Monday, August 08, 2011

சிங்களச் சுற்றுலாப் பயணிகள் மீதான இனவெறித் தாக்குதல்

தமிழகத்தின் அரசியல் அமைப்பொன்றின் உறுப்பினர்கள் அம் மாநிலத்துக்குச் சுற்றுலாப்பயணமாகச் சென்றிருந்த சிங்களப் பொதுமக்கள் மீது இனவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

சிங்கள மக்களுக்கு தங்குமிடங்களை வழங்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து "நாம் தமிழர்" அமைப்பு நடத்தியுள்ள ஆர்ப்பாட்டமும், தொடர்ச்சியாக சிங்கள மக்கள் மீது அவர்கள் பயன்படுத்திவரும் இனவாதச் சொற் பயன்பாடும் கண்டிக்கத்தக்கத்து.

இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகவும், முழு இலங்கை மக்களதும் நல்வாழ்வுக்கான போராட்டத்திலும் அக்கறை கொண்டுள்ள எமக்கு இச்செய்தி அருவருப்பூட்டுவதுடன் இலங்கையின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் என்பது, இலங்கை சிங்கள பவுத்த மக்களுக்கே சொந்தமானதென்றும் மற்றைய தேசிய இனங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்றும் வலியுறுத்திவரும் சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

பேரினவாத சக்திகளோடு உடன்பட்டுக்கொண்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை அரச இயந்திரத்தின் மூலம் செய்துவரும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

இன்றுவரை தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் நியாயமான அதிகாரப் பகிர்வையும் அரசியல் தீர்வையும் வழங்க மறுத்து இழுத்தடித்துவரும் அரசாங்கங்களுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

தமிழ் -சிங்கள முரண்பாட்டை ஊதிப்பெருக்கி சாதாரண மக்களை வதைத்தபடி தமது நலன்களுக்காக இலங்கையில் தலையிட நினைக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

தமிழ் மக்களது அரசியற் கோரிக்கைகள் ஒருபோதுமே சிங்களப் பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்கக்கூடாது.

ஆனால் வருத்தமளிக்கும் விதமாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தை சிங்கள மக்களுக்கு எதிரானதாகவும் சிங்கள மக்கள் மீதான வன்முறையாகவும் தடம் மாற்றிக்கொண்டுபோகும் குறுகிய இனவாதக் கண்ணோட்டத்தையே பல்வேறு தமிழர் அமைப்புக்கள் கொண்டிருந்தன, கொண்டிருக்கின்றன.

இலங்கைப்பிரச்சினையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் வெறும் வாய்ப்பேச்சும் உணர்ச்சிவசப்படுதலும் நிரம்பியதாக உரிமைப்போராட்டத்தை மாற்றி அதனைக் கேலிக்குரியதாக மாற்றுகின்றன.

இது இனப்பகையை மேலும் மேலும் தூண்டுவதன் மூலம் . மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு நன்மை செய்வதாக மாறிப்போகும்.

இத்தகைய அமைப்புக்களை இனம்கண்டு புறக்கணிக்கவும் தோற்கடிக்கவும் தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.

சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளைப் புறக்கணிக்கும் சிங்கள மக்களோடு, இந்த நாட்டின் அனைத்துமக்களும் சமமான அதிகாரங்களோடும் சம வாய்ப்போடும் வாழவேண்டும் என்று நேர்மையாக விரும்புகிற சிங்கள மக்களோடு இணைந்து போராட முயற்சி செய்யவேண்டும்.

இத்தகையை போராட்டமானது இலங்கையில் வாழும் அனைத்து மக்களதும் நல்வாழ்வுக்கானதாக அமையும். கொள்ளைக்கார உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளைத் தோற்கடித்து இலங்கையர்களுக்கு சிறப்பான எதிர்காலம் ஒன்றினை அமைத்துக்கொடுக்கும்.

சிங்கள மக்கள் மீது தமிழகத்தில் இடம்பெற்ற இனவெறி கொண்ட வன்முறைகளுக்காக தமிழர் என்ற அடிப்படையில் சிங்கள மக்களிடம் மன்னிப்பைக் கோருகிறோம்.

தமிழர் மீது நடந்த நடந்துவரும் பேரினவாத வன்முறையை ஒவ்வொரு தருணத்தும் தவறாது கண்டித்து வருகிறவர்கள் என்ற முறையில், அதே நியாயத்தின் அடிப்படையில் தமிழரின் பேரல் நடக்கும் வெறியாட்டைத்தைக் கண்டிக்கும் கடமையும் உரிமையும் நமக்குண்டு என்று நாம் கருதுகிறோம்.

21 comments:

Mohamed Faaique said...

சொந்த அரசியல் இலாபத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவானுங்க..

Unknown said...

சும்மா கணினி முன்பு அமர்ந்து தட்டி கொண்டிருக்கும் நமக்கெல்லாம் அதன் வலி தெரியாது.

ஒரு லட்சம் விதவை பெண்கள்.... 22000 பெண்களுக்கு கை கால்கள் இல்லை...நான் அகதி முகாமில் சந்தித்த ஒரு இளம்பெண்ணை மட்டும் 4 ஆண்கள் ஒரேநேரத்தில் கற்பழித்திருக்கிறார்கள்.அதுவும் ஆறு மாதங்கள் தங்கள் கூடவே வைத்திருந்து...அந்த பெண்ணுக்கு இப்போது வேளை வாங்கி கொடுத்து தங்கள் எங்கள் கண் பார்வையிலேயே வைத்திருக்கிறோம். ''முத்துக்குமார் ' இயக்கத்தை சேர்ந்த ஒரு இளைஞன் அந்த பெண்ணை மனம் செய்து கொள்ள முன்வந்திருக்கிறான்.

நிற்காமல் 10 கிலோ மீட்டர் விடாமல் ஓடியே சிங்களவர்களிடமிருந்து தப்பித்திருக்கும் பெண்ணை நான் சந்தித்திருக்கிறேன். ஓவ்வொரு இரவுகளும் அங்கிருக்கும் முகாம்களில் பெண்கள் பயந்து நடுங்கிக்கொண்டு இருப்பார்களாம்.அங்கிருக்கும் இளம் பெண்கள் ராணுவ அதிகாரிகளுக்கு 'சப்ளை' செய்யப்படுகிறார்கள். இன்னும் எத்தனையோ அக்கிரமங்கள்.... முழுவதும் இங்கு என்னால் பகிர முடியாது..2 நாட்கள் இதையெல்லாம் கேட்டுவிட்டு சாப்பிட முடியவில்லை


இதையெல்லாம் கேட்கும் போது உணர்வுள்ள மனிதனுக்கு கோபம் வரத்தான் செய்யும்.அதனால் தான் சிங்களவனை கண்டதும் கோபத்தில் கொந்தளிதிருக்கிரார்கள். என்ன பெரிய வன்முறை நிகழ்ந்துவிட்டதாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள்... இது ஒரு சாதாரண நிகழ்வு..

நினைத்து பாருங்கள்..உங்கள் வீட்டு பெண்மணிகள் 4 ,5 ஆண்களால் கற்பழிக்கப்பட்டால் கோபப்படாமல் 'காந்தியம் ' பேசிக்கொண்டிருப்பீர்களா?

Anonymous said...

இது த‌மிழ‌ர்க‌ள் இன‌வெறிய‌ர்க‌ள்னு முத்திரை குத்த‌ செய்ய‌ப்ப‌ட்ட‌ ச‌தி மாதிரி தெரியுது. ஏதோ நாட‌க‌ம் மாதிரி இருக்கு.

சிங்க‌ள‌ ராணுவ‌ம் ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை கொன்று குவித்த‌தும், அத‌ற்கு த‌மிழ்நாடு ஆத‌ர‌வு கொடுத்த‌தும் உல‌க‌றிந்த‌ செய்தி.... அப்ப‌டி இருக்க‌ இவ‌ர்க‌ள் நான் சிங்க‌ல‌ன்னு முத்திரை குத்துர‌ மாதிரி டி‍ ச‌ர்ட்டு போட்டு இங்க‌ வ‌ர‌ கார‌ண‌ம் என்ன‌?

எதுவுமே க‌ண்ணால் காண‌ப‌து பொய், காதால் கேட்ப‌து பொய். தீர‌ விசாரிப்ப‌தே மெய்.

Anonymous said...

அதை செய்த‌து த‌மிழ‌ர்க‌ளே இல்ல‌ன்னு நான் நினைக்கிறேன்....

ந‌ம்ப‌ ஆட்க‌ளுக்கு ப‌க்க‌த்து ஸ்டேட்ல‌ இருக்க‌ற‌ தெலுங்கு, ம‌லையாள‌ம், க‌ர்னாட‌கா எழுத்துல‌ எது தெலுங்கு, எது ம‌லையாள‌ம்னே அடையாள‌ம் க‌ண்டுபுடிக்க‌ தெரியாது...இதுல‌ இல‌ங்கை போய் சிங்க‌ள‌ம் எல்லாம் க‌த்து இருப்பாங்க‌ளா?

ஏதோ நாட‌க‌த்த‌ன‌மா இருக்கு...அதுவும் அவ‌ங்க‌ டிரெஸ்ஸே இல்லாத‌ மாதிரி சிங்க‌ள‌ எழுத்து போட்ட‌ டி ச‌ர்ட் போட்டு வ‌ர்ற‌தும், இவ‌ங்க‌ளும் அது கரெக்டா சிங்க‌ள‌ எழுத்துன்னு க‌ண்டுபுடிச்சு அவ‌ங்க‌ள‌ போய் தாக்க‌ற‌தும்.....என்ன‌மோ சூழ்ச்சியா தான் இருக்க‌ணூம்.

பிடித்த‌வ‌ர்க‌ளை வைத்து விசாரித்தால் தான் தெரியும் உண்மை.

Tsri1 said...

தமிழகத்தில் உள்ள நாம்தமிழர் இயக்கத்தினரின் மிகவும் கேவலமான செயல் இது.

Tsri1 said...

ஒரு லட்சம் விதவை பெண்கள்.... 22000 பெண்களுக்கு கை கால்கள் இல்லை. -யோஹன்னா யாழினி

இவைகள் எல்லாம் புலிகள் இலங்கை தமிழர்களுக்கு தந்த பரிசு.

Kalaiyarasan said...

யோஹன்ன யாழினி,

நீங்கள் கூறிய சம்பவங்களை யாரும் மறுக்கவில்லை. ஆனால், சிங்களவர்கள் செய்தவற்றிற்கு தமிழர்கள் பழிவாங்குகிறார்கள் என்ற அர்த்தத்தில் பேசியிருப்பது தவறானது. இதனால் சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களை நீங்கள் நியாயப் படுத்துகின்றீர்கள். போர்க்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும். தமிழர்களுக்கு கொடுமை செய்த சிங்கள இனவெறியர்கள் தண்டிக்கப் பட வேண்டும். ஆனால், நீங்கள் கூறுவதைப் போல ஒட்டு மொத்த சிங்களவர்களையும் பகைத்துக் கொண்டால், அதனால் சிங்கள இனவெறியர்களுக்கு தான் அதிக இலாபம். "தமிழர்கள் அனைவரையும் சிங்களவர்களை வெறுக்கிறார்கள்" என்பன போன்ற பிரச்சாரம் தான் அவர்களது ஆதரவாளர்களை பெற்றுத் தருகின்றது. அதனை மெய்ப்பிப்பது போல தமிழர்கள் நடந்து கொண்டால், அது இறுதியில் சிங்கள இனவெறியர்களின் கரத்தைப் பலப்படுத்துவதாகவே அமையும். அதே போன்று சிங்கள மக்களும் தம் மத்தியில் உள்ள இனவெறியர்களை இனம் கண்டு ஒதுக்க வேண்டும். சிங்கள பொதுமக்களையும், சிங்கள இனவெறியர்களையும் பிரித்து வைப்பதற்கு தமிழர்களும் ஒத்துழைக்க வேண்டும். தமிழர்களிலும் இனவெறியர்கள் இருக்கிறார்கள். இவர்களை நீங்கள் இனம் கண்டு ஒத்துக்கா விட்டால், நாளைக்கு முழுத் தமிழினத்திற்கும் அழிவைத் தேடித் தருவார்கள். தமிழினத்திற்கு அழிவைத் தேடித் தருவது ஒன்றே உங்களது குறிக்கோளாக இருந்தால், தமிழ் இனவெறியர்களின் செயலை தாராளமாக ஆதரிக்கலாம்.


இந்தக் கொடுமைகளை செய்த சிங்களவர்கள் போன்று தமிழர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்று போதிக்கின்றீர்கள். இதே போன்ற காரணங்களை கூறி, துவேஷத்தை வளர்க்கும் சிங்கள இனவெறியர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? இத்தகைய பழிவாங்கும் அரசியல் விடுதலைப் போராட்டமாகாது. இது வெறும் இனவாத வன்முறை. "எனது குடும்பத்தில் ஒருவனை கொன்றதற்காக, அவனது குடும்பத்தில் ஒருவனைக் கொன்று பழி தீர்த்தேன்" என்பது காட்டுமிராண்டிகளின் அரசியல். மனிதன் நாகரீகமடைந்த 21 ம் நூற்றாண்டில் அதனை போதிப்பது, தமிழினத்திற்கு அவமானம் தேடித் தரும் செயலாகும். இத்தகைய கோழைத்தனமான செயலில் ஈடுபட்டவர்களை தமிழர்கள் என்று அழைக்க முடியாது. எந்தவொரு தமிழனும் இப்படியான கீழ்த்தரமான செயலில் இறங்க மாட்டான்.

கேரளாக்காரன் said...

Sattamavathu saamiyaavathu rendume sethu pochu adichathu sarithan kalutha vittaila munn vitta vera pinn vitta vera illa ella singalavanum saagavendiyavanuga than.allahu akbar

Kalaiyarasan said...

//இவ‌ர்க‌ள் நான் சிங்க‌ல‌ன்னு முத்திரை குத்துர‌ மாதிரி டி‍ ச‌ர்ட்டு போட்டு இங்க‌ வ‌ர‌ கார‌ண‌ம் என்ன‌?//

சிறுபிள்ளைத் தனமாக உள்ளது உங்களது கேள்வி. சிங்கள எழுத்துப் பொறித்த டி சேர்ட் போடுவது குற்றமாகுமா? ஆங்கிலத்தில் ஆபாச வாசகங்களைப் பொறித்தவர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் நடமாடுகின்றார்கள்? அவர்களை எல்லாம் என்ன செய்தீர்கள்?

அந்த டி ஷேர்ட் களில் என்ன எழுதியிருந்தது? "தமிழனை கொல்ல வேண்டும்" என்பன போன்ற வாசகங்கள் பொறிக்கப் பட்டிருந்தனவா? இதனை உங்களால் நிரூபிக்க முடியுமா? அவர்கள் சட்டத்திற்கு மாறாக நடந்து கொண்டிருந்தால், அது பற்றி போலீசில் முறைப்பாடு செய்யவில்லை, ஏன்? கவனிக்கவும்: "சிங்களவர்கள் முதலில் வன்முறையில் இறங்கினார்கள் ", என்று கூட நீங்கள் தெரிவிக்கவில்லை. அந்த வகையில், யார் மீது குற்றம் விழுகின்றது? ஒரு ரவுடிக் கும்பல் தனது கையில் சட்டத்தை எடுப்பதை அனுமதிக்கின்றீர்களா? இந்தியாவின் வேறு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் தமிழர்கள் தாக்கப் பட்டால், அதையும் ஆதரிப்பீர்களா? இனவெறியர்கள் எங்கேயும் உண்டு. தமிழர்கள் மத்தியிலும் உண்டு. இவர்களை இனங்கண்டு ஒதுக்கா விட்டால், முழுத் தமிழினத்திற்கும் அழிவைத் தேடித் தருவார்கள். "தமிழர்கள் என்றால் காட்டுமிராண்டிகள்" என்ற அவமானத்துடன் தலைகுனிந்து வாழ வேண்டும் என்பது தான் உங்களது நோக்கமா?

Kalaiyarasan said...

//அதை செய்த‌து த‌மிழ‌ர்க‌ளே இல்ல‌ன்னு நான் நினைக்கிறேன்....//

ஆமாம், தமிழர்கள் இத்தகைய ஈனத்தனமான செயல்களில் இறங்க மாட்டார்கள். ஆனால், தமிழர்கள் மத்தியில் இனவெறியை வளர்க்கும் பாஸிச கும்பல் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த உண்மையை மறுக்க முடியாது. அதற்கு வக்காலத்து வாங்குவது போல பலர் கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். ஹிட்லரும், முசோலினியும் இதே பாணியில் தான் தமது இனவெறி அரசியலை ஆரம்பித்தார்கள்.

Anonymous said...

அவர்கள் செய்ததில் தவறொன்றுமில்லை. 60 வருடங்களாக சிங்களவன் தமிழரை அடித்து அழித்ததன் பிரதிபலன் இது. கொத்துக் கொத்தாய் தமிழர் அழிந்ததை பாற்சோறு பொங்கி வெடிகொழுத்தி ஆடிப்பாடி மகிழ்ந்த இனம். இவர்களுக்குப் புரியவேண்டும் அடித்தால் வலிக்கும் என்பது. விதைவைகள் புலிகள் தந்த பரிசு என்று எழுதிய முட்டாளே புலிகளின் பிரசன்னத்திற்கு முன் இவைகள் அங்கு நடக்கவில்லையா? வரலாற்றை புரட்டிப் பார்.

அஹோரி said...

தல,
அப்படியே ரெண்டு பொண்ணுக கழுத்துல கைய போட்டி கிட்டு நடந்து போற மாதிரி ஒரு போட்டோ எடுத்து வச்சிகோங்க பின்னால ஓதவும்.

தமிழ் நாட்டுல கொட்டுற மழைல சங்கிலி போராட்டம் , தன்னை தானே எரிச்சிகிறது, உண்ணாவிரதம் ( கருணாநிதி உண்ணாவிரதத்த தவிர ) இப்படி நிறைய எதிர்ப்புகள இனவெறிக்கு எதிரா தமிழன் பண்ணப்ப சிங்கள பொது மக்கள் என்ன புடிங்கிகிட்டா இருந்தானுங்க ...

இது ஒரு வகையான எதிர்ப்பே ... அப்பிடி பாத்தா போதும். போதிமரத்து அடியில உக்காந்து பதிவு போடவேண்டிய அளவுக்கு காட்டுமிராண்டி தனத்த தமிழன் பண்ணிடல.

இளங்கோ said...

இப்படியே போய் கொண்டு இருந்தால் இலங்கை தமிழர் பிரச்சினை இப்போதைக்கு தீராது.

Anonymous said...

அய்யா மகராசா கலையரசா அப்படியே ஸ்ரீலங்கா வரைக்கும் போயிட்டு வந்திங்கனா நல்லாருக்கும்.
ராஜபக்சீ லங்கா ரத்னா விருது குடுக்க உமக்காக கத்துட்டு இருக்காரு கொஞ்சம் போய் வாரும்..

உம்மை மாதிரிதான் ஒரு கும்பல் பஸ்ல மானவிகள உயிரோட கொளுத்துன குண்டர்களுக்கு துக்கு தண்டனை குடுத்தப்ப
தங்களூட உயிர் போற மாதிரி பதருனனுங்க...

மனிதனைப் போல நடிப்பதை நிறுத்துங்கள்
இது மாதிரி விளம்பரம் தேடும் முயற்சிகளை விட்டுவிட்டு முல்வேளிகளுக்குள் சித்திரவைபடும் அப்பாவிகளுக்காக நீங்கள் குரல் குடுத்தால்
தமிழன் தலை நிமிர வாய்ப்புண்டு

Tsri1 said...

தமிழகத்தில் நாம் தமிழர் இயக்கத்தினால் எவ்வளவு மோசமான துவேஷம் வளர்க்கபடுகிறது என்பதிற்க்கு உங்களுக்கு வரும் பின்னோட்டங்களே சான்று தெரிவிக்கின்றன.

இளங்கோ said...
இப்படியே போய் கொண்டு இருந்தால் இலங்கை தமிழர் பிரச்சினை இப்போதைக்கு தீராது.

இலங்கை தமிழர்கள் பிரச்சனை தீர்ந்தால் தமிழக அரசியல் மிகவும் boring ஆகிவிடுமே!!

vazha vaippavan! said...

இனிமேல் பாதுகாப்பு கருதி ஹிந்து ராம் அல்லது தினமலம் ரமேஷ் அல்லது சண் தொலைகாட்சி போன்ற இடங்களில் சிங்களவர்கள் தங்கலாம்:

aotspr said...

"சிங்கள மக்கள் மீது அவர்கள் பயன்படுத்திவரும் இனவாதச் சொற் பயன்பாடும் கண்டிக்கத்தக்கத்து".
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

வலிப்போக்கன் said...

சிங்கள இரானுவம் இங்கே பயிற்சிக்கு வந்த போது என்ன செய்தார்கள் இந்த
வீரர்கள்

Vandhan said...

Vannakkam, tamilaragalay, Tamilnaatileruthu [Naam tamilar iyakkam] v.vendhan -Singala makkalai naam ethirigalaga paarkavilai aa'naal tamilaga meenavar a'dithaal singalavargalai a'dippom. Tamilnaatirku singalavargal varakkudathu.

நிகழ்வுகள் said...

எமது எதிரியை தோற்கடிக்க வேண்டுமானால் அவன் பின் உள்ள மக்கள் மனங்களை வென்றால் மட்டுமே முடியும்...

உங்கள் கருத்துக்களை முழுதாக ஏற்றுக்கொள்கிறேன்..இவர்களின் இவ்வாறான நடவடிக்கைகாளால் குரோதங்கள் தான் அதிகரித்து செல்லும்...

Colvin said...

சிஙகளவர் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. நாமும் இனவாதிகள் என காட்ட வேண்டுமா?
அதற்காக சிங்களவரோ அல்லது இலங்கை அரசோ உரிமைகளை பெற்றுத் தரும் என நினைப்பது மடமை. பெரும்பாலான சிங்களவர்கள் சமஷடிக்கு எதிராகவே உள்ளனர். இலங்கை அரசும் ஒற்றையாட்சி> மற்றும் காணி பொலிஸ் உரிமைகள் விடயத்தில் தெளிவாக உள்ளது. தற்போது உள்ள நிலைமைகள் தொடருமேயன்றி மாறும் என நினைப்பது மடமை. நீங்கள் குறிப்பிடுவது போன்ற செயற்பாடும் பயன்தரப்போவதில்லை. விதியை நொந்து அதனை ஏறறு வாழப்பழகுவதே சரி.