Sunday, July 24, 2011

2083: கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப்போர்!


"எமக்குத் தெரிந்ததெல்லாம், Anders Breivik ஒரு தீவிர வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி."- Roger Andresen , ஒஸ்லோ பொலிஸ் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில்.

வலதுசாரித் தேசியவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள், முஸ்லிம் விரோதிகள், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், இது போன்ற கொள்கைகளைக் கொண்டவர்கள் எந்தளவு ஆபத்தானவர்கள் என்பதை ஒஸ்லோ படுகொலைகள் நிரூபிக்கின்றன. நோர்வேயின் முதலாவது பயங்கரவாத குண்டுவெடிப்பை நிகழ்த்தி விட்டு, 90 பேரை படுகொலை செய்து விட்டு, போலீசிடம் சரணடைந்த Anders Breivik என்ற கொலைகாரனின் அரசியல் பின்னணி அது தான். மேற்கத்திய நாடுகளில், இன்னமும் இத்தகைய கொள்கைகளைக் கொண்ட வெள்ளையின பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.

மேற்குலக அரசுகள் இதுவரை காலமும், கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும், தம் மக்களுக்கு எதிரிகளாகக் காட்டி வந்தன. ஆனால், மிகவும் கொடிய பயங்கரவாதிகள் வெள்ளையின சமூகத்தினுள் மறைந்திருப்பதை புறக்கணித்து வந்துள்ளன. சாதாரணமாக, விமான நிலையைப் பரிசோதனையின் போது, ஆசிய, ஆப்பிரிக்க தோற்றம் கொண்டவர்களை மணித்தியாலக் கணக்காக சோதிப்பார்கள். அதே நேரம், வெள்ளை தோலைக் கண்டால், எந்த வித சோதனையுமின்றி போக அனுமதிப்பார்கள்.

"வெள்ளையினத்தவர்கள் பயங்கரவாதியாகவோ, அல்லது குற்றவாளியாகவோ இருக்க வாய்ப்பில்லை," என்று கருதும் அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கை வெள்ளையின- பயங்கரவாதிகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர். 1995 ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒக்லஹோமா நகரில் குண்டு வைத்தது ஒரு வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி என்பது தெரிந்த பிறகும், மேற்குலகம் இன்னும் விழிப்படையவில்லை.

நோர்வேயில், கடந்த பத்தாண்டுகளாக, முஸ்லிம் குடியேற்றவாசிகளை உளவறிந்த அளவிற்கு, வெள்ளையினத் தேசியவெறியர்களை கண்காணிக்கவில்லை. அந்த மாபெரும் தவறுக்காக நோர்வே கொடுத்த விலை மிகப் பெரியது. இனிமேல் உலகம் முழுவதும், தீவிர வலதுசாரித் தேசியவாதிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும், மக்கள் விரோதிகளாக கருதப்பட வேண்டிய காலம் வந்து விட்டது.

Anders Breivik என்ற கொலைகாரன், ஒஸ்லோ படுகொலைக்கு முன்னர், தனது கொள்கைகளை விளக்கும் பிரகடனம் ஒன்றை தயாரித்து பின்லாந்தின் வலதுசாரிக் கட்சியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அதனை சுருக்கமாக வீடியோ பிரதியாக பதிவு செய்து Youtube பில் வெளியிட்டுள்ளான். மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை நடத்தக் கிளம்பியிருக்கும் இரகசிய அமைப்பொன்றின் விபரம் கொடுக்கப் பட்டுள்ளது.

2002 ல், லண்டனில் நிறுவப்பட்ட Knights Templar அமைப்பில், ஐரோப்பா முழுவதும் இருந்து 12 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். "பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது. இனிமேல் ஆயுதப்போராட்டமே ஒரே வழி. உலகம் என்னை இப்போது ஒரு பயங்கரவாதியாக கணிக்கலாம். ஆனால், சில காலத்தின் பின்னர், மக்கள் என்னை நியாயத்திற்காக போராடிய தியாகியாக மதிப்பார்கள்." - இவ்வாறு அந்தக் கொலைகாரனின் வாக்குமூலம் அமைந்துள்ளது. பன்முகக் கலாச்சாரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் ஐரோப்பிய அரசுகளை கவிழ்ப்பதும், அந்த இரகசிய அமைப்பின் நோக்கமாக இருந்துள்ளது. இஸ்ரேலுக்கு உதவுவதும், முஸ்லிம்களை ஐரோப்பாவை விட்டு விரட்டுவதும் அதன் குறிக்கோளாக உள்ளன. (நவீன கிறிஸ்தவ சிலுவைப் போராளிகள், வெள்ளயினத்தவர்களை மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று நம்புகிறார்கள். ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்களை, அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பினும், "முஸ்லிம்கள்" என்று தான் குறிப்பிடுவார்கள்.)

"2083 , ஐரோப்பாவின் சுதந்திரப் பிரகடனம்" (2083: A European Declaration of Independence)என்று தலைப்பிடப் பட்டுள்ள அறிக்கை, இரகசிய இயக்கத்தின் திட்டங்களை விபரிக்கின்றது. மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை அறிவித்துள்ள இந்த அமைப்பு, "கலாச்சார மார்க்சியம்" ஐரோப்பாவை இஸ்லாமிய மயப் படுத்தி வருவதாக அச்சுறுத்துகின்றது. மத்திய கால வத்திகானின் சிலுவைப்போரை மீண்டும் கொண்டு வர விரும்புகின்றது. சக ஐரோப்பிய குடிமக்களை, நவீன சிலுவைப்போரில் பங்குபற்ற வருமாறு அறைகூவல் விடுக்கின்றது. அறிக்கை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதியில், உலகில் "கம்யூனிஸ்டுகளால் விளைந்த தீமைகளை" எடுத்துக் காட்டுகின்றது. 

இரண்டாவது பகுதி, "ஐரோப்பியரை அழிக்கும் நோக்கில் வந்து கொண்டிருக்கும் முஸ்லிம் குடியேறிகளைப்" பற்றி எச்சரிக்கை செய்கின்றது. மூன்றாவது பகுதி, மீண்டும் ஒரு சிலுவைப்போரின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. பண்டைய கால சிலுவைப்போரின் வீர புருஷர்களை, ஆதர்ச நாயகர்களாக போற்றுகின்றது. இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவைப் பார்க்கும் பொழுது, இந்த கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், எந்தளவு கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் வெறுக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

நோர்வேயை ஆளும் சமூக ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட தொழிற்கட்சியை, இன்று ஒரு இடதுசாரிக் கட்சியாக கருத முடியாது. ஆயினும், ஆசிய,ஆப்பிரிக்க குடியேற்றவாசிகள் அந்தக் கட்சிக்கே அதிகளவு வாக்களித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்த இளைஞர் முகாமில் கூட, பன்னாட்டு இளைஞர்கள் கட்சி உறுப்பினர்களாக கலந்து கொண்டுள்ளனர். "வெளிநாட்டவர்களுக்கு சம உரிமை வழங்குவது, நாட்டை சீரழிக்க விரும்பும் இடதுசாரிகளின் சூழ்ச்சி..." என்று தான், வலதுசாரிக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. 90 பேரைக் கொன்ற வெள்ளையின பயங்கரவாதி அன்டெர்ஸ் ப்ரேவிக் கூட, வெளிநாட்டவரை வெறுக்கும் Frp கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளான்.

"வலதுசாரித் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் தான் எமது எதிர்காலம்..." என்று தெரிவித்தார் ஒரு நோர்வீஜிய மூதாட்டி. வலதுசாரிப் பாதையில் போய்க் கொண்டிருக்கும் முன்னாள் "இடதுசாரிக் கட்சிகள்" என்ன செய்யப் போகின்றன? மீண்டும் சமூக- ஜனநாயகப் பாதைக்கு திரும்பப் போகின்றனவா? அல்லது வெள்ளையினப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியப் போகின்றனவா? மேலைத்தேய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், பிற வெளிநாட்டவர்களும் என்ன செய்யப் போகின்றனர்? இனிமேலும் பிற்போக்கு வலதுசாரிகளுக்கு பின்னால் அணிதிரள்வார்களா? அல்லது நவ- நாஜிசப் பயங்கரவாதத்தை எதிர்த்து ஐரோப்பிய வர்க்கப் போராட்டக் களத்தில் இறங்கப் போகிறார்களா? தீவிர வலதுசாரிகள் தங்கள் எதிரிகள் யார் என்று, பிரகடனப் படுத்தி விட்டார்கள். உங்கள் நண்பர்கள் யார் என்பதை, நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நோர்வே குண்டு வெடிப்பு பற்றிய விரிவான கட்டுரை:நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்

நிறவெறியர்களின் சிலுவைப்போர் திட்டங்கள் குறித்த முழுமையான ஆவணத்தை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்:2083: A European Declaration of Independence

வெள்ளையின நிறவெறிப் பயங்கரவாதிகளின் கொள்கைப் பிரகடனம், வீடியோ வடிவில்:


மேலதிக தகவல்களுக்கு:
1.Oslo Suspect Wrote of Fear of Islam and Plan for War
2.Drapsmannen la ut detaljert «terrordagbok»
3.Breivik Called on Conservatives to 'Embrace Martyrdom'

6 comments:

காரிகன் said...

கிருஸ்தவ தீவிரவாதம் என்பதை ஒரு பொது வார்த்தையாக பயன்படுத்துவது இஸ்லாமிய ஆதரவாளர்களின் புதிய முயற்சி.எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருப்பது இயல்பே.முஸ்லிம் நாடுகளில் மற்ற மதத்தவர்களை முஸ்லிம்கள் எவ்வாறு பார்க்கிறார்கள், எப்படி இந்து மற்றும் கிருஸ்துவ மதங்களை விமர்சனம் செய்கிறார்கள் என்று உலகத்திற்கே தெரியும்.இப்போதைய ஒஸ்லோ படுகொலைகள் கூட இத்தனை காலமான இஸ்லாமிய குடியேற்றத்தின் பாதிப்பே. இஸ்லாமியர்கள் ஐரோப்பாவில் நுழைந்து கொண்டு பின்னர் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்படுவது, தங்களின் உரிமை என்று அட்டூழியம் செய்வது என்று இருப்பதால்தான் தற்போது கிருஸ்துவ தீவிரவாதிகள் உருவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.,இதை எத்தனை பசப்பு வார்த்தைகளை கொண்டும் மறைக்க முடியாது.அமைதியாக இருக்கும் ஐரோப்பிய மக்களின் மனதில் இந்த வெறுப்பு வரும் படி பேசியும் தீவிரவாத செயல்கள் செய்து கொண்டு இருக்கும் முஸ்லிம் இனத்தை பற்றி ஒன்றும் சொல்லாமல் இபாடி ஒரேடியாக கிருஸ்துவர்களை குற்றம் சொல்வது எடுபட போவதில்லை.ஐரோப்பியர்களின் இந்த முஸ்லிம் எதிர்ப்பு மனப்பான்மை ஒரு தேசிய உணர்வே அன்றி உலகத்தை அச்சுறுத்தும் கொடிய நோய் அல்ல.

Mohamed Faaique said...

உண்மையை எடுத்துரைத்தத்ற்கு நன்றி. மேலே உள்ள ஒரு கிணற்றுத் தவளையின் கருத்துரைக்கு உங்கள் பதில் வரும் வரை காத்திருக்கிறேன்.

மருதன் said...

பல்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் மக்கள் ஒரே நாட்டில் ஒன்றிணைந்து வசிக்கமுடியாது என்பதே இப்போது ஐரோப்பாவின் கொள்கையாக மாறிக்கொண்டிருக்கிறது. Multikulti has failed என்று ஜெர்மானிய ஏஞ்சலா மெர்கெல் கூறியதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். இதே கருத்தை வேறு பல தலைவர்களும் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் அறிவித்துள்ளனர். இந்தக் கொள்கைக்கு உயிர் கொடுத்தால் என்ன ஆகும் என்பதை நோர்வே படுகொலை திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவின் பன்முக அடையாளத்தை வெறுக்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற வலதுசாரி கட்சிகளையும் அதைச் சார்ந்து இயங்கும் இன்னபிற அடிப்பொடி தீவிரவாத அமைப்புகளையும் இப்போதாவது மக்கள் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

வலையுகம் said...

நண்பர் கலையரசன் அவர்களுக்கு
அருமையான பதிவு
இந்த வீடியோவை என்னுடைய பிளாக்கில் பயன்படுத்திக் கொள்ளலாமா?

Kalaiyarasan said...

ஹைதர் அலி, தாராளமாக பயன்படுத்தலாம். அனைவரையும் போய்ச் சேர வேண்டுமென்பது தான் எனது அவா.

Good citizen said...

கார்ல்மாக்ஸ் சொல்வது அக்மார்க் உண்மை,
நான் ஒரு பிரான்ஸ் வாசி தயவு செய்து
பிரான்சில் வசிக்கும் தமிழின முஸ்லிம்களை கேட்டு பாருங்கள்,
அரேபிய கருப்பின முஸ்லிம்கள் செய்யும் அநியாங்களை கதை கதையாக
சொல்வார்கள்

சமிபத்திய பிரான்சின் தெசியதினத்தன்று (ஜூலை 14)அரேபிய கருப்பின முஸ்லிம்
பொருக்கிகள் கொலுத்திய கார்களின் எண்ணிக்கை 299,சாதரண மக்களின் செமிப்பில் வாங்கிய கார்களை எரிப்பது இவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு இதற்கு ஆதாரம் வேண்டுவோர் பிரன்ச் தெரிந்தால் கிழே உள்ள லிங்கில் படித்து கொள்ளவும்
http://www.francesoir.fr/actualite/societe/incidents-une-nuit-tres-chaude%E2%80%A6au-soir-du-13-juillet-28185.html