Thursday, July 30, 2009

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

மலேசியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு தண்டனையாக பிரம்பால் அடித்து சித்திரவதை செய்யப்படும் கொடுஞ்செயலை சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கைகள் கண்டித்து வந்துள்ளன. நாகரிக உலகிற்கு ஒவ்வாத பிரம்படி தண்டனைக் காட்சி (இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)ஒன்றின் வீடியோ, இணையத்தில் வெளிவந்த பின்னர் சில ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து சில மனித உரிமை ஸ்தாபனங்கள் மலேசிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவாரம்பித்தன. அழுத்தங்களுக்கு பதிலளித்த மலேசிய உள்துறை அமைச்சர் தங்களது தண்டனை வழங்கலில் தவறு இல்லை என வாதாடியுள்ளார். கிரிமினல்கள், போதைவஸ்து கடத்துபவர்கள் ஆகியோருக்கே பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், ஒரு குற்றமும் செய்யாத வெளிநாட்டினரும் பாதிக்கப்படுகின்றனர். நாட்டினுள் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்பவர்கள், விசா காலாவதியானவர்கள், அகதி தஞ்சம் கோருவோர் ஆகியோருக்கும் பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது. Amnesty International, Malaysia: End caning as a punishment against immigrants

பாகிஸ்தான் ஸ்வாட் பகுதியில் தாலிபான் பிரம்படி தண்டனை வழங்கும் வீடியோ ஒன்று சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவத்தைப் பெற்றது. அந்த வீடியோ உலக மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி, பாகிஸ்தான் அரச படைகளின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த உதவியது. அதே நேரம் மேற்குறிப்பிட்ட மலேசிய வீடியோ பெருமளவு சர்வதேச ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அதற்குக் காரணம், மலேசிய ஆட்சியாளர்கள் மேற்குலகின் உற்ற நண்பர்கள் என்பதாலா?

14 comments:

Sathis Kumar said...

அன்பின் கலை,

ஒரு மலேசியன் என்கிற முறையில் எங்கள் நாட்டில் நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்து மிகவும் வேதனையடைகிறேன்.

கள்ளக்குடியேறிகளுக்கும் அடைக்கலம் நாடிவரும் அகதிகளுக்கும் இதுபோன்ற தண்டனை வழங்குவது மனிதநேயத்தை கேவலப்படுத்தும் செயலாகும்.

தங்களின் பதிவில் ஒரு சிறு திருத்தம். நீங்கள் பதிவிட்டிருக்கும் காணொளி காட்சி ஒரு பெண்ணை கற்பழித்த, 10 ஆண்டுகால சிறைதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு கொடுக்கும் கசையடியாகும்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு கசையடி இவ்வளவு கொடூரமாக கொடுக்கப்படாது. இருப்பினும், சட்டவிரோத குடியேறிகளுக்கு, அகதிகளுக்கு கசையடி என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதை நான் முழுதும் ஒப்புக் கொள்கிறேன்.

அன்புடன்,
கி.சதீசு குமார்

Anonymous said...

இந்த பிரம்படி தண்டனை மலேசியாவின் அண்டை நாடான சிங்கப்பூரிலும் இருக்கிறது

சிங்கக்குட்டி said...

என்ன கொடுமை இது???

Tamilvanan said...

வணக்கம் 31 7 2009

எங்கள் மலேசிய நாட்டில் அகதி தஞ்சம் கோருவோருக்கு கசையடி தண்டனை கொடுப்பதாய் கூறுவதில் எந்த அளவு உண்மையிருக்கும் என்பது கேள்விக்குறியே.
உண்மையாய் இருக்காது என்றே நம்புகிறேன்.

அதுவே கள்ளக்குடியேறிகளுக்கு கசையடி தண்டனை வழங்குவது நியாயமே. ஒரு நாட்டின் அனுமதி இல்லாமல் குடியேறுவது தவறு என்று தெரிந்து தானே வருகிறார்கள். அது மட்டுமி்ன்றி கள்ளக் குடியேறிகளால் சமூக சீர்கேடுகளும், பொருளாதார பாதிப்பும் அதிகம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Unknown said...

முன்னைய காலத்தில் அறிவு வளர்ச்சி இல்லாத காரணத்தால் மனிதர்கள் மிருக குணத்துடன் இருந்தனர். தற்காலத்தில் அறிவு வளர்ச்சி கூடிப்போய் மனிதர்கள் மிருகங்களாக மாறிவிட்டனர். இத்தண்டனை கண்டிக்கபடவேண்டியதுதான் இருப்பினும் தப்பு செய்பவர்களும் இப்போது மிக மோசமான மிருகதனங்களை கையாளுகின்றனர். அதுதான் இப்போது இத்தண்டனைகளை குறை சொல்ல இயலாத நிலையில் உள்ளது.

Kalaiyarasan said...

சதீசு குமார், சிங்கக்குட்டி, tamilvanan, ratheesan....

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. சமூகத்தில் நிலவும் குற்றச் செயல்களை மனிதாபிமற்ற தண்டனைகள் வழங்கி நிறுத்த முடியாது. தண்டனை என்பது ஒரு குற்றவாளியை திருத்தும் நோக்கிலேயே வழங்கப்படுகின்றது. தண்டனை என்ற பெயரில் சித்திரவதை செய்பவர்களும் குற்றவாளிகள் தான். இங்கே மலேசியாவின் கசையடித் தண்டனையை சிலர் நியாயப்படுத்த முனைவது போலத் தான் ஆப்கானிஸ்தானில் தாலிபானும் தங்கள் செயலை நியாயப்படுத்தினார்கள்.

மறுபக்கத்தில் சட்டவிரோத குடியேறிகளால் மலேசிய பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததை யாரும் மறுக்க முடியாது. தேவையான நேரம் அவர்களின் உழைப்பை பயன்படுத்தி விட்டு, வேண்டாவிட்டால் கசையடி கொடுத்து விரட்டுவது சுத்த அயோக்கியத்தனம். அகதி தஞ்சம் கோருவோருக்கும் தண்டனை வழங்குவது மனிதநேயமற்றது. சட்டவிரோத குடியேறிகளின் பிரச்சினை மேற்குலகிலும் உள்ளது. ஆனால் அங்கே அதிக பட்சம் சிறைத் தண்டனை வழங்கி விட்டு நாடு கடத்துகின்றனர்.

ummar said...

மிகவும் கண்டிக்க தக்கது மிருகங்களைக்கூட அப்படி அடிக்க கூடாது என்று சட்டம் சில நாடுகளில்
இருக்கிறது.

Unknown said...

this is foolish (bruteles) punishment, malaysia was one of my favorite before, now i hate malaysia other than any country

இல்யாஸ் said...

சவூதியில் கூட கள்ள குடியேறிகளுக்கு இது மாதிரி தண்டனை கிடையாது, சிறையில் வைத்து அனுப்பிவிடுவார்கள். இது மிக கொடுமை..

Dr.Sintok said...

//சர்வதேச மன்னிப்புச் சபை //
அது என்ன சர்வதேச மன்னிப்புச் சபை...இந்த சர்வதேச சபை என்ன செய்கிறது.....???


//
தங்களின் பதிவில் ஒரு சிறு திருத்தம். நீங்கள் பதிவிட்டிருக்கும் காணொளி காட்சி ஒரு பெண்ணை கற்பழித்த, 10 ஆண்டுகால சிறைதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு கொடுக்கும் கசையடியாகும்.//

கசையடி காட்டுமிராண்டிதனமா??
பாலியல் வன்கொடுமை படுத்தும் காட்டுமிராண்டிகளை என்ன செய்வது...??

கசையடி காட்டுமிராண்டிதனம் என்றால் சிறை தண்டனை காட்டுமிராண்டிதனம் இல்லையா....???

Anonymous said...

தவறான தகவலை முதலில் சரி செய்யுங்கள். அல்லது அதற்காக வருத்தம் தெரிவிக்கும் நாகரீகத்தை மேற்கொள்ளுஙகள்.

தண்டணைகளை பாதிக்கப் பட்டவர்களின் கண் கொண்டு பாருங்கள். கற்பழிக்கப்பட்டவர் உங்கள் தங்கையோ தமக்கையோவென்றால் இந்த தண்டணை போதும் என்பீர்களா? குறைவு என்பீர்களா? கூடாது என்பீர்களா?

ivingobi said...

தண்டணைகளை பாதிக்கப் பட்டவர்களின் கண் கொண்டு பாருங்கள். கற்பழிக்கப்பட்டவர் உங்கள் தங்கையோ தமக்கையோவென்றால் இந்த தண்டணை போதும் என்பீர்களா? குறைவு என்பீர்களா? கூடாது என்பீர்களா?
yosikkavaendiya visayam

Barari said...

THANDANAIKAL KADUMAI ILLATHTHAAL KUTRANGAL PERUKIRATHU.KALLA KUDIYERIKALAL PORULAATHAARAM MEMPADATHU.MAARAAKA SATTAM OZUNGU PIRATCHINAI THAAN ERPPADUM.THANDANAIYAI PAATHIKKA PATTAVANIN PAARVAIYIL IRUNDU PAARUNGAL NIYAAYAM PURIYUM.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

மலேசியாவில் சிக்குண்டிருக்கும் ஈழத் தமிழர் மற்றும் இன்ன பிறர்

http://www.sbs.com.au/dateline/story/watch/id/600182/n/Malaysia-s-Crackdown