Monday, August 23, 2010

ஊர் இலிருந்து ஈராக் வரை - வரலாற்றுத் தொடர்

(பகுதி : ஒன்று)
ஐரோப்பியர்கள் நாகரீகமடைவதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, ஈராக்கியர்கள் நாகரீகமடைந்த மக்களாக வாழ்ந்துள்ளனர். அதனை நிரூபிக்கின்றன ஈராக்கின் புராதன நகரங்கள். இன்று ஈராக் என அறியப்படும் நாடு, கிரேக்கர்களால் "மெசொப்பொத்தாமியா" (இரு நதிகளுக்கு இடைப்பட்ட தேசம்) என்ற பெயரால் அழைக்கப்பட்டது. எனினும் அந்தப் பகுதிக்கு கிரேக்கர்கள் வருவதற்கு முன்னமே, அதாவது இற்றைக்கு 6000 வருடங்களுக்கு முன்பு, "சுமேரியர்கள்" என்ற பண்டைய நாகரிக சிறப்பு மிக்க மக்கள் அங்கே அரசமைத்திருந்தனர். அந்த சுமேரியரின் நாட்டின் தலைநகரம் "ஊர்" என அழைக்கப்பட்டது. அதிலிருந்து சிறிது தொலைவில் "உருக்" என்ற நகரம் இருந்தது. இதனை பைபிள், "எரேக்" என்று குறிப்பிடுகின்றது. அதிலிருந்து தான் ஈராக் என்ற தற்கால பெயர் வந்திருக்க வேண்டும்.

சுமேரியத் தலைநகர் ஊரில் இருந்து தான் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மும்மதத்தவருக்கும் பொதுவான தீர்க்கதரிசி ஆப்பிரஹாம் வந்தார். தமது மொழிக்கென எழுத்து வடிவத்தைக் கொண்டிருந்த சுமேரியர்கள், களி மண் தட்டுகளில் இலக்கியங்களை எழுதி வைத்துள்ளனர். அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் படி, விவிலிய நூலில் ஆதியாகமம் பகுதியில் வரும் பல கதைகள் இந்த சுமேரிய மண் தட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. (ஆனால் கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் மாறியுள்ளன.) சுமேரிய நாகரீகம் ஈராக்கின் தென் பகுதியில் வளர்ந்து வந்தது. அதே காலகட்டத்தில் வட ஈராக்கில் போர்க்குணம் மிக்க ஒரு புதிய இனம் தோன்றியது. (பைபிளில் வரும்) நோவாவின் மகன் "செம்" மின் வழித்தோன்றல்களே அவர்கள். செம்மில் இருந்து தான் யூத, அரேபிய இனங்களைக் குறிக்கும் செமிட்டியர் என்ற பெயர் வந்தது.

செமிட்டிய இனத்தை சேர்ந்த "சார்கோன்" என்ற மன்னன் தோள் வலிமையால் பிற சிற்றசர்களை வென்று, சுமேரியாவையும் அடிபணிய வைத்து, ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டினான். அதன் தலைநகரம் "அக்காட்". அந்த வெற்றிக்குப் பின்னர் தான் சுமேரியக் கதைகள் பைபிளினால் சுவீகரிக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு ஊகிக்கக்கக் கூடிய ஆதாரங்கள் நிறைய உள்ளன. நோவாவின் கதையில் வரும், ஊழிக்கால கடல் கொந்தளிப்பு கருங்கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூகோள வரைபடத்தை பார்த்தால், செம் மன்னனின் ராஜ்ஜியம் கருங்கடலில் இருந்து சிறிது தூரத்திலேயே அமைந்திருந்தது புலப்படும். மேலும் சார்கோன் மன்னனின் பிறப்பு பற்றிய கதை, யூதர்களின் மேசியா மோசஸின் கதையை ஒத்துள்ளது. ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்ட காலத்தில், சார்கோன் மன்னனின் பிறப்பு வருடாவருடம் கொண்டாடப்பட்டது. செம் மன்னனின் வம்சாவழியினராக தம்மை காட்டிக் கொண்ட யூதர்கள், பண்டைய ஈராக் மண்ணுக்குரிய கதைகளை பைபிளில் எழுதி வைத்தார்கள். பின்னர் அவற்றை தமது பரம்பரைக் கதைகள் என்று உரிமை கோரினார்கள்.

கி.மு. 1500 ஆண்டளவில் "பாபிலோன்" என்ற புதிய அரசு தோன்றியது. இவர்களின் காலத்திலும் நாகரீகம் தழைத்தது. பாபிலோனியர்களால் போற்றப்பட்ட மன்னன் ஹமுராய், மக்கள் நலச் சட்டங்களை இயற்றி, அவற்றின் வாசகங்களை நாடெங்கிலும் தூண்களில் பொறித்து வைத்தான். இதுவே நவீன சட்டங்களின் தோற்றமாக கருதப்படுகின்றது. பபிலோனியர் காலத்தைக் கணிக்கும் கலண்டரும் பாவித்து வந்தார்கள். அவர்களின் நாட்காட்டியில் 12 மாதங்களும், ஒரு மாதத்திற்கு 30 நாட்களும், ஒரு நாளுக்கு 24 மணித்தியாலங்களும் இருந்தன. பபிலோனிய சக்கரவர்த்தி நெபுகாநேசர் காலத்தில் சாம்ராஜ்யம் பாலஸ்தீனம் வரை விரிவுபடுத்தப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, பபிலோனிய தலைநகருக்கு நாடுகடத்தப் பட்டதாக யூத வரலாறு தெரிவிக்கின்றது. ஆனால் ஒரு சாம்ராஜ்யத்தின் கீழ் வாழும் சிறுபான்மை இனத்தவர்களைப் போல, யூதர்களும் பபிலோனிய தலைநகருக்கு இடம்பெயர்ந்திருக்க வாய்ப்புண்டு.

ஈராக்கிற்கு அரேபியர்கள் (முஸ்லிம்கள்) வருவதற்கு முன்னர், அதாவது கி.மு. 331 முதல் கி.பி. 636 வரை, ஈராக் முழுவதும் பாரசீகப் பேரசின் ஒரு பகுதியாக இருந்தது. இடையில் சில காலம் அலெக்சாண்டரின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்து குடியேறிய கிரேக்கர்களும் அங்கே வாழ்ந்தனர். அரேபியரின் படையெடுப்பு இஸ்லாமை கொண்டு வரும் வரை, சாரதூசர் என்ற தத்துவஞானியின் மதம் உத்தியோகபூர்வ மதமாக இருந்தது. "மாஸ்டா" என்ற கடவுளை வழிபாடும் ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட மதமாக விளங்கியது. (சாரத்தூசரின் ஓரிறைக் கோட்பாடு யூத/கிறிஸ்தவஇஸ்லாமிய மதங்களுக்கு முந்தியது.) பாரசீக சாம்ராஜ்யத்தினுள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியும், உள்நாட்டுக் குழப்பங்களும், அரேபியரின் படையெடுப்புக்கு சாதகமாக அமைந்து விட்டன.

பாரசீகப் படைகள் இஸ்லாமியப் படைகளால் தோற்கடிக்கப்பட்ட பின்பு, ஈராக்கும் இஸ்லாமியப் பேரரசின் ஒரு பகுதியாகியது. அரேபிய தீபகற்பத்தை சேர்ந்தவர்கள் ஈராக்கின் பல பகுதிகளிலும் சென்று குடியேறினார்கள். உள்ளூர் மக்களையும் இஸ்லாமிய மதத்தை தழுவச் செய்தனர். அவ்வாறு மதம் மாறியவர்கள் ஆளுபவர்களின் மொழியாகிய அரபு பேசக் கற்றுக் கொண்டார்கள். பாக்தாத் நகர் விரிவு படுத்தப்பட்டு, பேரரசின் அரசியல்-கலாச்சார மையமாகியது. சீனாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தகப் போக்குவரத்தினாலும் பாக்தாத் பலனடைந்தது. மேலும் கீழைத்தேய நூல்கள் பல பாக்தாத் அரசவையில் மொழிபெயர்க்கப் பட்டன. அந்த நூல்களில் சில ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் லத்தீனிலும், பிற ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

இஸ்லாமியர்கள் தமது மதத்தை நிறுவனப் படுத்திய பொழுது, அதன் தலைமையை "உம்மா" (பாராளுமன்றம்?) என்ற பிரதிநிதிகளின் குழு பொறுப்பேற்றது. உம்மாவின் பிரதிநிதிகள் (பாராளுமன்ற உறுப்பினர்கள்?) நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். உம்மாவின் உறுப்பினர்கள் தமக்குள் கூடி "கலீபா" என்ற பிரதிநிதியை (பிரதம மந்திரி?) தெரிந்தெடுப்பார்கள். ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய அரசுகளின் கலீபாக்கள் அனைவரும் அவ்வாறு ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டனர். இறைதூதர் முகமதுவின் மறைவுக்குப் பின்னர் தலைமைப் பதவிக்கு பலர் போட்டியிட்டனர். முகமது நபியின் மருமகன் அலி யை சில பிரதிநிதிகள் உம்மாவின் தலைவராக தெரிவு செய்தனர். ஆனால் இன்னொரு பிரிவு அதனை எதிர்த்தது. கி.பி. 661 ம் ஆண்டு, ஈராக் நகரான கூபா வில் வைத்து அலி படுகொலை செய்யப்பட்டார். இதன் விளைவாக அலியின் ஆதரவாளர்களும், எதிராளிகளும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டார்கள். அந்த சகோதர யுத்தம் இஸ்லாமிய மதத்தில் பிளவுக்கு வழி வகுத்தது. அன்றிலிருந்து அலியை பின்பற்றியோர் ஷியா (ஷியா அத் அலி - அலியின் கட்சி) முஸ்லிம்கள் என அழைக்கப்பட்டனர். ஏனையோர் சுன்னி முஸ்லிகள் என்று அழைக்கப்படலாயினர்.
ஷியா, சுன்னி முஸ்லிம்களுக்கு இடையிலான பகை இன்று வரை தொடர்கின்றது. இரண்டு பக்கமும் உள்ள மதவெறியர்கள் அந்தத் தணல் அணையாமல் பாதுக்கின்றனர். முதலாவது இஸ்லாமிய சகோதர யுத்தத்திற்கு பின்னர், ஷியா முஸ்லிம்கள் தமக்கென தனியான மதச் சம்பிரதாயங்களை பின்பற்றி தனிச் சமூகமானார்கள். இன்றைய ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும், கிராமப்புற விவசாய சமூகமாக வாழ்ந்து வருவதால் அரசியலில் ஒதுக்கப்பட்டனர். சுன்னி முஸ்லிம்கள் பெரு நகரங்களில் வாழ்ந்து வருவதால், நீண்ட காலமாக அரசு நிர்வாகத்தில் கோலோச்சினார்கள்.
16 ம் நூற்றாண்டில், அரேபிய அரச வம்சங்கள் இஸ்லாமியப் பேரரசை கட்டியாள தடுமாறிக் கொண்டிருந்தன. மேற்கில் துருக்கி ஒரு பலமான அரசியல் சக்தியாக உருவாகியது. இஸ்லாமிய மதத்தை தழுவியதால், பல்வேறு துருக்கி இனங்கள் ஒன்று சேர்ந்தன. நாகரிக வளர்ச்சியில் பின்தங்கியிருந்த துருக்கி இனங்கள், ஈராக்கில் நிலவிய உன்னதமான இஸ்லாமிய நாகரீகத்தை கண்டு வியந்தனர். (நமது நாட்டு மக்கள் ஐரோப்பியரின் நாகரிக வளர்ச்சியை கண்டு வியப்பதற்கு ஒப்பானது.) ஒன்றிணைந்த துருக்கி இனங்களின் அரசியல்-இராணுவ தலைமை ஒஸ்மானியர்கள் (ஆங்கிலத்தில் : ஓட்டோமான்) என்ற அரச வம்சத்தின் கைகளில் இருந்தது. விரைவிலேயே முழு அரபு பிரதேசங்களும் ஒஸ்மானியரின் ஆட்சியின் கீழ் வந்தன. முதலாம் உலகப்போரில் எதிரணியில் நின்ற ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரையில், ஈராக் துருக்கியரால் ஆளப்பட்டு வந்தது. அதற்கு சாட்சியமாக இன்றைக்கும் துருக்கி மொழி பேசும் சிறுபான்மையினம் ஈராக்கில் வாழ்கின்றது.

(தொடரும்)

20 comments:

Mohamed Faaique said...

read.. i hv to write a comments a lot.. so.. i'l write later...

Anonymous said...

//யூதர்கள், பண்டைய ஈராக் மண்ணுக்குரிய கதைகளை பைபிளில் எழுதி வைத்தார்கள். பின்னர் அவற்றை தமது பரம்பரைக் கதைகள் என்று உரிமை கோரினார்கள்.//

சற்று விளக்க முடியுமா?

Anonymous said...

// சாரத்தூசரின் ஓரிறைக் கோட்பாடு யூத/கிறிஸ்தவஇஸ்லாமிய மதங்களுக்கு முந்தியது.//

சாரத்தூசரின் காலம் கி.மு. 1700. ஆனால் ஆபிரகாமின் காலம் 2000 - 1850

Anonymous said...

//ஒரு சாம்ராஜ்யத்தின் கீழ் வாழும் சிறுபான்மை இனத்தவர்களைப் போல, யூதர்களும் பபிலோனிய தலைநகருக்கு இடம்பெயர்ந்திருக்க வாய்ப்புண்டு.//

வாய்ப்புக்கள் உண்டு என உங்கள் ஊகத்தைவிட்டுவிட்டு முடியுமானால் விளக்குங்கள்.

Anonymous said...

//விவிலிய நூலில் ஆதியாகமம் பகுதியில் வரும் பல கதைகள் இந்த சுமேரிய மண் தட்டுகளில் எழுதப்பட்டுள்ளன. (ஆனால் கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் மாறியுள்ளன.)//

எந்தப் பெயரும் மாறவில்லையே.

Kalaiyarasan said...

அனானி நண்பருக்கு, பைபிளில் வரும் ஆபிரகாம் என்ற பாத்திரம் சரித்திரத்தில் வாழ்ந்ததாக நிரூபிக்கப்படவில்லை. மேலும் எழுதப்பட்ட யூதர்களின் புனித நூல்கள் யாவும் சாரதூசரின் காலத்தின் பின்னர் தான் உலகிற்கு அறிமுகமானது.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். யூதர்களின் பைபிளில் வரும் கதைகள் பல சுமேரியக் கதைகள். சில சம்பவங்களும், பெயர்களும் மாறுபடுகின்றன. மற்றும் படி அவை பெரும்பாலும் ஒரே மாதிரியான கதைகள் தாம். சுமேரியரின் காலம் யூதரின் காலத்திற்கு முந்தியது. பாபிலோனியாவில் வாழ்ந்த யூதர்கள், ஆபிரகாம் உட்பட, அந்தக் கதைகளை அறிந்து வைத்திருந்திருப்பார்கள். அவற்றை தமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் பொழுது, யூத பரம்பரைக் கதைகளாக மாறி விட்டன.

//சாரத்தூசரின் காலம் கி.மு. 1700. ஆனால் ஆபிரகாமின் காலம் 2000 - 1850//
Zoroastrianism is immensely ancient. According to the Hindu tradition, Zoroaster would have lived long before 4000BCE (He is mentioned as an ancient renegade teacher several times in the RIG VEDA, which was composed somewhere around 4000BCE) Aristotle, the ancient Greek philosopher, confirms that the Persians of his time dated Zoroaster to around 6000BCE...Zoroaster is one of the most important figures in religious history. When he broke with Hinduism, he established a new set of beliefs which much later would work their way into Judaism and from there reincarnate in Christianity and Islam. The scholars who put forth the date of 1800 BCE, also claim with some logic that he may have also been known as Abraham or Ibrahim Zeradust.

There is little agreement among the scholars on the birth dates of either patriarch @ 1800 - 2000 BCE for Abraham vs. 1800 BCE for Zarathustra/Zoroaster, so if Abraham was born @ 1800 BCE this closely corresponds to the birth date of Zoroaster.

Zoroaster ~ ZarathrustraForbidden Knowledge: the Bible's Origins
Tower of Babel

Anonymous said...

//பைபிளில் வரும் ஆபிரகாம் என்ற பாத்திரம் சரித்திரத்தில் வாழ்ந்ததாக நிரூபிக்கப்படவில்லை.//

Dr. Paolo Matthiae, Director of the Italian Archeological Mission in Syria, "hit an archeological jackpot" in 1975. He discovered "the greatest third-millennium [B.C.] archive ever unearthed." It included "more than 15,000 cuneiform tablets and fragments" and unveiled a Semitic empire that dominated the Middle East more than four thousand years ago. Its hub was Ebla, where educated scribes filled ancient libraries with written records of history, people, places and commerce.[5]

"These early tablets display an ease of expression, an elegance that indicates complete mastery of the cuneiform system by the scribes," said Dr. Giovanni Pettinato, former epigraphist of the Italian Mission, who worked closely with Dr. Matthiae. "One can only conclude that writing had been in use at Ebla for a long time before 2500 B.C."

The Ebla tablets verified the worship of pagan gods such as Baal, Dagan and Asherah "known previously only from the Bible."[5] They mention the name "Abraham" and "Ur of Chaldees" (the Biblical Abraham's birthplace) as well as other familiar cities and places:

"The names of cities thought to have been founded much later, such as Beirut and Byblos, leap from the tablets. Damascus and Gaza are mentioned, as well as two of the Biblical cities of the plain, Sodom and Gomorrah. ... Most intriguing of all are the personal names found on the Ebla tablets. They include Ab-ra-mu (Abraham), E-sa-um (Esau)...."


Ref:
http://www.crossroad.to/articles2/08/archeology.htm

Anonymous said...

//There is little agreement among the scholars on the birth dates of either patriarch @ 1800 - 2000 BCE for Abraham vs. 1800 BCE for Zarathustra/Zoroaster, so if Abraham was born @ 1800 BCE this closely corresponds to the birth date of Zoroaster. //

இவை இதுவரை குழப்பமாகவேதானே உள்ளன?

Anonymous said...

//Zoroastrianism is immensely ancient. According to the Hindu tradition, Zoroaster would have lived long before 4000BCE (He is mentioned as an ancient renegade teacher several times in the RIG VEDA, which was composed somewhere around 4000BCE)//

ரிக்வேதம் கி.மு. 1700 - 1100 வரையான காலத்திற்குட்பட்டது என்பதுதானே அறிஞர்களின் கருத்தாக உள்ளது. இங்கே எப்படி 4000 ஆகியது.

Kalaiyarasan said...

//Ref:
http://www.crossroad.to/articles2/08/archeology.htm//

Your reference has been taken from a Christian propaganda web site. Is it a reliable source?

முற்றம்.காம்- தமிழர் கருத்துக்களம் said...

கலையரசன் அவர்களே,தங்கள் பதிவுகள் அத்தனையும் அருமை குறிப்பாக பாலஸ்தீனம் வரலாறு குறித்த தங்கள் பதிவுகள் தேர்ந்த மற்றும் நடு நிலையான வரலாற்று ஆசிரியர்கள் பதிவுகள் ஆகும் . தமிழில் இது போன்றதொரு செறிந்த மற்றும் தீர்க்கமான பதிவுகள் வருவது மகிழ்ச்சி. தாங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துவருகின்ற நான் உங்கள் பதிவுகளை எம் தளவாசகர்களிடமும் சென்றடைய விரும்புகிறேன். இதற்காய் தாங்கள் முற்றம் தளத்தில் இணைந்து உங்கள் பதிவுகளை தருமாறு அழைக்கின்றேன்


முற்றம்.காம் தளத்திற்காய், சக்தி கணேஷ். நன்றி!

Anonymous said...

//Your reference has been taken from a Christian propaganda web site. Is it a reliable source?//

There are Christian propaganda web sites and Anti-Christian propaganda web sites. Which is reliable source? Sometimes i would like to quote Socrates word "I know that I know nothing"

தர்ஷன் said...

அருமையான ஆரம்பம்

சிங்கக்குட்டி said...

ம்ம்ம்...ஆர்வம் கூடுகிறது தொடருங்கள்...:-)

jeevagiridharan said...

ARUMAIYANA THODAR AARAMBAMAGIYIRUKKIRATHU... VIVADHAMUM SOODU PIDIKKIRATHU. MOTHTHATHIL ENGALUKKU NALLA THAGAVAL KALANJIAM THAAN...

jeevagiridharan said...

thamizhil yeppadi type seivathu. software yedhuvum irukkiradha..

Kalaiyarasan said...

weshallovercome,
கூகிள் இணையத்திலேயே தமிழில் தட்டச்சு செய்யும் வசதியை வழங்குகிறது. நீங்கள் லத்தீன் எழுத்துகளில் தட்டச்சு செய்வதை தமிழாக மாற்றித் தரும். இங்கேயுள்ள சுட்டியை பயன்படுத்தவும்.

http://www.google.com/transliterate/indic/Tamil

Mohamed Faaique said...

பாரஸீகர்கள் நெருப்பை வணங்குபவரகள் (மஜூஸிகள்) என படித்துள்ளேன். இஸ்லாம் ஒரு போதும் கட்டாயப்படுத்தவில்லை. முஸ்லிம்களின் ஆட்சிக்காலத்தில் சவூதியில் நிறைய யூதர்,கிருஸ்த்வ கூட்டங்கள் வாழ்ந்தன. அதற்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் பாதுகாப்பும் குடுத்தனர்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு ஆட்சிக்கு போட்டியோ சண்டையோ நடக்கவில்லை. பின்னர் அபூ பக்கர், உஸ்மான், உமர், அலீ (ரலி) ஆட்சி செய்தனர்.( the hundred bookஇலும் இது சம்பந்தமாக பார்க்கலாம்) உஸ்மான் (ரலி) சில சதிகாரர்களால் கொல்லப்பட
பிரச்ச்சனை ஆரம்பமானது.
ஷியா முஸ்லிம்??//
ஷியாக்கள் முஸ்லிம் கிடையாது...
வெறும் ஷியாக்கலே...
அவர்கள் அலி (ரலி) அவர்களை நேசித்தாலும் அது இஸ்லாத்திற்கு முரணானது. அதணால் அலீ (ரலி) அவர்ளுடன் போர் புரிந்திருக்கிறார்.
அலீ (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும் போர் நடந்தது போல் காட்டப்பட்டாலும் அவர்கள் ஒற்றுமையாகவே இருந்தனர். இடையில் இருந்த கலகக்காரர்களே போரை உண்டு பண்ணினர். அவர்களே அலி (ரலி)அவர்களை நேசிப்பது போல் நடித்து முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவை உண்டு பண்ணி ஷியா`வயும் உருவாக்கினர்.

Anonymous said...

//ஷியாக்கள் முஸ்லிம் கிடையாது...//


Who is muslim? You don't have the rights to declare this?

Anonymous said...

/*
Who is muslim? You don't have the rights to declare this?
*/

சரி யாருக்கு அந்த அதிகாரம் உண்டு. இஸ்லாத்தை பொறுத்தவரை குர்ஆன் மற்றும் ஹதிசிலிருந்து மட்டுமே எடுத்துக்கொல்லவேண்டும். சியாக்களின் நம்பிக்கை இஸ்லாத்திற்க்கு எதிரானது. இஸ்லாம் என்பது முஸ்லிமாக பிறப்பதல்ல முஸ்லிமாக வாழ்வது. சன்னி முஸ்லிமாக பிறந்தாலும் குர்ஆன் மற்றும் ஹதிசுக்கு எதிராக வாழ்ந்தால் அவன் முஸ்லிம் அல்ல.