Sunday, December 18, 2011

கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 8]
(எட்டாம் பாகம்)

"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்." என்று சொல்லப் படுகின்றது.
சுப்பிரமணியன்,ஸ்கந்தன், என்று சம்ஸ்கிருத மொழியில் அழைக்கப் பட்டாலும், வட இந்திய இந்துக்களுக்கு முருகன் வழிபாட்டுக்கு உரிய தெய்வமல்ல. வட நாட்டிற்கு மாறாக, தமிழகத்தில் ஊருக்கொரு முருகன் கோயில் காணப் படுகின்றது. அதை வைத்துக் கொண்டு, முருகன் தமிழர்க்கே உரிய தெய்வம் என்ற முடிவுக்கு அவ்வளவு எளிதில் வந்து விட முடியாது. அது எந்தளவிற்கு சரியானது?

முருகன் வழிபாடு தமிழகத்திற்கு மட்டுமே உரிமையானதல்ல. பிற திராவிட இனங்களான மலையாளிகள், கன்னடர், தெலுங்கர்கள் கூட முருகக் கடவுளை வழிபடுகின்றனர். (http://en.wikipedia.org/wiki/Murugan) இலங்கையில், ஈழத் தமிழர் மட்டுமல்லாது, சிங்களவர்களும் முருகனை தமது விருப்பத்திற்கு உரிய தெய்வமாக கருதுகின்றனர். ஆகவே, முருகன் ஒரு "தமிழ்க் கடவுள்" என்பதற்கு அப்பால், "திராவிடக் கடவுள்" என்று வரையறுக்கலாமா? அது கூட அத்தனை சுலபமானதல்ல. கம்போடியா, வியட்நாம் ஆகிய தூர கிழக்காசிய நாடுகளில், பௌத்த மதத்தின் வருகைக்கு முன்னர் முருக வழிபாடு நிலவியது. அங்கெல்லாம், கைவிடப் பட்ட கோயில் கல்வெட்டுகளில் முருகனின் உருவம் தெளிவாகத் தெரிகின்றது. அதற்கும் அப்பால்? "இந்துக்களின் தாயகமான" சீனா, திபெத் ஆகிய நாடுகளில்? மத்திய கிழக்கு நாடுகளில்? முருகனுக்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் என்ன தொடர்பு?

வட சீன மாநிலமான மஞ்சூரியாவில், ஒரு குகைக்குள் இருந்து பண்டைய கால ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. பௌத்த மதத்தின் வருகைக்கு முந்திய, புராதன சீன மக்களின் தெய்வங்கள் அவை. அவற்றில் ஒரு தெய்வம், ஆறு முகத்துடன், மயிலுடன் காணப் பட்டது. அதைக் கண்ட அகழ்வாராய்ச்சியாளர்கள் சிலருக்கு, மயிலை வாகனமாகக் கொண்ட ஆறுமுகக் கடவுள் நினைவுக்கு வந்தார். ஆயினும், அந்த உருவம் சீனக் கடவுளான மஞ்சுசிறி உடையது. (பார்க்கவும் :
An Illustration of Iconographic Contact between Karttikeya and Manjusri in China) மஞ்சு சிறிக் கடவுள் இன்றைய சீனர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். இருப்பினும், நமக்குத் தெரிந்த முருகனின் உருவத்துடன் ஒத்துப் போகவில்லை. மஞ்சு சிறி தெய்வத்தைப் பற்றிய கதைகளும், முருகனைப் பற்றிய புராணக் கதைகளுடன் ஒத்துப் போகவில்லை. ஆனால், திபெத்தில் நிலவும் மஞ்சு சிறி பற்றிய கதை ஒன்று, நமது புருவத்தை உயர்த்த வைக்கும்.

திபெத்திய பௌத்த மதமானது, இந்தியாவின் தாந்திரிய மதக் கூறுகளை உள்வாங்கியுள்ளது என்பதை முன்னர் பார்த்தோம். அது இன்றைக்கும், சாமிப் படங்களாக, மங்கள சின்னங்களாக, புராணக் கதைகளாக நிலைத்து நிற்கின்றது. மஞ்சு சிறிக் கடவுள் பற்றிய புராணக் கதை ஒன்று, சூர சம்ஹாரத்தை நினைவு படுத்துகின்றது. ஆனால், திபெத்தில் சூரனின் இடத்தில் யமனை வைத்து சொல்லப் படுகின்றது. யமன் என்ற மரண தேவதை, இந்து சமயத்தில் மட்டுமே காணப்படும் சிறப்பம்சமல்ல. சீனாவிலும், ஈரானிலும், "மனிதர்கள் இறந்த பின்னர் தீர்ப்பு வழங்கும் யம தர்மன்" பற்றிய நம்பிக்கை நிலவுகின்றது. அந்த நாடுகளில், யமனுக்கு எதிரான போரை, தத்துவார்த்த அடிப்படையில் இருந்தே நோக்கினார்கள். இந்திய உப கண்டத்தை ஆண்ட ஆரியர்கள், அந்தக் கதையை தமது அரசியல் நலன்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தியாவில் ஒரு பகுதியை ஆண்ட சூரன் என்ற அரசனை அழித்த கதையை சூர சம்ஹாரம் என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அவ்வாறு சூரனை அழித்த ஆரியக் கடவுளான சுப்பிரமனியனும், முருகனும் ஒருவரா?

அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன. உலக வரலாறு நெடுகிலும், ஆக்கிரமிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் யுக்தி அது. அண்மைய உதாரணத்திற்கு, லத்தீன் அமெரிக்காவை எடுத்துக் கொள்ளலாம்.

பூர்வீக மக்களான செவ்விந்தியரின் கடவுளரும், வழிபாட்டு முறைகளும் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தினால் உள்வாங்கப் பட்டன. இன்றைக்கும் அந்த நாடுகளில் நடைபெறும் மத வழிபாட்டு விழாக்களில் அதனை அவதானிக்கலாம். தென்னிந்தியாவிலும் அது போன்றே, தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் உணர்வதில்லை. ஆரியரின் கலாச்சார ஆதிக்கம் எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்பதற்கு, இது ஒரு சான்றாகும்.

தமிழில் உள்ள, முருகன், வள்ளிக் கதையானது, குறவர்கள் போன்ற பழங்குடி இனத்தவருக்கு உரியதாகத் தெரிகின்றது. இன்றைய "நாகரீகமடைந்த தமிழர்கள்", குறவர்கள் போன்ற "நாகரீகமடையாத" பழங்குடியினரை தமது மூதாதையர் என்று சொல்லிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். "குறவர்களின் தெய்வமான முருகனை கடவுளாக கும்பிடுவோம். ஆனால் குறவர்களை சக மனிதர்களாக மதிக்காமல் ஒதுக்கி வைப்போம். ஏனென்றால் நாங்கள் நாகரீகமடைந்து விட்டோம்."

முருகனை தமிழ்க் கடவுள் என்று அழைக்கலாம் என்றால், முருகனை "குறக் கடவுள்" என்றும் அழைக்கலாம் அல்லவா? இவ்விரண்டு எடுகோள்களும் சரியானவை அல்ல. உண்மையில், தமிழ்ப் பழங்குடி இனங்கள் முருகன் வழிபாட்டை கைவிடாமல் காப்பாற்றி வந்துள்ளன. இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில் முருகன், வள்ளி போன்ற பெயர்கள் பிரபலமாக உள்ளன. உயர் சாதியினர், அதற்கு மாறாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன் என்று சமஸ்கிருதப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர். நமது காலத்தில் உள்ள ஆங்கில மோகம் போன்று, பல நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள், சம்ஸ்கிருத மோகம் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை. அன்றிருந்த வசதி படைத்த பிரிவினர், ஆக்கிரமிப்பாளர்களின் கலாச்சாரத்தை விரும்பி ஏற்றிருந்தனர்.

சைவ சித்தாந்த மதத்தை வளர்த்த நாயன்மார்களும், சமஸ்கிருதமயப் பட்டிருந்ததை காணக் கூடியதாக உள்ளது. முருகக் கடவுளுக்காக இயற்றப் பட்ட பக்திப் பாடல்கள் எல்லாம், "கந்தர் அலங்காரம், கந்த சஷ்டிக் கவசம்" போன்ற பெயர்களில் உள்ளன. சுப்பிரமணியன் என்பதை விட, கந்தன் என்பது முருகனுக்கு நெருக்கமான பெயர். (முருகன் என்பதும் சமஸ்கிருதப் பெயராக இருக்கலாம். இது குறித்து பின்னர் பார்ப்போம்.) ஆச்சரியப் படத் தக்கவாறு, "ஸ்கந்தன்" என்ற பெயர் இந்து மதத்தில் மட்டும் அறியப் பட்ட ஒன்றல்ல.

பௌத்த மதத்திலும் ஸ்கந்தன் என்ற பெயர் வருகின்றது. ஆனால், பௌத்த மதம் புத்தரை முதன்மைப் படுத்தியதால், ஸ்கந்தனை காவல் தெய்வமாக தரம் தாழ்த்தி விட்டது. இன்றைக்கும், இலங்கையில் உள்ள புராதன பௌத்த விகாரைகளை
பார்வையிடும் ஒருவர், காவல்தெய்வமான ஸ்கந்தன் சிற்பத்தை நேரில் காணலாம். சீனாவிலும், பௌத்த கோயில்களின் முன்பு ஸ்கந்தன் சிலைகள் காணப் படுகின்றன. சில அறிஞர்கள், ஸ்கந்தன் என்ற சொல்லை, கந்தா என்ற பௌத்த தத்துவத்துடன் சேர்த்துப் பார்க்கின்றனர். சமஸ்கிருதத்தில் ஸ்கந்தா, அல்லது பாளி மொழியில் கந்தா என்பது, மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்கள், வேதனைகளின் தொகுப்பு பற்றிய தத்துவம் ஆகும்.

இந்த இடத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்பை சேர்க்க வேண்டியுள்ளது. சரித்திரத்தில் ஆரியர்களின் படையெடுப்பு நடக்கவில்லை என்று வாதிக்கும் அறிஞர்கள், சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட வேதங்களை அதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். சம்ஸ்கிருத மொழியும், தேவநாகிரி எழுத்து வடிவமும் இந்தியாவுக்கு உரியது என்பது உண்மை தான். ஆனால், சமஸ்கிருதத்திற்கு முன்னரும், பழமையான மொழிகள் இந்தியாவில் இருந்துள்ளன. பிராமி, பாளி, சமஸ்கிருதம், தமிழ் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு தனித்து ஆராயப் பட வேண்டியது. இத்தகைய பொதுவான சர்வதேச மொழிகளின் ஊடாகத் தான், மதங்களும், தத்துவங்களும் பரவியுள்ளன. இல்லாவிட்டால், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத மொழிகளைப் பேசும், சீனர்களும், தமிழர்களும் எவ்வாறு கலந்துரையாடி இருப்பார்கள்? சித்த வைத்திய அறிவியலை கற்றுக் கொள்வதற்காக இலங்கை வந்த சீன தேச அகத்தியரும், தமிழ்க் கடவுளான முருகனும் எந்த மொழியில் பேசியிருப்பார்கள்?

அகத்தியர் ஒரு ஆரிய உளவாளி என்று கருதப் படுகின்றது. உளவாளிகள் சேகரிக்கும் தகவல்கள் சில நேரம், உலக ஒழுங்கை மாற்றியமைக்கின்றன. கடல் கொண்ட பாண்டிய நாட்டில் நிலவிய முருக வழிபாடு, அகத்தியர் உதவியால் இன்றைய தமிழகத்தின் பொதிகை மலையில் மீளுயிர்ப்பு கண்டது. திருவள்ளுவர் என்பது ஒருவரைக் குறிக்குமா, என்ற சர்ச்சை போன்று தான், அகத்தியர்கள் பலராக இருக்கலாம் என்று கருதப் படுகின்றது. அதாவது, பண்டைய காலங்களில், சீனாவில் இருந்து வருகை தந்த அறிஞர் பெருமக்கள் எல்லோரும், பிற்காலத்தில் அகத்தியர் என்று ஒரு நபராக கருதப் பட்டிருக்கலாம். சித்த மருத்துவம் மட்டுமல்ல, வான சாஸ்திரம் போன்ற பிற அறிவியல் துறைகளிலும், சீனர்-தமிழர் கூட்டுறவு இருந்துள்ளது. முருகனின் பூர்வீகத்தை பற்றிய இரகசியம் அதனை நிரூபிக்கின்றது.

முருகன் என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லா, அல்லது பழந்தமிழரின் அறிவியல் கண்டுபிடிப்பா? தமிழர்கள் மட்டுமல்லாது, உலகின் பிற பாகங்களில் வாழ்ந்த மக்களும் முருகனை வழிபட்டனரா? யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் தோற்றத்திற்கு முன்னர், மத்திய கிழக்கு நாடுகளில் முருக வழிபாடு பரவியிருந்ததா? அப்படியானால், பண்டைய நாகரீகங்களில் முருக வழிபாடு பல்வேறுபட்ட இனங்களுக்கு பொதுவான மதமாக இருந்துள்ளதா? உலகில் மறைந்து போன நாகரீகத்திற்கும், முருகனுக்கும் தொடர்புண்டா? முருகக் கடவுளின் பூர்வீகம் என்ன? எங்கே உள்ளது?

சர்வதேசியத்தை கொள்கையாக வரித்துக் கொண்ட பண்டைத் தமிழன் உலகம் போற்ற வாழ்ந்தான். இனத் தேசியவாதத்தால் மதி மயங்கிய இன்றைய தமிழன், இழி நிலைக்கு தள்ளப் பட்டான். முருகன் தமிழ் இனத்திற்கு மட்டுமே சொந்தமான கடவுள் அல்ல. மாறாக, தமிழ் சர்வதேசியவாதிகளுக்கு உரிமையான கடவுள்.

(தொடரும்)


மேலதிக தகவல்களுக்கு:
Murugan
Skanda
Manjusri
An Illustration of Iconographic Contact between Karttikeya and Manjusri in China
--------------------------------------------------------

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !

12 comments:

தர்ஷன் said...

ஆதாரங்களோடு தகவல்களை தந்திருக்கும் உங்கள் தேடல் பிரமிக்க வைக்கிறது. தொடருங்கள்

சீனு said...

//இனத் தேசியவாதத்தால் மதி மயங்கிய இன்றைய தமிழன், இழி நிலைக்கு தள்ளப் பட்டான்.//

நல்லா புள்ள பிடிக்கறீங்க...

ஆதித்த கரிகாலன் said...

முருக வழிபாட்டிற்கு ஒத்ததாக சில ஆப்ரிக்க நாடுகளில் வழிபாடுகள் மேற்கொள்வதாக சொல்கின்றார்கள்.

muthukumaran said...

கலை, அருமையான பதிவு. இத்தனை நாள் உங்கள் பதிவுகளை வாசிக்கததற்க்காக வருந்துகிறேன்..

Dhilee said...

வித்தயாசமான அணுகுமுறை................என்னை வியக்க வைக்கிறது.............நீங்கள் உங்கள் ஆராய்ச்சிக்காக எங்கிருந்து தகவல்களை பெறுகிறீர்கள்....இணையமா ??? இல்லை பண்டைய புத்தகங்களா ???

Kalaiyarasan said...

//வித்தயாசமான அணுகுமுறை................என்னை வியக்க வைக்கிறது.............நீங்கள் உங்கள் ஆராய்ச்சிக்காக எங்கிருந்து தகவல்களை பெறுகிறீர்கள்....இணையமா ??? இல்லை பண்டைய புத்தகங்களா ??? //

தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு இருக்கிறேன். பாடசாலையில் தமிழ் இலக்கியம், மற்றும் சமயக் கல்வி கற்ற காலத்தில், அவற்றில் சொல்லப்படாத செய்திகள் மறைந்திருப்பதாக தோன்றியது. எனது மாறுபட்ட பார்வை பலருக்கு புரியவில்லை. வித்தியாசமான கோணத்தில் சிந்தித்தேன், ஆனால் அவற்றை நிரூபிக்க முடியவில்லை. பிற்காலத்தில், பல புத்தகங்களில் தேடிப் படித்தேன், பல நாட்டவரிடம் கேட்டு அறிந்தேன். ஏற்கனவே சில அடிப்படைத் தகவல்களை சேகரித்து வைத்திருந்தாலும், மேலதிகமான தேடலை இணையத்தில் நடத்தினேன்.

Natraj said...

மிகவும் அழகாக ஆதாரத்தோடு எழுதுகிறீர்கள் . பிரமிப்பாக இருக்கிறது . வாழ்த்துக்கள்

Unknown said...

உலகம் முழுவதும் தமிழன் வாழ்ந்து வந்தான் தமிழரின் வனிகம் உலகம் முழுவதும்
(சீனா மற்றும் அரேபியா முழுவதும் பரவி இருந்தது) இதற்கு சான்றாக அமைகிறது முருகனை வழிபாடு செய்து கொண்டு வனிகம் செய்துள்ளான்

பார்த்தி said...

"குறவர்களின் தெய்வமான முருகனை கடவுளாக கும்பிடுவோம். ஆனால் குறவர்களை சக மனிதர்களாக மதிக்காமல் ஒதுக்கி வைப்போம். ஏனென்றால் நாங்கள் நாகரீகமடைந்து விட்டோம்."

அப்பிடிப் போடுங்கோ அரிவாள.
(அரிவாளிலும் பார்க்க கூர்மையான வரிகள்)

Natrajan said...

அந்த முருகனுக்கே வெளிச்சம்.. அடக்கடவுளே இப்படியா பேதங்கள் பார்ப்பது.. கலிகாலம்..

Unknown said...

சிவனின் காலம், கிமு 20 ஆயிரம் ஆண்டுகள். முருகன் முந்தை யுகத்தின் பாண்டிய மன்னன்... முருகனின் காலம் கிமு 8 ஆயிரம் ஆண்டுகள்...முருகன் குறவரே.. மலைக்குறவர், குறவர், மறையர், மறையோர், பறையர் அனைவரும் மலைப்பிரதேச சித்தர்களே... இதில் மறையோர் மற்றும் மறையர்கள் மருவி, குறவர் ஆகியது.. குயிலின் கூ என்ற ஒலியில் இருந்து, கூறு உருவாகியது.. கூறுபவன் குரு.. குரு பின்னாளில் குறவர் ஆகியது.. சிவன் ஒரு பறையரே... உலகத்தில் இரும்பை கண்டுபிடித்தவரும், பறையை உருவாக்கி இசையை அறிமுகப்படுத்தியதும், நடன கலையை அறிமுகப்படுத்தியவரும், விண் ஞானம் பெற்று, அண்ட பெருவெடிப்பை நடராஜரின் உருவகமாக விளக்கியவரும் என எண்முக பன்புடையவராதலால், அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு என்று, தனது மூத்த சித்தருக்கு சிறப்பு சேர்த்த வள்ளுவரும் சித்தரே...

Seevalapperi said...

குறிஞ்சி நில வேடுவர்களின் தலைவன் முருகன்,
அவன் குறவன்டா