Sunday, November 09, 2014

கூகிள் இணையத்தில் கட்டிய கம்யூனிச எதிர்ப்பு மதில்


Jared Cohen
இன்று பெர்லின் மதில் வீழ்ந்த 25 வருடப் பூர்த்தியை, கூகிள் இணையத்தளமும் கொண்டாடுகின்றது. இதனை சாதாரண விடயமாக கடந்து சென்று விட முடியாது.

கூகிள் உண்மையிலேயே அரசியல் சார்பற்றது என்றால், இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த நவம்பர் 7 புரட்சி நாளன்று, லெனின் அல்லது போல்ஷெவிக் புரட்சியாளர்களின் படத்தை தனது தளத்தின் முன்பக்கத்தில் போட்டிருக்க வேண்டும். எல்லாம் தெரிந்த கூகிள், அதை மட்டும் மறந்து போனது என்று ஒரு நொண்டிச் சாட்டு கூற முடியாது.

கார்ப்பரேட் வணிக நிறுவனங்கள், அமெரிக்க அரசுடன் சேர்ந்து கொண்டு கம்யூனிச எதிர்ப்பு அரசியல் நடத்துவது இன்று வரை தொடர்கின்றது. வணிகத்திற்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கும் அப்பாவிகள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

இந்தப் படத்தில் இருப்பவர், கூகிள் தளத்தை வடிவமைக்கும் பிரிவான Google Ideas நிர்வாகி Jared Cohen. அமெரிக்க இராணுவக் கல்லூரியான West Point Military Academy இல், புதிதாக சேர்ந்த வீரர்களுக்கு விரிவுரை ஆற்றுகின்றார். கூகிள் நிறுவனத்தின் மிகப் பெரிய "சிந்தனையாளரான" Jared Cohen, கிளிண்டன் ஆட்சிக் காலத்தில் அரசு செயலாளர் கொண்டோலீசா ரைசின் ஆலோசகராக இருந்தார். ( https://wikileaks.org/google-is-not-what-it-seems/)

முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள், அமெரிக்க அடிவருடிகளாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் இன்றைக்கும் இணையத்திலும் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சில தமிழ் பேசும் அடிவருடிகளும் அடங்குவார்கள். எல்லாமே பணத்துக்காக. பணம் பத்தும் செய்யும்.

******* 

 இன்றைக்கும் பலர், பெர்லின் மதில் பற்றிய பொய்களை மட்டுமே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு பெர்லினில் இருந்து, மேற்கு பெர்லினுக்கு அகதிகளாக சென்றவர்களைப் பற்றி மட்டுமே, இன்றைக்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், மேற்கு பெர்லினில் இருந்து கிழக்கு பெர்லினுக்கு அகதிகளாக சென்றவர்களை பற்றி எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள்? 


மேற்கு பெர்லினில் பொலிஸ் அடக்குமுறை காரணமாக, பல அனார்க்கிஸ்ட் ஆர்வலர்கள் பெர்லின் மதில் மேல் ஏறிப் பாய்ந்து, கிழக்கு பெர்லினுக்கு சென்று, அகதித் தஞ்சம் கோரினார்கள். அதுவும் 1988 ஆம் ஆண்டு, அதாவது பெர்லின் மதில் விழுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் எதுவும் இந்த தகவல் குறித்து அக்கறைப் படவில்லை. அனார்க்கிஸ்ட்கள் இடதுசாரிகளாக இருந்தாலும், அவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லர். கொள்கை முரண்பாடு கொண்டவர்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

இந்தத் தகவலை உறுதிப் படுத்தும் வீடியோ இணைப்பை இங்கே தருகின்றேன்:
ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு :
தொழிலாளர், விவசாயிகளின் சோஷலிச நாடு.
 

கார்ட்டூன் படம் : உலக சோஷலிசக் குடியரசு (ஆங்கில உப தலைப்புகளுடன்) Socialist World Republic - Sozialistische Weltrepublik

2 comments:

faqirsulthan said...

மே ஒன்று தொழிலாளர் தினத்தன்றும் எந்த லோகோவையும் ஞாபகம் காட்டாத கூகிளை, மே 1 என தேடல் கொடுத்தால் மட்டுமே அது சம்பந்தமான செய்தி கிடைத்ததும் உங்களுக்கு மறந்திருக்காது. பொதுவுடமைக்கு எதிரானது கூகிள் என்பது நிச்சயம்.

வலிப்போக்கன் said...

எம் எஸ் சுப்பு லெட்சுமியை முகப்பில் போடும் கூகுள்...பெரியார் பிறந்த நாளில் அவர் படத்தை முகப்பில் போடவில்லை..பொதுவுடமைக்கு எதிரானது என்பது மட்டுமல்ல...நாத்தீகத்துக்கும் எதிரானதுதான்.