Tuesday, January 12, 2010

இந்திய படையினரை கல் வீசி விரட்டும் வீரப் பெண் (வீடியோ)

அசாமில் தன்னை மானபங்கப் படுத்த முனைந்த இந்திய இராணுவ வீரனை, பொது இடத்தில் வைத்து செங்கற்களை வீசி விரட்டும் வீர நங்கை. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவரின் கைத்தொலைபேசியால் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன.வெறுங்கையால் இராணுவத்துடன் போராடும் பாலஸ்தீன வீரப்பெண் (வீடியோ)

15 comments:

Unknown said...

i am not to justify any molestation. but in this video the girl herself seems to tell that the soldier has touched a sales girl not the girl in the video .this event seems to be blown out of proportion.by media for publicity.the whole truth will come out soon

aambalsamkannan said...

வணக்கம் தோழரே,

வீடியோவில் காணும்போது ராணுவ வீரர் தவறு செய்திருப்பார் என்று காணதோன்றுகின்றது,அதற்காக தாங்கள் குறிப்பிடும்'அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன' என்று தாங்கள் தவறான கருத்தை பரப்ப முயற்ச்சிக்கின்றிற்கள், ஒரு தனிமனிதன் தன் பொருப்பற்ற செய்கையினால் ஏற்படுகின்ற பிரச்சைகள் எவ்வாறு அவனையும் அவனை சார்ந்தவர்களையும் பாதிக்கின்றது, என்ற கோணத்தில் பார்க்க வேண்டுமே தவிர தாங்கள் குறிப்பிடுவது போல் அல்ல.

Anonymous said...

அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் //

உங்கள் உள் நோக்கம் என்ன?

Starjan (ஸ்டார்ஜன்) said...

தப்பு செய்தவர் யாரா இருந்தாலும் தண்டனைக்குரியவர் .

aambalsamkannan said...

இந்திய தேசிய இறையான்மைக்கு உட்பட்ட ஒரு மாநிலம் அசாம்.தாங்கள் குறிப்பிடுவதுபோல் அடக்குமுறை அங்கு ஏவபடவில்லை,சில பிரச்சனைகளின் அடிபடையில் அங்கே ராணுவம் சென்றுள்ளது,சில மாநிலங்களில் எழுகின்ற பிரச்சனைகளை தீர்பதற்கு ராணுவத்தை அனுப்புவது என்பது சரியான முடிவா என்று தெரியவில்லை விவாதிக்கபட வேண்டிய ஒரு விசயம்,இருப்பினும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட இந்தியா போன்ற நாடு இறையான்மை மற்றும் தேசிய ஒற்றுமைக்காக எடுக்கின்ற இது போன்ற செயல் சரியானது என்றே கருதுகின்றேன்.

சரி தோழரே இந்தியாவில் எங்கெல்லாம் அடக்குமுறை நடைபெருகின்றது என்று ஒரு விரிவான கட்டுரையை எழுதுங்கெளேன்(மாவோயிஸ்ட்கள் பிரச்சனைகளை தவிர்த்து).

மற்றபடி உள் நோக்கம் என்று எதுவும்மில்லை,இந்திய ராணுவத்தின் தியாகத்தை மதிக்கின்ற சாதரண இந்திய குடிமகன்.

Anonymous said...

Aambalsamkannan கருத்து சரியானதே.

Kalaiyarasan said...

இங்கே தமது கருத்துகளை பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
எந்த ஒரு காலத்திலும், இந்தியாவுடன் காலச்சார ரீதியாகவோ, புவியியல் ரீதியாகவோ எந்த தொடர்புமின்றி இருந்த அஸ்ஸாம் என்ற நாட்டை பிரிட்டிஷார் கைப்பற்றினார்கள். இன ரீதியாக அயலில் உள்ள பர்மியர்களுடன் தொடர்பு பட்ட மக்கள் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் இந்தியர்கள் ஆனார்கள். இன்றைக்கும் அசாமிய மக்கள் இந்தியாவை அந்நிய நாடாகத் தான் கருதுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இந்திய இராணுவம் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவம். வேண்டுமானால் இது குறித்து பின்னர் விரிவான கட்டுரை ஒன்றை எழுதுகிறேன்.

பதி said...

இந்தியா ஒரே தேசம் எனவும், வடகிழக்கில் பணியிலிருக்கும் தியாகிகள் அப்பாவிகள் எனவும் என்ன இன்னமும் ஆட்கள் இருக்கின்றார்கள் என அறியும் பொழுது உண்மைகளை மூடி மறைக்கும் ஊடகங்களின் வலிமை புலப்படுகின்றது. 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பை இராணுவக் கட்டுப்பாட்டில் நீண்ட நெடும் காலமாய் (சற்றேறக்குறைய 55 ஆண்டுகளாய்) வைத்திருப்பதுதான் இந்தியா என்னும் "அப்பாவி மக்களாட்சி நாடு".

வடகிழக்கு மாநிலங்களில் ஆக்கிரமிப்பு இராணுவம் நடத்தும் அட்டூளியங்களும் மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து பலராலும் பதிவு செய்யப்பட்டே வருகின்றது.

சென்ற ஆண்டில் நிகழ்ந்த சில சம்பவங்களை ஒட்டி நான் எழுதிய சில இடுகைகள்


வட கிழக்கு மாநில இராணுவ அத்துமீறல்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள்
http://pathipakkam.blogspot.com/2009/08/blog-post.html

நாகலாந்து படுகொலைக் காட்சிகள்
http://pathipakkam.blogspot.com/2009/08/blog-post_31.html

விலங்குகளை விட மோசமான முறையில் கொல்லப்படும் ஆதிவாசிகள்
http://pathipakkam.blogspot.com/2009/11/blog-post.html

Deivam said...

Yes. Indian Military occupied Assam. This is true and everybody knows about that. Not only Assam. Sikkim, nagaland and manipur also the same. So guys, please read the things fully and realize the things in there before posting your "INDIAN RELATED!!" comments. This is not the place to prove yourselves as INDIAN.

shiva said...

The same thing the Indian peace Keeping Force did in Sri lanka in 1987-2000.How many girls were molested by these animals.One reason was expalained for killing the then prime minister Rajiv Gandhi was the IPKF molested so many young girls in Sri lanka.This is a clear evidence for those barbaric crimes.

siruthai said...

தொடரும் தெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்!

"எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு என சோனியா காந்தித் தரப்பினரினால் பிரசாரத்துறை சார்ந்த நிபுணர்கள் 50 பேர் வியுகம் வகுக்க இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் பிரபல தேர்தல் பிரசார நிறுவனங்களில் ஒன்றான விப்லவ் கம்னிகேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

-குமுதம்"

இவனுங்களுக்கு தனக்கு கீழே வலிமைகுறைந்த யாராவது நன்றாக இருந்தால் பிடிக்காது..நன்றாக அல்ல மூன்று வேளை நன்றாக உண்டாலே இந்தி அடிப்பொடிகளுக்கு வயிறுவாயெல்லாம் எரிய ஆரம்பித்துவிடும்..அதுவும் தமிழனாக இருந்தால் சொல்லவே வேண்டாம்..ஆரிய இந்தி பார்பனதின் புத்தி அதுதானே? இல்லையென்றால் இந்த நாட்டை சுற்றி ஒருத்தனாவது இவர்களை சப்போர்ட் பண்ணுகிறார்களா..பாருங்கள்..சுற்றிலும் எதிரிகள்.. இதுதான் இவர்களுடைய வெளியுறவு கொள்கையின் வெற்றி..தன் முதுகிலேயே ஆயிரம் அழுக்கை வைத்துகொண்டு அடுத்தவன் முதுகை சொறிவது..பக்கத்து நாடு நன்றாக இருந்தால் அங்கு உளவுதுறையை அனுப்பி அவன் குடியை கெடுப்பது.. அவன் சாப்பாட்டில் மண் அள்ளி போடுவது இப்படி இருந்தால் எவன் இவர்களை நம்புவான்?
எவன எங்க அடிச்சுக்கிட்டா இவனுங்களுக்கு என்ன? இவனுங்க காசுமீர் அரிப்பையே இவர்களால் தடுக்கமுடியவில்லை..ஏன் அடுத்தவனிடத்தில் தலையிட வேண்டும்?.. தனது வீரத்தை ஒரு இனக்குழுமத்திடம் காட்டும் இவர்கள் அதே போல வம்பிழுக்கும் சீனா பாகிஸ்தானிடம் காட்ட தயாராக இருக்கிறார்களா? சுண்ணாம்பு தடவி அனுப்புவார்கள் இவர்கள் பருப்பு அங்கே அவிய வாய்ப்பில்லை.. இளிச்சவாய் தமிழர்களிடம் மட்டும் தான் அவியும்.. ஈழ தமிழர்கள் செய்த ஒரே பிழை பாகிஸ்தான் போலவே.. இவர்களும் ஆங்காங்கே (தமிழ்நாட்டை தவிர்த்து) குண்டு வைத்து காட்டியிருக்கவேண்டும்.. அதை அவர்கள் செய்யாததால் தான் இவ்வளவு தெனாவெட்டு செயல்! இரண்டாவது பிழை ஆறரை கோடி ஆட்டு மந்தைகளை (தமிழுணர்வாளர்களை தவிர்த்து) தொப்புள் கொடி உறவு அவரை கொடி உறவு என்று இந்தி யாவை பகைக்க விரும்பாமல் வீழ்ந்து போனது.. ஆனால் இப்போது ஒரு தெளிவு அவர்களுக்கு வந்திருக்கும்.என நினைக்கிறேன் இங்கே அனைவரும் ஆட்டு மந்தைகளாகவே உள்ளனர்.ஆட்டுக்கு புல்லை கொடுத்தால் தின்றுவிட்டு சாணத்தை இடுவது போல.. இவர்களுக்கும் ‘புல்லை’ கொடுத்தால் வாக்குகளாக இடுவார்கள்..

கிரி said...

செம அடி விழுதே!

Hai said...

நண்பரே
இது குறித்து நான் சில விசயங்களை சொல்ல விரும்புகிறேன்
இந்த காட்சிப்பதிவானது ஒரு இராணுவ வீரனின் தனிப்பட்ட நடவடிக்கைக்கு கிடைக்கும் வெகுமதிதானே ஒழிய எந்த ஒரு இராணுவ நடவடிக்கையின்பால் வெறுப்புகொண்டோ அல்லது வெகுண்டெழுந்தோ நடந்த ஒரு தனி மனிதரின் போராட்டமல்ல.

நீங்கள் இப்படி ஒரு தனிமனிதனில் நடத்தை சம்பந்தமான ஒரு நிகழ்வை தவறான பார்வையில் வெளித்தந்தமைக்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.

இராணுவமும் தனி மனிதர்களால் ஆனதுதான். அதில் உள்ள எல்லோரும் மனித உணர்வுகலோடே ராணுவ வீரர்களாய் இருக்கிறார்கள். இராணுவ வீரன் என்பவன் ஒன்றும் அசுரனின் மகன்கள் அல்ல. ஆனால் அதில் உள்ளவர்கள் கடுமையான பயிற்சிகள் மூலம் அவர்கள் மனித உணர்வுகள் அடங்கிய அரசு இயந்திரங்களின் கைப்பாவையாகவும் கைத்தடியாகவும் இருக்கிறார்கள். எனவே எப்போதும் இராணுவத்தை ஏதோ விரோதியாகப் பார்க்காமல் அவர்களை அரசு இயந்துரங்களின் கைததடிகளாகவும் பின்னிருக்கும் அரசு இயந்திரத்தின் அல்லது தலைமையின் கீழ் கட்டுப்பட்ட அதன் கட்டளைகளை மீர முடியாத ஒரு அமைப்பாகவே கருதவும்.

குறிப்பு:
நீங்கள் அஸ்ஸாமைப் பற்றிக் குறிப்பிட்டது போல அங்கு ஒன்றும் தனி நாடு கேட்டோ அல்லது பிரிவினை வேண்டியோ மாபெரும் போராட்டங்கள் நடக்கவில்லை.அந்த போராட்டத்தை ஒரு காலத்தில் தீவிரமாய் முன்னெடுத்த இயக்கமான உல்பா-வும்(ULFA _united liberation front of assom ) இன்று மக்கள் ஆதரவு இல்லாது போயினர். அப்படியே அந்த இயக்கம் தோன்றவும் தனி தேசம் காணும் எண்ணம் மட்டுமே முக்கியமாக இருந்திருக்கவில்லை.மிதமிஞ்சிய வங்காளதேசத்து முசுஈம் மக்களின் கள்ளக் குடியேற்றமும் அதற்கு அங்கு நடந்து வந்த காங்கிரசு அரசு அவர்களை வாக்கு வங்கியாக்கி வருகிறார்கள். அதனை எதிப்பதும் அதன் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. அங்கு வியாபாரங்களிலும் மற்றும் பொருளாதாரத்திலும் முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருக்கும் வட இந்திய மாராடிகளின் ஆதிக்கத்தை ஒழிக்கவும் விரும்பினர்.

பின்னர் அவர்களது கப்பத்தில் அவர்கள் செழித்து வளர்ந்து அவர்களை விட்டு விட்டு தினப்படிக் கூலிக்கு வேலை செய்யும் பிஹாரி மக்களை செங்கல் சூளையில் போய் வெட்டிப் போட்டது வேறு கதை.

அவர்கள் தாங்கள் அசாமிய உணர்வை முதலீட்டைப் பூட்டுத் திரட்டிய பணத்தை பங்களாதேசத்தில் கொண்டு போய் முதலீடு செய்து விட்டு இப்போது அங்கே தஞ்சமடந்து இபோது இந்தியா வீழ்த்திய வலையில் மாட்டிக்கொண்டு முழிப்பது வேறுகதை. இரவு நேரத்தில் யாரும் உதவி செய்ய முடியாத இடங்களை தேடிச்சென்று சென்று

மற்றுமொரு பின்குறிப்பு:
வளரும் நாடுகளில் இராணுவத்தில் பணிபுரியும் பெரும்பாலான இளைஞர்கள் யாவரும் ஏழை எளிய குடும்பத்தில் இருந்தே வந்திருக்கிறார்கள் என்பதும் அதனாலேயே அவர்களை அந்த அரசாங்கங்கள் நினைத்தபடி ஆட்டுவிக்கின்றன என்பதுவும் உண்மை.

இன்னும் இது சம்பந்தமாக நிறைய சொல்லலாம்தான் ஆனால் நேரமும் தட்டடிக்கும் வேகமும் தடையாகின்றன.

கவிதை கேளுங்கள் said...

Thamizanin ovoru retha thulium. visa vaivai suvasithu suvasam irugum antha nimidangalum Indiya ranuvathin mathipukuriya seyalgalai engalukku theriyavillai. Intha Asham Makalukaga nan varuthapadugirin

MANO நாஞ்சில் மனோ said...

ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது,
நீங்கள் எந்த அளவு இந்தியாவை வெறுக்கிறீர் என்று......
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இந்திய மக்கள் ஒரு தவறும் செய்யவில்லை,
இலங்கை தமிழருக்கு விரோதமாய் கிளம்பியது அந்த இத்தாலி அம்மையார்தான்!!!! அதற்க்கு காரணம், உங்களுக்கு நன்றாகவே தெரியும்னு நினைக்கிறேன்......