Showing posts with label ஆரியர்கள். Show all posts
Showing posts with label ஆரியர்கள். Show all posts

Wednesday, February 14, 2018

இந்துக்களின் தாயகம் துருக்மேனிஸ்தானில் உள்ளது!


துருக்மெனிஸ்தான் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில், Gonur Tepe எனும் இடத்தில் நான்காயிரம் வருடங்களுக்கு முந்திய பண்டைய நாகரிகம் கண்டுபிடிக்கப் பட்டது. எழுபதுகளில், Viktor Sarianidi என்ற ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடித்த பின்னர் தான் மத்திய ஆசியாவிலும் ஒரு வெண்கல கால நாகரிகம் இருந்துள்ளமை தெரிய வந்தது. அதாவது, எகிப்திய, மொஹெஞ்சேதாரோ நாகரிக காலகட்டத்தை சேர்ந்தது.

பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியனில் நடந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மேற்குலகால் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளன. அதனால், இது தொடர்பான அகழ்வாராய்ச்சித் தகவல்கள் இன்னமும் ரஷ்ய மொழியில் தான் உள்ளன. கோனூர் தேபே நாகரிகம் தனியாக ஆராயப் பட வேண்டியது என்பதால் அதற்கு "ஒக்சுஸ் நாகரிகம்" என்று பெயரிடப் பட்டது. ஒக்சுஸ் என்பது துருக்மெனிஸ்தான் எல்லையில் ஓடும் நீண்ட நதியின் பெயர். அங்கு சுற்றுலா செல்ல விரும்புவோர், முதலில் மாரி (Mary) என்ற நகரத்திற்கு செல்ல வேண்டும். துருக்மேனிஸ்தான் நாட்டில் எண்ணை, எரிவாயு போன்ற இயற்கை வளம் நிறைந்த பகுதியில் நவீன மாரி நகரம் அமைந்துள்ளது.

கோனூர் தேபே என்பது துருக்கி மொழிப் பெயர். (துருக்மேன் மொழியானது துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்தது.) அந்தப் பண்டைய நகரத்தின் பூர்வீகப் பெயர் என்னவென்பது யாருக்கும் தெரியாது. அதற்கு அருகில் இன்னொரு பண்டைய நகரமான மேர்வ் உள்ளது. அதை உருவாக்கியவர்கள் கோனூர் தேபே வாசிகளாக இருக்கலாம். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் கோனூர் தேபே நகரம் கைவிடப் பட்டு விட்டது. அதற்கு இயற்கை அழிவுகளோ, தண்ணீர்ப் பற்றாக்குறையோ காரணமாக இருந்திருக்கலாம்.

மேர்வ் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தாராளமாக கிடைக்கின்றன. ஏனெனில், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த செங்கிஸ்கான் படைகளால் தரைமட்டமாக்கப் படும் வரையில், அங்கு ஒரு தலைசிறந்த நாகரிகம் இருந்துள்ளது. மொங்கோலிய படைகள் நடத்திய பேரழிவுகளில் மேர்வ் நகரில் இருந்த வான சாஸ்திர ஆய்வு மையம், நூலகம் எல்லாம் தீக்கிரையாகி விட்டன. தொண்ணூறு சதவீதமான குடிமக்களும் இனப்படுகொலை செய்யப் பட்டுவிட்டதால், அறிவியல் தெரிந்தவர் யாரும் எஞ்சவில்லை.

பண்டைய மேர்வ் நகரில் இருந்த அறிவியல் நூல்கள் ஒன்று விடாமல் எரிக்கப் பட்டதால், அவற்றில் எழுதப் பட்டிருந்த ஆயிரம் ஆண்டு கால அறிவுச் செல்வம் ஒரு சில நாட்களில் அழிந்து விட்டது. சில நேரம், அந்த நூல்கள் இப்போதும் இருந்திருந்தால், கோனூர் தேபே பற்றிய விபரங்களும் கிடைத்திருக்கலாம். ஏனெனில், கோனூர் தேபே நகரம் இருந்த இடத்தில் எழுத்துக்களைக் கொண்ட களிமண் தட்டு எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை. சிலநேரம், அவர்கள் எதையும் எழுதி வைக்காமல் இருந்திருக்கலாம்.

நான்காயிரம் வருடங்களுக்கு முந்திய ஹரப்பா நாகரிகத்தில் இருந்ததைப் போன்று, கோனூர் தேபே நகரமும் சிறந்த நீர்ப் பாசன திட்டத்தையும், கழிவு நீர் அகற்றும் கால்வாய்களையும் கொண்டிருந்தது. அரச மாளிகை மாதிரியான ஒரு கட்டிட இடிபாடுகளும் அங்குள்ளது.

ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர் விக்டர், கோனூர் தேபே வாசிகள் வழிபட்ட ஆலயம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார். அந்த ஆலயத்தில் அக்னி (நெருப்பு) கடவுளாக வழிபடப் பட்டுள்ளது. முற்காலத்தில் ஈரானில் இருந்த சொராஸ்திரிய மதத்தவர் நெருப்புக் கடவுளை வழிபட்டு வந்தனர். அந்த மத்தவர் நெருப்பை வணங்கக் கட்டிய பண்டைய ஆலயங்கள் இன்றைய ஈரானிலும், அசர்பைஜானிலும் நிறையவே இருந்துள்ளன. இருப்பினும் கோனூர் தேபே ஆலயம் காலத்தால் பழமையானது. ஆகவே, ஆரியர்களான இந்தோ- ஈரானிய மக்களின் பூர்வீக இடம் கோனூர் தேபே ஆக இருந்திருக்கலாம்.

ஈரானியர்களும், வட இந்தியர்களும் இனத்தால் ஒன்று தான். ஆரியர்கள் என்பதும் அதைத் தான் குறிக்கும். சைபீரியாவில் தோன்றி, மத்திய ஆசியா வழியாக தெற்கு நோக்கி புலம்பெயர்ந்த இனத்தவரின் வழித்தோன்றல்கள் தான், இன்றைய ஈரானியரும், வட இந்தியர்களும். அனேகமாக, மத்திய ஆசியாவில் இருந்து அவர்கள் இரண்டு வேறு கிளைகளாக பிரிந்து சென்றிருக்கலாம். இருப்பினும் தெய்வங்கள், மத வழிபாடுகள், புராணக் கதைகள் சில சிறிய மாற்றங்களோடு அப்படியே இருந்துள்ளன.

இருக்கு (Rig) வேதத்தில் சோம பானத்தை போற்றும் செய்யுள்கள் நிறைய உள்ளன. தேவர்கள் சோம பானம் அருந்தியதாக குறிப்பிடப் படுகின்றது. நீண்ட காலாக, இந்தியாவில் வாழும் இந்துக்கள் பலர் சோம பானத்தை ஒரு கற்பனையான புராணக் கதை என்றே கருதி வந்தனர். அதற்குக் காரணம், ஈரான், ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த ஆரியர்கள் (அதாவது இந்துக்கள்/பிராமணர்கள்) பிற்காலத்தில் இஸ்லாமியராக மாறி விட்டனர். அதனால், இந்தியாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையிலான பண்டைய தொடர்பு அறிந்து விட்டது.

ஆப்கானிஸ்தானில் இன்றைக்கும் சில இடங்களில் சோம பானம் தயாரிக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். (இது பற்றி ஏற்கனவே ஒரு பிபிசி ஆவணப்படம் வெளிவந்துள்ளது. பார்க்க: http://kalaiy.blogspot.nl/2012/01/blog-post_21.html) அந்நாட்டில் வளரும் கஞ்சா செடிகளில் இருந்து பதப்படுத்தப் பட்டு வடித்தெடுக்கப் படும் திரவம் தான் சோம பானம் என அழைக்கப் படுகின்றது. பண்டைய காலங்களில் அது மதுவாக மட்டுமல்லாது, மருத்துவ பானமாகவும் அருந்தப் பட்டது. இன்றைக்கும் கஞ்சாவில் உள்ள மருத்துவ அம்சங்கள், நவீன பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு செய்து நிரூபிக்கப் பட்டுள்ளன. ஆகவே, பண்டைய காலத்து "தேவர்கள்" சோம பானத்தை "அமிர்தமாக" கருதியதில் வியப்பில்லை.

கோனூர் தேபே நாகரிகத்தை கண்டுபிடித்த ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர்  விக்டர், அங்கு சோம பானம் தயாரிக்கப் பயன்படுத்திய களிமண் தட்டுகளை கண்டுபிடித்துள்ளார். அதில் கஞ்சாவில் இருந்து எடுக்கப் பட்ட மருத்துவ பதார்த்தமான Ephedrine என்ற இரசாயனக் கூறுகளும் கண்டுபிடிக்கப் பட்டன. இதன் மூலம் சோம பானம் தயாரிப்பதற்கான மூலப் பொருளாக கஞ்சா பயன்பட்டிருக்கலாம் என்பதும் நிரூபணமாகிறது. மேலும், சோம பானத்திற்கும், நெருப்பை வழிபடும் அக்னிக் கடவுளின் ஆலயத்திற்கும் தொடர்பிருக்கிறது.

இன்றைக்கும் இந்து மத திருமணங்களில் ஐயர் ஹோமம் வளர்ப்பதை கண்டிருப்பீர்கள். வேறு சில நோக்கங்களுக்காகவும் ஹோமம் வளர்க்கப் படுகின்றது. பிராமண பூசாரிகள் ஒரு சதுர வடிவிலான அடுப்பில் தீமூட்டி எரிப்பார்கள். அதை ஹோமம் என்பார்கள். பண்டைய காலங்களில் வாழ்ந்த ஆரியர்கள், பெரியளவில் ஹோமம் வளர்ப்பதை ஒரு மதச் சடங்காகக் கொண்டிருந்தனர். அதே நேரம், ஈரானிய சொராஸ்திரிய மதத்தவர் போன்று, நெருப்புத் தெய்வத்தை வழிபடவும் ஹோமம் வளர்த்திருப்பார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் ஈரானில் வாழ்ந்த சொராஸ்திரிய மதத்தவரும், ஈராக்கில் வாழும் யேசிடி மதத்தவரும், ஒரு குறிப்பிட்ட செடியை மதச் சடங்குகளுக்காக பயன்படுத்தி வந்தனர். அதன் தாவரவியல் பெயர்: Genus Ephedra. அதை அவர்களது மொழியில் "ஹோம்" என்று அழைப்பார்கள். 

ஹோம் என்பது பண்டைய ஈரானிய மொழிச் சொல்லான ஹோமம் என்பதில் இருந்து வந்தது. சம்ஸ்கிருத மொழியில் சோமா என்பது, ஈரானிய மொழியில் ஹோமா என்று பயன்படுத்தப் பட்டு வந்தது. இரண்டு சொற்களும் உச்சரிப்பு மாறுபட்டாலும் ஒரே பொருளைக் குறிப்பவை தான். ஆகவே, சோம பானம், ஹோமம் வளர்த்தல், அக்னி வழிபாடு எல்லாம் ஒரே மூலத்தைக் கொண்டவை தான்.

(பிற்குறிப்பு: Erika Fatland எழுதிய Sojetstan என்ற பயண நூலில் துருக்மேனிஸ்தான் பற்றியா பகுதியில் இந்தத் தகவல் கிடைத்தது. இவற்றிற்கான ஆதாரங்களை நீங்களாகவே இணையத்தில் தேடி வாசிக்கலாம். மேற்கொண்டு ஆராய்வது துறை சார்ந்த அறிஞர்களின் பொறுப்பு.)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Monday, March 04, 2013

ஆப்கானிஸ்தானை ஆண்ட ஆதித் தமிழர்கள் - ஓர் ஆய்வு

அசோக சக்கரவர்த்தியின்  கண்டஹார் 
கல்வெட்டு (கி.மு. 250  )

ஆப்கானிஸ்தானில், கி.மு. 250 ல் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடம் : கண்டஹார்! ஆமாம், ஆப்கானிஸ்தானில் உள்ள கண்டஹார் நகரம் தான். இறுதியாக, கம்யூனிஸ்டுகள் ஆப்கானிஸ்தானை ஆண்ட காலம் வரையில், இந்தக் கல்வெட்டு காபுல் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்தது. இஸ்லாமிய கடும்போக்காளர்களின் ஆட்சி ஏற்பட்ட குழப்பகரமான காலப்பகுதியில் காணாமல் போய்விட்டது. 

ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டுகளில், பிரஜைகளின் நன்னடத்தையை குறிக்கும் அறிவுரைகள் எழுதப் பட்டுள்ளன.  இதிலே நாம் கவனிக்க வேண்டிய விடயம், கல்வெட்டில் பயன்படுத்தப் பட்டுள்ள தொடர்பாடல் மொழி. அசோக சக்கரவர்த்தியின் ஆட்சின் கீழ் இருந்த இந்திய சாம்ராஜ்யத்தில், அந்தந்த மாநில மக்களின் பிரதான மொழிகளில் கல்வெட்டுகள் எழுதப் பட்டன. ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்ட கல்வெட்டுகளில், கிரேக்கம், அராமி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளன. கண்டஹார் நகருக்கு வடக்கே இருந்த பகுதிகளில், கிரேக்க காலனிகள் உருவாகி, அது கிரேக்கர்களின் நாடாக இருந்தது. அதனால் கிரேக்க மொழியில் எழுதப் பட்டது. 

அப்படியானால் அராமி மொழி? ஹீபுரு, அரபு மொழிகளுக்கு நெருக்கமான, இயேசு கிறிஸ்து பேசிய அராமி மொழி, ஒரு காலத்தில் மேற்காசிய நாடுகளின் சர்வதேச மொழியாக இருந்தது. பாலஸ்தீனம் முதல், பாகிஸ்தான் வரையில் அராமிய மொழி பேசத் தெரிந்த மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் யார்? திராவிடர்களா? ஆப்கானிஸ்தானில், பஷ்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தை பற்றி, புராதன கால கிரேக்கர்களும், ஈரானியர்களும் எழுதி வைத்துள்ளனர்.

"அந்த மக்கள் இடுப்பில் ஒரு துண்டு  மட்டுமே ஆடையாக அணிந்திருந்தனர். மார்புப் பகுதியை மூடுவதில்லை. காலில் செருப்பு அணிந்திருந்தார்கள். அவர்களது வாள்கள் நீளமானவை என்பதால், வாளின் உறையில் தொங்கும் பட்டியை, தோளில் மாட்டி இருப்பார்கள்..."  என்று அந்த புராதன கிரேக்க, ஈரானிய வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளது (கி.மு. 450). (ஆதாரம்: Afghanistan, Een geschiedenis, Willem Vogelsang)   ஆப்கானிஸ்தானின் ஆதிவாசிகள் பற்றிய குறிப்புகள், பண்டைய தமிழர்களின், அல்லது திராவிடர்களின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றது. ஆப்கானிஸ்தானின் பூர்வகுடிகள், தமிழர்களின் முன்னோர்களாக இருந்திருக்கலாம்.

இங்கே நாங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம், தற்போது ஆப்கானிஸ்தானில் வாழும் இனங்கள் பேசும் மொழிகள். இன்று ஆப்கானிஸ்தானில் யாரும், கிரேக்க அல்லது அராமிய மொழி பேசுவதில்லை.  (அராமி மொழி ஏறக்குறைய அழிந்து விட்டது. இன்றைய சிரியாவில் மட்டும் சில ஆயிரம் பேர் பேசுகின்றனர்.) பெரும்பான்மை இன மக்கள் பேசும் பஷ்டூன் மொழி, ஈரானின் பார்சி மொழிக்கும், இந்தியாவின் இந்தி மொழிக்கும் இடைப்பட்டது. இந்தோ-ஈரானிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழி. பஷ்டூன் இன மூதாதையர்கள், வடக்கே இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பதை, அந்த மக்களே ஒத்துக் கொள்கின்றனர். அதாவது, அவர்களது சரித்திர சான்றுகள் யாவும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு பிந்தியவை தான். அப்படியானால், பஷ்டூன் மக்கள் ஆரியர்களா? ஆமாம்!

ஆப்கானிஸ்தான் தேசிய விமான சேவையின் பெயர்: "ஆரியானா".  அதன் அர்த்தம், "ஆரியர்கள்" என்பது தான்! ரிக் வேதத்தில் "ஆர்ய வர்த்தம்" என்று அழைக்கப் பட்ட நாடு, பண்டைய ஆப்கானிஸ்தான் தான். மகாபாரதத்தில் "காந்தர்வர்கள்" என்ற இன மக்களின் குறிப்புகள் வருகின்றன. காந்தர்வர்கள் என்பது, காந்தார நாட்டை சேர்ந்த மக்களை குறிக்கும். இன்றைய கண்டஹார் நகரின் பழைய பெயர், காந்தாரம்! 

கண்டஹார் என்பது, அங்கு குடியேறிய ஆரியர்களால்  ஆரியமயமாக்கப் பட்ட இடப் பெயர் ஆகும்.  இன்று பஷ்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தில், ஒரு காலத்தில் சக்திவாய்ந்த காந்தார தேசம் இருந்தது. காந்தர்வ மக்கள், இன்றைய பஷ்டூன் மக்கள் அல்ல. காந்தர்வ மக்கள், பௌத்த மதத்தையும், இந்து மதத்தையும் பின்பற்றினார்கள். இந்து மதம் என்றால், எந்த இந்து மதம்? ஆரியர்களின் இந்து மதமா? அல்லது திராவிடர்களின் இந்து மதமா? இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, ஆப்கானிஸ்தானில் தான் தோன்றியது. 

ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த திராவிட மக்களுடன், ஆரியர்களான பஷ்டூன் மக்களின் இனக்கலப்பு நடந்துள்ளது. அது இரண்டு வகையில் நடந்திருக்கலாம். ஒன்று, கலப்பு  மண உறவுகளின் விளைவாக  உருவான புதிய இனம். இரண்டாவது, தாய்மொழியை மறந்து விட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை ஏற்றுக் கொள்ளுதல். ஏதோ ஒரு வகையில், ஆரியர்களான பஷ்டூன் மக்களின் மொழி, அந்தப் பிரதேசத்தில் நிலைத்து விட்டது. 

தமிழர்களின் தேசிய அரசியல் போன்று, பஷ்டூன் மக்களின் தேசியமும், மொழியை அடிப்படையாக கொண்டது, என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஒரு பஷ்டூ தனது மொழியை பேசத் தெரியாமல், வேறொரு அந்நிய மொழியை பேசினால், அவன் பஷ்டூன் இனத்தை சேர்ந்தவனாக கருதப் பட மாட்டான். 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த, பஷ்டூன் இனத்தை சேர்ந்த ஷா மன்னர், பார்சி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்ததால், பெரியதொரு கலவரம் வெடித்தது.  அதன் பிறகு தான், ஆப்கானிஸ்தான் தலைநகரம், கண்டஹாரில் இருந்து காபுலுக்கு இடம் மாறியது. 

ஆப்கானிஸ்தானில் இன்னமும் திராவிட இனங்கள் இருக்கின்றனவா? ஆம்! "பிராஹுய்" (Brahui)  என்ற, திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த, மொழி ஒன்றை பேசும் மக்கள் இன்னமும் வாழ்கின்றனர். அவர்கள், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பல இடங்களில் சிதறிப் போயுள்ளனர். மேலும், பலுச்சி மொழி பேசும் மக்கள், ஒரு காலத்தில் பிராஹுய் மொழி பேசியிருக்கலாம். அதனை நிரூபிக்கும் வகையில், இரண்டு இனங்களினதும் கலாச்சாரங்கள் ஒன்றாக உள்ளன. பலுச்சி ஒரு இந்தோ-ஈரானிய மொழி என்பது மட்டுமே வித்தியாசம். "திராவிடர்களான" பலுச்சி, பிராஹுய் மக்கள் இன்று இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர். ஆனால், இஸ்லாம் என்பது, 1500 ஆண்டுகளுக்கு முன்னர், அரேபியாவில்  தோன்றிய புதிய மதம் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்களை விட, "பாஷை" என்றொரு வித்தியாசமான மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். பாஷை மக்கள் தம்மை பஷ்டூனியருடன் அடையாள படுத்திக் கொள்கின்றனர். ஆனால், தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டவர்கள். பாஷை இன மக்கள் மத்தியில், கருப்பு நிற மேனியை கொண்ட, அல்லது தென்னிந்தியர்கள் போல தோற்றமளிக்கும் பலரை காணலாம். (எல்லோரும் அப்படி அல்ல.) 

வடக்கு ஆப்கானிஸ்தானில், காபுல் நகருக்கு கிழக்கே, பாகிஸ்தான் எல்லையோரம், "நூரிஸ்தான்" மாகாணம் உள்ளது. அவர்கள் தனித்துவமான, "நூரிஸ்தானி" மொழி பேசுகின்றனர். பார்சி, பஷ்டூன், உருது ஆகிய இந்தோ-ஈரானிய மொழிகளுடன் சம்பந்தமில்லாத தனித்துவமான மொழி அது. ஆனால், அவர்கள் பார்ப்பதற்கு வெள்ளை இனத்தவர்  போன்று தோற்றமளிக்கின்றனர்.  அந்த மக்களுக்கு, நூரிஸ்தானி என்ற பெயர் வரக் காரணம் ஒரு தனிக்கதை. 

19 ம் நூற்றாண்டு வரையில், நூரிஸ்தானி மக்கள் "இந்துக்களாக" இருந்தார்கள். (இன்று மிகத் தீவிரமான இஸ்லாமிய மதப் பற்றாளர்கள். ரஷ்ய படைகளினால் ஆக்கிரமிக்கப் பட முடியாமல் இருந்த, ஒரேயொரு மாகாணம் அது தான்.) வேத கால இந்துக் கடவுளரான, இந்திரன், வருணன், அக்கினி போன்ற தெய்வங்களை வணங்கி வந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டாலும், பாரம்பரிய வேத கால இந்துக் கலாச்சாரங்களை இன்னமும் பின்பற்றி வருகின்றனர். 19 ம் நூற்றாண்டு வரையில் அந்த மாகாணம், "காபிர்ஸ்தான்" என்ற பெயரில் அழைக்கப் பட்டது.  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், அது நூரிஸ்தான் என்று மாற்றப் பட்டது. 

ஒரு காலத்தில், தெற்கு ஈரானில் இருந்த, "ஈழம்" அல்லது "எலம்"  (Elam)  என்ற, திராவிடர்களின் ராஜ்யத்தை சேர்ந்த மட்பாண்டங்கள், ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்டன. அது அந்தக் காலத்தில் இருந்த, வர்த்தகத் தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது. ஆனால், அதை மட்டுமே வைத்துக் கொண்டு, ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த திராவிடர்கள் எல்லாம், கறுப்பின மக்கள் என்று நாங்கள் அறுதியிட்டுக் கூற முடியாது.  உண்மையில், ஆரியர், திராவிடர் என்று, மக்களை இன அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியாது. 

"ஆரியர்கள் என்றால் வெள்ளையர்கள், திராவிடர்கள் என்றால் கருப்பர்கள்" என்ற, கருப்பு-வெள்ளை பாகுபாடு, எல்லா இடங்களிலும் பொருந்தாது. "ஆரிய கலாச்சாரம், திராவிட கலாச்சாரம்" என்று நாங்கள் பாகுபடுத்தலாம். ஆரியர்களின் வருகைக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் திராவிடர் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தியது. அந்தப் பகுதியில் வாழ்ந்த வெள்ளையின மக்களும்  அதனை பின்பற்றி வந்தனர்.  சில நூறாண்டுகளுக்குப் பின்னர், அந்த இடத்தில் ஆரிய கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும், அங்கு வாழ்ந்த கறுப்பின மக்களும் அதனை பின்பற்றி வந்தனர். 

தெற்காசியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்திய பகுதிகளில் வாழ்ந்த ஒரு முக்கியமான இனத்தவர்கள் பற்றி, நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை.  "யூதர்கள் (ஹீபுருக்கள்), பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, தெற்காசியாவிலும் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்," என்று நான் சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள். நாங்கள் இப்போதும், ஐரோப்பியரின் மூளையை பொருத்திக் கொண்டு சிந்திப்பதால், எமது கடந்த கால வரலாற்றையே மறந்து விட்டோம். ஐரோப்பியர்களோ, தங்களது தேச, இன நலன்களை மையமாக கொண்டு தான், அனைத்தையும் ஆராய்கிறார்கள். 3000 வருடங்களுக்கு  முன்னர், ஹீபுரூ  மக்கள் யூத மதத்தை பின்பற்றவில்லை. ஆனால், யூதர்களின் புனித மொழியான ஹீபுருவுக்கு நெருக்கமான அராமிய மொழி பேசினார்கள். யூத மதம் கூட, சரதூசர் என்ற (ஈரானிய) தீர்க்கதரிசியின் மத தத்துவங்களை உள்வாங்கிக் கொண்ட புதிய மதமாக உருவெடுத்திருந்தது. 

ஒரு காலத்தில், பாகிஸ்தானில் இருந்து பாலஸ்தீனம் வரையில், அராமி  மொழி பேசப் பட்டு வந்தது.  அந்தப் பகுதியில் வாழ்ந்த எல்லோரும் அராமியை தாய்மொழியாக கொண்டிருக்கவில்லை. ஆனால், சர்வதேச மொழியாக தெரிந்து வைத்திருந்தனர். ஹீபுரு மொழி பேசிய யூதர்கள், அரேமி வம்சாவளியினர் தான். அராமி, ஹீபுரு மொழிகளை, தமிழ், மலையாளத்துடன் ஒப்பிடலாம். 19 ம் நூற்றாண்டு வரையில், ஆப்கானிஸ்தானில் இலட்சக் கணக்கான யூதர்கள் வாழ்ந்தார்கள். 

1836 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானை ஆண்ட மன்னர் தோஸ்த் மொஹமட் கான், இஸ்லாமிய மதத்தை அரச மதமாக்கி, கடுமையான மத சட்டங்களை அமுல்படுத்தினார். மது பாவனை தடை செய்யப் பட்டது. இதனால், ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த பெருந்தொகையான யூதர்கள் வெளியேறி விட்டனர். அன்று அவர்கள் பாலஸ்தீனா செல்லவில்லை. அருகில் இருந்த மத்திய ஆசிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள். 20 ம் நூற்றாண்டில், இஸ்ரேல் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், எஞ்சியிருந்த ஆப்கான் யூதர்களும் வெளியேறி விட்டார்கள். 

ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த யூதர்கள் எப்படியான தோற்றத்துடன் இருந்திருப்பார்கள்? இது சம்பந்தமான பழைய புகைப்படங்கள், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள யூத கலாச்சார-வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. அந்தப் படத்தில் இருக்கும் யாரும், வெள்ளையின ஐரோப்பியராக தோற்றம் அளிக்கவில்லை. மாறாக, இந்தியர்களை போன்ற முகச் சாயலை கொண்டிருந்தனர். ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த ஹீபுருக்கள், அல்லது அரேமியர்கள், தென்னிந்திய திராவிடர்களின் மூதாதையராக இருந்திருக்கலாம். இன்றைக்கும் ஒரே மாதிரியான  சொற்கள், தமிழிலும், ஹீபுருவிலும் காணப் படுகின்றன. 

மேலதிக விபரங்களுக்கு, நான் எழுதிய "நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!" கட்டுரைத் தொடரை வாசிக்கவும். 


உசாத்துணை:
1.An inscription of Asoka discovered in Afghanistan, http://www.jstor.org/discover/10.2307/29753969?uid=3738736&uid=2&uid=4&sid=21101901312507 
2.The Nuristani people, http://en.wikipedia.org/wiki/Nuristani_people
3.The Pashayi people, http://en.wikipedia.org/wiki/Pashai_people
4.Aramaic language, http://en.wikipedia.org/wiki/Aramaic_languages
5.Afghanistan, Een geschiedenis, Willem Vogelsang
6.Lost Cities of China, Central Asia & India, by David Hatcher Childress

Wednesday, February 06, 2013

இந்துக்களின் சகோதரர்களான, "ஆப்கான் ஆரியர்கள்"!

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
 நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 21 

 (இறுதிப் பாகம்)

இந்து மதத்தவரின் புனித நூலான இருக்கு வேதத்தில், சோம பானம் பற்றிய செய்யுள்கள் இயற்றப் பட்டுள்ளன. தேவர்களுக்கு பிரியமான சோம பானத்தை பருகினால், சாகா வரம் பெறலாம் என்பது வேத கால மனிதர்களின் நம்பிக்கை. இப்போது அந்த சோம பானம் எங்கே? இந்து மத நம்பிக்கையாளர்களைக் கேட்டால், அது வேத காலத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப் பட்டது. இன்றைய கலி காலத்தில் அந்தப் பானமும், அதன் மூலப்பொருளான செடியையும் கண்டுபிடிக்க முடியாது." என்று கூறுவார்கள். அது உண்மையா? இல்லை. நீங்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்றால், அங்கே இப்போதும் சோம பானம் அருந்தலாம்! சாதாரணமாக தெருவோர தேநீர்க் கடையிலேயே விற்கிறார்கள்.

சீனாவில் இன்றைக்கும் சோம செடியில் இருந்து மருந்து தயாரிக்கிறார்கள். ஆஸ்துமா, மற்றும் பல சளி சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்து அது. அந்த மருந்து அல்கஹோல்  போல சக்தி அளிப்பதற்கும் பயன்படுவதால், அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் தடை செய்யப் பட்டுள்ளது. சோமா செடியின் இன்றைய தாவரவியல் பெயர்: Ephedra Sinica. (http://en.wikipedia.org/wiki/Ephedra) 5000 வருடங்களாக, சீனர்கள் சோமா செடியின் சாறு பிழிந்து அருந்தி வருகின்றனர்.   அப்படியானால், இந்து மதத்தவரின் மூதாதையர், சீனாவில் இருந்து குடிபெயர்ந்தவர்களா? அந்த திசையில் ஆராய்ந்தால், நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. இந்து மதம் என்பது இந்திய மண்ணில் பிறக்கவில்லை. அது  இந்தியர்களின் மதம் அல்ல என்பதை நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றேன். அதனை கற்பனை செய்து கூட பார்க்க முடியாதவர்களிடம், சோம பானம் எங்கே கிடைக்கும் என்று கேட்டால் சொல்வார்களா?

நாம் தமிழில் பாவிக்கும் "சகோதரர்" என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதம் ஆகும். அந்த சொல்லின் பூர்வீகம் எதுவென்று தெரியுமா? இன்றைய ஆப்கானிஸ்தானிலும், அதன் எல்லையோரம் உள்ள பாகிஸ்தான் மாநிலங்களிலும் பஷ்டூன் இன மக்கள் வாழ்கின்றனர். அவர்களது மொழியில் "சகா" என்றால் இரத்த உறவினர் என்று அர்த்தம். (தமிழில் சகா என்பது கூட்டாளி என்ற அர்த்தத்தில் பாவிக்கப் படுகின்றது.) பண்டைய காலத்தில், அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் "சாகா இனத்தவர்கள்" என்று அழைக்கப் பட்டனர். கிரேக்கர்கள் அவர்களை சீத்தியர்கள் (Scythian) என்று பெயரிட்டு அழைத்தனர். கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள், துருக்கியில் இருந்து வட இந்தியா வரையில் வாழ்ந்த ஈரானிய மொழிகளைப் பேசிய இனங்களை எல்லாம், சீத்தியர்கள் என்ற பொதுப் பெயரில் அழைத்தார்கள்.

பண்டைய கிரேக்க வரலாற்றை எழுதிய ஹெரோடோதுஸ், "Oiorpata" என்ற பெண்களின் கதையை ஓரிடத்தில் எழுதியுள்ளார். கஸ்பியன் கடலோர பகுதியில் வாழ்ந்த ஈரானிய இனம் ஒன்றின் வீர மகளிர் பற்றிய கதை அது. அந்த இனத்தில் பெண்களே போருக்கு செல்வார்கள் என்பதால், "ஆண்களை வெட்டிச் சாய்ப்பவர்கள்" என்ற பொருளில்,  Oior (ஆண்கள்) pata (வெட்டுபவர்கள்) என்று கிரேக்கர்கள் பெயரிட்டார்கள். உண்மையில் இயர் (Oior) என்பது, "வீர்" (வீரர்) சொல்லின் திரிபடைந்த வடிவமாகும். இங்கே இந்தக் கதையை குறிப்பிடுவதற்கு காரணம், ஒரு காலத்தில் உக்ரைன் முதல் வட இந்தியா வரையில், பல்வேறு ஈரானிய மொழிகளை பேசும் மக்கள் வாழ்ந்தனர் என்பதை நிரூபிப்பதற்காகத் தான்.

"இனம்" என்ற சொல், ஒரு இருபதாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பாகும். உலக வரலாற்றில், எந்தக் காலத்திலும், "இன உணர்வு" கொண்ட மக்கள் வாழவில்லை  அந்தக் காலத்தில், ஒரே இனத்தை சேர்ந்த மக்கள், பல்வேறு இனக் குழுக்களாக பிரிந்து போரிட்டனர். ஒருவரின் பிரதேசத்தை மற்றவர் அபகரித்தனர். சீனாவில் உள்ள யுவேசி என்ற வெள்ளையின மக்கள், இன்றைய தஜிக்கிஸ்தான் - உஸ்பெகிஸ்தான் பகுதியில் வாழ்ந்த சாகா (அல்லது சீத்திய) இன மக்களை தெற்கு நோக்கி தள்ளினார்கள். அங்கிருந்து விரட்டப்பட்ட சாகா இன மக்கள், இன்றைய காஷ்மீரை தமது புதிய தாயகமாக்கிக் கொண்டனர். அங்கிருந்து விந்திய மலை வரையில் தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் ஆக்கினார்கள். (The Ethnic of Sakas, http://www.iranchamber.com/history/articles/ethnic_of_sakas.php)  இதெல்லாம் எங்கே எழுதியிருக்கிறது?  புராதன சீனாவின் வரலாற்றை எழுதிய சீமா கியான்  (Sima Qian, கி.மு. 145-86), மற்றும் சங் கியான் (Zhang Qian, கி.மு.195-114) என்ற இராஜதந்திரி ஆகியோர் இவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். 

நான், "இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடரை எழுதிய பொழுது, எதிர்பார்த்த படியே நிறைய எதிர்ப்புகள் வந்தன. நிறையப் பேருக்கு அது ஒரு அதிர்ச்சியான தகவல் தான். சீனா என்றவுடன், சப்பை மூக்கு, சிறிய கண்கள் கொண்ட, குள்ளமான சீனர்களை மட்டுமே நாம் நினைத்துக் கொள்கிறோம். சீனாவின் பெரும்பான்மை இனமான "ஹான்" இனத்தவர்களும் (அவர்கள் பேசுவது தான் சீன மொழி என்ற மாண்டரின் மொழி) தாம் மட்டுமே, அந்த மண்ணின் பூர்வ குடிகள் என்று நம்புகின்றனர். சீனாவில் ஒரு காலத்தில், ஐரோப்பியர் போன்ற வெள்ளையின மக்கள் வாழ்ந்தனர். குறிப்பாக மேற்கு சீன மாநிலமான "உரும்கி" யில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்.

அதற்கான ஆதாரங்கள் பல அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டன. "மம்மி" முறையில் பதப்படுத்தப் பட்ட, இரண்டாயிரம் ஆண்டு பழமையான மனித உடல்கள் பல கண்டெடுக்கப் பட்டன. அவர்களின் உடைகள், உடைமைகள் பல மண்ணின் அடியில் இருந்து தொண்டி எடுக்கப் பட்டன. வரலாற்றில் இருந்து மறைந்து விட்ட சீன வெள்ளையின மக்கள், சீனாவின் பிற இனங்களுடன் ஒன்று கலந்திருக்கலாம். (இன்றைக்கும் சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. வித்தியாசமான கலாச்சாரங்களை கொண்ட இனங்களும் வாழ்கின்றன.)  குறிப்பாக இன்றைய உரும்கி பிரதேசத்தில் வாழும் துருக்கி மொழி பேசும் உய்குர் மக்கள் அவர்களின் வம்சாவளியினராக இருக்கலாம். மொழி என்பது மாறுபடும் தன்மை கொண்டது. 

சீனாவின் உரும்கி மாநிலத்திலும், அதை அடுத்துள்ள கான்சு மாநிலத்திலும் முற்காலத்தில் இரண்டு வகையான வெள்ளையினங்கள் வாழ்ந்ததாக, புராதன சீன இலக்கியங்கள் கூறுகின்றன. நீலக் கண்கள், செந்நிற தாடி கொண்ட  தோற்றங்களுடன் அவர்கள் காணப் பட்டதாக அவற்றில் எழுதப் பட்டுள்ளது. ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த மண்டையோடுகளும் அவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள் போன்ற மக்கள் என்பதனை உறுதிப் படுத்துகின்றன. சீனர்கள் தமது மொழியில் அவர்களை முறையே வூசுன்  (Wusun), யுவேசி (Yuezhi) என்று பெயரிட்டு அழைத்தனர். வூ சூன் என்பது பல இனக் குழுக்களை குறித்த பொதுப் பெயராக இருக்கலாம். 

வூசுன்  (Wusun, http://en.wikipedia.org/wiki/Wusun) மக்களிடையே பொதுவான ஒரு மொழி பேசப் பட்டதாக தெரியவில்லை. சில குழுக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழியையும், சில குழுக்கள் துருக்கி மொழியையும் பேசி வந்தனர். ஆனால், அவர்களின் பூர்வீகம் பற்றிய பொதுவான கதை ஒன்று உலவியது. "வூசுன்" என்ற சீனப் பெயர் ஒரு பட்டப் பெயர் ஆகும். வூசுன் இன மக்களின் முதல் மனிதன் பற்றிய கதை அது. கானகத்தில் கைவிடப் பட்ட  ஒரு மனிதக் குழந்தையை, ஒரு பெண் ஓநாய் பாலூட்டி வளர்த்ததாகவும், அந்தக் குழந்தைக்கு காகங்கள் இரை தேடிக்  கொண்டு வந்து கொடுத்ததாகவும், ஒரு கர்ண பரம்பரைக் கதை அந்த மக்களிடையே உலாவியது. "ஓநாய் பாலூட்டி வளர்த்த முதல் மனிதனின்  கதை", இன்றைக்கும் துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த பல்வேறு இன மக்களிடையே நம்பப் பட்டு வருகின்றது. அது மட்டுமல்ல, இத்தாலியில் வாழ்ந்த ரோமர்களும் அதே மாதிரியான பூர்வீகக் கதையை நம்பி வந்தனர். ஐரோப்பிய வெள்ளை இனத்தவரும், மத்திய ஆசியாவின் துருக்கி இனத்தவரும், ஆரம்பத்தில் ஒரே இனமாக இருந்து பிரிந்திருக்கலாம்.

யுவேசி இன மக்கள், தொக்காரிய (Tocharian) என்ற இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியதாக தெரிகின்றது. அண்மைக் கால அகழ்வாராய்ச்சிக்கு பின்னர், யுவேசி அல்லது தொக்காரிய இன மக்கள் குறித்து நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன. சீனாவில், Dunhuang  எனும் இடத்தில் இருக்கும் மலைக் குகைகளில், ஆயிரக் கணக்கான நூல்கள், ஓலைச் சுவடிகளை பாதுகாத்து வைத்த நூலகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அந்தப் பிரதேசத்தில், ஒரு காலத்தில் பல்லாயிரம் மக்கள் வாழ்ந்த நாகரீகமடைந்த நகரம் இருந்தது.  1907 ம் ஆண்டு, திபெத்திய பௌத்த துறவிகள் மூலம் அந்த இடத்தைப் பற்றி கேள்விப்பட்ட, Sir. Aurel  Stein  என்ற அகழ்வாராய்ச்சியாளர், நிறைய சுவடிகளை அள்ளிச் சென்று விட்டார். அவற்றை அவர் காசு கொடுத்து வாங்கினாரா, அல்லது திருடிச் சென்றாரா என்று தெரியவில்லை. 


புராதன கால தொக்காரியன் இன மக்களின் பொக்கிஷங்கள், இன்று லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப் பட்டுள்ளன. அவற்றை திருப்பித் தருமாறு சீனா கேட்டுக் கொண்டிருக்கிறது. இன்று நிறைய சுற்றுலாப் பயணிகள்,  Dunhuang குகைகளை பார்வையிட சென்று வருகின்றனர். அந்தக் குகைகளுக்குள் ஏராளமான புத்தரின் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. புத்தருக்கு அருகில் நிற்கும் மனிதர்களின் படங்களை கொண்டு, அன்று அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அதிலே ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அவர்களது தோற்றம் ஐரோப்பிய வெள்ளையர்களைப் போல உள்ளது. ஆனால், ஆடை, ஆபரணங்கள் இந்தியர்களைப் போல உள்ளன. அவர்கள் இந்திய கலாச்சாரத்தின் படி, நெற்றியில் பொட்டு வைத்திருப்பது இன்னும் விசேடமானது. 

நாங்கள் இப்போது சில முடிவுகளுக்கு வரலாம். சீனாவில் யுவேசி (Yuezhi,   http://en.wikipedia.org/wiki/Yuezhi)  என்று அழைக்கப் பட்ட தொக்காரிய மொழி பேசிய மக்கள் இந்திய- ஐரோப்பிய இனத்தை சேர்ந்தவர்கள். அதாவது அவர்கள் தோற்றத்தில் ஐரோப்பியர்கள், ஆனால் கலாச்சாரத்தில் இந்தியர்கள். மதத்தால் பௌத்தர்கள். மொத்தத்தில் பண்டைய காலத்தில் நாகரீகமடைந்த ஒரு இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களையும் நாங்கள் ஆரியர்கள் என்று நம்பி வந்துள்ளோம். உரும்கியில் இருந்து குடிபெயர்ந்த தொக்காரியன் இன மக்கள், பிற்காலத்தில் காந்தாரம் என்ற ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். காந்தாரம் என்பது என்றைய, அப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. அப்போதே அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த கறுப்பின மக்களுடன் இனக் கலப்பு நடந்துள்ளது. அதன் விளைவாக புதிய இனங்களும், புதிய மொழிகளும் உருவாகின. இதனை பலுசிஸ்தான் பிராந்தியத்தில் வாழும் மக்களின் உதாரணத்தைக் கொண்டு விளக்கலாம்.

பலுச்சிஸ்தான் நாடு, இன்றைய ஈரான், பாகிஸ்தானுக்கு இடையில் இரண்டாக பிரிக்கப் பட்டுள்ளது. பலுச்சி மக்கள் பேசும் மொழி, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. அதே பிரதேசத்தில், பிராஹுய் என்ற திராவிட மொழி பேசும் மக்களும் வாழ்கின்றனர். தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ் போன்ற திராவிட மொழிகளுக்கு நெருக்கமான, பிராஹுய் மொழி, எவ்வாறு பாகிஸ்தானில் தனித்து விடப் பட்டது என்று எண்ணி வியக்காதவர் இல்லை. ஒரே இனத்தை சேர்ந்த மக்கள், முற்றிலும் மாறு பட்ட இரண்டு மொழிகளைப் பேசலாம். பலுச்சி மொழி பேசும் மக்களுக்கும், பிராஹுய் மொழி பேசும் மக்களுக்கும் இடையில் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது. 

அவர்கள் ஒரே கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். அவர்களின் பூர்வீகம் பற்றிய கதைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. ஆகவே, அவர்கள் ஒரே இனத்தை சேர்ந்த மக்கள் என்பதை நிரூபிக்க இந்த ஆதாரங்கள் போதுமானவை. பிராஹுய் என்பது திராவிட தனித்துவத்தை கொண்ட மொழியாகவும், பலுச்சி என்பது ஆரிய மேலாதிக்கத்தால் உருவான புதிய  மொழியாகவும் இருக்கின்றன. யார் எந்த மொழியை தேர்ந்தெடுத்தனர் என்பது, அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்திருந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களே, இரண்டு வெவ்வேறு மொழிகளைப் பேசும் இனங்களாக பிரிந்திருக்கலாம். இதே மாதிரியான வித்தியாசம் தான், இலங்கையில் சிங்களவர், தமிழர் ஆகிய  மொழிகளைப் பேசும் மக்களிடையே உள்ளது. 

இதிலே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். பலுச்சி மக்கள், தமது மூதாதையர் அரேபியாவில் இருந்து குடிபெயர்ந்து வந்ததாக கூறுகின்றனர். ஈரானில் சாலமன் மன்னனின் விமான தளம் என்று அழைக்கப் படும் மலை ஒன்றுள்ளது. மேற்கு பாரசீக நாட்டில், பிற்கால பார்சி மொழி பிரபலமடைவதற்கு முன்னர், அரமிய மொழி போன்ற ஒரு மொழி அரச கரும மொழியாக இருந்துள்ளது. எத்தியோப்பியா முதல், வட இந்தியா வரையிலான பிரதேசம் ஒரு ஹீபுரு சக்கரவர்த்தியின் ஆட்சிக்குட்பட்ட சாம்ராஜ்யமாக இருந்ததாக, யூதர்களின் பைபிளில் எழுதப் பட்டுள்ளது. அதே சாம்ராஜ்யம் விக்கிரமாதித்தன் என்ற சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்ததாக, இந்திய வேதத்தில் எழுதப் பட்டுள்ளது. இந்தக் கதைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன?

இன்றைய எத்தியோப்பியா, அரேபியா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில்  செமிட்டிக்-திராவிட மொழிகளைப் பேசிய மக்கள் வாழ்ந்துள்ளனர். அதாவது, அரபு, ஹீபுரு, அரேமிக் போன்ற செமிட்டிக் மொழிகள், ஒரு காலத்தில் திராவிட மக்கள் பேசிய மொழிகளாக இருந்திருக்க வேண்டும். சமஸ்கிருதம், அல்லது ஈரானிய மொழிகள் பிரபலமடையத் தொடங்கியதும் அந்த மொழிகள் மறைந்து விட்டன. சமஸ்கிருதம் (இந்தியா), அவஸ்தான் (ஈரான்) ஆகிய மொழிகளுக்கு இடையில் பெரிய வித்தியாசங்கள் எதுவுமில்லை. அவை இரண்டும் மக்களின் பேச்சு மொழிகளாக இல்லாமல், இலக்கிய மொழிகளாக இருந்தன. ஆனால், அவை அரச நிர்வாக மொழிகளாக இருந்ததால், மக்களின் பேச்சு மொழிகள் மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. 

இன்றுள்ள இந்திய மத்தியதர வர்க்கத்தினரால், அமெரிக்க கலாச்சாரம் மிக வேகமாக பின்பற்றப்  பட்டு வருவதைப் போல; அன்றிருந்த இந்திய மேட்டுக் குடியினர் ஆரிய கலாச்சாரத்தை விரும்பி ஏற்றுக் கொண்டிருந்தனர். அதன் ஆதிக்கம் பிற்காலத்தில் தென்னிந்தியா, இலங்கை வரை பரவியது. "ஆரியர்கள்" என்பது ஒரு இனத்தை அல்லது சாதியை குறிக்கும் சொல் அல்ல. அதன் உண்மையான அர்த்தம் "மேன் மக்கள்" என்பதாகும். நாம் இன்று மேட்டுக்குடி வர்க்கம் என்று அழைக்கும் பிரிவினரை, புராதன கால மக்கள் ஆரியர்கள் என்று அழைத்திருக்கலாம். யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள் சிலர், தமக்கு "ஆரியச் சக்கரவர்த்தி" என்று பெயர் சூட்டிக் கொண்டனர். ஈரான் என்பதன் அர்த்தம் "ஆரியர்களின் நாடு". ஆனால் அதனை ஆரிய இனத்தவரின் தாயகம் என்று பொருள் கொள்வது அபத்தமானது. ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இஸ்லாமிய மயமாவதற்கு முன்னர், அங்கே நால் வர்ண சாதி அமைப்பு இருந்தது. அதாவது பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய சாதியினர் அரச கட்டமைப்பின் தூண்களாக இருந்தனர். 

வரலாற்றில் குறிப்பிட்ட காலத்தில் ஒரு மொழியை பேசிய மக்கள், பின்னர் ஏதாவது ஒரு காரணத்தினால் வேறு மொழியை பேசத் தொடங்குவது சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றது. இன்றுள்ள தமிழர்கள் கூட, ஒரு காலத்தில் பல மொழிகளைப் பேசிய, பல் வேறுபட்ட இனங்களின் கலவை தான். அவுஸ்திரேலியாவில் வாழும் அபோரிஜின் இனத்தோடு தொடர்புடைவர்களே ஆதி தமிழர்கள். ஆனால், அன்று அவர்கள் தமிழ் மொழி பேசவில்லை.   பிற்காலத்தில் புலம்பெயர்ந்து வந்த மராட்டியர்கள், காஷ்மீரிகள், ஆப்கானியர்கள், ஈரானியர்கள் (பல்லவர்கள்) போன்ற "ஆரியர்களுடன்" இனக்கலப்பு நடந்த பின்னர் தான், தமிழர்கள் தோன்றினார்கள். ஒரு மொழியை அடிப்படையாக கொண்டு, ஒரு இனத்தை வரையறுப்பது, ஒரு மடத்தனமான, அரசியல் உள்நோக்கம் கொண்ட  இனவாதக் கோட்பாடு ஆகும். 

(முற்றும்)



இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?
17.தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்
18.கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்
19.தேர்த் திருவிழா : ஆரிய மன்னர்களின் வெற்றி விழா!
20.கிரேக்கர்களுக்கு அறிவியல் கற்பித்த எகிப்திய "பிராமணர்கள்"!

*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber
14. Black Athena, by Martin Bernal
15. The Minoans, The World's Greatest Civilizations
16. Empires of the Silk Road, A History of Central Eurasia from the Bronze Age to the Present, by Christopher I. Beckwith
17. தொல்காப்பியத் தமிழர், சாமி. சிதம்பரனார்

Friday, February 01, 2013

தேர்த் திருவிழா : ஆரிய மன்னர்களின் வெற்றி விழா!

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 19

(பத்தொன்பதாம் பாகம்)


இன்று பல இந்துத் தமிழர்கள், பகவத் கீதை மற்றும் அது சம்பந்தமான சுவரொட்டிகளை, அலங்காரப் பொருட்களை,  தமது வீடுகளில் வைத்திருக்கின்றனர். யார் பகவத் கீதையை, "இந்துக்களின் புனித                   நூல்" ஆக்கினார்கள் என்று தெரியவில்லை. "கிறிஸ்தவர்களுக்கு விவிலியம் போல,  முஸ்லிம்களுக்கு குர் ஆன் போல, எமது புனித நூலாக பகவத் கீதை இருப்பதாக," இந்துக்கள் கூறிக் கொள்கின்றனர். உண்மையில், இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என்ற நான்கு வேதங்களையும், ஒரே நூலாக சுருக்கினால், அதுவே இந்துக்களின் புனித நூலாக இருந்திருக்கும். ஆனால், அங்கே ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. பிராமணர்களை தவிர பிற சாதியினர் வேதம் படிக்கக் கூடாது. அந்த தடையை மீறி யாராவது படித்தால் நாக்கை அறுக்கலாம், படிப்பதை கேட்டுக் கொண்டிருந்தால் காதை அறுக்கலாம், என்று "பிராமண ஷரியா சட்டம்" ஒன்றை போட்டிருக்கிறார்கள்.  இன்றும் கூட, பிராமணரல்லாத பிற சாதி இந்துக்கள் அதனை மதித்து நடக்க வேண்டியுள்ளது. 

இங்கே எமக்கு தேவையானது பகவத் கீதை அல்ல. தேரோட்டும் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் செய்த காட்சியை ஒரு தடவை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். தேரோட்டும் கண்ணனும், அம்பெய்யும் அர்ச்சுனனும், தேரை இழுக்கும் குதிரைகளும் இந்தக் கட்டுரைக்கு முக்கியமானவை. பல ஓவியர்கள், தமது கற்பனைக்கு எட்டியவாறு அதனை தீட்டியுள்ளனர். மகாபாரதமும், அதில் வரும் பாத்திரங்களும், கீதோபதேசமும் வரலாற்றில் உண்மையாகவே நடந்தனவா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அது மாதிரியான போர்கள் வரலாற்றில் நடந்துள்ளன. அதிலும், கண்ணனும், அர்ச்சுனனும் அமர்ந்திருப்பது போன்ற இரதங்கள் போரில் பயன்படுத்தப் பட்டன. ஒரு சிறிய வித்தியாசம். சரித்திர கால இரதம், அர்ச்சுனனின் இரதம் போன்று அவ்வளவு பெரிதாக இருக்காது. ஒரு ஆள் தூக்குமளவு பாரம் குறைந்தது. அனேகமாக இரண்டு சக்கரங்கள் பூட்டப் பட்டிருக்கும். இரண்டு குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும். குதிரைகளை சாட்டையால் அடித்து தேரை ஓட்டும் ஒருவரும், அம்பு, வில்லுடன் இன்னொருவரும் அமர்ந்திருப்பார்கள். 

பண்டைய காலத்தில், குதிரைகள் பூட்டிய இரதங்களின் பாவனை போரில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த ஆயுதமாக விளங்கியது.  இருபதாம் நூற்றாண்டில், இராணுவ கவச வாகனம், அல்லது யுத்த தாங்கி எந்தளவு பிரயோசனமாக கருதப் பட்டதோ, அந்தளவு நவீனமான கண்டுபிடிப்பாக அது இருந்தது. குதிரைகளை போருக்கு பழக்கப் படுத்தியது மட்டுமல்ல, சில்லுகள் பூட்டிய வாகனமும், வடக்கே இருந்து குடிபெயர்ந்த வெள்ளையின மக்களுக்கு சரித்திரத்தில் நிலையான இடத்தை பிடித்துத் தந்தது. அதற்காக, "சரித்திரத்தில் வெள்ளையினத்தவர் மட்டுமே குதிரை வண்டிகளை போரில் பயன்படுத்தினார்கள், அதனால் கறுப்பினத்தவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்..." என்று அர்த்தம் கொள்வது சரியல்ல. பல மேலைத்தேய சரித்திர ஆய்வாளர்கள், வேண்டுமென்றே அது போன்ற தவறான தகவல்களை, "ஆரியரின் படையெடுப்பு" என்ற கோட்பாட்டின் பேரில் பரப்பி வந்துள்ளனர். 

எத்தகைய நவீன ஆயுதமும், ஆரம்ப காலங்களில் அதனை கண்டுபிடித்தவர்களுக்கு சாதகமான விளைவுகளை தரும். ஆனால், காலப்போக்கில் எதிர் தரப்பினரும், அதன் பாவனையை அறிந்து கொண்டு பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். அமெரிக்கா அணுவாயுதத்தை காட்டி உலகம் முழுவதையும் பயமுறுத்திக் கொண்டிருந்த  காலம் ஒன்றிருந்தது. சிறிது காலத்தின் பின்னர்,  அதன் எதிரி நாடுகளும் அணுவாயுதங்களை  உற்பத்தி செய்யத் தொடங்கவில்லையா? அது போன்று தான் பண்டைய காலத்திலும் நடந்தது. இன்றைய ஈராக்/துருக்கியில் தோன்றிய வெள்ளையின ராஜ்யத்திடம் (பார்க்க: கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்.)  இருந்து, எகிப்தின் கறுப்பின ராஜ்ஜியம் குதிரை வண்டிகளின் பாவனையை கற்றுக் கொண்டது. நவீன காலத்தில் நடப்பதைப் போல, ஆரம்பத்தில் அவற்றை அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்தாலும், பின்னர் அதனை தமது நாட்டில் உற்பத்தி செய்யக் கற்றுக் கொண்டனர். மேலும், வெள்ளையின குழுக்கள், தமக்குள் போரிட்டுக் கொண்ட பொழுதும், குதிரை வண்டிகளை பயன்படுத்தி வந்தன. உதாரணம்: மகாபாரதம். மகாபாரதக் கதையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள், எதிரெதிரான இரண்டு முகாம்களாக பிரிந்து போரிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

வண்டி என்பது ஒரு தமிழ்ச் சொல். நாங்கள் அடிக்கடி "வாகனம்" என்ற  இன்னொரு சொல்லையும் பாவிப்போம். வாகனம் என்பது ஒரு வட மொழிச் சொல்லாகும். "வாகன்" (Wagon) என்ற சொல் இன்று பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுகின்றது. அப்படியானால், சமஸ்கிருதம் பேசிய இன மக்களும், ஐரோப்பிய இனங்களும், புராதன காலத்தில் ஒரே இனமாக இருந்து பிரிந்து சென்றிருக்க வேண்டும். மத்திய ஆசியாவில் இருந்து குடிபெயர்ந்த வெள்ளையினத்தவர்கள், ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா என்று உலகின் பல பகுதிகளில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு குதிரைகள் பூட்டிய "வாகன்" இன்றியமையாத கருவியாக இருந்தது. 

மகாபாரதக் கதையில் சித்தரிக்கப் பட்டதைப் போன்ற, அதே மாதிரியான இரதங்கள், மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஈராக், துருக்கி, கிரேக்கம் ஆகிய நாடுகளை பெயர் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  அங்கெல்லாம் அகழ்வாராய்ச்சியாளர்கள்,  மண்ணுக்குள் புதைந்திருந்த, புராதன கால  குதிரை வண்டிகளை தோண்டி எடுத்துள்ளனர். மகாபாரதக் கதையில் வருவதைப் போன்ற இரதங்கள், போருக்கு மட்டும் பயன்படுத்தப் படவில்லை. அவற்றை வைத்து ஓட்டப் பந்தயங்கள் நடத்தினார்கள். வெற்றிவிழா அணிவகுப்புகளில் பயன்படுத்தினார்கள். நமது நாட்டில் உள்ள சைவக் கோயில் திருவிழாக்களில், சுவாமி இரத (தேர்) பவனி வருவதும், ஆரிய இன மன்னர்கள் காலத்து சம்பிரதாயம் ஒன்றின் தொடர்ச்சி ஆகும்.   

எப்போதும் அந்நிய நாடுகளில் குடியேற விரும்புவோரின் குடிசன பரம்பல் நாற்திசையிலும் நடைபெறும். வெள்ளையின மக்கள் ஐரோப்பாவில் மட்டும் சென்று குடியேறவில்லை. மத்திய கிழக்கு, வட இந்தியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் சென்று குடியேறினார்கள். எதற்காக ஐரோப்பியர்கள் மட்டும் தூய வெள்ளையினத்தவராக தெரிகின்றனர்? அனேகமாக ஐரோப்பாவில் குடியேறிய வெள்ளையர்கள், எந்தவொரு இனத்துடனும் கலக்காமல் இருந்ததால், தனித் தன்மையை பேணியிருக்கலாம். அதனால் தான் அவர்கள் நாகரீகத்தில் பின்தங்கி இருந்தனர் என்பதையும், இங்கே குறிப்பிட வேண்டும். ஈரான், ஈராக், அரேபியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் குடியேறிய வெள்ளையின மக்கள்,  உள்ளூர் கறுப்பின மக்களுடன் ஒன்று கலந்து, பல புதிய இனங்களாக உருவாகி உள்ளனர். 

மத்திய கிழக்கிலும், இந்திய உப கண்டத்திலும் குடியேறிய இந்தோ-ஆரிய வெள்ளையினத்தவர்கள், உள்ளூர் கறுப்பின மக்களுடன் ஒன்று கலந்த பின்னர், சமஸ்கிருதம், பார்சி போன்ற புதிய மொழிகள் தோன்றின. இதிலே எந்த இனம் எத்தனை சதவீதம் கலந்திருந்தது என்றெல்லாம் கண்டுபிடிப்பது கடினம். புதிய கலப்பினத்தில், வெள்ளையின விகிதாசாரம் அதிகமாக இருந்த இடங்களில் சமஸ்கிருதம் (இன்று ஹிந்தி- உருது) போன்ற "ஆரிய மொழிகள்" பேசப் பட்டன.  கறுப்பினத்தவரின் விகிதாசாரம் அதிகமாக இருந்த இடங்களில் தமிழ் போன்ற "திராவிட மொழிகள்" பேசப்பட்டன. எது எப்படி இருந்தாலும், இன்றைக்கு நாகரீகமடைந்த மொழிகளை பேசும் மக்கள் எல்லோரும், கலப்பினத்தை சேர்ந்தவர்கள் தான். அவ்வாறு இனக் கலப்படையாமல், இனத் தூய்மை பேணியோர் காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்றனர். அவர்களை நாங்கள் "நாகரீகமடையாத பழங்குடி இனம்" என்று கூறி ஒதுக்கி வைத்திருக்கிறோம். 

இந்தியாவில் ஆரிய படையெடுப்பு நடக்கவில்லை. ஆனால், ஆரிய குடியேற்றம் நடந்துள்ளது. அதிலும் கி.மு. 3000 வருடங்களுக்கு முன்னர், தெளிவாகத் தெரியக் கூடிய ஆரியப் படையெடுப்புகள்/குடியேற்றங்கள்  நடந்ததாக சரித்திரத்தில் சான்றுகள் கிடையாது. அந்த "ஆரியரும்" ஒரே இனமாக, ஒற்றுமையுடன் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் தமக்குள் மோதிக் கொண்டார்கள். அரசியல் ஆதிக்கத்திற்காக, ஒரே இனத்தை சேர்ந்தவர்களையும் அழித்தனர். அது மட்டுமல்ல, கறுப்பின அரசர்களுக்கு விசுவாசமான கூலிப்படையாக இருந்தார்கள். அப்படியானவர்கள் தாம் குடியேறிய அல்லது தொழில் செய்த நாடுகளில், கறுப்பின பெண்களை மணந்து கொண்டனர். கறுப்பின மக்களின் நாட்டை பாதுகாப்பதற்காக, படையெடுத்து வந்த இன்னொரு ஆரிய இனத்திற்கு எதிராக போராடினார்கள். 

ஆனால், அது இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் வெள்ளையின மக்கள் குடியேறிய ஆரம்ப காலகட்டம் ஆகும். சில நூறாண்டுகளுக்கு பின்னர், அல்லது ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர்,  உண்மையிலேயே சில "ஆரிய-வெள்ளையின" படையெடுப்புகள்  இடம்பெற்றன. மேற்கே இருந்து படையெடுத்த, ஈரானியர்கள் தமது சாம்ராஜ்யத்தை இந்தியா வரை விஸ்தரித்தார்கள். அவர்கள் தான் இந்து மதத்தவர்கள். அதே நேரம், வடக்கே இருந்து வந்த வெள்ளை இனங்கள், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் "காந்தாரம்" என்ற சாம்ராஜ்யத்தை ஆண்டனர். அது இந்து மதமும், பௌத்த மதமும் கலந்த நாடாக விளங்கியது. இவர்களை அடுத்து, கிரேக்கத்தில் இருந்து அலெக்சாண்டர் தலைமையில் இன்னொரு வெள்ளையினம் படையெடுத்து வந்தது. மேற்குறிப்பிட்ட மூன்று வெவ்வேறான வெள்ளை இன மக்களும், ஈரானிலும், இந்திய உபகண்டத்திலும் வாழ்ந்த கறுப்பின (திராவிட) மக்களுடன் கலந்து விட்டனர். அதனால், அவர்களை எல்லாம் தூய வெள்ளை இன ஆரியர்களாக கருத முடியாது. 

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?
17.தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்
18.கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்

*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber
14. Black Athena, by Martin Bernal
15. The Minoans, The World's Greatest Civilizations
16. Empires of the Silk Road, A History of Central Eurasia from the Bronze Age to the Present, by Christopher I. Beckwith
17. தொல்காப்பியத் தமிழர், சாமி. சிதம்பரனார்

Wednesday, January 30, 2013

கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 18

(பதினெட்டாம் பாகம்)

"பெலோப்பெனோஸ் நாட்டிற்கு எகிப்தியர்கள் எவ்வாறு வந்தார்கள்? இந்த கிரேக்கப் பகுதியில் எவ்வாறு அரசர்களானார்கள்?" - ஹெரோடொதுஸ் (வரலாறு, VI.55) 

 ஐரோப்பியர்கள், தமது நாகரீகம் பிறந்த இடம் என்று பெருமைப் படும், கிரேக்கத்தில் வாழ்ந்த ஹெரோடொதுஸ் என்பவர் தான், முதன் முறையாக கிரேக்கர்களின் வரலாற்றை விரிவாக எழுதி வைத்தார். இன்றைக்கு ஐரோப்பிய நாகரீகம் பற்றி ஆராயும் சரித்திர ஆசிரியர்கள், ஹெரோடொதுஸ் எழுதிய குறிப்புகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு. அவர் எழுதியவை எல்லாம் உண்மைகள் அல்ல. பல நாடுகளை, மக்களை பற்றிய தவறான தகவல்களும் அவரது எழுத்துக்களில் காணப்படுகின்றன. அனேகமாக, பிற இனங்களின் நாகரிக முன்னேற்றத்தை கண்டு பொறாமை கொண்ட ஒருவரின் கருத்துக்களாகவே அவை தெரிகின்றன. ஆயினும், பண்டைய கால ஐரோப்பா பற்றி மட்டுமல்ல, மத்திய கிழக்கு, எகிப்து போன்ற நாடுகளை பற்றி அவரது குறிப்புகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அந்த வகையில், கிரேக்கத்தின் பெலோப்போனோஸ் பகுதியில், எகிப்தியர்கள் (கறுப்பினத்தவர்) வாழ்ந்து வந்ததை ஹெரோடொதுஸ் எழுதிய சரித்திரத்தில் இருந்து தெரிகின்றது. நான் ஒரு சுற்றுலா பயணியாக கிரீஸ் நாட்டிற்கு சென்றிருந்த பொழுது, ஏதென்ஸ் நகர அருங்காட்சியகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே, சுருளான தலைமுடியுடன் ஆப்பிரிக்க கறுப்பின தோற்றத்தை கொண்ட ஒரு பெண்ணின் சிலை ஒன்று இருந்தது. அதைத் தவிர, அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில், கறுப்பின மக்கள் போன்று தோற்றம் கொண்டவர்களின் ஓவியங்கள் காணப்பட்டன. ஆகவே, ஒரு காலத்தில் இன்றைய கிரேக்கப் பகுதிகளில் கறுப்பின மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.

இன்றைய எகிப்துக்கும், கிரீஸுக்கும் நடுவில் கிரேட்டா  (Creta) தீவு அமைந்துள்ளது.  அந்த தீவை ஆண்ட மீனோ அரச வம்சத்தினர், அந்தப் பிராந்தியத்தில் வல்லமை மிக்க கடற்படையை கொண்டிருந்தனர். கிரேக்க நாடு அவர்களுக்கு அடங்கி திறை செலுத்திக் கொண்டிருந்தது. இறுதியில் இயற்கைப் பேரழிவு, கிரேக்கப் படையெடுப்புகள் காரணமாக, கிரேட்டாவின் மீனோ நாகரீகம் அழிந்து விட்டது. அதன் பிறகு தான் கிரேக்க நாகரீகம் ஆரம்பமாகியது. இதிலே கவனிக்கப் பட வேண்டிய விடயம், கிரேட்டா நாட்டவர்கள் கிரேக்க இனத்தவர் அல்ல. அவர்கள் தனியான மொழியை பேசினார்கள். எகிப்துடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்தனர். ஆகவே அவர்கள் பண்டைய எகிப்தில் இருந்து குடியேறிய இனமாக இருக்கலாம். கிரேட்டா அரச வம்சமான மீனோ என்ற பெயர், தமிழ்ச் சொல்லான மீனில் இருந்து வந்திருக்கலாம் என, பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன் ஒரு நூலில் எழுதியிருக்கிறார். அதனை நிரூபிப்பது போல, அண்மையில் ஆராயப்பட்ட கல்வெட்டு ஒன்றில், "மீனு ரொஜா" (மீன் ராஜா) என்று மன்னரின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது.

ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், வட இந்தியாவிலும், சீனாவிலும், வெள்ளையினத்தவர்கள் பெருமளவில் குடியேற ஆரம்பித்த காலம் அதிகமில்லை. எப்படியும், மூவாயிரம் அல்லது ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் தான் அந்த குடியேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அனேகமாக, இன்று நடைபெறும் குடிசனப் பரம்பல் போன்று, தனி நபர்களாக, சிறு குழுக்களாக வந்து குடியேறினார்கள். கறுப்பினத்தவரின் நாடுகளில், மன்னர்களுக்கு விசுவாசமான கூலிப் படைகளாக இருந்துள்ளனர். அவ்வாறு இராணுவத்தில் சேவையாற்றிய வெள்ளையின ஆண்கள், உள்ளூர் பெண்களை மணம் முடித்து அங்கேயே தங்கி விட்டனர். உள்ளூர் மக்களின் மொழிகளை பேசக் கற்றுக் கொண்டனர். அந்தக் காலங்களில், இன்றிருப்பதைப் போன்ற இன/மத துவேஷங்கள் இருக்கவில்லை. அந்நியர்களாக இருந்தாலும், குடியேறிய நாட்டின் மொழியை பேசி, அந்நாட்டு மக்களைப் போன்றே வாழ்வதற்கு தடையேதும் இருக்கவில்லை. அதனால் தான், இன்றைக்கு வெள்ளை நிறம் கொண்ட மக்கள், பல்வேறு மொழிகளை பேசுகின்றனர். அரபு மொழி பேசும் நாடுகளில் குடியேறியவர்கள் அரபி பேசினார்கள். சமஸ்கிருதம் பேசும் இந்திய நாடுகளில் குடியேறியவர்கள், சமஸ்கிருதம் (இன்று உருது அல்லது ஹிந்தி) பேசினார்கள்.

வெள்ளையின மக்கள், கறுப்பின அரசர்களின் கூலிப் படைகளாக இருந்ததால், இராணுவ அறிவு கைவரப் பெற்றவர்களாக இருந்தனர். கறுப்பினத்தவரின் சாம்ராஜ்யங்கள் வீழ்ந்து கொண்டிருந்த காலங்களில், புதிதாக தோன்றிய ராஜ்யங்களில் வெள்ளையின அல்லது கலப்பின மக்களின் ஆதிக்கம் அதிகரித்தது. அவர்கள் மத்தியில் இருந்து புதிய அரச வம்சங்கள் தோன்றவாரம்பித்தன. உண்மையில், அவர்களின் தோல் நிறம் மட்டுமே வெள்ளையாக இருந்தது. ஆனால், அவர்களின் மொழியும், கலாச்சாரமும் மாறுபட்டிருந்தது.

உதாரணத்திற்கு, லைபீரியா என்ற நாட்டில் பெருமளவு அமெரிக்க கருப்பர்கள் குடியேறியுள்ளனர். ஆனால், அவர்களுக்கும், சுற்றவர உள்ள பிற ஆப்பிரிக்க இனங்களுக்கும் இடையில் தோல் நிறத்தில் மட்டுமே ஒற்றுமையுண்டு. மற்றும்படி, அவர்களது மொழி, கலாச்சாரம், நடையுடை பாவனை யாவும் அமெரிக்கர்களை போன்றிருக்கும். அவ்வாறு தான், பண்டைய கிரேக்கத்தை சேர்ந்த வெள்ளையர்கள், எகிப்தியரிடம் இருந்து நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். அவ்வாறு நாகரீகமடைந்த வெள்ளையர்கள், தமது அயலில் வாழ்ந்த பிற வெள்ளை இனங்களை "காட்டுமிராண்டிகள்" என்று அழைத்தார்கள். வட ஈராக்கில் தோன்றிய மித்தானி என்ற நாட்டை பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அங்கு அரச கரும மொழியாக சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழி அல்லது, புராதன இந்திய மொழி கோலோச்சியது. நமக்கு நன்கு அறிமுகமான இந்து மத தெய்வங்கள், புராணக் கதைகள் என்பன, இன்றைய ஈராக், துருக்கி ஆகிய நாடுகளில் தோன்றியிருக்க வேண்டும். அதற்கான சாத்தியப்பாடுகளை நாம் விரிவாக ஆராய்வோம்.

விநாயகர் என்ற இந்து தெய்வத்திற்கு, கணபதி, கணேஷ் என்ற பெயர்கள் உண்டு. கணபதி என்றால், இராணுவ தளபதி என்ற பொருள் படும். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, வெள்ளையின மக்கள், இராணுவ மயமாக்கப்பட்ட சமுதாயமாகவே வாழ்ந்து வந்தனர். ஸ்பார்ட்டா (தென் கிரேக்கம்), ஹதூசா (மத்திய துருக்கி) போன்ற இடங்களில் தோன்றிய ஆதி கால வெள்ளையின நாகரீகங்கள், முழுக்க முழுக்க இராணுவ அடிப்படையைக் கொண்டிருந்தது. ஆண்கள் சிறு வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும். அவர்களது வாழ்நாளில் பெரும் பகுதியை இராணுவ முகாம்களில் கழிக்க வேண்டும். அந்த நகர-தேசங்களின் வளங்கள் முழுவதும் இராணுவத்தை பராமரிப்பதிலேயே செலவிடப் பட்டன. அவ்வாறான இராணுவவாத கொள்கை கொண்ட சமுதாயத்தில், "கணபதி" என்ற தெய்வத்தை  வழிபட்டிருக்க கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. 

"கணேஷ்" என்ற பெயரில் ஒரு பண்டைய நகரம் இருந்தது. ( Kanesh, http://en.wikipedia.org/wiki/Kültepe) இன்றைய துருக்கி நாட்டில், Kayseri எனும் நகரத்தில் இருந்து சிறிது தூரத்தில் அது உள்ளது.  கணேஷ் நகரம் பாபிலோனியருடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்ததால், அதன் முக்கியத்துவம் வெளிநாடுகளிலும் உணரப் பட்டது. கணேஷ் நகரில் வாழ்ந்த மக்கள் வழிபட்ட தெய்வங்களுக்கு வாகனமாக விலங்கினங்கள் இருந்துள்ளன. எலி, மாடு, மயில் போன்ற விலங்கினங்களை வாகனங்களாக கொண்ட இந்து மத கடவுளரை இது நினைவுபடுத்துகின்றது. கணேஷ் நகரில் வாழ்ந்த மக்கள், ஹித்தித் அல்லது ஹத்தி இனத்தவர் எனத் தெரிகின்றது. ஏதோ காரணத்தால் கணேஷ் நகரம் கைவிடப் பட்டு, ஹதூசா என்ற புதிய நகரம் உதயமாகியது. அவர்கள் அங்கிருந்த படியே ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டார்கள்.

இன்றைய துருக்கி பகுதிகளில் வாழ்ந்த வெள்ளயின ஹித்தித் மக்களுக்கும், இன்றைய ஈராக்கில் வாழ்ந்த அசிரியர்களுக்கும் இடையில் அடிக்கடி போர் மூண்டன. அவை எல்லாம் அரசியல் ஆதிக்கத்திற்கான போர்களே அன்றி, இன மேலாண்மைப் போர்களல்ல. அவர்களுக்கு சவாலாக விளங்கிய அசிரிய பேரரசன் ஒருவனின் பெயர் "நரம் சின்". இந்தப் பெயர், விஷ்ணு புராணத்தில் வரும் நரசிம்மன் என்ற மன்னனை நினைவு படுத்துகின்றது அல்லவா? அசிரியர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களால் தோற்கடிக்கப் பட்ட நாடுகளில் பல அழிவுகளை உண்டாக்கினார்கள். அதனால், அவர்களால் பாதிக்கப்பட்ட பிற இனங்கள் அசிரியர்களை கொடியவர்களாக கருதியிருக்க வாய்ப்புண்டு. அனேகமாக, இந்து மத புராணங்களில் வில்லன்களாக சித்தரிக்கப்படும் "அசுரர்கள்" என்ற சொல் அங்கிருந்து தோன்றி இருக்கலாம். ஏனெனில், அசிரியர்களின் தலைநகரத்தின் பெயர் "அசுரா"! 

அசிரியர்களின் சாம்ராஜ்யத்தில் பல்லின மக்கள் வாழ்ந்தனர். அந்தக் காலத்திலேயே பிரஜைகள் மதித்து நடக்க வேண்டிய சட்டங்கள் உருவாக்கப் பட்டிருந்தன என்பது ஒரு சிறப்பம்சம். இருந்தாலும் சில சட்டங்கள் பிற்போக்கானவையாக இருந்தன. உதாரணத்திற்கு, பெண்கள் வெளியே போகும் பொழுது, உடலையும், முகத்தையும் மூடும் பர்தா (அல்லது பூர்க்கா) என்ற ஆடை அணிந்திருக்க வேண்டும். குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு அது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. விலை மாதுக்கள் மட்டுமே முகத்தை மூடாமல் ஆடை அணிந்திருக்க வேண்டும். (The Code of the Assyrians, http://www.fordham.edu/halsall/ancient/1075assyriancode.asp) இந்த வழக்கம் பிற்காலத்தில், பல இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப் பட்டு வந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால், 19 ம் நூற்றாண்டு வரையில் கூட, வட இந்தியாவை சேர்ந்த இந்துப் பெண்களும், கிரேக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண்களும், முகத்தை மூடி பர்தா அணிந்து தான் வெளியே சென்றனர்.

கற்பு என்ற ஒழுக்க நெறி கூட, மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த கலாச்சாரம் தான். பெரியாரும், திராவிட இயக்க அறிஞர்களும் இதனை வலியுறுத்தி வந்தனர். நான் முன்பு ஒரு தடவை எழுதியது போல (பார்க்க: கோயிலில் பாலியல் தொழில்) தமிழர்களும் ஒரு காலத்தில் தாய்வழிச் சமுதாயமாக இருந்தனர். மத்திய கிழக்கில் மாறிக் கொண்டு வந்த ஆணாதிக்க சமுதாய அமைப்பு, தமிழர் மத்தியிலும் பரவியது. திராவிட கொள்கையாளர்கள், அதனை ஆரியர்கள் புகுத்தினார்கள் என்று நம்புகின்றனர். ஆனால் யார் அந்த ஆரியர்கள்? தமது கலாச்சாரம், மொழி என்பனவற்றை அவர்களால் எவ்வாறு எம்மீது திணிக்க முடிந்தது ?

உண்மையில், நாங்கள் தான் அந்த ஆரியர்கள்! அங்கிலேயரின் காலனிய ஆட்சிக் காலத்தில், நாங்கள் ஆங்கில மொழி பேசவும், ஆங்கிலேயரை போன்ற நடை, உடை, பாவனைகளை கற்றுக் கொள்ளவில்லையா? அதே போன்று,  நாங்களாகவே  ஆரியரின் மதத்தை, கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கினோம்! அந்தக் கருதுகோளை நிரூபிக்கும் ஆதாரங்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளன. தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், ஈரானில் இருந்து வந்த வெள்ளை இனத்தவர்கள். அவர்கள் தமது ஈரானிய (ஆரிய) கலாச்சாரத்தை கொண்டு வந்து புகுத்தி இருப்பார்கள். ராஜராஜ சோழன் காலத்தில் சைவ மதத்துடன், ஆரிய மயமாக்கலும் விரைவாக பரவியது.

பண்டைய காலத்து வரலாற்றை தேட வேண்டுமானால், அலெக்சாண்டரின் படையெடுப்புகளில் இருந்து ஆரம்பிக்கலாம். உலகம் முழுவதும் வென்ற அலெக்சாண்டர் இந்தியாவில் தோற்று திரும்பினான். இந்த வரலாறு ஒரு பாதி மட்டுமே உண்மை. இன்னொரு பாதிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வட-மேற்கு இந்தியாவில் சில பகுதிகளை அலெக்சாண்டரின் படைகள் கைப்பற்றின. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில், உள்ளூர் பெண்களை மணம் முடித்துக் கொண்டு, அலெக்சாண்டரின் கிரேக்க படையினர் தங்கி விட்டார்கள். பிற்காலத்தில் அங்கே பல வெள்ளையின ராஜ்ஜியங்கள் தோன்றின. அவர்கள் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தமது ராஜ்ஜிய எல்லைகளை விஸ்தரித்தார்கள். அவர்கள் மூலம் கிரேக்கர்களின் கலாச்சாரம், இந்தியாவில் பரவி இருக்கலாம் அல்லவா? கிரேக்க கலாச்சாரம் என்றால் என்ன?

கிரேக்கர்களின் புராணக் கதைகளில், "மெடூசா" என்ற அரக்கி பற்றிய கதை பிரபலமானது. தலையில் பாம்புகள் நெளியும், விகாரமான தோற்றம் கொண்ட சூனியக் கிழவி போன்ற மெடூசாவின் கதையை, குழந்தைகளை பயமுறுத்த சொல்லப் படுவதுண்டு. அந்தக் கதையின் படி, மெடூசா ஒரு காலத்தில், கிரேக்க நாட்டின் பேரழகியாக இருந்தவள். அவளை மணம் முடிப்பதற்கு எத்தனையோ ஆண்கள் போட்டி போட்டார்கள். ஏதென்ஸ் நகர தேவதையான அதினாவின் கோயிலுக்கு, மெடூசா வழிபட செல்வது வழக்கம். ஒரு நாள், யாருமற்ற நேரத்தில் அங்கு வந்த பொசெய்டொன், மெடூசாவை கோயிலில் வைத்தே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினான். தனது கோயிலிலேயே இவ்வாறான அக்கிரமம் நடந்ததால், அதினா கோபமுற்றாள். ஆனால், பொசெய்டொன் கிரேக்கர்களின் சமுத்திரக் கடவுள். அதனால் அவனை தண்டிக்க முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணான மெடூசா மீது பழி போடப்பட்டது. தெய்வ சந்நிதானத்தில் கற்பிழந்த மெடூசா, அந்தக் கணமே விகாரமான வயோதிப மாதுவாக மாற வேண்டுமென சபிக்கப் பட்டாள். 

"சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் நஷ்டம் சேலைக்கு தான்..." என்று பெண்ணின் கற்பை பத்திரமாக பாதுகாக்கக் கோரும், பிற்போக்கான இந்தியக் கலாச்சாரம் உங்கள் மனக்கண்ணில் வரலாம். கிரேக்கர்கள் மத்தியிலும் அதே மாதிரியான கலாச்சாரம் இருந்ததை மெடூசா கதை மூலம் அறிய முடிகின்றது.  ஹோமர் எழுதிய காவியமான "ஒடிசி"யிலும், ஒரு திருமணமான பெண், கணவன் கடல் கடந்து சென்று வருடக் கணக்காக திரும்பி வரா விட்டாலும், சோரம் போகாமல் கற்பெனும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று போதிக்கின்றது. ஹோமர் எழுதிய ஒடிசி எனும் காவியத்தில், பல இடங்கள் இராமாயணத்தை நினைவூட்டுகின்றன. ஒடிசி காவியத்தில்,  த்ரோய் நாட்டவரால் கடத்திச் செல்லப்பட்ட கிரேக்க அரசியை  மீட்பதற்காக பெரும் போர் நடந்தது. இராமாயணத்தில் இலங்காபுரியை சேர்ந்த இராவணனால் கடத்தப் பட்ட  சீதையை மீட்பதற்காக போர் நடந்தது.  "யாராலும் வளைக்க முடியாத வில்லை வளைத்த கதை", இராமாயணத்திலும், ஓடிசியிலும் ஒரே மாதிரி சொல்லப் படுகின்றது.

த்ரொய் நாட்டுடன் போருக்கு சென்ற ஓடிசியின் கப்பல், திரும்பி வரும் வழியில் திசை மாறி கடலில் தத்தளிக்கின்றது. பத்தாண்டுகளுக்கும் மேலாக பல புதிய நாடுகளை கண்டு, அங்கெல்லாம் தீரச் செயல்களை செய்து களைத்த ஒடிசி, இறுதியில் தாயகம் திரும்புகின்றான். வீடு வந்து சேர்ந்த பின்னர், தனது மனைவி இத்தனை வருடங்களாக கற்புடன் இருந்தவளா என்று சோதிப்பதற்காக ஒரு பரீட்சை வைக்கிறான். இது சீதையின் கற்பை சோதித்த இராமனின் கதையை நினைவுபடுத்துகின்றது. இதே நேரம், ஒடிசி கண்டுபிடித்த நாடுகளில் எல்லாம், பல பெண்களுடன் உறவு கொள்கிறான். இந்தக் காவியத்தை எழுதிய ஹோமருக்கு, அது தவறாக தெரியவில்லை. அதாவது, வெளிநாடு சென்ற  ஆண் எத்தனை பெண்களோடு உறவு வைத்துக் கொண்டாலும் அதில் தவறில்லை. ஆனால், கணவன் வெளிநாட்டுக்கு  சென்றதால் தொடர்புகள் அறுந்து விட்ட நிலையிலும், அவனை பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்தாலும்,  தனிமையில் வாடும் மனைவி, வேறெந்த ஆண்  மகனையும் மனத்தால் கூட தீண்டக் கூடாது. அதுவே பெண்களை மகிமைப் படுத்தும் கற்பெனும் ஒழுக்க நெறி.   கிரேக்க புராணக் கதைகள் போதிக்கும் நீதி நெறியும் அது தான்.இந்திய புராணங்களையும், கிரேக்க புராணங்களையும் ஒப்பிட்டால், இது போன்ற பல ஒற்றுமைகளை கண்டுபிடிக்கலாம். இவ்வாறு "கற்பின் சிறப்பை" எடுத்துக் கூறும் கிரேக்க கதைகள் பல உள்ளன.

கிரேக்கர்களின் ஒர்பெயுஸ் (Orpheus), எயுரிடிசே (Eurydice) என்ற புராணக்கதையும், இந்தியர்களின் சத்தியவான்-சாவித்திரி கதையும் ஒரே மாதிரி அமைந்துள்ளன. பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்த ஒபெயுஸ் ஒரு சிறந்த இசைக் கலைஞன். அவன் யாழ் இசைத்துப் பாடினால் மயங்காதவர் எவருமில்லை. ஒபெயுஸ், எயுரிடிசே என்ற அழகிய நங்கையை காதல் திருமணம் செய்து கொண்டான். துரதிர்ஷ்டவசமாக அவர்களது மணவாழ்க்கை அதிக காலம் நீடிக்கவில்லை. சத்தியவான், சாவித்திரி கதையிலும் அவர்களின் மணவாழ்க்கை சில வருடங்களே நீடித்தது. எயுரிடிசே காமுகன் ஒருவனால் கானகத்தில் விரட்டப்பட்டு, பாம்பு கடித்து இறந்து போகிறாள். அவளது உயிர் மாண்டவர் வாழும், (எமலோகமான) பாதாள லோகத்திற்கு செல்கின்றது. சத்தியவான் கானகத்தில் கனி பறிக்க சென்ற வேளை உயிர் பிரிகிறது. மனைவியின் இழப்பை தாங்க முடியாத ஒர்பெயுஸ், எமலோகத்திற்கு சென்று உயிரை மீட்டு வருவதாக சூளுரைக்கிறான். யாரும் துணியாத காரியமாக, பாதாள லோகம் நோக்கிச் செல்கிறான். 

கணவனின் இழப்பை ஏற்றுக் கொள்ளாத சாவித்திரி, சத்தியவானின் உயிரை கவர்ந்து செல்லும் எமதர்மனை பின்தொடர்ந்து செல்கிறாள். கிரேக்க பாதாள லோகத்தில், அதன் அதிபதியான ஹாடெஸின் (எமதர்மன்) காவல் நாய்கள் (எருமை வாகனம்?) ஒர்பெயுசை மேற்கொண்டு செல்ல விடாது தடுக்கின்றன. அதனால் வாசலில் உட்கார்ந்து கொள்ளும் ஒர்பெயுஸ், யாழ் எடுத்து கல்லும் கரையும் வண்ணம் சோக கானத்தை இசைக்கிறான். அவனது இசை காலனையும் கரைய வைக்கிறது. இசையினால் இளகிய ஹாடெஸ், எயுரிடிசேயை உயிருடன் மீட்டுச் செல்லலாம் என வரம் கொடுக்கிறான். ஆனால் ஒரு நிபந்தனை. ஒர்பெயுஸ் திரும்பிப் பாராமல் நடந்து செல்ல வேண்டும். அவன் மனைவி அவனைத் தொடர்ந்து வருவாள். ஒரு கணம் கூட திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், அவன் மனைவி மீண்டும் எமலோகத்திற்கே திரும்பி விடுவாள். நிபந்தனைக்கு சம்மதிக்கும் ஒர்பெயுஸ், தனது மனைவியை கூட்டிச் செல்கிறாள். வழி நெடுகிலும், அவள் தன்னை பின்தொடர்ந்து வருகின்றாளா என்ற சந்தேகம் வருகின்றது. ஒர்பெயுஸ் பூலோகத்தை வந்தடையும் நேரத்தில், சந்தேகம் வலுக்கவே திரும்பிப் பார்க்கிறான். அந்த நிமிடமே எயுரிடிசே மீண்டும் எமலோகத்திற்கு திரும்பிச் சென்று விடுகிறாள். கடும்பிரயத்தனத்திற்கு மத்தியில் மனைவியின் உயிரை மீட்டு வந்து பறிகொடுத்த ஒர்பெயுஸ், எமலோகம் சென்று திரும்பிய அனுபவத்தை பாடி பொழுதைப் போக்கினான். கிரேக்க மக்கள் மத்தியில் ஒர்பெயுஸ் - எயுரிடிசே கதை காலத்தால் அழியாத காவியமாகி விட்டது.

"சத்தியவான்-சாவித்திரி-எமதர்மன்" கதை, வட இந்தியர்களுடையது. வட இந்தியர்களும், ஈரானியர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் ஐரோப்பிய இனமான கிரேக்கர்களுக்கும் பொதுவான மூதாதையர் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் ஒரே மாதிரியான புராணக் கதைகளை கேள்விப்பட முடிகின்றது. இந்த மக்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், ஒருவருக்கொருவர் புரியாத மொழிகளைப் பேசினாலும், சில பாரம்பரிய பிணைப்புகள் அவர்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனை இந்த கதையில் இருந்து புரிந்து கொள்ளலாம். இது நவீன கால தேசியவாத கற்பிதங்களை தகர்க்கின்றது. மனிதர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுவதால், வெவ்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் காலத்திற்கு, இடத்திற்கு ஏற்றவாறு வேறு வேறு மொழிகளை பேசி வருகின்றனர். அது தான் உலக நியதி.

இந்து மத கடவுளரும், இந்திய புராணக் கதைகளும், அசுரர்கள் பற்றிய கதைகளும், சமஸ்கிருதத்திற்கு முந்திய புராதன இந்திய மொழியும்; ஈராக், துருக்கி போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியிருக்கலாம் என்பதை பார்த்தோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தால், அதாவது இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள ஈரானுக்குள் நுழைந்தால், இதை விட ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கும்.  இந்திய இந்துக்கள் எம தர்மனை கடவுள் ஸ்தானத்தில் வைத்து மதிப்பதில்லை. எமனை அச்சத்திற்குரிய மரண தேவதையாக உருவகிக்கின்றனர். இது அனேகமாக, கிரேக்க கலாச்சாரத்தின் பாதிப்பின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். கிரேக்கர்களின் மரண தேவதையான ஹாடெஸ், எமனைப் போன்ற பாதாள லோகத்தின் அதிபதி ஆகும். ஆனால், எம தர்மனுக்கு ஒரு வரலாறு உண்டு. ஈரானில், எம தர்மன்  ஒரு தேசத்தை ஸ்தாபித்த அரசனாக போற்றப் படுகிறான். ஆதி கால ஈரானிய அரசர்கள், எமனின் பெயர் வருமாறு பதவிப் பெயரை சூட்டிக் கொள்வது வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்ல, ஈரானியரின் புராதன தலைநகரமும் எமனின் பெயரால் சிறப்புற்று விளங்கியது. சில நேரம், கற்பனையை விட நிஜம் எம்மை ஆச்சரியக் கடலுக்குள் மூழ்கடித்து விடும். 

(தொடரும்)

***********************


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?
17.தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்

*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber
14. Black Athena, by Martin Bernal
15. The Minoans, The World's Greatest Civilizations
16. Empires of the Silk Road, A History of Central Eurasia from the Bronze Age to the Present, Christopher I. Beckwith

Tuesday, January 22, 2013

தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 17



(பதினேழாம் பாகம்)


வெள்ளையின மக்களின் பூர்வீகம் என்ன? அவர்கள் தான் ஆரியர்களா? இது போன்ற "இனவாத அறிவியலை" நான் ஆராயவில்லை. மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய வரலாற்றுக் காலகட்டத்திலே இந்தியா நோக்கிய வெள்ளையின குடிப்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன. அதற்கான வரலாற்று, கலாச்சார சான்றுகளை மட்டுமே ஆராய்கின்றேன். பிரதேச மேலாதிக்கத்திற்காக, இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்காக அன்றும், இன்றும் பல போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அந்தப் போர்கள் எல்லாமே, கருப்பினத்திற்கும், வெள்ளை இனத்திற்கும் இடையிலான இன ஆதிக்க போட்டியாக இருந்ததில்லை. கருப்பு நிற இனங்களும், வெள்ளை நிற இனங்களும் தமக்குள்ளேயே போர் புரிந்த கதைகள் வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கின்றன. அதே நேரம், சில நாகரீகங்கள் கருப்பரும், வெள்ளையரும் கலந்து உருவாகி இருந்தன. இது ஒரு முக்கியமான விடயம் ஆகும். 

உலகில் எந்தவொரு இனமும், இன்னொரு இனத்துடன் கலக்காமல் நாகரீகம் அடைந்ததாக சரித்திரமே கிடையாது. அப்படி இனக்கலப்பு செய்யாமல், இனத் தூய்மை பேணிய இனங்கள் எல்லாம் ஒன்றில் அழிந்து விட்டன, அல்லது காட்டுவாசிகளாக வாழ்கின்றன. உதாரணத்திற்கு, அவுஸ்திரேலியாவில் தாஸ்மானியா தீவில் வாழ்ந்த இனம், தனிமைப் படுத்தப் பட்ட புவியியல் அமைப்பு காரணமாக, உலகில் வேறெந்த இனத்துடனும் தொடர்பற்று வாழ்ந்து வந்தது. அதனால் அவர்கள் பல தொழில்நுட்ப நிபுணத்துவங்களை  மறந்து விட்டார்கள். புதிய கருவிகளை உருவாக்கவோ, அல்லது வள்ளம் கட்டவோ அவர்களால் முடியவில்லை. இதன் விளைவாக, 19 ம் நூற்றாண்டில் குடியேறிய ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால் அந்த மக்களை இலகுவாக இனவழிப்பு செய்ய முடிந்தது. 

நமது காலத்திற்கு முன் (கி.மு.) பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர், சைபீரியா, வட ஐரோப்பிய பகுதிகளில் காலநிலை மாறியது. உறைநிலையும், பனி மூடிய நிலங்களும், இரத்தத்தை உறைய வைக்கும் குளிரும், மனிதர்கள் வாழ முடியாத சூழலை தோற்றுவித்தது.  அங்கு வாழ்ந்த மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் நாடோடி மக்களாக இருந்ததால், குதிரை வளர்ப்பு அவர்கள் வாழ்வில் முக்கிய இடம்பிடித்தது. சமஸ்கிருதத்தில் குதிரைக்கு அஸ்வம் என்று பெயர். லிதுவேனியாவிலும் குதிரைக்கு அதே பெயர் என்பது, இவ்விரு மொழி பேசும் மக்களுக்கு இடையிலான தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது அல்லவா?  மாட்டைக் குறிக்க, சமஸ்கிருதத்தில் "கோ", ஜெர்மன் மொழியில் "கூ" (Kuh). இவ்வாறு நிறைய உதாரணங்களை காட்டலாம். மேலும், இன்றைக்கும் மத்திய ஆசிய துருக்கி இன மக்கள், தமது கூடார வீடுகளை இடத்திற்கு இடம் நகர்த்துவது வழக்கம். அங்கே நீங்கள் ஒரு வீட்டின் முகவரியை தேடிச் சென்று, அந்த இடத்தில் வீடு இருந்த தடயமே இல்லை என்றால் ஆச்சரியப் படாதீர்கள். 

அது மட்டுமல்ல, பெண்களின் கற்பு நெறி "இந்திய-இந்து" சமூகத்தில் எந்தளவு முக்கியமாக கருதப்பட்டதோ, பண்டைய கிரேக்க சமுதாயத்தில் அதேயளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. இன்று துருக்கி மொழி பேசும் மத்திய ஆசிய நாடுகளில், பெண்களின் கற்பு நெறி, "இஸ்லாமிய நெறி" என்ற போர்வையின் கீழ் பின்பற்றப் பட்டு வருகின்றது. இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன என்றால், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், தோற்றத்தில் வேறு விதமாக இருந்தாலும், வெவ்வேறு மொழிகளை பேசினாலும்; இவர்கள் அடிப்படையில் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள், அல்லது ஒரே மரபை பின்பற்றி வருகின்றனர். இன்றைக்கும் நம் மத்தியில் வாழும் எத்தனையோ பேர், "கலாச்சாரம், பாரம்பரியம்," என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையா? 

ஈரானுக்கு மேலே இருக்கும், ஆர்மேனியா என்ற சிறிய தேசத்தை "ஐரோப்பிய நாடு" என்று வரையறுக்கிறார்கள். அது ஒரு காலத்தில்,  ஈரானிய சாம்ராஜ்யத்திற்குட்பட்ட  ஒரு மாகாணமாக இருந்தது. இன்று எல்லோரும், ஆர்மேனியாவை ஐரோப்பா என்றும், ஈரானை ஆசியா என்றும் கூறுகிறார்கள். 19 ம் நூற்றாண்டின் இறுதியில், ஆர்மேனிய தேசத்தின் அரைவாசிப் பகுதியை துருக்கி விழுங்கி விட்டது. ஆனால், துருக்கி ஒரு ஆசிய நாடு என்று சொல்கிறார்கள். இந்த முரண்நகை எப்படி தோன்றியது? எந்த நாடு ஐரோப்பாவுக்குள் அடங்குகின்றது? எந்த நாடு ஆசியாவுக்குள் அடங்குகின்றது? இதிலே நிறைய குழப்பம் இருப்பது தெரிகின்றது அல்லவா? ஏனென்றால், இவை எல்லாம் தற்கால அரசியல்வாதிளால் ஏற்படுத்தப் பட்ட பிரிவுகள். ஒரு காலத்தில் ஆர்மேனியர்களின் சாம்ராஜ்யம் பாலஸ்தீனம் வரையில் விரிந்திருந்தது. அதை நிரூபிக்கும் வகையில், இன்றைக்கும் ஜெருசலேம் நகரில் ஆர்மேனியர்களின் பகுதி ஒன்றுண்டு.  மேலும், லெபனான், ஈராக், ஈரான் ஆகிய நாடுகளிலும் ஆர்மேனியர்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்றனர்.இன்றைக்கும், அந்த நாடுகளில் எல்லாம், ஆர்மேனியருகென  தனியான தேவாலயங்கள் உள்ளன.

சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆர்மேனியர் என்ற வெள்ளை இனம் பாபிலோனியர்களின் சாம்ராஜ்யத்திற்குள் பல சிறுபான்மை இனங்களுள் ஒன்றாக வாழ்ந்தனர். அனேகமாக பாபிலோனிய சாம்ராஜ்யம் பலவீனமடைந்து வீழ்ந்த காலத்தில், வடக்கே ஆர்மேனியர்களின் அரசு தோன்றியது. அப்போது தோன்றிய மித்தானி (இது பற்றி கீழே விரிவாக எழுதப் பட்டுள்ளது.) என்ற ராஜ்யத்தில் ஆதிக்கம் செலுத்திய வெள்ளை இனம், ஆர்மேனியரின்  மூதாதையராக இருக்கலாம். அன்றைய காலத்தில், தெற்கில் இருந்த கறுப்பர்களின் நாடான எகிப்து, உலகில் பலமான வல்லரசாக திகழ்ந்தது.மித்தானியர்கள், பிராந்திய மேலாதிக்கத்திற்காக எகிப்தியர்களுடன் போரிட்டு வந்தாலும், பல தடவை அவர்களுடன் இராஜதந்திர உறவுகளை பேணி வந்தனர். எகிப்திய அரச பரம்பரையினர், ஆர்மேனிய- மித்தானி அரச வம்சத்து மணமக்களை மணந்து கொண்டனர். எகிப்தின் பிரபலமான பாரோ மன்னர் அகநாதன், மற்றும் இராணி நெபெர்தித்தி ஆகியோர் ஆர்மேனிய- ஆப்பிரிக்க கலப்பினத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 

அரச குடும்பங்களின் மண உறவுகள் என்பதால், அந்தத் தகவல்கள் வரலாற்றில் பதியப் பட்டுள்ளன. அப்படியானால், சாதாரண பொது மக்களும் ஒன்று கலந்திருக்க வாய்ப்புண்டல்லவா? நான் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று, இனக்கலப்பு காரணமாக எகிப்திய, ஆர்மேனிய நாகரீகங்கள் வளர்ந்தனவே ஒழிய, யாருக்கும் எந்த தீங்கும் நேரவில்லை. நான் சொல்வது சரியானால், எதற்காக ஐரோப்பாவில் எங்கேயும் கறுப்பின மக்களை காணவில்லை என்று யாராவது எதிர்க்கேள்வி கேட்கலாம். அன்றைய காலத்தில் உலகம் எப்படி இருந்தது என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று ஆயிரக்கணக்கான தெற்காசிய மக்கள், அமெரிக்காவிலோ,மேற்கு ஐரோப்பாவிலோ வேலை வாய்ப்பு, வசதியை பெருக்கிக் கொள்வதற்காக  குடியேறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மாறாக, அமெரிக்க, மேற்கு ஐரோப்பாவில் இருந்து தெற்காசிய நாடுகளில் குடியேறியோர் எத்தனை பேர்? அப்படி நடக்காததற்கு என்ன காரணம்? பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளில் வாழும் மக்கள், வளர்ச்சி அடைந்த பொருளாதார மையங்களை நோக்கி இடம்பெயர்வது புராதன நாகரீகங்களின் காலத்திலும் நடந்தது. 

முதலில் மத்திய கிழக்கில் குடியேறிய வெள்ளையின மக்கள், வட ஆப்பிரிக்காவில் மொரோக்கோ வரை சென்றனர். அவர்கள் எங்கெங்கு குடியேறினார்களோ, அங்கு பேசப்பட்ட மொழிகளையும், கலாச்சாரங்களையும் பின்பற்றினார்கள். இன்று மேற்கத்திய நாடுகளில், முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், சொந்த இனத்தின் பிறப்புவீதம் குறைவாக இருப்பதாலும், பொருளாதார அபிவிருத்திக்காக மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த உழைப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். அது போன்ற சூழ்நிலை, அன்றிருந்த எகிப்திய, பாபிலோனிய நாகரீகங்களிலும் ஏற்பட்டிருக்கலாம். "பிலிஸ்தீன்" என்ற கிரேக்க பழங்குடி இன மக்கள் இஸ்ரேலில் குடியேறி, நாகரிக சமுதாயமாக வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. (பிலிஸ்தீன் என்ற சொல்லில் இருந்து தான் பாலஸ்தீனம் பிறந்தது.) வட ஆப்பிரிக்காவில் வாழும், பெர்பர் மக்களும் வெள்ளையினத்தவர்கள் ஆவர். 15 ம் நூற்றாண்டு வரையில் கூட, வெள்ளையின பெர்பர் மக்கள் செறிவாக வாழ்ந்த நகரங்கள், கானா சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளன.

இன்று துருக்கி என்று அறியப்படும் நாட்டின் மத்தியில், ஹித்தித் நாகரீகம் தோன்றியிருந்தது. (Hittites, http://en.wikipedia.org/wiki/History_of_the_Hittites) ஐரோப்பிய கண்டத்தில் முன்தோன்றிய வெள்ளையின நாகரீகம், அல்லது முழுவதும் வெள்ளையின மக்களைக் கொண்ட  இராஜ்ஜியம், அதுவாகத் தான் இருக்க வேண்டும். ஹித்தித் இன மக்களின் அரசு போர்வெறி கொண்டது. அதனால், தனது பிரஜைகளை சிறந்த இராணுவவீரர்களாக மாற்றுவதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டது. (கிரேக்கத்தில் இருந்த இன்னொரு ஆதிகால ஐரோப்பிய நாகரீகமான ஸ்பார்ட்டா வும், ஒரு இராணுவ சமுதாயமாகவே திகழ்ந்தது.)  ஹித்தித் தலைநகரமான "ஹதுசா" வில், கடுமையான இராணுவக் கட்டுப்பாடுகள், எவ்வாறு அந்நாட்டு பிரஜைகளின் அன்றாட வாழ்வை பாதித்தன, என்பன போன்ற  விபரங்கள் களிமண் தட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. அவை இன்று அழிந்து போன ஹித்தித் தலைநகர இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப் பட்டன. 

ஹித்தித் நாட்டவர்கள், சுமேரியர்கள், அல்லது பாபிலோனியரிடம் இருந்து எழுத்து வடிவங்களை கற்றுக் கொண்டனர். அதாவது இன்று ஐரோப்பிய மொழிகள், லத்தீன் எழுத்துக்களில் எழுதப் படுவதைப் போல, அன்று பல இனங்கள் சுமேரியரின் எழுத்து வடிவங்களை கடன்வாங்கி பயன்படுத்தினார்கள். சுமேரிய மொழி தெரிந்த ஒருவர் அதனை வாசிக்கலாம், ஆனால் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாது. ஹித்தித் மக்களுக்கு அருகாமையில், ஹூரியன் (அல்லது கூரியன்) என்ற இன்னொரு வெள்ளையின மக்கள் வாழ்ந்தனர். ஹூரியன் நாகரீகமும் அந்தப் பிராந்தியத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தியது.

குர்து மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும், இன்றைய ஈராக்கின் வட பகுதியில், துருக்கி எல்லையோரம் "இசுவா" என்றொரு நாடு இருந்தது. (Isuwa, http://en.wikipedia.org/wiki/Isuwa) இசுவா என்றால் "குதிரைகளின் நாடு" என்று அர்த்தம். சம்ஸ்கிருத சொல்லான அஸ்வம் என்ற குதிரையை குறிக்கும் சொல்லின் மூலமும், இசுவா நாடாக இருக்கலாம். கூரியன், ஹித்தித் இன மக்கள், குதிரைகளை போருக்கு பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்று விளங்கினார்கள். அந்தத் திறமை, பிற்கால உலக சரித்திரத்தை மாற்றி அமைத்தது. கூரியன், ஹித்தித் மக்களின் வரலாற்றை பார்க்கும் பொழுது, "வேத கால ஆரியர்கள் குதிரைகளில் படையெடுத்து வந்த கதையை" பெருமளவு ஒத்துள்ளது.  மகாபாரதக் கதையில் குறிப்பிடப் படுவது போன்ற குதிரை வண்டிகளையும், போருக்கு பயன்படுத்தி வந்தனர்.

டேவிட் மன்னனின் ராஜ்ஜியம் தோன்றுவதற்கு முன்னர், ஜெருசலேமில் "யெபுசீத், அல்லது ஹொரித்" என்ற இன மக்கள் வாழ்ந்ததாக, யூதர்களின் பைபிளில் (பழைய ஏற்பாடு) எழுதப் பட்டுள்ளது. அப்படியாயின் டேவிட் மன்னனும், இஸ்ரேலின் பிரஜைகளும் கறுப்பர்களாக இருந்திருக்க வேண்டும். பெரும்பான்மை கறுப்பர்களைக் கொண்ட மத்திய கிழக்கில், சிறுபான்மை வெள்ளையின மக்கள் குடியேறி வாழ்ந்தார்கள் என்ற எனது கூற்றை, விவிலிய நூல் நிரூபிக்கின்றது. இன்றைய நவீன துருக்கி நாட்டில், "ஹூரியத்" என்றால் குடியரசு என்று அர்த்தமாகும். அந்தச் சொல்லின் மூலம், ஹூரியன் இன மக்கள் என்பதில் சந்தேகமில்லை. ஹூரியன் இன மக்கள், ஒரு காலத்தில் சீரும் சிறப்புடனும் விளங்கிய "மித்தானி" என்ற நாட்டின் நாகரீகத்தை உருவாக்கி இருக்கலாம்.(Mitanni, http://en.wikipedia.org/wiki/Mitanni) 

மித்தானி ராஜ்யத்தின் உத்தியோகபூர்வ மொழியாக சமஸ்கிருதம் இருந்திருக்க வேண்டும். மேலும், அந்நாட்டு மக்கள் இந்திரன், மித்ரா, வர்ண பகவான், போன்ற பல "இந்துக்" கடவுளரை வழிபட்டு வந்துள்ளனர். ஆனால், மித்தானி நாட்டின் பிரஜைகள் அனைவரும் வெள்ளையின மக்கள் என்று உறுதியாக கூற முடியாது. சில ஐரோப்பிய மையவாத சரித்திர ஆசிரியர்கள், வெறும் பத்து அல்லது இருபது சொற்களை மட்டும் வைத்துக் கொண்டு, அந்த முடிவுக்கு வருகின்றனர். ஏனெனில், அந்த சொற்கள் இந்தோ-ஐரோப்பிய மூலத்தை கொண்டிருக்கின்றன. மித்தானி ராஜ்யத்தின் சனத்தொகை வெள்ளையர், கறுப்பர், அல்லது இரண்டும் கலந்த கலப்பினத்தவரைக் கொண்டிருக்கலாம். இருப்பினும், ஆட்சியாளர்களான மேட்டுக்குடி சமூகம், முழுக்க முழுக்க வெள்ளையராக இருந்திருக்கலாம். அதுவே வர்ணாச்சிரம நால்வர்ண சாதி அமைப்பின் தோற்றுவாயாக இருக்க வேண்டும். பண்டைய இந்தியாவில் மட்டுமல்லாது ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும் நால்வர்ண சாதியமைப்பு இருந்துள்ளதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 

கூரியன், ஹூரியன் என்ற பல பெயர்களால் அழைக்கப் பட்ட வெள்ளையின மக்களின் பூர்வீகம் எது? அவர்களின் ஹூரிய மொழி, இன்றைய குர்து மொழியுடனும், ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் வாழும், செச்செனியர் போன்ற கொகேசிய இனங்களின் மொழியையும் ஒத்துள்ளது. (இன்றைக்கும் உத்தியோகபூர்வ படிவங்களில், வெள்ளையின மக்களை "கொகேசியன்" என்று வகைப் படுத்துகின்றனர்.) அவர்களுக்கு ஹூரியன் என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது? பல இன மக்களின் பெயர்கள், காரணப் பெயராக இருந்து புழக்கத்தில் வந்தவை தான். ஆகவே, ஹூரிய மக்களின் பெயரும் ஏதாவது காரணத்தை அடியொற்றி வந்திருக்கலாம். அந்தப் பிரதேசத்தில் இன்றைக்கும் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழியான பார்சி (ஈரான்) மொழியில், "ஹரா" என்றால் மலை என்று அர்த்தம். அதே மொழிக் குடும்பத்தை சேர்ந்த சமஸ்கிருதத்தில், ஹரா அல்லது ஹரி  (ஹிரான்) என்றால் தங்கம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. 

துருக்கியில் குடியேறிய, ஐரோப்பியரின் மூதாதையரான, ஹூரிய மக்களின் பூர்வீகம் பற்றிய கதைகளில், அவர்கள் "ஹரியின் மக்கள்" என்று குறிப்பிடப் படுகின்றனர்.  ஹூரியர்களின் முன்னோர்கள், "வடக்குத் திசையில் உள்ள தங்க மலையில் இருந்து" வந்து குடியேறியதாக அந்தக் கதைகள் கூறுகின்றன. வேதங்களில் சில இடங்களில், இந்திரன் தங்கமலையை காக்கும் கடவுளாக குறிப்பிடப் படுகின்றார். பிற்காலத்தில் மகாத்மா காந்தி கண்டுபிடித்த "ஹரிஜன்" என்ற சொற்பதம், வேத கால ஆரியர்களின் மூலத்தைக் குறித்தது என்பது ஒரு முரண்நகை.  இந்த "தங்கமலை இரகசியம்" வெறும் புராணக் கட்டுக்கதை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. 

ஹூரிய புராணக் கதைகளை ஆழமாக ஆராய்ந்தால், அவர்களின் பூர்வீகம் தெளிவாகத் தெரிகின்றது. அந்த இன மக்கள் உயரமான மலைகளை கடந்து வந்திருக்கிறார்கள். அந்த மலைகள், தெற்கு ரஷ்யாவில் உள்ள யூரல் மலைகளாக இருக்கலாம். அப்படியானால், அந்த மக்களின் தாயகம் அதற்குமப்பால் வடக்குத் திசையில் இருக்க வேண்டும். தமது முன்னோரின் பூமியில், நாள் முழுவதும் சூரிய வெளிச்சம் கிடைக்கும் என்பதால், அதனை தங்கம் என்ற அடைமொழியில் அழைத்து வந்தனர். வட துருவத்தை அண்டிய, ரஷ்யாவின் வட பகுதியில், கோடை காலத்தில் சூரியன் மறைவதில்லை. பகல் போன்று, இரவிலும், 24 மணிநேரமும் சூரிய வெளிச்சம் கிடைக்கும். ஆகவே, ஹூரிய இன மக்கள், ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பது இத்தால் உறுதியாகின்றது.  மேலும், "சூரியன்", "ஹரி " போன்ற, எமக்கு நன்கு தெரிந்த சம்ஸ்கிருத சொற்களுக்கும், ஹூரியன் என்ற ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லுக்கும் இடையிலான  ஒற்றுமையை கவனிக்கவும். 

(தொடரும்)  

************************************

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?

*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber