என்ற போர்வையில் அவர் இலங்கையில் உளவு பார்த்தார். 1987 ல், அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனவுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். தமிழ்ப் பிரதேசங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து, 3000 இந்தியப் படைகளை அனுப்பினார். யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அல்லது கண்டெடுத்த ஆயுதங்களில் பல இஸ்ரேலிய தயாரிப்புகள். அதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்த இஸ்ரேலியர்களை வெளியேற்றுமாறு ராஜீவ் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கையில் சமாதானம் ஏற்பட்டால் தமது ஆயுத விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் என்று மொசாட் அஞ்சியது. மொசாட்டிடம் இருந்து பணம் வருவது நின்று விடும் என்று சில RAW அதிகாரிகளும் பயந்தனர். அப்போதே ராஜீவ் காந்திக்கு எதிரான சதி ஆரம்பமாகி விட்டது. இஸ்ரேலின் ஆயுத விநியோகம் தடுக்கப்பட்டதால் 21 மே 1991 ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். படுகொலைக்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக, ராஜீவ் மீது இலக்கு வைக்கப் பட்டிருப்பதாக யாசீர் அரபாத் எச்சரிக்கை விடுத்திருந்தார். ராஜீவ் காந்தியை கொன்ற RDX வெடிகுண்டு இஸ்ரேலிய தயாரிப்பு என நம்பப்படுகின்றது. ராஜீவ் கொலை விசாரணை இரகசியமாக நடத்தப்பட்டது. நீதிமன்ற ஆவணங்கள் பகிரங்கப் படுத்தப் படவில்லை.

"தற்கொலைக் குண்டுதாரி" என கருதப்படும் நபருக்கு என்ன நடந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. சுப்பிரமணிய சுவாமி என்ற பிரமுகர் இஸ்ரேலின் சம்பளப் பட்டியலில் இருந்தார். அவர் விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததாக தொடர்ந்து எழுதி வந்தார். இஸ்ரேல் விடுதலைப் புலிகளுக்கு அல்ல, டெலோ அமைப்பை சேர்ந்தவர்களுக்கே இராணுவப் பயிற்சி வழங்கி வந்தமை மீண்டும் குறிப்பிடத் தக்கது. ராஜீவை தற்கொலைக் குண்டுதாரி கொல்லவில்லை. அவருக்கு வைக்கப்பட்ட குண்டு, TELO -RAW - Mossad கூட்டு நடவடிக்கையாக இருக்கலாம்.

அதன் பிறகு இலங்கையில் யுத்தமும், கொலைகளும் தொடர்ந்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல் ஆயுதம் விற்று மில்லியன் டாலர்களை சம்பாதித்து விட்டது. 1988 ல், தென்னிலங்கையில் பிரேமதாசாவுக்கும், லலித் அத்துலத்முதலிக்கும் இடையில் ஜனாதிபதி பதவிக்கு போட்டி ஏற்பட்டது. லலித் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில், மொசாட்டின் சம்பளப் பட்டியலில் இருந்தவர் தான். ஆனால் தற்போது தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக இஸ்ரேலுக்கு எதிராக திரும்பினார். பிரேமதாச காலத்தில் தான், மொசாட் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சியளித்தது. இலங்கையில் மொசாட் பயிற்சி முகாம்களை அமைக்க உதவியதாக, பிரேமதாசாவுக்கு எதிராக லலித் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதனால் அவரும் கொலை செய்யப்பட்டார்.

சந்திரசுவாமி என்ற பிரமுகர் RAW வுடனும், மொசாட்டுடனும் தொடர்பு வைத்திருந்ததை இந்திய நீதிபதி ஜெயின் கண்டறிந்தார். BCCI (Bank of Credit and Commerce International ) வங்கி மூலமே, சந்திரசுவாமிக்கும் மொசாட்டுக்குமான தொடர்பு ஏற்பட்டது. Agha Hasan Abedi என்ற பாகிஸ்தானிய பிரஜை BCCI வங்கியை நிறுவினார். அது இன்று 78 நாடுகளில், 400 கிளைகளுடன் இயங்கி வருகின்றது. அதன் சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலர்கள். லண்டனில் தலைமையகத்தை கொண்டிருந்தாலும், இலகுவாக கறுப்புப் பணத்தை மாற்றக் கூடிய லக்சம்பெர்க்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலியர்களும் இரகசிய பணப் பரிமாற்றங்களை BCCI ஊடாகவே செலுத்துகின்றனர். லண்டனில் இருந்த BCCI கிளை (Sloane Street branch ) ஒன்றின் மூலம் பாலஸ்தீன தீவிரவாதி அபுநிதால் பணம் பெற்று வந்ததாக, பிரிட்டனின் MI5 க்கு தெரிய வந்தது. மொசாட் மட்டுமல்ல, பாகிஸ்தானின் ISI, இங்கிலாந்தின் MI6, அமெரிக்காவின் CIA, எல்லாமே BCCI வங்கியை பயன்படுத்தினார்கள்.


Victor Ostrovsky எழுதிய By way of Deception நூல் பற்றிய விபரங்களுக்கு: 
By Way of Deception: The Making of a Mossad officer

By Way of Deception;Book Review,by Sachi Sri Kantha
By Way of Deception
Victor Ostrovsky

Mossad in Sri Lanka: The Genesis of LTTE

In Sri Lanka, Mossad trains, arms, and equips both sides — through its Cambodian Zim Shipping empire, and through its holdings in South Africa — and perpetrates false flags whenever there is talk of peace. Mossad’s goal is to maintain the lucrative arms market, plus the local drug trade that helps pay for those arms.
When the Tamils started fighting the Singhalese for independence in 1983, the Singhalese President Junius Jayawardene brought in 50 Mossad officers to train his security forces at a place called Maduru-Oya. This was not secret. It was in all the newspapers.
From that point on, Mossad armed, trained, and equipped both sides. (Since the Tamil forces are smaller than the Sri Lankan army, the zio-media calls the Tamils “terrorists.”)
In 1991 Victor Ostrovsky, author of By Way of Deception, told Indian Abroad news service that Mossad brought many Tamils to Israel for training in 1984 and 1985. “These groups kept coming and going. When I was in Mossad, it was part of our routine job to take them to training camps and make sure they got training worth what they paid for, no more and no less. The Singhalese paid in cash.”
Ostrovsky said the arrangement for training was made by the Mossad liaison in India, who lived there under a British passport.
We know from sources other than Ostrovsky that shortly after the war broke out in Sri Lanka, Mossad approached a group of officers from India’s Research and Analysis Wing (RAW, which is India’s equivalent to the CIA). In July 1984 this inner RAW circle arranged with Mossad to send Tamils to Israel for commando training. Mossad paid the RAW team for this by setting up accounts for them in the BCCI bank. (More about this below.) The Tamil commandoes that went to Israel became known as the TELO. They are separate from the main Tamil rebels, known as the LTTE (Liberation Tigers of Tamil Eelam).
Meanwhile Mossad simultaneously trained the Tamils’ enemies (the Singhalese) in Israel, but did not tell the main Tamil army, or the main Indian government, or anyone else. In Israel they kept both the groups apart. Their purpose for this, as always, was to fan the war to a fever pitch, and make a fortune as the Goyim kill each other.
Each group had 60 members. Training started with a two-week basic commando course at an Israeli base known as Kfar Sirkin near Tel Aviv. This is a fairly large base, but on one occasion the two groups passed within a few yards of each other while they were out jogging.
After the two-week basic course, the Israelis took the Tamils to Atlit, a top-secret naval commando base at Haifa. Meanwhile Singhalese were brought in for basic training back at the Kfar Sirkin base. After the Tamils completed advanced training in Haifa, they were moved out, and the Singhalese were brought in to learn how to deal with all the techniques the Israelis had just taught the Tamils.
Mossad had to dream up punishments and night training exercises to keep both groups busy, so they wouldn’t run into each other in Israel. Sometimes the situation was hectic, but the Mossad agents were tickled to deceive the Goyim while preparing them to kill each other.
The Jews made a tidy sum training the Singhalese. Ostrovsky writes in his book By Way Of Deception that, “Israel charged each of the 60 Singhalese $300 per day, for a total of $18,000 per day. For a three-month course, Israel charged them $1.6 million. In addition, Israel charged them $5,000 to $6,000 an hour for helicopter rental, with as many as 15 helicopters being used in a typical training exercise. The Israelis also charged for special training ammunition. A bazooka shell, for example, cost about $220 a unit, while heavy mortars were about $1000 each.”
Apparently Mossad did not charge the Tamils, which had little money at that point. Instead, they regarded the Tamil training as an investment toward their goal of getting a major war going in Sri Lanka. Then they could make a financial killing off the physical killing. As noted above, the Tamil commandos formed an elite splinter group known as the TELO, which was separate from the LTTE. The TELO was tied in with the inner circle of India’s RAW (the intelligence agency) — unknown to the overall Indian government.
At one point the Jews worried because 27 Indian commandos also came to Israel for training, and the Jews could not let the Indians see the Tamils or the Singhalese. Therefore the Sayret Matcal took over the training regime for the Tamils and the Singhalese. The Sayret Matcal is a commando-recon group that executed the false-flag raid in Entebbe Uganda (1976).
So the Jews trained Tamils, Singhalese, and Indian commandoes, preparing them all to kill each other.
Meanwhile back in Sri Lanka itself, Mossad did everything possible to escalate the massacres on all sides into a full-scale war.

23 comments:

sivakumar said...

மிகப் பெரும் அதிர்ச்சியான தகவல். நம்பவே முடியவில்லை. இஸ்ரேல் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் ஒரே நேரத்தில் வைத்து ஒருவருக்கொருவர் அறியாமல் பயிற்சி அளித்தது.இராணுவத்தின் மீது தாக்குதல் நட்த்துவதைப் பற்றி புலிகளுக்கும், கொரில்லாத் தாக்குதலை எதிர்கொள்வதெப்படி என் இலங்கை இராணுவத்திற்கும் பயிற்சி அளித்தது இதை இஸ்ரேலிய வீரர்ரின் புத்தக்த்தில் இருந்ததாகவும், அவர் பேசாமல இங்கேயே இருவரையும் மோதவிட்டால் அப்பாவி மக்களின் பலி தடுக்கப்படும் என்று நக்கலாகக் குறிப்பிட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Massy spl France. said...

என்ன கருமம் இதெல்லாம்? இப்படி கூட நடக்க முடியுமா? அடப்பாவமே, இரண்டாம் உலப் பொரின்போது பூண்டோடு அழிந்திருக்க வேண்டிய இந்த யூத பிராணிகள் ஈழத் தமிழர்களின் வாழ்வில் இப்படி மண் அள்ளிப் போட்டுவிட்டார்களே!

தகுந்த ஆதாரங்கள் கிடைத்தவுடன் இந்திய அரசாங்கம் இனி என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

தமிழர்களின் அழிவிற்கு காரணமாக இருந்த இஸ்ரேலின் மோசாத், இந்திய ரா, சிங்கள அரசு மற்றும் தனிப்பட்ட சில மொள்ளமாரிகள் அனைவரின் பாவச் செயல்களும் கடும் தண்டனைக்குறியது.

sivakumar said...

//ராஜீவை தற்கொலைக் குண்டுதாரி கொல்லவில்லை. அவருக்கு வைக்கப்பட்ட குண்டு, TELO -RAW - Mossad கூட்டு நடவடிக்கையாக இருக்கலாம்.//

புரியவில்லை. கொஞ்சம் விளக்குங்களேன்

Kalaiyarasan said...

//புரியவில்லை. கொஞ்சம் விளக்குங்களேன் //

நூலாசிரியர் கூற வருவது இதைத்தான்:
ராஜீவ் ஒரு தற்கொலைக் குண்டு தாக்குதலால் கொலை செய்யப்படவில்லை. மாறாக முன்கூட்டியே மறைத்து வைக்கப்பட்ட குண்டு ஒன்று வெடிக்கப் வைக்கப் பட்டிருக்கலாம். முன்னாள் டெலோ அல்லது RAW உறுப்பினர்கள், இருவரும் இணைந்தே அந்தக் குண்டை பொருத்தியிருக்கலாம். சதித் திட்டத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை மொசாட் செய்து கொடுத்திருக்கும்.

"I suspect there was no suicide bomber, and that Mossad set off a bomb, or equipped the TELO, or perhaps the inner RAW circle to set off a bomb for Israel. Certainly Mossad was involved."
- Victor Ostrovsky

உண்மைத்தமிழன் said...

கலையரசன்..

ஆசிரியர் சொல்வதுபோல மனித வெடிகுண்டு அல்லாமல் புதைத்து வைக்கப்பட்ட குண்டாக இருப்பதற்கு அங்கே வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன்..!

ஆனால் தனுவின் இடுப்பில் அந்த வெடிகுண்டை கட்டி விட்டது யார் என்று சி.பி.ஐ.யால் இதுவரை அறிய முடியவில்லை என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டியுள்ளது.

Kousalya Raj said...

மிகவும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.....ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தின் பின்னணியில் இவ்வளவு விசயங்கள் அடங்கி இருக்கிறதா???

நம் ஈழ தமிழனின் தலை விதியை யார் யாரோ நிர்ணகிக்கிறார்கள்...மிகவும் வேதனையான தகவல்கள் தான்

நல்லவன் said...

இப்பொழுது என்ன சொல்கிறார்கள் இந்தக் கண்மூடித்தனமான இஸ்ரேலிய விசுவாசிகளான தமிழ்ச் சியோனிஸ்டுகள்? இங்கு மக்கள் படும் அல்லல்களைப் பணம் சேர்ப்பதற்கான முதலீடாக மாற்றிய இஸ்ரேலுக்கா இந்தத் தமிழ் நரிகள் வால் பிடிக்கிறார்கள்?

Kalaiyarasan said...

உண்மைத் தமிழன், நூலாசிரியர் கூறுவது போல ஏற்கனவே புதைக்கப்பட்ட குண்டு என்பது நம்புவதற்கு கஷ்டமானது. அவரும் இதை சரியாக கூறவில்லை. இருப்பினும் குண்டுவெடிப்பில் மொசாட்டின் பங்கிருந்தது என்ற சந்தேகத்தில் தான் அவ்வாறு ஊகித்திருக்கிறார் என நினைக்கிறேன்.

Anand said...

ராஜீவ் காந்தி படுகொலையில் ஏராளமான உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டன.

MK said...

இனியாவது தமிழக காங்கிரஸ் அபிமானிகள் உணர்ந்து் கொள்வார்களா?

Pradeep.P said...

ராஜீவ் காந்தி படுகொலையில் இதுவரை அறியாத தகவல்கள்.

Anisha Yunus said...

பம்பாயில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் மொசாட்டிற்கும் தொடர்பு இருந்தது என்றும் படித்துள்ளேன். அவர்களின் அடி வருட பெரிய பெரிய தலைகளிருக்கும்போது நம்மால் இப்படி புத்தகங்களை எழுதவும், படிக்கவும் மட்டுமே இயலும் என்பது வேதனையான உண்மை. :(

Anonymous said...

செய்தி: http://www.kuraltv.com/Articles-katturaigal-4.html

பாக்கிஸ்தானும் சீனாவும் நாசகர ஆயுதங்களை வழங்கிய போதும் போருக்கான திட்டவரைவுகளை தீட்டுவதிலோ அதை செயல்படுத்துவதிலோ இறங்கவில்லை.

தற்போது சிறீலங்காவின ஜனாதிபதி நாங்கள சீனா மற்றும் பாக்கிஸ்தானின ஆயுதங்களைக் கொண்டு இந்தியாவின் போரை நடத்தியுள்ளோம் எனக்கூறியதிலிருந்து இந்தப் போரில் இந்தியாவின பாங்கு என்னவென்பது புரிகிறது.இந்தியாவின் முன்னால் ராணுவ அதிகாரி ஒருவர்கூட இலங்கை தமிழர்களின் ரத்தம் இந்தியாவின் கரங்களிலும் படிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

32 நாடுகள் தமிழர் அழிவிற்கு துணைபோயிருக்க, அதிலும் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ஈரான் மும்மூர ஒத்துழைப்பு வழங்கியிருக்க கலையரசனுக்கு ஒரு நாடு மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறது. இதுதான் நடுநிலைமை?!

Unknown said...

ராஜீவ் காந்தியை தமிழ் மண்ணில் வைத்துக் கொள்வது என்று பிரபாகரன் முடிவு செய்தபோது, எப்படி இந்திராகாந்தி படுகொலைக்குப் பழிக்குப் பழியாய் டெல்லியில் இரண்டாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்களோ அது போல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் பல லட்சம் தமிழர்கள் கலவரத்தில் கொல்லப் பதிவார்கள் என்று யோசிக்கத் தெரிந்திருக்காதா? அப்படித் தெரிந்தே செய்த ஒரு நிகழ்வில் அவர் மட்டும் என்ன தியாகசீலரா? மொசாட்டையும், ராவையும் பற்றி வயிறு எறியும் அனைவரும் பிரபாகரனின் சுயநலம் கலந்த கொலைவெறியையும் நினைத்து எரியட்டும். வெங்கட்ராமன் என்னும் தமிழன் அன்று ஜனாதிபதியை இல்லாதிருந்தால் மற்ற இந்திய மாநிலங்களில் வசித்து வந்த ஒட்டு மொத்த தமிழினமும் அழிந்து போயிருக்கும் என்பதை மறந்து விடவேண்டாம்.

ரமேஸ் said...

இந்திராகாந்தி படுகொலைக்குப் பலி இரண்டாயிரம் சீக்கியர்கள். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பலி பல ஆயிரக்கணக்கான தமிழர்கள், முடிவுரை முள்ளிவாய்க்கலில்! இந்திய தமிழர் பலருக்கும் புலம்பெயர்ந்த பலருக்கும் இந்த வலி தெரிவதில் நியாயமில்லைதான்! உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் விவாத அரங்கம் நடாத்துவதுதான். கலையரசன் அவர்களே, இந்த விவாத அரங்கிற்கு நீங்கள் அடியெடுத்துக் கொடுப்பது சற்று வருத்தமாகவுள்ளது. உங்களுக்குத் தேவையென்றால் மொசாட்டையும் - ராவையும், இஸ்ரேலையும் - இந்தியாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தமிழனை யார் அதிகம் கொன்றது என்று அலசுவதிலிருந்து எங்களைக் கொஞ்சம் விட்டுவிடுங்கள்! உங்கள் விவாத அரங்கால் எங்களுக்கு என்ன பயன்? எலிக்கு சீவன் போகுது பூனைகளுக்கு விளையாட்டு!

அன்மையில் வந்த இந்த செய்தியைப் பாருங்கள்.
[சிங்கள இராணுவத்தின் பேய் முகத்தை வெளிகாட்ட இன்னும் ஒரு உதாரணம் அம்பலம்]
http://www.tamilwin.com/view.php?2e2IPV00bZjoK2edQG1h4bch98scd4E2F3dc27pi3b430QH3e23nLW20


உங்கள் தாயையே, சகோதரியையோ, மனைவினையை இந்த இடத்தில் வைத்துப்பாருங்கள். உங்களுக்கு இந்த அனர்ந்தம் நடந்தால் பட்டிமன்றம் நடத்துவீர்களா? பதில் சொல்லுங்கள் சகோதரர்களே! மீண்டும் ஒரு முறை கேட்கிறேன். தயவுசெய்து உங்கள் ஆய்வுகளில் எங்களை ஆய்வுப் பொருளாக்காதீர்! முடிந்தால் உதவுங்கள், உபத்திரவம் செய்யாதீர்!

Unknown said...

திரு.ரமேஷ்
சமாதானத்தை எங்கள் புஜபலத்தால் வென்றெடுத்தோம் ராஜீவ் கொலை ஒரு துன்பியில் நிகழ்வு என்றெல்லாம் தொலைக்காட்சியில் பேட்டிகொடுத்த அன்ரன் பாலசிங்கம் கடைசி கட்டத்தில் இந்தியாவின் உதவியில்லாமல் ஈழம் சாத்தியமல்ல என்று அதே தொலைக்காட்சியில் வேண்டுகோள் விடுத்தது என்பது ஊரறிந்த விஷயம். நீங்கள் சொல்லும் இலங்கை அரசின் ஒப்புமையில்லா அரக்கத்தனத்திற்கு எமது கடும் கண்டனத்தைப் பதிவு செய்யும் வேளையில் இனியாவது ஈழத்தமிழர் விடுதலைப்புலிகள் போன்ற விளைவுகளை சிந்திக்காமல் தன்னிச்சையாய் முடிவெடுக்கும் குழுக்களின் பின்னால் செல்லக்ககூடாது என்று அறிவுருத்துவதும் எம் கடமை.

சோழன் said...

இந்த பதிவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு
தெரிவிப்பது என்னவென்றால் ?
சுதேசிய அறிவியல் ஆயுத நுட்பங்களை
நமது போராட்ட களமாக மாற்றவேண்டிய எதிர் களமுனை
ஆன்றோர்களால் முனையப்பட வேண்டீருக்கிறது .
அனைத்து தரப்பட்ட தமிழர்களிடமும்
நுட்பமான அறிவியலரசியல் கொண்டு களமுனையில் இணைக்கவேண்டிய காலகட்டம் தமிழர்களம்.நவீன களத்திற்கு நாம் நம்முடைய பரிணாம வளர்ச்சியை தகவமைத்து கொள்வதில்தான் .
எதிர்காலமும் களமும் நம்மை கொண்டுசெல்கிறது
என்பது இந்த பதிவில் திண்ணமாகிறது .

lcnathan said...

ethayum namba muduyavillai!! innum veli vara vaendiya seithikal pala irukkum!!

Anonymous said...

>>>ராஜீவை தற்கொலைக் குண்டுதாரி கொல்லவில்லை. அவருக்கு வைக்கப்பட்ட குண்டு, TELO -RAW - Mossad கூட்டு நடவடிக்கையாக இருக்கலாம். >>>>>

புலிகளே மறுக்காத ஒரு விஷயம் இது. ஒரு தடவை கூட நாங்கள் ராஜீவ் காந்தியை கொல்லவில்லை என்று புலிகள் மறுத்ததில்லை. ஒருவேளை LTTE -RAW - Mossad கூட்டு நடவடிக்கையாக இருந்திருக்கலாம். 1983 இல் ஈழ தமிழர்களுக்கு ஒரே எதிரி சிங்களவன், ஆனால் 2010 இல் உலகமே ஈழ தமிழர்களுக்கு எதிரியானதுக்கு இந்த சம்பவம் தான் தொடக்கம்.

இப்டியான பிழையான விசயங்களை மொழி பெயர்பதன் மூலம் புலம்பெர்ந்த புலிவால்களுக்கு கதைக்க அவல் கொடுத்து விடாதீர்கள்.

Anonymous said...

@Anonymous

1992- லேயே புலிகளின் தலைவர் இந்த கொலைக்கும் எமது இயக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்..

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090518_prabaiw.shtml

இதில் 1991, 1994, 1995 காணொளியை பொறுமையாக கேட்கவும்..

சும்மா சுப்ரமணிய சாமி போல தான் தப்பிக்க மற்றவர்மேல பலியை போடப்படாது.. இன்னும் நீங்க வளரனும் முகமிலி..

Kalaiyarasan said...

Mossad in Sri Lanka & The Genesis of LTTE

In Sri Lanka, Mossad trains, arms, and equips both sides — through its Cambodian Zim Shipping empire, and through its holdings in South Africa — and perpetrates false flags whenever there is talk of peace. Mossad’s goal is to maintain the lucrative arms market, plus the local drug trade that helps pay for those arms.

When the Tamils started fighting the Singhalese for independence in 1983, the Singhalese President Junius Jayawardene brought in 50 Mossad officers to train his security forces at a place called Maduru-Oya. This was not secret. It was in all the newspapers.

From that point on, Mossad armed, trained, and equipped both sides. (Since the Tamil forces are smaller than the Sri Lankan army, the zio-media calls the Tamils “terrorists.”)

In 1991 Victor Ostrovsky, author of By Way of Deception, told Indian Abroad news service that Mossad brought many Tamils to Israel for training in 1984 and 1985. “These groups kept coming and going. When I was in Mossad, it was part of our routine job to take them to training camps and make sure they got training worth what they paid for, no more and no less. The Singhalese paid in cash.”

SaraK said...

இது எல்லாம் எல்லருக்கும் தெரிந்து இருக்கிறது ஆனால் நடவடிக்கை எடுக்க மாட்டாங்க..

நான் கூட கேள்விப்பட்டிருக்கிறேன், வெடி குண்டை வயிற்றில் தாங்கி வெடித்த பெண்னைவிட ராஜீவ் காந்தியின் உடல் மிகவும் சிதைந்து இருந்தது. அது எப்படி?

மர்மம்.. மெளனம்...

Ramanan.K said...

சண்டையிட்டுக் கொள்ளும் இரு தரப்பினருக்கும் உதவுவது என்பது ஜீயோனிஸ்ட் யூதர்களின் வழக்கம்.அவர்கள் எவரையும் நண்பர்களாகவோ எதிரிகளாகவோ நினைப்பதில்லை.அவர்களின் ஒரே இலட்சியம் இவ்வுலகம் முழுவதையும் அடக்கியாள வேண்டும் என்பதே.