Sunday, October 11, 2009

மனிதரை உயிரோடு எரிக்கும் மூடநம்பிக்கை (திகில் வீடியோ)

கென்யா நாட்டின் மேற்குப்பகுதியில் "கீசி" இன மக்கள் வாழும் பிராந்தியத்தில் 15 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சுமார் 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீடுகளில் சோதனை நடத்தி இந்த 15 பேரையும் வெளியே இழுத்தெடுத்து. அவர்களை சூனியக்காரிகள் என குற்றம் சுமத்தி தெருவில் பலர் முன்னிலையில் உயிரோடு கொளுத்தியது. கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த திகில்சம்பவம், அரசாங்கத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க தூண்டியது. கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்தது. கிறிஸ்தவ மதம் அதிகாரம்செலுத்திய மத்திய கால ஐரோப்பாவில் நிலவிய "சூனியக்காரிகள் எரிப்பு வன்முறை", இன்று ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களிடையே பரவி வருகின்றது. மதம் வளர்க்கும் மூட நம்பிக்கைகளின் தீய விளைவுகளில் ஒன்று இது. அதிர்ச்சிதரும் "சூனியக்காரிகள் எரிப்பு" வீடியோவை இங்கே இணைத்துள்ளேன். எச்சரிக்கை : இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நன்று.
Kenya mob burns 15 women to death over witchcraft

18 comments:

தங்க முகுந்தன் said...

ஐயோ! எப்படி இது சாத்தியம் - கடவுளே! மிருகங்கங்களை விட மிக மோசமானவர்களாக இருக்கிறார்கள்!

Anonymous said...

sir, ithellam pazhaya kathai,ethavathu puthusa pesanununu pesathinga, thyavu seithu arokkikiyamana pathivu ehuthunga, neenga france il nadantha agathigal pathivu evvalavu nonsense theriyuma?
summa kanda sites padithuvittu ezhutha vendam please

madan
0033 6 64 273757

ஆ.ஞானசேகரன் said...

என்ன கொடுமை... மதம் மதம்பிடித்து அழைகின்றதே

Sathis Kumar said...

கண்களில் நீரைத் தவிர பேசுவதற்கு வார்த்தை எழவில்லை கலை.. இக்கொடுமைகளைக் களைவதற்கு அந்நாட்டு சட்டங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? :(

கிரி said...

ரொம்ப கொடுமையாக உள்ளது

Anonymous said...

இதற்கு அய்யோ குய்யோ என்று பதறுபவர்கள் மதத்தை பற்றி பேசினால் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.

பார்ப்பன இந்துமதம் இதற்கு சற்றும் சளைத்ததல்ல, பாசிச‌ பயங்கரவாத நரமாமிச வெறியன் மோடியும் ஆயிரக்கணக்கான மக்களை தீயில் போட்டு தான் கொழுத்தினான், அப்போதெல்லாம் இந்த மென்மையான இதயம் படைத்த நடுத்தர வர்க்கத்திற்கு வலிக்கவில்லையா ?

வாயை மூடிக்கொண்டிருந்தால் நாளைக்கு உங்களுக்கும் இந்த‌ நிலை தான் ஏற்படும்!!

Osai Chella said...

மூடநம்பிக்கையை பெரியார் இங்கே எதிர்த்தது ஏன்? அப்பிரிக்காவில் நடந்தது என்ன? என்று எனது பேஸ்புக்கில் பதிந்துள்ளேன். மதங்களின் கொடூரம் உலகமக்களின் பார்வையை அடையவேண்டும்

புலவன் புலிகேசி said...

கொடுமையான விஷயம். மதம் பிடித்த மனிதர்(?)கள்

கோவி.கண்ணன் said...

கொடுமைங்க. மதவாத வெறியர்களாலும், சூனியக்காரர்களாலும் (சூனியக்காரர்களையும்) ஆயிரக்கணக்கில் மனிதர்கள் கொளுத்தபடுகிறார்கள். இறைவேதங்களில் சாத்தான்கள் எனச் சொல்லப்படுவது இந்த மதவெறியர்களைத்தான் போலும். ஆனால் அது தெரியாத, உணராத சாத்தான்களாகவே மதவெறியர்கள் இருக்கின்றனர்

Barari said...

ADA NEENGA VERE INDIA VIL ITHU SARVA SAATHAARANAM GUJRAATHTHIL NADAKKAVILLAIYA RAJASTHAANIL SATHI ENDRA PEYARIL PENGALAI KOLUTHTHAVILLAIYA.THALITHKALAI THEEYIL THALLAVILAYA ITHELLAM INDIYAAVIL PAZAKI PONA ONDRU.

Kalaiyarasan said...

இங்கே கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள். கென்யாவில் நடந்த கொடுமை, உலகம் முழுக்க நடக்கின்றன தான். இந்தியாவில் கூட இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் ஒரு வேளை இது போன்று வீடியோ படமாக்கப்படிருந்தால், தேசத்தில் பல மடங்கு அதிர்ச்சியை தோற்றுவித்திருக்கும். பலரின் மனச்சாட்சியை உலுக்கியிருக்கும்.

பதி said...

மதம் பிடித்த கொடூரங்கள்...

இவர்களை மிருகங்கள் என்று கூட அழைக்க இயலாது. ஏனெனில் எந்த ஒரு மிருக இனமும் இது போன்ற அல்ப சந்தோசத்திற்காகவும் மயிர் பெறாத கொள்கைகளுக்காகவும் சக இனத்தை அழித்து இரசிப்பதில்லை.

prem said...

ada pavingla, ipadi panitu, yepadi tha sapidringlo????

Anonymous said...

இதற்கு அய்யோ குய்யோ என்று பதறுபவர்கள் மதத்தை பற்றி பேசினால் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.

பார்ப்பன இந்துமதம் இதற்கு சற்றும் சளைத்ததல்ல, பாசிச‌ பயங்கரவாத நரமாமிச வெறியன் மோடியும் ஆயிரக்கணக்கான மக்களை தீயில் போட்டு தான் கொழுத்தினான், அப்போதெல்லாம் இந்த மென்மையான இதயம் படைத்த நடுத்தர வர்க்கத்திற்கு வலிக்கவில்லையா ?

வாயை மூடிக்கொண்டிருந்தால் நாளைக்கு உங்களுக்கும் இந்த‌ நிலை தான் ஏற்படும்!!

Anonymous said...

காந்தி பிறந்த குஜராத்தில் கூட ஆயிரக்ககணக்கான இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தன..!

RAGUNATHAN said...

அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ :(:(:(:(

mujahidsrilanki said...

1 "இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம் ஒரு எறும்பு அவரைக் கடித்தவிட்டது.அதனால் அவர் அந்த எறும்புக் கூட்டை எரிக்கச் சொன்னார்.அதனைக் கண்டித்து இறைவன் "ஒரு எறும்பல்லவா உன்னைக் கடித்தது முழக் கூட்டையும் ஏன் எரித்தீர்கள்" எனக் கேட்டான" என்று முஹம்மத் நபியவரக்ள சொன்னார்கள்
ஆதாரம் புகாரி:3319
2, நெருப்பைக் கொண்டு தண்டிக்க இறைவனுக்குத் தவிர வேறு யாருக்கும் உரிமை கிடையாது"
என்று முஹம்மத் நபியவரக்ள சொன்னார்கள.;
ஆதாரம் புகாரி:2954

இப்படி உலகத்திற்கு அருட்கொடையாக வந்த இஸ்லாத்தின் போதகர் முஹம்மத் நபியவர்கள் எமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.இவ்வாறு செய்பவர் செய்தவர் யாராயினும் அவரை விட்டும் இஸ்லாம் நிரபராதி அவர் முஸ்லிமாயினும் சரியே

Anonymous said...

எப்போதும் மற்றவர்களுடைய மதங்களில் குறை கண்டுபிடிகும் மதமாற்ற கும்பல்களுக்கு தங்களுடய சீர்கேடுகள் தெரிவதிலை........