Sunday, January 24, 2010

ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க ஆயுதம் விளைவித்த பேரழிவு?


(Press TV, 23-1-10)"லட்சக்கணக்கான உயிர்கள் பலியான ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க கடற்படையின் நவீன ஆயுதம் ஒன்றை பரீட்சித்ததால் விளைந்த பேரழிவு!" ரஷ்யாவின் வட-துருவ கடற்படையின் உறுதிப்படுத்தாத அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ரஷ்ய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளாத அறிக்கையை மேற்கோள் காட்டி, வெனிசுவேலா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

மார்ச், 2002 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் பதிவான 7.2 magnitude நிலநடுக்கத்திற்கு அமெரிக்க ஆயுதமே காரணம் என ரஷ்யா குற்றம் சுமத்தியிருந்தது. செயற்கையாக பூகம்பத்தை தோற்றுவிக்கும் ஆயுதம் அமெரிக்காவிடம் மட்டுமல்லாது, ரஷ்யாவிடமும் இருக்கின்றது. 2002 ம் ஆண்டு, ஜோர்ஜியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ரஷ்ய நாசகார ஆயுதமே காரணம் என, ஜோர்ஜிய பசுமைக் கட்சி குற்றஞ்சாட்டி இருந்தது.

வெனிசுவேலா ViVe தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் சாவேஸ், "அமெரிக்கா பரிசோதனை செய்த நவீன நிலநடுக்க ஆயுதம் ஹெய்ட்டியில் பயங்கரமான விளைவை ஏற்படுத்தியது. இந்த ஆயுதத்தை ஈரானில் பிரயோகித்து செயற்கையாக நிலநடுக்கம் ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஒத்திகையாகவே பரிசோதனை அமைந்திருந்ததாக" குற்றஞ்சாட்டினார். (இது குறித்து ரஷ்ய டுடே ஒளிபரப்பிய செய்தியறிக்கை.)


ரஷ்ய அறிக்கையை மேற்கோள் காட்டிய ViVe தொலைக்காட்சி: "அமெரிக்கா இதற்கு முன்னரும் கலிபோர்னியா அருகில் பசுபிக் சமுத்திரத்தில் ஆயுதப் பரிசோதனை நடத்தியதாகவும்,6.5 magnitude நிலநடுக்கம் பதிவாகியதாகவும்..." தெரிவித்தது. கலிபோர்னிய நிலா நடுக்கத்தில் உயிரிழப்புகள் ஏற்படா விட்டாலும், சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. வெனிசுவேலா செய்தியறிக்கையின் பிரகாரம் "ஹெய்ட்டி நிலநடுக்கத்தால் வரப்போகும் விளைவுகளை அமெரிக்க அரசு முன்கூட்டியே எதிர்பார்த்திருக்கும். அமெரிக்க தென் பகுதி கட்டளைத் தளபதி ஜெனரல் கீன் ஏற்கனவே (நிவாரண வேலைகளை பொறுப்பேற்க) ஹெய்ட்டி அனுப்பபட்டிருந்தார்."

இயற்கை அனர்த்தங்களான நிலநடுக்கம், வெள்ளம், போன்றவற்றை செயற்கையாக உருவாக்க கூடிய ஆராய்ச்சி மையம், High Frequency Active Auroral Research Program (HAARP) ஏற்கனவே அமெரிக்காவில் இயங்கி வருகின்றது. இந்த ஆராய்ச்சி மையம் செயற்கையாக காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஊர்ஜிதப்படுத்தப் படாத குற்றச்சாட்டு உள்ளது. 1997 ம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வில்லியம் கோகன் தெரிவித்த கூற்று ஒன்றும் இங்கே நினைவு கூறத் தக்கது. "தொலைதூர மின்காந்த அலைகளை ஏவி செயற்கையாக பருவநிலை மாற்றம், நிலநடுக்கம் போன்றவற்றை தோற்றுவிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்" குறித்து கவலை அடைவதாக தெரிவித்திருந்தார்.

மேலதிக தகவல்களுக்கு:
Hugo Chavez Mouthpiece Says U.S. Hit Haiti With 'Earthquake Weapon'
H.A.A.R.P.
HAARP: The Ultimate Weapon of the Conspiracy


HAARP Holes in Heaven Part 1/6

HAARP Holes in Heaven Part 2/6

HAARP Holes in Heaven Part 3/6

HAARP Holes in Heaven Part 4/6

HAARP Holes in Heaven Part 5/6

HAARP Holes in Heaven Part 6/6

7 comments:

தமிழ் உதயம் said...

எதுவும் நடக்கும். எதையும் ஆக்க முடிகிறவர்களால், அழிக்கவும் முடியும். அதே நேரம் உண்மை தெரியாமல் எதையும் எழுதி விடக்கூடாது. பொய்யான குற்றச்சாட்டுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்

Kalaiyarasan said...

இது இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல் என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த செய்தி முதலில் வெனிசுவேலா ViVe தொலைக்காட்சியிலும், பின்னர் ஈரானிய Press TV தொலைக்காட்சியிலும் வந்திருந்தது.
http://www.presstv.ir/detail.aspx?id=116834&sectionid=351020104

Muruganandan M.K. said...

முக்கியமான பதிவு.
அதிபர் சாவேஸ், "அமெரிக்கா பரிசோதனை செய்த நவீன நிலநடுக்க ஆயுதம் ஹெய்ட்டியில் பயங்கரமான விளைவை ஏற்படுத்தியது." எனக் கூறியமை அவதானிக்க வேண்டியது.

காரணம் ஆயிரம்™ said...

இயற்கை தாறுமாறான மா(சீ)ற்றங்களுக்கு, மனிதர்கள் தங்களுக்கு ’தெரியாமல்’ இயற்கைக்கு இழைத்த தவறுகள் என்று நினைத்திருந்தோம்..

தாங்கள் கூறிய விஷயம் உண்மையெனில், இயற்கைக்கு ‘தெரிந்தே’ ஊறு விளைவிக்கிறார்கள். பின் எப்படி சும்மாயிருக்கும்?

அன்புடன்
http://kaaranam1000.blogspot.com

Colvin said...

பெரும்பாலும் இத்தகவல் உண்மையாகவே இருக்கக் கூடும். இப்போது நாம் நம்பும் விடயங்கள் பல பத்தாண்டுகளுக்கு முன் நம்ப முடியாத விடயங்களாகவே இருந்துள்ளன. இதுவும் இவ்விதமாகவே இருக்கக் கூடும்.

செயற்கை மழையை பொழியச் செய்தல், கருமுகில் கூட்டங்களை கலைத்தல் போன்ற விடயங்கள் நாம் கண் காணும் விடயங்களாக இருக்கும் போது இது ஒன்றும் பெரிய விடயமாகத் தெரியவில்லை.

Kalaiyarasan said...

Dr . முருகானந்தம், கொல்வின், காரணம் ஆயிரம் நன்றிகள்.

குடுகுடுப்பை said...

நான் இதை ஒரு காமடிப்பதிவாக எடுத்துக்கொள்கிறேன்