Saturday, March 14, 2009

மேற்குலகிலும் தடுப்பு முகாம்கள் இருக்கின்றன - இதோ ஆதாரம்

இலங்கை அரசு வன்னித் தமிழரை தடுப்பு முகாம்கள் அடைத்து வைப்பதாக, மேற்குலக நாடுகளுக்கு முறைப்பாடு செய்பவர்கள், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மேற்குலக நாடுகள் தான், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை, தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. அது மட்டுமல்ல, தற்போதும் இந்த தடுப்பு முகாம்கள், மனித உரிமைகள் பற்றி வாய்கிழிய உலகிற்கு உபதேசம் செய்யும் நாடுகளில், நடைமுறையில் உள்ளன. அமெரிக்க, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கு-ஐரோப்பிய நாடுகளில் அகதிகளையும், சட்டவிரோதமாக தங்கி இருப்போரையும், வருடக்கணக்காக தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து வதைப்பது அரசின் கொள்கையாக உள்ளது.

*** நெதர்லாந்தில் உள்ள தடுப்புமுகாம் பற்றிய ஆவணப்படம்
*** "அவுஸ்திரேலியாவின் அகதிகள் சிறைச்சாலை" - ஆவணப்படம்

அவுஸ்திரேலிய தடுப்புமுகாம் பற்றிய காணொளி:

10 comments:

Anonymous said...

What you are going to say? We also can give lots of evidence that fathers are raping their daughters. But we have to say whether these are correct or not. Just giving the evidence will not do anything.

Kalaiyarasan said...

Anonymous,
The ruling class is doing same things in every country. Whether it's in Sri Lanka, India or Western countries, they all repress the people from other communities. The rulers of the Western countries are not angels. I forgot to mention about Guantanamo detention center in this post.

Anonymous said...

What are you going to say? You think they are right to detain refugees in concentration camps?
நானும் ஒரு அகதியாக ஐரோப்பிய நாடொன்றின் தடுப்பு முகாமிற்குள் இருந்த வலி எனக்குத் தான் தெரியும்.

Kalaiyarasan said...

Thank you Mohan.

Anonymous said...

உண்மையை அப்படியே சொல்லியுள்ளீர்கள்.ஆனால் புலி ஆட்களுக்கு அது பிடிக்காது.

Kalaiyarasan said...

இலங்கையில் தடுப்பு முகாம்களை உருவாக்கும் ஆலோசனை மேற்குலகில் இருந்து தான் வந்தது. பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய நாடுகள் சபை ஆகியன இந்த தடுப்பு முகாம்களை அமைக்கும் நிதியையும், பராமரிக்கும் செலவையும் வழங்க இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளன. அங்கிருந்து புதிய அகதிகள் தமது நாட்டினுள் வரக்கூடாது என்பதில் அவை அக்கறை காட்டுகின்றன.

Boopathy said...

I hope you are differing in your view on Ealam Tamils. No country is holding their own citizens in the refugee camps. If some countries are doing like that can you give some example.

Kalaiyarasan said...

Erode Tamilan, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. எந்த சமூகத்தினரை அடைத்து வைத்திருந்தாலும் தடுப்பு முகாம்கள் எங்கேயும் ஒரே மாதிரியாக தான் அமைந்துள்ளன. இன்றைய காலத்தில் மேற்குலக நாடுகள் வெளிநாட்டு அகதிகளை மட்டுமே அடைத்து வைப்பதால், அது மனிதாபிமான செயலாகி விடாது. இந்த நாடுகளின் சொந்தப் பிரசைகள் கிளர்ச்சி எதிலும் ஈடுபடாததால் அவர்களை தடுத்து வைக்கும் அவசியம் அரசிற்கு கிடையாது. இருப்பினும் மேற்கு ஐரோப்பாவில், இரண்டாம் உலகப்போர் முடிவில், அடித்தட்டு மக்களை நாகரீகப்படுத்துவது என்ற பெயரில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்தனர். தேவைப்பட்டால் இதற்கான வரலாற்று ஆவணங்களை காட்ட முடியும்.

நண்பரே, பின்வரும் நாடுகள் தமது சொந்த பிரசைகளை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கின்றன:

1. தென் ஆப்பிரிக்காவில் பூர் யுத்தத்தின் பின்னர், டச்சு மொழி பேசும் மக்களை ஆங்கிலேயர்கள் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வதைத்தனர்.
2. அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக பூர்வீக குடிகளை(அபோரிஜின்) தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து நாகரீகம் சொல்லிக் கொடுக்கப்பட்டனர்.
3. மலேசியாவில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான போரில், பிரிட்டிஷ் ஆலோசனையின் பேரில், சிறுபான்மை சீன சமூகத்தை சேர்ந்த மக்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்தனர்.
4. மொரோக்கோவில் சிறுபான்மை இனமான சஹாராவி மக்களை இப்போதும் தடுப்பு முகாம்களுக்குள் வைத்திருக்கின்றனர்.
5. செக், ஸ்லோவாக்கிய குடியரசுகளில் சிறுபான்மை ரோமா(ஜிப்சி) இன மக்களின் குடியிருப்புக்களை சுற்றி மதில் கட்டி அவற்றை தடுப்பு முகாம்களாக மாற்றியுள்ளனர்.
6. இஸ்ரேலின் பிரசைகளான, பாலஸ்தீன அரபுக்கள் வாழும் பிரதேசங்கள் தடுப்பு முகாம்களாக மாறியுள்ளன.

இந்தப் பட்டியல் இன்னும் நீளுகிறது....

Anonymous said...

Mohan said...
What are you going to say? You think they are right to detain refugees in concentration camps?
நானும் ஒரு அகதியாக ஐரோப்பிய நாடொன்றின் தடுப்பு முகாமிற்குள் இருந்த வலி எனக்குத் தான் தெரியும்.

14 March 2009 22:12
கலையரசன் said...
Thank you Mohan.

WHAT DO YOU MEAN BY THANK YOU?

YOU R HAPPY FOR THAT

WHAT U R COMING TO SAY ???.....

U WANT TAMIL PEOPLE TO BE SLAVE

Anonymous said...
What you are going to say? We also can give lots of evidence that fathers are raping their daughters. But we have to say whether these are correct or not. Just giving the evidence will not do anything.

14 March 2009 20:55
கலையரசன் said...
Anonymous,
The ruling class is doing same things in every country. Whether it's in Sri Lanka, India or Western countries, they all repress the people from other communities. The rulers of the Western countries are not angels. I forgot to mention about Guantanamo detention center in this post.

WHAT IS ANONY QUESTION AND WHAT YOU ANSWER ?

R U A TAMILAN ????????????

Anonymous said...

பிரித்தானியாவில் இருந்து அண்மையில் 150 பேர் வரை இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் உள்ள பிரித்தானிய துதரகமும் இவர்கள் திருப்பி அனுப்பபட்டதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இலங்கையில் யுத்தம் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது அதனால் தான் தாங்கள் இப்படியான இறுக்கமான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். மற்றது திருப்பி அனுப்பப்படுவது தொடர்பாக இலங்கைக்கும் பிரித்தானியாவுக்குமிடையே ஒரு பிரத்தியேக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டு உள்ளதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

http://thesamnet.co.uk/?p=8723