Sunday, November 14, 2010

கிறிஸ்தவர்களின் புனிதத்தை கெடுத்த இஸ்ரேலிய படையினர்

அநேகமாக எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரிந்த கதை இது. புனித பவுல் இயேசுவின் சீடர்களில் ஒருவர். அவர் டமாஸ்கஸ் செல்லும் வழியில் ஆண்டவனின் அருள்வாக்கு கிடைத்தது. அதன் பிறகு பவுலின் (அதற்கு முன்னர் சவுல்) வாழ்க்கை அடியோடு மாறிப் போனது. கிறஸ்தவ மத ஸ்தாபகர்களில் ஒருவராக புனித பவுல், இன்றும் நினைவுகூரப் படுகின்றார்.

அப்போஸ்தலர் பவுல் கர்த்தரின் அருளைப் பெற்ற இடமாக கருதப்படும் வழி இன்றும் உள்ளது. இஸ்ரேலையும், சிரியாவையும் பிரிக்கும் கோலான் மலைப் பள்ளத்தாக்கில் அந்த இடம் அமைந்துள்ளது. இன்று குனைத்திரா என்று அரபு மொழியில் அழைக்கப்படும் நகரம், ஒரு காலத்தில் பிரதான வர்த்தக மையமாக திகழ்ந்தது. அந்த மலைப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்கள். அதனால் உலக கிறிஸ்தவர்களுக்கு புனிதமான தேவாலயம் ஒன்றும் அங்குள்ளது. பண்டைய தேவாலயம் என்பதால் அது கிரேக்க ஒர்தொடோக்ஸ் முறையில் கட்டப்பட்டுள்ளது. இன்று குனைத்திரா நகரமும், சுற்றாடலும் இடிபாடுகளுடன், பாழடைந்து போய்க் காணப்படுகின்றது. அங்கே வாழ்ந்த மக்கள் எல்லோரும் அகதிகளாக, டமாஸ்கஸ்ஸில் வாழ்கின்றனர். கிறிஸ்தவர்களுக்கு புனிதமான குனைத்திரா நகரம் இஸ்ரேலியரின் விமானக் குண்டு வீச்சுகளால் தரைமட்டமாக்கப் பட்டது. புனித பவுலின் ஆலயத்திற்கு என்ன நடந்தது?

"இஸ்ரேலை யாராலும் தோற்கடிக்க முடியாது. எந்தப் போரிலும் வெற்றி இஸ்ரேல் பக்கம்." போன்ற கருத்துகள் உலகம் முழுவதும் பிரச்சாரப் படுத்தப் படுகின்றன. மேற்குலகில் இருந்து முடுக்கி விடப்படும் அரசியல் பிரச்சாரத்தை, சில புரட்டஸ்தாந்து சபைகளும் தமது நம்பிக்கையாளர் மத்தியில் பரப்புகின்றன. அன்றும் இன்றும், இஸ்ரேலின் வெற்றிகளுக்கு காரணம் நவீன ஆயுத தளபாடங்கள். அமெரிக்கா உலகின் உயர்தர தொழில்நுட்ப அறிவை, இஸ்ரேலுக்கு முதலில் வழங்கி விடும். அயலில் உள்ள அரபு நாடுகள் சம பலத்துடன் நிற்க விடாமல், சர்வதேச சமூகத்தின் பேரில் தடைகள் ஏற்படுத்தப்படும். அண்மையில் ரஷ்யா, சிரியாவுக்கு நவீன ஏவுகணைகளை விற்க முன் வந்த போது, அமெரிக்கா தடுத்து விட்டது.

1967 ம் ஆண்டு ஆறு நாள் நடந்த போரை, இஸ்ரேலின் மாபெரும் வெற்றியாக வரலாறு காட்டுகின்றது. ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனர்களின் மேற்குக்கரை, எகிப்தின் சினாய் பாலைவனம், சிரியாவின் கோலான் குன்றுகள் என்பன இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டன. இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை, சிங்களவர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியது போல, யூதர்கள் அந்த வெற்றியை கொண்டாடினார்கள். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை உலக கிறிஸ்தவர்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. ஏனெனில் அந்த ஆறு நாள் போரில், கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலங்கள் பல இஸ்ரேலியரால் ஆக்கிரமிக்கப்பட்டன. அவை வெறும் தேவாலயங்கள் மட்டுமல்ல, அவற்றை சுற்றி வாழ்ந்த லட்சக்கணக்கான கிறிஸ்தவர்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானார்கள். பெருமளவு கிறிஸ்தவர்கள் அகதிகளாக அயல் நாடுகளில் தஞ்சம் கோரினார்கள். இயேசு பிறந்த புனித மண்ணில் வாழ்ந்தவர்கள் யாரும் உங்கள் கண்ணுக்கு கிறிஸ்தவராக தெரியவில்லையா? பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் அதனை அந்நிய ஆக்கிரமிப்பாகத் தான் பார்க்கிறார்கள். பாலஸ்தீன தேசியவாதம் கூட கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தியல் என்பது குறிப்பிடத் தக்கது.

இஸ்ரேல், கோலான் குன்றுகளை 1967 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றது. அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இன்றும் டமாஸ்கஸ் அகதிமுகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் கிராமங்களில் யூதர்கள் வந்து குடியேறி வாழ்கின்றனர். "ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளில் குடியேற்றம் செய்வது சட்டவிரோதம்" என்று ஐ.நா. ஆணை பிறப்பித்தது. ஆனால் இஸ்ரேல் அதை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, யூத குடியேற்றங்களை தொடர்ந்து அமைத்து வருகின்றது. "கோலான் குன்றில் குடியேற வருகிறீர்களா? நவீன வசதிகளுடன் கூடிய வீடுகள் காத்திருக்கின்றன." போன்ற விளம்பரங்கள் அமெரிக்க நாளிதழ்களில் வருகின்றன.

1973 ம் ஆண்டு, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோலான் குன்றுகளை மீட்கும் போரை சிரியா தொடங்கியது. "யொம் கிப்புர் யுத்தம்" என்று அழைக்கப்படும், அந்தப் போரின் ஆரம்பத்தில் சிரியப் படைகள் வெற்றிகளை குவித்தன. கோலான் குன்றுகளை மீட்டெடுத்தன. இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கி ஓடின. நவீன இஸ்ரேலின் வரலாற்றில் முதல் தடவையாக, "வெல்ல முடியாத நாடு" என்ற இமேஜ் நொறுங்கியது. ஆயினும் சிறிது நாட்களில் தன்னை சுதாகரித்துக் கொண்ட இஸ்ரேல் திருப்பித் தாக்கியது. எப்படி? தடை செய்யப்பட்ட நேபாம் குண்டுகளை வீசி, சிரியப் படைகளை பின்வாங்க வைத்தது.(பார்க்க:
MIDDLE EAST: The War of the Day of Judgment )சர்வதேச சமூகம் சகுனி வேலையில் இறங்கியது. சமாதானப் பேச்சுவார்த்தை நாடகமாடி, கோலான் குன்றை மூன்று பிரிவுகளாக துண்டு போட்டது. மேற்கில் பெரும்பகுதியை இஸ்ரேல் தக்க வைத்தது. கிழக்கில் சிறிய பகுதி சிரியாவுக்கு கொடுக்கப்பட்டது. இடையில் சூனியப் பிரதேசம் ஒன்றை ஐ.நா. சமாதானப் படை காவல் காத்தது.

புனித குனைத்ரா நகரம் இன்று சூனியப் பிரதேசத்திற்குள் அகப்பட்டுக் கொண்டுள்ளது. உண்மையில் அது சிரியாவினால் நிர்வகிக்கப் படுகின்றது. 2001 ல், காலஞ் சென்ற போப்பாண்டவர் ஜோன் போல் அங்கு விஜயம் செய்து, பிரார்த்தனை செய்தார். பாப்பரசரின் விஜயத்தால், குனைத்ரா சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றது. (பார்க்க:
John Paul Prays for Peace In Former War Zone in Syria )
அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், இஸ்ரேலிய படைகளின் காட்டுமிராண்டித் தனத்தை கண்ணால் கண்டனர். குனைத்ரா நகரம் முழுவதும் இஸ்ரேலிய அட்டூழியங்களுக்கு சாட்சியமாக காணப்படுகின்றது. இஸ்ரேலிய படையினர் புனித பவுலின் தேவாலயத்தையும் விட்டு வைக்கவில்லை. கிறிஸ்தவர்களின் மனது புண்படும் வண்ணம் தேவாலயத்தின் தூய்மையை மாசு படுத்தியுள்ளனர். (பார்க்க : மேலேயுள்ள புகைப் படம்) தேவாலயத்தின் ரகசிய கருவூலங்களை, கிரனைட் வீசி உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஊடகவியலாளரிடம் நடந்ததை விபரித்த தலைமை மதகுரு, "மனிதர்கள் இந்த அளவு கேவலமாக நடந்து கொள்வார்களா?" எனக் கண்ணீர் மல்கக் கூறினார்.

When Pope John Paul visited this frontline town in the Israeli-occupied Golan Heights Monday, his Syrian hosts did not have to say anything....
Indeed, the panorama of destruction tells the whole story. Bulldozed houses, naked buildings, demolished hospitals, shell-holed churches and devastated mosques are blunt reminders of the bitter conflict between Israel and Syria.
Time stopped at Quneitra when the Israelis withdrew in 1974 under a U.S.-negotiated armistice. Israeli troops destroyed everything in their wake, leaving not one building intact...
Residents of the Golan Heights who have became refugees in other cities, including Damascus, say they see a good omen in the Pope's pilgrimage to Syria.
(Reuters, May 7, 2001)


இயேசு வாழ்ந்த மண்ணில், இரண்டாயிரம் வருடங்களாக வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களை வெளியேற்றிய இஸ்ரேலை, ஒரு கிறிஸ்தவன் ஆதரிக்க முடியுமா? அது கிறிஸ்தவ சகோதரர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகாதா? இஸ்ரேலை ஆதரிப்பவர்கள் மத, இன அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் காலனியாதிக்க எஜமான்களின் விசுவாசிகள்.

56 comments:

RMD said...

நல்ல பதிவு. இஸ்லேலின் பிரச்சாரவாததின் வெற்றி அது இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது என்று கிறித்தவர்களை நம்ப் வைத்ததுதான்.மத்திய கிழக்கில் உள்ள அரபு இஸ்லாமியர்களும்,அரபு கிறித்தவர்களும் இஸ்ரேலால் பாதிக்கப் படுவதை ஊடகங்கள் மத் பிரச்சினையாக காட்டுவதும் இஸ்ரேலுக்கு சாதகமாகவே உள்ளது.

அங்கே கிறித்தவர்கள் என்ன அரபியரோடு யூதர்கள் வாழ்ந்து வந்திருந்தால் கூட குண்டு வீசி கொன்றிருப்பார்கள். ஆக்கிரமிப்பாளனுக்கு மதம்( சாத்கம் என்றால் மட்டும்),கொள்கை(ஆக்கிரமிப்பை தவிர) கிடையாது

Anonymous said...

கலையரசனுக்கு திடீரென்று கிறிஸ்தவர்கள் மீது கரிசனை. காரணம் இஸ்ரேலியர்கள்! கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் விரோத நிலையெடுக்க முயற்சி!

அத்தோடு புரட்டஸ்தாந்து-கத்தோலிக் சபை பிரிவினையை தனக்கு சாதகமாக பிரயோகிக்க முயற்சி //சில புரட்டஸ்தாந்து சபைகளும் தமது நம்பிக்கையாளர் மத்தியில் பரப்புகின்றன// ஆனால் குறிப்பிட்ட தேவாலயம் கீழைத்தேய கிறிஸ்தவ சபைக்குரியது.

சிரியாகூட இந்த தேவாலயத்தில் தனது நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. 1974 தொடக்கம் இன்று வரை சிரியா அந்த ஆலயத்தை அப்படியே வைத்திருந்து இஸ்ரேலிய எதிர் பிரச்சாரம் செய்து வருகிறது. அதற்காக அதை காட்சியகமாக மாற்றிவிட்டார்கள். அரபு படைகளின் குனைத்திரா நோக்கிய ஷெல் வீச்சு பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். (பார்க்க: http://www.camera.org/index.asp?x_article=49&x_context=3)

இந்தியா, இலங்கை என பல நாடுகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதுபற்றி கலையரசன் வாய் திறக்கமாட்டார். ஆனால், இஸ்ரேலியர்கள் செய்த அழிப்பு என்றதும் நீதி கேட்க ஆரம்பித்துவிட்டார் ஓர் முழு கிறிஸ்தவ எதிர்ப்பாளர். இதைத்தான் பச்சோந்தித்தனம் என்பது!

முஹம்மது said...

நன்றாகச் சொன்னீர்கள், கலையரசன். யசீர் அரபாத்தின் பலஸ்தீன விடுதலை அமைப்பில் ஏராளமான அரபுக் கிறிஸ்தவர்கள் அங்கம் வகித்து இன்றும் அதில் தொடர்ந்திருக்கின்றனர். அமெரிக்காவிலிருந்தே யூத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்த, கலாநிதி எட்வர்ட் ஸயீத் போன்ற பலஸ்தீன அரபுக் கிறிஸ்தவ எழுத்தாளர்களின் ஆக்கங்கள் அவர்கள் இஸ்ரேலை வெகுவாக எதிர்க்கிறார்கள் என்பதை நன்கு புலப்படுத்துகின்றனவல்லவா? தங்களது நாட்டை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக பலஸ்தீன அரபுக் கிறிஸ்தவர்களும் யூதர்களும் இன்றும் ஓரணியில் நின்று போராடுகின்றனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு உள்ளானவுடனே கிறிஸ்தவர்களின் புனிதத் தலங்களை அழித்த இஸ்ரேலியருக்கு அமெரிக்காவும், (கிறிஸ்தவ) ஐரோப்பாவும், முட்டாள்தனமான சில தமிழர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவை முஸ்லிம்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது கண்ணியமாக நடத்தப்பட்டமையை வேண்டுமென்றே மறந்து விடுகிறார்கள்.

ஹரிஸ் Harish said...

இஸ்ரேலியர்கள் = சிங்களன்..தவறான ஓப்பீடு..

Rajakamal said...

super,well explained, keep it up kalai.

sivakumar said...

வழக்கம் போலவே சிறப்பான பதிவு புதிய வரலாற்றுத் தகவல்கள் , ஆதாரங்களுடன். இஸ்ரேலின் மீது ஒரு நாயகபிம்பம் கட்டப்பட்டுள்ளது, அது இராணுவ வல்லரசாக இருக்க்க் காரணம் அது அமெரிக்காவின் 51 வது மாநிலமாக செயல்படுகிறது என்பதே.
மியான்மர் இனப்பிரச்சனை குறித்த பதிவுகள் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்

தமிழன் said...

இஸ்ரேலுக்கு அரசியலமைப்பு சட்டம் (constitution) என்பதே கிடையாதாம். அதாவது, ஒரு நாட்டுக்கு இச்சட்டம் இயற்றப்பட வேண்டுமானால் இதற்கு முதலில் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் தரைப்படம் அதன் எல்லைகளுடன் வரையப்பட வேண்டும். இஸ்ரேலோ இவையெல்லாம் இல்லாத பட்சத்தில், தாங்கள் விரும்பும்வரை தங்கள் ஆக்கிரமிப்புகளை இவர்கள் விரிவு படுத்திக்கொண்டே போக வசதி இருக்கிறது.

மேற்கூறிய சட்டத்தைப்பற்றிய இந்த கூற்றுக்கள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது தெரியவில்லை. விளக்கவும்.
நன்றி.

Kalaiyarasan said...

//சிரியாகூட இந்த தேவாலயத்தில் தனது நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. 1974 தொடக்கம் இன்று வரை சிரியா அந்த ஆலயத்தை அப்படியே வைத்திருந்து இஸ்ரேலிய எதிர் பிரச்சாரம் செய்து வருகிறது. அதற்காக அதை காட்சியகமாக மாற்றிவிட்டார்கள். அரபு படைகளின் குனைத்திரா நோக்கிய ஷெல் வீச்சு பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். (பார்க்க: http://www.camera.org/index.asp?x_article=49&x_context=3)//

சிரியா அந்த ஆலயத்தை மட்டுமல்ல, இடிபாடுகளுடனான குனைத்ரா நகரை புனரமைக்காமல் அப்படியே வைத்திருப்பதில் எந்த தவறும் இல்லை. யாழ் நூலகம் சிங்கள இனவெறியர்களின் செயலுக்கு சாட்சியமாக புனரமைக்காமல் விடப்பட்டது. அதே போல உருக்குலைந்த குனைத்ரா நகரமும் இஸ்ரேலிய இனவெறியர்களின் செயலுக்கு சாட்சியமாக நிலைத்து நிற்கும்.

நீங்கள் இங்கே கொடுத்துள்ள இணையத்தளம், இஸ்ரேலிய அரசின் நிதியில் இயங்கும் யூத இனவாதிகளின் பிரச்சாரத் தளம். சிங்கள இனவாதிகளின் இணையத்தளம் ஒன்று யாழ் நூலகத்தை புலிகளே எரித்ததாக கூறுகின்றது. சிங்கள இனவாதிகளும், யூத இனவாதிகளும் தமது பரப்புரைகளை இணையத்திலும் தொடர்கின்றனர். இவற்றை எல்லாம் உண்மை என்று நம்புவது அவரவர் அரசியல் நலன் சார்ந்தது.

Anonymous said...

//ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவை முஸ்லிம்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது கண்ணியமாக நடத்தப்பட்டமையை வேண்டுமென்றே மறந்து விடுகிறார்கள்.//

ஹேகியா சோபியா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மேலும் பல உதாரணங்கள் தேவையென்றால் தருகின்றேன்.

//பலஸ்தீன அரபுக் கிறிஸ்தவர்களும் யூதர்களும் இன்றும் ஓரணியில் நின்று போராடுகின்றனர்.//

ஒட்டுக் குழுக்களும் சிங்களப் படைகளும்கூட ஓரணியில்தான் உள்ளன. அதற்காக தமிழர்கள் அவர்களை ஆதரிக்கிறார்களா?

Anonymous said...

//நீங்கள் இங்கே கொடுத்துள்ள இணையத்தளம், இஸ்ரேலிய அரசின் நிதியில் இயங்கும் யூத இனவாதிகளின் பிரச்சாரத் தளம்.//

இலகுவாக பிரச்சார தளம் என்றுகூறிவிடலாம். உண்மை என்னவென்று அணுகக் கூடாதா?

Kalaiyarasan said...

//இலகுவாக பிரச்சார தளம் என்றுகூறிவிடலாம். உண்மை என்னவென்று அணுகக் கூடாதா?//

சிங்கள இனவாதிகளும், யூத இனவாதிகளும் தெரிவிக்க விரும்பும் "உண்மை" எமக்குத் தேவையில்லை.

Anonymous said...

//தங்களது நாட்டை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக பலஸ்தீன அரபுக் கிறிஸ்தவர்களும் யூதர்களும் இன்றும் ஓரணியில் நின்று போராடுகின்றனர்.//

சைவ தமிழர்களும் கிறிஸ்தவ தமிழர்களும் கூட ஓரணியில் நின்றுதான் போராடுகிறார்கள். இனப்பிரச்சனையென்றால் தமிழர்கள் என்றுதான் பார்க்கப்படுகின்றார்கள்.

Anonymous said...

//சிங்கள இனவாதிகளும், யூத இனவாதிகளும் தெரிவிக்க விரும்பும் "உண்மை" எமக்குத் தேவையில்லை//

சிங்கள இனவாதிகள் பற்றி நான் கூறிப்பிடவில்லை. இஸ்ரேலியர்கள்-சிங்களவர்கள் பொருத்தமற்ற ஓப்பீடு. ஒப்பீடத்தான் வேண்டுமென்றால், ஐ.நா சிறிலங்கா யுத்த குற்ற விசாரணை செய்யக்கூடாது என்ற பலஸ்தீனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Kalaiyarasan said...

//இஸ்ரேலியர்கள்-சிங்களவர்கள் பொருத்தமற்ற ஓப்பீடு.//

உங்களுக்கு மட்டும் பிடிக்காத ஒப்பீடு என்று கூறுங்கள். சிங்களப் பேரினவாதமும், யூதப் பேரினவாதமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நீங்கள் குறிப்பிட்ட ஐ.நா. சிறிலங்காவையும், இஸ்ரேலையும் போர்க்குற்றங்களுக்காக விசாரணை செய்ய விரும்புகின்றது. ஒரு உண்மையான தமிழன் சிறிலங்கா மீதான ஐ.நா. விசாரணையை வரவேற்கும் அதே நேரம், இஸ்ரேல் மீதான ஐ.நா. விசாரணைக்கும் ஆதரவு தெரிவிப்பான். ஏனெனில் தமிழர்களும், பாலஸ்தீனர்களும் பேரினவாத அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்கள்.

Anonymous said...

//ஒரு உண்மையான தமிழன் சிறிலங்கா மீதான ஐ.நா. விசாரணையை வரவேற்கும் அதே நேரம், இஸ்ரேல் மீதான ஐ.நா. விசாரணைக்கும் ஆதரவு தெரிவிப்பான்.//

பலஸ்தீனர்கள் சிறிலங்காவின் ஆக்கிரமிப்பு வெற்றிக்கு வாழ்த்தனுப்பி, ஐ.நா சிறிலங்காவின் இறைமையில் தலையிடக் கூடாது என்பர்கள். தமிழர்கள் நாங்கள் மட்டும் பலஸ்தீனர்களுக்கு சார்பாக இருக்க வேண்டுமா? பலஸ்தீன சந்தர்ப்பவாதமும் சிங்களப் பேரினவாதமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!

Kalaiyarasan said...

//பலஸ்தீனர்கள் சிறிலங்காவின் ஆக்கிரமிப்பு வெற்றிக்கு வாழ்த்தனுப்பி, ஐ.நா சிறிலங்காவின் இறைமையில் தலையிடக் கூடாது என்பர்கள். தமிழர்கள் நாங்கள் மட்டும் பலஸ்தீனர்களுக்கு சார்பாக இருக்க வேண்டுமா?//

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வெறியை, பேரினவாதத்தை, பாலஸ்தீன இனவழிப்பை ஆதரித்து பேசும் தமிழர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா?

Kalaiyarasan said...

ஒரு வாழ்த்து செய்தி அனுப்பியதற்காக பாலஸ்தீனர்களை தமிழர்கள் வெறுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் அனானி நண்பரே!
கிபீர் விமானங்களையும், ட்வோரா படகுகளையும், உயிர் குடிக்கும் குண்டுகளையும் அனுப்பிய இஸ்ரேலிய அரசை தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமா?
தமிழின அழிப்பில் நேரடி பங்களிப்பை செய்த இஸ்ரேலுக்காக சார்பாக தமிழர்கள் இருக்க வேண்டுமா?
சிறிலங்கா அரசுக்கு வாழ்த்து சொன்ன பாலஸ்தீனமா, அல்லது 40000 தமிழர்களைக் கொன்று குவிக்க உதவிய
இஸ்ரேலா? யார் தமிழரின் எதிரி?

Anonymous said...

//ஒரு வாழ்த்து செய்தி அனுப்பியதற்காக பாலஸ்தீனர்களை தமிழர்கள் வெறுக்க வேண்டும் என்று...//

பலஸ்தீனியர்களுக்கு வாழ்த்துச் செய்தி, தமிழர்களுக்கு மரணச் செய்தி! உங்களுக்கும் அது வாழ்த்துச் செய்தியாகத் தெரிகிறதாக்கும்!?

ஐ.நா யுத்த விசாரனை நடத்தக் கூடாது, அது சிறிலங்காவின் இறைமையில் தலையிடக் கூடாது என்ற பலஸ்தீனுக்கு தமிழர்கள் ஏன் ஆதரவளிக்க வேண்டும்.

//அல்லது 40000 தமிழர்களைக் கொன்று குவிக்க உதவிய
இஸ்ரேலா?//

தமிழின அழிப்பில் முன்னனி வகித்த இந்தியா, பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகள் உங்களுக்குத் தெரியாதோ? மகிந்த இம் மூன்று நாடுகளுக்கும் விஷேட நன்றி கூறியதை மறந்துவிட்டீர்களாக்கும்?!

Anonymous said...

//கிபீர் விமானங்களையும், ட்வோரா படகுகளையும், உயிர் குடிக்கும் குண்டுகளையும் அனுப்பிய இஸ்ரேலிய அரசை தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமா?//

கொத்துக் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், டாங்குகள், பல்குழல் ராக்கட்டுக்கள், ஆட்டிலெரிகள், மிக் மிகையொலி விமானங்கள், ராடர் இயக்ககுனர்கள், விமான ஓட்டிகள் எல்லாம் இஸ்ரேலில் இருந்தா வந்தன?

Kalaiyarasan said...

இஸ்ரேல் தமிழின அழிப்பில் ஈடுபட்டதை மறுக்கவில்லை என்பதை உங்களது பதிலில் இருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை. சம்பந்தமில்லாமல் வேறு ஏதோ பேசுகின்றீர்கள். மீண்டும் கேட்கிறேன்.

கிபீர் விமானங்களையும், ட்வோரா படகுகளையும், உயிர் குடிக்கும் குண்டுகளையும் அனுப்பிய இஸ்ரேலிய அரசை தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமா?
தமிழின அழிப்பில் நேரடி பங்களிப்பை செய்த இஸ்ரேலுக்காக சார்பாக தமிழர்கள் இருக்க வேண்டுமா?

Anonymous said...

//தமிழின அழிப்பில் நேரடி பங்களிப்பை செய்த இஸ்ரேலுக்காக சார்பாக தமிழர்கள் இருக்க வேண்டுமா?//

தமிழின அழிப்பில் நேரடி பங்களிப்பை செய்த அமெரிக்காவின் ஜனாதிபதிக்காக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பும், அதே மண்ணில் தமிழீழ நாடு கடந்த அரசு இயங்கும்போது இஸ்ரேல் சார்பு நிலையெடுப்பதில் என்ன தவறு? தமிழீழ நாடு கடந்த அரசும், தமிழீழத்திற்கான போராட்டமும், இலங்கை அரசுக்கெதிரான யுத்தக் குற்றமும் இலங்கைக்கு உதவிகள் வழங்கிய அமெரிக்கா, ஜரோப்பா, அவுஸ்ரேலியா ஆகிய முதலாளித்துவ நாடுகளில்தான் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கான சாத்தியமும் சிறிதளவான முன்னேற்றமும் அங்குதான் ஏற்றபடுகின்றன, மாறாக இந்தியா, கொமினிச நாடுகள் மற்றும் அரபு நாடுகளில் இல்லை என்பதை மறுக்க முடியாது. அவை இன்னும் இலங்கையரசுக்கு ஆதரவளித்துக் கொண்டுதான் உள்ளன.

Anonymous said...

அரபு நாடுகள் தமிழ்ப் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கத்தான் வேண்டும். ஏனெனில், தமிழ்ப் புலிப் பயங்கரவாதிகள் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்களை ஈவிரக்கமின்றிக் கொலை செய்த விதம் இன்னும் அவர்களுக்குத் தெரிகிறது. மேலும், வடக்கிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களில் வாழும் முஸ்லிம்களின் பரிதாப நிலையையும் கருத வேண்டும். பயங்கரவாதத் தலைவனாக இருந்த பிரபாகரனின் கொடுங்கோன்மைக்கு அவை இன்னும் சாட்சிகளாக இருக்கும் நிலையில், ஈழத்து முஸ்லிம்களைத் தம் சகோதரர்களாகக் கருதும் இஸ்லாமிய சகோதரத்துவ அரபிகள், இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பது நியாயம்.

sivakumar said...

//தமிழின அழிப்பில் நேரடி பங்களிப்பை செய்த அமெரிக்காவின் ஜனாதிபதிக்காக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பும், அதே மண்ணில் தமிழீழ நாடு கடந்த அரசு இயங்கும்போது இஸ்ரேல் சார்பு நிலையெடுப்பதில் என்ன தவறு? // இதன் மூலம் ஒரு தவறைக்காட்டி உங்களது தவறை நியாயப்படுத்துகிறீர்கள். அந்தக் கொலைகாரனை ஆதரிக்கும்போது, நான் இந்தக் கொலைகாரனை ஆதரிப்பதில் என்ன தவறு என்று சொல்கிறீர்களா? வாழ்த்துச்செய்தி அனுப்பியவனை விட ஆயுதம் அனுப்பியவன் நல்லவனா? அவர்கள் மறைமுக ஆதரவளித்த அமெரிக்கா மட்டுமல்லாமல் நேரடிக் குற்றவாளியான இந்தியாவைக்கூட ஆதரிக்கிறார்கள். இங்கு இஸ்ரேல், இந்தியா, அமெரிக்கா, இலங்கை அரசு என யாரை ஆதரித்தாலும் அது ஈழத்தமிழர்க்கு எதிரானதே.
//தமிழீழ நாடு கடந்த அரசும், தமிழீழத்திற்கான போராட்டமும், இலங்கை அரசுக்கெதிரான யுத்தக் குற்றமும் இலங்கைக்கு உதவிகள் வழங்கிய அமெரிக்கா, ஜரோப்பா, அவுஸ்ரேலியா ஆகிய முதலாளித்துவ நாடுகளில்தான் முன்னெடுக்கப்படுகின்றன// காரணம் போருக்குப் பின்பு இப்போது இந்தியா - சீன வல்லரசுகள் இலங்கையை தமக்குள் பங்கு போட்டுக்கொண்டுள்ளன. மேற்குலகின் ஆதிக்கம் இலங்கையில் முற்றிலும் தகர்ந்து போயுள்ள நிலையில் மீண்டும் காலூன்றவே போர் நடக்கும்போது வேடிக்கை பார்த்துவிட்டு, போர்க்குற்ற விசாரணை வேண்டும், நாடுகடந்த தமிழீழ அங்கீகரிப்பு என்ற நாடகமாடுகின்றன.
//இந்தியா, கொமினிச நாடுகள் மற்றும் அரபு நாடுகளில் இல்லை// தற்போது சீனா, இந்தியாவிற்கு அமைதியான இலங்கைதான் தேவை. இனி போராட்டம், போர் என்பவைகள் அவர்களின் முதலீடுகளைப் பாதிக்கும் என்பதால்தான் புலிகளின் மீதான தடையைக் கூட விலக்க மறுக்கிறது இந்தியா

சீனு said...

உங்கள் பிரச்சினை யூதர்கள். அதை வெளிப்படையாக, நேர்மையாக சொல்லிவிட்டு போங்கள். அதை விட்டு தலையை சுத்தி காதைத் தொடும் வகையில் இடையில் கிருத்துவ சப்போர்ட். கொஞ்சமாவது நேர்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

Anonymous said...

@தமிழ் வினை

//ஈழத்து முஸ்லிம்களைத் தம் சகோதரர்களாகக் கருதும் இஸ்லாமிய சகோதரத்துவ அரபிகள், இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பது நியாயம்.//

இந்த பின்னூட்டலைப் பார்த்தீர்களா? சத்துருக்கொண்டான் படுகொலை மடடும் இவருக்குத் தெரியவில்லை. ஆனால் புலிகளின் படுகொலைகள் மட்டும் தெரிகிறது. "இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பது நியாயம்" என்பதுதான் இவர் போன்ற பலரது நியாயம். ஆனால் நம்மவர்கள்தான் கண்டமூடித்தனமாக பலஸ்தீனுக்கு ஆதரவளிக்க முயல்கிறார்கள்.

Anonymous said...

//தலையை சுத்தி காதைத் தொடும் வகையில் இடையில் கிருத்துவ சப்போர்ட். கொஞ்சமாவது நேர்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.//

அவருக்கு யூதர்களை எதிர்க்க வேண்டும். அதுதான் குறி. தமிழனை விற்றாவது அதை நிறைவேற்ற வேண்டும். "ஈழத்து முஸ்லிம்களைத் தம் சகோதரர்களாகக் கருதும் இஸ்லாமிய சகோதரத்துவ அரபிகள், இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பது நியாயம்." என்று தெளிவாகச் சொல்லியும் அவர் பலஸ்தீனுக்குத்தான் ஆதரவு. உள்நாட்டு நெருக்கடியில் வாழாதவருக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. நான் என்ன சொல்ல வருகின்றேன் என்பது விளங்கும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

//தமிழ்ப் புலிப் பயங்கரவாதிகளுக்கு//

//பயங்கரவாதத் தலைவனாக இருந்த பிரபாகரனின் கொடுங்கோன்மைக்கு//

பலஸ்தீனுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதன் யதார்த்தம் யாராவது உண்மையான தமிழனுக்கு விளங்குகிறதா?

Kalaiyarasan said...

அனானிக்கு,
பாலஸ்தீனர்களை இஸ்லாமியர்களாக மட்டும் பார்க்காதீர்கள். தமிழர்கள் என்றால் அவர்கள் எல்லோரும் இந்துக்களா?
தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த இஸ்ரேலை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்? அப்படிக் கூறுபவர்களை நீங்கள் தமிழராக ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது அப்படியானவர்களை தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்களா? கிபீர் விமானக் குண்டு வீச்சினால் தமது உறவினர்களை இழந்த, அல்லது அவயங்களை இழந்து ஊனமான ஈழத் தமிழர்கள் இதைக் கேட்டால் என்ன நினைப்பார்கள்? போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை கொஞ்சமாவது புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

Anonymous said...

//தமிழ்ப் புலிப் பயங்கரவாதிகளுக்கு//

//பயங்கரவாதத் தலைவனாக இருந்த பிரபாகரனின் கொடுங்கோன்மைக்கு//

//ஈழத்து முஸ்லிம்களைத் தம் சகோதரர்களாகக் கருதும் இஸ்லாமிய சகோதரத்துவ அரபிகள், இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பது நியாயம்.//

இதற்கெல்லாம் என்ன அர்த்தம்???

தமிழ்-முஸ்லிம் கலவரத்தில் எனது உறவினர்கள் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள். அங்கேயிருந்து இஸ்லாமிய சகோதரத்துவ அரபிகள், இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பது நியாயம் என்று கருத்துச் சொல்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பலஸ்தீனை நாங்கள் ஆதரவளிக்க வேண்டுமா? தமிழ்-முஸ்லிம் கலவரத்தின் பாதிப்பு பற்றி உங்களுக்கு அனுபவம் இருக்கிறதா? என் சிறுவயதில் முஸ்லிம் கும்பலிலிருந்து கடவுள் துணையால் தப்பித்தேன். இந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? நான் தமிழன் இறப்பது பற்றி உங்களுக்கு அக்கறையில்லை. ஆனால் பலஸ்தீனியன் மீதுதான் கரிசனை. தெளிவாக பதில் சொல்லுங்கள் நீங்கள் தமிழனா முஸ்லிமா?

Anonymous said...

தமிழ்ப் புலிப் பயங்கரவாதிகள் என்றால் சிலருக்கு நொந்துவிடுகிறது. அவர்களென்ன சிங்களப் புலிகளா? பயங்கரவாதச் செயல் புரிந்த பிரபாகரன் நிச்சயமாக ஒரு பயங்கரவாதி. புலிகள் தமிழினத்தின் ஏக பிரதிநிதிகளல்ல. இதை இலங்கையிலுள்ள ஏனைய தமிழர் இயக்கங்கள் கூறுகின்றனவே? ஆனந்த சங்கரி அவர்கள் கூட, புலிப் பயங்கரவாதிகளை அவர்களுடைய பயங்கரவாதச் செயல்களின் காரணமாக எதிர்ப்பதாகவே கூறுகிறார். அவர் முஸ்லிமா தமிழரா? இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவர் தமிழ்ப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றுதான் கூறுகிறார். அவர் என்ன, தமிழரா முஸ்லிமா?

தமிழ்ப் புலிகள் என்பது ஒன்றும் புதிய பெயரல்ல. பன்னாட்டு ஊடகங்கள் Tamil Tigers என்றுதான் அழைக்கின்றன. அது பிழையான சொல்லா அல்லது அதனை பயங்கரவாதி பிரபாகரன் அங்கீகரித்தானா என்பது தெரியவில்லை. அவனைப் பயங்கரவாதி என்று இந்தியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உட்பட பல நாடுகளும் பட்டியலிட்டதைத் தெரியாதோ? இப்பொழுதும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த தமிழர்கள், புலிகள் தங்களுடைய சொத்துக்களைப் பலவந்தமாக அபகரித்ததாகக் கூறியிருப்பது பிரபாகரனின் கொடுங்கோன்மைக்குச் சான்றல்லவா?

நான் தமிழனா என்று கேட்கும் மடத்தனமான கேள்விக்கு எப்படிப் பதிலளிப்பது? இங்கு தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் எவரிடம் கேட்டாலும், "நான் தமிழன், ஆனால் முஸ்லிம்" என்பதுதான் பதில்.

நியாயத்தைக் கூற எவனும் எதுவுமாக இருக்க வேண்டியதில்லை. இலங்கை முஸ்லிம்கள் அவதிப்பட்டால் அல்லது தங்களுக்கு ஆதரவளிக்காத தமிழர்கள் அவதிப்பட்டால், அது தமிழ்ப் புலிப் பயங்கரவாதிகளுக்கு மிக இனிக்கிறது போலும்.

Kalaiyarasan said...

அனானி நண்பரே,
ஒருவரது பயங்கரவாதி இன்னொருவனது விடுதலைப் போராளி.
பயங்கரவாத செயல்களை கண்டிப்பது வேறு, ஒட்டு மொத்தமாக ஒரு அமைப்பை பயங்கரவாதி என்று முத்திரை குத்துவது வேறு. புலிகளுக்கும் பின்னால், அவர்களை ஆதரிக்கும் ஒரு மக்கள் திரள் இருந்ததை மறந்து விடலாகாது.
ஒருவரது கருத்தை நிராகரிப்பதாயின் அதற்கு மாற்றான கருத்தை முன்வையுங்கள். விவாதம் ஆரோக்கியமாக இருக்கும்.

Anonymous said...

//நான் தமிழனா என்று கேட்கும் மடத்தனமான கேள்விக்கு எப்படிப் பதிலளிப்பது?//

நான் கேள்வி கேட்டது கலையரசனிடம், பதில் அனானியாக வருகின்றது. நல்ல நாடகம் நடத்துங்கள் கலையரசன்.

எப்போதிருந்து மகிந்த கூட்டத்துடன் இணைந்து சதி வேலையில் ஈடுபடுகிறீர்கள்? உங்களைப் போல மானங்கெட்ட தமிழர்களைவிட புலிகள் மேலானவர்கள். அந்நிய நாட்டில் ஒளிந்து கொண்டு காகித கத்தி வைத்திருக்கும் உங்களைவிட தமிழீழ இலட்சியத்திற்கான உயிரைவிட்டவர்களின் செருப்புக்கும் நீங்கள் தகுதியற்றவர்கள்.

Anonymous said...

நீங்கள் சொல்வது புரிகிறது, கலையரசன். நானும்கூட ஒரு காலத்தில் போராட்டத்துக்கு ஆதரவளித்தவன்தான். அவர்களுடைய செயல்களே அவர்களை வெறுக்கும்படி செய்துவிட்டன. நாய் விற்ற காசு குரைக்காது என்று கண்டபடி நடந்துகொள்ள அவர்கள் முனைந்தபோதே நானும் என்னுடைய ஆதரவை விலக்கிக்கொண்டேன். ஒரு காலத்தில் போராட்டத்துக்குச் சார்பாக ஆயுதமேந்திய பலர் இப்போது அதற்காக வருந்துகிறார்கள். இங்கு இஸ்ரேலிய சார்பெடுத்து நிற்கும் யாராவது பூசா முகாமிலிருக்கும் முன்னாள் புலிப் போராளிகளைச் சென்று பார்த்திருக்கிறார்களா? நான் அவர்களைப் பார்த்துப் பேசியிருக்கிறேன். பல வருடங்களாக பூசா முகாமிலிருந்தும் வெலிக்கடைச் சிறையிலிருந்தும் விடுதலையான பலரையும் நேரில் சந்தித்து நிலைமைகளை அறிந்துள்ளேன். அவர்களெல்லாரும் மனவிரக்தியுடன் காணப்படுகிறார்கள். அவர்கள் யாரும் இன்று தமிழ்ப் புலிகளுக்கு ஆதரவளிப்பதில்லை. பலஸ்தீனர்கள் மீது அட்டூழியம் புரியும் இஸ்ரேலை சில தமிழர்கள் நியாயப்படுத்துவது மிக்க மன வேதனை அளிக்கிறது. அவர்கள் மட்டும்தான் தமிழர், மற்றவரெல்லாம் எதிரியின் தோழரென அவர்கள் கூறும்போது அதனை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? சிறுவயதிலிருந்தே தமிழ் தமிழ் என்று தமிழைப் போற்றி வளர்த்தனர் என் பெற்றோர். முன்னாள் புலிகளோ தாம் மட்டும்தான் தமிழரென்று பிரச்சாரம் செய்வது அவர்களது இழி செயலல்லவா? நான் முஸ்லிமா தமிழனா என்று கேட்கிறார்கள். இது தேவையற்ற கேள்வி. தமிழ்ப் போராட்டத்தின் சார்பாக முதலிலேயே களமிறங்கிப் போராடி மடிந்தவர்களில் எத்தனையோ முஸ்லிம்களும் அடங்குகின்றனர். அவர்களில் இலங்கையர்கள் மட்டுமல்ல, தமிழ் நாட்டவர்களும் இருந்தனர். தமிழ்ப் புலிகள் முஸ்லிம்களுக்கு அநியாயம் விளைவித்த பின்னரும் முஸ்லிம்கள் புலிகளுக்குச் சார்பாக இருக்க வேண்டுமென நினைப்பது நியாயமா?

Anonymous said...

நண்பர் கலையரசன் இங்கு நாடகம் நடத்தவில்லை. வீணாக அவரைப் பழிக்க வேண்டாம். அந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டதாகவும் கருதித்தான் நான் இங்கு பின்னூட்டமிட்டேன்.

Kalaiyarasan said...

//நான் கேள்வி கேட்டது கலையரசனிடம், பதில் அனானியாக வருகின்றது. நல்ல நாடகம் நடத்துங்கள் கலையரசன். //

உங்களுக்கு நல்ல கற்பனை வளம் இருக்கிறது.
நீங்கள் அனானியாக வந்து போடும் பின்னூட்டங்களும் நானே எழுதியிருக்க வாய்ப்பில்லையா? நீங்கள் நினைப்பது போல மற்றவர்கள் நினைக்க மாட்டார்களா? இந்த குளறுபடியை தடுக்க வேண்டுமானால் நீங்கள் இனிமேல் அனானியாக பின்னூட்டமிடாதீர்கள். உங்கள் பெயரை பாவியுங்கள். கலையகத்தில் இன்று முதல் அனானியாக பின்னூட்டமிடும் வசதியை இரத்து செய்கிறேன். ஏதாவது கருத்துக் கூற விரும்பினால் சொந்த ID யை பாவியுங்கள்.

மேலும் நீ தமிழனா, முஸ்லீமா என்று கேட்பது ஒரு இனவாதியாக மட்டுமே இருக்க முடியும். இனவாதிகளுக்கு பதில் கூற நான் கடமைப் பட்டவனல்ல. தமிழின அழிப்பில் பங்கேற்ற இஸ்ரேலை ஆதரிக்கும் ஒருவர், தமிழர், புலிகள் சார்பாக பேசுவதாக கூறுவது வேடிக்கையானது.

Colvin said...

சகோ.கலையரசன் ஆரம்பத்திலிருந்தே உங்களிடம் இஸ்ரேல் தொடர்பாக நடுநிலை இல்லை. சான்றாக சர்வதேச பயங்கராதி பின்லேடன் கூறினான். நான் தான் அமெரிக்காவின் World Trade Center ஐ தகர்தேன் என்று.ஆனால் நீங்கள் எழுதுகிறீரகள் இல்லை இது இஸ்ரேலின் செயல் என்று. இதிலிருந்து உங்கள் நடுநிலையை உணரலாம்.

Colvin said...

பலஸ்தீன கிறிஸ்தவர்கள் இனசுத்திகரிப்பு செய்து கொலை செய்த பலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் குறித்து ஏதாவது எழுதியுள்ளீர்கள். அமெரிக்கா சவுதி முன்னார் ஈராக் போன்ற நாடுகளுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தையும் இன்னும் ரஷ்யா இஸ்ரேலிய போரின்போது அதற்கெதிராக அரபு நாடுகளுக்கு ஆயுதம் வழங்கியதையும் மறந்து விட்டீர்கள். வெறும் யூத எதிர்ப்பு தான் உங்கள்ஆக்கங்களில் விளங்குகின்றது. ஒரு முறை இஸ்ரேலில் பஸ்தீனம் போய்விந்துவிட்டு எழுதுங்கள். அப்போது உங்களுக்குத் தெரியும் யார் பயங்கரவாதிகள் என்று

Colvin said...

கிறிஸ்தவர்களை ஆலங்களுக்குள்ளே வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கும் போது கொன்றுகுவிக்கும் அல்குவைதா பயங்கரவாதிகளை என்ன செய்யலாம் இஸ்லாமிய அனாமி அவர்களே. இஸ்ரேலில் இதுபோன்று நடைபெறுகிறதா? இஸ்ரேலில் யாரும் எந்த சமயததையும் பின்பற்றலாம் சவூதியில் முடியுமா?இஸ்ரேலியன் சொந்த காலில் நிற்கிறான். அரபுகளோ மேற்கை எதிர்பார்த்த வண்ணமே உள்ளான்.

Kalaiyarasan said...

சகோ. கொல்வின் தவறான கருத்துகளை கொண்டு வந்து என் மீது அவதூறு செய்யாதீர்கள்.
//சர்வதேச பயங்கராதி பின்லேடன் கூறினான். நான் தான் அமெரிக்காவின் World Trade Center ஐ தகர்தேன் என்று.//
பின்லாடன் அவ்வாறு கூறியதாக நீங்கள் தான் முதன் முதலாக தெரிவிக்கின்றீர்கள். CNN மட்டும் ஒரு தடவை பின்லாடன் வீடியோவை காட்டி அவ்வாறு தவறாக மொழித்திரிப்பு செய்திருந்தார்கள். இதைத் தவிர மற்றவை எல்லாம் ஊகங்கள் மட்டுமே.
//ஆனால் நீங்கள் எழுதுகிறீரகள் இல்லை இது இஸ்ரேலின் செயல்//
நான் அப்படி எங்கே எழுதினேன்? நிரூபிக்க முடியுமா? சம்பவம் நடந்த இடத்தில் வீடியோ பிடித்துக் கொண்டிருந்த சில இஸ்ரேலியர்கள் கைது செய்யப்பட்டார்கள். இது போன்ற சம்பவங்களை மட்டுமே குறிப்பிட்டேன்

Colvin said...

//பலஸ்தீன அரபுக் கிறிஸ்தவர்களும் யூதர்களும் இன்றும் ஓரணியில் நின்று //

Good Joke
ஹமாஸ் இஸ்லாமியப் பயங்கரவாத குழுக்களினால் கிறிஸ்தவர்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். பலரை கொலை செய்தள்ளதுடன் சொந்த இடங்களிலிருந்தே அடித்துத் துரத்திய கொடூர பயங்கரவாதிகள். அப்புறவும் எப்படி ஐயா ஒனறு சேர்ந்து போராட முடியும்.

Kalaiyarasan said...

சகோ. கொல்வின், எனது நடுநிலைமையை விமர்சிக்கும் நீங்கள் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டாமா? உங்கள் வார்த்தைகளைப் பார்த்தால் ஒரு கிறிஸ்தவ மத அடிப்படைவாதி பேசுவதைப் போல உள்ளது.

Kalaiyarasan said...

சகோ. கொல்வின்
யூத இனவெறியர்களின் பிரச்சாரத்தை உங்களது கருத்து போல திணிக்கக் பார்க்கிறீர்கள்.
இனவாதம் பேசுவது தானா உங்களது நடுநிலைமை?

Colvin said...

அப்படியானால் ஹமாஸ் பயங்கரவதிகள் கிறிஸ்தவர்களை கொலை செய்யவில்லை என்கிறீர்களா?

முதலில் சொல்லுங்கள் நீங்கள் நடுநிலையாக நடக்கிறீர்களா? சதா எப்போது பார்த்தாலும் யூத எதிர்ப்பு. உங்கள் கட்டுரையை தொடர்ச்சியாக வாசிக்கும் ஒரு வாசகர் என்ற ரீதியில் கருத்துக் கூறுகிறேன்

யூதமதவெறியர்களின் செயலையும் கண்டிக்கிறேன். அதேவேளை ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளின் செயல்களை மறைப்பதன் மூலம் உங்கள் நடுநிலை கேள்விக்குறியாகின்றது. இஸ்ரேலில் புகுந்து பஸ்ஸூக்குள் குண்டுத்தாக்குதலும் சதா ரொக்கட் தாக்குதல்களும் நடத்திக் கொண்டிருந்தால் அதனை ஆதரிக்க வேண்டும் என்கிறீர்களா?

நான் மதஅடிப்படை வாதியென்றால் நீங்கள் யூதஎதிர்ப்பு வாதி என்று நான் நினைக்காலாமா?

உண்மையில் உங்கள் ஆக்கங்கள் சிறந்தவை என பலருக்கும் கூறியுள்ளேன். ஆனால் சதா எப்போது பார்த்தாலும் உங்களின் யூத எதிர்ப்பானது நீங்கள் நடுநிலை விமசகர் இல்லை என கூறும்

Colvin said...

சகோ. கலையரசன் எப்போதாவது இஸ்ரேலியர்களை ஏதாவது ஒரு செயலை புகழ்ந்து எழுதியுள்ளீர்களா? நாடு அற்ற சமூகமாக இருந்து இத்தனை அரபுக்களுக்கு மத்தியில் அவர்கள் சிறப்பாக வாழ்கின்றார்கள். எ-டு கல்வி, மருத்துவம், விஞ்ஞானதுறை
நீங்கள் குறிப்பிடும் பிரகாரம் பஸ்தீன அகதிகளுக்கு இந்த அரபுநாடுகள் என்ன நன்மை செய்தன என்று சிந்தித்துப் பாருங்கள். இதைவிட இஸ்ரேலில் இருக்கும் அரபுகள் கல்வியிலும் வாழ்க்கைத் தரத்திலும் உயர்ந்திருக்கிறார்கள்.

Colvin said...

//யூத இனவெறியர்களின் பிரச்சாரத்தை உங்களது கருத்து போல திணிக்கக் பார்க்கிறீர்கள். //
எனது வார்த்தையால் உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள். எல்லோருக்கும் ஒரு நியாயம்தான். ஒருவேளை நீங்கள் புலிகளை பாராட்டி இலங்கை அரசை திட்டியடி இருந்தால் அல்லது இதன் மறுதலையாக இருந்தாலும் விமர்சனம் செய்வேன்.

செய்தி எழுதும்போது எப்போதும் நடுநிலை காக்கப்பட வேண்டும்.

Colvin said...

//யாழ் நூலகம் சிங்கள இனவெறியர்களின் செயலுக்கு சாட்சியமாக புனரமைக்காமல் விடப்பட்டது.//

புணரமைக்கப்பட்டு விட்டது இது ஒரு நல்லவிடயம். ஏன் பழையகோபாதாபங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். யாழ்நூலக புணரமைப்பில் இலங்கை அரசினதும் சிங்கள மக்களின்தும் பங்களிப்பு அபரிமிதமானது.

Colvin said...

//இஸ்ரேலின் பேரினவாத வெறியை, பாலஸ்தீன இனச் சுத்திகரிப்பை ஆதரிக்க கூறுகின்றீர்கள்.//
நான் அப்படி கூறினேனா? மேலே வாசித்துப் பாருங்கள். யூதப்பயங்கரவாத்தையும் கண்டிக்கின்றேன் என்று எழுதியுள்ளேன். ஆனால் உங்கள் ஆக்கங்கள் அப்படியில்லை. எப்போதும் இஸ்ரேலியர்களை பயங்கரவாதிகளாகவும் பலஸ்தீனர்களை விடுதலைப் போராளிகளாவும் சித்தரி்க்கும். அதற்காக பலஸ்தீனர்கள் சுதந்திரத்திற்கு பாத்திரர்கள் அல்ல என தவறாக பொருள் கொள்ள வேண்டாம். கொஞ்சமாவது நடுநிலையாக எழுதுங்கள் என கேட்கிறேன். ஏனென்றால் நான் உங்கள் நீண்டகால வாசகன். இதுவரை ஓரிரு பின்னூட்டங்களே இட்டுள்ளேன். ஆயினும் சகோதரரே உங்கள் மனம் இதனால் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

Kalaiyarasan said...

சகோ. கொல்வின், யூதர்கள் மற்ற மக்களுக்கு எந்த தீங்கும் செய்யாமல் முழு உரிமையுடனும் வாழ்வதற்கு உரித்துடையவர்கள். ஆனால் இஸ்ரேலிய பேரினவாதம் பாலஸ்தீனர்களின் நிலங்களை பறித்தது, பாலஸ்தீன மக்களை இஸ்ரேலில் இருந்து இனச்சுத்திகரிப்பு செய்தது, தொடர்ந்து அந்த மக்களை ஆக்கிரமிப்புனுள் வைத்துள்ளது. இவை எல்லாம் ஐ.நா. மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மைகள். இவற்றை எல்லாம் நியாயம் என்று ஒருவர் கூற
முடியுமா? இஸ்ரேலின் பேரினவாத வெறியை, பாலஸ்தீன இனச் சுத்திகரிப்பை ஆதரிக்க கூறுகின்றீர்கள். உங்களைப் பொறுத்த வரை அது தான் நடுநிலைமை.

ஐ.நா. இஸ்ரேல் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தால், "ஐ.நா. யூத எதிர்ப்பு சபை" என்று யூத இனவாதிகள் முத்திரை குத்துவார்கள். அதையே தான் நீங்களும் செய்கின்றீர்கள். உண்மை கசக்கும் என்பதற்காக உண்மையை கூறுபவர் மீது "யூத எதிர்ப்பாளர்" பட்டம் சூட்டுகிறார்கள்.

இலங்கை அரசின் பேரினவாத வெறிச் செயல்களை விமர்சித்தால், புலிகளின் பயங்கரவாதத்தை பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். அதே போன்று தான் நீங்களும் கேட்கிறீர்கள். முதலில் நீங்கள் இஸ்ரேலின் பேரினவாதம், இனச் சுத்திகரிப்பு, ஆக்கிரமிப்பு எல்லாம் தவறு என்று நீங்கள் ஏற்றுக் கொண்டால், ஹமாசின் பயங்கரவாதம் குறித்து பேச தகுதியுடைவராவீர்கள். அப்படி ஏற்றுக் கொள்ளாதவர், இஸ்ரேலின் பேரினவாத பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்

Kalaiyarasan said...

சகோ. கொல்வின். ஹமாஸ் செய்வதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கு எதிரான பாலஸ்தீனப் பயங்கரவாதம் அது. பயங்கரவாதத்திற்கு இன்னொரு பயங்கரவாதம் தீர்வல்ல. முதலில் நிலைமையை புரிந்து கொள்வோம். அதன் பிறகு தீர்வைக் கூறுவோம். என்னைப் பொறுத்த வரை யூதர்களும், பாலஸ்தீனர்களும் சம உரிமை கொண்ட பிரஜைகளாக வாழும் புதிய தேசம் ஒன்றை ஆதரிக்கிறேன். இன்று வரை பாலஸ்தீன மக்களுக்கு குடியுரிமை இல்லை என்ற உண்மையை நீங்கள் நிராகரிக்க முடியாது.
உங்களுடைய நிலைமையில் இருந்து சிந்தியுங்கள். உங்களுக்கு குடியுரிமை இல்லாவிட்டால் எவ்வளவு கஷ்டப் படுவீர்கள்? உங்களுக்கு ஒரு நீதி, பாலஸ்தீனர்களுக்கு வேறொரு நீதியா?

Colvin said...

சகோ.கலையரசன் நான் உங்கள் கருத்திலிருந்து மாறுபடவில்லை. பலஸ்தீன மக்களின் துன்பம் துயரம் இலங்கையன் என்ற முறையில் அறிந்துள்ளேன். ஆனால் உங்களின் தொடர்ச்சியான யூதஎதிர்ப்பு நீ்ங்கள் நடுநிலையான விமசகர் இல்லை. அதாவது ஒரு பக்கசார்பு. பலஸ்தீனத்தை மட்டும் ஆதரிப்பதாக உள்ளது. சரி எங்காவது நீங்கள் இஸ்ரேல் மக்களுக்கு பலஸ்தீனர்கள் அதாவது ஹமாஸ் இயக்கத்தினர் செய்த கொடூர செயல்களையும் உள்ளுரில் கிறிஸ்தவர்களுக்கு செய்த கொடூரங்களையும் எழுதியுள்ளீர்களா காண்பியுங்கள் பார்க்கலாம். அதற்காக தயவுசெய்து மீண்டும் கூற வேண்டாம் நான் யூத ஆதரவாளன் என்று. நான் பேசவருதெல்லாம் நடுநிலைமை குறித்து

Colvin said...

\\இலங்கை அரசின் பேரினவாத வெறிச் செயல்களை விமர்சித்தால், புலிகளின் பயங்கரவாதத்தை பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். அதே போன்று தான் நீங்களும் கேட்கிறீர்கள்\\

நான் இப்படியான கருத்தை ஒருபோதும் கூறமாட்டேன். புலிகள் கொழும்பில் நடத்திய குண்டுத்தாக்குதலில் எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களின் வேதனைகளை அறிந்தவன் நான்.
தயவு செய்த வாதத்தை திசை திருப்ப வேண்டாம்

Kalaiyarasan said...

சகோ. கொல்வின். நான் எழுதி வரும் தொடர் ஒன்றை மையமாக வைத்து பேசுகின்றீர்கள் எனக் கருதுகிறேன். தமிழர்கள் மத்தியில் இஸ்ரேல் குறித்து தவறான கருத்துகள், மாயைகள் உள்ளன. அவற்றை களைவது என் பொறுப்பு. எனது கட்டுரைகளில் வந்த தகவல்கள் தவறு என்றால் அதைச் சுட்டிக் காட்டலாம்.
இஸ்ரேல் 1948 ல் உருவான போதே, இனப்பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. ஹமாஸ் அப்போதே தோன்றி விட்டதா? இஸ்ரேலிய அடக்குமுறைக்கு எதிர்வினையாக எழுந்த பாலஸ்தீன போராட்டம் எல்லாம் தோல்வியடைந்த காலத்தில் தான் ஹமாஸ் தோன்றியது. ஆகவே இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை குறித்து பேச நேர்ந்தால் எடுத்தவுடனே நாம் ஹமாஸ் பற்றி பேச முடியாது. ஒவ்வொரு தடவையும் ஐ.நா. பாதுகாப்புச் சபை இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் போது, அமெரிக்கா முன் வைக்கும் வாதம் போலவே நீங்கள் பேசுகின்றீர்கள். அமெரிக்காவை பொறுத்த வரை முதலில் பாலஸ்தீன பயங்கரவாத்தை கண்டித்து விட்டு தான் இஸ்ரேலை கண்டிக்க வேண்டுமாம்.

ஹமாஸ் ஒரு இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர்கள் பாலஸ்தீனத்தில் இஸ்லாமிய மதவாத ஆட்சியைக் கொண்டு வந்தால் அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். ஹமாஸ் குண்டுவெடிப்புகள் யூத பொதுமக்களை இலக்கு வைத்து கொல்வதையும் நான் ஏற்கவில்லை. குண்டுவெடிப்பு இஸ்ரேலிய ஆட்சியாளர்களை குறி வைத்து தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. ஆனால் நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். யூத மத அடிப்படைவாதி என்றாலும், கிறிஸ்தவ மத அடிப்படைவாதி என்றாலும், இஸ்லாமிய மத அடிப்படைவாதி என்றாலும், ஒரே மாதிரியாக தான் சிந்திக்கின்றனர். தங்கள் மதத்தவர்களுக்கு இழைக்கும் அநீதி மட்டுமே அவர்கள் கண்ணுக்கு தெரியும். அல்லது அவர்கள் எல்லாவற்றையும் மதவாத கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்.

Colvin said...

நான் மனிதத்தை நேசிக்கிறேன். வாசகர் என்ற ரீதியில் நாம் தான் கருத்து கூற வேண்டும். உங்கள் கட்டுரை இஸ்ரேல் விடயத்தில் நடுநிலை பிறழ்கின்றது. )ஒரு பக்கச் சார்பு)

மீண்டும் கூறுகிறேன் இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு செய்யும் கொடூரங்களை ஏற்றுக் கொள்கிறேன்.

இத்துடன் என் பின்னூட்டத்தை முடித்துக் கொள்கிறேன். இவ்வளவு நேரம் பொறுமையாக பதில் தந்தமைக்கு மிக்க நனறி சகோதரரே

கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.

மனசாட்சி said...

தோழர் கலை,

எனக்கு ஒரு சிறிய சந்தேகம். தமிழர்கள் என்றால் யார் ? சகோதரர்களின் கூற்றுப்படி தமிழ் ஒரு மதம் என்றே கருதுகின்றனர் போலும். அப்படி இல்லையெனில் ஏன் இலங்கை முஸ்லீம்களை தமிழர்கள் என்று அழைப்பது இல்லை. இலங்கை முஸ்லீம்கள் அனைவரும் தமிழ் மொழியையே தாய் மொழியாய் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்கள் என்று அழைப்பது தமிழை தாய்மொழியாய் கொண்ட மக்களைத்தானே. இந்துக்களை மட்டும் அழைப்பது இல்லையே ? அப்படி இருக்கும் பட்சத்தில் இலங்கையில் மாத்திரம் இப்படி பிரித்து அழைக்கப்படுவதன் காரணம் என்ன என்று அறிய ஆவலாகவுள்ளேன்.

Kalaiyarasan said...

மனசாட்சி, உங்கள் சந்தேகம் நியாயமானதே. இலங்கையின் இனப்பிரச்சினை அவ்வளவு எளிதானதல்ல. மிகவும் சிக்கலானது. இலங்கைக்கு வெளியே வாழும் மக்களுக்கு சரியான தகவல்கள் கிடைப்பதில்லை. யாருமே பிரச்சினையை சரியாக ஆராய்வதில்லை.
இப்போதைக்கு சுருக்கமான விளக்கம் தருகிறேன். ஈழத்தமிழர் (முன்பு இலங்கைத்தமிழர் என்று அழைத்தார்கள்) என்றால் அதன் அர்த்தம் என்ன? வடக்கு கிழக்கு மாகாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். சைவ சமயத்தை, அல்லது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள். வட-கிழக்கை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் தமிழர்கள் அல்ல. சைவ-கிறிஸ்தவ தமிழர்கள் அவர்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் பிற்காலத்தில் முஸ்லிம்கள் என்ற தேசிய இனம் உருவாகியது.

Madhu said...

இந்த குறை பார்வைக்கு காரணம், எல்லாவற்றையும் மத கண் கொண்டு பார்பதே. தமிழகத்தில், பார்பனர்கள் இதே போன்ற கருத்தை பரப்புவார்கள் "தமிழ் முஸ்லிம்கள் அரபியர்கள் என்பது போல" . முஸ்லிம்களும் தங்களை தமிழர்களாக கருதுவதும் இல்லை. தமிழர் என்றால் இந்து என்ற கண்ணோட்டம் முஸ்லிம்களிடமும் இருக்கிறது.முஸ்லிம்கள் பாலஸ்தீனிய போராட்டத்தை ஆதரிக்க காரணம் அங்கு பாதிக்கபடுவது முஸ்லிம்கள் என்பதால் தான். புலிகளை எதிர்க்க காரணம் புலிகள் முஸ்லிம்கள் அல்லர் என்பதால் தான்.(ஒருவேளை முஸ்லிம்கள் வெளிஎற்றபடாமல் இருந்திருந்தாலும் இதே நிலைதான் முஸ்லிம்களுக்கு).அதானாலேயே மற்ற இந்து கிருத்துவ தமிழ் மக்கள் முஸ்லிம்களை தமிழர்களாக பார்பதில்லை.