Wednesday, March 17, 2010

கர்த்தரே! பாவிகளான பாதிரிகளை மன்னியாதேயும்!!

அயர்லாந்து, டப்ளின் நகரை சேர்ந்த, பாதிரியார் ஜேம்ஸ் மக்னமி யை சுற்றி எப்போதும் சிறுவர்கள் கூட்டம் காணப்படும். ஆனால் "திருத்தந்தை," தனது அந்தரங்க நீச்சல் தடாகத்தில் அம்மணமான சிறுவர்களுடன் நிர்வாணமாக குளிப்பதில் நாட்டம் கொண்டவர். நிர்வாணப் பாதரின் சில்மிஷங்களுக்கு அஞ்சி பல சிறுவர்கள் அவர் பக்கம் போவதில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு ஜேம்ஸ் பாதரின் லீலைகள் பற்றி தெரியும். ஆனால் தேவாலய நிர்வாகம் எந்த முறைப்பாட்டையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

ஆதரவற்ற மன நலம் குன்றிய குழந்தைகளின் காப்பகத்தை நடத்திய "பாதர்" எட்மொன்தாஸ் கைகளில் பல இளம் மொட்டுகள் கருகியுள்ளன. 8- 11 வயதுக்கு இடைப்பட்ட சிறுமிகளின் அந்தரங்க உறுப்புகளை விதம் விதமாக படம் பிடிப்பது அவரது பொழுதுபோக்கு. அந்தப் புகைப்படச் சுருள்களை இங்கிலாந்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றிற்கு அனுப்பி கழுவி எடுப்பார். புகைப்படங்களை நகல் எடுத்து அனுப்பிக் கொண்டிருந்த ஸ்டூடியோ ஒரு முறை விழிப்படைந்தது. சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி சம்பந்தப்பட்ட தலைமை பிஷப்புக்கு அறிவித்தது. ஆனாலும் என்ன? எந்த வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க தேவாலயம் தயாராக இல்லை. முப்பது ஆண்டுகளாக, பாதர் எட்மொண்டுசின் பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. கத்தோலிக்க திருச்சபை அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

இறுதியில் வணக்கத்திற்கு உரிய பாதிரியார் வேஷத்தில் நடமாடும் பாவிகள், விசாரணைக் குழுவால் அம்பலத்திற்கு கொண்டு வரப்பட்டனர். விசாரணைக்குழுவின் முன்பு சாட்சியமளித்த பாதர் எட்மாண்டுஸ் "தான் ஆண் சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்ததால், பெண்களின் உடல் உறுப்புகளை பற்றிய ஆர்வ மேலீட்டினால் அப்படி நடந்து கொண்டதாக..." காரணம் கூறினார். அயர்லாந்தை சேர்ந்த கத்தோலிக்க ஜேம்ஸ், எட்மொன்தாஸ் ஆகியோர் அந்த வட்டாரத்திலேயே மிகப் பிரபலமானவர்கள். தேவ ஊழியம் செய்த பகுதி மக்களால் மரியாதைக்குரியவர்களாக கருதப்பட்டவர்கள். அண்மையில் வெளியான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விசாரணை அறிக்கைகள் அவர்களின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டியது.

அரசாங்கத்தின் தலையீடு, திருச்சபையின் குறுக்கீடு, "காணாமல்போன" ஆவணங்கள் ஆகிய தடைகளைக் கடந்து அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கென ஆயிரக்கணக்கான சாட்சியங்களை விசாரணைக் குழு பதிவு செய்திருந்தது. அமெரிக்கா, பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வந்த பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளிக்க முன்வந்தனர். அறிக்கையில் காணப்படும் உண்மைகள் திடுக்கிட வைக்கின்றன.
அயர்லாந்து அரசும், கத்தோலிக்க அதிகார மையமும், ஏன் வத்திக்கான் கூட இவற்றை முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்தன. கத்தோலிக்க மத நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் வரக் கூடாது என்பதற்காக, வெண்ணிற ஆடைக்குள் ஒளிந்திருந்த காமப் பிசாசுகளை பாதுகாத்து வந்துள்ளன. பல தசாப்தங்களாக மூடி மறைக்கப்பட்ட வன்கொடுமைக்கு ஆளான சிறுவர்கள் வாய்மூடி மௌனிகளாக சகித்துக் கொண்டார்கள். உண்மை அறியும் அறிக்கை கூட 1950 தொடக்கம் 2004 வரையிலான முறைப்பாடுகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மேலே குறிப்பிட்ட உதாரணங்கள் விதிவிலக்குகள் அல்ல. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, ஆயிரக்கணக்கான துஷ்பிரயோகங்களில் ஒன்று. கன்னியாஸ்திரிகள் நடத்திய பாடசாலைகளில் கூட சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லை. மாணவர்களை அடித்து துன்புறுத்தியதால் பல சிறுவர்கள் பாடசாலை செல்லவே அஞ்சி நடுங்கினார்கள். இதிலே கொடுமை என்னவென்றால், துஷ்பிரயோகத்திற்கும், துன்புறுத்தலுக்கும் ஆளான சிறுவர்கள் ஒன்றில் அனாதைகளாக இருப்பர். அல்லது ஆதரவற்ற ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்திருப்பர்.
அயர்லாந்தில் கத்தோலிக்க மத நிறுவனம் ஒரு மூடுமந்திரம். உள்ளே என்ன நடக்கின்றது என்பது வெளி உலகத்திற்கு தெரியாது. தெரிந்தவர்கள் வெளியே சொல்வதில்லை. சொன்னாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. ஏனென்றால் அதிகாரம் எளியவர் கையில் இல்லை. அண்மைக்காலம் வரையில் அயர்லாந்து மக்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள். தமது பிள்ளைகளை படிப்பிக்க வசதியற்றவர்கள். அரசாங்கமும் எதுவும் செய்வதில்லை. சமூகத்தில் தோன்றிய வெற்றிடத்தை கத்தோலிக்க மதம் நிரப்பியது. அயர்லாந்தில் ஆனாதை ஆச்சிரமங்கள், இலவச பாடசாலைகள் எல்லாம் கத்தோலிக்க மத நிறுவனங்களாலேயே நடத்தப்பட்டன. ஓரளவு வசதியான பெற்றோரும், கத்தோலிக்க பாடசாலையில் தமது பிள்ளை படிப்பதை பெருமையாக கருதினார்கள்
ஆனால் தொண்ணூறுகளுக்குப் பின்னர் நிலைமை மாறியது. அயர்லாந்துக் குடியரசின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை எல்லாவற்றையும் தலை கீழாக புரட்டிப் போட்டது. முதலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மானியங்கள் அயர்லாந்தின் பொருளாதாரத்தை புலிப் பாய்ச்சலில் முன்னேற வைத்தது. ஐரோப்பாவின் ஏழை நாடுகளில் ஒன்றான அயர்லாந்து செல்வந்த நாடாகியது. இதனால் மக்களின் வாழ்க்கை வசதிகளும் உயர்ந்தன.
இரண்டாவதாக தேவாலயத்திற்கு செல்வோர் தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சி. இதற்கும் பொருளாதார முன்னேற்றமே முக்கிய காரணம். வசதி,வாய்ப்பு கைவரப் பெற்ற மக்களுக்கு கடவுள் தேவைப்படவில்லை. மூன்றாவதாக சட்டத்தின் ஆட்சி. ஐரோப்பிய ஒன்றியம் தனது சட்டங்களை கறாராக நடைமுறைப் படுத்த வேண்டி நின்றது. சமூக விழிப்புணர்வை தூண்டும் தன்னார்வ நிறுவனங்களுக்கு தடை போட முடியவில்லை. ஊடகங்களின் கழுகுக் கண்களுக்குதேவாலயமும் தப்பவில்லை. இவை எல்லாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கபலத்துடன் நடந்தன.
அயர்லாந்தில் விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் இருந்து, கத்தோலிக்க மதத்தின் அரசியல் செல்வாக்கு அதிகம். பிரிட்டனை சேர்ந்த ஆங்கிலேய - புரட்டஸ்தாந்து ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக கத்தோலிக்க மத நிறுவனங்களும் போராடின. அயர்லாந்து குடியரசு உருவான பிற்பாடு, கத்தோலிக்க மதம் அரச அங்கீகாரம் பெற்றது. இதனால் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அதன் அதிகாரம் கோலோச்சுகின்றது. அரசாங்கம், அரசு அதிகாரிகள், மதகுருக்கள் இவர்களுக்கிடையிலான நல்லிணக்கம் முறைகேடுகளில் ஈடுபட்ட பாதிரிகள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுத்தது.
ஆளும் வர்க்கத்திற்கு மத நிறுவனத்தின் ஆதரவு தேவைப்பட்டது. மத நிறுவனத்தை வழி நடத்திய பிஷப்புகளுக்கோ கத்தோலிக்க திருச்சபையின் பெயர் கெடக் கூடாது என்பதைப் பற்றி மட்டுமே அக்கறை. அவர்களுக்கு பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது அனுதாபம் ஏற்பட்டவில்லை. அப்பாவிகள் தண்டிக்கபட்டனர். குற்றவாளிகள் தப்ப வைக்கப்பட்டனர். எல்லாம் கர்த்தரின் பெயரால் நடந்தது. வத்திக்கானில் இருக்கும் பாபரசருக்கும் முறைகேடுகள் பற்றி நன்கு தெரியும். ஆனால் அவருக்கும் கத்தோலிக்க மதத்தை பற்றி யாரும் குறை கூறக் கூடாது என்பது மட்டுமே கவலை.
அயர்லாந்தில் வெண்ணிற ஆடைக்குள் மறைந்திருந்த பாதிரிகள் என்ற குற்றவாளிகளை இனங்காட்டிய போது மண்டபத்தில் குழுமி இருந்த மக்கள் சீற்றமுற்றனர். இவ்வளவும் நடந்தும் வாளாவிருந்த கத்தோலிக்க மத தலைமைப்பீடத்தின் செருக்கையும், அரசின் கையாலாகாத் தனத்தையும் கண்டனம் செய்தனர். தற்போது இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்காத படி அமுக்குவதற்கே கத்தோலிக்க நிறுவனம் முயற்சிக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கி அவர்களின் வாயை அடைக்க முயற்சிக்கின்றது.
மத நிறுவனங்களின் பாலியல் துஷ்பிரயோகம் அயர்லாந்திற்கே பிரத்தியேகமான ஒன்றல்ல. அமெரிக்காவிலும், வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்தவை. மத்திய கால ஐரோப்பா கத்தோலிக்க மதத்தின் ஆட்சியின் கீழ் இருந்த காலம் ஒன்றுண்டு. அப்போது ஒவ்வொரு நகரிலும் உள்ள விபச்சார விடுதிகளை கத்தோலிக்க தேவாலயமே நடத்திக் கொண்டிருந்தது. விபச்சார வியாபாரத்தால் அதிக வருமானம் வருகிறதென்றால், அதையும் விட்டு வைப்பார்களா? இவை எல்லாம் ஐரோப்பிய சரித்திரத்தில் காணப்படும் சான்றுகள்.
********************

17 comments:

Giri said...

கர்த்தரே!

ஜெகதீஸ்வரன் said...

கர்த்தர் இந்தப் பாவிகளை மன்னிக்க மாட்டார் நண்பரே!.

கன்னியாஸ்திரிகளின் பாலியல் பலாத்காரங்களும், ஓரினச்சேர்க்கையும் இப்போது சமீபகாலமாக தான் செய்திகளில் அடிபடுகின்றன.!

http://sagotharan.wordpress.com

ஸ்ரீநி said...

CRIMEN SOLICITATIONIST - இதை தேடி படிக்கவும், பக்கத்தில் அதிகமாக தண்ணீர் வைத்துக் கொண்டு படிக்கவும்

J.P Josephine Baba said...

Dear Kavi,
Your post is deep rooted and thought pro vocable. But the last part that is the prostitution institution run by the church so sensation able and bias. The same church had given to the world St.Xavier,Mother Theresa Thomas etc. But some priest just like. Its reason the undervalue selection of people by the church because of some reason(it is religious corruption)You know the church pickup only teenage boys ( around 14 years)for priest hood in name of God.after they learn theology very long period of time such as 10 years. After that period they really know the sexual need. Between these period they got a unwanted status from society and family as a priest. They couldn't withdraw from priesthood ( by slaved psychologically).Some escaped and lead a normal life with good position because of their English proficiency.The parents also think they sacrifice their child for god. They also compel their children. It is a fact. But in the world first class educational institutions ,hospitals ,orphanage run by them efficiently and trust worth fully.Christianity (The bible) hate prostitution wholesomely.But now days the church also became a institution only money motive,authoritative,not compassionate.(basic principle of christianity)

A Man said...

இந்த சீர்கேடுகளை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன்!

உங்களின் ஆக்கங்கள் கிறிஸ்தவ மற்றும்' யூத எதிர்ப்பை மட்டுமே குறியாக கொண்டிருப்பதாக உணர்கிறேன். உங்களுக்கு மற்ற மதங்களின் பிழைகள் கண்ணுக்குத் தெரிவதில்லையா அல்லது பகிரங்கப்படுத்த விரும்பவில்லையா? நடு நிலைமையை நான் உங்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லையே! விரும்பினால் பதிலலியுங்கள்.

Kalaiyarasan said...

உங்களது அபிப்பிராயம் தவறானது. மேற்குலக நாடொன்றில் வாழ்பவர்களுக்கு கிறிஸ்தவ மதம் ஆதிக்க மதமாக உள்ளது. மேற்குலகில் இஸ்ரேலுக்கு ஆதரவான அரசியலை நடத்துவதற்கு வசதியாக யூத மதம் குறித்தும் மகிமைப் படுத்தப் படுகின்றன. அதனால் தான் இங்கே அதற்கு எதிரான விமர்சனங்கள் அதிகம் எழுகின்றன. ஒரு வேளை இந்தியா போன்ற இந்து மதம் ஆதிக்கம் உள்ள நாட்டில் இருந்து பார்ப்பவர்க்கு இங்குள்ள நிலைமை புரியாமல் இருக்கலாம்.

மதவாதிகள் மட்டுமே மற்ற மதத்தில் உள்ள குறைபாடுகளை சொல்லிக் காட்டும் அதே சமயம், தங்களது மதத்தை பற்றி உயர்வாக கூறுவார்கள். எனக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை. ஆகவே உங்களது விமர்சனம் எந்த அடிப்படையும் அற்றது. எந்த மதத்தையும் பின்பற்றாத என்னைப் போன்றவர்களுக்கு எல்லா மதங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம். அனைத்தும் மக்களை மூளைச் சலவை செய்யும் இயந்திரங்களாகவே பார்க்கிறோம். கிறிஸ்தவம், யூதம் மட்டுமல்ல, இந்து, இஸ்லாம், பௌத்தம் என்று எந்த மதத்தில் இருக்கும் அழுக்குகளையும், தவறுகளையும் பற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எழுதத் தான் போகிறேன். ஏற்கனவே இந்து மதத்தின் மோசமான அம்சங்களை சக பதிவர்கள் பலர் எழுதியுள்ளதை இவ்விடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அந்தப் பணியை செய்பவர்களுக்கு எனது ஆதரவு என்றென்றும் இருந்து வந்துள்ளது. நீங்கள் எங்களை எல்லாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். ஒருவரே எல்லாற்றையும் எழுதுவது நடைமுறைச் சாத்தியமற்றது.

Kalaiyarasan said...

my thoughts, நண்பரே, ஐரோப்பிய நாடுகளில் மத்திய காலத்தில் (அதாவது 300 வருடங்களுக்கு முன்னர்) விபச்சார விடுதி நடத்துவதன் மூலம் தேவாலயங்கள் வருமானம் ஈட்டி வந்தன. அதற்கான சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி தனியாக பதிவிட முடியும். உலகில் எந்த மத நிறுவனமும், தமது மறை நூல்களில் எழுதியுள்ளதை அப்படியே பின்பற்றுவதில்லை.

j.p Josephine Baba said...

அன்பு தோழா கலை அவர்களே,
ஒரு கிறிஸ்தவளாக இருந்துகொண்டு என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.ஆனால் உங்கள் பதிலை காணும் போது உண்மை தெரிந்துகொள்ள வேண்டுமென்று என் investigative journalist sense உணர்த்துகின்றது. ஆதாரத்துக்கான உறைவிடம் (source by ariticle or link) தர இயலுமா?

Kalaiyarasan said...

நண்பர் j.p Josephine Baba, மேலேயுள்ள பதிவு நெதர்லாந்து பத்திரிகை செய்தியின் மொழிபெயர்ப்பாகும். மூலப் பிரதி இங்கேயுள்ளது.
Catholic priest abuse claims Ireland பதிவில் ஏற்கனவே மேலதிக தகவல்களுக்கு என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்ட சுட்டிகளையும் ஒரு தடவை பார்ப்பது நன்று.

இங்கே என்னை விமர்சித்து பின்னூட்டமிடும் நண்பர்கள் அனைவரும் ஒரு உண்மையை மறந்து விட்டு பேசுகிறார்கள். இந்தப் பதிவில் எழுதியுள்ளவை எதுவும் எனது கற்பனையல்ல. நெதர்லாந்து நாளேடு ஒன்றில் வந்த செய்திக் கட்டுரையை நான் தமிழ் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். எனது பங்கு அவ்வளவே. அந்த செய்திக் கட்டுரையை எழுதியவர், நாளேட்டை நடத்துபவர் அனைவரும் கிறிஸ்தவர்கள். அயர்லாந்தில் பாதிரிகளின் கிரிமினல் குற்றங்களை அம்பலப்படுத்திய அனைவரும் கிறிஸ்தவர்கள். அந்தக் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தவர்கள் கிறிஸ்தவர்கள். இறுதியில் அந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என ஏற்றுக் கொண்டு பகிரங்க மன்னிப்புக் கேட்ட பாப்பரசர் ஒரு கிறிஸ்தவர். ஆகவே பின்னூட்டமிட்டு என்னை விமர்சிக்கும் அல்லது கண்டிக்கும் நண்பர்களை கிறிஸ்தவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் கிரிமினல்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகிறார்கள். அவ்வளவே.

A Man said...

உங்கள் பதிலுக்கு நன்றி.

மதம் என்ற பெயரால் மக்களை ஏமாற்றும் 'நிறுவனங்களை' எதிர்ப்பவர்களில் நானும் ஒருவன். அதற்காக அங்கே இருக்கும் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை. அநேகமான அப்பாவிகள் அங்குதான் உள்ளனர். ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவம், யூதம் எனத் தாக்குவது எவ்வகையில் சிறந்தது? போலிகளை விமர்சியுங்கள், நானும் உங்களோடு இணைகிறேன். அன்னை தெரேசா, காந்தி போன்றோர் ஏதோ ஒரு மதம் சார்ந்தவர்கள்தான்.

//ஒருவரே எல்லாற்றையும் எழுதுவது நடைமுறைச் சாத்தியமற்றது.//
கிறிஸ்தவம், யூதம் மாத்திரந்தான் சாத்தியமோ?

//இந்து மதத்தின் மோசமான அம்சங்களை சக பதிவர்கள் பலர் எழுதியுள்ளதை இவ்விடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்//
நான் குறிப்பிடுவது உங்கள் பதிவு, மற்றவர்களுடையது அல்ல.


//ஆகவே பின்னூட்டமிட்டு என்னை விமர்சிக்கும் அல்லது கண்டிக்கும் நண்பர்களை கிறிஸ்தவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் கிரிமினல்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகிறார்கள். அவ்வளவே//

நீங்களாக ஓர் முடிவை இவ்வளவு திடமாக திணிக்க முடியாது. நானும் உங்களை திருப்பிக் கேட்கலாம். அது அழகல்லவே.

Kalaiyarasan said...

A Man,
மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஒரு உண்மையை வலியுறுத்த விரும்புகிறேன். ஐரோப்பாவில் கிறிஸ்தவ நாடொன்றில் கிறிஸ்தவர்களால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நான் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். அவ்வளவு தான். இந்த உண்மைகள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் அதை வெளிவிட்டிருக்க வேண்டியது உங்கள் கடமை. குற்றவாளிகள் செய்த குற்றங்களை தெரிந்து கொண்டே மூடி மறைப்பதும் குற்றம் தான். எனது இந்தப் பதிவை எதிர்த்து பின்னூட்டமிட்டவர்கள் யாரும் கிறிஸ்தவர்கள் அல்ல. ஒரு உண்மையான கிறிஸ்தவன் அநீதிக்கு துணை போக மாட்டான். கொடுமை செய்தவர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டான்.

ஒவ்வொரு மதத்திலும் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டும் போது அந்த மதத்தை சேர்ந்த அடிப்படைவாதிகள் சண்டைக்கு வருவார்கள். எதற்காக எமது மதத்தை மட்டும் விமர்சிக்கிறாய்? மற்ற மதங்களை கண்டு கொள்ள மாட்டாயா? என்று விதண்டாவாதம் செய்வார்கள். இதற்கு நீங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. எத்தனையோ தடவை இஸ்லாமிய, இந்து மதங்களை சேர்ந்தவர்கள் உங்களைப் போலவே எதிர்த்து பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். மதவாதிகள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே.

Kalaiyarasan said...

A man,
இந்து மதவாதிகளை விமர்சித்த எனது பதிவுகளை இங்கே படிக்கலாம்:
மும்பையில் அரங்கேறிய சதி நாடகம்
"இறுதித் தீர்மானம்" - குஜராத் இனப்படுகொலை ஆவணப்படம்

இஸ்லாமிய மதவாதிகளை விமர்சித்த பதிவுகள் :
அல்லாஹ் யாருக்கு சொந்தம்?
ஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்

பௌத்த மதவாதிகளை விமர்சித்த பதிவுகள்:
திபெத் மடாலய மர்மங்கள்
மதவெறியன் தலாய் லாமாவின் வன்முறைகள்

Anonymous said...

கர்த்தரே! கொலைகாரப் பாவிகளான இந்தக் கம்யூனிஸ்டுகளை மன்னியாதிரும்!!

Kalaiyarasan said...

//ஒருவரே எல்லாற்றையும் எழுதுவது நடைமுறைச் சாத்தியமற்றது.//
கிறிஸ்தவம், யூதம் மாத்திரந்தான் சாத்தியமோ?//

A man,
நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். உங்களுக்காக மீண்டும் தெளிவாக விளக்குகிறேன். ஏற்கனவே பதிவுலகில் இருக்கும் நிறைய பதிவர்கள் இந்து மதத்தை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து விட்டார்கள். இந்து மதம் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவில் இருந்து அதை செய்வது நடைமுறை சார்ந்தது. அதே போன்று கிறிஸ்தவ மதம் (கூடவே யூத மதமும்) ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பாவில் இருந்து கொண்டு அந்த மதங்களை ஆராய்வது நடைமுறை சார்ந்தது. நாங்கள் எங்கே வாழ்கிறோமோ அந்த இடத்து விசேஷங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தானே மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள்? அதில் என்ன தவறு?

A Man said...

நீங்கள் என் கருத்துக்களை வேறொரு கோணத்தில் பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன். அத்தோடு நான் எந்த மதத்திற்காகவும் வக்காலத்து வாங்கவில்லை. எனவே, என்னை அந்த கூட்டத்தோடு சேர்த்துப் பார்க்கவிட்டால் மகிழ்ச்சி. சுருக்கமாகச் சென்னால் நான் மதங்களால் புறக்கணிக்கப்பட்டவன். காரணம் நீங்கள் எழுதுவதை நேரடியாக விமர்சித்தால் கிடைத்த பரிசு. அதற்காக நான் பழி வாங்கவுமில்லை, மௌனமாக இருக்கவுமில்லை. உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பது, என் வாதத்திற்கு வலுவூட்டவே. ஆனால் நான் இறை நம்பிக்கை கொட்டவன். இறைவன் பெயரால் அநீதி செய்பவனல்ல.

கிறிஸ்தவமோ யூதமோ தனியொருவக்கு செந்தமல்ல! பாப்பரசரை, பாதிரியார்களை மற்றும் மத ஏமாற்றுப் பேர்வழிகளை மட்டும் சாடுங்கள். தமிழர்கள் அணைவரையும் புலிகளாக பார்க்கலாமா? அவ்வாறுதான் இதுவும்.

J.P Josephine Baba said...

அன்பு நண்பரை
மிக்க நன்றி நீங்கள் அனுப்பிய link க்கு.மேலும் மேலும் உங்கள் பதிவுகள் வர காணும் விரும்பும் ரசிகை.
ஜோஸபின் பாபா

Anonymous said...

Took me time to read the whole article, the article is great but the comments bring more brainstorm ideas, thanks.

- Johnson