Monday, December 07, 2009

ஏதென்ஸ் நகரம் மீண்டும் எரிகின்றது

6 December 2009, கடந்த வருடம் கிறீஸ் பொலிஸ், தெருவில் நின்ற இடதுசாரி அமைப்பின் ஆதரவாளரான சிறுவனை சுட்டுக் கொன்றனர். அந்தக் கொலை பாதுகாப்புப் படையினருக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு வித்திட்டது. கிரேக்க மக்கள் எழுச்சியின் ஓராண்டு நினைவுதினமான இன்று மீண்டும் கலவரம் மூண்டது. பத்தாயிரத்துக்குமதிகமானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், கலகத் தடுப்பு பொலிசாருக்கு எதிரான கல்வீச்சு என்பனவற்றால் ஏதென்ஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்தது. ஏதென்ஸ் தொழில்நுட்ப கல்லூரியை புரட்சிகர மாணவர்கள் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கின்றனர். கல்லூரியை சுற்றி பொலிஸ் முற்றுகையிட்டுள்ளது. இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மிகுதியை இங்கே இணைக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோவையும் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

2 comments:

sivaguru said...

கலையரங்கம் மிக சிறந்த தகவல் களஞ்சியம். கலையரசன் எல்லாதில்லும் இறங்கி எல்லோருக்கும் நல்ல தகவல்களையும் தரவுகளையும் தருகிறார் வாழ்த்துவோம், எம்வட்டத்தை இன்னும் இன்னும் பெரிதாக்குவோம்

நன்றி கலை உங்கள் சேவை எல்லோர்க்கும் தேவை .....வாழ்க ....