Monday, March 31, 2014

ஐரோப்பிய நேர மாற்றம் : இயற்கையை கட்டுப்படுத்தும் முதலாளித்துவம்


மேற்கு ஐரோப்பிய நாடுகளில், ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை/ஞாயிற்றுக்கிழமை (சரியாக ஞாயிறு அதிகாலை இரண்டு மணிக்கு) அன்று, "கோடை கால நேரம்" மாற்றுவார்கள். அதன் பிரகாரம், மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 23 மணித்தியாலங்களை கொண்டிருக்கும். இதனால், ஐரோப்பாவிற்கும், இந்தியா, இலங்கைக்குமான நேர வித்தியாசம் மூன்றரை மணித்தியாலமாகும். 

அதே மாதிரி ஒக்டோபர் மாதத்தில் வரும் கடைசி வார இறுதி நாளன்று, குளிர்கால நேரம் மாற்றப்படும். அன்று வரும் ஞாயிற்றுக்கிழமை 25 மணிநேரத்தைக் கொண்டிருக்கும். அதனால், இந்தியா, இலங்கைக்கான நேர வித்தியாசம் நான்கரை மணித்தியாலமாக அதிகரிக்கும். (மேற்கு)ஐரோப்பாவைத் தவிர, அமெரிக்கா, கனடாவிலும் நேர மாற்றம் அமுல் படுத்தப் படுகின்றது. இந்த நேர மாற்றத்தை Daylight Saving Time (DTS)  என்று குறிப்பிடுவார்கள்.

ஐரோப்பாவில் வாழும் மக்கள் பலருக்கு, எதற்காக இந்த நேர மாற்றம் என்ற காரணம் தெரியாது. பலரும் இதனை ஒரு பாரம்பரிய கலாச்சாரம் போன்று பின்பற்றி வருகின்றனர். "கோடை காலத்தில், அதிக சூரிய ஒளி கிடைப்பதால், எரிபொருள் மிச்சம் பிடிக்கலாம்" என்று இதற்குக் காரணம் சொல்லப் படுகின்றது. "கோடை காலத்தில் பறிக்கப் படும் ஒரு மணித்தியாலத்தை, குளிர்காலத்தில் திருப்பித் தருகிறார்கள்" என்று பொது மக்கள் நினைத்துக் கொள்கின்றனர்.

உண்மையில் இந்த நேர மாற்றம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் அறிமுகப் படுத்தப் பட்டது. அதுவும், "முதலாளித்துவ நாடுகள்" என்று அழைக்கப் படும், மேற்கு ஐரோப்பாவில் மட்டுமே அமுலுக்கு வந்தது. காலப்போக்கில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அந்த நடைமுறையை பின்பற்றத் தொடங்கின. எழுபதுகளில் ஏற்பட்ட, எண்ணைத் தட்டுப்பாடு காரணமாக, எல்லா மேற்கத்திய நாடுகளிலும் பின்பற்றப் பட்டது.

நேர மாற்றத்தை கொண்டு வருவதற்கு, இயற்கை, காலநிலை, எரிபொருள் சேமிப்பு என்று, பலரும் நம்பக் கூடிய காரணங்கள் சொல்லப் பட்டன. ஆனால், ஐரோப்பாவுடன் ஒரே பூகோள அமைவிடத்தை, ஒரே மாதிரியான காலநிலையை கொண்டுள்ள முன்னாள் சோவியத் யூனியனில் அந்தப் பழக்கம் இருக்கவில்லை. இன்றைக்கும் ரஷ்யா, அதனோடு சேர்ந்த நாடுகளில் வாழும் மக்களுக்கு, கோடை கால நேர மாற்றம் பற்றி எதுவும் தெரியாது.

இந்த நேர மாற்றம் குறித்து, பல ஐரோப்பிய மக்கள் மத்தியில் குழப்பமும், சந்தேகமும் காணப் படுகின்றது. பொதுவாக விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பிரயோசனமும் கிடையாது. ஏனென்றால், மிருகங்களும், தாவரங்களும் தமக்கென்று ஒரு நேரத்தை வைத்திருக்கின்றன. மாடு தனது நேரத்திற்கு தான் பால் தரும். செடிகள் தனது நேரத்திற்கு தான் பூக்கும்.

குறிப்பாக, எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே, இந்த நேர மாற்றத்தால் நன்மை அடைந்து வருகின்றன. ஏனெனில், ஐரோப்பாவில் குளிர் காலம் என்பது, நீண்ட இரவுகளைக் கொண்டது. பெரும்பாலான நாடுகளில், மாலை நான்கு மணிக்கே இருண்டு விடும். மீண்டும் சூரிய வெளிச்சம் வருவதற்கு காலை எட்டு மணி ஆகும். அதே நேரம், குளிரும் அதிகமாக இருக்கும். ஆகையினால், மின் விளக்குகள் அதிக நேரம் எரிய விடப் படும். வெப்பமூட்டிகளும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப் படும்.

கோடை காலம் அதற்கு நேர் மாறானது. அதி காலை ஐந்து மணிக்கே சூரிய வெளிச்சம் கண்ணைப் பறிக்கும். இருட்டு வருவதற்கு, சில நேரம் இரவு பத்து மணி ஆகும். அதே நேரம், வெக்கையாக இருப்பதால், வீட்டிற்கு செயற்கை வெப்பம் உண்டாக்க வேண்டிய அவசியம் இல்லை.

எரிவாயு, மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனங்களைப் பொறுத்த வரையில், குளிர்காலம் என்பது அதிகளவு இலாபம் ஈட்டக் கூடிய பொற்காலம் ஆகும். இதனால், குளிர்காலத்தில் ஒரு மணித்தியாலத்தை கூட்டுவதன் மூலம், இலாபத்தையும் பன்மடங்கு அதிகரிக்க முடியும். அநேகமாக, இது ஒரு பகற்கொள்ளை தான். அதனால் தான், இந்த நேர மாற்றம் முதலாளித்துவ நாடுகளில் மட்டுமே நடைமுறைப் படுத்தப் படுகின்றது.


மேலதிக தகவல்களுக்கு:
 Daylight Saving Time (DTS)

3 comments:

Kalaiyarasan said...

இந்தப் பதிவு தொடர்பாக, முகநூலில் நடந்த விவாதமும், பரிமாறப் பட்ட தகவல்களும்:

Pathmanathan Nalliah:
நான் நோர்வேக்கு வந்த தொடக்கத்தில் ஒரு தோட்டத்தில் வேலை செய்தேன் அப்பொழுது அந்த தோட்ட முதலாளி சொன்னார் தாங்கள் நேரம் மாத்துவதில்லை என்று ..விவசாயிகள் நேரம் மாத்துவதில்லை .. அவர் அப்பொழுது சொன்னது இப்பொழுது தெளிவாக விளங்குகிறது....ஒரு மணித்தியாலத்தில் பல மில்லியன் மக்களிடம் இருந்து சுரண்டப்படுகிறது ....

Athiyaman de Libertarian :
தோழர் : உங்க பார்வை பல நேரங்களில் வியக்க வைக்கிறது. மொத்த நாட்டிற்க்கும் நல்லது என்று கருதப்பட்டதால் தான் இந்த adjustment. இதை சோசியலிச நாடுகள் செய்திருந்தால் என்ன சொல்வீங்க ?

Pathmanathan Nalliah:
Athiyaman de Libertarian மக்களுக்கு நன்மை இல்லாத விடயங்களை உண்மையான சோசலிச நாடுகள் செய்யாது ..
about an hour ago · Like

Kalaiyarasan Tha:
அதியமான், சோஷலிச நாடுகளில் இவ்வாறு மக்களை ஏமாற்றி சுரண்டி இலாபம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.


Athiyaman de Libertarian:
this is a mechanism to improve productivity and reduce wastage.

Athiyaman de Libertarian:
சோவியத் ரஸ்ஸியாவில் : http://en.wikipedia.org/wiki/Summer_Time_in_Europe#Russia

Summer Time in Europe - Wikipedia, the free encyclopedia
en.wikipedia.org

Venki Mohan:
எப்போதாவது மக்களுக்காக முதலாளிகள் தங்கள் லாபத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்களா?
பதிலாக தொழிலாளி வர்க்கத்தின் உயிரை பறித்து தான் லாபத்தை அடைகிறது.

Kalaiyarasan Tha:
நீங்கள் தந்த சுட்டியில், அது எப்போதுமே நடைமுறைப் படுத்தப் படவில்லை என்பது தெரிகின்றது. குறிப்பிட்ட சில வருடங்கள் மட்டுமே மாற்றி இருக்கிறார்கள். அதாவது, அயலில் உள்ள ஐரோப்பிய நாடுகளுடன் உள்ள பொதுவான உடன்படிக்கை காரணமாக அது நடந்திருக்கிறது. சர்வதேச மயப்பட்ட உலகத்தில் இது போன்ற சில விட்டுக் கொடுப்புகள் தவிர்க்க முடியாது.

Kalaiyarasan said...

Kalaiyarasan Tha:
//In Russia, summer time was originally introduced on 1 July 1917 by a decree of the Russian Provisional Government, and clocks were moved one hour forward. It was abandoned by a Decree of the Soviet government five months later, clocks being moved one hour back again on 27 December.
Summer time was reintroduced in the USSR (Moscow Summer Time) on 1 April 1981, by a decision of the Council of Ministers of the USSR, and its practice continued into post-Soviet times until recently. The changeover dates in Russia were the same as for other European countries, but clocks were moved forward or back at 02:00 local time in all zones. Thus in Moscow (local time = UTC+3 in winter, UTC+4 in summer), summer time commenced at 23:00 UTC on the day before the last Sunday in March, and ended at 23:00 UTC on the day before the last Sunday in October. (Note that "day before last Sunday" is not the same as "last Saturday" in a month where the last day is a Saturday.)
On 8 February 2011, Russian President Dmitry Medvedev announced the cancellation of summer time in Russia. An hour was added in March 2011 for the last time, and clocks did not move back again. (At the same time some of Russia's time zones were consolidated.)[14] After this reform many Russian cities have a "standard time" two hours more than would be suggested by their "astronomical time" (because the original standard time was already ahead of astronomical time in many areas).[14]
During his 2012 election campaign, President Vladimir Putin proposed re-introducing summer time, as there had been complaints about some workers not seeing any daylight during the winter, since the sun had not risen when going to work.[15] According to a report in the International Herald Tribune, the winter of 2011-12 was remembered as the "darkest winter on record" as a result of the time change.[14] However, Putin later said it would be up to then Prime Minister Medvedev’s cabinet to decide how to proceed with a seasonal time shift, and it decided to stay with the 2011 policy.[14]//

Athiyaman de Libertarian:
Summer time was reintroduced in the USSR (Moscow Summer Time) on 1 April 1981, by a decision of the Council of Ministers of the USSR, and its practice continued into post-Soviet times until recently ??????????????????/

Athiyaman de Libertarian:
//சர்வதேச மயப்பட்ட உலகத்தில் இது போன்ற சில விட்டுக் கொடுப்புகள் தவிர்க்க முடியாது.// இல்லை. this was based purely on results and effects. nothing to do with your above interpretations. trial and error method.


Kalaiyarasan Tha:
//Summer time was reintroduced in the USSR (Moscow Summer Time) on 1 April 1981, by a decision of the Council of Ministers of the USSR// 1981 க்கு முன்னர் அங்கே நேர மாற்றம் இருக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது அல்லவா?

Athiyaman de Libertarian:
sure. but why did they change that in 1981 ? சுரண்டுவதற்க்காகவா ?

Kalaiyarasan Tha:
உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், அரசியல், பொருளாதார நிலைமைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. காலத்திற்கு காலம், அரசு மாற்றங்கள், கொள்கை மாற்றங்கள் ஏற்படும். சோவியத் யூனியனும் அதற்கு விதிவிலக்கல்ல.

Kalaiyarasan Tha:
//why did they change that in 1981? சுரண்டுவதற்க்காகவா ?//
முதலாளித்துவ நாடுகள் தான் சுரண்டுவதற்காக அதை நடைமுறைப் படுத்தின. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலாளித்துவ நாடுகள் அல்ல. ஒரே பூகோள அமைவிடத்தை கொண்டிருப்பதால், தவிர்க்கவியலாது சில விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டியிருக்கும்.

jeyamanthra said...என்ன மடைத்தனம் பொதுமக்கள் இந்த நேர மாற்றத்தால் நல்லதைப் பெறவில்லையென்பது! இப்படி எழுதுவதற்கெல்லாம் காரணம் எதையாவது புத்திசாலித்தனமாக பேஸ்புக்கில் உடைக்கவேண்டும் என்பதே.

நானும்தான் ஐரோப்பாவில் வாழ்கிறேன். இந்த மாற்றம் தினசரி வாழ்க்கையில் நல்ல உணர்வை உண்டாக்குகிறது. நேரம் மாற்றப்படாவிட்டால் அது உடல் ரீதியாக, மன ரீதியாக அன்னித்தை இயற்கையுடன் உணரவைக்கும். ஒன்றல்ல மூன்று மணி நேரம் மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.