Friday, November 05, 2010

தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?


இலங்கையின் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினையை, உலகில் வேறெந்த நாட்டின் பிரச்சினையுடனும் ஒப்பிடுவதற்கு பலர் விரும்புவதில்லை. ஈழத் தமிழர் பிரச்சினை உலகில் வேறெங்கும் காண முடியாத தனித்துவமான பிரச்சினை என்றே, குறிப்பாக தமிழ் தேசிய குழுமத்தை சேர்ந்தவர்கள் நம்புகின்றனர். அவ்வாறு கூறுகின்றவர்கள் கூட, தமிழரை யூதர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை நிராகரிப்பதில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு ஒரு காலத்தில் கருத்தளவில் மட்டுமே இருந்து வந்துள்ளது. இன்று அது நிறுவனமயப்படுத்தப் பட்டு வருகின்றது.

இஸ்ரேலிய அரசு புரியும் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, பாலஸ்தீனர்களின் இனச்சுத்திகரிப்பையும், இனப்படுகொலையையும் கூட நியாயம் என்று வாதாடும் அளவிற்கு கண்மூடித்தனமான விசுவாசிகள் பெருகி வருகின்றனர். இஸ்ரேலுக்கு சார்பான தமிழ் சியோனிச கொள்கையை வளர்த்தெடுக்கும் நோக்கோடு சில தொடர் கட்டுரைகள் இணையத் தளங்களில் வலம் வருகின்றன. புலம் பெயர்ந்த தமிழ் ஊடகங்கள் அதற்கு களம் அமைத்துக் கொடுக்கின்றன. "தமிழர்களும், யூதர்களும் ஒரே தலைவிதியை பங்குபோடும் இனங்கள்," என்ற தத்துவார்த்த அடிப்படையில் இருந்தே அந்த சிந்தனைகள் யாவும் முகிழ்க்கின்றன. தமிழர் மத்தியில் சியோனிசத்திற்கு ஆதரவுத் தளம் உருவாக்க பாடுபடும் புத்திஜீவிகள், தவறான உதாரணங்கள் மூலம், அல்லது வரலாற்றை திரிப்பதன் மூலம் அத்தகைய முடிவை எட்டுகின்றனர்.

இலங்கை, இந்திய அரசியல் தலைமைகள், நீண்ட காலமாக இஸ்ரேலை நிராகரிக்கும் கொள்கையை பின்பற்றி வந்தன. இந்தியாவில் இந்து அடிப்படைவாத பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டன. பி.ஜே.பி. அரசு அணு குண்டு வெடிப்பு பரிசோதனை நிகழ்த்தியதன் பின்னணியில் இஸ்ரேலின் ஒத்துழைப்பு இருந்தமை ஒன்றும் இரகசியமல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியமானது மேற்கு-தெற்கு ஆசிய நாடுகளை கண்காணிக்கும் பொறுப்பை இஸ்ரேலிடம் ஒப்படைத்திருந்தது. அவற்றை கண்காணிப்பது மட்டுமல்ல, தேவை ஏற்படின் தலையீடு செய்து ஏகாதிபத்திய நலன்களை நிறைவேற்றுவதும் அவர்களது நோக்கமாக இருந்தது.

இந்த குறிப்பிட்ட பூகோள பிராந்தியத்தில் அமைந்திருந்தவை பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகள். அங்கெல்லாம் இஸ்ரேல் செல்வாக்கு செலுத்துவது இலகுவானதல்ல. பனிப்போர் காலகட்டத்தில் இந்தியா சோவியத் சார்பு நாடாக இருந்ததால், அங்கேயும் ஊடுருவ முடியாமல் இருந்தது. ஆனால் 1977 ம் ஆண்டு இலங்கையில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் யு.ஏன்.பி. ஆட்சிக்கு வந்தமை, இஸ்ரேலுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மேற்குலக சார்பு நவ தாராளவாத கொள்கையை பின்பற்றிய ஜே.ஆர். அரசு, முதன்முறையாக இஸ்ரேலிய நலன் பேணும் அமைப்பை உருவாக்கியது. அதிலிருந்து இலங்கை அரசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நெருக்கமடைய ஆரம்பித்தன. அப்போது தான் ஆரம்பாகியிருந்த ஈழப்போரை அடக்குவதற்கு இஸ்ரேலின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள முடிந்தது.

வடக்கு கிழக்கில் ஆயுதபாணி தமிழ் இளைஞர்கள் மக்களுடன் மக்களாக கலந்திருந்ததால், அவர்களை அடையாளம் கண்டு தாக்குவது அரச படைகளுக்கு இயலாத காரியமாக இருந்தது. அதனால் "கண்மூடித் தனமான விமானக் குண்டுவீச்சை நடத்துமாறும், பத்து பொது மக்கள் இறந்தால் அதில் ஒரு போராளி இருப்பான்," என்றும் இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் கூறியிருந்தனர். இன்னொரு விதமாக கூறினால், போர்க்காலத்தில் தமிழ் இனப்படுகொலை அத்தியாவசியமானது என்று இஸ்ரேல் எடுத்துக் கூறியிருந்தது. அரச மட்டத்தில் இருந்து கசிந்த தகவல்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்கள், அன்று போராளிக் குழுக்களால் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டன. 1984 காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் அடுத்தடுத்து பல விமானக் குண்டுவீச்சுகள் இடம்பெறுவதும், அவற்றில் பல அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் அதிகரித்தது.

மூன்றாவது ஈழப்போர் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் பலம் பெருமளவு அதிகரித்திருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்திய போர் விமானங்களை மட்டுமே வைத்திருந்த சிறி லங்கா விமானப் படையினால் சமாளிக்க முடியவில்லை. இப்படியே போனால், போராளிகளின் கை ஓங்குவதும், அரச படைகள் தோல்வியடைவதும் நிச்சயம் என்ற சூழல் காணப்பட்டது. விமான எதிர்ப்பு பீரங்கிகளால் எட்ட முடியாத, அதே நேரம் உயரத்தில் இருந்த படியே இலக்கை தாக்கக் கூடிய நவீன விமானங்கள் தேவைப்பட்டன. அமெரிக்க தயாரிப்பான F - 16 ரக விமானங்கள் உயர் தாக்குதிறன் கொண்டவை. ஆனால் விலை மிக அதிகம். அதற்கு ஒரு மாற்று கிடைத்தது. இஸ்ரேலில் தயாரிக்கப்படும் கிபீர் விமானங்கள் F-16 செய்யும் அதே வேலையை செய்யும், ஆனால் விலை குறைவு. இதில் இன்னொரு அனுகூலம் இருந்தது. மேற்குலகம் நவீன ஆயுதங்களை விற்பதானால், மனித உரிமை மீறாத நாட்டிற்கே விற்போம் என்று நிபந்தனை எல்லாம் போடுவார்கள். காசு கொடுத்தால் இஸ்ரேலியர்கள் விமானம் தருவார்கள்.
"Since the J79 turbojet engine as well as much of the technology inside the Kfir are produced in Israel under U.S. license, all export sales of the Kfir are subject to prior approval from the U.S. State Department, a fact that has limited the sale of the Kfir to foreign nations. As of 2006, the IAI Kfir has been exported to Colombia, Ecuador, and Sri Lanka." (http://en.wikipedia.org/wiki/IAI_Kfir )

உண்மையில் இஸ்ரேல் வழங்கிய கிபீர் விமானங்களும், ட்வோரா கடற்படைக் கலங்களும் இல்லா விட்டால், இலங்கை அரசு ஈழப் போரில் வென்றிருக்காது. அதே நேரம், இஸ்ரேலிய தயாரிப்புகள் ஈழத்தில் பெருமளவு உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும் ஏற்படுத்தி விட்டிருந்தன. இன்றைக்கும் ஈழத்தில் போரில் உடல் ஊனமுற்ற, உறவினர்களை இழந்த மக்கள், கிபீர்களையும், ட்வோராக்களையும் சபித்துக் கொண்டிருக்கிறார்கள். போரின் கொடுமையை உணராத புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மட்டுமே, சியோனிசவாதிகளின் இஸ்ரேல் ஆதரவு பிரச்சாரம் எடுபடுகின்றது. இதை அவர்களது புலம்பெயர் அரசியலுக்கான தத்துவார்த்த அடிப்படையாகவே கருத வேண்டியுள்ளது. ஏனென்றால் அவர்கள் அடிக்கடி "யூத diaspora " வையும், "தமிழ் diaspora" வையும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். அது சரியானதா?

புலம்பெயர்ந்த யூதர்கள் குறித்து இவர்கள் கொடுக்கும் தகவல்களை நம்பினால், நாம் பின்வரும் முடிவுகளுக்கு வருவோம்.

- சுமார் 1900 வருடங்களுக்கு முன்னர் யூதர்கள் அன்றைய இஸ்ரேலிய ராஜ்யத்தை இழந்து புலம்பெயர்ந்தார்கள்.

- 20 ம் நூற்றாண்டில் நவீன இஸ்ரேல் உருவாகும் வரை, பாலஸ்தீனத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய யூதர்கள் வாழ்ந்தார்கள்.

- ரோமர்கள், இஸ்லாமிய அரேபியர்கள் போன்ற அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் யூதர்களின் ஆலயங்களை அழித்தார்கள். அவர்களை அகதிகளாக அலைய வைத்தார்கள்.

- புலம்பெயர்ந்த யூதர்கள் (கிறிஸ்தவ) ஐரோப்பாவில் மட்டுமே அடைக்கலம் புகுந்தனர்.

- ஐரோப்பாவில் யூதர்கள் வறுமையான நிலையில் காணப்பட்டனர். யூதர்கள் மீதான கலவரங்களுக்கு காரணம் இனக்குரோதம்.

- 1900 ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்த காலத்தில் இருந்து இஸ்ரேலிய தேசியம் யூதர்களின் லட்சியமாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட தகவல்களில் எத்தனை வீதம் உண்மை கலந்திருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

நமக்கு யூதர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், ரோம சாம்ராஜ்ய காலகட்டத்தில் இருந்தே கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் கிரேக்க மொழி வரலாற்று ஆசிரியர்களால் எழுதப் பட்டவை. அதற்கு முன்னர் நடந்த சம்பவங்களை பற்றி அறிய, விவிலிய நூலையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. (தற்போது அகழ்வாராய்ச்சி மூலம் அந்த தகவல்கள் சரி பார்க்கப் படுகின்றன.) யூதர்களின் மத நூலான தோரா (கிறிஸ்தவர்களுக்கு : பழைய ஏற்பாடு) அவர்களைப் பற்றிய பூர்வீக வரலாற்றுக் கதைகளையும் கூறுகின்றது. இன்றைய ஈராக்கில் உள்ள "ஊர்" என்ற நகரில் இருந்து ஆபிரஹாமின் தலைமையில் யூத பழங்குடியினர் கானான் வருகின்றனர். பொதுவான மூதாதையரைக் கொண்ட பன்னிரு இனங்கள் ஆதி கால யூதர்களாக இனங்காணப் படுகின்றன. அவர்கள் நாடோடிக் குழுக்களாகவே ஆண்டவரால் நிச்சயிக்கப்பட்ட கானான் தேசத்திற்கு வந்து சேர்கின்றனர். கானான் தேசத்தில் கானானிய மக்கள் வாழ்ந்து வந்த போதிலும், யூத குடிகளும் அருகாமையில் வாழ்ந்துள்ளன. ஒரு கட்டத்தில் பன்னிரு யூத குடிகளும் எகிப்தில் அடிமைகளாகின்றனர். மோசெஸ் அவர்களை விடுவித்து மீண்டும் கானான் என்ற நிச்சயிக்கப்பட்ட பூமிக்கு கூட்டி வருகிறார். மொசெசின் தம்பியின் தலைமையில் ஆயுதமேந்திய யூதர்கள், கானான் மக்களை இனப்படுகொலை செய்கின்றனர். கானானியர்களை இனச் சுத்திகரிப்பு செய்த பின்னரே, அவ்விடத்தில் யூதர்களின் ராஜ்ஜியம் உருவாகின்றது. இந்த தகவல்கள் யாவும் விவிலிய நூலில் எழுதப்பட்டுள்ளன.
தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடுவது எத்தனை அபத்தமானது என்பதை இப்போது பார்க்கலாம். விவிலிய நூலில் உள்ள ஆதி கால யூதர்களின் வரலாறும், தமிழர்களின் வரலாறும் எந்த இடத்தில் ஒத்துப் போகின்றது? தமிழகத்திலும், ஈழத்திலும் வாழும் தமிழர்கள் எங்கோ வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய இனம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. (தமிழ் தேசியவாதிகள் கூட அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.) சங்க கால தமிழ் இலக்கியங்களிலும் அது போன்ற தகவல் எதுவும் இல்லை. மகாவம்சம் (சிங்களவர்களின் "தோரா"?) வேண்டுமானால் இஸ்ரேலிய ஆதரவாளர்களுக்கு கைகொடுக்கலாம். அதில் வரும் கதைகள் பல யூதர்களின் வரலாற்றுக் கதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கன. யூதர்கள் ஜாஹ்வே என்ற ஓரிறைக் கோட்பாட்டில் உறுதியாக இருந்ததைப் போல, சிங்கள பௌத்தர்கள் புத்தர் என்ற ஓரிறைக் கோட்பாட்டை நம்புகின்றனர். தமிழர்களில் பெரும்பான்மையானோர் பல தெய்வ வழிபாட்டைக் கொண்ட இந்துக்கள். தமிழர்களில் இந்துக்களுக்கு அடுத்ததாக கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள் அதிகம் காணப்படுகின்றனர். இவர்களும் சிலை வணக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

கடவுளரின் படங்களை, உருவச் சிலைகளை வைத்து வழிபடுவதை, யூத மதம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றது. இந்த விடயத்தில் மட்டும் யூதர்கள் மத்தியில் சமரசத்திற்கு இடமில்லை. யூதர்களின் வரலாறு முழுவதும் மதம் முக்கிய பாத்திரம் வகித்துள்ளது. யூத மதம் மட்டுமே யூதர்கள் அனைவரையும் அன்றில் இருந்து இன்று வரை ஒரே சமூகமாக பிணைக்கின்றது. தமிழர்களிடம் அவ்வாறு தனித்துவமான மதம் ஒன்றுள்ளதா? தமிழ் என்ற மொழி மட்டுமே தமிழர்களை ஒன்றிணைக்கும் புள்ளி. பண்டைய காலத்தில் இருந்தே யூதர்கள் ஹீபுரு மட்டுமல்லாது, பல்வேறு மொழிகளை பேசுவோராக இருந்துள்ளனர். ஆபிரஹாம் குடும்பத்தினர் பாபிலோனிய மொழி பேசினார்கள். இயேசு கிறிஸ்துவின் குடும்பத்தினர் அரேமிய மொழி பேசும் யூதர்கள். பிற்காலத்தில் கிரேக்க மொழி பேசும் யூதர்களே பெருவாரியாக கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். ஆகவே யூதர்கள் என்பது, ஒரு மதத்தை சேர்ந்தவர்களைக் குறிக்கும் சொல் என்பதை விளக்க வேறு உதாரணம் தேவையில்லை.

யூத மதத்தின் அச்சாணியாக ஓரிறைக் கோட்பாடு உள்ளது. தோரா முழுவதும் யூதர்கள் எவ்வாறு அதில் உறுதியாக இருந்துள்ளனர் என எழுதப் பட்டுள்ளது. எகிப்தில் இருந்து மோசெஸ் அழைத்து வந்த யூதர்கள், புனிதப் பசு உருவிலான தெய்வங்களை (இன்றும் இந்துக்களின் வழிபாட்டுக்குரியது) வணங்கினார்கள். ஆண்டவரிடம் பத்துக் கட்டளைகளை பெற்றுக் கொண்டு வந்த மோசெஸ், அந்த சீரழிவுக் காட்சிகளைக் கண்டு சீற்றமுற்றார். பிற தெய்வங்களை வழிபட்ட யூதர்களை சபித்தார். இறைவன் ஒருவனே என்று நம்ப வேண்டுமென்பது பத்துக் கட்டளைகளில் ஒன்று. ("என்னைத் தவிர வேறொரு கடவுளை வணங்காதிருப்பீராக") பின்னர் யூதர்கள் தமது தவறை உணர்ந்து ஓரிறைக் கோட்பாட்டின் கீழ் ஒன்று சேருகின்றனர். அதன் பிறகே, (கவனிக்கவும்) சவுல், டேவிட், சொலமன் ஆகிய மன்னர்களின் ராஜ்ஜியம் உருவாகியது. யூத மன்னர்களை, பல தெய்வங்களை வழிபடும் சைவத்தை அரச மதமாக கொண்ட தமிழ் மன்னர்களுடன் எப்படி ஒப்பிட முடியும்?

வெறும் மதம் மட்டும் யூதர்களை ஒன்று சேர்க்கவில்லை. கடுமையான மதக் கட்டுப்பாடுகளும் யூதர்களை தனி இனம் என்ற என்ணத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்தது. பன்றியிறைச்சி யூதர்களுக்கு விலக்கப்பட்ட உணவு. யூதர்கள் பன்றியிறைச்சி சாப்பிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், உயிரை விட தயாரானவர்கள். கி.மு. 175 ம் ஆண்டு ரோமர்களின் ஆட்சிகுட்பட்ட ஜெருசலேமில் யூதர்களுக்கு எதிரான அடக்குமுறை கடுமையாக இருந்தது. அப்போது பலவந்தமாக பன்றியிறைச்சி சாப்பிடுமாறு சித்திரவதை செய்யப்பட்டதால் உயிர் விட்ட ஏழு சகோதரர்கள் கதை பிரபலமானது. முஸ்லிம்கள் ஹலால் என்று சொல்லும் உணவை, யூதர்கள் ஹோஷர் என்கின்றனர். முஸ்லிம்களைப் போலவே யூதர்களும் சுன்னத்து செய்து கொள்வது அவர்களது மதக்கடமை.

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடும் அறிவுஜீவிகள், இது போன்ற ஒற்றுமைகள் ஏதாவது உண்டா என்றும் நிரூபிக்க வேண்டும். தமிழைத் தாய்மொழியாக கொண்ட முஸ்லிம்களை வேண்டுமானால் இந்த விடயத்தில் யூதர்களுடன் ஒப்பிடலாம். ஆனால் ஈழத் தமிழ் தேசியமானது, இஸ்லாம் தவிர்ந்த இந்து, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்களையே தமிழர்களாக கருதுவதை இங்கே குறிப்பிட வேண்டும். மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோரின் பேச்சிலும், எழுத்திலும் இஸ்லாமியர் மீதான வெறுப்பு மறைந்திருக்கும். அந்த நிலைப்பாடு ஏகாதிபத்திய நலன் சார்ந்தது என்பதை விளக்கத் தேவையில்லை.

இலங்கையை ஆண்ட தமிழ், சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களுக்கு வணிகம் செய்யும் உரிமையை மட்டுமே வழங்கியிருந்தார்கள். அதற்கு காரணம் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் காணப்பட்ட சாதியம். அனைத்து சாதியினருக்கும் விதிக்கப்பட்ட வேலை இருந்தது. அந்தக் கட்டமைப்பில் முஸ்லிம்களுக்கு இடமில்லை. அதே போன்றே ஐரோப்பாவிலும் நடந்தது. நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தை கொண்ட கிறிஸ்தவ ஐரோப்பாவில் யூதர்கள் செய்வதற்கு எந்த வேலையும் இருக்கவில்லை. நிலம் வாங்கி விவசாயம் செய்யவும் உரிமை இல்லை. அத்தகைய சூழ்நிலையில் அன்று பெரிதாக வளர்ச்சியடையாத வணிகம் மட்டுமே சாத்தியமானது. சில யூதர்கள் வாணிபம் செய்து பெருஞ் செல்வம் சேர்த்தனர். அதனால் பொறாமை கொண்ட பெரும்பான்மை கிறிஸ்தவ ஐரோப்பியர்கள், இனக்கலவரங்கள் மூலம் யூதர்களின் செல்வத்தை அபகரித்தார்கள்.
ஹிட்லருக்கு முன்னரே யூத இனப்படுகொலையை ஆரம்பித்து வைத்தவர்கள் வேறு யாருமல்ல. உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவரின் சிலுவைப்படை வீரர்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம்: "சிலுவைப்போருக்கு தேவையான நிதியை அறவிடுவதற்காக, இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்த யூதர்களை கொல்வதில் தவறில்லை!" அத்தகைய நியாயப்படுத்தல்கள் தான் ஹிட்லரின் யூத இனவழிப்பின் தத்துவார்த்த அடிப்படை.

(தொடரும்)
***************************************************************

46 comments:

Anonymous said...

//தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட இயலுமா?//

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடுவது அரசியல் வேட்கைக்காகத்தான். இரு இனங்களும் ஒருவர் இல்லை.

Anonymous said...

இலங்கையில் உள்ளவர்களுக்கும் யூதர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை முற்றிலும் மறுக்கவியலாது. ஒரு தொகை யூதர்கள் இலங்கையில் குடியேறினார்கள் என்பதும் அவர்கள் இலங்கை இனத்தவர்களோடு (சிங்கவர், தமிழர்) கலந்துவிட்டனர் என்பது யூத கருத்து. குறிப்பாக பறங்கியர்களில் யூத கலப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையை கைப்பற்றிய டச்சுக்காரர் போர்த்துக்கேய யூதர்களை (Portuguese-Jew) இலங்கையில் வாழ அனுமதித்தனர் என்பது வரலாறு. பின்னர் அவர்கள் பறங்கியர்களோடு கலந்துவிட்டனர்.

josephine baba said...

எப்படியோ யூதர்கள் கொண்ட ஒற்றுமையாவது நாம் கடைபிடிக்கலாம்!!! நம் மக்கள் ஜாதி,மதம் அரசியல்,திராவிடம் என பல வ்லைகளில் சிக்குண்டு அல்லாடுகின்றனர்!!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

ஹிட்லருக்கு முன்னரே யூத இனப்படுகொலையை ஆரம்பித்து வைத்தவர்கள் வேறு யாருமல்ல. உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவரின் சிலுவைப்படை வீரர்கள்.

ஆச்சிரியமான அதிர்ச்சியான செய்தி

Kalaiyarasan said...

Josephine,யூதர்கள் கொண்ட ஒற்றுமை ஒரு myth. யூதர்கள் என்பது ஒரு இனமல்ல. அது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல். யூத
மக்களும் நீங்கள் கூறும் வலைகளில் சிக்குண்டு அல்லாடுகின்றனர். யூதர்களின் உள்வீட்டு விஷயங்கள் தமிழில் (ஆங்கில ஊடகங்களிலும் தான்) அதிகம் அலசப் படுவதில்லை. அதற்காக யூதர்கள் ஒற்றுமையானவர்கள் என்பது தப்பெண்ணம்.

Kalaiyarasan said...

ஜெகதீஸ்வரன், இது பற்றி விரிவாக சிலுவைப் போர் பற்றிய கட்டுரையில் எழுதியுள்ளேன். (இன்னும் பதிவிடவில்லை.) தற்போதைக்கு கீழே உள்ள சுட்டியில் தகவல்களைப் பெறலாம்.
Persecution of Jews in the First Crusade

raghunath said...

your views about jews is good and informative,but jews have great talent,they are number in agriculture,science,technology etc
they also got lot of noble prices how

Kalaiyarasan said...

ரகுநாத், திறமை என்பது ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. சாதனையாளர்கள் உலகம் முழுவதும் இருந்திருக்கிறார்கள். ஆனால் யூதர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்பது நன்கு திட்டமிடப்பட்ட ஐரோப்பிய மையவாத பிரச்சாரம். இதை மிகவும் உன்னிப்பாக கவனித்தால் புரியும். பிரபலமான யூத சாதனையாளர்கள் ஐரோப்பாவில் கிடைத்த வசதிவாய்ப்புகளை பயன்படுத்தி முன்னுக்கு வந்தவர்கள். மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்த யூதர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

Unknown said...

தெரிந்த விஷயம்தான் கலையரசன்... ஆனால் இப்படி ஆதாரமெல்லாம் திரட்டி எழுதுவது முடியாதகாரியமாயிருந்தது. அருமையான இடுகை. :))

Anonymous said...

//யூதர்கள் என்பது ஒரு இனமல்ல. அது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்.//

யூதர்கள் மதத்தால் ஒன்றுபடுகின்றனர் என்பது உண்மைதான். யூதர்களில் பல இனத்தவர்கள் கலந்துள்ளனர் என்பதும் உண்மை. ஆனால் யூத இனத்துக்கென தனியான வரையறை உள்ளது. யூதர்களின் இன ஆய்வில் முக்கியத்துவம் பெறுகின்றது.

Anonymous said...

//யூதர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்பது நன்கு திட்டமிடப்பட்ட ஐரோப்பிய மையவாத பிரச்சாரம்.//

ஒருவர் மீதான விரும்பு வெறுப்புக்கு வெளியே விடயத்ததை ஆராய்வது ஆரோக்கியம் என நினைக்கிறேன்.

உலகில் தமிழர்களின் எண்ணிக்கை 77 மில்லியன். யூதர்களின் எண்ணிக்கை 13 மில்லியன். இதுவரை 3 தமிழர்கள் மாத்திரமே நோபல் பரிசு பெற்றுள்ளாகள். ஆனால் 181 யூதர்கள் நோபல் பரிசுக்கு உரித்துடையவர்கள். விகிதாசாரப்படி பார்த்தால் எத்தனை மடங்கு யூதர்கள் முன்னனியில் உள்ளனர் என்பது தெரியும். விகிதாசாரப்படி எந்த இனமும் யூதர்களின் பின்னால்தான் உள்ளன.

உலகின் முக்கியமானவர்களில் அநேகர் யூதர்களே. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், கார்ல் மாக்ஸ், சிக்மண்ட் பிராய்ட் என இந்தப்பட்டியல் நீண்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இடத்தை நிரப்ப எந்த விஞ்ஞானியும் பிறக்கவில்லை என்பது ஆச்சசியமான உண்மை.

Theepachelvan said...

கலையரசன் நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

Kalaiyarasan said...

//உலகில் தமிழர்களின் எண்ணிக்கை 77 மில்லியன். யூதர்களின் எண்ணிக்கை 13 மில்லியன். இதுவரை 3 தமிழர்கள் மாத்திரமே நோபல் பரிசு பெற்றுள்ளாகள். ஆனால் 181 யூதர்கள் நோபல் பரிசுக்கு உரித்துடையவர்கள்.//

எதற்காக யூதர்களை தமிழர்களுடன் ஒப்பிடுகிறீர்கள்? உங்களிடம் இருக்கும் மிகப் பெரிய குறைபாடு இது தான். வளர்ச்சியடைந்த முதலாம் உலகான ஐரோப்பாவில் வாழ்ந்தவர்களை, வளர்ச்சியடையாத மூன்றாம் உலகில் வாழும் தமிழர்களுடன் ஒப்பிட முடியுமா? என்ன ஒரு அபத்தமான ஒப்பீடு. யூதர்களை ஆங்கிலேயருடனோ, அல்லது வேறு எந்த ஐரோப்பிய இனத்தவருடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

Kalaiyarasan said...

//ஆனால் யூத இனத்துக்கென தனியான வரையறை உள்ளது. யூதர்களின் இன ஆய்வில் முக்கியத்துவம் பெறுகின்றது.//

ஹிட்லரின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இனவாதக் கோட்பாடுகள் அவை.

Anonymous said...

//என்ன ஒரு அபத்தமான ஒப்பீடு. யூதர்களை ஆங்கிலேயருடனோ, அல்லது வேறு எந்த ஐரோப்பிய இனத்தவருடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.//

ஆங்கிலேயர் எண்ணிக்கை 99 மில்லியன். இதில் எத்தனை பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் அவர்களின் விகிதாசாரம் யூதர்களைவிட அதிகமா என ஒப்பிட்டுப் பாருங்கள் புரியும். விகிதாசாரப்படி எந்த இனமும் யூதர்களின் பின்னால்தான் உள்ளன.

Anonymous said...

//ஹிட்லரின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இனவாதக் கோட்பாடுகள் அவை.//

ஒவ்வொரு இனத்துக்கும் அல்லது இனக்குழுக்களுக்கும் DNA செல்வாக்கு செலுத்துகின்றது. நான் குறிப்பிடுவது வெறும் வரலாற்றுக் கதை அல்ல மானிடவியல்

Anonymous said...

//யூதர்கள் என்பது ஒரு இனமல்ல. அது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்.//


யூதர்கள் இன-மதக் குழுவைச் (ethno-religious group) சார்ந்தவர்கள் Refer http://en.wikipedia.org/wiki/Ethnoreligious_group

Anonymous said...

//உண்மையில் இஸ்ரேல் வழங்கிய கிபீர் விமானங்களும், ட்வோரா கடற்படைக் கலங்களும் இல்லா விட்டால், இலங்கை அரசு ஈழப் போரில் வென்றிருக்காது.//

இஸ்ரேல் மீதுள்ள வெறுப்பினால் இஸ்ரேலை மகாமோசமாக தமிழர்களிடையே சித்தரிக்க முயலுகின்றீர்கள். இந்தியா, சீனா, பாக்கிஸ்தான, ரஸ்யா, பிரித்ததானிய, அமெரிக்கா இன்னும் பல இலங்கை அரசுக்கு வழங்கிய முக்கிய பங்கும் அவை இலங்கை அரசு ஈழப் போரில் வெல்ல காரணங்கள் என்பதையும் ஏன் கூற தயங்குகிறீர்கள்?

80களில் புலிகள் இஸ்ரேலில் பயிற்சி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Anonymous said...

//நமக்கு யூதர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், ரோம சாம்ராஜ்ய காலகட்டத்தில் இருந்தே கிடைக்கின்றன.//

யூதர்கள் என்னும் பதம் 3ம் நூற்றாண்டுகளுக்கு பின்பு பலம் பெறத் தொடங்கியது. ஆரம்பத்தில் எபிரேயர் எனவும் பின்னர் இஸ்ரேலியர் எனவும் அழைக்கப்பட்டனர்.

இவர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் எபிரேய அகழ்வுகளில் கிடைக்கப்பட்டுள்ளன. சிறிய பிரமிட்டுக்களிலும் வரலாற்று எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

Anonymous said...

//"யூத diaspora " வையும், "தமிழ் diaspora" வையும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். அது சரியானதா?//

தமிழர்கள் ஒப்பிடுவது diaspora தவிர, யூதர்களுடைய மத, இன, காலச்சார ஒன்றுமைக்காக இல்லை. இது தெரிந்தும் நீங்கள் ஏன் விடயத்தை பெரிதுபடுத்துகிறீர்கள்?

மார்கண்டேயன் said...

நல்ல ஆய்வு மற்றும் அலசல் கலையரசன்,

யூதர்கள் முன்னேறிய விதத்தை நான் நிலமெல்லாம் ரத்தம் எனும் பா. ராகவன் அவர்களின் தொடர் மூலம் அறிந்தேன்

http://nilamellam.blogspot.com/

உங்கள் பதிவு அதனைத் தாண்டிய பல விஷயங்களை கொடுத்துள்ளது.

'நிலமெல்லாம் ரத்தம்' பற்றிய பதிவு ஏற்புடயதயிருந்தால் உங்கள் பதிவிலும் வலை இணைப்பு கொடுக்கவும்,

தொடருங்கள் இன்றியமையாத தகவலுடன்.

Anonymous said...

//இஸ்ரேலிய தயாரிப்புகள் ஈழத்தில் பெருமளவு உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும் ஏற்படுத்தி விட்டிருந்தன.//

இந்த பட்டியல்களை பாருங்கள் எந்தெந்த நாட்டு படைக்கலங்கள் இலங்கை அரசால் பாவிக்கப்பட்டன என்று. மிக மேசமான தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் இந்தியா, சீனா, உக்ரைன் போன்ற நாடுகளால் விநியோகிக்கப்பட்டன. உங்களுக்கு இஸ்ரேல் மட்டும் தெரிவது வினோதம்!

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Army#Equipment

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Navy#Current_Fleet

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Air_Force#Aircraft_Inventory

Kalaiyarasan said...

அனானியாக பின்னூட்டமிடுபவர் ஒரே நபர் என்றே கருதுகிறேன். அதனால் அனைத்துக்கும் சுருக்கமான பதிலைத் தர விரும்புகிறேன்.

//விகிதாசாரப்படி எந்த இனமும் யூதர்களின் பின்னால்தான் உள்ளன. //
புள்ளிவிபரக் கணக்கை கொண்டு வாருங்கள்.

//ஒவ்வொரு இனத்துக்கும் அல்லது இனக்குழுக்களுக்கும் DNA செல்வாக்கு செலுத்துகின்றது. நான் குறிப்பிடுவது வெறும் வரலாற்றுக் கதை அல்ல மானிடவியல்.//
நீங்கள் இங்கே கூறியுள்ளது தான் இனவாதக் கோட்பாடு. (Racist theory) ஹிட்லருக்கு மிகவும் பிடித்தமானது.

Kalaiyarasan said...

//யூதர்கள் இன-மதக் குழுவைச் (ethno-religious group) சார்ந்தவர்கள் Refer http://en.wikipedia.org/wiki/Ethnoreligious_group//

யூதர்கள் ஒரு இனம் என்ற தப்பெண்ணம் இன்று நேற்று தோன்றியதல்ல. இவை பெரும்பாலும் ஐரோப்பாவை மையப்படுத்திய கருத்தியல்கள்.
வெள்ளையர்களான ஐரோப்பிய யூதர்களும், கறுப்பர்களான ஆப்பிரிக்க யூதர்களும், இன்னும் அரேபிய யூதர்களும் ஒரே இனம் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். உலகில் மனிதர்கள் எல்லாம் ஒரே இனம் என்று சொன்னால் மட்டுமே அது சாத்தியமாகும்.

Kalaiyarasan said...

//80களில் புலிகள் இஸ்ரேலில் பயிற்சி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.//

இஸ்ரேலில் அதே கால கட்டத்தில், அதே முகாமில் இலங்கை இராணுவத்திற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இஸ்ரேலியர்கள் வெறும் பணத்திற்காக பயிற்சி வழங்கினார்கள், கொள்கைக்காக அல்ல. இலங்கை இராணுவத்திற்கு கிபீர் விமானங்களையும், ட்வோரா கப்பல்களையும் எப்படி இயக்குவது என்று இஸ்ரேலிய நிபுணர்களே பயிற்சி அளித்தார்கள். ஆரம்ப காலங்களில் இஸ்ரேலிய விமானிகள் விடுதலைப் புலிகளின் முகாம்களை தாக்கியுள்ளனர். இதனை அவர்கள் தமது நினைவுக் குறிப்புகளில் எழுதியுள்ளனர்.

//இஸ்ரேல் மீதுள்ள வெறுப்பினால் இஸ்ரேலை மகாமோசமாக தமிழர்களிடையே சித்தரிக்க முயலுகின்றீர்கள்.//

ஈழத் தமிழர்கள் இலங்கை அரசை வெறுத்த அளவுக்கு இஸ்ரேலையும் வெறுக்கின்றனர். போரினால் பாதிக்கப்படாத ஒரு சிலர் மட்டுமே புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து கொண்டு கண்மூடித் தனமாக இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள்.

Kalaiyarasan said...

//தமிழர்கள் ஒப்பிடுவது diaspora தவிர, யூதர்களுடைய மத, இன, காலச்சார ஒன்றுமைக்காக இல்லை. இது தெரிந்தும் நீங்கள் ஏன் விடயத்தை பெரிதுபடுத்துகிறீர்கள்?//

diaspora வை ஒப்பிடுவது கூட அபத்தமானது. இது குறித்து அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

Kalaiyarasan said...

//மிக மேசமான தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் இந்தியா, சீனா, உக்ரைன் போன்ற நாடுகளால் விநியோகிக்கப்பட்டன. உங்களுக்கு இஸ்ரேல் மட்டும் தெரிவது வினோதம்!//

இந்தக் கட்டுரை இஸ்ரேலை பற்றியது மட்டுமே என்பதை மீண்டும் ஒரு தடவை நினைவு படுத்த விரும்புகிறேன். மற்ற நாடுகளைப் பற்றி பிறகு பார்ப்போம். முதலில் இஸ்ரேல் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதை ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?

Anonymous said...

//புள்ளிவிபரக் கணக்கை கொண்டு வாருங்கள். //

தேடிக் கண்டுபிடியுங்கள்.

Anonymous said...

//நீங்கள் இங்கே கூறியுள்ளது தான் இனவாதக் கோட்பாடு. (Racist theory) ஹிட்லருக்கு மிகவும் பிடித்தமானது.//

இனங்களை மானிடவியலில் பகுப்பாய்வு செய்வது எப்படியென்பதை உங்களால் கூறமுடியுமா?

Anonymous said...

//வெள்ளையர்களான ஐரோப்பிய யூதர்களும், கறுப்பர்களான ஆப்பிரிக்க யூதர்களும், இன்னும் அரேபிய யூதர்களும் ஒரே இனம் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.//

DNA பகுப்பாய்வு பற்றி அறிந்து கொள்ளுங்கள். ethno-religious group பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.

Anonymous said...

//ஈழத் தமிழர்கள் இலங்கை அரசை வெறுத்த அளவுக்கு இஸ்ரேலையும் வெறுக்கின்றனர். போரினால் பாதிக்கப்படாத ஒரு சிலர் மட்டுமே புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து கொண்டு கண்மூடித் தனமாக இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள்.//

ஊகத்தின் அடிப்படையில் கருத்து வெளியிடாதீர்கள். நான் இலங்கையில் இருந்து கொண்டுதான் எழுதுகிறேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாமர மக்களுக்கு இஸ்ரலேல் பற்றியல்ல இந்தியா, சீனா பற்றிய கோபமே உள்ளது. இந்த நாட்டு நடப்பு பற்றி உங்களைவிட எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் போரின் தாக்கத்தில் வாழ்பவன் நான்.

Anonymous said...

//முதலில் இஸ்ரேல் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதை ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?//

ஒப்புக் கொள்கிறேன். அதற்காக ஒரு சாராரை மட்டும் விமர்சிப்பது அபத்தம். இந்தியா, சீனா, பாக்கிஸ்தான, ரஸ்யா, பிரித்ததானிய, அமெரிக்கா இன்னும் பல இலங்கை அரசுக்கு இலங்கைக்கு ஆயுதம் வழங்கியதை ஒப்புக் கொள்கிறீர்களா?

Anonymous said...

//இந்தக் கட்டுரை இஸ்ரேலை பற்றியது மட்டுமே என்பதை மீண்டும் ஒரு தடவை நினைவு படுத்த விரும்புகிறேன்.//

உங்கள் யூத எதிர்ப்பு இஸ்ரேலை பற்றி மட்டுமே எழுத தூண்டுகிறது.

கிட்டுவின் மருமோ(மக)ன் said...

பெரு மதிப்பிற்குரிய கலை அவர்களே
தங்களின் சமுதாயக்கண்ணோட்டம் மெய் சிலிர்க்க வைக்கிறது .
ஆனாலும்,"நுண் பொருள் காண்பது அறிவு"
என்ற கோட்பாட்டின்படி அடிப்படையில் நான் அந்த ஒப்பீடு ஆய்வுகளை நோக்குகிறேன்
யாவரும் அவ்வாறே பொருள் கொள்ளும்படி செய்த தங்களுடைய
பதிவிற்கு உலகத்தமிழினம் சார்பில் நன்றி
கிட்டுவின் மருமோன்

Unknown said...

I have a longtime doubt.
Do the brahmins of India are descendents of Jews ? There are some similarities in their lifestyles.

அருளாளனின் அடிமை said...

அன்புச் சகோதரர் கலையரசன் அவர்களே

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

உங்களின் ஆக்கங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. ஆனால், இஸ்லாம் தொடர்பான சில விஷயங்களில் பிழை உள்ளது. அதற்க்கு காரணம்! மற்ற விஷயங்களை திறந்த மனதோடு படிக்கும் நீங்கள் இஸ்லாம் தொடர்பான விஷயங்களை மட்டும் சரியாக படிப்பது கிடையாது (அல்லது) திறந்த மனதுடன் படிக்காமல் கம்யூனிசம் என்ற கொள்கையை உங்கள் மனதில் வைத்துக்கொண்டு படிக்கின்றீர்கள் இதுவே உங்களின் எழுத்துக்களில் உள்ள இஸ்லாம் தொடர்பான பிழைகளுக்கு காரணம் என நான் நினைக்கிறேன்.

இறைவன் இல்லை என்ற என்னத்தில் இருக்கும் உங்களிடம் இஸ்லாம் தொடர்பான தர்க்க ரீதியான விவாதம் செய்து இஸ்லாத்தை உங்களிடம் எடுத்துக் கூறுவது சரியான விடயம் அல்ல.

நீங்கள் உங்களுக்கும் எனக்கும் உள்ள பொதுவானவற்றின் பக்கம் வரவேண்டும். இஸ்லாமும் இஸ்லாமிய சட்டங்களும் அதன் கோட்பாடுகளும் எந்த விதத்தில் மனித குழத்திற்க்கு எதிராக செயல்படுகின்றது. இந்த வானம், பூமி, மேலும் அண்டசராசரங்கள், பிரபஞ்சங்கள் அனைத்தையும் படைத்தவன் யார். இவ்வாரு நீங்கள் சிந்திக்க வேண்டும். மேலும் இஸ்லாம் தொடர்பான சிறந்த நூல்களையும், குர்ஆனையும் திறந்த மனதுடன் படியுங்கள் தாங்கள் படிக்கவேண்டும்.

இப்படிக்கு
உங்கள் சகோதரன்

தமிழ்க்காதலன் said...

மிக சிரம பட்டு ஆதாரங்கள் திரட்டி சிந்தனைகளை வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் எனக்கும். யூதத்தையும், தமிழினத்தையும் ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன? இது யாருக்கு ஏற்பட்டது? இதனால் அவர்கள் கண்ட...... அல்லது காணப்போகும் இலாபம் என்ன? ................. நிறைய யோசிக்க வேண்டியதாகிறது. உலகின் மானுட வாழ்வியல் பற்றி கிண்டிப் பார்த்தால்........, மகா மகா கேவலமாகத்தான் இருக்கிறது. ஒரு கோட்பாட்டை உயர்த்தி பிடிப்பதற்காக இன்னொரு உயிரை.. பலி வாங்குகிற எந்த விசயமும் உயர்வானது இல்லை. மனிதனாக நடக்கத் தெரியாத "மதவாத மிருகங்கள்" முதலில் மனிதம் தெரியட்டும். மனம் தெளியட்டும். மனிதனாய் இருக்க மதம் தேவை இல்லை. ஒருவராலும் இங்கே மதக் கோட்பாடுகளை பின்பற்ற முடியவில்லை. எல்லா தேசத்திலும் சட்டமும், மதமும் மனித வாழ்வியல் நிசத்தின் முன்னால் "தோற்றுப் போனதுதான் சரித்திரம் கண்ட உண்மை". காரணம் அவை இரண்டுமே உண்மைக்கு வெகு தொலைவில் நின்று கொண்டு மனிதனுக்கு "வழி"க் காட்டுகின்றன. ஒவ்வொரு தேசமும் ...... பிற தேசத்தின் சுதந்திரத்தை மறைமுகமாகவோ.., நேரடியாகவோ தாக்காமல் இருந்தால் இந்த உலகம் அமைதி அடையும். ...... அதுவரை...............!!!!!! ????? ......... இது போன்ற பதிவுகள் பதிக்கப் படும். நன்றி கலையரசன் உங்கள் உழைப்பிற்கு. வந்து போங்கள்.... ( ithayasaaral.blogspot.com )

Anonymous said...

யூதர்களின் நிலைமையும் இலங்கைத் தமிழர்களின் நிலைமையும் ஒன்றெனக் கூறி முட்டாள்தனமான கருத்துக்களைப் பரப்பி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கும் கயவர்களுக்குச் சரியான சாட்டையடி கொடுக்கிறீர்கள். நன்றி, கலையரசன்.

Anonymous said...

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு கருத்து எழுதியவர்கள் உங்களை போல் மொக்குத்தனமாக
பண்டைய வரலாறை எல்லாம் ஒப்பிடவில்லை.அவர்கள் ஒப்பிட்டது எல்லாம் தமிமிழர் பிரச்சினையும்
யூதர்கழிற்கு ஏற்பட்ட பிரச்சினையும் தான்.யூதர்கள் ஈழத் தமிழனைப்போல், தனது நாட்டை விட்டு அகதிகளாக்கப் பட்டு உலகெல்லாம் பரந்து வாழ்ந்தான். பின்னர் எல்லா யூதனும் ஒன்று சேர்ந்து தமக்கொரு நாட்டை கட்டியெழுப்பி
அதை வல்லரசுடன் சவால் விடும் அளவிற்கு குறுகிய காலப் பகிதியிலே மாற்றினான். இதே போல் நாமும் நமக்கொரு நாட்டை உருவாக்கலாம் என்பதற்காகவே யூதர்கழுடன் ஒப்பிடு கிறார்களே தவிர உங்களுடைய மொக்குத்தனமான ஒப்பீடு அல்ல.

Rajan said...

//http://nilamellam.blogspot.com//

இந்தப் பதிவு சொல்ல விரும்புவது என்ன? கொஞ்சம் யூதர்களின் நியாயத்தையும் நிறைய பலஸ்தீனர்களின் நியாயத்தையும் சொல்ல விரும்புகிறது. இந்த எழுத்தாளர்களுக்கு பல நூறு மைல் தொலைவிலிருக்கும் பிரச்சனை தெரியும் அளவிற்கு ஈழத்துப் பிரச்சனை தெரிவதில்லை. ஈழத்துப் பிரச்சனை பற்றி பலஸ்தீனியர்கள் கருத்து என்ன? புலிகள் யுத்தத்தில் தோற்றதும் சிறிலங்கா அரசுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியவர்கள். இவர்களுக்கா தமிழர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள்? துருக்கி குர்திஸ் போராளிகளுக்காக குரல் கொடுங்கள். அவர்கள் நமக்காக குரல் கொடுத்தவர்கள். ஈழத்திலும் சிலசாரார் பலஸ்தீனுக்கு குரல் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு தமிழர் பற்றி அக்கறையில்லை. ஆனால் நம் தமிழர்களுக்குத்தான் பலஸ்தீன் மீது காதல்!

Anonymous said...

Jean said...
"I have a longtime doubt.
Do the brahmins of India are descendents of Jews ? There are some similarities in their lifestyles."
Pure ignorance. Brahmins of India are from all races.. depending on the region. It is just a terminology used for a group of people with certain traditional religious professions like temple duties, astrology and teaching. Recent trend of a couple of hundred years of marrying within themselves have created various mistaken notions.

Anonymous said...

//இந்தியாவில் இந்து அடிப்படைவாத பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டன.//
வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாக கூறும் நீங்கள் வரலாறை திரிக்க முயலாதீர்கள்
http://en.wikipedia.org/wiki/Indo-Israeli_relations
இந்திய இஸ்ரேல் இராஜ தந்திர உறவுகள் 1992 லேயே அதாவது காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே தொடங்கி விட்டது. போகிற போக்கில் விஜயகாந்த் புள்ளி விவரங்கள் மாதிரி அடித்து விடாதீர்கள்.
அங்கே நீங்கள் இட்டுள்ள படிமம் கூட (ॐ ) மிகவும் முட்டாள் தனமானது அது இந்துத்துவ வெறியர்களின் சின்னம் தமிழர்கள் ஒம் என்ற தமிழ் அடையாளத்தை தான் பயன் படுத்துகிறார்கள்.
சும்மா ஏகாதிபத்தியம் கம்முநிசம் என்று வாய் சொல்லில் வீரம் பேசாதீர்கள் பின்பு நான் சாத்தியம் அற்றதையே தேர்ந்தெடுப்பேன் புரட்சி நிச்சயம் வரும் என்று வெட்டிதனமாக சவடால் விட வேண்டாம். நீங்கள் ஏகாதிபத்தியம் என்று நீட்டி முழங்கும் ஒரு நாட்டில் தான் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் ஞாபகம் இருக்கட்டும்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

நண்பர் கலை,
விவாததுக்குரிய நல்லப் பதிவு! ஆனால் இந்தப் பதிவிற்கு, மேலுள்ள படம் பொருத்தமானதுத்தானா? யூதர்களுக்கு வேண்டுமானால் அந்த நட்சத்திரக்குறி சம்மந்தப்படலாம்.அனைத்து தாய்நாட்டு அல்லது அனைத்து புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் அந்த சம்ஸ்கிருத எழுத்துக்கும் என்ன சம்பந்தம்?

Kalaiyarasan said...

M.S.E.R.K நன்றி,சமஸ்கிருதத்தில் ஓம் என்ற எழுத்து. அந்தப் படம் தற்செயலாக இணையத்தில் தேடிய பொழுது கிடைத்தது. இந்தியாவின் இந்து மத அடிப்படைவாதிகள் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவு வைத்துள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவான தமிழர்களும் அவர்களின் கருத்துகளை பிரதிபலிக்கின்றனர். அதைத் தவிர வேறு ஒற்றுமை எதுவும் இல்லை.

Anonymous said...

//மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்த யூதர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.//

நல்ல நகைச்சுவையான கருத்து. இன்று பௌதீகவியலில் அதிகம் ஆய்வுக் கட்டரைகள் எழுதப்படுவது இஸ்ரேலிலேயே ஆகும்.

அத்துடன் அனைத்து துறைகளிலும் சாதனை படைப்பது பெரும்பாலும் இஸ்ரேல் நாட்டிலிருந்துதான்.

செய்திப்பத்திரிகைகள் படிக்கும் பழக்கமில்லை என நினைக்கிறேன்.

Kalaiyarasan said...

//நல்ல நகைச்சுவையான கருத்து. இன்று பௌதீகவியலில் அதிகம் ஆய்வுக் கட்டரைகள் எழுதப்படுவது இஸ்ரேலிலேயே ஆகும்.

அத்துடன் அனைத்து துறைகளிலும் சாதனை படைப்பது பெரும்பாலும் இஸ்ரேல் நாட்டிலிருந்துதான்.

செய்திப்பத்திரிகைகள் படிக்கும் பழக்கமில்லை என நினைக்கிறேன்.//

நண்பரே, நீங்கள் தான் எதையும் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ உளறுகின்றீர்கள். நான் இங்கே குறிப்பிட்டது இரண்டாயிரம் வருடங்களாக அரபு நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்களைப் பற்றியது. அடுத்த தடவை பின்னூட்டமிட முன்னர் ஆறுதலாக வாசித்து விட்டு கருத்திடவும். நன்றி.