Sunday, June 05, 2011

தியன் அன் மென் படுகொலை : அம்பலமாகும் பொய்கள்!


இருபதாண்டுகளுக்கு முன்னர் உலக மக்களை ஏமாற்றிய, மேற்கத்திய பொய்ப்பிரச்சாரம் தற்போது அம்பலமாகியுள்ளது. 

1989 ல், "சீனாவின் தலைநகரான பெஜிங்கில் நடந்த மாணவர் போராட்டத்தை அடக்கிய போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக" அறிவிக்கப் பட்டது. பெய்ஜிங்கின் மையப் பகுதியான தியன் அன் மென் சதுக்கத்தில் இரத்தக் களரி ஏற்பட்டுள்ளதாகவும், சீன இராணுவம் மூவாயிரத்திற்கும் குறையாத மாணவர்களை கொன்று குவித்ததாகவும் வெளிவந்த செய்திகள் பொய்யானவை. அன்று, தியன் அன் மென்னில் படுகொலை எதுவும் நடக்கவில்லை. 

உண்மையை அம்பலப் படுத்தியுள்ள, விக்கிலீக்ஸ் கேபிளின் சாராம்சம் பின்வருமாறு:

கிளர்ச்சியில் ஈடுபட்ட மாணவர்கள், பெய்ஜிங் நகரின் மையப் பகுதியை வாரக்கணக்காக தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். பேரூந்து வண்டிகளைக் கூட வீதிகளுக்கு குறுக்காக நிறுத்தி வைத்து தடை போட்டிருந்தனர். வீதித் தடைகள் காவலரண்கள் போல, ஆள் மாறி ஆள் பாதுகாத்தனர். காவலரண்களுக்கு இடையில் "மோட்டர் சைக்கிள் நபர்கள்" தகவல் பரிமாற்றத்திற்காக ஈடுபடுத்தப் பட்டனர். தியன் அன் மென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்த சுமார் மூவாயிரம் மாணவர்கள், காவல்துறையினரோ, இராணுவமோ நுழைய முடியாது என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி உட்சுற்றுக்கு விடுத்த அறிக்கையின் பிரகாரம், வாரக் கணக்காக தொடர்ந்த மாணவர்கள் போராட்டம் அரசின் அதிகாரத்திற்கு சவாலாக விளங்கியதாக தெரிகின்றது. போராட்டக்காரரை கலைப்பதற்காக கலகத்தடுப்பு பொலிஸ் அனுப்பப் பட்டது. கண்ணீர்ப் புகைக் குண்டுகள், பொல்லுகள் சகிதம் சென்ற படைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை. பாதுகாப்புப் படைகள் வன்முறை கொண்டு அடக்குவதற்கு முன்பே, ஆர்ப்பாட்டக் காரர்கள் தாமாகவே கலைந்து சென்று விட்டனர். இதனை ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய நோபல் பரிசு பெற்ற Liu Xiaobo உறுதிப் படுத்தியுள்ளார்.

இந்த தகவல்களை நேரே கண்ட சாட்சியான சிலி நாட்டுத் தூதுவர் தெரிவித்துள்ளார். "சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் சுடவில்லை. அங்கே துப்பாக்கிப் பிரயோகம் எதுவும் நடக்கவில்லை." என்று கூறிய சிலி தூதுவரின் சாட்சியத்தை அமெரிக்க தூதரகம் புறக்கணித்துள்ளது. தியன் அன் மென் சதுக்கத்தில், செஞ்சிலுவைச் சங்க கூடாரத்தில் நின்ற வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவரும் அதே போன்ற சாட்சியத்தை கூறினார். "திடீரென தோன்றிய இராணுவத்தைக் கண்டு தான் பயந்ததாகவும், ஆனால் அங்கே துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை," என்றும் கூறினார்.

1989 ம் ஆண்டு, சீனாவில் இருந்து செய்தி அறிவித்துக் கொண்டிருந்த பி.பி.சி. ஊடகவியலாளர் ஜேம்ஸ் மைல்ஸ், அன்று தான் தவறான தகவல்களை வழங்கியதை ஒத்துக் கொண்டார். "தியன் அன் மென் சதுக்கத்தில் படுகொலை நடக்கவில்லை. உள்ளே நுழைந்த இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதற்குப் பின்னர் ஆர்ப்பாடக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்." இருபது வருடங்களுக்குப் பிறகு உண்மையை ஒத்துக் கொண்ட செய்தியாளர் மேலும் தெரிவித்ததாவது. "அங்கு நடந்ததை தியன் அன் மென் படுகொலை என்று கூறுவதை விட, பெய்ஜிங் படுகொலை என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருக்கும்." அதாவது, இராணுவம் சுட்டதில் சில கலகக்காரர்கள் மரணமடைந்தனர்.

அந்தச் சம்பவம் தியன் அன் மென் சதுக்கத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள Muxidi எனுமிடத்தில் நடந்தது. ஜூன் 3, இரவு 10 .30 மணியளவில் தெருவில் சென்ற இராணுவ வாகனத் தொடரணியை ஆர்ப்பாட்டக்காரர்கள் வழி மறித்து தாக்கினார்கள். படையினர் முதலில் ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பாவித்து கூட்டத்தை கலைக்க முயன்றனர். அவர்களது முயற்சி பலிக்காமல் போகவே, நிஜத் தோட்டாக்களை பாவிக்க நேர்ந்தது. படையினர் துப்பாக்கிச் சூட்டிற்கு சிலர் பலியானதும், மிகுதிப் பேர் வெகுண்டு ஓடினார்கள். ஆர்ப்பாட்டக் காரர்கள் எழுப்பியிருந்த வீதித் தடைகளும் அவர்களுக்கு எமனாக அமைந்ததன.

மேற்குறிப்பிட்ட தகவல்களை அன்றே சீன அரசு தெரிவித்திருந்தது. ஆனால் சீன ஆட்சியாளர்கள் பொய் கூறுவதாகத் தான் அன்று பலர் நம்பினார்கள். மாறாக "நாணயமான மேற்கத்தய கனவான்கள்" கூறுவதை உண்மை என்று நம்பி ஏமாந்தார்கள். ஏகாதிபத்திய அடிவருடிகளாக சேவகம் செய்யும் தமிழர்கள் சிலர், இன்றும் கூட ஒரு பொய்யை திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.


மேலதிக தகவல்களுக்கு:
Wikileaks: no bloodshed inside Tiananmen Square, cables claim

-----------------------------------------------
This clip shows the facts and images that's long been swept under the rug by Western media---PLA troops were attacked by violent mobs at Tiananmen Square and surrounding areas in Beijing on June 4th, 1989. You see the burnt out military trucks, armored personal carriers, and even bystanders fiddling with machine guns. This clip comes straight from HK TV reporting which captures the results of a night of mob violence. It's time for the truth be told.

7 comments:

Mohamed Faaique said...

இப்போது சொல்லும் பொய்களின் உண்மை நிலை எப்போது வெளிவருமோ???

jeya said...

´´ஏகாதிபத்திய அடிவருடிகளாக சேவகம் செய்யும் தமிழர்கள் சிலர், இன்றும் கூட ஒரு பொய்யை திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்´´


என்ன அந்த பொய் என்றும் தெரியப்படுத்தலாமே..

Kalaiyarasan said...

//என்ன அந்த பொய் என்றும் தெரியப்படுத்தலாமே..//

விடிய விடிய இராமன் கதை நடந்ததாம். விடிந்த பிறகு இராமனுக்கு சீதை என்ன முறை என்று கேட்டானாம். தியன் அன் மென் படுகொலைகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழர்களைப் பார்த்ததில்லையா?

ஊரான் said...

ஏகாதிபத்தியங்களின் குறிப்பாக அமெரிக்காவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.

நாடோடிப் பையன் said...

Insightful post. Thank you.

kumar said...

காக்கி டவுசர் வாலாக்கள் கம்யுனிசத்தை குறை சொல்ல வேறெதுவும் சொல்ல
மாட்டார்கள் தியான் மென் சம்பவம் தவிர்த்து.
இதுபோல் அம்மணமாகும் போது புது டவுசரை அணிந்து கொள்வார்கள்.

Kalaiyarasan said...

மேற்கத்திய ஊடகவியலாளர்கள் பரப்பும் பொய்கள், உலகம் முழுவதும் மிக வேகமாக பரவுகின்றன. பல அப்பாவிகள் அவற்றை உண்மை என்று நம்பி, இன்று வரைக்கும் இரை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் பிரச்சார நோக்கத்திற்காக, இறந்தவர்களின் எண்ணிக்கையை பல மடங்கு மிகைப் படுத்திக் கூறுவது மேலைத்தேய ஊடகங்களில் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு விடயம்.
சில உதாரணங்கள்:

- 1956 ம் ஆண்டு, ஹங்கேரியில் நடந்த மக்கள் எழுச்சியை அடக்குவதற்காக, சோவியத்-வார்சோ ஒப்பந்த நாடுகள் எடுத்த இராணுவ நடவடிக்கையில் 25000 பேர் கொல்லப் பட்டதாக தெரிவிக்கப் பட்டது. பல வருடங்களுக்குப் பின்னர் நடந்த ஆய்வுகளுக்குப் பின்னர், அதிக பட்சம் 3000 பேரளவில் மட்டுமே கொல்லப் பட்டிருக்கலாம் என திருத்தப் பட்டது.

- 4 ஜூன் 1989, சீனாவில் தியன் அன் மென் சதுக்கத்தில் நித்திரையில் ஆழ்ந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, இராணுவ தாங்கிகள் ஏறி நசித்ததால், ஏழாயிரம் பேர் இறந்ததாக அன்று அறிவிக்கப் பட்டது. ஆனால், பின்னர் வெளியான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கையின் படி, தலைநகரம் பெய்ஜிங் முழுவதும் நூற்றுக்கும் குறைந்த எண்ணிக்கையில் தான் பலியாகி உள்ளனர். அன்று, சீனா முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்துக் கொண்டால் ஓராயிரம் வரும்.

- ருமேனியாவில், (ஸௌசெஸ்கு அரசு வீழ்ச்சியடைந்த காலத்தில்) நாலாயிரம் பேர் இராணுவத்தால் கொன்று புதைக்கப் பட்டதாக மேற்கத்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். ஆனால், உண்மையில் அன்று வீதியில் நின்ற பத்துப் பேரளவில் தான் கொல்லப் பட்டனர்.

(நன்றி: Journalistiek, Achtergronden, genres, vaardigheden; Niko Kussendrager, Dick van der Lugt)