Tuesday, October 26, 2010

"ஆண்டவன் ஆணை! இனப்படுகொலை செய்வீராக!" - பைபிள்

மனித குலத்திற்கு விரோதமான இனவழிப்பு செய்யுமாறு மதங்களே போதிக்கின்றன. விவிலிய நூலில் (பழைய ஏற்பாடு) உள்ள சில வாக்கியங்கள் திடுக்கிட வைக்கின்றன. இனவழிப்பு என்ற அத்திவாரத்தின் மீது தான் இஸ்ரேல் கட்டப்பட்டது. அதற்கு விவிலிய நூலே சாட்சி கூறுகின்றது.

"நாம் அனைத்து நகரங்களையும் கைப்பற்றினோம், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் அழித்தோம். ஒருவரையும் விட்டு வைக்கவில்லை." (Deuteronomy 2:34)

"ஆண்டவர் யாஹ்வே உங்களுக்கு உரிமையாக்கிய நகரங்களில், மூச்சு விடும் எதையும் உயிரோடு விடாதீர்கள்." (Deuteronomy 20:14-15)


"ஐ நகரத்தவர்களை இஸ்ரேலியர்கள் பாலைவனம் வரையில் விரட்டிச் சென்று கொன்றார்கள். ஐ நகரத்திற்கு திரும்பி வந்து அங்கே வாழ்ந்த அனைவரையும் கொன்றார்கள். அன்று மட்டும் ஆண்களும், பெண்களுமாக பன்னீராயிரம் ஐ நகர மக்கள் கொலை செய்யப்பட்டனர்." (Joshua 8:24-25)


The Bible: A Manual for Genocide


The Bible: A Manual for Genocide (Vimeo)The Bible: A Manual for Genocide

12 comments:

மதுரை சரவணன் said...

//அன்று மட்டும் ஆண்களும், பெண்களுமாக பன்னீராயிரம் ஐ நகர மக்கள் கொலை செய்யப்பட்டனர்." (Joshua 8:24-25)///

ஆச்சரியமாக உள்ளது.

Anonymous said...

இன்னிக்கு தான் பழைய ஏற்பாட்டை புதுசா படிச்ச மாதிரி கண்டு பிடிச்சு சொல்லி இருக்கீங்க. ஒண்ணு அமெரிக்கனை திட்டணும் இல்ல யூதர்களை திட்டணும். அவ்வளவு தானே.

profit500 said...

உண்மை கசப்பதில் வியப்பில்லை ! இதை , மதங்களை தாண்டி மனிதநேயத்தோடும் பார்க்கலாம்

அஸ்பர் said...

தேடுரார் ல்ல? விடுங்க அவர... கலையகம் நீங்கள் உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள். நன்றி

Anonymous said...

இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டு வன்னமான விடயங்களை அன்புமிக்கதாக மாற்றி தந்துள்ளார். அதுதான் இப்போது பின்பற்றப்படுகிறது. சிலர் கிறிஸ்தவர்கள் இதை பின்பற்றாமைக்கு இயேசுவோ, பைபிளோ காரணமல்ல. ஆனால் பைபிலிலுள்ள அதுவும் கைவிடப்பட்ட சட்டங்களையும் சம்பவங்களையும் தேடிப் பிரசுரிப்பதில் உங்களுக்கு அலாதி பிரியம்போல் உள்ளது.

Anonymous said...

பழைய பஞ்சாங்கங்களை தூசு தட்டிப் பார்த்தக் கொண்டு ஆச்சரியத்துடன் பெருமூச்சு விடுங்கள். காலடியில் கதறக்கதற உதவி கேட்டுத் துடித்த 50,000 பேர் வரையில் நவீன ஹிட்லரின் கொலவெறிபடையால் கொல்லப்படும் போது மானாடவும் மயிலாடவும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். ஒரு இனம் நாதியற்று அழிந்தது.

Massy spl France. said...

அடச்சீ! இப்படியுமா ஒரு மதம் கற்பிக்கும்!
அநானியாக பதிலளிக்கும் பயந்தாங்கொள்ளி ஐயாவே, ஆகமொத்தம் பதிவில் வெளி வந்திருக்கும் உண்மைகளை நீங்கள் மறுக்கவில்லை. இது சரிதானே?

இவ்வளவு காலமாக இஸ்ரேலை காப்பாற்றி வந்த அமெரிக்காவானது சீன அதிர் பலத்திற்கு பின் இன்னும் சில ஆண்டுகளில் தன்னுடைய உலக வல்லரசு இடத்தை இழந்து திவாலாகப் போகிறது. இப்போதே அமெரிக்காவில் ஏழைகளும் பிச்சைக்காரர்களும் அதிகமாகிக்கொண்டே வருகிறார்கள். இன்னொரு பக்கம் இஸ்ரேலுக்கு ஈரானால் ஆப்பு காத்திருக்கிறது. இவ்வளவு காலமாக பாலஸ்தீன மக்களை படுகொலை செய்துவந்த இஸ்ரேலியர்கள் இன்னும் என்னாவர்கள் என்பதே பெரிய கேள்விக் குறிதான்.

Anonymous said...

மாசிலா நீங்கள் எந்த மதம்? செவ்வாய் கிரகவாசி போல் உள்ளது உங்கள் பேச்சு. அனானி இல்லாது பதிலளித்தால் பயந்தாங் கொள்ளி அற்றவராகிவிடுமா? அது சரி இங்கு பயப்பட என்ன இருக்கிறது? விருப்பான பெயரில் ID வைத்துக்கொண்டு போலி படங்களை வைத்திருப்பதிலும் பார்க்க அனானியாக இருப்பது உத்தமம். தேவைப்பட்டால் சொல்லுங்கள் இமெயில் ID தருகிறேன்.

//பதிவில் வெளி வந்திருக்கும் உண்மைகளை நீங்கள் மறுக்கவில்லை. இது சரிதானே?//

மறுத்ததால்தான் பதில்போட்டுள்ளேன். இதைக்கூட உங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லையா? பதிலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை போலும்?

//இஸ்ரேலுக்கு ஈரானால் ஆப்பு காத்திருக்கிறது.//

"அடச்சீ! இப்படியுமா ஒரு மதம் கற்பிக்கும்!" என வியந்த மனிதநேயவாதி ஆப்பு வைப்பதில் அலாதிப்பிரியப்படுகிறார்போல் உள்ளது. எந்த மதத்திலிருந்து கற்றீர் இந்த ஆப்பு வைக்கும் கலாச்சாரத்தை?

//பாலஸ்தீன மக்களை படுகொலை செய்துவந்த இஸ்ரேலியர்கள் இன்னும் என்னாவர்கள் என்பதே பெரிய கேள்விக் குறிதான்.//
பாலஸ்தீனர்கள் செய்யும் கொலைகள் படுகொலைகள் இல்லையே?
இஸ்ரேலின் பலம் தெரியாதுபோல் உள்ளது உங்கள் பேச்சு. முடிந்தால் உதாரணத்திற்கு இஸ்ரேலின் genetic bomb பற்றிப்படித்துப்பாருங்கள்.

வானம் said...

அனானி,
தமிழர்கள் அழிக்கப்பட்டதை சொன்னால் கொல்லப்பட்ட அப்பாவி சிங்களர்களைப்பாரென்கிறாய். இஸ்ரேலின் கொலைவெறியாட்டத்தைப்பற்றி சொன்னால் பாலஸ்தீனியர்களால் கொல்லப்பட்ட அப்பாவி இஸ்ரேலியர்களைப்பார் என்கிறாய்.அடுத்தவரை மனநல மருத்துவருக்கு பரிந்துரைப்பதை விட்டு உமது மனநலத்தை(அப்படி ஏதாவது இருந்தால்)சீர்படுத்த முயற்சிக்கவும்.

Massy spl France. said...

//மாசிலா நீங்கள் எந்த மதம்?//
மதம் மனிதனுக்கு ஒரு தேவையே இல்லை. மதம் மடையர்களின் உலகம். மதம் என்பது திறமையற்ற சுயமாக சிந்தித்து செயல்பட திராணியற்றவர்களின் புகலிடம். மதம் என்பது காலாவதியான சங்கதி.

உங்கள் 'ID'யை எனக்கு தனிப்பட்ட வகையில் மின்னஞ்சலில் அனுப்ப கேட்பதற்கு நீங்கள் எனக்கு எந்த வகையிலும் அறிமுகமானவர் இல்லை. முடிந்தால் இப்பொது தளத்தில் வெளிவந்து முகத்தை காட்டுங்கள்.

உங்களது முதல் பின்னூட்டத்தில் நீங்கள் எவ்விடத்திலும் 'மறுப்பு' என்ற வாக்கியத்தை உபயோகிக்கவே இல்லை என்பதை நினைவு படுத்துகிறேன்.

உங்களது 'ஜெனட்டிக் பாம்' பற்றி நீங்கள் மட்டும் மார்தட்டிக் கொள்ளலாம். இட்லரின் அசைக்க முடியா பேய் போராட்சி சின்னாபின்னமாகி அழிந்தது, வல்லரசு அமெரிக்கா வியட்நாமிய போரில் அடிவாங்கி பின்வாங்கியது, ஆப்கனிஸ்தானில் இரஷ்யா மற்றும் இன்றைய பண்ணாட்டு படைகள் அடிவாங்கி பின்வாங்கி வருவது எல்லாம் வரலாறு கற்றுத்தரும் பாடங்கள். நீங்கள் இன்னும் ஏதோ பாம் வைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டிவருவது ஏளனமாக இருக்கிறது.

இனியும் உங்களிடம் உரையாடி என் நேரத்தை வீனடிக்க விரும்பவில்லை. என் தமிழ் (குல) மக்களின் வாழ்வு பிரச்சிகளை பற்றி ஆராய்ந்து பேசுவது எழுதுவம் அவர்களுக்காக செயல்படுவதே என் சமூகத்திற்கு நன்று. காத தூரத்தில் உள்ள நீங்களும் உங்களின் ஒத்துவராத சமூகமும் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கு என்ன?

முற்றும்.

Anonymous said...

வானம்,

ஏதோ பாரிய மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறீர்கள் போலுள்ளது? அனானியாக பதிவிடும் எல்லோருக்காகவும் ஒருவர் பொறுப்பேற்க முடியாது. உமது குழப்பத்தை தீர்த்துவிட்டு முடிந்தால் பதில் சொல்லும் வீணாக குழம்ப வேண்டாம். அடுத்தவரை மனநல மருத்துவருக்கு பரிந்துரைப்பதை விட்டு உமது மனநலத்தை சீர்படுத்த முயற்சிக்கவும்.

Anonymous said...

//மதம் மடையர்களின் உலகம்.//
மாசிலா நீங்கள் மதமற்ற மடையர் உலகத்தைச் சேர்ந்தவரா?

//முடிந்தால் இப்பொது தளத்தில் வெளிவந்து முகத்தை காட்டுங்கள்.//
நீங்கள் முகம் காட்டிக் கொண்டா இருக்கிறீர்கள்?

//'மறுப்பு' என்ற வாக்கியத்தை உபயோகிக்கவே இல்லை//
மறுப்பு என்ற வார்த்தையை பிரயோகித்துத்தான் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை.

//உங்களது 'ஜெனட்டிக் பாம்' பற்றி நீங்கள் மட்டும் மார்தட்டிக் கொள்ளலாம். இட்லரின் அசைக்க முடியா பேய் போராட்சி சின்னாபின்னமாகி அழிந்தது//
உங்கள் "ஆப்பு" உதாரணத்திற்குத்தான் 'ஜெனட்டிக் பாம்' பற்றிக்குறிப்பிட்டேன். நீங்கள் மட்டும்தான் மார்தட்ட விரும்புகிறீர்கள்போல் உள்ளது.
"இஸ்ரேலுக்கு ஈரானால் ஆப்பு காத்திருக்கிறது" என்று எழுதும்போது மட்டும் உங்களுக்கு வரலாற்றுப்பாடம் மறந்துவிட்டதுபோலும்.