Showing posts with label பின்லாடன். Show all posts
Showing posts with label பின்லாடன். Show all posts

Wednesday, May 11, 2011

4 வருடங்கள் பிந்திய "பின்லாடன் மரண அறிவித்தல்"!


அமெரிக்காவுக்கு எதிராக புனிதப் போரை பிரகடனப் படுத்திய, ஒசாமா பின் லாடன் என்ற சர்வதேச பயங்கரவாதியை கொன்று விட்டதாக ஒபாமா அறிவித்துள்ளார். கொல்லப்பட்ட ஒசாமாவின் உடலை, "இஸ்லாமிய முறைப்படி" கடலில் அடக்கம் செய்து விட்டதாக அறிவித்துள்ளது. இதனால், ஒசாமாவின் மரணம் குறித்த சந்தேகமும் எழாமல் இல்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் நேரம் பார்த்து, அமெரிக்க அரசு "பின்லாடன் மரணச் செய்தியை" அறிவித்திருக்க வாய்ப்புண்டு.


-------------------------------------------------------------
மூன்று வருடங்களுக்கு முன்பே ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு விட்டதாக, காலஞ் சென்ற பாகிஸ்தானிய பிரதமர் பெனாசிர் பூட்டோ ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அப்போது இந்தச் செய்தி பரவலான மக்களை சென்றடையவில்லை. கடந்த வருடம் "கலையகத்தில்" பதிவிட்டிருந்த வீடியோவை, வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வலையேற்றம் செய்கிறேன்.


Benazir Bhutto: Bin Laden was Murdered












Bin Laden dead long before US raid

Iran's intelligence minister says the country has reliable information that former head of the al-Qaeda terrorist group Osama bin Laden died of disease some time ago. “We have accurate information that bin Laden died of illness some time ago,” Heidar Moslehi told reporters on the sidelines of a Cabinet meeting on Sunday.

He questioned Washington's claim that bin Laden was killed by American troops in a hiding compound in Pakistan on May 1. “If the US military and intelligence apparatus have really arrested or killed bin Laden, why don't they show him (his dead body) why have they thrown his corpse into the sea?” Moslehi asked. “When we apprehended [former Jundallah ringleader Abdul Malik] Rigi, we showed him and also aired his interview,” ISNA quoted the intelligence chief as saying.

By releasing such false news, he said, the White House seeks to overshadow regional awakening. Moslehi said US officials resort to such PR campaigns to divert attention from their domestic problems as well as their “fragile” economic situation. US President Barack Obama claimed that Osama bin Laden was killed by US forces on May 1 in a hiding compound in Pakistan.

A US official later announced that bin Laden's body was abruptly buried at sea, falsely boasting that his hasty burial was in accordance with the Islamic law, requiring burial within 24 hours of death. However, burial at sea is not an Islamic practice and Islam does not have a timeframe for burial. US officials also claimed their decision for a sea burial was made because no country would accept bin Laden's remains, without elaborating on which countries were actually contacted on the matter. Analysts, however, have raised serious questions as to why US officials did not allow for the application of a DNA test to officially confirm the identity of the corpse before its hasty burial.

(http://www.presstv.ir/detail/178898.html)

Monday, May 02, 2011

பின்லாடன் வேட்டை - நினைவுக் குறிப்புகள்


[ஆப்கானிஸ்தானில் படையெடுத்த அமெரிக்க படைகள், பின்லாடனை சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் எழுதிய கட்டுரை. பிரான்சில் இருந்து வெளிவரும் புகலிட சஞ்சிகையான உயிர் நிழலில் (ஏப்பிரல்-யூன் 2002 ) பிரசுரமானது.]
------------------------------------------

அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது மாதக்கணக்காக ரொக்கட் மழை பொழிந்த போது, "அத்தோடு  பின்லாடனும் அவனது அல்கைதா இயக்கமும்,தாலிபானும் அழிந்துபோவார்கள்" என்றுதான் பலரும் நம்பினார்கள். ஆனால் இறுதியில் உலகின் பலம் வாய்ந்த வல்லரசு தனது தோல்வியை ஒத்துக்கொண்டது. ஒரு மனிதனைப் பிடிப்பதற்காக இவ்வளவு பொருள், உயிர் இழப்புக்களா எனச் சிலர் குமுறினர்.

500 டொலரும் பெறுமதியற்ற வீடுகளை, ஒரு மில்லியன் பெறுமதியான ஏவுகணைகளை வீசியழித்த தீரச்செயலைப் பார்த்தவர்கள் நெகிழ்ந்தனர். ஐ.நா சபை மற்றும் மனித உரிமைகள் நிறுவனங்களின் கணிப்பின் படி, ரொக்கட் மழையால் கொல்லப்பட்ட மொத்த அப்பாவி ஆப்கானியர்களின் எண்ணிக்கை முவாயிரத்திற்கும் மேல். இறுதியில் தமது முன்னரங்க காவல் நிலைகளும் தாக்கப்படுவதைக் கண்ட தலிபான் படைகள் பின்வாங்க அமெரிக்க இராணுவம் தரையிறங்கியது. ஆப்கானிஸ்தான் விடுதலை செய்யப்பட்டதாகவும், ஆப்கானியர்கள்,குறிப்பாக பெண்கள், இனி சுதந்திரத்தை அனுபவிக்கலாமெனவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு கேள்வி எஞ்சியிருந்தது: பின்லாடன் எங்கே ?

தாலிபான்கள் அடித்து விரட்டப்பட்ட பின்னர், ஆப்கானிஸ்தான் 10 வருடங்களுக்கு முன்பிருந்த அரசியல் வரைபடத்தை மீண்டும் பெற்றது. அதாவது தலைநகர் காபுல் உட்பட, நாட்டின் வடகிழக்குப் பகுதி காலஞ்சென்ற மசூத்தினால் தலைமை தாங்கப்பட்ட தஜீக் இனத்தவரின் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. வடமேற்குப் பகுதியை ஜெனரல் தொஸ்தம் தலைமையிலான உஸ்பெக்கிய இனத்தவரின் படைகள் கைப்பற்றின. ஈரான் எல்லையில் உள்ள மேற்குப்பகுதியில் (ஈரானியரைப் போல்) தாரி மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். எதிர்பார்த்தது போல் அந்தப் பிரதேசத்தை சேர்ந்த இஸ்மாயில் கானின் படைகளின் கட்டுப்பாடு அங்கே வந்தது. இவ்வாறு இனரீதியாகப் பிரிந்திருந்த இம்முன்று படைகளைச் சேர்த்துத்தான் "வடக்குப்புறக் கூட்டணி" உருவாக்கப்பட்டது.

இதில் இஸ்மாயில் கானுக்கு ஈரானும், மசூத்தின் படைக்கு ரஸ்யாவும், ஆதரவு வழங்குகின்றன. ஆதரவு என்றால் பணம்,ஆயுதங்கள், இராணுவ வாகனங்கள், என எல்லாமே. ஆகவே ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆட்சி நடப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். அங்கே திரைக்குப்பின்னால் கடுமையான அதிகாரப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் வேறு வழியின்றித்தான் வடக்குப்புற கூட்டணியை ஆதரிக்க வேண்டியேற்பட்டது. இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான , பெரும்பான்மை பஷ்ரூன் இனத்தைச் சேர்ந்த கர்சாய் மேற்கத்தைய நாடுகளின் செலவாக்கிற்குட்பட்டவர் என்பது உண்மைதான். ஆனால் உண்மையில் ஆப்கான் அரசாங்கம் மசூத்தின் படைகளைச் சேர்ந்த தஜீக்கியரின் கைகளில்தானிருக்கின்றது. புதிதாக உருவாக்கப்படும் தேசிய இராணுவத்திலும் அவர்கள் தங்களின் ஆட்களைப் போடத்துடிக்கிறார்கள். பல்லின மக்கள் வாழும் ஆப்கானிஸ்தானில் ஒரு சிறுபான்மையினமான தஜீக்கியர்கள் ஆதிக்கம் செலுத்துவது வருங்காலத்தில் இனரீதியான பூசல்கள் வலுத்து இன்னொரு போருக்கு வழிவகுக்கும் என்பது வெள்ளிடை மலை.

பெரும்பான்மையான பஷ்டூனியர்களின் (அல்லது பட்டாணியர்கள்) நிலை எப்படியிருக்கிறது ? தலிபான் காலத்தில் அவர்கள் ஆட்சியை நடாத்திய போதும், தற்போது தமது பகுதிகளை மட்டும் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரதேச யுத்த பிரபுக்கள் எடுத்துள்ளனர். இருப்பினும் தஜீக்கியப் படைவீரர்கள் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பின்லாடனைத் தேடுகிறேம் என்ற போர்வையில் உள்ளூர் மக்களுக்குத் தொல்லை கொடுப்பதும் தொடர்கிறது. கிராமங்களில் தலிபான்கள் நடமாடுவதாகச் சந்தேகமும் நிலவுகிறது. சில இடங்களில் அந்நியப்படைகளுடன் கூட்டு வைக்கக்கூடாதென எச்சரிக்கைச் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. அமெரிக்க இராணுவம்தான் காபுலுக்கு வெளியேயும் தளம் அமைத்துள்ள ஒரேயொரு அந்நியப்படை. இராணுவ நடவடிக்கைகளில் அவர்களோடு பிரிட்டிஷ் படையினரும் ஒத்துழைக்கின்றனர். பிற மேற்குலக நாடுகளின் படைகள் காபுலில் மட்டும் சமாதானப் படை என்ற பேரில் வேலை செய்கின்றனர். காபுல் கூட பாதுகாப்பான இடமல்ல. பன்னாட்டுப் படைகளின் காவலரண்கள், முகாம்கள் மீது அடிக்கடி கிரனைட்டுகள் வீசப்படுகின்றன.

தலிபான்அல்கைதா போராளிகள் இன்னும் ஆப்கானிஸ்தானில் இயங்கி வருவதை அனைவரும் அறிந்து கொண்டனர். அவர்களின் இரகசியத் தளங்கள் பாகிஸ்தான் எல்லையோர 'தோரா போரா' மலைக்குகைகளில் இருப்பதாகத் தகவல் அறிந்த அறிந்த அமெரிக்க இராணுவம் அவற்றை முற்றுகையிட்டுக் குண்டுகளை வீசியது. குகைக்குள்ளேயே சென்று வெடிக்கக்கூடிய குண்டுகளைப்போட்டும், கடைசியில் கிடைத்ததென்னவோ கைவிடப்பட்ட ஆயுத வெடி மருந்துப்பொருட்களும், உயிரோடு பிடிபட்ட சில தாழ்நிலைப்போராளிகளும் தான். பின்லாடன் அங்கேயிருந்ததாகவும், கடுமையான குண்டு வீச்சுகளுக்கு மத்தியிலும் எப்படியோ தப்பிவிட்டதாகவும் பின்னர் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

மீண்டும் அந்தக் கேள்வியெழுந்தது : பின்லாடன் எங்கே ?

அமெரிக்க இராணுவத் தலைமையகம் தனக்குத் தெரியாதெனக் கைவிரித்தது. இது நடந்து சில வாரங்களுக்குப் பின்னர் இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. இம்முறையும் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியொன்றில் அமெரிக்கப் படைகளை திடீரென வழிமறித்துத் தாக்கியதில் பலர் இறந்தனர். உதவிக்குப்போன ஹெலிகப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. தனது எதிரியின் பலத்தை அறிந்து கொண்ட அமெரிக்க இராணுவம் வடக்குப்புறக் கூட்டணியைச் சேர்ந்தவர்களைக் கூட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டது. "ஒப்பரேஷன் அன்னகொண்டா" அறிவிக்கப்பட்டு கடும்போர் மூண்டது. தலிபான்,அல்கைதா போராளிகளின் கெரில்லாத் தாககுதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத அமெரிக்கப்படைகள் பின்வாங்கின. ஆனாலும் ஒப்பரேசன் வெற்றிபெற்றதென்றும் பல நூற்றுக்கணக்கான தாலிபான்,  அல்கைதா போராளிகளைக் கொன்றுவிட்டதாகவும் அமெரிக்க இராணுவத் தலைமையகம் கொடுத்த செய்தியை சர்வதேச ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கூறின.
உண்மையில் அங்கே என்ன நடந்தது ?

பஷ்டூன் கிராமங்களில் ஒளிந்திருக்கும் தாலிபான், அல்கைதாப் போராளிகளைப் பிடிப்பதற்காக சில அமெரிக்க இராணுவ வீரர்கள், ஆப்கானியப் பொதுமக்கள் போல மாறுவேடமிட்டு சென்றதாகவும் அதனாலேயே இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டு படையினர் பின்வாங்கியதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தியொன்று தெரிவிக்கின்றது. ரஸ்ய செய்தி நிறுவனங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி நடந்த சண்டையில் நான்கு ஹெலிகப்டர்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன, நூற்றுக்கணக்கான அமெரிக்கப்படை வீரர்கள் பலியாகினர். தமது பக்கம் இழப்பு அதிகமாகவே அமெரிக்கப் படைகள் பின்வாங்கின. நிலைமை இப்படியிருக்க "உலகத் தொலைக்காட்சி" உண்மைக்குமாறான செய்திகளைக் கூறிவந்தது. அமெரிக்க, வடக்குப்புறக் கூட்டணிப்படைகளின் தலிபான்-அல்கைதா வேட்டையில் சிக்கிய கைதிகளின் நிலை மனித உரிமைகளை மீறுவதாயுள்ளது. மசார்-இ-ஷெரிப் சிறைச்சாலைப் படுகொலைகளைப் பற்றி யாரும் சர்வதேச அளவில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. "ஜனநாயகத்தின் காவலர்களைப்" பொறுத்தவரையில் அது பயங்கரமான மனிதர்களான கைதிகளின் கிளர்ச்சியினால் ஏற்பட்ட விளைவு. முக்கிய இயக்க உறுப்பினர்கள் என்று சொல்லப்பட்டு, கியூபாவில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்களில் கூட சில அப்பாவிகள் இருப்பதாகக் கருதப்படகின்றது. இந்தச் சர்வதேசக் கைதிகளில் சில பிரஞ்சு பிரிட்டிஷ் பிரஜைகளும் அடங்குவர். ஆப்கானிஸ்தானில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள், எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி வைக்கப் பட்டுள்ளனர். இவை முன்னாள் நாஸிகளின் தடுப்பு முகாம்கள் போல காட்சி தருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பிய விசேட பிரதிநிதி கூறியுள்ளார்.

இவற்றைவிட வடக்குப் பகுதியில் வாழும் பஷ்டூன் இன மக்கள் பழிவாங்கப்படுவதாகவும் அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு காரணமின்றிக் கொல்லப்பட்டு பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவதாக , சுருங்கக்கூறின் இனச்சுத்திகரிப்பு நடப்பதாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்களின் நிலையோ எதிர்பார்த்த அளவு ஏதுவும் மாறிவிடவில்லை. பெண் கல்வி வழங்கப்படுவது உண்மைதான். ஆனால் "பூர்கா" எனப்படும் உடலை மூடும் ஆடை அணிவது இன்றும் தொடர்கிறது. தலைநகர் காபூலில் மட்டும் சில முகத்தை மூடாத பெண்களைப் பார்க்கலாம். பெண்கள் பூர்காவைத் தாங்களாகவே அணிந்து கொண்டு வெளியே செல்கிறார்கள். ஏனெனில் பெண்கள் வெளியே நடமாட முடியாத பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் பூர்காவை விட்டுவிட பெண்கள் மறுக்கின்றனர். பூர்கா அணிவதை விட தலிபான் காலத்தில் பெண்கள் வெறுத்த அம்சம்: ஒரு ஆண் துணையுடன்தான் வெளியே போக முடியும் என்ற சட்டம். இது விதவைகளை அதிகம் பாதித்த விடயம்.

தாலிபான் ஆட்சியின் கடைசிக் காலத்திலேயே, சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக, பெண்களுக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டன. பெண்களே நடத்ததும் பாண் (ரொட்டி) பேக்கரி, மற்றும் சில கல்வி நிலையங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டமை போன்றவற்றைக் கூறலாம். மேற்குலக நாடுகளைப் பொறுத்த வரை பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவது பற்றிய பிரச்சாரத்தை, அவர்கள் தமது தேவை கருதிப் பயன்படுத்தி வருவதைக் கவனிக்க வேண்டும். தாலிபான் காலத்தில் பெண்களைப் பற்றிப் பெருதாகக் கவலைப்பட்ட அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் இப்போது வாயே திறப்பதில்லை. சரித்திரத்தில் இதுபோன்று முன்பும் நடந்துள்ளது. இந்தியாவில் 'சதி' என்றழைக்கப்படும் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் காட்டி, அன்றைய பிரிட்டிஷ் அரசு இந்துக்கள் பெண்களை கொடுமைப் படுத்துவதாக உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்தது. நாகரீகமடையாத இந்துக்களிடமிருந்து இந்தியாவை விடுதலை செய்யப் போவதாக, ஒரு காரணத்தை கூறித் தான், பிரிட்டிஷ் அரசு தனது இந்தியா மீதான ஆதிக்கத்தை நியாயப்படுத்தியது.

இன்றும் இதே கதைதான் ஆப்கானிஸ்தானில் நடக்கிறது. ஆப்பானிஸ்தானைப் பிடித்த நோக்கத்தை, மேற்குலக நாடுகள் மிக வேகமாகச் செயற்படுத்திவருகின்றன. துர்க்மேனிஸ்தானிலிருந்து இந்தியா வரை எண்ணைக் குழாய் அமைப்பது சம்பந்தமான திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. பெருமளவு மனிதாபிமான, பொருளாதார உதவிகள் யாவும் அமெரிக்காவே வழங்குகின்றது. பஞ்சத்தில் பரிதவித்த பொதுமக்கள் நிவாரணப் பொருட்களைக் கண்டவுடன், முன்பு இதே அமெரிக்கா குண்டு போட்டதையும் மன்னித்து மறந்து விடத் தயாராக இருக்கின்றனர். இத்தகைய செயல்கள் இன்றைய பிரதமர் கர்சாய் போன்றவர்களை வலுப்படுத்த உதவுகின்றது.

இன்றைய ஆப்கானிஸ்தானின் பரிதாப நிலையைக் காணுபவர்கள், இந்த நாட்டை வழிநடத்த ஒரு மாற்றுத்தலைமை இல்லையா எனக் கேட்கலாம். இருக்கிறார்கள். ஆனால் எங்கே ? ஆப்கானிஸ்தானைப்பற்றிய ஒரு சராசரி மனிதனின் கருத்து என்ன? பழமை வாதிகள், பிற்போக்குவாதிகள், தாடிவைத்த மத அடிப்படைவாதிகள் வாழும் நாடு. சுருங்கச் சொல்லின் நவீன உலகத்தோடு ஒத்துப் போகாத நூற்றாண்டுகள் பின்தங்கிவிட்ட நாடு. ஆனால், பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால், அதாவது எண்பதுகளின் இறுதிவரை இருந்த ஆப்கானிய சமூக அமைப்பு கிட்டத்தட்ட இலங்கை, இந்தியாவில் உள்ளது போன்றிருந்தது என்றால் நம்புவீர்களா ?

பிற நாடுகளைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் குறிப்பிடத்தக்க படித்த மத்தியதர வர்க்கம் இருந்தது. இவர்கள் மத்தியில் லிபரல்கள், சோசலிசவாதிகள், ஜனநாயகவாதிகள் மட்டுமன்றி நாஸ்திகர்களும் இருந்தனர். வசதியாக வாழ்ந்த இவர்களின் கைகளில்தான் ஆட்சியதிகாரம் இருந்தது. எழுபதுகளில் இடம்பெற்ற காபுல் பல்கலைக் கழக மாணவர் போராட்டம்தான் சோசலிஸக் குடியரசு அமைக்க உந்து சக்தியாகவிருந்தது. அன்று மேற்கு நாடுகள் சோவியத் யூனியனை எதிர்ப்பதற்காக மத அடிப்படைவாத முஜாஹிதீன்களுக்கு வழங்கிய தாராளமான உதவிதான் நாட்டைப் பாழ்படுத்திவிட்டதாக ஆப்கானிய மக்கள் குமுறுகின்றனர்.

முஜாஹிதீன்கள் காபூலில் ஆட்சிக்கு வந்த பின்னர் படித்த மத்திய தர வர்க்கமும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டது. இப்போது மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்ப வருமாறு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஆப்கானியப் பொறியியலாளர்களை, மருத்துவர்களை மற்றும் தொழில் வல்லுனர்களை நோக்கி இடைக்காலப் பிரதமர் கர்சாய் அறைகூவல் விடுக்கின்றார். ஆனால் இந்த புத்திஜீவிகளின் அரசியல் நிலைப்பாடு, அவர்களை அங்கே செல்லத் தடுக்கின்றது. இன்று புலம் பெயர்ந்து மேற்கைரோப்பாவில், வட அமெரிக்காவில் அகதி தஞ்சம்கோரி வாழும் இவர்களில் பெரும்பான்மையானோர் சோஷலிஸ்டுகள் அல்லது லிபரல்கள். மத அடிப்படைவாதத்தை மட்டுமல்லாது மேற்குலக தலைமையையும் ஏற்றுக்கொள்ளாத இந்த மூன்றாவது சக்தியை யாரும் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக மேற்குலக அரச உளவுத்துறை இவர்களைக் கண்காணிப்பதுடன் வாயை மூடிக்கொண்டிருக்குமாறு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

எதிரியை அழிப்பது மட்டுமல்ல எதிரியின் தொடர்ந்த இருப்பை நிச்சயப்படுத்துவதும் போர்க்கால அரசியல்தான். தூரநோக்கமற்ற இந்த அரசியல் மேலும் மேலும் பிரச்சினைகளை அதிகரிப்பதை இங்கு காணலாம். தற்போது சீர்குலைந்து போயுள்ள தலிபான்-அல்கைதா கூட்டணி தன்னை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்துகின்றது. அதற்காக ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பஷ்ரூன் மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் தனக்கென ஆதரவுத்தளங்களைக் கட்டிவருகின்றது.
இந்தப் பஷ்ரூனியர்கள் காலங்காலமாக சிறுசிறு குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். வேறு பெயர்களால் அழைக்கப்படும் இக்குழுக்கள் குழுத்தலைவரையும் குறிப்பிட்ட பிரதேசங்களையும் கொண்டுள்ளன. ஒரு குழுவின் ஆடுகூட இன்னொரு குழுவினரின் கிராமத்திற்குள் போகமுடியாது. போனால் அடிதடி குத்து வெட்டுத்தான். ஒவ்வொரு குழுத்தலைவரும் தன்சொற் கேட்டு நடக்கும் ஆயுதந்தரித்த அடியாட்களை வைத்துள்ளர். ஆகவே இத்தகைய சூழ்நிலை தாலிபான்-அல்கைதா காலூன்றச் சாதகமாகவிருப்பதை தெளிவுபடுத்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்.

பெரு முனைப்புடன் நடத்தப்பட்ட, 'ஒப்பரேசன் அன்னகொண்டா' வின்போது மாறுவேடத்தில் சென்ற அமெரிக்கர்கள் பிடிபட்டதும் இதனால்தான். ஒரு வெளியாளை உள்ளூர் மக்கள் இலகுவாக அடையாளம் கண்டு கொள்வர். இதைவிட மரணித்த தலிபான் போராளிகளின் சமாதிகளை உள்ளூர் மக்கள் புனிதஸ்தலம் போல சென்று வழிபட்ட கதையுமுண்டு. மீண்டும் தலைதூக்கியுள்ள சிறு ஆயுதக்குழுக்களின் அடாவடித்தனம், "இதை விடக் குற்றச்செயல்கள் குறைவாயிருந்த தாலிபான் ஆட்சிக்காலம் பரவாயில்லை" என்று பொதுமக்களை நினைக்க வைத்துள்ளது. இப்படியான குழப்பமான சூழ்நிலையில் புதிதாக ஒரு முற்போக்குச் சக்தி தலைமை தாங்கத் தவறினால், ஆப்கானிஸ்தான் மீண்டும் ஒரு போரைச் சந்திக்கும். அப்போது தாலிபான் - அல்கைதா கூட்டணி முன்னேறி வந்தால் அது முழு மத்திய ஆசியாவையும் பாதிக்கும்.

( உயிர்நிழல், ஏப்பிரல்-யூன் 2002 )

Saturday, February 13, 2010

ஆயிரம் பொய் சொல்லி ஆப்கான் போரை நடத்து !

"முன்னொரு காலத்திலேயே, ஆப்கானிஸ்தான் என்ற நாட்டில் கண்டஹார் என்ற ஊரில் பின் லாடன் என்ற உலக மகாப் பயங்கரவாதி இருந்தானாம். அவன் தனது சாட்டலைட் தொலைபேசியின் உதவியுடன் அமெரிக்க மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆணையிடுவானாம். 11 செப்டம்பர் 2001 அன்று, பின் லாடன் அனுப்பிய பயங்கரவாதிகளின் குழு விமானங்களைக் கடத்தி நியூ யோர்க்கில் உள்ள இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்தார்களாம். தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருந்த அமெரிக்கா தாக்கப்பட்டதால், மக்கள் வெகுண்டு எழுந்தனர். குடிமக்களின் கோபத்தை தணிப்பதற்காக ஜனாதிபதியானவர் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க உத்தரவிட்டார். நவீன ஆயுதங்கள் சகிதம் இறங்கிய அமெரிக்க படைகள், உலக மகாப் பயங்கரவாதி பின் லாடனையும், அவனுக்கு அடைக்கலம் கொடுத்த தாலிபான் கும்பலையும் அடித்து விரட்டினார்கள். ஜனநாயகம் மீட்கப்பட்டது. உலகை ஆட்டிப்படைத்த பயங்கரவாதிகள் ஒழிந்தார்கள் என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். சுபம்."

21 ம் நூற்றாண்டின் மீட்பராக அவதரித்த ஜோர்ஜ் புஷ் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க கூறிய காரணம் தான் மேலே உள்ளது. அன்று அந்தக் காரணத்தை உண்மை என்றே எல்லோரும் நம்பினார்கள். சர்வதேச ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து மக்களை மாயைக்குள் வைத்திருந்தன. அமெரிக்கா முதல் ஆவுஸ்திரேலியா வரை, படித்தவர் முதல் பாமரர் வரை, அமெரிக்க அரசு சொன்ன பொய்களை ஏற்றுக் கொண்டார்கள். அமெரிக்கா அறிவித்த பயங்கரவாத எதிர்ப்பு போரை ஆதரித்தார்கள். நவீன உலக வரலாற்றில் கூறப்பட்ட "மிகப் பெரிய பொய்", உலகம் முழுவதும் விலை போனது.

இன்று ஒன்பது வருடங்கள் கடந்த பின்னர், "சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற" ஒபாமாவும் பழைய பல்லவியை பாடுகின்றார். ஆப்கானிஸ்தானுக்கு மேலதிக படைகளை அனுப்புவதற்கு நாள் குறிக்கிறார். "ஆயிரம் அமெரிக்கர்களின் இரத்தக்கறை படிந்த தலிபானுடன் பேசமாட்டோம்." பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்சின் பேச்சாளர் கர்ஜிக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை, ஆப்கான் படையெடுப்புக்கு நியாயமான காரணம் என்று ஒன்றை திரும்ப திரும்ப சொல்கிறார்கள். சர்வதேச பயங்கரவாதி பின்லாடனை ஒப்படைக்க தாலிபான் மறுத்து விட்டது. இந்தக் குற்றச்சாட்டு உணமையல்ல. ஆதாரம்? அமெரிக்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆவணங்கள்!!

அண்மையில் பகிரங்கப் படுத்தப் பட்ட அமெரிக்க வெளிவிவகார அமைச்சு ஆவணங்கள், தாலிபானுக்கும், பின்லாடனுக்கும் இடையிலான முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் 1998 ம் ஆண்டில் இருந்தே, தாலிபான் அரசினால் பின்லாடன் ஏறக்குறைய வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். சர்வதேச ஜிகாத்தில் எல்லாம் தாலிபானுக்கு ஆர்வம் இருக்கவில்லை. அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணவே தாலிபான் அரசு விரும்பியது. பின் லாடனுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் அல் கைதா உறுப்பினர் ஒருவரும், அந்தக் கூற்றுகளை ஒப்புக் கொள்கிறார்.

எகிப்தை சேர்ந்த ஜிகாத் போராளி அபு அல் வாலித் அல் மஸ்ரி, தாலிபான் தலைவர் முல்லா ஒமாருடனும், அல் கைதா தலைவர் பின் லாடனுடனும் நெருங்கிய உறவைப் பேணியுள்ளார். 1998 ல் இருந்து, 2001 ம் ஆண்டு வரையில் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்துள்ளார். இவரது வாக்குமூலங்கள் ஜனவரி மாத "CTC Sentinal " இதழில் வெளியிடப்பட்டுள்ளன. CTC Sentinal அமெரிக்க அரசின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினால் ( Combating Terrorism Center) வெளியிடப்படுகின்றது. அல் மஸ்ரியின் வாக்குமூலத்தின் படி: "பின் லாடன் அமெரிக்க இலக்குகளை தாக்குவதில்லை என்றும், ஊடகங்களுடன் தொடர்பு வைப்பதில்லை என்றும் வாக்குக் கொடுத்தாதேலேயே ஆப்கானிஸ்தானில் தங்க அனுமதிக்கப்பட்டார். முன்னர் ஒரு தடவை தாலிபான் அரசின் வெளிவிவகார அமைச்சர் முத்தாவாகில்: "கண்காணிப்பதற்கு வசதியாக பின் லாடன் கண்டஹார் நகரில் இருக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்..." என்று தெரிவித்தார்.

1998 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலே, தாலிபானின் கொள்கை மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். கிழக்கு ஆப்பிரிக்காவில் நடந்த அமெரிக்க தூதுவராலய குண்டுவெடிப்புக்கு பதிலடியாகவே அந்த தாக்குதல் நடத்தப் பட்டது. ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்று இரு நாட்களுக்கு பிறகு தாலிபான் தலைவர் ஒமார், அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பதிவு செய்யப்பட்டு அமைச்சக ஆவணக்காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள உரையாடலில், "பின் லாடன் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதற்கான ஆதாரங்களை கொடுக்குமாறும், அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும்..." தெரிவித்தார். அந்த சம்பவத்திற்கு பின்னர் தாலிபான் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பின் லாடன்: "மத நம்பிக்கையாளர்களின் தலைமைக் கமாண்டர் ஓமாரின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக..." அல் ஜசீரா பேட்டியில் தெரிவித்தார்.

1998 செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் பின் லாடனை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்து விட்டு, சவூதி அரேபியாவிடம் ஒப்படைக்க தாலிபான் அரசு முன்வந்தது. ஆனால் அதற்கு முன்னர், அமெரிக்காவிடம் கேட்ட ஆதாரங்களுக்காக காத்திருந்திருக்கிறார்கள். வெளிநாட்டு அமைச்சர் முத்தாவாகில் இது குறித்து மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்தி இருக்கிறார். ஏற்கனவே அமெரிக்கா வழங்கிய ஆவணங்கள், வீடியோக்கள் யாவும் பழையவை. அவை எதுவும் பின் லாடனை நேரடியாக தொடர்பு படுத்தவில்லை, என்றும் தெரிவித்துள்ளார். (ஆதாரம்: இஸ்லாமாபாத்தில் கடமையாற்றிய அமெரிக்க பிரதிநிதியுடனான உரையாடல். அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அறிக்கை.) போதுமான சாட்சியங்கள் இல்லாததால், பின் லாடன் சொந்த விருப்பின் பேரில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறலாம், என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

1999 ம் ஆண்டு, தாலிபான், பின்லாடன் உறவில் பாரிய விரிசல் தோன்றியது. பின்லாடனுக்கு பாதுகாப்பாக இருந்த அரபு (அல் கைதா) மெய்ப்பாதுகாவலர்களின் ஆயுதங்களைக் களைய எத்தனிக்கப்பட்டது. தாலிபான் அனுப்பிய ஆப்கான் மெய்ப்பாதுகாவலர்கள் பின்லாடனின் பாதுகாப்பை பொறுப்பு எடுக்க சென்றனர். 10 பெப்ருவரி 1999 ல், பின்லாடனின் இல்லத்தை முற்றுகையிட்ட ஆப்கான் வீரர்கள், அல் கைதா உறுப்பினர்களுடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். மூன்று நாட்களாக நீடித்த சண்டையின் முடிவில், பின்லாடனின் இல்லம் ஆப்கான் தாலிபான் பாதுகாவலர்களால் பொறுப்பு எடுக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையின் போது, பின்லாடன் பாவித்த செய்மதித் தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது. (ஆதாரம்: New York Times , 4 மார்ச் 1999 )

ஆப்கானிஸ்தானில் இருந்த அல்கைதா பயிற்சி முகாம்கள் யாவும் தாலிபான் உத்தரவின் பேரில் மூடப்பட்டன. ஆயுதங்கள் களையப்பட்ட வெளிநாட்டு ஜிகாத் போராளிகள், ஆப்கானிஸ்தானை விட்டு நாடுகடத்தப் படுவோம் என அஞ்சினார்கள். 2001 ம் ஆண்டு, வடக்கு ஆப்கானிஸ்தானில் யுத்தம் மூண்ட காலத்தில், வெளிநாட்டு ஜிகாதிகளுக்கும் போர்க்களத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அப்போது கூட பின்லாடன் மீது முல்லா ஒமாருக்கு கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அல்கைதாவுக்கு போட்டி இயக்கமான உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய முன்னணிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. வெளிநாட்டு ஜிகாத் போராளிகள், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய முன்னணி தலைவர் தாகிர் யுல்டாஷின் நேரடிப் பொறுப்பின் கீழ் விடப்பட்டனர்.

மேலதிக விபரங்களுக்கு:
Taliban Did Not Refuse to Hand Over Bin Laden
New offer on Bin Laden
CTC Sentinel’s January Edition
US Air Strike: Isolated in Taliban bastion capital