Wednesday, June 30, 2010

இஸ்லாமை தடை செய்யக் கோரும் முஸ்லிம் பெண்மணி

"இஸ்லாம் ஒரு மதமல்ல. அது ஒரு அரசியல் சித்தாந்தம். முஸ்லிம் அல்லாதவரை கொல்வதில் தவறில்லை என்று பள்ளிக்கூட நூல்களிலேயே வெறுப்பை விதைக்கிறது. அதனை தடை செய்வதில் தவறில்லை." இவ்வாறு கூறுகிறார் சிரியாவை சேர்ந்த மனோதத்துவ நிபுணரான Wafa Sultan . கடந்த 18 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இஸ்லாம் தொடர்பான அரசியல் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். 2006 ம் ஆண்டு, அல் ஜசீரா தொலைக்காட்சி நேர்காணலில் பின்னர் இவர் பிரபலமானார். இஸ்லாமைப் பற்றிய அவரது கருத்துகள் பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளன. சிரியாவில் தான் படித்த பாடப்புத்தகத்தில் "இறைதூதர் முகமது ஒரே இரவில் 900 யூதர்களின் தலையை வெட்டியதாகவும், அதே நாளில் தகப்பனை சகோதரர்களை இழந்த பெண்ணுடன் படுத்தாகவும் எழுதப்பட்டுள்ளது." என்று கூறுகின்றார். அப்படிப்பட்ட மதத்தை சீர்திருத்துவது நடைமுறைச் சாத்தியமன்று என்கிறார். "இஸ்லாம் சமாதானத்தை போதிக்கும் மதம்" என்பது குறித்த அவரது கருத்து என்ன? "அப்படிக் கூறுபவர்கள் இஸ்லாத்தை பற்றி குறைவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அல்லது மற்றவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இஸ்லாமில் ‘Al Takiyya’ என்ற ஒரு கொள்கை உண்டு. அதன் அர்த்தம், முஸ்லிம்கள் தமது இலக்கை அடைவதற்காக மற்றவர்களை தவறாக வழிநடத்தலாம்."

அண்மையில் நெதர்லாந்தை சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்வாதி வில்டர்ஸ் மீதான வழக்கில் சாட்சியமளிக்க நெதர்லாந்து வந்திருந்தார். நெதர்லாந்து தொலைக்காட்சி அவரை பேட்டி எடுத்தது. Wafa Sultan வழங்கிய நேர்காணல் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் முழுவதும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. Wafa Sultan இன் அனைத்துக் கருத்துகளுடனும் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் இஸ்லாமிய மதத்திலும் இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டுமென்பதற்காக இந்த வீடியோவை பதிவிடுகின்றேன்.

sitestat

49 comments:

faidh said...

(,,முஸ்லிம் அல்லாதவரை கொல்வதில் தவறில்லை,,, இறைதூதர் முகமது ஒரே இரவில் 900 யூதர்களின் தலையை வெட்டியதாகவும், அதே நாளில் தகப்பனை சகோதரர்களை இழந்த பெண்ணுடன் படுத்தாகவும் ,,,இஸ்லாமில் ‘Al Takiyya’ என்ற ஒரு கொள்கை உண்டு. அதன் அர்த்தம், முஸ்லிம்கள் தமது இலக்கை அடைவதற்காக மற்றவர்களை தவறாக வழிநடத்தலாம்,,,)

எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் யாரோ ஒருவர் கூறிய முட்டாள்தனமான கருத்துக்கு இஸ்லாம் எந்த விதத்திலும் பொறுப்பு கிடையாது சார்.யாராவது இஸ்லாத்தை பற்றி தவறாக கூறினாலே உடனே அதை வெளியீட்டு இதோ பார் இஸ்லாம் எவ்வளவு தவறானது என்று உலகுக்கு காட்டும் உங்கள் எண்ணத்தை மாற்றி கொண்டு அந்த செய்தியில் எந்த அளவு உண்மை உள்ளது அறிந்து வெளியுடுங்கள் ....

ethirvinai said...

அவ்வப்போது இது போன்ற காமெடியன்கள் வருவார்கள் போவார்கள்.இதில் ஆணென்றும் பெண்ணென்றும் பேதமேதும் இல்லை.பறக்கும் தட்டை பார்த்தேன் என்று சொல்லி எல்லோரையும் தன பக்கம் திருப்பும் யுக்தி இது.மற்றபடி இதுவும் கடந்து போகும். விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மதம் ஏதும் இல்லை.பாட புத்தகத்தில் அவ்வாறு படித்தது உண்மையானால்,இல்லாத ஒன்றை எழுதியதற்காக அந்த நபரை கல்லால் அடித்து கொல்லலாம்.(சிரியா என்பதால்)

வால்பையன் said...

பகிர்விற்கு நன்றி தல!

Anonymous said...

"இஸ்லாம் ஒரு மதமல்ல. அது ஒரு அரசியல் சித்தாந்தம். முஸ்லிம் அல்லாதவரை கொல்வதில் தவறில்லை என்று பள்ளிக்கூட நூல்களிலேயே வெறுப்பை விதைக்கிறது. அதனை தடை செய்வதில் தவறில்லை."
"இறைதூதர் முகமது ஒரே இரவில் 900 யூதர்களின் தலையை வெட்டியதாகவும், அதே நாளில் தகப்பனை சகோதரர்களை இழந்த பெண்ணுடன் படுத்தாகவும் எழுதப்பட்டுள்ளது." என்று கூறுகின்றார். அப்படிப்பட்ட மதத்தை சீர்திருத்துவது நடைமுறைச் சாத்தியமன்று என்கிறார்/////

அந்த பெண்மணி சொன்னது சரியா தவறா என்பதை முஸ்லிம்கள் தான் சொல்ல வேண்டும். அதே நேரம் நடக்கும் நிகழ்வுகள் - அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை எனபதையும் அறிய முடிகிறது.

Anonymous said...

//சிரியாவில் தான் படித்த பாடப்புத்தகத்தில் "இறைதூதர் முகமது ஒரே இரவில் 900 யூதர்களின் தலையை வெட்டியதாகவும், அதே நாளில் தகப்பனை சகோதரர்களை இழந்த பெண்ணுடன் படுத்தாகவும் எழுதப்பட்டுள்ளது." என்று கூறுகின்றார்.//

WAFA SULTAN EXPOSES HER KNOWLEDGE ABOUT ISLAM BY THE ABOVE LINES.

THAT IT SELF EXPOSES HER.


WAFA SULTAN SHOULD STUDY HISTORY AND SHOULD STUDY ISLAM FROM MUSLIMS . NOT FROM THE MEDIA.!

ANSWER TO ARAB-AMERICAN PSYCHOLOGIST WAFA SULTAN.

WAFA SULTAN REFUTED ON AL-JAZEERA TV (QATAR) FEB 21, 2006.

(KINDLY GO THROUGH THE FOLLOWING LINKS AND SEE THE VIDEOS)

Wafa Sultan Refuted on Aljazeera.

Wafa Sultan Refuted on Aljazeera.

===============

Answering Wafa Sultan, an ex-muslim lady who described how Islam is bad and against any form of civilization. Brother Sary Farah refuted ... All her claims point by point and clarified the misconceptions she mentioned.

Here the All english versions in which Wafa Sultans lies are totally defeated ;-) !

The Answer to wafa sultan:

Here the All english versions in which Wafa Sultans lies are totally defeated ;-) !
The Answer to wafa sultan:

The Answer to wafa sultan


Part1

Part2

Part3

Part4

Part5
================================
Wafa Sultan’s Lies Refuted

By Bassam Zawadi

Wafa Sultan’s Lies Refuted

வால்பையன் said...

//இல்லாத ஒன்றை எழுதியதற்காக அந்த நபரை கல்லால் அடித்து கொல்லலாம்.//


நிறைய ஆதாரங்களுடன் விரைவில் ஆல் இன் ஆலில் பதிவு வரும்!

Anonymous said...

ஐரோப்பாவில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கான சிறந்த வழிமுறை இப்பொழுது இதுதான். அதாவது இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை வெளியிடல்.

Anonymous said...

சென்ற வாரம் கிறிஸ்துவத்தை குறை சொன்னதால், இந்த வாரம் முஸ்லீம் மதத்தை குறை சொல்லி BALANCE பண்ணுகிறிர்களா.

VANJOOR said...

//ஐரோப்பாவில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கான சிறந்த வழிமுறை இப்பொழுது இதுதான். அதாவது இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை வெளியிடல்.//

அது ம‌ட்டுமில்லை. ஐரோப்பாவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் இஸ்லாத்துக்கெதிராக‌ முட்டுக்க‌ட்டை இடுவ‌த‌ற்கு முஸ்லீம் பெய‌ர்தாங்கிக‌ளை சுக‌போக‌த்தில் ஊற‌விட்டு, பொருளளித்து இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை எழுத , பேச செய்து இலக்கியத்துக்கான புலிட்சர் PULITZER , நோபல் NOBEL பரிசுகளை வழங்கி வாழ்த்தி வளர்த்து கொண்டிருப்பது இது ஒன்றும் நமக்கு புதிதல்லவே !

வஃபா சுல்தானுக்கும் மேலை நாடுகளுக்கும் சரியான ஆப்பு

லின்க்கை க்ளிக் செய்து விடியோ காணுங்கள்.
Wafa Sultan Refuted on Aljazeera.

Wafa Sultan Refuted on Aljazeera.

The Answer to wafa sultan:

Anonymous said...

Good website about truth of Islam.
http://www.faithfreedom.org/

VANJOOR said...

//Anonymous said...
Good website about truth of Islam.
http//www.fathfreedom,org/ //

உலகெங்கும் வ‌ள‌ர்ந்து வ‌ரும் இஸ்லாத்துக்கெதிராக‌ பொருளளித்து இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை ஊடகங்களில் மட்டுமன்றி இணைய தளங்களில் இட்டு பரப்புவதற்கு எத்தனை எத்தனையோ சைட்டுக்கள் உருவாக்கப்பட்டு இயங்கி கொண்டிருக்கின்றன என்ற உண்மையை ஆறறிவு படைத்த வாசகர்கள் அனைவரும் தெளிவுடன் அறிந்திருக்கும் வேளையில்,

அநானிமஸ் பெருந்தன்மையாக இஸ்லாத்துக்கு எதிரானவைகளில் ஒன்றை தன்னுடைய கண்டுபிடிப்பாக‌ சம‌ர்ப்பித்திருக்கிறார்.

அநாநிமஸ் மகிழ வாழ்த்துக்கள்.
---------------------------

இதே வளைத்தளத்தில் கலையரசன் அவர்களின் கீழ்க்கண்ட படைப்புகளையும் படிக்கலாமே.
மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு


சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்

Anonymous said...

”முஸ்லிம் அல்லாதவரை கொல்வதில் தவறில்லை”

இப்படி இஸ்லாம் கூறியிருப்பதாக நான் அறியவில்லை. அப்படியில்லை என்பதும் உண்மைதான்.

கலையக ரசிகன் said...

என்ன கலையரசன் சார் பதிலைக் காணோம்? பேசாம இந்த கட்டுரைய டிலிட் பண்ணிடுங்க?

//அந்த நபரை கல்லால் அடித்து கொல்லலாம்.//

எப்படா நீங்கல்லாம் திருந்தி 6 அறிவு மனிசனாகப் போறீங்க?

இஸ்லாமுக்காக வாதாடும் சகோதர சகோதரிகளே நீங்களாவது சொல்லக்கூடாதா?

கலையக ரசிகன் said...

//சென்ற வாரம் கிறிஸ்துவத்தை குறை சொன்னதால், இந்த வாரம் முஸ்லீம் மதத்தை குறை சொல்லி BALANCE பண்ணுகிறிர்களா.//

ஆமாங்க, இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க இந்து, பௌத்தம், எலி, பூனை எல்லாத்துக்கும் இருக்கு ஆப்பு.

கலையக ரசிகன் said...

என்ன VANJOOR கிறிஸ்தவர்களை சண்டைக்கு இழுக்கிறீர்கள் போல இருக்கு? நடக்கட்டும் நடக்கட்டும் சிலுவைப்போரும் ஜிகாத்தும். பார்த்துப்பா neutralலா நாங்க இருக்கோம்.

ethirvinai said...

ஏழறிவு கொண்ட கலையக ரசிகருக்கு,அது வஞ்சப்புகழ்ச்சி.தவறாக பொருள் கொள்ளப்பட்டுவிட்டது.
தல வாலுக்கு ???? உங்கள்,மனிதத்தை முன்னிறுத்தும்,சாதி மதத்தை புறந்தள்ளும்,காரசாரமான பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
(இது வஞ்சப்புகழ்ச்சியல்ல) நிஜமாகவே.

Anonymous said...

//Wafa Sultan இன் அனைத்துக் கருத்துகளுடனும் எனக்கு உடன்பாடில்லை.//

இதுதான் தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையைக் கிள்ளிவிடுவதென்பது

Anonymous said...

//(இது வஞ்சப்புகழ்ச்சியல்ல) நிஜமாகவே.//

Nice logic

Anonymous said...

"இறைத்தூதர் கூறினார்: "உங்கள் அதிகாரத்திற்கு உட்படும் அனைத்து யூதர்களையும் கொன்றுவிடுங்கள்". இதனால், முஹய்யிஸா இபின் மஸுத் என்பவர் இபின் சுனன்யா என்ற யூதனின் மீது பாய்ந்து அவனை கொன்றுவிட்டார். இந்த யூதரோடு அவர்களுக்கு நல்ல சமூக உறவுமுறையும், வியாபார தொடர்புகளும் இருந்திருந்தன. முஹய்யிஸாவின் சகோதரர் ஹுவய்யிஸா என்பவர் ஒரு முஸ்லிமில்லாதவராக இருந்தார், இவர் குடும்பத்தின் மூத்த சகோதராக இருந்தார். முஹய்யிஸா அந்த யூதனை கொன்றதை ஹிவய்யிஸாவிற்கு தெரிந்த போது, அவர் முஹய்யிஸாவை அடிக்க ஆரம்பித்தார், பிறகு அவனை நோக்கி "இறைவனின் எதிரியே, உன் வயிற்றில் இருக்கும் கொழுப்பெல்லாம் அந்த யூதன் மூலமாக வந்த செல்வத்தின் மூலமாக அல்லவா, அப்படியிருந்தும் நீ அவனை கொன்றுவிட்டாயே" என்று கூறினார். இதற்கு பதிலாக யூதனைக் கொன்ற முஹய்யிஸா (தம்பி) "அந்த யூதனை கொல்லச் சொன்னவர் உன்னைக் கொல்லும் படி சொல்லியிருந்தால், நான் உன்னையும் கொன்று இருப்பேன்" என்று கூறினார். (Life of Mohamamd பக்கம் 369)

இதே நிகழ்ச்சி சுனான் அபூ தாவுத் என்ற ஹதீஸ் தொகுப்புகளில் கூட கூறப்பட்டுள்ளது, தொகுப்பு 19, எண் 2996:

முஹய்யிஸா கூறியது: "அல்லாஹ்வின் இறைத்தூதர் "யூதர்களின் மீது உனக்கு வலிமை கிடைக்குமானால், அவர்களை கொன்றுவிடு" என்றுச் சொன்னார். ஆகையால், முஹய்யிஸா சுபய்யாஹ் என்ற யூத வியாபாரியின் மீது பாய்ந்து அவரை கொன்றுவிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. இருந்தும், அவர் யூதனை கொன்றுவிட்டார். முஹய்யிஸாவின் சகோதரனாகிய ஹுவய்யிஸா இன்னும் இஸ்லாமியராக ஆகாமல் இருந்தார். இவர் முஹய்யிஸாவை விட வயதில் மூத்தவராவார். அவன் யூதனை கொன்ற போது, ஹுவய்யிஸா அவனை (தம்பியை) அடித்து "அல்லாஹ்வின் எதிரியே, நான் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்கிறேன், நீ கொன்ற அந்த யூதனின் செல்வத்திலிருந்து அதிகபடியான கொழுப்பு உன் வயிற்றில் இருக்கிறது" என்று கூறினான்.

(முஹம்மதுவின் செயல்கள் அல்லது போதனைகள் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள் தான் சுனான் அபூ தாவுத் ஆகும்)

Anonymous said...

அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.” (குர்‍ஆன் 4:89)

வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். (குர்‍ஆன் 9:29) .

நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இஸ்லாமை தழுவுங்கள் அப்போது நீங்கள் பாதுகாப்பாக‌ இருப்பீர்கள். (Sahih Muslim, book 19, number 4380) [3]

(I extend to you the invitation to accept Islam. Embrace Islam and you will be safe. (Sahih Muslim, book 19, number 4380) [3] )

"இறைத்தூதர் கூறினார்: "உங்கள் அதிகாரத்திற்கு உட்படும் அனைத்து யூதர்களையும் கொன்றுவிடுங்கள்". இதனால், முஹய்யிஸா இபின் மஸுத் என்பவர் இபின் சுனன்யா என்ற யூதனின் மீது பாய்ந்து அவனை கொன்றுவிட்டார். இந்த யூதரோடு அவர்களுக்கு நல்ல சமூக உறவுமுறையும், வியாபார தொடர்புகளும் இருந்திருந்தன. முஹய்யிஸாவின் சகோதரர் ஹுவய்யிஸா என்பவர் ஒரு முஸ்லிமில்லாதவராக இருந்தார், இவர் குடும்பத்தின் மூத்த சகோதராக இருந்தார். முஹய்யிஸா அந்த யூதனை கொன்றதை ஹிவய்யிஸாவிற்கு தெரிந்த போது, அவர் முஹய்யிஸாவை அடிக்க ஆரம்பித்தார், பிறகு அவனை நோக்கி "இறைவனின் எதிரியே, உன் வயிற்றில் இருக்கும் கொழுப்பெல்லாம் அந்த யூதன் மூலமாக வந்த செல்வத்தின் மூலமாக அல்லவா, அப்படியிருந்தும் நீ அவனை கொன்றுவிட்டாயே" என்று கூறினார். இதற்கு பதிலாக யூதனைக் கொன்ற முஹய்யிஸா (தம்பி) "அந்த யூதனை கொல்லச் சொன்னவர் உன்னைக் கொல்லும் படி சொல்லியிருந்தால், நான் உன்னையும் கொன்று இருப்பேன்" என்று கூறினார். (Life of Mohamamd பக்கம் 369)

இதே நிகழ்ச்சி சுனான் அபூ தாவுத் என்ற ஹதீஸ் தொகுப்புகளில் கூட கூறப்பட்டுள்ளது, தொகுப்பு 19, எண் 2996:

முஹய்யிஸா கூறியது: "அல்லாஹ்வின் இறைத்தூதர் "யூதர்களின் மீது உனக்கு வலிமை கிடைக்குமானால், அவர்களை கொன்றுவிடு" என்றுச் சொன்னார். ஆகையால், முஹய்யிஸா சுபய்யாஹ் என்ற யூத வியாபாரியின் மீது பாய்ந்து அவரை கொன்றுவிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. இருந்தும், அவர் யூதனை கொன்றுவிட்டார். முஹய்யிஸாவின் சகோதரனாகிய ஹுவய்யிஸா இன்னும் இஸ்லாமியராக ஆகாமல் இருந்தார். இவர் முஹய்யிஸாவை விட வயதில் மூத்தவராவார். அவன் யூதனை கொன்ற போது, ஹுவய்யிஸா அவனை (தம்பியை) அடித்து "அல்லாஹ்வின் எதிரியே, நான் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்கிறேன், நீ கொன்ற அந்த யூதனின் செல்வத்திலிருந்து அதிகபடியான கொழுப்பு உன் வயிற்றில் இருக்கிறது" என்று கூறினான்.

(முஹம்மதுவின் செயல்கள் அல்லது போதனைகள் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள் தான் சுனான் அபூ தாவுத் ஆகும்)

Colvin said...

இங்கு கருத்துக்கூறிய இஸ்லாமிய சகோதர்களிடம் ஒன்றைக் கேட்ட விரும்புகிறேன்
சவூதியில் மாற்று மதத்தினர் வழிபாடு நடத்த முடியுமா? பைபிளோ மற்றைய இறை வேதங்களையோ கொண்டு போக முடியுமா? இஸ்லாமிய நாடுகளில் மதம் மாறினால் மரண தண்டனையோ அல்லது ஏதாவது ஒரு விதத்தில் அவர்களுக்கு கொடூரங்களோ இழைக்கப்படுவது ஏன்?

ஏனெனில் இஸ்லாம் பிறந்த சவூதியில் உண்மையான மார்க்கம் ஓரளவுக்கேனும் பின்பற்றப்படுகிறது.

இஸ்லாத்தை பற்றி யார் விமர்சித்தாலும் அவர்களை கொலை செய்வதும் இஸ்லாமியர்களின் வழக்கமாக உள்ளது. சான்றாக சல்மான ருஷ்டி ஈரானோ
ஏனைய இஸ்லாமிய நாடுகளோ செல்ல முடியுமா? ஏனைய சமயங்களில் அபபடியில்லையே? விளக்குவீர்கள் என நம்புகிறேன்

Anonymous said...

//உங்கள்,மனிதத்தை முன்னிறுத்தும்,சாதி மதத்தை புறந்தள்ளும்,காரசாரமான பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//


என்ன சொல்ல வாறீங்க?

VANJOOR said...

இஸ்லாத்திற்கெதிரான சிந்தனைகளே இஸ்லாத்தின்பால் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை அன்றும் இன்றும் வரலாறு காட்டிக் கொண்டுதான் வருகிறது..

Click the links and read


3 ஆயிரம் பேரை இஸ்லாத்தில் இணைத்த பாபர் மசூதியை இடித்த முன்னால் கரசேவகர்.இஸ்லாத்துக்கு எதிராக பள்ளிவாயில்களின் மினராக்களின் எதிர்ப்பாளர் இஸ்லாத்தின் காவலாளி ஆகிறார்.

Anonymous said...

dear brothers and sisters,each and every religion saying to do the good thing weather it is islam,hindu,chiristianity,....u people go to the bible quran bagavath geeth they teach good things.we can not blame chiristianity what has done hitler.we can not blame hindu religion what has done by nithyanantha or premanantha,the things that has done by man we can not blame the religion or god.

Anonymous said...

//இஸ்லாத்திற்கெதிரான சிந்தனைகளே இஸ்லாத்தின்பால் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை அன்றும் இன்றும் வரலாறு காட்டிக் கொண்டுதான் வருகிறது..//

each religion claims this kind of statement and gives example. It shows u people are limited with religious thoughts.

Anonymous said...

வேறு மதங்களில இருந்து யாரும் முஸ்லிம் மதத்திற்கு பொனால அது தவறில்லை. ஆனால் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் வேறு மதத்திற்கோ அல்லது மாற்று கருத்துக்களை முன்வைத்தால் அது குற்றம். என்னங்கடா நீதி இரு எல்லாம் ஒரு ஏமாற்று வித்தை. சமயங்கள் மக்களுக்காக இருக்கணுமேதவிர மக்கள் சமயங்களுக்காக இருக்கணுமென்று எதிர்பார்க்ககூடாது

shah said...

r0mba ரொம்ப புத்திசாலி தனமா எளிதிட்ட தா நினக்கவேண்டாம், முஸ்லிம்களின் கோபத்திற்கு ஆளாகாதே, அவள் வெளியிட்ட செய்தி உண்மையானவை அல்ல

Haazi said...

//இஸ்லாத்தை பற்றி யார் விமர்சித்தாலும் அவர்களை கொலை செய்வதும் இஸ்லாமியர்களின் வழக்கமாக உள்ளது. சான்றாக சல்மான ருஷ்டி ஈரானோ
ஏனைய இஸ்லாமிய நாடுகளோ செல்ல முடியுமா? ஏனைய சமயங்களில் அபபடியில்லையே?
//
தான் நினைப்பதுதான் இஸ்லாம் என்று கூறி தனது இஷ்டப்படி இஸ்லாத்தினை விமர்சனம் செய்தவர்கள்தான் இந்த சல்மான் ருஸ்டி,தஸ்லிமா நஸ்ரின், இந்த பெண்,மற்றும் பலர் ..So இவர்களை இஸ்லாமிய நாடுகள் தடை செய்வதோ அள்ளது வேறு முடிவுகள் எடுப்பதோ ஆச்சரியமான விடயமில்லை..
Mr.colvin சாதரணமாக வாழ்க்கையில்.... உதாரணமாக உங்கள் வீட்டு பெண் ஒருவருக்கு ஒன்றும் இல்லாத வகையில் ஒருவன் இஷ்டத்துக்கு அவதுறு சொல்லுகிரான் என்றால், அவனை நீங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்தா கொடுப்பீர்கள்?

Haazi said...

// சவூதியில் மாற்று மதத்தினர் வழிபாடு நடத்த முடியுமா? பைபிளோ மற்றைய இறை வேதங்களையோ கொண்டு போக முடியுமா?//

இது முறையான கேள்வியல்ல..சவுதி வரலாறும்,நிகழ்காலமும் 100% முஸ்லிம்களை கொண்டது. இதனால் அரசாங்கம் இன்னொரு வேதத்தை தடை செய்வது புதிய விடயமல்ல ..இது இஸ்லாதிக்கு மட்டுமல்ல ஏனைய மதத்தினை 100% கொண்ட நாடும் இதே முறையைதான் கையாளும்..
100% தனி மதத்தினை கொண்ட நாடுகள் மிகவும் குறைவு அதனாலதான் மற்றய எல்லா நாடுகளிலும் எல்லா மதத்தினரும் உள்ளதால் எல்லாவிதமான அனுமதியும் உள்ளது.. Islam majority ஆனா நாடுகளில் இந்த தடை உள்ளதா என்றால்..இல்லை..
so சைவ கடையில் போய் கோழி பிரியாணி வைக்க வேண்டும் என்று கேப்பது முறையில்ல....

Anonymous said...

தகவலுக்கு நன்றி கலையரசன்.
Haazi பதிலை பார்த்தாலே கண் முன்னால் தெரியும் உண்மைகளை கூட பார்க்க முடியாமல் அவருடைய மத வெறி அவரை தடுக்கிறது.

Anonymous said...

//r0mba ரொம்ப புத்திசாலி தனமா எளிதிட்ட தா நினக்கவேண்டாம், முஸ்லிம்களின் கோபத்திற்கு ஆளாகாதே//

என்ன செய்ய முடியும். சும்மா விரட்டாதே!

Anonymous said...

//சவுதி வரலாறும்,நிகழ்காலமும் 100% முஸ்லிம்களை கொண்டது.//

97% என்பதுதான் சரி. திருத்திக் கொள்ளுங்கள்.

Anonymous said...

//சைவ கடையில் போய் கோழி பிரியாணி வைக்க வேண்டும் என்று கேப்பது முறையில்ல//

முஸ்லிம்கள் மட்டும் மற்ற மதத்தினரிடையே குடியேறி பின்பு மசூதி கட்டுவது எப்படி நியாயம்.

Anonymous said...

//இவர்களை இஸ்லாமிய நாடுகள் தடை செய்வதோ அள்ளது வேறு முடிவுகள் எடுப்பதோ ஆச்சரியமான விடயமில்லை.//

இதுதான் சர்வாதிகாரம். முடிந்தால் கருத்துடன் மோதுங்கள்.


//உதாரணமாக உங்கள் வீட்டு பெண் ஒருவருக்கு ஒன்றும் இல்லாத வகையில் ஒருவன் இஷ்டத்துக்கு அவதுறு சொல்லுகிரான் என்றால், அவனை நீங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்தா கொடுப்பீர்கள்?/


அதற்காக கல்லால் அடித்து கொலை செய்வீர்களா?

Villavarayens said...

// இது முறையான கேள்வியல்ல..சவுதி வரலாறும்,நிகழ்காலமும் 100% முஸ்லிம்களை கொண்டது. இதனால் அரசாங்கம் இன்னொரு வேதத்தை தடை செய்வது புதிய விடயமல்ல ..இது இஸ்லாதிக்கு மட்டுமல்ல ஏனைய மதத்தினை 100% கொண்ட நாடும் இதே முறையைதான் கையாளும்..
100% தனி மதத்தினை கொண்ட நாடுகள் மிகவும் குறைவு அதனாலதான் மற்றய எல்லா நாடுகளிலும் எல்லா மதத்தினரும் உள்ளதால் எல்லாவிதமான அனுமதியும் உள்ளது.. Islam majority ஆனா நாடுகளில் இந்த தடை உள்ளதா என்றால்..இல்லை..
so சைவ கடையில் போய் கோழி பிரியாணி வைக்க வேண்டும் என்று கேப்பது முறையில்ல....//

வேறொன்றுமில்லை....பயம் தான் காரணம்...அவர்களுக்கே அவர்கள் மதத்தின் பற்றுதல் நிலையில் சந்தேகம் உன்டு....இவரகளில் யாரும் கேள்வி கேட்க முடியாது..வெள்ளிகிழமைகளில் நடக்கும் தொழுகையில் இமாம் என்ன சொல்கிறாரோ அதை நம்ப தான் வேண்டும்..செம்மறி ஆட்டுக்கூட்டங்களை போல....மதவெறி பிஇத்தவர்கள்...

farees said...

thavarana karuthukalai vimarsikkalam.aanal vithandavatham pannakkoodathu

Anonymous said...

//thavarana karuthukalai vimarsikkalam.aanal vithandavatham pannakkoodathu//

What do you try to say?

Anonymous said...

//சவுதி வரலாறும்,நிகழ்காலமும் 100% முஸ்லிம்களை கொண்டது.//

எப்போதிருந்து? முஸ்லிம்களுக்கு முன்பு இருந்தவர்களை மறந்துவிட்டீர்களா?

Anonymous said...

இஸ்லாமியர்கள் தங்கள் கருத்தினை சொல்லும்போது சரியான ஆதாரங்களை காட்டுங்கள். சவூதியில் ஒன்றும் 1000மூ இஸ்லாமியர்கள் இல்லை.
http://en.wikipedia.org/wiki/Saudi_Arabia#Religion
மிகுதியாக உள்ள 3% பேர் எவ்வாறு வழிபாடுகளை நடத்த முடியும். இது தவிர மாற்றுமத வணக்கம் செய்தால் தண்டனையே. ஏனெனில் இது இஸ்லாமிய கோட்பாடுகளிலிருந்து வருகிறது. தலீபான்களும் இவ்விதமே பழம்பெருமை மிக்க புத்தர் சிலைகளை உடைத்தெறிந்ததுடன் மாற்றுமத வழிபாடுகளுக்கு மிகுந்த கட்டுபாடுகளை விதி்த்திருந்தனர்.

இஸ்லாமிய நாடுகளில் மதம் மாறினால் கொடுக்கப்படும் தண்டனை உலகறிந்தது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.

யாருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் உண்டு. (வரையறையுடன்).
சல்மான் சுருஷ்டியும், தஸ்லிமா நஸ்ரிஸ்னும் தேசத்துரோக குற்றமா செய்தார்கள்.

Lyca said...

// இஸ்லாமியர்கள் தங்கள் கருத்தினை சொல்லும்போது சரியான ஆதாரங்களை காட்டுங்கள். சவூதியில் ஒன்றும் 100%மூ இஸ்லாமியர்கள் இல்லை.//

அனானி..சரி மிகுதி 3% மக்கள் ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறார்கள் என்று எந்த ஆதாரத்துடன் சொல்லுகிறீர்கள்?

சனா said...

// யாருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் உண்டு. (வரையறையுடன்).
சல்மான் சுருஷ்டியும், தஸ்லிமா நஸ்ரிஸ்னும் தேசத்துரோக குற்றமா செய்தார்கள்.//

வரையறை யார் வகுப்பது?
Annoy முஸ்லிம் அல்லததால் உங்களுக்கு அது சின்ன கருத்தாக இருக்கலாம்..ஆனால் முஸ்லிம்களுக்கு இது பாரிய தாக்கமாகும்..
ஆக சல்மான் சுருஷ்டியும், தஸ்லிமா நஸ்ரிஸ்னும் தேசத்துரோக குற்றமா செய்தார்கள்? என கேட்டால் அறவே சம்பந்தபடாத ஒருவன் "என்னப்பா ஒன்னுமே புரியல்ல" என்பான்,உண்மையில் பாதிக்கபட்டவனுக்கு அது தேசத்துரோகத்தைவிட மேலாகவே எண்ணுவான்..

Kalaiyarasan said...

அனல் பறக்கும் விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் இருதரப்பு நண்பர்களும் எனது கருத்தை அறிய விரும்பலாம். வாபா சுல்தான், தஸ்லீமா நஷ்ரீன், சல்மான் ருஷ்டி போன்றவர்கள் லிபரல் நாடுகளில் தோன்றிய மாற்றுக் கருத்தாளர்கள். இவர்களின் பிறப்பிடமான முறையே சிரியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அரசுகள் இஸ்லாமிய மத நெறிகளை பின்பற்றுவதில்லை. மேற்குலக லிபரல் சித்தாந்தம் அங்கே மதச்சார்பற்றவர்களை உருவாக்கியுள்ளது. இனியும் உருவாக்கும். ஆனால் அப்படியானவர்கள் பொதுத் தளத்தில் கருத்துக் கூற முற்படும் பொழுது இஸ்லாமிய மதவாதிகளின் கோபத்திற்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக தமது பாதுகாப்புக்காக இத்தகைய மாற்றுக் கருத்தாளர்கள் மேற்குலக ஆதரவை நாட வேண்டியேற்படுகின்றது. இஸ்லாமை எதிரிகளாகப் பார்க்கும் மேற்குலக கொள்கை வகுப்பாளர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இஸ்லாமிய மத நம்பிக்கையாளர்கள் தமது மதமும் விமர்சனத்திற்கு உட்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரம் மாற்றுக் கருத்தாளர்களை பாதுகாக்க முன்வர வேண்டும். கருத்தை கருத்தின் மூலம் சந்திக்கலாம். மாறாக கொலை மிரட்டல்கள் விடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மரண தண்டனைக்கான பத்வா கூட கொலை மிரட்டலாகத் தான் கருதப்படும். இந்த அரசியல் பத்வாக்கள் உண்மையான பத்வாக்கு களங்கம் கற்பிக்கின்றன.

Meerapriyan said...

islaam maarkam padri ariyaamal avadooru koora vendaam. ungal pathivu kuda avadooraaga maaralaam. etho oru saakkai vaithu muslimkalai matha veri pidithavargal enpathum oru matha veri karuthuthaan- iraivan anaivaraiyum kaappaanaaga.-meerapriyan

Anonymous said...

//கருத்தை கருத்தின் மூலம் சந்திக்கலாம். மாறாக கொலை மிரட்டல்கள் விடுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். //

அமைதி மார்க்கத்தினர் எவ்வளவு சகிப்பு தன்மை கொண்டவர்கள் என்பதற்கு சமீபத்திய ஆதாரம், கேரளாவில் முகமது பற்றி கேள்வி தயாரித்த ஒரு கல்லூரி பேராசிரியரின் கை வெட்டப்பட்டிருக்கிறது. வெட்ககேடு, ஒரு சிறிய விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு இவர்களின் மூளைகள் மழுங்கடிக்கப்பட்டு, சலவை செய்யப்பட்டுஇருக்கிறது.
இவர்களும் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் நங்கள் அமைதியை பரப்புகிறோம் என்று


M. GEORGE VINCENT
KANYAKUMARI

Lifes Good said...

// கேரளாவில் முகமது பற்றி கேள்வி தயாரித்த ஒரு கல்லூரி பேராசிரியரின் கை வெட்டப்பட்டிருக்கிறது//

M. GEORGE VINCENT அவர்களுக்கு,
முதலில் என்ன கேள்வி தயாரித்தார் என்று சொல்லுங்கள் (நிச்சியமாக முஹம்மது எந்த நாட்டில் பிறந்தார்? என்று இருக்காது)..
நீங்களாகவே முஸ்லிம்களை ஆத்திரம் ஊட்டும் பாரதுரமான விடயங்களை செய்யவேண்டியது, ஆனால் முஸ்லிம்கள் அதற்கு கருது மட்டு சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது...
மாறாக ஒரு விடயத்தினை செய்யும்முன்பு அதனுடைய எதிர் வினையை அறிந்து செய்வது நலம்..
(இது வாழ்க்கையில் எல்லா விடயத்துக்கும் பொருந்தும்)
GEORGE VINCENT இஸ்லாம் இல்லாததால் புரிவது கஷ்டமாக இறுகும்..எதனையும் நடுநிலைமையுடன் பார்க்கவேண்டும்..காள்ப்புனர்சிகாக comment பண்ண வேண்டாம்..

Anonymous said...

Lifes Good said...

//நீங்களாகவே முஸ்லிம்களை ஆத்திரம் ஊட்டும் பாரதுரமான விடயங்களை செய்யவேண்டியது, ஆனால் முஸ்லிம்கள் அதற்கு கருது மட்டு சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது...//

Mr. Lifes Good
உங்கள் பேச்சு வன்முறையை தூண்டுவதாக உள்ளது. நீங்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டால் எப்படி? பேராசிரியர் அவ்வாறு தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய முறை என்று உள்ளது. இந்தியா ஒன்று இஸ்லாமிய தேசம் அல்ல. இஸ்லாமை விமர்சித்தால் அவருக்கு தண்டனை கொடுக்க நீங்கள் யார்?

Indrajith said...

கடவுள் உண்டு என்று நம்பும் ஒருவரே அறியாமை, மூட நம்பிக்கை, அச்சம், பொருளில் விருப்பம் ஆகிய தீய விடயங்களால் நிரம்பியிருப்பவராவர்.

Gowdama Budda

Anonymous said...

//நீங்களாகவே முஸ்லிம்களை ஆத்திரம் ஊட்டும் பாரதுரமான விடயங்களை செய்யவேண்டியது, ஆனால் முஸ்லிம்கள் அதற்கு கருது மட்டு சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது...//

கையை வெட்டியது தவறு இல்லை என்று சொல்ல வருகிறீர்களா. அப்படி என்றால் இஸ்லாம் அமைதி மார்க்கம் அல்ல, வன்முறை மார்க்கம் என்பதை ஒத்து கொள்கிறீர்களா?
பலவீனப்பட்டவனின் கடைசி ஆயுதம்தான் கோபம். கருத்துக்கு கருத்தால் பதில் சொல்ல முடியாத உங்கள் பலவீனம் ஆயுதத்தை தூக்க சொல்கிறது. அவர் தயாரித்த கேள்விக்கு உங்கள் பக்கம் அதற்க்கான வலிமையான பதில் இருந்தால் எதற்காக ஆயுதத்தை தூக்க வேண்டும். தெருவுக்கு தெரு மார்க்க விளக்க கூட்டங்கள் நடத்தி 'பாருங்கள் நாங்கள் அமைதியை போதிக்கிறோம். வன்முறை எங்களுக்கு பிடிக்காது, எங்களிடம் எல்லா கேள்விக்கும் பதில் இருக்கிறது' என்று கேள்வி பதில் நிகழ்சிகள் எல்லாம் நடத்துகிறீர்கள். ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி விட்டு அதற்கு "எங்களை தூண்டினார்கள் அதனால் செய்தோம்" என்று சப்பை காட்டு காரணங்களை கூறிக்கொண்டு இருக்கிறீர்கள்.

எல்லா மதத்தவரும் இப்படி ஒரு காரணங்களை கூறி கொண்டு வன்முறையில் இறங்கினால் உலகம் முழுவதும் பிணங்களை வைத்துக்கொண்டு தான் ஆட்சி நடத்த வேண்டியது இருக்கும்.

M. George Vincent

Mufliheen said...

முஸ்லிம் சகோதரர்களே, இங்குள்ள புத்தகங்களைப் படித்துப் பாருங்கள்.

http://www.mufliheen.org/Page/Book.aspx