Wednesday, July 19, 2017

இஸ்ரேலியர்கள் புத்திசாலிகள் என்ற இனவாதப் பிரச்சாரம்


[தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?](பகுதி : பன்னிரண்டு)
"உலகில் உள்ள மற்ற எல்லா இனங்களையும் விட, யூதர்கள் புத்திசாலிகள், திறமைசாலிகள்." இந்த தவறான கருத்தை இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் இருக்கிறார்கள். படித்தவர் முதல் பாமரர் வரை, யூதர்கள் குறித்த மூடநம்பிக்கையை கொண்டுள்ளனர். உலகிலேயே அறிவுக்கூர்மை அதிகம் கொண்ட இனமான யூதர்கள் எதையாவது கண்டுபிடித்து மனித குலத்திற்கு வழங்கி இருக்கிறார்களா? காகிதம், வெடிமருந்து, பட்டுத் துணி, போன்றவற்றை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். யூதர்கள் கண்டுபிடித்ததாக கூறக்கூடிய ஒரே விடயம் மதம் சார்ந்தது. "பல தெய்வ வழிபாட்டை நிராகரித்து, ஒரே கடவுளை வழிபடும் மதத்தை தோற்றுவித்தார்கள்," என்று கூறலாம். ஆனால் யூதர்களுக்கு முன்னரே பாபிலோனியாவில் ஓரிறைக் கொள்கை இருந்துள்ளது. பாரோ மன்னர்கள் ஆண்ட எகிப்தில், ஆமன் என்ற ஒரே கடவுளை வழிபடும் மதம் சிறிது காலம் அரச மதமாக இருந்தது.

இதனை வாசித்துக் கொண்டிருக்கும் சில நண்பர்கள், "இதோ பாருங்கள், யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள், தத்துவ ஞானிகள்..." என்று ஒரு பெரிய பட்டியலையே கொண்டு வருவார்கள். அந்தப் பட்டியலில் உள்ள எல்லோரும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பிரஜைகள் என்பது ஒரு தற்செயல் அல்ல. சீனா, அரேபியா, இந்தியா என்று உலகம் முழுவதும் திருடிய அறிவுச் செல்வங்களை ஐரோப்பியர்கள் தமதாக்கிக் கொண்டார்கள். இந்த மாபெரும் அறிவுத்திருட்டு இடம்பெற்ற வரலாறு ஒரு பெரிய கதை. "பூமி உருண்டையானது" என்று கூறியவர்களை தூக்கில் போட்ட தேசத்தில் இருந்து, எப்படி ஒரு விஞ்ஞானி தோன்ற முடியும்? சாதாரண தலைவலிக்கு மண்டையில் ஆணி அடித்த வைத்தியர்கள் வாழ்ந்த நாட்டில், நவீன மருத்துவம் தோன்ற முடியுமா? சிலுவைப்போரினால் விளைந்த நன்மையாக, ஐரோப்பியர்களுக்கு வெளி உலகத் தொடர்புகள் ஏற்பட்டன. அப்போது தான் விஞ்ஞானம், அறிவியல், கணக்கியல், வான சாஸ்திரம் எல்லாம் கற்றுக் கொண்டார்கள். நிச்சயமாக, ஐரோப்பியர்கள் பின்னர் அவற்றை மேலும் சிறப்பாக வளர்த்தார்கள். அறிவியல் சார்ந்த நவீன கல்வியும் அப்போது தான் உருவானது.

எமக்குத் தெரிந்த யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள் எல்லோரும், பிற ஐரோப்பியர்களைப் போல நவீன கல்வி கற்றதனால் உருவானவர்கள். இவர்கள் யாருமே யூத மதக் கல்வியுடன் தமது அறிவை சுருக்கிக் கொள்ளவில்லை. இன்னும் தெளிவாகக் கூறினால், படித்த யூத அறிஞர்கள் பலர் தம்மை மதச் சார்பற்றவர்களாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அன்றிருந்த யூத பழமைவாதிகள், "அவர்கள் யூதர்கள் இல்லை," என்று கூறி வந்தனர். எடுத்துக்காட்டாக, கார்ல் மார்க்ஸ் ஒரு யூதர் என்று மற்றவர்கள் தான் கூறுகிறார்கள். அவர் எந்தவொரு இன அடையாளத்தையும் ஏற்றுக் கொள்ளாதவராக, ஒரு நாஸ்திகராக வாழ்ந்தார். ஐன்ஸ்டீன், யூத தேசியவாதிகளான சியோனிஸ்டுகளை கடுமையாக விமர்சித்தார். நான் இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக, என்னை "தமிழன் இல்லை" என்று சில நண்பர்கள் கூறுகின்றனர். முரண்நகையாக இதே நண்பர்கள் தான், "யூத மதச் சார்பற்ற, யூதர்களாக ஏற்றுக் கொள்ளப்படாத" விஞ்ஞானிகளின் பட்டியலை கொண்டு வந்து காட்டுகிறார்கள்.

யூதர்கள் மட்டும் எப்படி அறிவுக்கூர்மை மிக்கவர்களாக, திறமைசாலிகளாக இருக்க முடியும்? மத நம்பிக்கை கொண்டவர்கள், ஆண்டவர் யூதர்களை அப்படிப் படைத்தார், என்று கூறுகின்றனர். பைபிளின் பார்வையில், உலகில் "யூதர்கள், யூதர் அல்லாதவர்கள்," என்று இரண்டு வகைப் பிரிவுகள் உண்டு. இந்தியாவில் மனு எழுதிய சாஸ்திரமும், "பிராமணர்கள் புத்திசாலிகள், அதனால் வேதம் பயில உரித்துடையவர்கள்." என்கிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களால் எழுதப்படும் புனித நூல்கள், அந்த இனத்தை மட்டுமே உலகில் சிறந்ததாக மகிமைப் படுத்தும். (மனிதன் எழுதவில்லை என்றால், ஆண்டவர் இனப் பாகுபாடு காட்டுகிறார் என்று புரிந்து கொள்ளலாமா?")

நிறவெறியர்களான சில விஞ்ஞானிகளும், ஹிட்லரும், "வெள்ளையர்களே உலகில் சிறந்த அறிவுக்கூர்மை கொண்டவர்கள்." என்றனர். இப்போதெல்லாம் விஞ்ஞானத்தை காட்டி தான் மக்களை நம்ப வைக்க பார்க்கிறார்கள். "மரபணுச் சோதனையின் படி, யூதர்கள் தனியான மரபணு கொண்டவர்கள்," என்றும், "புத்தியும், திறமையும் மரபணு மூலம் கடத்தப்படுகின்றது." என்றும் கூறுவார்கள். ஹிட்லர் போன்ற இனவெறியர்களும் அதைத் தான் பரப்புரை செய்தனர். "வெள்ளையினத்தவர்கள் மூளைசாலிகள், கறுப்பினத்தவர்கள் முட்டாள்கள். இது மரபணுவில் எழுதப்பட்டுள்ளது." என்றார்கள். "மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் வெள்ளை இனம் உயர்ந்த இடத்தில் இருக்கின்றது." என்று டார்வினும் தன் பங்குக்கு உளறி விட்டுச் சென்றுள்ளார்.

1975 ல், அமெரிக்க விஞ்ஞானி வில்சன், "சமூக உயிரியல்" என்றொன்றை கண்டுபிடித்தார். இதனை விஞ்ஞானம் என்பதை விட, வலது தீவிரவாத அரசியல் கருத்துருவாக்கம் என்பதே சாலப்பொருத்தம். சமூக- உயிரியல்வாதிகள் புத்திசாலித்தனத்திற்கும், செல்வத்திற்கும் முடிச்சுப் போடுகின்றனர். "ஆப்பிரிக்கர்கள் மிகக்குறைந்த IQ கொண்டிருப்பதாலேயே அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள், ஐரோப்பியர்கள் அதிகூடிய IQ கொண்டிருப்பதாலேயே செல்வந்தர்களாக வாழ்கின்றனர்." இவ்வாறு வறுமைக்கும், செல்வத்திற்கும் மரபணுவே காரணம் என்கின்றனர். காலனிய சுரண்டல் பற்றி எல்லாம் அவர்கள் பேச மாட்டார்கள். பிறருடன் இனக்கலப்பு செய்யாத தூய இனமாக கருதப்படும் யூதர்கள், சமூக- உயிரியல்வாதிகளால் அடிக்கடி உதாரணம் காட்டப்படுகிறார்கள்.

யூதர்கள் கொண்டுள்ள விசேட மரபணுக்கள் காரணமாக, அவர்கள் புத்திசாலிகளாகவும், பணக்காரர்களாகவும் இருக்கின்றனர். உலகையே ஆட்டிப் படைக்கின்றனர்.(Eugenics:
A social movement in which the population of a society, country, or the world is to be improved by controlling the passing on of hereditary information through mating
.) உலகம் முழுவதையும் ஆள்வதற்கு யூதர்கள் எவ்வாறு சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதை விளக்கும் நூல் ( The Protocols of the Elders of Zion) ஒன்று 1903 ல் வெளியானது. ஹிட்லரும், நாஜிகளும் அவற்றை பிரச்சாரம் செய்து தான் ஆட்சியைப் பிடித்தார்கள். "வங்கிகள், தொழில் நிறுவனங்கள் எல்லாம் யூதர்களின் கைகளில் இருக்கின்றன." (ஏனென்றால் யூதர்கள் தான் புத்திசாலிகள் ஆயிற்றே) என்ற பொய்ப் பரப்புரை, யூதர்கள் மீதான வன்முறைக்கு ஜெர்மனியரின் ஆதரவை திரட்டியது. யூதர்களின் உதாரணத்தை பின்பற்றி, இனக்கலப்பற்ற தூய ஆரிய இனத்தை உருவாக்க வேண்டுமென்பது ஹிட்லரின் கனவு. யூதர்கள் பற்றிய பிரமை கொண்ட தமிழர்கள், "சாதி, மத, இனக் கலப்பு திருமணங்களுக்கு எதிராக வாதாடினால்," ஆச்சரியப்பட எதுவுமில்லை. நிறவெறி, இனவெறி, சாதிவெறி எல்லாம் அடிப்படையில் ஒன்று தான்.

(தொடரும்)
இந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
11.தமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா?
10.பாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்
9.தமிழீழ - பாலஸ்தீன சகோதரத்துவம் : ஒரு மீள் பார்வை
8. "தமிழர்கள்" ஒப்பிட விரும்பாத கம்யூனிச யூதர்கள்
7.பிரிட்டிஷ் பாலஸ்தீனம், யூத இஸ்ரேலான வரலாறு
6.இஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்
5.
சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்
4.யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்
3.அயோத்தி, ஜெருசலேம்: அயோக்கியர்களின் அரசியல்
2.
இஸ்ரேலியரிடம் தாலிபான்களும் பாடம் கற்கலாம்
1.
தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

29 comments:

தர்ஷன் said...

மிகத் தெளிவான விளக்கம். நான் கூட யூதர்கள் அறிவால் மேம்பட்டவர்கள் எனவே நம்பியிருந்தேன். ஐன்ஸ்டீன் உள்ளிட்ட உதாரணங்களால். பா.ராவின் "நிலமெல்லாம் ரத்தம்" நூலிலும் அப்படி ஒரு தகவல் படித்ததாக ஞாபகம். பா.ரா எனும் போது ஞாபகம் வருகிறது. இன்று உங்களது நூலைப் பற்றி அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார். மகிழ்ந்தேன்.

kumar said...

நீண்ட காலமாக எதிர்பார்த்த விஷயம் இது.வெட்கத்தை விட்டு கூறுவதானால் எனக்கும் இப்படி ஒரு நம்பிக்கை இருந்தது.தொடருங்கள்.

Kalaiyarasan said...

தகவலுக்கு நன்றி தர்ஷன்.
நன்றி பஷீர்.

ராஜரத்தினம் said...

அப்ப அமெரிக்காவில் இருந்த மற்ற வெள்ளையர்கள் படிக்கவில்லையா? ஏன் யூதர்கள் மட்டும் படித்தார்கள்? இந்தியாவில் கிருத்துவர்கள் போல அமெரிக்காவில் யூதர்கள் நிறைய கல்விநிறுவனங்கள் வைத்து அவர்களுக்கு இலவச கல்வி கொடுத்தாங்களா? என்னுடைய இந்து மதத்தை மதமாக ஏற்றுக் கொண்டவர்கள் யூதர்கள்தான். அதற்காகவே நான் சொல்வேன் அவர்கள் புத்திசாலிகள்தான்.

சீனு said...

//எமக்குத் தெரிந்த யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள் எல்லோரும், பிற ஐரோப்பியர்களைப் போல நவீன கல்வி கற்றதனால் உருவானவர்கள்.//

அதே கல்வியை அன்றைய காலகட்டத்தில் இருந்த மற்ற இனத்தவரும் கற்றிருப்பார்கள் அல்லவா? அவர்கள் ஏன் யூதர்களை போல் விஞ்ஞானிகள், கணித மேதைகளாக ஆகவில்லை?

யூதர்களில் விஞ்ஞானிகள்/மேதைகள் உருவாக காரணமே அவர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டதினால். தன்னை தற்காத்துக் கொள்ள தேவைப்பட்டதினால்.

// "ஆப்பிரிக்கர்கள் மிகக்குறைந்த IQ கொண்டிருப்பதாலேயே அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள், ஐரோப்பியர்கள் அதிகூடிய IQ கொண்டிருப்பதாலேயே செல்வந்தர்களாக வாழ்கின்றனர்." இவ்வாறு வறுமைக்கும், செல்வத்திற்கும் மரபணுவே காரணம் என்கின்றனர். காலனிய சுரண்டல் பற்றி எல்லாம் அவர்கள் பேச மாட்டார்கள்.//

ஐரோப்பியர்கள் காலனிய சுரண்டல் செய்ய காரணமே அவர்களின் தேவை. அவர்கள் நாட்டில் இல்லாத வளத்தை அடுத்தவர் நாட்டில் இருந்து கொள்ளையடித்து கொண்டு வந்தனர். இதையே அரேபியர்கள் படையெடுப்பின் மூலமாக. ஆனால், இயற்கை வளம் கொண்ட ஆப்ரிக்க தேசத்திற்கு இந்த தேவை இருக்கவில்லை. இந்திய துணைக்கண்டமும் அவ்வாறே. அவர்களுக்கு 'வெளியே' செல்லவேண்டிய தேவை இருக்கவில்லை.

ஏதோ எழுதனும்னு எழுதறீங்களா? இல்லை, யூதர்கள் மேல் 'கட்டாயம்' வெறுப்பை கொட்ட வேண்டுமென்றா?

Kalaiyarasan said...

//அதே கல்வியை அன்றைய காலகட்டத்தில் இருந்த மற்ற இனத்தவரும் கற்றிருப்பார்கள் அல்லவா? அவர்கள் ஏன் யூதர்களை போல் விஞ்ஞானிகள், கணித மேதைகளாக ஆகவில்லை?//


நிச்சயமாக. விஞ்ஞானிகள், கணித மேதைகள் எல்லோரும் யூதர்கள் அல்ல. பிற இனத்தவர்களும் இருக்கின்றனர். ஆனால் குறிப்பாக யூதர்களை சுட்டிக் காட்டினால் தான் இனவாதிகளின் மனம் குளிரும். ஐரோப்பாவில் அப்படித் தான் யூத இன வெறுப்பை பரப்பினார்கள். அதைக் காட்டி யூதர்களுக்கு எதிரான இனக்கலவரங்களை தூண்ட முடியும்?

//ஐரோப்பியர்கள் காலனிய சுரண்டல் செய்ய காரணமே அவர்களின் தேவை. அவர்கள் நாட்டில் இல்லாத வளத்தை அடுத்தவர் நாட்டில் இருந்து கொள்ளையடித்து கொண்டு வந்தனர்.//

நான் எழுதியதுடன் எங்கே முரண்பட்டீர்கள்? வறுமைக்கும், செல்வத்துக்கும் காரணம் IQ வேறுபாடு, என்று நிறவெறி விஞ்ஞானிகள் தான் கூறுகின்றனர். அதனை நீங்களோ, நானோ ஏற்றுக் கொள்ளவில்லை. எனது எழுத்தில் என்ன குற்றம் கண்டுபிடித்தீர்கள்? யூதர்களைப் பற்றி புனைவுகளை பரப்புவோரை கண்டிக்க மாட்டீர்கள். அது யூதர்களுக்கு எதிரான இனவெறியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கின்றீர்கள். தவறான கருத்துகளை எதிர்த்து வாதாடினால், யூதர்கள் மேல் வெறுப்பு காட்டுவதாக என் மேல் அவதூறு செய்கின்றீர்கள். உங்களது நேர்மை பிரமிக்க வைக்கின்றது நண்பரே.

சீனு said...

//எமக்குத் தெரிந்த யூத விஞ்ஞானிகள், கணித மேதைகள் எல்லோரும், பிற ஐரோப்பியர்களைப் போல நவீன கல்வி கற்றதனால் உருவானவர்கள். இவர்கள் யாருமே யூத மதக் கல்வியுடன் தமது அறிவை சுருக்கிக் கொள்ளவில்லை.//

இப்படி யூத மதக் கல்வியுடன் தமது அறிவை சுருக்கிக் கொள்ளாதற்கு காரணம் அவர்களது அதே மத கோட்பாடுகளாகக்கூட இருக்கலாம் இல்லையா? உதா, இன்றைய இஸ்லாமியர்கள் அறிவியலை எப்பாடுபட்டாவது ஒதுக்க நினைப்பதும் தற்செயலானது அல்ல. இஸ்லாம் பொழுதுபோக்கை ஆதரிப்பது இல்லை என்பதற்காக (விஞ்ஞான கண்டுபிடிப்பா) டிவி பார்க்காமல் விடுவது. ஆனால், அடுத்த வீட்டில் இருப்பவரை மனதாலும் வெறுத்தால் அவர் ஒரு உண்மையான இஸ்லாமியர் இல்லை என்று சொன்னாலும் (அதே விஞ்ஞான கண்டுபிடிப்பான) துப்பாக்கியை உபயோகிப்பது. இப்படியெல்லாம் இல்லைதானே!?

Kalaiyarasan said...

//ஆனால், யூதர்கள் சதவிகிதத்திலே அதிகம் இல்லையா? (அதற்கு காரணம் ஜீன் இல்லை, தேவை என்கிறேன்)//

//ஆனால் குறிப்பாக யூதர்களை சுட்டிக் காட்டினால் தான் இனவாதிகளின் மனம் குளிரும். ஐரோப்பாவில் அப்படித் தான் யூத இன வெறுப்பை பரப்பினார்கள்.//

மேலே உள்ள இரண்டு கூற்றுகளிலும் என்ன வித்தியாசம் உள்ளது? நீங்களும், ஐரோப்பிய இனவெறியர்களும் யூத அறிவுஜீவிகளை பற்றி மட்டும் குறிப்பிட்டு பேசும் காரணம் என்ன? "யூதர்கள் சதவிகிதம் அதிகம் இல்லையா?" என்று நீங்களும், இனவெறியர்களும் ஒரே குரலில் பேசுவது எப்படி?

சீனு said...

// நீங்களும், ஐரோப்பிய இனவெறியர்களும் யூத அறிவுஜீவிகளை பற்றி மட்டும் குறிப்பிட்டு பேசும் காரணம் என்ன? "யூதர்கள் சதவிகிதம் அதிகம் இல்லையா?" என்று நீங்களும், இனவெறியர்களும் ஒரே குரலில் பேசுவது எப்படி?//

ஓ! அப்ப நானும் ஐரோப்பிய இனவெறியன் என்கிறீர்கள். :)) நல்ல கண்டுபிடிப்பு.

ஒன்று நீங்கள் சொன்னது. மற்றொன்று நான் சொன்னது. கொஞ்சம் உக்காந்து யோசிச்சு பதில் போடுங்கள். உங்களுக்கு நீங்களே முறன்படுகிறீர்கள்.

எனக்கு புரியவில்லை. இந்த பதிவின் மூலம், நீங்கள் யூதர்கள் மேல் இனவெறியை பரப்புகிறீர்களா, இல்லை நான் பரப்புகிறேனா என்று? நல்ல காமெடி.

Kalaiyarasan said...

//இப்படி யூத மதக் கல்வியுடன் தமது அறிவை சுருக்கிக் கொள்ளாதற்கு காரணம் அவர்களது அதே மத கோட்பாடுகளாகக்கூட இருக்கலாம் இல்லையா?//

பாவம் சீனு. உங்களுக்கு யூத மதம் குறித்து எதுவுமே தெரியாது என்பது புரிகின்றது. இஸ்லாமிய கடும்போக்காளர்களை உதாரணமாக காட்டினீர்கள். யூத கடும்போக்காளர்களும் அவர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல.
யூத மதக் கட்டுப்பாடுகள் பற்றி தமிழர்களுக்கு அவ்வளவாக தெரியாது. அதை நாங்கள் எழுதப் போனால் "யூத வெறுப்பு" என்று அவதூறு செய்வீர்கள். உங்களுக்கு பயந்து உண்மை பேசாமல் வாயை மூடிக் கொள்ள வேண்டும்.

சீனு said...

//பாவம் சீனு. உங்களுக்கு யூத மதம் குறித்து எதுவுமே தெரியாது என்பது புரிகின்றது.//

எனக்கு தெரியாது தான். தெரியாமலே போகட்டும். ஆனால், உங்களுக்கு விடை தெரிந்தால் போதுமானது.

Kalaiyarasan said...

//ஒன்று நீங்கள் சொன்னது. மற்றொன்று நான் சொன்னது. கொஞ்சம் உக்காந்து யோசிச்சு பதில் போடுங்கள். உங்களுக்கு நீங்களே முறன்படுகிறீர்கள்.//

நண்பரே, நான் கூறியது, ஐரோப்பாவில் இனவெறியர்கள் எப்படி பிரச்சாரம் செய்கின்றார்கள் என்பதை. அதனை என்னுடைய சொந்தக் கருத்தாக தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.

Kalaiyarasan said...

//எனக்கு தெரியாது தான். தெரியாமலே போகட்டும். ஆனால், உங்களுக்கு விடை தெரிந்தால் போதுமானது. //

நான் சொன்னதை சரி என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? யூத மதத்தை பற்றிய எந்த அறிவும் இல்லாமல் எப்படி உங்களால் யூதர்களைப் பற்றி பேச முடிகின்றது?

சீனு said...

//நான் சொன்னதை சரி என்று ஏற்றுக் கொள்கிறீர்களா?//

அப்படியே சொன்னேன்? இனி பேசி பிரயோசனமில்லை என்று தெரிந்து விட்டது.

//யூத மதத்தை பற்றிய எந்த அறிவும் இல்லாமல் எப்படி உங்களால் யூதர்களைப் பற்றி பேச முடிகின்றது?//

இந்த பதிவில் ஆரம்பந்தொட்டே உங்களின் பதில் பைபாஸில் தான் போய்க்கொண்டிருக்கிறது. கொஞ்சம் எல்லா பின்னூட்டங்களையும் படித்து பாருங்கள். புரிகிறதா என்று பார்ப்போம்...

Kalaiyarasan said...

//இனி பேசி பிரயோசனமில்லை என்று தெரிந்து விட்டது.//

உண்மை தானே, யூதர்களைப் பற்றிய அடிப்படை விஷய ஞானம் இல்லாத ஒருவர் எப்படிப் பேச முடியும்?

சீனு said...

//உண்மை தானே, யூதர்களைப் பற்றிய அடிப்படை விஷய ஞானம் இல்லாத ஒருவர் எப்படிப் பேச முடியும்?//

கேள்வியை பின்னூட்டமாக கேட்டு அதற்கு பதில் கிடைத்து பின்னூட்டத்தை அதிகரித்துகொள்ளும் போக்கு தேவையில்லை என்று நினைக்கிறேன்.

யூதர்களை பற்றி கேள்வி கேட்க யூத மதத்தை பற்றி தெரிந்திருக்கவேண்டும் என்று எண்ணுவது வடிகட்டின முட்டாள்தனம் என்பது என் கருத்து. விட்டா தோராவை ஒப்புவிக்க வேண்டும் என்று கூறுவீர்கள் போல...

Kalaiyarasan said...

//யூதர்களை பற்றி கேள்வி கேட்க யூத மதத்தை பற்றி தெரிந்திருக்கவேண்டும் என்று எண்ணுவது வடிகட்டின முட்டாள்தனம் என்பது என் கருத்து.//

இப்போதெல்லாம் தெரியாத ஒன்றை தெரிந்தது போல காட்டிக் கொள்வது தானா புத்திசாலித்தனம்?
எதற்கு உங்கள் அறியாமையை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்? இதிலே வெட்கப்பட எதுவும் இல்லை.

dondu(#11168674346665545885) said...

நான் இங்கே கூற வருவது உண்மைத் தகவல்.

யூதர்கள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக உலகின் பல இடங்களுக்கும் விரட்டியடிக்கப்பட்டு துன்புற்றனர். இத்தனை ஆண்டுகளில் எத்தனை தலைமுறைகள் கழிந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

வேறு எந்த இனமாக இருந்தாலும் இவ்வாறு சிதறிப் போனதற்கு தன் அடையாளங்களை இழந்து அழிந்து போயிருக்கும். ஆனால் யூதர்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொன்டனர். தாங்கள் எப்படியும் இஸ்ரேலுக்கே திரும்ப வருவோம் என்பதை வலுவாக நம்பினர்.

இந்த நம்பிக்கை தலைமுறை தலைமுறையாக வந்திருக்கிறது. யூதர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து அளவளாவி விட்டு விடை பெறும்போது அடுத்த ஆண்டில் ஜெரூசலத்தில் பார்ப்போம் என்று கூறிச் செல்வார்கள்.

அவர்களை துன்புறுத்திய ஒவ்வொரு இனமும் அழிந்தது. ரோமானியர்கள் ஒழிந்தனர். அதிலிருது ஆரம்பித்து பல இனங்கள் அழிந்தன. ஆனால் யூதர்கள் மட்டும் பிடிவாதமாக நின்றனர். கடைசியில் ஹிட்லரும் ஒழிந்தான்.

ஆனால் இஸ்ரவேலர்கள் உறுதியாக நின்று இஸ்ரேலை மீண்டும் நிறுவினர். இறந்த மொழியாகக் கருதப்பட்ட ஹீப்ரூ மொழியை மறுபடி பேசும் மொழியாக நிலை நிறுத்தினர்.

அவர்களது போராட்ட சரித்திரம் உலக இலக்கியங்களில் பொன்னெழுத்தில் எழுதப்பட வேண்டியவை.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் வரும் பல அற்புதங்களுக்கு மேலே சொன்னவை எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kalaiyarasan said...

அன்புடன் டோண்டு ராகவனுக்கு,

யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்த மக்களைக் குறிக்கும் சொல். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் போல தான் அவர்களும். கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஜெருசலேமில் இருந்து வந்தவர்கள் என்றும், முஸ்லிம்கள் எல்லோரும் மெக்காவில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறினால் எவ்வளவு அபத்தம்? அதே போன்றது தான் யூதர்கள் பற்றிய உங்கள் கதைகள். ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் இவ்வாறான கதைகள் இருப்பது வழமை. யூதர்கள் மட்டுமல்ல, வேறு பல சிறுபான்மை மதங்களை சேர்ந்த மக்களும் யூதர்களைப் போல நாடின்றி அலைகிறார்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியாது, தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. ஏற்கனவே இதனை சிறு பிள்ளைக்கு கூட புரியுமாறு, பல வழிகளில் தெளிவு படுத்தி விட்டேன். ஆனால் உங்களைப் போன்ற பலருக்கு புரிந்து கொள்ள விருப்பமில்லை. புரிந்தாலும் புரியாத மாதிரி நடிக்கிறீர்கள். உங்கள் மனதை சுற்றி திரை போட்டுக் கொள்கின்றீர்கள். எப்படி சொன்னாலும் உங்கள் மண்டையில் ஏறப்போவதில்லை.

sivakumar said...

தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப இயலாது. அதே போல் எந்த ஒரு தவறையும் கண்டுகொள்ளாமல் இவன் நம்மவன் ஆதரிப்பவர்களையும் ஏற்றுக் கொள்ள வைக்க இயலாது. இஸ்ரேலை ஆதரிப்பவர்களிடம் தென்படும் முரண்பாடுகள் என்னவெனில் தமிழர்கள் யூதர்களை இனமாகவும், இந்துக்கள்(முஸ்லிம்களும்) யூதர்களை மதமாகவும் கருதுவது. ஒரு இனத்தை, மதத்தைப் பற்றி மேன்மைக் கதைகளை நம்புவதும் சிலிர்த்துக் கொள்வதும் கூட ஒன்றுமில்லை. அதற்காக பாலஸ்தீனியர்களின் இரத்தம் குடிப்பதைக் கூட ஆதரிப்பதுதான் சகித்துக் கொள்ளமுடியவில்லை. அமெரிக்காவே செவ்விந்தியர்களின் அழிவிலும் கறுப்படிமைகளின் குருதியிலும் உருவானதுதான். ஆனால் இன்று அவர்கள் எங்கே ?யார் யூதர்களை 2000 வருடங்களாக விரட்டினார்களோ அவர்கள்தான் இஸ்ரேல் உருவாகவும் உதவினார்கள். விவரமாக யூதர்களை முஸ்லிம்களுடன் மோதவிட்டனர். யூதர்களும் யாரால் செமிட்டிக் என்று சொல்லித் தாக்கப்பட்டார்களோ அவரகளைப் பழிவாங்கவில்லை, தமக்கு ஆதரவளித்த பாலஸ்தீனர்களைத்தான் அழித்தார்கள், அழிக்கிறார்கள். யார் இஸ்ரேல் உருவாக உதவினார்களோ அவர்கள்தான் யூதர்களைக் கொன்ற நாஜிக்களுக்கு உதவவும் செய்தார்கள். நாஜிக்களால் கொல்லப்பட்ட யூதர்களும், தற்போதைய இஸ்ரேலும் ஒன்றா என்ன ?இஸ்ரேல் என்பது அமெரிக்காவின் மத்திய கிழக்கின் படைத்தளம் என்பதைத் தவிர அதிகமில்லை, அமெரிக்காவின் அருளின்றி அரை நிமிடம் கூட இஸ்ரேல் தாக்குப்பிடிக்க முடியாது. இஸ்ரேலியர்கள் (பாலஸ்தீனர்களைக் கொல்வதையும், யூதக் குடியேற்றங்களையும்) ஆதரிக்கும் தமிழர்கள் ஈழத்தின் சிங்களக் குடியேற்றத்தையும், இஸ்ரேலை ஆதரிக்கும் இந்துக்கள் காசுமீரில் இந்துக்கள் விரட்டப்பட்டதையும் ஆதரிக்க வேண்டும் பாரபட்சமாக பாலஸ்தீன முஸ்லிம்கள் அவலத்தை மட்டும் ஹமாஸ் பயங்கரவாதத்தால் நியாயப்படுத்தக் கூடாது சரிதானே?. யூதர்கள் மட்டுமா போராடினார்கள் தமிழர்கள், குர்தியர்கள், காசுமீரிகள் இன்னும் எத்தனையோ மத, இனங்கள் போராடுகின்றன. அதெப்படி இஸ்ரேல், கிழக்கு திமோர், கொசோவா மட்டும் "விடுதலை" பெற்றன? எல்லாம் வல்லரசுகளின் நோக்கத்திற்காக மட்டுமே.

Ramanan said...

Hi,
Humans genetically evolved for 4 million years to become a man and all these religions came to picture only for the past 4000 years. So the genetic theory is a crap.
I just want to propose a analogy in Hindu religion. In Hindu, Brahmins are considered to be intelligent then other community. Below are the some of the points of i think why they are smart,
1. Both are very religious people. They believe in them and try to understand them. More than science, maths, religion is sometimes very abstract. To understand the core of a theory in religion is more difficult.
2. Interestingly both these people starts to read religious books like Gita, Torah (Jews holy book) in very early life. When they understand the secret of life or life philosophy in such a small age the purpose of life becomes more clearer to them and they excel in life.
3. The religion is the catalyst for Jews binding which is also one reason like Jains, Parsi's in India

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//ஏற்கனவே இதனை சிறு பிள்ளைக்கு கூட புரியுமாறு, பல வழிகளில் தெளிவு படுத்தி விட்டேன். ஆனால் உங்களைப் போன்ற பலருக்கு புரிந்து கொள்ள விருப்பமில்லை. புரிந்தாலும் புரியாத மாதிரி நடிக்கிறீர்கள். உங்கள் மனதை சுற்றி திரை போட்டுக் கொள்கின்றீர்கள். எப்படி சொன்னாலும் உங்கள் மண்டையில் ஏறப்போவதில்லை. ///
Like your comment.

உங்களையும் பொறுமையா இருக்க விட மாட்டங்க போல.
எனக்கும் இப்போவெல்லாம் தெம்பே இருக்கிறது இல்லை. :(

புதிய பாமரன் said...

// "மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் வெள்ளை இனம் உயர்ந்த இடத்தில் இருக்கின்றது." என்று டார்வினும் தன் பங்குக்கு உளறி விட்டுச் சென்றுள்ளார்.//

செய்தி ஆச்சர்யமூட்டுகிறது. பெருஞ்சிந்தனையாளர் டார்வின் இப்படி சொல்லியிருப்பார் என்று நம்ப முடியவில்லை. ஒருகால் எடுத்தியம்பிய கூற்றாக இருக்குமோ? இதில் சிறிது விளக்கம் கொடுத்தால் நான் தெளிவு பெறலாம்.

Unknown said...

யூதர்களின் iq சராரியாக 140 கு மேல் ( மேதமை) உள்ளது என படித்துள்ளேன். அப்படி என்றால் அனைவரும் நோபல் வெல்லலாமே 100%. முடியாமல் போய்விட்டது அனைத்து இன மக்களிலும் முட்டாள், மேதை இருப்பது போல யூதர்களிலும் உள்ளனர் யூதர்கள் அறிவாளிகள் என்பது சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டானு சொல்ர மாதிரிதான்

Unknown said...

யூதர்களின் iq சராரியாக 140 கு மேல் ( மேதமை) உள்ளது என படித்துள்ளேன். அப்படி என்றால் அனைவரும் நோபல் வெல்லலாமே 100%. முடியாமல் போய்விட்டது அனைத்து இன மக்களிலும் முட்டாள், மேதை இருப்பது போல யூதர்களிலும் உள்ளனர் யூதர்கள் அறிவாளிகள் என்பது சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டானு சொல்ர மாதிரிதான்

Unknown said...

டார்வின் அவ்வாறு கூறியிருக்க வாய்ப்பில்லை .

சந்திர மௌலி said...

யூதர்கள் புத்திசாலிகள் .....இருக்கும் இடத்தில் எல்லாம் தன்
திறமைகளை,உழைப்பை ,வைத்து முன்னேறிய இனம் ...

Robert dinesh said...

சரியாய் சொன்னீர்கள் ராஜரத்தினம்

Robert dinesh said...

யூத வெறுப்புதான் இத்தகைய கட்டுரைகள் வர காரணம்