Monday, November 29, 2010

9/11 தாக்குதல் இஸ்ரேலில் திட்டமிடப்பட்டதா?

//சகோ.கலையரசன் ஆரம்பத்திலிருந்தே உங்களிடம் இஸ்ரேல் தொடர்பாக நடுநிலை இல்லை. சான்றாக சர்வதேச பயங்கராதி பின்லேடன் கூறினான். நான் தான் அமெரிக்காவின் World Trade Center ஐ தகர்தேன் என்று.ஆனால் நீங்கள் எழுதுகிறீரகள் இல்லை இது இஸ்ரேலின் செயல் என்று. இதிலிருந்து உங்கள் நடுநிலையை உணரலாம்.//
(Colvin என்ற நண்பரின் பின்னூட்டம்.)

"9 /11 தாக்குதலை ஆப்கானிஸ்தானில் ஒளிந்திருந்த பின்லாடன் திட்டமிட்டார் என்பதற்கான ஆதாரங்களை இதுவரை யாரும் சமர்ப்பிக்கவில்லை. பின்லாடன் அவ்வாறு கூறுவதாக தெரிவித்த வீடியோ, ஓடியோ யாவும் மொழி திரிப்புகள் என்பது பின்னர் நிரூபணமானது. (நமக்கு அரபி மொழி தெரியாதென்பதால் நன்றாக ஏமாற்றலாம்.) ஆயினும், 9/11 தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது என்று, இதுவரை நான் எங்கேயும் குறிப்பிடவில்லை. தற்போது கர்த்தரின் கிருபையினால், "9/11 தாக்குதலை இஸ்ரேல் திட்டமிட்டு நடத்தியிருக்குமா?" என்பதை ஆராயும் வீடியோ கிடைத்துள்ளது. "Friends of Israel" என்ற தலைப்பின் கீழ், அவுஸ்திரேலியாவை சேர்ந்த Anthony Lawson அந்த ஆய்வை செய்துள்ளார். நான் எழுதாத ஒன்றை எழுதியதாக கூறினார் Colvin. ஆயினும், "9/11 லில் இஸ்ரேலின் பங்கு பற்றிய தகவலை" சகோதரர் Colvin மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்பது கர்த்தரின் விருப்பம் போலும். அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக.
Aussie Trades Unionist Exposes 9/11 Cover-up

11 comments:

Jayadev Das said...

நூற்றுக் கணக்கான இஸ்ரேலியர்கள் இரட்டை கோபுரத்தில் பனி புரிந்து வந்திருக்கின்றனர், ஆனால் தாக்கப் பட்ட தினத்தன்று ஒரு இஸ்ரேலியர் கூட பணிக்கு வரவில்லையாம், இதை என்னவென்று சொல்வது? அவர்கள் திட்டமிட்டார்களா இல்லையா என்று சொல்ல முடியாவிட்டாலும் தெரிந்து வைத்திருந்தனர் என்று சந்தேகிக்க வாய்ப்புள்ளது!

Mohamed Faaique said...

நன் இது சம்பந்தமான ஒரு கட்டுரை எழுத சொல்ல வேண்டுமென்று எண்ணியிருந்தேன். இது சம்பந்தமாக இன்னும் எழுதலாமே... (if u dnt mind)

மனசாட்சி said...

இது பற்றி இன்னும் தகவல்கள் எதிர்பார்க்கிறேன் தோழரே !

விக்கி லீகஸ்'ஸின்(WIKILEAKS) நடவடிக்கை பற்றி ஒரு தொடர் எழுதுங்கள் தோழரோ ! நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்.

Kalaiyarasan said...

நன்றி, மனசாட்சி & Mohamed Faaique,
நான் இவ்வளவு பதிவுகள் இடுவதே எனது சக்திக்கு மீறிய செயல். இதையே முழு நேர வேலையாக செய்தால் தான் எல்லா விதமான கட்டுரைகள் எழுதுவதற்கு நேரம் கிடைக்கும்.

Colvin said...

2161v
//நமக்கு அரபி மொழி தெரியாதென்பதால் நன்றாக ஏமாற்றலாம்.//
சகோ.கலையரசன் இது உங்களின் அறியாமை. அரபும், ஆங்கிலமும் தெரிந்த மக்களின் அநேகம் பேர் உள்ளனர். பின்லாடனின் பேச்சும் போடப்பட்ட ஆங்கில வாக்கியங்களும் பிழைத்திருந்தால் உடனே அறியக்கூடியதாக இருந்திருக்கும். அல்-ஜெஸீராவுக்கு பின்லாடன் ஏற்கனவே தானே இக்காரியத்தை செய்ததாக வீடியோ அனுப்பியிருந்தான். இது அக்காலகட்டத்தில் சன்டிவியிலும் ஒளிபரப்பாகியது. நிற்க, இஸ்ரேலுக்கு இரட்டைமாடிக்கோபுரத்தை தாக்க வேண்டிய அவசியம் ஏதுவும் இல்லை. ஏனென்றால் இஸ்ரேலின் வர்த்தக நலன்களும் இதனால் பாதிக்கப்பட்டன என்பதும் உண்மை

Colvin said...

//இதையே முழு நேர வேலையாக செய்தால் தான் எல்லா விதமான கட்டுரைகள் எழுதுவதற்கு நேரம் கிடைக்கும்.//

ஒரு சில கட்டுரைகள் தவிர்த்து உங்கள் கட்டுரைகள் மிகவும் சிறப்பானவை. அநேக விடயங்களை கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பெரும்பாலும் அவை எனக்கு புதிய விடயங்களாகத் தான் இருக்கிறது.

Colvin said...

\\கர்த்தரின் விருப்பம் போலும். அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக.\\

சமயசார்பற்று சிந்திக்கும் நீங்கள் இதுபோன்ற வார்த்தைகளை தவிர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் எனது பின்னூட்டம் எனது சொந்தக் கருத்து. அவற்றுக்குள் கர்த்தர், முருகன், அல்லா... இவை போன்றவைகளை மத அடையாளச் சொற்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

Kalaiyarasan said...

//சகோ.கலையரசன் இது உங்களின் அறியாமை. அரபும், ஆங்கிலமும் தெரிந்த மக்களின் அநேகம் பேர் உள்ளனர். பின்லாடனின் பேச்சும் போடப்பட்ட ஆங்கில வாக்கியங்களும் பிழைத்திருந்தால் உடனே அறியக்கூடியதாக இருந்திருக்கும். அல்-ஜெஸீராவுக்கு பின்லாடன் ஏற்கனவே தானே இக்காரியத்தை செய்ததாக வீடியோ அனுப்பியிருந்தான்.//

In the chapter preceding that examination, I discussed two videotapes containing purported interviews of Osama bin Laden in the fall of 2001, when the issue was whether he had been responsible for the 9/11 attacks. I suggested that both of these tapes, in which bin Laden allegedly admitted his responsibility, were fakes. If they were, I pointed out, this fact would increase the likelihood that all of the “Osama bin Laden tapes” appearing in the following years – when the question of whether he was still alive was added to that of his responsibility for 9/11 – were also fakes.

The clearest example, I argued, was the most famous of the so-called bin Laden confession videos. Having allegedly been found in a private home in Jalalabad, Afghanistan, in late November 2001, it is sometimes called the “November 9 bin Laden video,” because this date was stamped on it, implying that this was when it was made. It is also called the “bin Laden video of December 13,” because that was the date on which it was released to the public by the Pentagon – which is perhaps significant, given the evidence that bin Laden may have died on that day. (If he had, he would have obviously, and perhaps conveniently, been unable to comment on whether the tape was authentic.) In any case, I provided several reasons for concluding that this video was almost certainly fabricated.

I also suggested, with greater tentativeness, that another pre-2002 video had been fabricated. This one had been described in a November 11, 2001, article in London’s Telegraph by David Bamber entitled “Bin Laden: Yes, I Did It.” According to Bamber, the Telegraph had on the previous day “obtained access” to a video in which “Osama bin Laden has for the first time admitted that his al-Qa'eda group carried out the [9/11] attacks.” Bamber added that this video, which would “form the centrepiece of Britain and America's new evidence against bin Laden,” was going to be released to the public on November 14.4

When November 14 came, however, British Prime Minister Tony Blair said that his government did not actually have the video or even a complete transcript. But his government released quotations said to be “extracts” from it – quotations that were widely regarded as confirming Bamber’s assertion that bin Laden, when asked about 9/11, had in effect replied: “I did it.”

Saying that it was “hard to know what to make of this episode,” I argued that, if both the Telegraph and “intelligence sources” had copies of such a video, then Blair’s government would surely also have a copy. And if it did have a video in which bin Laden had for the first time confessed his responsibility for the 9/11 attacks, Blair’s government – which at the time was encountering much skepticism from the Muslim world about bin Laden’s responsibility for those attacks – would surely have released it.

(http://www.globalresearch.ca/index.php?context=va&aid=18923)

Kalaiyarasan said...

//சகோ.கலையரசன் இது உங்களின் அறியாமை. அரபும், ஆங்கிலமும் தெரிந்த மக்களின் அநேகம் பேர் உள்ளனர். பின்லாடனின் பேச்சும் போடப்பட்ட ஆங்கில வாக்கியங்களும் பிழைத்திருந்தால் உடனே அறியக்கூடியதாக இருந்திருக்கும். அல்-ஜெஸீராவுக்கு பின்லாடன் ஏற்கனவே தானே இக்காரியத்தை செய்ததாக வீடியோ அனுப்பியிருந்தான்.//

சகோ. கொல்வின்,
அரபு, ஆங்கிலம் இரு மொழியும் கற்றவர்கள் நிறைய உண்டு என்பது உண்மை தான். ஆனால் வெகுஜன ஊடகங்கள் எவ்வாறு மொழித் திரிப்பு செய்கின்றன என்பதை அறிவது அவசியம். ஆரம்பத்தில் பின்லாடன் உரிமை கோரியதாக வந்த வீடியோவில் (CNN வெளியிட்டது) அத்தகைய பிழையான மொழிபெயர்ப்பு இடம்பெற்றது. வீடியோவில் குரல்கள் தெளிவாக இல்லாததை சாதகமாக பயன்படுத்தி அந்த ஏமாற்று வேலை நடந்தது.
சில வருடங்களுக்கு பின்னர் பின்லாடன் உரிமை கோருவதாக அல்ஜசீரா ஒளிபரப்பியது உண்மை தான். ஆனால் அல்ஜசீரா பின்லாடனின் சொந்த தொலைக்காட்சியா? அவர்களும் பரபரப்புக்காக வெளியிட்டிருக்கலாம். "உரிமை கோரிய" குரல் பின்லாடனுடையதா? பின்லாடன் பெயரில் வேறு யாரும் அந்த வீடியோவை அனுப்பியிருக்க முடியாதா? ஊர்ஜிதப் படுத்தப் படாத அனாமதேய வீடியோவை எந்த நீதிமன்றத்திலாவது ஆதாரமாக சமர்ப்பிக்கலாமா? இவை எல்லாம் அப்பாவி பார்வையாளர்களை கிளுகிளுப்பூட்ட மட்டுமே பயன்படும். சகோ. கொல்வின், அறிவுஜீவியான நீங்களே அது உண்மை என்று நம்புகிறீர்கள். அது அவர்களது பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி அல்லவா?

Kalaiyarasan said...

//இஸ்ரேலின் வர்த்தக நலன்களும் இதனால் பாதிக்கப்பட்டன என்பதும் உண்மை//

WTC யில் பல நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தன. WTC கட்டடம் பெருஞ் செலவில் கட்டப்பட்டது. ஆனால் செலவை ஈடுகட்டும் வருமானம் கிடைக்கவில்லை. அலுவலகங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் இந்த தகவலை தாக்குதலுக்கு முன்னமே தெரிவித்திருந்தது.
சில இஸ்ரேலியர்கள் தாக்குதலுக்கு முன்னர் தம்மிடம் இருந்த பங்குகளை விற்றதற்காக FBI யினால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார்கள்.

Kalaiyarasan said...

//சகோ.கலையரசன் இது உங்களின் அறியாமை. அரபும், ஆங்கிலமும் தெரிந்த மக்களின் அநேகம் பேர் உள்ளனர். பின்லாடனின் பேச்சும் போடப்பட்ட ஆங்கில வாக்கியங்களும் பிழைத்திருந்தால் உடனே அறியக்கூடியதாக இருந்திருக்கும்.//

சகோ.கொல்வின் இரண்டு மொழிகளும் தெரிந்த எல்லோரும் உண்மையின் பக்கம் நிற்பதில்லை. பிழையான மொழிபெயர்ப்பு அவர்களது அரசியல் நலனுக்கு சார்பானது என்றால் கண்டு கொள்ள மாட்டார்கள்.
அதற்கு பல உதாரணங்களை காட்ட முடியும்.
உதாரணம் 1 : "இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அழிக்கப் போவதாக" அஹ்மதினஜாத் கூறியது ஒரு பிழையான மொழிபெயர்ப்பு. அதறகான ஆதாரம் இதோ:
Translation controversy
Many news sources repeated the Islamic Republic of Iran Broadcasting statement by Ahmadinejad that "Israel must be wiped off the map",[5][6] an English idiom which means to "cause a place to stop existing",[7] or to "obliterate totally",[8] or "destroy completely".[9]

Ahmadinejad's phrase was " بايد از صفحه روزگار محو شود " according to the text published on the President's Office's website.[10]

http://en.wikipedia.org/wiki/Mahmoud_Ahmadinejad_and_Israel

உதாரணம் 2 : CNN ஒரு முறை புட்டினின் ரஷ்ய நேர்காணலை ஆங்கிலத்தில் பிழையாக மொழிபெயர்த்தது. அதற்கான ஆதாரம் இதோ:

CNN சார்பில் Matthew Chance ரஷ்ய பிரதமர் புத்தினை நேர்கண்டார். ஜோர்ஜிய போருக்கு பின் ஏற்பட்ட, மேற்குலகிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான "பனிப்போர் நெருக்கடி" குறித்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பிய போது, புத்தின் அதற்கு தகுந்த பதில்களை அளித்த போதும், இதுவரை முழுமையான பேட்டியை பார்த்தவர்கள் மிகக்குறைவு. புத்தின் அமெரிக்கா குறித்து கூறிய குற்றச்சாட்டுகளை மட்டும் CNN தெரிந்தெடுத்து ஒளிபரப்பியது. அதுவும் சரியான மொழிபெயர்ப்பு செய்யாமல், மொழிதிரித்து தான் ஒளிபரப்பியது. எமக்கு ரஷ்ய மொழி தெரியாது என்பதால், ஏமாற்றுவது எளிதல்லவா?
http://kalaiy.blogspot.com/2008/09/cnn.html