அப்பாவி பாலஸ்தீனியர்கள் மீது ஆயுதமேந்திய யூத காடையரின் வன்முறைகளைக் காட்டும் வீடியோக்கள் இவை.இஸ்ரேலில் ஒரு தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தால் போதும். வரிந்து கட்டிக் கொண்டு உலகின் அத்தனை தொலைக்காட்சிகளும் 24 மணிநேரம் அதையே காட்டிக் கொண்டிருக்கும். பாலஸ்தீன வன்முறையை ஆர்வத்துடன் பதிவு செய்யும் ஊடகங்கள், பாலஸ்தீனத்தில் அத்துமீறிக் குடியேறும் யூதர்களின் வன்முறையை கண்டுகொள்வதில்லை. இத்தனைக்கும் பாலஸ்தீனர்கள் மீதான யூத குடியேற்றவாசிகளின் வன்முறை அங்கே தினம் தினம் நடந்து வருகின்றன. ஆயுதமேந்திய யூதர்கள், பாலஸ்தீன கிராமங்களை சுற்றிவளைத்து தாக்குவார்கள். பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக பாலஸ்தீன கிராமவாசிகள் இடம்பெயர்வார்கள். பின்னர் அவர்களின் வீடுகளை யூதர்கள் அபகரித்துக் கொள்வார்கள். இந்தக் கொடுமை கடந்த அறுபது ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இஸ்ரேலிய/யூத ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பாலஸ்தீனர்கள் சிலர் நூதனமானபோராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கையடக்க தொலைக்காட்சி கமெராக்கள் கொண்டு தமக்கு நேரும் இடர்களை படம்பிடித்து அனுப்புகின்றனர். "பெத் ஷலேம்" என்ற இஸ்ரேலிய மனித உரிமைகள் நிறுவனம் அந்த வசதியை செய்து கொடுத்துள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட யூதர்களின் வன்முறைக் காட்சிகளைக் கொண்ட வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு...
Israeli jewish settlers' violence in Hebron
Mosque and Muslim cemeteries Vandalised by Jewish settlers