Monday, November 29, 2010

அகதிகளை அடித்து வதைக்கும் டென்மார்க் போலிஸ் குண்டர்கள்

கோபன்ஹெகன் நகரில் ஒரு தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்த அகதிகளை, போலிஸ் குண்டர்கள் பலாத்காரமாக வெளியேற்றியுள்ளனர். டென்மார்க்கில் கடந்த வருடம் (13-8-2009) நடந்த இந்த சம்பவம், வழமை போலவே "சுதந்திர" ஊடகங்களின் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருந்தது. "உன்னத நாகரீகத்தைக் கொண்ட மேற்குலக நாடுகளில் போலிஸ் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்," என்று இப்போதும் நம்பும் படித்த பாமரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்காக இந்த வீடியோவை கலையகத்தில் பதிவிட விரும்புகிறேன். அமைதியான வழியில் போராடிய அகதிகளையும், டேனிஷ் ஆதரவாளர்களையும், போலிஸ் எவ்வாறு மிருகத்தனமாக அடித்து வதைக்கின்றது என்பதை இந்த வீடியோவில் காணலாம். அகதிகளை அடித்தால் கேட்பதற்கு ஆளில்லை. மனித உரிமை குறித்து பாடம் எடுப்பவர்களும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஊடகங்களுக்கு இதெல்லாம் ஒரு செய்தியல்ல.

1 comment:

எஸ் சக்திவேல் said...

(குறிப்பாக மேற்கத்தைய) ஊடகங்களின் கீழ்த்தரத்தை நான் நம்மவர்கள் "கொடி" பிடித்து ஊர்வலம் நடத்தியபோதுதான் முதல் முதல் புரிந்து கொண்டேன். 10 பேர் "கொடி" பிடித்தாலே எல்லாப் பேப்பர் /டிவி இலும் முதல் பக்கத்தில் /முதல் 5 நிமிடத்தில் செய்தி வந்து விடும். நம்மவர் 2000 பேர் கொடி பிடித்தும்/ ஊர்வலம் போயும் ஒரு செய்தி கடைசி பக்கத்திலும் வரவில்லை. என்னே ஒரு ஊடக நேர்மை. (இதை எழுதுவதால் கொடி/ ஊர்வலம் எல்லாம் செய்தது சரியான வகையில் என்று நான் சொல்லவில்லை. அது வேறு topic.)