Saturday, November 05, 2011

தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்

"முருகதாஸ் 7 ம் அறிவு என்ற படம் எடுத்ததால் தான், நாங்கள் போதி தர்மர் பற்றி அறிந்து கொண்டோம்." என்று பல தமிழர்கள் பெருமைப் படுகின்றனர். "போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக" கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர். அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை. அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம், ஆங்கில உபதலைப்புகளுடன் வெளியாகியது. முருகதாஸ் தனது அரசியல் உள்நோக்கத்திற்காக, பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்களை மறைப்பது யார் என்பது, இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு புரியும்.
---------------------------------------------------
Film: Master of Zen 達摩祖師(1994)

Country: Hong Kong
Circuit: Mandarin-Rex
Genre: Historical Drama
Rating: II (Hong Kong)
Theatrical Run: 02/26/1994 - 03/23/1994
Director : Brandy Yuen Jan-Yeung
---------------------------------------------------------
Part 1

Part 2

Part 3

Part 4

Part 5

Part 6

Part 7

Part 8

Part 9

Part 10

Part 11

25 comments:

கெட்டவன் said...

super boss...
unkal thedal thodaravum

குலவுசனப்பிரியன் said...

முதல் பகுதி மட்டும் பார்த்தேன். அருமை. மசாலா படங்கள் பார்க்கப்பிடிப்பதில்லை எனவே 7-ம் அறிவு பார்க்கவில்லை. இந்தப்படம் கண்டிப்பாக பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

naren said...

திரைப்பட் தொடுப்புக்கு நன்றி நண்பரே.

பத்து நிமிடம் காண்பித்தற்கே இந்த marketing கூப்பாடு.

முழுப் படத்தை எடுத்தவர்கள் நோக்கம் உண்மையை காட்டவேண்டும் என்பதுதான்.

Azhagan said...

Now one can understand where Murugadoss got his storyline from!. I was wondering which film is behind 7th sense(like momento behind Ghajini)

jack said...

What U've done now is brilliant...but dont hit back on Murugadoss...movie may not be brilliant enough to portray Bodhidharma...but he took a step to reveal this genius in giant medium...chinese have done movie on him but wat abt us did we do it...no we haven't...he took initiative step...n we started following tat in web medium through google, youtube, blog etc...we sud not kill his effort...instead we develop that thing from tat point...ill appreciate u for this superb research...

கணேஷ் said...

நன்றி அய்யா இந்த தகவலுக்கு

முழு படமும் பார்த்தேன். நிறைய விசயங்கள் உள்ள படம்

நன்றி

சார்வாகன் said...

/முருகதாஸ் தனது அரசியல் உள்நோக்கத்திற்காக, பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்களை மறைப்பது யார் என்பது, இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு புரியும்/
Nice Thank you

akvikir said...

Don't Simply blame AR Murgadoss. He took some initiative to portray at least something about Bodhidharma. Our audiences won't like the film if it was like the Chinese film which u added in this post. Even i did some research and seen this film before u could post. When i watched the 7 am arivu in theatre there are lot of people commenting on the first 20 min where Bodhidharma comes. There are few, stating that they should have gone to Velayudham instead of this. I don't know how people's are comparing the Velayudham to 7 am Arivu. This the situation and taste of the audiences. Because of this only ace director Bala itself changed his directing way which could please all kind of audiences.
Then think about AR Murgadas. He will have to make sure the success of this movie not only because of his directing venture, also because of producer's profit.

I could see u r recent posts are pointing out AR Murugadas. Whatever u say i appreciate the initiative to take such a movie. Only after this movie u r talking about Bodhidharma. Have u ever posted anything abt him in the early stages. This itself is the success for him.

Take the positive from this and try publish something related to bodhdharma. Don't pull somebody's leg.

kumar said...

அருமையான பகிர்வு தோழர் கலை.நேற்றும் உங்கள் பதிவை
படித்தேன் ஆனால் பின்னூட்டம் இட முடியாத ஏதோ பிரச்னை.
ஆனால் கூட்டம் கூட்டமாக வந்து குதற முயன்றார்கள்.
நேற்று பின்னூட்டமிட்டவர்கள் நாலு வகை.
1 .முருகதாசின் முந்தைய படங்களை பார்த்து அவருக்கு ஒரு
ஒளிவட்டம் உருவாக்கி வைத்திருப்பவர்கள்.
2 . சூரியாவின் ரசிக குஞ்சாமணிகள்.
3 . காக்கி டவுசர் பாண்டிகள்.
4 . மனசாட்சி உடைய நடுநிலையாளர்கள்.
இங்கே தமிழ்,தமிழன் என்று குரலை உயர்த்தும் எவனுக்கும்
limelight கிடைத்து விடுகிறது.அப்புறமென்ன சம்பாத்தியம் தான்.
நாலு பேர் என்றாலும் நாங்கள் இருக்கிறோம்.எழுதுங்கள் சார்.
படிக்க நாங்கள் இருக்கிறோம்.

Unknown said...

போதி தர்மன் பற்றி சீனர்கள் தயாரித்த படம் பார்த்தேன்...
அதில் தமிழ் நாட்டில் புத்த மதம் பயின்றவர் போதி தர்மன் என்பது போல் உள்ளது...
இது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று...அப்போது சமணர்கள் இருந்தார்களே தவிர...புத்த மதம் இல்லை...
எந்த நாட்டு சினிமா இருந்தாலும் அதில் சிறிது தவறுகள் இருக்கவே செய்யும் என்பதை உணர்ந்தென்...
பகிர்வுக்கு நன்றி...

mindfalls said...

Please avoid negatively criticizing those who speak about tamils and their glory in any way. Please do not attempt to claim that only who speaks about tamil ealam alone are doing service to Tamil and Tamils. This is a curse that always we are divided and destroy the initiative of others. I read the history of Tamils and never had a chance to know about this Bhodi dharman. Now some thing thro this movie has been brought to lime light. Let us join together to encourage such efforts of others. Of course everyone of us are working to earn a livelihood and decent life style. This producer and director also one among us. They invest money and they would prefer to get a fair return.
S.Balasubramanian

வணங்காமுடியன் said...

உண்மையை காட்டுவதினால் என்ன மாறிவிடப்போகிறது. சீனர்கள் துணையின்றியா, இலங்கை இரானுவம், எம்மினத்தை கொன்று குவித்தது... அதுமட்டும் அல்லாது, தற்காப்பு கலைகள், இங்கிருந்து போனது, என்பது மட்டும் கதையல்ல, நாம் அவைகளை மறந்து விட்டோம் என்பதும்தான்...

G.Ragavan said...

// Balaji R said...

போதி தர்மன் பற்றி சீனர்கள் தயாரித்த படம் பார்த்தேன்...
அதில் தமிழ் நாட்டில் புத்த மதம் பயின்றவர் போதி தர்மன் என்பது போல் உள்ளது...
இது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்று...அப்போது சமணர்கள் இருந்தார்களே தவிர...புத்த மதம் இல்லை...
எந்த நாட்டு சினிமா இருந்தாலும் அதில் சிறிது தவறுகள் இருக்கவே செய்யும் என்பதை உணர்ந்தென்...
பகிர்வுக்கு நன்றி...//

புத்தமதம் தமிழகத்தில் நன்றாகவே இருந்தது. மதுரைக் கூளவாணிகச் சீத்தலைச் சாத்தனார் புத்தரே. மாதவியும் மணிமேகலையும் பூண்டது புத்தத் துறவமே. சமணத் துறவறம் அல்ல. மதுரையில் புத்த விகாரம் இருந்ததை சிலப்பதிகாரம் சொல்கிறது.

நெற்றிக்கண் said...

சிறந்த பதிவு, தங்கள் முயற்சிக்கு நன்றி, வாழ்த்துக்கள்...

Madhu said...

Shaolin quan என்ற கலை மட்டுமே போதி தர்மரால் பயிற்ருவிக்க பட்டது சீனாவில். அது ஒன்றும் உயர்ந்த நுட்பங்கள் உள்ள கலை என்று சொல்லமுடியாது. இதைவிட நுட்பங்களில் சிறந்த நூற்றுகணக்கான கலைகள் உள்ளது சீனாவிலும் ஜப்பானிலும். shaolin quan னுடன் எந்த வித தொடர்பும் இல்லாத ,உயர்ந்த தொழில்நுட்பங்கள் உடைய சில கலைகள் - விங் சன், தாய்ச்சி , ப குவா , ஹுவ குவான் , சின்னா ...

Sakthi said...

sakthi:
This is the character of our Tamils.
These stories may be there, still it need to be explored in a way which people like. that is what ARM did..

My hats off to you ARM

kanna@meena said...

களப்பிரர் வருகைக்குபின் சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் செழித்து இருந்தன. ஆனால் பௌத்த மதத்தை விட சமண மதம் அரசியல் அங்கீகாரம் பெற்ற மதமாக இருந்தது. பல அரசர்கள் தங்களின் மதமாக சமணத்தை தழுவி இருந்தனர். இப்பொழுது இருக்கும் சைவ இலக்கியங்கள் தங்களுக்கு முதல் எதிரியாக சமணத்தையே கூறுகின்றன. ஆனால் பௌத்தம் இல்லை என்று சொல்லி விட முடியாது. மகேந்திர வர்ம பல்லவர் தான் எழுதிய " மத்த விலாச பிரகசனம் " என்ற நூலில் புத்த விகாரையில் நடக்கும் முறைகேடுகளை மையமாக வைத்தே எழுதி உள்ளார்.

M.RAMNIVAS said...

தோழரே A .R . முருகதாசை பாராட்டுவது தவறில்லை.. ஏனென்றால் போதி தருமர் யார் என்றே தெரியாதவர்களுக்கு போதி தருமன் ஒரு தமிழன் என்று அடையாளம் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியவர். இவர் எடுத்த முயற்சியை யாருமே எடுக்க வில்லையே .. ஏன் அதை சிந்திக்கவில்லை ?

Kalaiyarasan said...

//தோழரே A .R . முருகதாசை பாராட்டுவது தவறில்லை.. ஏனென்றால் போதி தருமர் யார் என்றே தெரியாதவர்களுக்கு போதி தருமன் ஒரு தமிழன் என்று அடையாளம் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியவர். இவர் எடுத்த முயற்சியை யாருமே எடுக்க வில்லையே .. ஏன் அதை சிந்திக்கவில்லை ? //


தோழரே, விடிய விடிய இராமர் கதை. விடிந்தாப் பிறகு சீதை இராமனுக்கு என்ன முறை என்ற மாதிரி, ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கின்றீர்கள். போதிதருமர் பற்றி யாருக்குமே தெரியாது என்பது உண்மையல்ல. அவரது பெயர் ஏற்கனவே பல தமிழர்களுக்கு தெரியும். உலக மதங்களை, குறிப்பாக புத்த மதம் பற்றி ஓரளவுக்கேனும் அறிந்து வைத்திருப்பவர்களுக்கு தெரியும். ஆனால், புத்த மதம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியத் தேவையில்லை என்று புறக்கணித்த தமிழின வாதிகளுக்கு மட்டுமே தெரியாது. முருகதாஸ் அவர்களை ஏய்ப்பதற்காக, போதிதருமன் ஒரு தமிழன் என்று கூறி, வரலாற்றை திரித்து இந்த திரைப்படத்தை எடுத்துள்ளார்.

Bala said...

Unkar arputhamana thagavalukku mikka nanri.

vanniayar said...

உண்மையை சொன்னால் போதி தர்மர் என்றால் யாருக்கும் தெரியாது. இந்த முயற்சியை மேற்கொண்டு வெளிகாட்டிய முருகதாஸ் பாராட்டுக்குரியவரே.

குடிமகன் said...

நிறைய புதிய தகவல்கள் (குறைந்தது எனக்கு).. ஆனால் அந்த சீனபடத்தை அப்படியே ஒரு வரலாற்று சான்றாக எடுத்துகொள்ளமுடியாது. ..

//"போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக"// இதை எந்த பேட்டியில் சொன்னாரு?

//போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர்// இதுதான் அவருடைய கருத்து..

இந்துக்கள் தான் இந்த புத்த மத துறவியின் வரலாற்றை வேண்டுமென்றே மறைத்தனர் – இதுதான் அவருடைய கருத்து..

ஏதோ தெரியாத – அறியாத முருகதாஸ் தப்பு செஞ்சுட்டார் மன்னிச்சிடுங்க. ‘மனிப்பு’ எனக்கு புடிக்காத ஒரே தமிழ் வார்த்தை ன்னு அவரோட டயலாக்கை நீங்க சொல்லமாட்டிங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முந்தைய வரலாற்றை படமாக்கும் போது மாற்று கருத்துக்கள், மாற்று தகவல்கள் நிச்சயம் விமர்சனமாக கிடைக்கும் என்பது யாவரும் அறிந்ததே.

கொண்டாடப்படவேண்டிய ஒரு தமிழனை பற்றி தாம் மிகவும் தாமதமாக தெரிந்து கொண்டமைக்கு வருத்தப்பட்டு ஒருவிதமான மனநிலையில் அவர் இந்த படத்தை எடுத்திருக்கிறார். ரமணாவின் திரைக்கதையும், இந்தப்பட திரைக்கதையும் ஒப்பிட்டு பார்க்கும்போது.. ஒரு படைப்பாளியாக அவருக்கு நிச்சயமாக பெரிய சறுக்கல், அவர் முழு கவனத்துடன் தான் இந்தப்படத்தை எடுத்தாரா என்பதில் சந்தேகம் உள்ளது.

ரெட் ஜயன்ட் மூவீஸ் செய்த தவறான விளம்பர அணுகுமுறைதான் முருகதாஸ் விமர்சிக்கபடுவதற்க்கு முக்கிய காரணம்.. இதற்குமுன் அவர் மீடியாக்களில் இப்படி பேசியதில்லை.

இருந்தபோதிலும் கள்ளக்குறிச்சிக்காரனாக நான் முருகதாஸ் குறித்து பெருமையடைகிறேன்.

ashok said...

Thanks for this useful info...

போதிவர்மா said...

Now only i got a chance to view this site. He belongs to pallava. I done a research on him got an evidence which is very shock because still we are worshipping bodhidharma in another name Not as budhist but as hindu sage.

Unknown said...

உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் சமீபத்தில் http://www.valaitamil.com/kids_Self-defense என்ற இணைய முகவரியை பார்த்தேன் அதில், தமிழர்களின் தற்காப்பு கலைகள், வர்மக் கலை போன்றவற்றை பற்றி அருமையாக கொடுக்கப்பட்டிருந்தது. நீங்களும் சென்று பாருங்களேன்..