Friday, February 26, 2010

கலையக வாசகர்களின் கேள்வி நேரம்

கலையகத்தின் வாசகர்கள், நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்,

எனது வலைப்பூவில் புதிதாக கேள்வி-பதில் பகுதி ஒன்றை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். பின்னூட்டங்களில் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு சம்பந்தமான கேள்விகளை மட்டுமே எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம், "கேள்வி பதில்" பகுதிக்கு இருக்காது. கலையகத்தின் பார்வைப் புலத்திற்கு உட்பட்ட துறை சார்ந்த கேள்விகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன. ஒருவர் எத்தனை கேள்விகளையும் கேட்கலாம். இந்தப் பதிவிற்கான பின்னூட்டம் வழியாகவோ, அல்லது மின்னஞ்சல் (kalaiy26@gmail.com) மூலமாகவோ கேள்விகளை அனுப்பி வைக்கவும். மறக்காமல் தங்கள் பெயரைக் குறிப்பிடவும்.

பொதுவாக சர்வதேச அரசியல் சம்பந்தமாக எந்த விதமான கேள்விகளையும் எழுப்பலாம். அதே நேரம் மதம், மொழி, கலாச்சாரம், சமூகம், வரலாறு, உலக நாடுகள் தொடர்பான கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன. வானத்தின் கீழே இருக்கும் அனைத்து விஷயங்களையும் நாம் விவாதிக்கலாம். ஆனால் நீங்கள் கேட்கப்போகும் கேள்விக்கான பதில், ஏற்கனவே நான் எழுதிய பதிவுகளில் காணக் கிடைக்கவில்லை என்பதை நிச்சயப் படுத்திக் கொள்ளவும்.
கலையக வாசகர் வட்டம் ஒரு குறிப்பிட்ட தராதரத்தைக் கொண்டிருப்பதால், சம்பந்தப்படாத, அர்த்தமற்ற, தேவையற்ற கேள்விகள் தவிர்க்கப்படும் என நம்புகின்றேன். உங்கள் கேள்விகள் பிற வாசகர்களுக்கும் பயன்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

பிற்குறிப்பு: தனிப்பட்ட காரணங்களால், அடுத்து வரும் சில நாட்களுக்கு, அல்லது வாரக்கணக்காக புதிய பதிவிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது. ஆகவே இந்த "அமைதியான" காலத்தை பயன்படுத்தி தங்கள் கேள்விகளை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
நன்றி, மீண்டும் சந்திப்போம்.

11 comments:

Pragash said...

இலங்கை அரசியலில் ஆரம்பமாகியுள்ள புதிய நாடகத்தில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான சரத்தை மகிந்த உள்ளே தள்ளியிருக்கிறார். பதிலுக்கு உலகத்தமிழர் பேரவையினரை பிரித்தானிய அமைச்சரும் பிரதமரும் சந்திக்கின்றார்கள். இந்த நாடகங்களின் முடிவுகள் எப்படி முடியும்?. இதன் அலைகள் இந்திய சீன உபகண்டத்தில் ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்துமா?

சசிகுமார் said...

சுவாரஸ்யமான பதிவு. தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

When you will write an article on your own? without the help of search engines...

benza said...

[[[ கேட்கப்போகும் கேள்விக்கான பதில், ஏற்கனவே நான் எழுதிய பதிவுகளில் காணக் கிடைக்கவில்லை என்பதை நிச்சயப் படுத்திக் கொள்ளவும் ]]]
திறமான ஐடியா - தேவையானது - உங்களுக்கு மிகவும் சிரமமானது - சேவையில் பூரிப்பிருந்தால் சகலதும் சுகமே - ஆமா உங்களது சகல பதிவுகளையும் வாசித்து தான் கேள்வி எழுத வேண்டம் எனும் விதி
நடைமுறைக்கு ஓவ்வாததே.
சற்று யோசியுங்கள் - நான் பிழையாகலாம்.
நன்றி
இந்த அர்த்தமே இல்லாத அனானிகளை தவிர்க்க இயலாதா அய்யா

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

செங்கதிரோன் said...

அன்பு நண்பர் கலையரசன் அவர்களே! நான் ஸ்பெயின் நாட்டில் படித்து கொண்டு இருக்கின்றேன் . எனக்கு ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் பற்றி விரிவாக கூற முடியுமா?

செங்கதிரோன் said...

அன்பு நண்பர் கலையரசன் அவர்களே! நான் ஸ்பெயின் நாட்டில் படித்து கொண்டு இருக்கின்றேன் . எனக்கு ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் பற்றி விரிவாக கூற முடியுமா?

Pragash said...

அண்மையில் ஒரு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் வெளியுறவுக்கொள்கைகளில் அமெரிக்க உளவுத்துறையை மீறி அந்நாட்டு அதிபரால் எதுவும் செய்ய முடியாது எனவும் முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி கொலை பின்னணியில் அமெரிக்க உளவுத்துறை இருந்தது என கூறப்பட்டிருந்தது. இது உண்மைதானா?.

benza said...

ஸ்பெயின் நாட்டு விபரம் விகிபீடியா மற்றும் கூகிள் போன்றவற்றில் கிடைக்குமே ---
பிறகாஷ் - அமெரிக்க ஜனாதிபதி உளவுதுறைகளுக்கு கட்டளை இடுபவர் -
ஜோன் கெனடி காலத்தில் எட்கர் கூவர் FBI க்கு தலைவர் - இவரை இளைப்பாறும் படி கெனடி பணித்ததை தொடர்ந்ததே கெனடி யின் மரணம் என்று ஓரு தியறி உள்ளது.

benza said...

ஜனநாயகம் மக்களுக்கானது -
மக்கள் உற்சாகமாக பங்கு பெறாது போனால் கள்ளர் காடையர் நாட்டினது பொருளாதாரத்தையும் ஆட்சியையும் கைப்பற்றுவர் -
தேர்தல் காலத்தில் மட்டுமே மக்கள் பங்கு கொண்டால் தமிழ் நாட்டின் அடிமைத்தன நடப்பே இயல்பாக நடக்கும் -
மக்களை எவ்வாறு அன்றாட ஜனநாயக வாழ்க்கையில் பங்கு பெற்று கேள்விகள் எழுப்பி உசாராக
வாழவைப்பது -
அரசியல்வாதிகளை ஏனைய தொழிற்கள் போன்று கட்டுக்கோப்புக்குள் கொண்டு வரவேண்டும் -
சொத்து விபரங்களை அவர்கள் கட்டாயமாக பகிரங்கமாக பதிவு செய்ய வேண்டும் -
இவை அமுலில் இருந்திருந்தால் கோடிகணக்காக ஜெயலலிதா கருணாநிதி போன்றோர் கொள்ளை அடித்திருப்பார்களா -

கலையகம் கேள்வி நேரம் சோபிக்கவில்லையே -
வாசகர் பங்கு பற்றாததால்.

Pragash said...

தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களினால் அமர்க்களப்படுகின்றதே தாய்லாந்து? அங்கு என்ன தான் நடக்கின்றது ?