Thursday, February 26, 2009

கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்


அமெரிக்கக் கண்டத்தைக் 'கண்டுபிடித்த' கிறிஸ்டோபர் கொலம்பஸின் நினைவாக அந்த நாட்டிற்குக் கொலம்பியா எனப் பெயர் சூட்டப்பட்டது. அதன் தலைநகர் போகோட்டாவில் இன்றைய ஜனாதிபதி தனது பதவியேற்பு வைபவத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார். நாட்டின் தீராத பிரச்சினையான தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பேன் என புதிய ஜனாதிபதி விழாமேடையில் சூளுரைத்துக் கொண்டிருந்த சமயம் , எங்கிருந்தோ வந்த செல்கள் விழா நடந்த இடத்திற்கு அருகாமையில் விழுந்து வெடித்தன. ஜனாதிபதி தீவிரவாதிகளை ஒழிக்க காடுகளுக்குப் போக முன்னர் அவர்களாகவே தலைநகருக்கு வந்துவிட்டனர்.

இது நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை. தலைநகரின் மத்தியில் பணக்காரக் குடும்பங்கள் தமது ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களை நடத்தும் மண்டபம் குண்டுவெடிப்பில் சேதமாகியது. இன்னொரு நகரில் ஒரு வீட்டில் தீவிரவாதிகளின் ரகசியக் கூட்டம் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்துப்போன பொலிஸ் அதிகாரிகள், அது தமக்கு வைத்த பொறி என்றுணர்வதற்குள் குண்டுவெடித்துக் கொல்லப்பட்டனர். நிலைமையை இன்னும் மோசமாக்குவதாக கொலம்பியப் படைகளுக்கு அலோசனை வழங்கும் அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகள் இருவர் சென்ற விமானம் இயந்திரக் கோளாறினால் அடர்ந்த காட்டிற்குள் விழுந்து விபத்தில் உயிர் தப்பிய அமெரிக்கர்களை கெரில்லாக்கள் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். தனது பிரஜைகளை மீட்பதற்காக கொலம்பியாமீது படையெடுக்கப்போவதாக அமெரிக்க அரசு மிரட்டி வந்தது.

கொலம்பியா ஒழுங்காக தேர்தல்கள் நடாத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படும் ஜனநாயக நாடுதான். இருப்பினும் நகரங்களில் மட்டுமே ஜனநாயகத்தைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. நாட்டுப்புறங்களில் ஒன்றில் இராணுவத்தின் அல்லது துணைப்படைகளின் ஆட்சி நடக்கும் பிரதேசமாகவிருக்கும் அல்லது கெரில்லா இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இவற்றைவிட மூன்றாவது சக்தியாக போதைவஸ்துக் கடத்தும் மாபியாக் குழுக்கள் தமக்கென தனிப்படைகளுடன் சிறிது காலம் சில தசாப்தங்களாக அட்டகாசம் புரிந்து வந்தன. அரசபடைகளுடனான மோதலில் இறுதியில் பலம் குறைந்து போன மாபியாக் குழுக்கள் இராணுவத்துடன் உடன்பட்டு துணைப்படையை உருவாக்கினார்கள். இதனால் தற்போது இரண்டு சக்திகள் மட்டுமே களத்தில் உள்ளன

இரண்டாவது சக்தியான மார்க்ஸீய கொரில்லாக் குழுக்களின் போராட்டம் நீண்ட வரலாற்றைக் கண்டுள்ளது. தென் அமெரிக்கக் கண்டத்தில் கடந்த 30 ஆண்டு காலமாகத் தோல்வியடையாமல் சளைக்காமல் போரிட்டு வரும் கெரில்லாக்களை கொலம்பியாவில் காணலாம். அவர்களின் வெற்றிக்கு பல காரணங்களிருந்தபோதும் நாட்டில் நிலவும் ஆழமான சமூக ஏற்றத்தாழ்வான ஏழை-பணக்கார வர்க்க வித்தியாசம் மிக முக்கியமான காரணி.

1946 ல் நாட்டில் எழுந்த குழப்ப நிலையே இன்றைய கெரில்லாக்குழுக்களின் ஆரம்பம். விவசாயிகள் நில உரிமைக்காகப் போராடினர். தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்தனர். ஆட்சியிலிருந்த கென்சர்வேட்டிவ் கட்சி நிலவுடைமையாளரின் பக்கம் நின்று போராட்டத்தை நசுக்கியது. தொழிற்சங்கத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியான லிபரல் கட்சியில் இருந்த இடதுசாரிகள் ஆயுதம் ஏந்தினர்.

லிபரல் கட்சி ஆரம்பத்தில் போராட்டத்திற்கு அதரவளித்தது. இருப்பினும் சந்தர்ப்பவாதப் போக்குடைய அந்தக்கட்சி ஆயுதப் போராட்டத்தை அரசுடன் பேரம் பேசப் பயன்படுத்தியது. இதன் விளைவாக 1970 ல் இருகட்சிகளிடையே உடன்பாடு ஏட்பட்டு தேசிய முன்னணி அமைத்தனர். இடதுசாரிகள் இதனைத் தமக்கிழைத்த துரோகமாகப் பார்த்தனர். தேசிய முன்னணி அரசு தெரிவு செய்யப்பட்ட தேர்தல் தினத்தின் பெயரில் எம்-19 என்ற இயக்கம் உருவாகியது. இந்த இயக்க உறுப்பினர்களில் பலர் நகர்ப்புறப் படித்த இளைஞர்கள். இதைத்தவிர நாட்டுப்புறத்தில் உதிரிகளாக இருந்த கொரில்லாக் குழுக்களை இணைத்து இன்னொரு பலம் வாய்ந்த இயக்கம் உருவானது. "கொலம்பிய புரட்சிகர இராணுவம்" (FARC) மிகவும் கட்டுக்கோப்பான மிகப்பெரிய கெரில்லா இயக்கம். இதற்கும் சட்டபூர்வ கொம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது. லிபரல் கட்சியுடன் அதிருப்தியுற்று வெளியேறிய இடதுசாரி லிபரல்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி அந்தக்காலத்தில் சோவியத் சார்புடையதாக இருந்ததால், சீனச்சார்பு மாவோயிஸக் கம்யூனிஸ்ட்டுகள் தமக்கென "மக்கள் விடுதலைப் படை" (EPL) என்ற கெரில்லா இயக்கத்தை அமைத்தனர். கொலம்பியாவின் ஆயுதப் போராட்டத்திற்கு கியூபப்புரட்சியும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. கியூபப்புரட்சியரல் கவரப்பட்ட சில கொலம்பியர்கள் ஒன்றிணைந்து 'தேசிய விடுதலை இராணுவம்' (ELN) என்ற கெரில்லா இயக்கத்தை ஸ்தாபித்தனர். இந்த இயக்கத்திற்கு கியூபா பல வழிகளிலும் உதவி வந்தது. ELN ன் தனிச்சிறப்பு, அது மாக்ஸீயத்துடன் 'விடுதலை இறையியலையும்' தனது சித்தாந்தமாக வரித்துக் கொண்டுள்ளது. தேவாலயங்களில் மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த கத்தோலிக்க மதகுருமார் ஆயுதம் ஏந்தி கெரில்லா இயக்கக் கொமாண்டர்களாக மாறிய அதிசயம் கொலம்பியாவில் நடந்தது. சமுக அநீதிகளுக்கெதிராக ஏழைமக்கள் ஆயுதமேந்திப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை எனக்கூறிய பாதிரியார் கமிலோ தொரஸ் அதனைச் செயலிலும் காட்டி ELN இயக்கத்துடன் இணைத்துக்கொண்டார். ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுற்ற பல மதகுருக்கள் அவரின் வழியைப் பின்பற்றினர். புரட்சி, சமூக நீதி பற்றிப்பேசுபவர்கள் நாஸ்திகர்களாக இருக்கத்தேவையில்லை என்பதை முதன்முதலாக கடவுள் நம்பிக்கையுள்ள மக்கள் புரிந்து கொண்டார்கள்.

இந்தக் கெரில்லாக்குழுக்களின் தோற்றத்தில் மட்டுமல்ல, அவற்றின் செயற்பாடுகளிலும் வேறுபாடுகள் தெரிகின்றன. தற்போது ஓய்ந்திருக்கும் எம்-19 பல அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றது. ஒருமுறை டொமினிக்கா நாட்டுத் தூதுவராலயத்தைக் கைப்பற்றிப் பல நாட்டுத் தூதுவர்களை இரண்டுமாதகாலமாக பயணக்கைதிகளாக வைத்திருந்தனர்.இன்னொருமுறை பால் லொறியைக் கடத்திச் சென்று சேரிவாழ் ஏழைமக்களுக்கு இலவசப் பால் விநியோகம் செய்தனர். ELN பொருளாதார இலக்குகளைக் குறிவைக்கிறது. எண்ணைவிநியோகப் பாதையில் குண்டுவைத்து நாசம் செய்தல், மின்மாற்றிகளை நகர்த்தல் போன்றவற்றின் விளைவாகப் பெற்ரோலிய கூட்டுத்தாபனம் இறுதியில் இயக்கத்திற்கு நிதியுதவி செய்து தன்னைக் காத்துக்கொண்டது. இதுதவிர முக்கிய புள்ளிகளைக் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்திருந்து பணம் கறப்பதையும் ELN தனது நிதி சேகரிப்பு நடவடிக்கையாகக் கருதுகிறது. பணக்காரரிடமிருந்து பணம் கறப்பதற்கு அது(கடத்தல்) சிறந்த வழி என்று நியாயப்படுத்தப்படுகின்றது.

FARC சிறு கெரில்லாக்குழுவாக ஆரம்பித்த இயக்கம். இன்று பெரிய இராணுவமாக வளர்ந்துள்ளது. இதனால் சிறு இராணுவ முகாம்கள் காவல் நிலையங்கள் ஆகியவற்றைத் தாக்கியழித்து, குறிப்பிடட்ட பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். 1995 க்கும் 1999 க்கும் இடைப்பட்ட காலத்தில் பெரிய இராணுவ முகாம்களும் அடுத்தடுத்து வீழ்ந்தன. அரசபடைகள் பின்வாங்கி ஓடின. இறுதியில் சுவிட்சர்லாந்து அளவிலான பிரதேசத்தை FARC இடம் விட்டுக்கொடுத்துவிட்டு, அரசாங்கம் பேச்சுவார்தை நடாத்தியது. கொலம்பியாவின் மத்திய, தென்பகுதிகளில் பல FARC ன் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக அறியப்பட்டுள்ளன. அங்கே பகலில் இராணுவத்தினர் ஆட்சியும் இரவில் FARC ன் ஆட்சியும் நடக்கிறது. கொலம்பியாவின் வடக்குப்பகுதியில் ELN ஆதிக்கம் செலுத்துகிறது. ELN க்கும் FARC க்கும் இடையில் நட்புரீதியான புரிந்துணர்வு இருந்து வருகிறது. இதுவரை இரண்டுக்குமிடையில் எந்த வகையான பகைமுரண்பாடுகளும் வெடிக்கவில்லை.

FARC ன் 30 வீதமான போராளிகள் பெண்கள். போர்முனைகளில் ஆண்களுக்கு நிகராகச் சண்டையிடுகின்றனர். இராணுவப்பயிற்சியும் சமமாகவே வழங்கப்படுகின்றது. பல பெண்கள் கொமாண்டர் தரத்திற்கு உயர்ந்துள்ளனர். ஆண்-பெண் போராளிகளுக்கிடையிலான திருமண பந்தம் தொடர்பான விதிகள் சிக்கலானவை. இயக்கத்திற்குள் காதலிப்பதற்கும், ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதற்கும் அனுமதிக்கப்படுகின்றது. சம்பந்தப்பட்டவர் தனது காதலை பகிரங்கப்படுத்தவேண்டும். தொடர்ந்து அவர்களின் விருப்பப்படி சேர்ந்துவாழ விடப்படுவர். ஆனால் அது நிலையானதல்ல. கடமை அழைக்கும்போது தமது உறவை முறித்துக்கொண்டு களத்திற்குச் செல்ல வேண்டும். இதன் காரணமாக குழந்தை பெற்று வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தனது துணைவி மீது வன்முறை பிரயோகிக்கும், அல்லது வல்லுறவு செய்யும் ஆண்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றனர்.

கொலம்பியாவின் அரசியல் அமைப்பை "இரு கட்சி ஜனநாயக முறை" என்று அழைக்கின்றனர். இதுவரை ஒன்றில் கென்சர்வேட்டிவ் கட்சி அல்லது லிபரல் கட்சி என்று மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன. நாட்டின் உள்நாட்டுப்போர் அடிக்கடி தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்ப்படுகின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சியினர் தாம் ஆட்சிக்கு வந்தால் சமாதானம் கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுப்பார்கள். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் சிறிதுகால யுத்த நிறுத்தம் ஏற்பட்டுப் பேச்சுவார்த்தை நடக்கும். பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பேச்சுவார்த்தை குழம்பி பழையபடி யுத்தம் நடக்கும். கடந்த முப்பது வருடங்களாக சண்டையும் சமாதானமும் இதே பாணியில் தொடர்கிறது. அரச படைகளின் ஜெனரல்கள் பொதுவாகவே கெரில்லா இயக்கங்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதை எதிர்த்து வருகின்றனர். இந்தக் கடும் போக்காளரின் பின்னால்தான் அமெரிக்க அரசும் நிற்கிறது. கடந்த ஆண்டு "Plan Colombia" என்ற பெயரில் அமெரிக்கக் காங்கிரஸ் அனுமதியுடன் பெருமளவு பணம் கொலம்பிய இராணுவத்தை பலப்படுத்தச் செலவிடப்பட்டது. அதிநவீன black Hawk ஹெலிகப்டர்கள், இரவில் பார்க்கும் உளவுவிமானங்கள் என்பன இந்த உதவியில் அடக்கம். மேலும், அமெரிக்கா கொலம்பியப் போரை "பயங்கரவாத்திற்கெதிரான போர்" என்றே சொல்லி வருகின்றது.

பெருமளவு எதிர்பார்ப்புகளுடன் முன்னெடுக்கப்பட்ட கடைசிச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் (FARC தலைவர் மருலண்டாவும், அன்றைய ஜனாதிபதி பஸ்த்ரானாவும் காட்டுக்குள் சந்தித்துக் கதைத்தனர்) குழம்பிய பின்னர் கெரில்லாக்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டுவிட்டு காடுகளுக்குள் பின்வாங்கினர். போகும்போது எந்தவொரு அரசாங்க நிர்வாகத்தையும் விட்டுவைக்காமல் அழித்துவிட்டுச்சென்றனர். படைப்பிரிவுகளின் கொமாண்டர்கள் வௌ;வேறு இடங்களில் இருந்தாலும் தமக்கிடையிலான ரேடியோத் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டனர். புதிய யுக்தியாக கொலம்பியாவில் மட்டுமல்லாது எல்லை கடந்து பிறேசிலிலும் வெனிசுலாவிலும் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். உள்நாட்டில் யுத்த தந்திரத்தை மாற்றிக் கொண்டனர். வழக்கமான இராணுவ முகாம் தாக்குதல்களைவிட்டு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் குண்டு வைத்து தகர்க்கும் வேலைகளைச் செய்கின்றனர். குறுகிய காலத்திற்குள் குறைந்தது 50 பாலங்களாவது தகர்க்கப்பட்டள்ளன.

இத்தகைய நடவடிக்கைகளால் அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. நாற்பதாயிரம் போர்வீரர்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டுள்ளனர். கெரில்லாக்கள் பெருமளவு வெடிமருந்துப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக அமெரிக்கக் காங்கிரஸ் அறிக்கை தெரிவிக்கின்றது. இதைவிட அதிர்ச்சியைக் கொடுத்த விடயம், FARC கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பல வெளிநாட்டவர்களும் காணப்படுவதாக வரும் செய்திகள். மூன்று ஐரிஸ்காரர்கள் இராணுவத்தால் பிடிபட்டபின்புதான், ஐரிஸ் குடியரசு இராணுவ (IRA) உறுப்பினர்கள் கொலம்பியக் கெரில்லாக்களுக்குக் குண்டு வைப்பதில் பயிற்சியளிப்பது தெரியவந்துள்ளது.

அரசபடைகளுடன் தொடர்புடைய துணைப்படையான AUC க்கு அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ நிபுணர்கள் பயிற்சியளித்து வருகி;ன்றனர். சில வெளிநாட்டுக் கூலிப்படைகளும் தமது சேவையை வழங்கி வருகின்றனர். அரசாங்கத்திற்குக் கட்டுப்படாத துணைப்படைக்கு நிலப்பிரபுக்களும், பெருமுதலாளிகளும் தாராளமான நிதி வழங்கி வருகின்றனர். பெருமளவு மனித உரிமை மீறல்களுக்கு துணைப்படையே பொறுப்பு எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கெரில்லாக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் துணைப்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

"ஒன்று, இரண்டு, மூன்று... வியட்னாம்களை உருவாக்குவோம்" என்றார் ஆர்ஜென்தீனப் புரட்சியாளர் சே குவேரா. இரண்டாவது வியட்நாம் கொலம்பியாவில் நிதர்சனமாகி வருகின்றது. நிலைமை இப்படியே போனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில்கெரில்லாக்கள் நாடு முழுவதையும் பிடித்துவிடுவார்கள் என்று உண்மை நிலையைச் சொல்லியது அமெரிக்கக் காங்கிரஸ் அறிக்கை. என்ன விலை கொடுத்தாகிலும் அதைத் தடுக்க அமெரிக்க அரசு பெரும் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. பல ஆண்டுகளாகவே "போதைப் பொருளுக்கெதிரான போர்" என்ற பெயரில் அமெரிக்க உதவி கொலம்பிய அரசுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இந்தப் போர்வையின் கீழ் நடக்கும் கதையோ வேறு. அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படைப்பிரிவு கெரில்லாக்கள் நடமாட்டத்தையும் கண்காணித்தது. அவர்களின் அக்கறை முழுக்க வேறு எங்கோ இருந்ததாக கொலம்பிய அரச அதிகாரிகளே குறைப்பட்டனர். ஹெரோயின் உற்பத்திக்கான கொக்கோச் செடிகளை அழிக்க அனுப்பப்பட்ட விமானங்கள் விசிறிய மருந்து, பிற உணவுப்பயிர்களையும் அழித்துவருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதுவரைகாலமும் பின்னால் நின்று உதவிய அமெரிக்க அரசு தற்போது நேரடியாகத் தலையிடப்போவதாகப் பயமுறுத்தி வருகின்றது. வரப்போகும் அமெரிக்க இராணுவத்தை எதிர்பார்த்துக் கொண்டு கொலம்பியப் போராளிகள் காத்திருக்கின்றனர்.


FARC தொடர்பான வீடியோ ஆவணப்படங்கள்:


தென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC
ஒரு பெண் போராளியின் கதை

10 comments:

வினையூக்கி said...

எஸ்கோபர் பற்றியும் எழுதுங்களேன்

Anonymous said...

I am surprised with their weapons all are M16 (family) which is USA origin.

I hope u know the story that USA went war with South American country for 'Banana' (United Fruit Company). I do remember that long time before I saw some video regarding this story. Can you please post a article or video on that. That will be great.

Kalaiyarasan said...

பின்னூட்டமிட்ட வினயூக்கிக்கும், பெயரில்லா நண்பருக்கும் நன்றிகள். தென் அமெரிக்காவை பற்றி எழுதுவதற்கு இது போல நிறைய விடயங்கள் உள்ளன. தருணம் வரும் போது எஸ்கோபர் பற்றி மட்டுமல்ல, "அமெரிக்காவின் வாழைப்பழ குடியரசுகள்" என அறியப்பட்ட மத்திய அமெரிக்க பிரச்சினைகள் பற்றியும் எழுதவிருக்கிறேன். எனது வலைப்பூவை தொடர்ந்து வாசியுங்கள்.

Kalaiyarasan said...

Dear friend,
The video'The War on Democracy', which I posted already, tells stories about "Banana Republics."
Here is the link: http://kalaiy.blogspot.com/2009/02/blog-post_19.html

Anonymous said...

ரயாமீதான இ.பி.டி.பியின் விமர்சனம்
விபச்சாரம் ஆண்பால் பெண்பால்:
இதற்கு சமூகம் கொடுக்கும் அர்த்தம் என்பது பலவகைப்படுகின்றது. ஆண்பெண் உடல்வியாபாரம் என்பதற்கு அப்பால் பயன்படுத்தப்படுகின்றது. இதனை அறியாதவர்களாக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்பது என் கருத்து. இருப்பினும் உங்களது சிந்தனை மிக ஆழ்ந்ததாக காட்டுவதற்காக இந்த வாதம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது என நம்;புகின்றேன்.

எடுப்பது துடக்கென்று விலக்கிவிட்டு இரயாகரனின் கூற்றின் படி இந்தியாவின் கைகூலிகளாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி எடுத்திருந்த வரலாற்றை மறந்துதான் போனாரா?… (இவ்வாறு பயிற்சி எடுத்தார்களா எனத் தெரியவில்லை இருப்பினும்) ஒரு விடுதலைப் அமைப்பில் பலவிதமான சக்திகள் இருந்திருக்கின்றது. அவ்வாறே அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் பரட்சிகர சக்திகள் இருந்திருக்கின்றனர். இவர்களின் ஒன்றிணைப்பு என்பது அவசியமானதாகும். இவ்வாறான சக்திகள் மத்தியில் தொடர்புகள் உதவிகள் பெறுவதில் என்ன தவறிருக்கின்றது. நீங்கள் பயிற்சியைப் பற்றி கதைக்கப் போய் தோழமை பற்றி கதைப்பதாக நீங்கள் எண்ணத் தேவையில்லை. அன்றைய காலத்தில் பல திசைப் பிரிவுகள் இயக்கத்தினுள் இருந்தன. இவர்களிடையேயான ஒற்றுமை என்பது தலைமைகளின் சுயநலப் போக்கிற்கு அப்பாற்பட்டு இருந்தது. சுயநலமற்றவர்களின் கூடாரமாகவும் இருந்தது. இதனைத் தவிர வரதர்> டக்கிளஸ்> சுரேஸ் போன்றவர்களின் பதவிவெறி குழிபறிப்;பு இவைகளும் இருந்தன. இந்த முரண்பாடுகளுக்கு நடுவே இருந்து நட்புறவு செயற்பாடுகள் உங்களுக்கு துடக்காக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

“சமூக ஏகாதிபத்தியம் என்றும்இமுதலாளித்துவத்தை நோக்கிய சீனா என்றும் அன்று ஒருவருக்கொருவர் முரண்பட்டு கொண்ட பாரம்பரிய இடது சாரிகள் பலரும் இன்று தம்மை சுயவிமர்சனங்களுக்கு உட்படுத்தி வருகிறார்கள். ” இவ்வாறான முரண்பாடுகள் வரலாற்றில் இருந்தது. இதனை அறியாது நீங்கள் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. இவ்வாறான முரண்பாடுகளிடையேதான் புலிகளுக்கு ஏகாதிபத்தியம் எம்.ஜி.ஆர் மூலமாக நிதிவழங்க> இந்திய ஆட்சியாளர்கள் மற்றைய இயக்கங்களுக்கு உதவி புரிந்தனர். சமூக ஏகாதிபத்திய வரையறையானது 1990 பிற்பட்ட காலத்தில் உலகப் பிரிப்பதற்கு அந்த வரைவிலக்கணம் அவசியமற்றதாகி விட்டன.
நுனிப்புல் மேயவில்லை:
ரயாகரன் நுனிப்புல் மேயவில்லை. அவருக்கு ஆழந்த மார்க்சீய படிப்பு பரீட்சயம் இருக்கின்றது. முடிந்தால் மார்க்சீயம் பிழையானது என்பதை நிரூபியுங்கள்.
ரயாகரன் கதைப்பது மார்க்சீயம் தான் அது ஏன் மற்றவர்களிடம் இருந்து மாறுபடுகின்றது என்றால் மார்க்சீய புரிதல்களை தனிநபர் அபிலாசைகளின் பொருட்டான புரிதலில் அடிப்படையில் இருந்து வந்தவையல்ல. மாறாக மார்க்சீய வரலாற்று பொருள் முதல்வாத> இயங்கியலில் இருந்து புரிந்து கொள்ளப்பட்டதாகும்.
தம் இருப்பை பேணிக் கொள்ள புலிஆதரவு என்றும்> புலியெதிர்ப்பென்றும் மார்க்சீயம் பேசியவர்கள் குடிகொள்ள ரயாகரன் போன்றவர்கள் தனித்தனி தீவுகளாக இருந்து ஈழத்தில் மார்க்சீயத்தை திரித்துக் கூறுபவர்களுக்கு எதிராக கடந்த 20 வருடங்களாக எழுதிவருகின்றார்.
“மாக்சிச சித்தாந்தம் என்பதும் ஒரு இயங்கியல் நோக்குடையது.அந்த வகையில் காலம்ää சூழல். இவைகள்தான் எவ்வாறு மாக்சிச சித்தாந்தத்தை பிரயோகிப்பது என்பதை கற்றுத்தர வேண்டும்” … இவற்றை புரிந்து வைத்திருக்கும் நீங்கள் ஈழப் போராட்டவரலாற்றில் நடைபெற்ற எதிர்ப்புரட்சிகரமான நடவடிக்கைகளை சீர்து}க்கிப் பாருங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஈ.பி.ஆர்.எல்.எவ் நடைபெற்ற உட்கட்சிப் போராட்டங்களை எடுத்துப் பாருங்கள். இந்தியாவில் இருக்கின்ற போது நக்சல்பாரி அமைப்புக்களின் வெளியீடுகளை நீங்கள் மறைத்துப் படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். தடைசெய்யும் நிலைக்கு இருந்த போது இந்தியாவின் பக்கம் சார்ந்தீர்கள்எ என்பதை மறந்து விட்டீர்களா?
நீங்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் வழிந்தவர்கள் உங்களால் என்ன புரட்சியை சாதிக்க முடிந்தது. ஆனாலும் நீங்கள் கூறும் உலகப்புரட்சி என்ற கருத்தியலுக்கு இங்கு யாரும் எதிரனாவர்கள் என்பது அர்த்தமல்ல.
நம்பிக்கை கொண்ட நீங்கள் புலிகளிடம் சென்று நாமும் சேர்ந்து போராடுவோம் என்று து}து அனுப்பியிருக்கமாட்டீர்கள்.
பின்னர் பிக்குணி சுட்டுக் கொல்லப்பட்டதும்>
பிரேமதாசாவின் அன்பு கிடைத்தது. வரலாறு. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும். மக்களை நம்பி அல்லவா போராட்டத்தை தொடர்ந்திருக்க வேண்டும். எந்தப் போராட்டமும் எதிரிகளின் தயிவில் நடைபெற முடியாது. எமது பலத்தில் தங்கிநின்றே போராட்டத்தை கொண்டு செல்ல முடியும். இதை

“அதில் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பிரதான பாத்திரம் வகித்திருந்தவர் என்பதும் உண்மை. ” தனிநபர் வழிபாடை அன்று எந்த இயக்கத்தவரையும் விடஈ.பி.ஆர்.எல்.எவ் இனர் எதிர்த்துவந்தனர். இவற்றிற்கு நேர் எதிராகத் தான் இன்று டக்கிளஸ் வழிபாடு இருக்கின்றது. இன்று புலிகள் தலைவனுக்கு நிகரான N

ஆயுதப்போராட்டத்தின் ஆரம்ப போராளிகளின் தானும் ஒருவர் என்பதால் இன்று மக்கள் அனுபவித்து வரும் அவலங்களுக்கு தானும் தார்மீகப்பொறுப்பை எடுப்பதாக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பகிரங்கமாகவே கூறி வருகின்றார். ”
சரி இது உண்மையாயின் வையுங்கள் பிரச்சனைக்கான தீர்வை
யுத்தத்தை நிறுத்தக் கோருங்கள்.
சில பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அதிகார வர்க்கத்திற்காக ஒரு மக்கள் கூட்டம் அழிய வேண்டுமா? இவைகள் நீங்கள் படித்த மார்க்சீயப் புத்தகத்தில் இல்லையா? டக்கிளஸ் வசதிக்காக மறைத்துவிட்டாரா?
புரட்சி பேசிய ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்கள் தமது உயிருக்காக தப்ப வேண்டிய நிலை இருக்கவில்லையா? டேவிட்சன்> ரமே9; போன்றவர்கள் கடத்தப்படவில்லையா?
ஈழப்போராட்டத்தின் சிந்தரவதைகளின் பக்கத்தை கொண்டுவந்த கேசவன் புளொட்டின் கொலை வெறிக்கு உள்ளாகவில்லையா?
நெப்போலியன் கொல்லப்படவில்லையா?
புலிகளால் செல்வி> மணியண்ணன்> கேசவன்> ரமணி> விசு> போன்றவர்கள் கொல்லப்படவில்லையா? இவ்வாறு இருந்திருந்தால் ரயாவும் மண்ணில் தான் புதைந்திருப்பார். மேலும் தனிமனித பாத்திரம் என்பது ஒரு எல்லைக்குள் தான் மட்டுப்படுத்தப் படுகின்றது. இவைகள் ஒரு மக்கள் சக்திகள் தமது அடக்குமுறையை உணர்கின்ற போது வெளியில் இருந்து கொடுக்கப்படுகின்ற சிந்தனை வடிவமும் முழுநிறைவடைகின்றது. ஆகவே ரயாவெளிநாட்டில் இருப்பதால் உங்கள் துப்பாக்கிகளின் குண்டு மிகுதியாகியிருக்கின்றது.
“தானும் வெளிநாடொன்றிற்கு வந்து புத்தகங்களை புரட்டிப்பார்த்து விட்டு நிறம் நிறமாக கட்டுரைகள் வரைந்திருக்கலாம். “இவற்றைப் பார்க்கின்ற போது புதுவை ரத்தினம் வெளிநாட்டவர்களைப் து}ற்றியெழுதிய கவிதைதான் நியாபகம் வருகின்றது. பரவாயில்லை அதிகாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் வெளிநாட்டில் உள்ளவர்களைப் பற்றி இழிவாக கருத்துக் கூற ஜனநாயகம் இடம்கொடுக்கின்றது.
இவர்கள் கொண்டிருப்பது அரச சார்பு நிலைப்பாடு என்பதற்கு அப்பால் அரசோடு ஒரு பொது உடன்பாடு என்பதுதான் இதன் அர்த்தம். ”
சொந்த மக்கள் சாகக் கண்டும் காணாது இருப்பதா?
“குறிப்பிட்ட தமிழ் தலைவர்கள் எவரும் தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டாம் என்று எப்போதாவது கூறியிருக்கிறார்களா?….அல்லது தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்விற்கு குறுக்காக இவர்கள் யாரும் விழுந்து படுத்த வரலாறு உண்டா?… இல்லை!
அதனைத் தான் நாமும் சொல்கின்றோம் எதிரி வைக்கின்றான் இல்லை ஏமாற்றுகின்றான் என்று நாம் கருதுகின்றோம். புலியெதிர்ப்பாளர்களாகிய நீங்கள் தீர்வுத் திட்டத்தை வையுங்கள். தீர்வுத் திட்டத்தில் முன்வைத்து உங்களை நிரூபியுங்கள். இன்றைய நிலையில் இதுகூட அவசியமானதுதான். வையுங்கள் தீர்வுத் திட்டத்தை…….!
“யாருடன் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமோ அவர்களுடன்தான் அவர்கள் பேசி வருகின்றார்கள். ”
இது எவ்வாறு சாத்தியமாகின்றது.? குறிப்பாக ராஜபக்சகுடும்பத்தின் ஆதிக்க முகம் என்பது சந்திரிக்காவின் ஆதிக்க முகத்தை விட மாறுபட்டது. இவர்கள் இன்று ஜனநாயக விழுமியங்களை நசுக்குவதில் ஒப்பிட்ட ரீதியில் கடுமையாக செயற்படும் ஒரு அரசாங்கம். இந்த அரசாங்கத்திடம் இருந்து உங்கள் கிழக்கு சகா கோரிக்கை விடுகின்றார். பொலீஸ்படை வேண்டும்> காணி> வரி விதிப்பு போன்ற உரிமை வேண்டும் எனக் கூறுகின்றார் என்ன நடந்தது. மறுபடியும் பிரித்தாளும் தந்திரம் கருணா எதிர் பிள்ளையான் என்ற நிலைக்கு மாற்றம் கட்டுள்ளது. (இவர்களுக்குள் இருக்கும் உட்பூசல் ஒருபுறமிருக்க) உங்களால் சாத்தியமாகின்றவைகள் ஏன் கிழக்குவிடிவெள்களிகளால் முடியவில்லை. இது என்ன மாயாஜாலம் எனக் கூறுவீர்களா?

யாழில் நடைபெற்ற கொலைகள் இருக்கின்றன .
தீவுப்பகுதியில் இடம்பெறும் பலவிரோதச் செயல் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். நாமும் தீவுப் பகுதி மாத்திரம் அல்ல இலங்கையில் பலபாகங்களில் உள்ள மக்களின் உணர்வலைகளைப் புரிந்துதான் எழுதுகின்றோம். புலியெதிர்ப்பு அணி> புலிகள்> அரசபடை இவைகளுக்கிடையோன உறவு எவ்வாறு இருக்கின்றது என்ற கள நிலையை சரியாக புரிந்து கொண்டுதான் எழுதப்படுகின்றது. மக்களுடன் பேசாதவர்கள் அல்ல. மக்களுடன் அன்றாடம் அவர்களின் அவலநிலையை அறியாது எதனையும் எழுதவில்லை.
“தயாகத்தில் வாழும் உங்கள் உறவுகளிடம் ஒரு முறை பேசிப்பாருங்கள். அந்த மக்கள் நீங்கள் கற்பனை செய்யும் உலகப்புரட்சிக்காகவா ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்?.. மக்களின் அழிவை போக்கத்தான் யுத்த நிறுத்தத்தைக் கோருகின்றோம்.

“சோவியத்தில் நடந்த 5 ஆம் ஆண்டு புரட்சியில் இருந்து 17 ஆம் ஆண்டு புரட்சி வரை பாராளுமன்றத்தில் தங்கியிருந்த விளாதிமிர் இலியிச் லெனின் உங்களுக்கு சந்தர்ப்பவாதி.யப்பனை எதிர்த்து போராடுவதற்காக சீனத்து தேசிய முதலாளித்துவ சக்திகளோடு கரம் கொடுத்து நின்ற மாவோ சேதுங் அவர்களும் உங்கள் பார்வையில் சந்தர்ப்பவாதி! அதற்காக எமது தேதசத்து சூழலோடு இவைகளை ஒப்பீடு செய்து விட முடியாதது. ” முன்னர் பிரேமதாசாவுடன் குடித்தனம் நடத்திய புலிகள் இதைத்தான் சொன்னார்கள். குடித்தனம் நடத்த வேண்டும் என்றால் நீங்களும் மாவோ> லெனின் என உதாரணம் காட்டலாம்.
மக்கள் சலுகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா?
ஒரு அரசாங்கம் மக்களுக்கான பாதுகாப்பு> வேலை> உணவு வழங்குவது அவசியமானதாகும். இவற்றை கொடுக்கத் தகுதியில்லாத நிலையில் இருக்கின்ற போது பிச்சை எடு என்று கூறுவது என்ன நியாயம். அரசாங்கம் என்பதே ஒரு ஒடுக்குமுறைச் நிறுவனம் அது மக்களை அடக்கும் அதனிடம் கேட்டு வாங்குவதால் சில பணக்கட்டுகள் தனிநபர்கள் பக்கம் மாறுகின்றது. இதனை சரியாகத் தெரிந்துதான் கூறுகின்றேன்.
“புலிகள் உட்பட தமிழ் பேசும் தலைமைகள் ஒரு ஆராக்கியமான சூழலை நோக்கி நகர்த்த முற்பட்டிருந்தார்களா என்பதுதான் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கேள்வி. ”
“1.இலங்கை அரசே! யுத்தத்தை நிறுத்து!
2.புலிகளே! மக்களை விடுவி!
3.சர்வதேச சமூகமே! மக்களை பொறுப்பெடு!
4.புலிகளே! மக்களை விடுவியுங்கள்! நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்!
என்பவை உள்ளடங்கியது. இதை புலிகள் இன்ற ஏற்பது> காலம் பிந்திய ஒருநிலை. இதனால்இ யுத்தத்தை நிறுத்தாது அல்லது தற்காலிமான நிலைக்குள் இவை நிறைவேறியுள்ளது.
தவறான காலத்தில்> சர்வதேச நெருக்கடிக்குள் இந்த நிலைக்குள் புலிகள் வந்தது என்பதுஇ தவறான கோசத்தினதும்இ அதன் மூலமாக முன்னெடுத்த போராட்டத்தின் ஒரு விளைவாகும். தமக்குத்தாமே விலங்கை போட்டனர்.(hவவி://றறற.வயஅடைஉசைஉடந.நெவ/னைெநஒ.pரி?ழிவழைnஃஉழஅ_உழவெநவெரூஎநைறஃயசவiஉடநரூனைஃ5287:2009-02-25-09-13-19ரூஉயவனைஃ277:2009

தற்காலத்தில் ஏற்பட்டுள்ள சர்வதேச சதி பற்றிய எச்சரிக்கையை உணர்கின்றோம். இதனை மக்களிடத்தில் கூறுகின்றார். ஆனால் சர்வதேச சதியில் எமது உரிமைகள் நசுக்கப்படப் போகின்றது என்பதை நீங்கள் உணரவில்லை. இவைகள் உங்களுக்கும் ரயாகரனுக்கும் உள்ள பெரும் வித்தியாசம்.
இந்தக் கோரிக்கைகள் எல்லாம் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுவதற்காக அல்ல. அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்வது என்பது பற்றிய தேவையில் இருந்து வருகின்றது.
ஒடுக்குபவர்களிடம் இருந்து எமக்கு எதுவும் சும்மா கிடைக்கப் போவதில்லை. எமக்கு வேண்டியது சில சலுகைகள் அல்ல. உரிமை!
இன்று மக்கள் யாருடனாவது சார்ந்திருக்க வேண்டிய கட்டாய நிலை இந்த பரிதாபகரமான நிலையானது ஒன்று அவர்கள் விரும்பி ஏற்றது அல்ல. நிர்ப்பந்தம் அரச அடக்குமுறையாலும்> புலிகளின்> ஏன் உங்களின் அடக்குமுறையாலும் ஏற்பட்டதே. உங்களை பயம் கொள்ளாது இருக்க முடியுமா? மக்கள் உங்களைப் பார்த்தும் பயப்படுகின்றார்கள். இதனை நாம் கண்ணால் கண்டோம்.
மேலும் ரயாகரன் மீது அரசியலுக்கு அப்பாற்பட்டு தனிமனித தாக்குதல்கள் உங்கள் எழுத்துக்களில் தெரிகின்றது. இவைகள் ஏற்றுக் கொள்ள முடியாது. ரயாகரன் நாட்டில் இருந்திருந்தால் உங்கள் துப்பாக்கிக்கு இரையாகியிருப்பார்.
ஒரு அமைப்பு உருவாக்கம் என்பது தனி ரயாகரன் அல்லது எக்ஸ் என்ற நபர்களை தங்கியிருப்பதில்லை. வரலாறு தனது தேவையின் நிமித்தம் உருவாக்கிக் கொள்ளும். வாரும் வந்து அமைப்புக் கட்டும் என ஏளனமாக எழுதுவதன் மூலம் உமது உளவியல் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
புலியெதிர்ப்பணிகளே தீர்வை முன்வையுங்கள். இதுதான் எம்முடைய தீர்வுத் திட்டம் என முன்வைக்கின்றது கூட இன்றைய நிலையில் அவசியமானது.
வையுங்கள் நாமும் நியாயத்தின் பக்கம் நிற்போம்.

எமக்கு வேண்டியது பிச்சை அல்ல உரிமை!
வாழும் உரிமை வேண்டும் எனவே யுத்த நிறுத்தத்தை அறிவி!
உணவு வேண்டும் நிவாரணம் கொடு!
எமக்கு தெரிவு செய்யும் உரிமை வேண்டும் புலிகளே ஏகக் கொள்கையை விடு!
தீர்வு வை> பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரி!
ஆயுதங்களை காட்டி எம்மை பயமுறுத்தாதே - முடக்கு ஆயுதங்களை !
எம்உறவுகளைப் பிரிக்காதே எமது உறவுகளுடன் இணையவிடு!

மருதன் said...

சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் கலையரசன். வாழ்த்துகள்.

Kalaiyarasan said...

Thank You,Maruthan.

Anonymous said...

நல்ல பதிவு தொடருங்கள்

Kalaiyarasan said...

நன்றி,கவின். மீண்டும் இது போன்ற பதிவுகளுடன் சந்திக்கிறேன்.

benza said...

cut and paste --- pls enable