Wednesday, June 23, 2010

அச்சுறுத்தப் போவது யாரு? முஸ்லிம்களா? ஐரோப்பியர்களா?

சில வருடங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய Fitna என்ற இஸ்லாமிய விரோத வீடியோவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வீடியோ இது. "இஸ்லாம் ஐரோப்பாவை அச்சுறுத்துகிறது" என்ற தீவிர வலதுசாரிகளின் பிரச்சாரத்திற்கு மாறாக, ஐரோப்பிய கலாச்சாரம் உலகை அச்சுறுத்திய வரலாற்றை பதிவு செய்துள்ளது.
வீடியோவில் வரும் நெதர்லாந்து வசனங்களுக்கான தமிழ் மொழியாக்கத்தை கீழே கொடுத்துள்ளேன்.
______________________

Warning: This film contains very shocking images.

- சுதந்திரத்திற்கான கட்சி (PVV) -

நம்பிக்கைக்கும், நன்மைக்குமான நிகழ்ச்சிநிரல்

முன்னுரை


- நெதர்லாந்து தனது நியாயத்தை தெரிந்து கொள்ளாத நிலையை அடைந்துள்ளது.
- தனது நியாயத்தை தெரிந்து கொள்ளாத ஒரு சமுதாயம்
- முழு உலகும் பொறாமைப் படுகின்றது.
(கயிற்றால் கட்டி தொங்கவிடப்பட்ட அடிமைகள்)
- கலாச்சாரங்கள் சமத்துவமானவை அல்ல. எமது கலாச்சாரம் இஸ்லாமை விட மேன்மையானது.
-நாம் கடுமையானவர்கள்.

நம்பிக்கைக்கும், நன்மைக்குமான நிகழ்ச்சி நிரல்
பாதுகாப்பு

- இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் குடியேற்றத்தை முழுமையாக நிறுத்த விரும்புகிறோம்.
- (முஸ்லிம்களின் எண்ணிக்கை) அளவுக்கு மிஞ்சி பெருகி விட்டது.
- இந்த மசூதிகள் என்னை பைத்தியமாக்குகின்றன.
- அவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்?
- யார் அவர்களை உள்ளே விட்டது?
(CNN நேர்காணல்)
- அனைத்து நெதர்லாந்து மக்களையும் வந்து சேருமாறு அழைப்பு விடுக்கிறோம்.
- எமது போராட்டம் இலகுவானதல்ல.
- இஸ்ரேல் எமக்காக யுத்தம் செய்கின்றது.
- ஜெருசலேம் வீழுமானால், எதேன்சும், ரோமும் வீழ்ச்சி அடையும்.
(காசா மசூதி மீதான இஸ்ரேலிய தாக்குதல்.)
- நெதர்லாந்து மீதான முஸ்லிம்களின் படையெடுப்பை நிறுத்த மறுப்பவர்களை இட்டு வெட்கப் படுகிறேன்.
- கோழைகளாக பிறந்த பயந்தாங்கொள்ளிகள் கோழைகளாகவே மடிவார்கள்.
- நாங்கள் யுத்தத்தில் தோல்வியடைகிறோம்.
(CNN நேர்காணல்)
ஹெர்ட் வில்டர்ஸ்
- முஸ்லிம்கள் பொய்யர்கள், கிரிமினல்கள்.
- எனக்கு இஸ்லாம் போதும் போதும் என்றாகி விட்டது.
- குரான் எனக்கு இனி வேண்டாம்.
- அல்லாவை, முகமதுவை வணங்குவது எனக்கு இனி வேண்டாம்.
(தலையில் வெடி குண்டு திரியுடன் வெடித்துச் சிதறும் வில்டர்ஸ்.)

A film by Wil Geerdersபிற்குறிப்பு:
கடைசியாக நடந்த நெதர்லாந்தின் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் இஸ்லாமிய விரோத வில்டர்சின் PVV என்ற கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. தீவிர வலதுசாரியான வில்டர்ஸ் என்ற தலைமைப்பண்பும், அவரது இஸ்லாமியர் எதிர்ப்பு பிரச்சாரமும், பெருமளவு வெள்ளையின வாக்காளர்களின் வாக்குகளை வாங்கிக் குவிக்க போதுமானதாக இருந்துள்ளது. "இஸ்லாமிய காட்டுமிராண்டி கலாச்சாரம், அதி உன்னதமான ஐரோப்பிய கலாச்சாரத்தை அழித்து வருகின்றது. ஐரோப்பா முஸ்லிம்களின் காலனியாகி வருகின்றது." போன்ற இனவாதக் கருத்துகள் பெருமளவு வெள்ளையரைக் கவர்ந்துள்ளன. (குஜராத்துக்கு ஒரு நரேந்திர மோடி, நெதர்லாந்துக்கு ஒரு வில்டர்ஸ்.) வில்டர்ஸ் தனது முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை மேற்கொள்ள உதவியாக Fitna என்ற வீடியோவை தயாரித்து இணையத்தில் உலவ விட்டார். அதனால் நெதர்லாந்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது நெதர்லாந்து அரசியல் அரங்கில் பலமான சக்தியாக வளர்ந்து வரும் நிலையில், வில்டர்சின் PVV கட்சி நெதர்லாந்து சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தல். வில்டர்சின் கொள்கை இஸ்லாமியருக்கு எதிரானது மட்டுமல்ல, அகதிகள், வெளிநாட்டு குடிவரவாளர்கள் ஆகியோருக்கும் எதிரானது. தீவிர முதலாளித்துவ ஆதரவுக் கட்சி, வெள்ளையின உழைக்கும் மக்களுக்கும் எதிரானது.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்
இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது

3 comments:

Anonymous said...

நீங்க சொல்றது எல்லாம் சரி தான். அரபு நாடுகள்ல பிற மத சுதந்திரம் எந்தளவு பேணப்படுகிறது. ஐரோப்பா நாட்டுல இருந்துட்டு ஐரோப்பியரை குற்றம் சொல்வதை நிறுத்துங்க. முட்டாள்களா ஐரோப்பியர்கள் உங்களுக்கு தோன்றும் பட்சத்தில் உங்க இலங்கைக்கே வாங்க. இலங்கைல இருக்க முடியாம தானே ஐரோப்பாக்கு போனீங்க. ஐரோப்பிய நாடுகளை விட மத சுதந்திரம் எங்காவது இருந்தா அங்க போங்க. பிழைக்க போன தேசத்தின் பல்லை பிடுங்கி பார்க்காதிங்க. உங்களின் இந்த செயல்கள் தான், அகதிகள் மீது அவர்கள் காட்டிம் அக்கறைக்கு முட்டுக்கட்டை போடுது.

ராஜான் said...

Fitna வுக்கான link ஐயும் இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்படியான செய்கைகள்தான் உங்களை ஒரு பக்கச் சார்பானவராக காட்டுகின்றன.

youtube இல் Fitna வை பார்த்தேன். அத்தோடு anti-fitna வையும் கூட. இரண்டுமே ஒருவரை ஒருவர் சாடுகின்றனர். ஆனால் இருமதங்களும் 'மதம்' பிடித்து அலைகின்றன என்பது மட்டும் உறுதி!

Kalaiyarasan said...

ராஜான், Anti Fitna வீடியோ தயாரித்தவர்கள் மதச்சார்பற்ற வெள்ளையின நெதர்லாந்துக்காரர்கள். அவர்களது எதிரி இனத் துவேஷத்தை வளர்க்கும் வில்டர்ஸ், இந்த நாட்டில் அமைதியாக வாழும் முஸ்லிம்கள் அல்ல. வில்டர்ஸ் ஒரு இனத் துவேஷி என்று இந்த நாட்டு நீதி மன்றமே ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

அனானி நண்பரே, முதலில் நீங்கள் (வெள்ளையின) இனத் துவேஷிகளை ஆதரிப்பதை நிறுத்துங்க. ஐரோப்பாவில் இன்னொரு ஹிட்லரோ, முசொலினியோ தோன்றுவதை யாரும் விரும்பவில்லை.