Wednesday, July 19, 2017

இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்


("தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"
பகுதி : இரண்டு)
"பைபிளை ஆதாரமாக கொண்டு இஸ்ரேலியர்கள் 2000 ஆண்டுக்கு முன்னர் இழந்த தேசத்தை உரிமை கோருகிறார்கள்." கவனிக்கவும்: "ஆதாரம்", ஒரு மத நூலான பைபிள். இந்த வாதம் அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. இராமாயணத்தை ஆதாரமாக கொண்டு இந்துத்துவவாதிகள் இராமர் அணைக்கும், பாபர் மசூதிக்கும் உரிமை கோருகின்றனர். மகாவம்சத்தை ஆதாரமாக கொண்டு பௌத்த-சிங்கள அடிப்படைவாதிகள், முழு இலங்கைக்கும் உரிமை கோருகின்றனர். விஞ்ஞானம், மெய்ஞானம் வளர்ச்சியடைந்த 21 ம் நூற்றாண்டிலும், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய புராணங்களை ஆதாரமாக அடுக்குகிறார்கள். இதை எல்லாம் இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கும் "தமிழ் சியோனிஸ்ட்கள்" ஏற்றுக் கொள்கிறார்களா?

விவிலிய நூலில் வரும் டேவிட் மன்னன் ஸ்தாபித்த ராஜ்ஜியம் பின்னர் இஸ்ரேல், ஜுதேயா என இரண்டாக உடைந்தது. யூதர்கள் என்றால், யூதேயா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் பொருள்படும். பாபிலோனியர்களின் படையெடுப்பின் பின்னர் அந்த ராஜ்ஜியம் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டது. யூதர்களின் தேசம் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதையிட்டு விவிலிய நூல் என்ன கூறுகின்றது? "பாபிலோனியர்கள் இஸ்ரேலியர்களை எழுபது ஆண்டுகள் அடிமைகளாக வைத்திருப்பார்கள்," என்று ஆண்டவர் ஜோசுவா என்ற தீர்க்கதரிசிக்கு அருள்வாக்கு வழங்கினார். இஸ்ரேலியர்களின் தீய செயல்களுக்கு தண்டனையாக ஆண்டவர் பாபிலோனியர்களை படையெடுக்க வைப்பார் என்று ஜோசுவாவின் தீர்க்கதரிசனத்தில் எழுதப்பட்டுள்ளது. “இஸ்ரேலியர்கள் ஓரிறைக் கொள்கையை மறந்து பல தெய்வங்களை வழிபட்டது, யூதர்களின் கடவுளால் பொறுக்க முடியாத குற்றம்.” இத்தால் விவிலிய நூல் கூறும் நீதிமொழி என்னவெனில், யூதர்கள் அகதிகளாக உலகம் முழுக்க அலைய நேரிட்டதற்கு அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும்.

சியோனிச அரசியல் ஆதரவாளர்கள் 3000 ஆண்டுகளுக்கு முந்திய பைபிள் கதைகளை வைத்து இஸ்ரேலுக்கு உரிமை கோரவில்லை. அவர்களைப் பொறுத்த வரை, கடைசி இஸ்ரேலிய அரசு, ரோமர்களால் தூக்கியெறியப் பட்டது. 1900 அல்லது 2000 வருடங்களுக்கு முன்னர் அது நடந்தது. அந்த கால கட்டத்தில் நடந்த சம்பவங்களை ரோம, கிரேக்க சரித்திர ஆசிரியர்கள் குறித்து வைத்துள்ளனர். அந்த குறிப்புகளில் இருந்து மக்கபீ என்ற யூத அரசு (கி.மு.164 -63 ) இருந்துள்ளமை நமக்குத் தெரிய வருகின்றது. யார் இந்த மக்காபீ? சுருக்கமாக சொன்னால். அந்தக் கால "யூத தாலிபான்கள்"! இஸ்ரேலில் மக்காபீக்களின் ஆட்சிக்கும், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு ஆட்சியாளர்களும் தமது மத சட்டங்களை கடுமையாக அமுல் படுத்தினார்கள். ஒவ்வொரு பிரஜையும் மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க காவலர்களை நியமித்தார்கள். மதச்சார்பற்றவர்களும், பிற மதத்தவர்களும் ஒன்றில் கொல்லப்பட்டார்கள், அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். தாலிபான்கள் புத்தர் சிலைகளை தகர்த்தனர், மக்காபீக்கள் கிரேக்க மதக் கடவுள் சிலைகளை உடைத்தார்கள்.

மக்காபீக்கள் தமது வரலாற்றை நூல்களாக(Books of the Maccabees) எழுதி வைத்துள்ளனர். அவற்றில் இருந்து மக்காபீ தலைமையிலான யூதர்களின் எழுச்சிக்கு காரணம், மத அடிப்படைவாதம் என்பது தெட்டத் தெளிவாகின்றது. மாசிடோனியா சக்கரவர்த்தி அலெக்சாண்டர் ஆசியா முழுவதையும் தனது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தான். யூதர்களின் நாடும் அதில் அடக்கம். அலெக்சாண்டரின் மரணத்தின் பின்னர், அவன் தளபதிகள் சாம்ராஜ்யத்தை தமக்குள் பங்கு போட்டுக் கொண்டனர். யூதர்கள் செலியுசிட் என்ற புதிய ராஜ்யத்தின் கீழ் வந்தார்கள். செலியுசிட் ராஜ்யத்தை ஆண்டவர்கள் கிரேக்கர்கள். (அலெக்சாண்டரும் ஒரு கிரேக்கன் தான்) அவர்கள் செயுஸ் போன்ற தமது மதக் கடவுள்களுக்கு ஆலயங்களை கட்டினார்கள். கிரேக்க மதமே அரச மதமாக இருந்தது.

கிரேக்க செலியுசிட் ஆட்சிக் காலத்தில் யூத சமூகம் இரண்டாகப் பிரிந்திருந்தது. (யூதர்கள் ஒற்றுமையானவர்கள் என்ற கட்டுக்கதைகளை கேள்விப்பட்டவர்கள் கவனிக்கவும்.) நகரங்களில் வாழ்ந்த படித்த யூதர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். கிரேக்க கலாச்சாரத்தை பின்பற்றினார்கள். நிர்வாகத்துறையில் கிடைத்த பதவிகளுக்காகவும், வசதி வாய்ப்புகளுக்காகவும் அவ்வாறு நடந்து கொண்டனர். இன்றைக்கும் நமது சமூகத்தில் ஆங்கிலத்தில் பேசி, ஐரோப்பிய கலாச்சாரத்தில் வாழும் ஒரு பிரிவு இருக்கிறதல்லவா? அது போலத் தான் இதுவும். நமது நாடுகளில் அவ்வாறானவர்கள் மெல்ல மெல்ல கிறிஸ்தவ மதத்தை தழுவியதைப் போலவே, அன்றைய யூதர்கள் பலர் கிரேக்க கடவுள்களை வழிபட்டும் வந்துள்ளனர்.

ஜெருசலேம் நகரில் யூதர்களின் பெரிய ஆலயம் அமைந்திருந்தது. அந்த ஆலயத்தின் தலைமை மதகுருவை கத்தோலிக்கர்களின் பாப்பரசரோடு ஒப்பிடலாம். அந்த அளவுக்கு யூதர்கள் ஆனவர் மீது செல்வாக்கு செலுத்தக் கூடிய ஒருவர். மேலும் ஒவ்வொரு யூதனும் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அந்த ஆலயத்திற்கு நிதி வழங்க வேண்டும். இந்தியாவின் திருப்பதி கோயில் போல, ஜெருசலேம் ஆலயமும் அன்று "பணக்கார ஆலயம்" என்று அழைக்கப்பட்டது. இது போன்ற காரணங்களால், கிரேக்க ஆதரவு யூதர்கள் ஜெருசலேம் ஆலயத்தின் தலமைப் பதவிக்காக போட்டியிட்டனர். ஒரு கட்டத்தில் கிரேக்க மன்னனுக்கு லஞ்சம் கொடுத்தேனும் அந்தப் பதவியைப் பெற முடிந்தது. இதனால் பழமைவாத யூதர்கள் அதிருப்தியுற்றனர். பழமைவாத யூதர்கள் கிளர்ச்சி செய்தனர். கிரேக்க மன்னன் Antiochus IV, பெரும்படை அனுப்பி அந்தக் கிளர்ச்சியை அடக்கினான்.

கிரேக்கமயப்பட்ட யூதர்களும் அதற்கு ஒத்துழைத்தனர். ஜெருசலேம் ஆலயம் சூறையாடப்பட்ட சம்பவத்தில் அவர்களும் ஈடுபட்டனர். யூதர்கள் எவ்வாறு யூதக் கோயிலை உடைத்தார்கள் என்று ஆச்சரியப்படலாம். பிரெஞ்சுப் புரட்சியில் கிறிஸ்தவ தேவாலயங்கள் உடைக்கப்படவில்லையா? லூதரின் புரட்டஸ்தாந்து எழுச்சியின் போது கத்தோலிக்க தேவாலயங்களை உடைக்கவில்லையா? அப்படியானவர்கள் தம்மை முற்போக்கானவர்கள் என்று கருதிக் கொள்கிறார்கள். கடும்போக்கு மதவாதிகளை பழமைவாதிகளாக கருதி வெறுக்கிறார்கள். (From the Maccabees to the Mishnah)

மொடைன் என்ற கிராமத்தில் நடந்த அசம்பாவிதம் யூதர்களின் புனிதப்போருக்கான தூண்டுதலாக அமைந்தது. கிரேக்க அதிகாரிகள் அந்த கிராமத்தின் யூத மதகுருவான மத்ததியாசை அழைத்து, கிரேக்க முதற்கடவுள் செயுசுக்கு பூஜை செய்ய உத்தரவிட்டனர். மத்ததியாஸ் மறுக்கவே, இன்னொரு யூதர் முன்வந்து பூஜையை நடத்தினார். யூத மதம் தவிர்ந்த பிற தெய்வங்களுக்கு பூஜை செய்த குற்றத்திற்காக, அவரை மத்ததியாஸ் அந்த இடத்திலேயே படுகொலை செய்தார். படுகொலைச் சம்பவத்தை தொடர்ந்து தனது மகன்மாருடன் பாலைவனத்திற்கு சென்று ஒளிந்து கொண்ட மத்ததியாஸ், (யூதர்களின்) புனிதப்போரை பிரகடனம் செய்தார். புனித நூலான தோரா வை பின்பற்றுவோர் அனைவரும் தான் பின்னால் அணிதிரளுமாறு அறைகூவல் விடுத்தார். வரலாற்றில் அது மக்காபீக்களின் எழுச்சி என அழைக்கப்படுகின்றது. கெரில்லாப் போராட்டம் மூலம் கிரேக்கர்களின் ஆதிக்கத்தில் இருந்து ஜெருசலேமை விடுவித்தனர்.(Maccabees, the revolt)

இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுள்ளது. மக்காபீக்களின் ஆட்சி மன்னராட்சி அல்ல. அது ஒரு யூத தேசிய குடியரசும் அல்ல. மாறாக, ஆப்கானிஸ்தானில், ஈரானில் இருந்ததைப் போல மதத்தின் ஆட்சி. நாட்டின் தலைவர்களாக ஆட்சி செய்தவர்கள் அனைவரும் மதகுருக்கள். ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் இஸ்ரேலியரிடம் இருந்து எதையாவது கற்றுக் கொண்டிருந்தால், அது மக்காபீக்களின் வரலாறாக இருந்திருக்கும். தாலிபான் தலைவர் முல்லா ஒமார் கூட மத்ததியாஸ் போல ஒரு கிராமிய மதகுரு என்பதும், மக்காபீக்கள் போல தாலிபான்களும் புனித நூலான குரானை பின்பற்றியவர்கள் என்பது ஆச்சரியமான ஒற்றுமைகள்.

இருபதாம் நூற்றாண்டில், மதத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட இரு தேசிய அரசுகள் தோன்றின. ஒன்று, இஸ்ரேல். மற்றது, பாகிஸ்தான். இரண்டுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. மக்கள் பல மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தார்கள். அனைத்து பிரஜைகளும் தேசிய மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரு புதிய மொழியை கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் உருது, இஸ்ரேலில் ஹீபுரு. இரண்டுமே வெளியில் இருந்து இறக்குமதியான மொழிகள் தாம். அனைவரையும் இணைக்கும் ஒரே மதம் மட்டும் இல்லையென்றால், பாகிஸ்தானும், இஸ்ரேலும் எப்போதோ துண்டு, துண்டாகி இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அத்தகைய மதத்-தேசிய அரசு, நவீன மத அடிப்படைவாதிகள் உருவாகும் விளைநிலமாக உள்ளது.
(தொடரும்)

33 comments:

Anonymous said...

//விவிலிய நூல் கூறும் நீதிமொழி என்னவெனில், யூதர்கள் அகதிகளாக உலகம் முழுக்க அலைய நேரிட்டதற்கு அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும்.//

அதே விவிலிய நூல் யூதர்கள் மீண்டும் தாயகத்திற்கு திரும்பி வருவார்கள் என்றுள்ளதே. வாசிக்கவில்லையா?

Anonymous said...

//"தமிழ் சியோனிஸ்ட்கள்"//

உங்களிடம் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு இதுதான். உங்களுக்கு வெறுப்பு என்றால் அல்லது கருத்து பிடிக்கவில்லை என்றால் ஒரு பட்டப்பெயரை சூட்டிவிடுவது! அதன் மூலம் மற்றவரை மகா மோசமாக விமர்சிப்பது. நாங்களும் உங்களுக்கு திருப்பியடித்தால் எப்படியிருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள்.

Anonymous said...

//பைபிளை ஆதாரமாக கொண்டு இஸ்ரேலியர்கள் 2000 ஆண்டுக்கு முன்னர் இழந்த தேசத்தை உரிமை கோருகிறார்கள்.//


தமிழீழம் போர்த்துக்கேயரிடம் இழந்த தமிழரசை உரிமை கோரவில்லையா?

Anonymous said...

//யூத தாலிபான்கள்//

கலையகத்தின் கையாலாகத்தனத்திற்கான இன்னுமொரு பட்டப்பெயர். சொற்களின் அர்த்தம் புரியாமல் சொற்களை கையாளுவதில் அலாதி பிரியம். ஹிட்ரின் யூத எதிர்ப்பு பிரச்சாரமோ கலையகம் என்று எண்ணத்தோன்றுகிறது.

Anonymous said...

//யூதர்கள் ஒற்றுமையானவர்கள் என்ற கட்டுக்கதைகளை கேள்விப்பட்டவர்கள் கவனிக்கவும்//

இது ஒன்றும் பெரியவிடயமல்ல. எல்லா இனத்திலும் பிரிவினைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழர்களிடம் இல்லாதவர்களைவிடவா?

Anonymous said...

//இஸ்ரேலில் ஹீபுரு. இரண்டுமே வெளியில் இருந்து இறக்குமதியான மொழிகள் தாம்.//

ஹீபுரு எங்கேயிருந்து இறக்குமதியானது? 4000 வருடங்களுக்கு மேலான பழமை கொண்ட ஹீபுருவில்தான் தோரா (பழைய ஏற்பாடு) எழுதப்பட்டது. உலகின் பழமையான மொழிகளில் இதுவும் ஒன்று. செம்மொழியும் கூட.

தமிழ்க்காதலன் said...

நல்லதொரு வரலாற்று அலசல் செய்திருக்கிறீர்கள். நல்ல முயற்சி. தொடருங்கள். வாழ்த்துக்கள். வாருங்கள்....
( ithayasaaral.blogspot.com )

Indian said...

//தாலிபான்களும் புனித நூலான குரானை பின்பற்றியவர்கள்//

//தாலிபான்கள் புத்தர் சிலைகளை தர்த்தனர்//

குர்ஆன் புனித நூல் என்று உங்கள் எழுத்தே கூறிப்பிடுகிறது. அதே புனித குர்ஆன் சொரூபங்களை அழிக்கச் சொல்கிறது, அதை தலிபான்கள் செய்ததில் தவறென்ன? ஆப்காணிஸ்தான் முஸ்லிம்களைக் கொண்ட நாடு. அங்கே புத்தர் சிலைகளுக்கு என்ன தேவை?

Kousalya Raj said...

தெரியாத வரலாற்று தகவல்கள்.....தெளிவாக தெரிந்து கொண்டேன். நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

// அனைவரையும் இணைக்கும் ஒரே மதம் மட்டும் இல்லையென்றால், பாகிஸ்தானும், இஸ்ரேலும் எப்போதோ துண்டு

//

அண்ணா, மதம் என்றும் ஒரு சமூகத்தை தொடர்ந்து ஒருங்கிணைக்க முடியாது. மத அடிப்படையில் இணைந்த பாக்கிஸ்தானும் பின்னர் மொழி அடிப்படையில் பாக்கிஸ்தான்,வங்கதேசம் என இரண்டாகப் பிளவுபட்டதே!!

மொழியால் மட்டுமே ஒரு சமூகத்தை என்றும் ஒருங்கிணைக்க முடியும்.

எம்.எம்.அப்துல்லா said...

// ஆப்காணிஸ்தான் முஸ்லிம்களைக் கொண்ட நாடு. அங்கே புத்தர் சிலைகளுக்கு என்ன தேவை

//

இஸ்லாம் தொடங்கிய காலத்தில் இருந்தே ஆப்கான் முழு இஸ்லாம் தேசமாக இருந்திருந்தால் அங்கு புத்தர் சிலைகள் இருந்திருக்காதே??? இஸ்லாமியர்களுக்கு முன்னரோ அல்லது இஸ்லாமியர்களோடு இணைந்தோ புத்த மதத்தவர் அந்தப் பகுதியில் இருந்ததால்தான் அந்த மலைப்பகுதியில் புத்தர் சிலைகள் இருந்தன. அதை வணங்க வேண்டிய அவசியம் இல்லை.அதே நேரத்தில் அதை உடைக்க வேண்டிய அவசியமும் இல்லை.இஸ்லாம் கூறும் சகிப்புத்தன்மையை அறியாத முட்டாள்களின் செயல் அது. பாபர் மசூதியை ஆர்.எஸ்.எஸ் உடைத்தது தவறு என்பதை நாம் ஏற்றுக்கொண்டால் தலிபான்கள் செய்ததும் தவறு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மார்கண்டேயன் said...

வாழ்த்துகள், கலையரசன், புதிய தகவல்கள், புதிய பரிமாணங்கள்
உங்களின் சிந்தனையை வரவேற்கிறேன் அப்துல்லாஹ்,
நேரமிருந்தால் என் வலயகத்திர்க்கும் வாருங்களேன் . . .

Massy spl France. said...

அருமையான பதிவு. பல வரலாற்று செய்திகள் அறிந்துகொண்டேன்.

அனானியாக பதிலளித்திருக்கும் அன்பர் தான் எந்த வர்க்கத்தை சார்ந்தவர் என்பதை வெளிக்காட்டாமலேயே, சரமாரியாக பல எதிர் கேள்விகளையும் //நாங்களும் உங்களுக்கு திருப்பியடித்தால் எப்படியிருக்கும்?// போன்ற மிரட்டல்களையும் விட்டு நம்மையெல்லாம் அசத்த முயற்சித்து இருக்கிறார்.

*//தமிழீழம் போர்த்துக்கேயரிடம் இழந்த தமிழரசை உரிமை கோரவில்லையா?//*
ஈழத்து தமிழர்கள் தாங்கள் இழந்த தமிழரசை அம்மண்ணில் வாழ்ந்துகொண்டே உரிமையுடன் போரிட்டு கேட்டார்கள். ஆனால்,இப்போதைய இஸ்ரேலோ பச்சாதாபத்தின் பெயரில் ஆங்கிலேயர்களால் சில பத்தாண்டுகளுக்கு முன்னரே இலவசமாக தாரை வார்த்து கொடுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளல் வேண்டியது அவசியம்.

ஹீப்ரூ என்பது செத்துப்போன மொழி என்று கேள்வி பட்டேனே! இது எந்த அளவிற்கு உண்மை? விளக்கவும்.

எம்.எம்.அப்துல்லா said...

@அண்ணன் மார்கண்டேயன்

நான் தொடர்ந்து உங்க பக்கத்திற்கும் வர்றேனே!!!

கடைசியா நீங்க எழுதி இருந்த போட்டி கவிதையைக்கூட வாசித்தேன்.நேரமின்மையால் பின்னூட்டம் இடுவதில்லை :)

Kalaiyarasan said...

//ஹீப்ரூ என்பது செத்துப்போன மொழி என்று கேள்வி பட்டேனே! இது எந்த அளவிற்கு உண்மை? விளக்கவும்.//

மாசிலா, அது உண்மை தான். சமஸ்கிருதம் போன்று ஹீபுரு மத வழிபாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான வருடங்களாக ஹீபுரு யாராலும் பேசப்படவில்லை. யூதர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தார்களோ அந்த மொழியையே பேசி வந்தார்கள். ஐரோப்பாவில் ஜெர்மன், ஹீபுரு, போலிஷ் கலந்த ஜிட்டிஷ் மொழி பேசினார்கள். இஸ்ரேலின் உருவாக்கத்திற்குப் பின்னர் தான் ஹீபுரு மொழி செயற்கையாக திணிக்கப்பட்டது. இஸ்ரேலில் இன்றைக்கு பேசப்படும் ஹீபுருவுக்கும், புராதன ஹீபுருவுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இந்து மத அடிப்படைவாதிகள் இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்கலாம். அவர்கள் கனவு காணும் இந்து ராஜ்ஜியம் வந்தால் சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக்கலாம்.

Anonymous said...

//இப்போதைய இஸ்ரேலோ பச்சாதாபத்தின் பெயரில் ஆங்கிலேயர்களால் சில பத்தாண்டுகளுக்கு முன்னரே இலவசமாக தாரை வார்த்து கொடுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளல் வேண்டியது அவசியம்.//

யூதர்களின் பூர்வீகம் பற்றி உங்னளுக்குத் தெரியுமா?

Anonymous said...

//போன்ற மிரட்டல்களையும் விட்டு நம்மையெல்லாம் அசத்த முயற்சித்து இருக்கிறார்.//

சொல்ல வந்த விடயம் என்னவென்று திருப்பிப் பாருங்கள்.

Sunthar Sharma said...

Evidence That Demands a Verdict
http://www.angelfire.com/sc3/myredeemer/Evidence.html
உங்களால் முடிந்தால் மேலுள்ள புத்தகத்தை படிக்கவும்.
இஸ்ரேலியர்கள் 2000 ஆண்டுக்கு முன்னர் இழந்த தேசத்தை பைபிள் அவகளுக்கு கொடுப்பதாக எதுவும் சொல்லப்படவில்லை
மாறாக அது தற்போதய யூதர்களால் பிழையாக விளங்கிக் கொள்ளப்படுள்ளது.
இயேசுகிறிஸ்துவை கூட யூதர்கள் ஒரு ராஜாவாக வந்து தங்களுக்கு ஒரு ராட்சியத்தை கொடுப்பார் அதன் மூலம் முழு உலகையும் ஆட்சி செயலாம் என்பதே எதிபார்க்கப்படது.
ஆனாலும் இயேசுகிறிஸ்து நித்தியமான பரலோக ராட்சியத்தை பற்றியே கதைத்தார்.
பைபளில் தானியேல் என்னும் புத்தகத்தின் ஏழாம் அதிகாரத்தை வாசித்து அதன் அர்த்தத்தை விளங்குவீர்களாயின் அதில் இஸ்ரவேலர்களுக்கு ஒரு ராட்ட்சியம் முடிவடையும் காலம் கொடுக்கப்படுள்ளது. அது எப்போதோ முடிவடைந்தாயிற்று.

Anonymous said...

//http://www.angelfire.com/sc3/myredeemer/Evidence.html//

How to ensure its reliance?

//பைபளில் தானியேல் என்னும் புத்தகத்தின் ஏழாம் அதிகாரத்தை வாசித்து அதன் அர்த்தத்தை விளங்குவீர்களாயின் அதில் இஸ்ரவேலர்களுக்கு ஒரு ராட்ட்சியம் முடிவடையும் காலம் கொடுக்கப்படுள்ளது.//

where is it mentioned?

//இயேசுகிறிஸ்துவை கூட யூதர்கள் ஒரு ராஜாவாக வந்து தங்களுக்கு ஒரு ராட்சியத்தை கொடுப்பார் அதன் மூலம் முழு உலகையும் ஆட்சி செயலாம் என்பதே எதிபார்க்கப்படது.//

Jewish never expect anything from jesus.

Sunthar Sharma said...

How to ensure its reliance?
You better read first and disprove then!

where is it mentioned?
Its clearly in Thamil!

Jewish never expect anything from jesus.
Any proves? From the 4500 years of history??

Anonymous said...

//You better read first and disprove then!//

I ask its reliance. But, you ask to disprove. I think you didn’t realize my question. Anyway, I ask one question from lots of questions. The author, Josh McDowell is not a catholic. If I a catholic how can I accept his writings? In my view, he would be a cult preacher.

//Its clearly in Thamil!//
I asked "where is it mentioned?", not about language. Could u tell which line/verse?

//Any proves? From the 4500 years of history??//
http://en.wikipedia.org/wiki/Judaism%27s_view_of_Jesus

Sunthar Sharma said...

Its reliance depend on its accuracy and if you read you would know its accuracy.

"In my view, he would be a cult preacher."

As an example, Martin Luther has pointed out 95 mistakes according to the Holy Bible that catholics made. But still majority in this world are catholics, who are still making the same mistakes/sins.

So what is your view now? How can I see this? Can I think that since Majority is catholic and because they would be correct?

The whole chapter of Daniel 7 is talking of the Jews kingdom and the Eternal kingdom. There are rules to interpret the Holy Bible and if you follow them you will know the reality. (It is talking about catholics ruling of this world as well before 2500 years)

http://en.wikipedia.org/wiki/Judaism's_view_of_Jesus
This is what the present day Jews view. Who couldn't understand Torah properly. Since whatever Torah explained & prophesied about Messiah was fulfilled in Jesus Christ.

But during the time of Jesus Christ Jews thought of Him as a king who would destroy the enemy because of the miracles He did.

Anonymous said...

//Martin Luther has pointed out 95 mistakes according to the Holy Bible//
The same Martin Luther did mistakes against Jewish. http://www.nobeliefs.com/luther.htm
Was it according to bible?

//catholics, who are still making the same mistakes/sins.//
How can you tell that catholics commit sins? This is Christians’ problem (including catholic). They simply point the finger to others. If you have bible, read Matthew 7:1 Sunthar Sharma, are you one of them? Since you have hindu name?

//There are rules to interpret the Holy Bible.//
What are the rules? Interpret and tell me where it is talking about Jews kingdom. If you can’t tell, don’t say ‘stories’ in public forum.

//Torah explained & prophesied about Messiah was fulfilled in Jesus Christ.//
Show me at least one or two verse.

//But during the time of Jesus Christ Jews thought of Him as a king who would destroy the enemy because of the miracles He did.//
Is it in bible or historic evident OR your own interpretation?

Sunthar Sharma said...

It is very sad if the misconception of Martin Luther has caused such destruction. No it is not according to the Holy Bible. There are other things where Luther went wrong but NOT that Ninety-Five Theses. (But sadly, So when Pilate saw that he was gaining nothing, but rather that a riot was beginning, he took water and washed his hands before the crowd, saying, "I am innocent of this man's blood; see to it yourselves." Mat 27:25 And all the people answered, "His blood be on us and on our children!" but they are the people who wanted.)

Matthew 7:1 - Telling a tree's fruit is good or bad is not judging if the fruits are bad and cutting that tree and eliminating is what judging and that part is belongs to GOD almighty.

I'm just telling according to the Holy Bible whether fruits are good or bad and if bad tree is also bad.

'Sunthar Sharma, are you one of them? Since you have hindu name?'
Yes I'm Brahmin learning about all the religions, and in future I would like t be a true Christian.

"What are the rules?"
You may search for that something like http://www.bible-truth.org/Principles.htm
And then study the bible.

"where it is talking about Jews kingdom"
http://teachinghearts.org/dre17hdan07.html
Check it out and see who is telling stories!!!!!!

"Show me at least one or two verse."
http://www.bibleprobe.com/over-300-prophecies.pdf as well as read "Evidence That Demands a Verdict" without those things dont try to act as smart(Since I didnt born with but learnt, simply google it)!!!!

"Is it in bible or historic evident OR your own interpretation?"
It is in the Bible, and historic event and my interpretation as well.

Anonymous said...

//I'm just telling according to the Holy Bible whether fruits are good or bad and if bad tree is also bad.//
//Yes I'm Brahmin learning about all the religions, and in future I would like t be a true Christian.//

It’s better that you should standby as you are learner and since you are brahmin and not true Christian.

//You may search for that something like http://www.bible-truth.org/Principles.htm
And then study the bible.//
There are lot of cult preachers in Christianity. How to trust? All talk about bible, but do dirty works!

"where it is talking about Jews kingdom"
//http://teachinghearts.org/dre17hdan07.html
Check it out and see who is telling stories!!!!!!//
Show me which line talking about Jews kingdom? Compare you ‘story’ with Matthew 24:32

//http://www.bibleprobe.com/over-300-prophecies.pdf as well as read "Evidence That Demands a Verdict" without those things dont try to act as smart(Since I didnt born with but learnt, simply google it)!!!!//
Those are from Nevi’im & Ketuvim NOT from Torah. That’s your premature problem act as smart, not mine.

//It is in the Bible, and historic event and my interpretation as well.//
Show me where is in bible?

Sunthar Sharma said...

As a learner I have freedom to argue.

http://kalaiy.blogspot.com/2010/06/blog-post_26.html
Read the above post and check out my comments for true Christians and for cult preachers in Christianity.

http://teachinghearts.org/dre17hdan07.html
If you can’t read and understand the above basic article, add me on the skype(ID is on that blog) I'd explain. (it is clearly showing the difference for Jews and saints)

Matthew 24:32 it is not talking about Jews & their kingdom, if you think such that it’s wrong interpretation of cult preachers in Christianity as well. What is in the Daniel 7 is fulfilled. Now if you believe in Jesus Christ you will get the eternal kingdom. The same applied for Jews as well as for all other nations of this world.

The Written Torah contains:
1. Five Books of Moses (Chumashe Torah)
2. Prophets (Nevi'im)
3. Writings (Ketuvim)

Study the Holy Bible properly PLEASE(its free www.e-sword.net).

Anonymous said...

//Read the above post and check out my comments for true Christians and for cult preachers in Christianity.//
I see lot of hates from your comments - vague and criticism. Is that your learn from Christ?

//Matthew 24:32 it is not talking about Jews & their kingdom//
What does Mat 24:32 mean?

//If you can’t read and understand the above basic article, add me on the skype(ID is on that blog) I'd explain.//
//The Written Torah contains:
1. Five Books of Moses (Chumashe Torah) 2. Prophets (Nevi'im) 3. Writings (Ketuvim)
Study the Holy Bible properly PLEASE(its free www.e-sword.net).//

Torah is the 1st 5 books of moses. http://en.wikipedia.org/wiki/Tanakh#Torah. Tanakh is scripture of Jew. Christian says old testament. You don’t even know basic, but you try to explain to me via skype?!

Sunthar Sharma said...

"I see lot of hates from your comments - vague and criticism. Is that your learn from Christ?"
I'm like a student and you are like a Teacher and when I challenge you, you are telling like this????

"What does Mat 24:32 mean"
When spring comes and the trees put out new leaves, we know that summer is not far off. In the same way, we will know Christ's return is near when we see the events He mentions earlier in the chapter begin to occur.

"Torah is the 1st 5 books of moses."
http://www.jewfaq.org/torah.htm
But the word "torah" can also be used to refer to the entire Jewish bible (the body of scripture known to non-Jews as the Old Testament and to Jews as the Tanakh or Written Torah), or in its broadest sense, to the whole body of Jewish law and teachings.

Tanakh is not the Hebrew word for the old testament, Tanakh is a created word, It stands for TORAH (LAW INSTRUCTIONS), NEVI'M (The Prophets) and KETHUVM (The Writings) TNK insert the vowel points and you have TANAKH. TANAKH just like Judaism and Talmud it's not mention in scriptures, the reason being they all are words created by unlearned Gentiles who call themselves Jews.

I don't like the terms old testament or new testament, the book is the same, it's one continual work. The word Scripture or the word of Yah is a more accurate term in reference to Yah's truth.

We shouldn't use Tanakh, for the simple reason, Yah didn't use it, Yahshuah didn't use it. Yahshuah taught from the word of Yah, when He taught the people did he ever tell them to search the Tanakh? NO he told them to search the scriptures or the word of Yah.

Matthew 21:42 Yahshuah saith unto them, Did ye never read in the scriptures, The stone which the builders rejected, the same is become the head of the corner: this is the Yah's doing, and it is marvelous in our eyes?

22:29 Yahshuah answered and said unto them, Ye do err, not knowing the scriptures, nor the power of God.

Luke 24:45 Then opened he their understanding, that they might understand the scriptures,


Genesis 3:15 is telling about Jesus also consider Luke 4:14-21 Jesus read Isaiah and said it's fulfilled.


"You don’t even know basic, but you try to explain to me via skype?!"
Could you prove please?

Anonymous said...

//What does Mat 24:32 mean//
There are a few websites built for their thoughts without any bible truth. I found your explanation from the following:
http://www.cgg.org/index.cfm/fuseaction/Library.sr/CT/BQA/k/75/What-Does-Jesus-Mean-by-Parable-of-Fig-Tree-Matthew-2432.htm

If you are an online bible study person, who rely on websites, why can’t you go and see this link and prove/reject
http://ecclesia.org/truth/mat08.html

Also, you can visit these two links and see how prophesies are linked with Israel.
http://gracethrufaith.com/ikvot-hamashiach/seven-major-prophetic-signs-of-the-second-coming/
http://www.biblebelievers.com/jmelton/second.html
Are you going to say these are wrong and browse for links to disprove?

If you are converting from hindu to christianity, I can recommend a book called “இயேசு கிறிஸ்துவின் இரண்டம் வருகை (முதல் பாகம்)” written by திருமறைப் பெரியார் யோபு ஞானப்பிரகாசம், whose writings welcomed by christians. The book was published by Bethel Pulishers, Kovai 641012. Read whole book, especially page 143.

//Torah is the 1st 5 books of moses.//
Many of them (mostly non-Jewish) mistakenly understood that Torah is Jewish scripture. If you talk with Jewish or Christian bible scholar, you will notice their use of Tenakh instead of Torah.

I found your article at http://www.angelfire.com/ill/hebrewisrael/jewishtradition.htm and other websites, which is against Jewish & Judaism by followers of Christ so called christians. It is not wonder. From the beginning to 21st century they against to Jewish, but “preaching love (?)”

There is lots of misleading. I tell you one error. The article mentioned “We shouldn't use Tanakh, for the simple reason, Yah didn't use it, Yahshuah didn't use it.” Luke 4:21 says “And he began to say unto them, this day is this scripture fulfilled in your ears”. So, Jesus didn’t use Tanakh, Torah or bible, but he used scripture. If you look at original bible in Greek, you can translate to Hebrew word “Kitvei Hakodesh” straight from Aramaic & Greek, which means Word of God. Does Christian always use this? They use bible.

//Could you prove please? //
The above replies do. You are reply on websites even you don’t know whether they are right or wrong? Because, you don’t know original scripture and its languages Hebrew, Aramaic & Greek. Have you studied those? You can just depend on Tamil & English.

At least you are not a Christian or Jew, but you claimed you are a Brahmin. You may start to study bible or Christianity from a few years. It doesn’t mean that you are genius in Christian theology. A Brahmin doesn’t have privilege to explain to me about bible. If you know the bible very well, you may know the reason.

Sunthar Sharma said...

The link you posted belongs to a pride person called Richard Anthony, since
on http://ecclesia.org/truth/who.html
he couldn’t tell clearly and exactly what he believes from bible. Today he can tell one thing and tomorrow he can tell another thing.
------------------------------
Articles, Creeds, and Confessions of Faith
What are our Articles, Creeds, and Confessions of Faith? We have none, and we do not follow any. Articles, Creeds, and Confessions of Faith alike fail to give us this full knowledge of God which is so essential to our faith and walk. They are only man’s impressions, inferences, and conclusions drawn from Scripture; and have themselves to be judged by Scripture. Whatever of truth there may be in them, or however useful, they can never take the place of the Word of God. Only the Living Word, and in the pages of the written Word, can we get to know God.

The articles on our website reflect our faith and belief in God. Therein is contained our "Articles, Creeds, and Confessions of Faith."
-----------------------------

This is what is going closely with the bible and accepted by the true Christians for many many years -
http://www.fivesolas.com/reform_r.htm
And that is still the same throughout the history.

Yes completely wrong!
http://ecclesia.org/truth/mat08.html
http://gracethrufaith.com/ikvot-hamashiach/seven-major-prophetic-signs-of-the-second-coming/
http://www.biblebelievers.com/jmelton/second.html

Wrong explanation because of the wrong doctrines they believe.
Israel is no more a holy land of GOD.

Jesus Christ will appear only for the final judgment of this world and the whole world will see HIM. and the "Rapture" will not happen as you think or may so called Christians believe.

http://www.bible.ca/tongues-encyclopedia-pentecostal-preachers.htm
these kinds of false Self-Proclaimed Prophets or "திருமறைப் பெரியார்(I haven’t heard his name for a single time in last 30 years)" can say anything without facts.
IF that list could be continued திருமறைப் பெரியார் யோபு ஞானப்பிரகாசம் also will be there for sure.

http://www.angelfire.com/ill/hebrewisrael/jewishtradition.htm
it is not important whether it’s against Jews but the facts are important.

From the beginning Christians were killed by the Jews not the other way! - Study the history.

If you look at original bible in Greek,- http://www.greeknewtestament.com/B42C004.htm#V21
γραφή - graphē - graf-ay'
a document, that is, holy Writ (or its contents or a statement in it): - scripture.

It’s not important to argue on Tanakh or Torah or bible but throughout all the books Jesus Christ is mentioned. What Torah(in your wording) explained & prophesied about Messiah was fulfilled in Jesus Christ.

"The above replies do. You are reply on websites even you don’t know whether they are right or wrong?"
I check them according to their faith confession and by that you can identify whether they are correct with the bible or not!(Eg: http://www.grace.org.uk/faith/bc1689/1689bc00.html) whereas www.gracethrufaith.com is breached the 1st commandment of the ten commandments. so how can someone consider them as Christians?

"Because, you don’t know original scripture and its languages Hebrew, Aramaic & Greek. Have you studied those?"
Now there are enough tools to study from the origin and www.e-sword.net is one of them.

I'm not genius in Christian theology. But I understand the bible as the decuples understood, the church fathers in the history understood, and the way true Christians understand.

so finally "A Brahmin doesn’t have privilege to explain to me about bible" shows your mentality. And I think you know this one as well –“But many who are first will be last, and many who are last will be first."

Anonymous said...

//so finally "A Brahmin doesn’t have privilege to explain to me about bible" shows your mentality. And I think you know this one as well –“But many who are first will be last, and many who are last will be first."//

Do I try to interpret Hinduism to Brahmin like you? Do you think that I should keep silent when Brahmin interpret bible? You don’t need to judge my mentality. In my view, you are a gentile unless you come to know the TRUTH. The versus “But many who are first will be last, and many who are last will be first” didn’t mention for Brahmin. You better do your pooja for pagan and there is no link with Christ and pagan!

Anonymous said...

You would deny Israel, rapture and finally Jesus. Then you would say there is no sin. Keep your false preaching in your Brahmin community.

Sunthar Sharma said...

I'd bet on wrong and tell whatever is right regardless of the people who identify themselves as Christian, Muslim, Jew, Hindu, Buddhist, or whatever cult. You could not prove for what you are standing and now frustrated.

“Do I try to interpret Hinduism to Brahmin like you? Do you think that I should keep silent when Brahmin interpret bible?”
Whether if it’s a Brahmin or Christian or any donkey could interpret the bible “CORRECTLY” you should keep silent!

LORD GOD ALMIGHTY JESUS CHRIST, WHO was (Before Abraham), and is (Now ruling the whole universe), and is to come (To judge the whole world) told in John 4:19-26 -The woman said to him, “Sir, I perceive that you are a prophet. Our fathers worshiped on this mountain, but you say that in Jerusalem is the place where people ought to worship.” Jesus said to her, “Woman, believe me, the hour is coming when neither on this mountain nor in Jerusalem will you worship the Father. You worship what you do not know; we worship what we know, for salvation is from the Jews. But the hour is coming, and is now here, when the true worshipers will worship the Father in spirit and truth, for the Father is seeking such people to worship him. God is spirit, and those who worship him must worship in spirit and truth.” The woman said to him, “I know that Messiah is coming (he who is called Christ). When he comes, he will tell us all things.” Jesus said to her, “I who speak to you am he.”
“You don’t need to judge my mentality.” – I didn’t tell you that your mentality is like Pharisees and Sadducees and because of that you now go to hell. That part is GOD’S part.
What I’m telling you is you are on the wrong side and not willing to come to the right side. And the wrong side will be judged by the LORD GOD ALMIGHTY JESUS CHRIST.