Saturday, June 20, 2009

ஆப்கான் ஆக்கிரமிப்பின் அவலம் - நேரடி ரிப்போர்ட்

தொடரும் ஆப்கான் போரும், அதன் விளைவாக ஏற்படும் அப்பாவி மக்களின் அவலமும் இன்று சர்வதேச கவனத்தை ஈர்ப்பதில்லை. அமெரிக்காவின் குண்டுவீச்சுகள் காரணமாக பொது மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன, நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் மரணிக்கின்றனர், அல்லது அங்கவீனர் ஆகின்றனர். அதை விட பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தாலிபானுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகளின் தாக்குதல்களால் அனேகமாக பொது மக்களே பலியாகின்றனர். இதனால் தன் முனைப்புக் கொண்ட ஆப்கான் மக்களின் எழுச்சியானது அமெரிக்காவிற்கு எதிராக திரும்பியுள்ளது. அமெரிக்க படைகள் வெளியேற வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஆப்கான் மக்களின் துயரத்தை கண் முன் கொண்டுவரும் வீடியோ இது. இந்த நேரடி அறிக்கையை சில துணிச்சலான ஆர்வலர்கள் படம் பிடித்து அனுப்பியுள்ளனர்.

3 comments:

Anonymous said...

நம்மில் நிறைய பேருக்கு இந்த வியாதி உள்ளது. எது நடந்தாலும் அவைகளை எதிர்த்து மறுக்க வேண்டியது. தாங்கள் தயவு செய்து கீழே உள்ள தலைப்பில் பார்க்கவும்.

An ugly side of Taliban

தங்களுக்கு எதிரியானவ்ர்களை அல்லது பிடிக்காதவர்களை ஆடு ,கோழி அறுப்பதுபோல எல்லாருக்கும் முன்னிலையில் அவர்களின் உடலையும் கால்களையும் பிடித்துக்கொள்ள இன்னொருவன் கத்தியால் சரக் சரக் என்று கழுத்தை அறுத்து தலையை அந்த உடலின் மேல் வைத்து pose கொடுப்பதையும் ,ரத்தம் கொப்பளித்து தரையை நனைப்பதையும் வீடியோவில் பாருங்கள். உலகம் இவைகளையும்தான் பார்த்க்கொண்டுள்ளது.

Anonymous said...

ஆமாம் கண்டவன் முகமூடி போட்டுக்கிட்டு வந்து நாந்தான் முஸ்லிம், தலிபான் அது இதுன்னு சொல்லிக்கிட்டு வந்து அடுத்தவன கழுத்த அறுப்பானுங்க. அத நீங்களும் அப்படியே நம்பி கத்திய தூக்குவிங்க. முஸ்லிமா கூறு போடுவீங்க. ஆனா குஜராத்துல மிருகவதை பண்ணினதை செய்தவனே முகமூடி இல்லாம தெஹல்காவிலே வாக்குமூலம் கொடுத்தா ஒரு மூச்சும் விட மாட்டீங்க. அது பொய்ன்னு சொல்லுவீங்க. என்னங்கடா நாயம்.

அட தலிபான்தான் அறுத்தான்ன அவன பொய் அறுக்க வேண்டியதுதானே. ஒன்னுடைய சொல்படி அவன் அறுத்து இருந்தாலும் கூட ஏன்டா மில்லியன் கணக்குல போட்டுக் கொல்லணும். இரத்த வெறி. ஆட்டக் கடுச்சு சூடா இரத்தம் குடிக்கிறது பத்தாதுன்னு மனுச இரத்தம் குடிக்க வந்த ஓநாய் கூட்டத்துல நீயும் ஒருத்தனோ. போய் தலிபான முடிஞ்சா அடக்கு. வில்லன் ரேஞ்சுல பிளாக் மெயில் பண்ற மாதிரி பண்ணாதே.

Anonymous said...

The Al-Qeada and Talibans are manufactured enemies by US. Seems Al-Qeada does not exist, it's a fake one created to attack Oil countries and kill muslims, two in one goal. Please read the below article and there are many articles over the Internet. Only blind ppl beleive the FOX and CNN report w/o confirming it and believe the fake report and videos.

http://fromthewilderness.wordpress.com/2009/03/25/al-qaeda-does-not-exist/