Saturday, September 19, 2009

படைப்புகளின் பட்டியல்



162. காந்தாரம் முதல் காஷ்மீரம் வரை

161. RACISM = நிறவெறி + சாதிவெறி + இனவெறி

160.ஸ்ரீ லங்கா ஜனாதிபதியை கைது செய்வது தொடர்பாக...

159. எழுதாதே எதிர்ப்பேன்

158. இருண்ட ஐரோப்பாவை நோக்கி...

157. ஒல்லாந்தரின் தேசங்கடந்த கஞ்சா வணிகம்

156. மனித அழிவில் லாபம் காணும் மரண வியாபாரிகள்

155. லெபனான் : இது ஹிஸ்புல்லா தேசம்

154.சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்

153.ஈழம் இழந்தோம் இந்தியாவில் சரண் புகுந்தோம்

152.ஐரோப்பாக் கண்டத்தை கண்டுபிடித்த ஈழ அகதிகள்

151. ஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்

150. ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்

149. சரத் பொன்சேகாவும் ஜனாதிபதி தேர்தலும், சில பின்னணித் தகவல்கள்

148. தென்னிலங்கையின் பாதாள உலகப் போர்

147. பாழடைந்த வீட்டில் குடி புகுந்தால் சிறைத்தண்டனை

146. ஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்

145. தலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்

144. உய்குர் துருக்கிஸ்தான், சீனாவின் துரதிர்ஷ்டம்

143. 9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்

142. குர்து மலையோரம் வீசும் இரத்த வாடை

141. ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? பகுதி - 2

140. ஐரோப்பாவின் எரியும் வாயு பிரச்சினை

139. "யூரோப்போல்": ஐரோப்பாவில் பயங்கரவாத எதிர்ப்புப் போர்

138. ஈராக்: 'பாத்' கட்சியின் தோற்றமும் விடுதலைப் போரும்

137. அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்

136. கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள்

135. பிலிப்பைன்சில் அமெரிக்காவின் பில்லி சூனியம்

134. நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

133. ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? பகுதி - 1

132. மேலைத்தேய நாசகார நாகரீகம்

131. இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்

130. சிம்பாப்வே: வெள்ளையனே வெளியேறு

129.ஈரான் தேர்தல்: "எல்லா வாக்கும் இறைவனுக்கே!"

128.தமிழீழ விடலைகளின் தறுதலைக் கூட்டணி

127.ஈழத்தின் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள்

126.துருக்கியில் தொடரும் "ஈழப் போர்"

125.நாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம்

124.புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்

123.மதத்தின் பொருளாதார அடிப்படைகள்

122.பெண்ணடிமைத்தனமும் மதவாத சட்டங்களும்

121.இஸ்லாமிய மத அரசியலின் தோற்றம்

120.மத அடிப்படைவாதம் : ஒரு மேலைத்தேய இறக்குமதி

119.வங்கத்தில் மையங்கொள்ளும் அரசியல் புயல்

118.தமிழீழம் சாத்தியமா? - ஓர் ஆய்வு[பகுதி-1]

117.அநாதை தேசங்கள்[தமிழீழம் சாத்தியமா?பகுதி-2]

116.கம்போடியாவின் கண்டம் ஒரு இந்துக் கோயில்

115.கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்

114.அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD)

113.கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்

112.ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !

111.நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !

110.ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை

109.காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்

108.ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1

107.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏

106.திரையில் கலாச்சார மோதல், மறைவில் வல்லரசு மோதல் (Part 2)

105.1418 ம் ஆண்டு - சீனர்கள் உலகத்தை கண்டுபிடித்தனர் (Part 1)

104.ஷரியா: ஏழைகளுக்கான மலிவு விலை சட்டம்

103.வட கொரியா: அணு குண்டு இராஜதந்திரம்

102.புதிய தாலிபான் யுத்த தந்திரங்கள்

101.சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்

100.வாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்

99.போக்கிரிகளின் புகலிடம் அமெரிக்கா - ஒரு வரலாற்று மீள்பார்வை

98.யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்

97.தடுப்பு முகாம்கள்: ஆங்கிலேயரின் மாபெரும் கண்டுபிடிப்பு

96.கிரீஸின் மனித உரிமை மீறல்கள்: ஐரோப்பாவின் களங்கம்

95.கிரீஸில் புரட்சிகர ஆயுதப்போராட்டம் ஆரம்பம்

94.திருமணங்கள் கிரிமினல்களால் நிச்சயிக்கப்படுகின்றன

93.கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்

92.மீண்டும் லெனினிடம்?

91.துபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது

90.உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா?
[பகுதி -1]
[பகுதி -2]
[பகுதி -3]
[பகுதி -4]

89.பெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை

88.பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வருகிறார்

87.பொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்

86.இஸ்லாமியத் தாயகக் கனவுகள்

85.சவூதி அரேபியா: வறுமையின் நிறம் பச்சை

84.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்

83.சர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்

82.ஐஸ்லாந்தில் புரட்சி, ஆட்சியாளர் மிரட்சி

81.குழந்தைகளை கடத்தும் வெள்ளையின மேலாண்மை

80.சர்வதேச விடுதலைப் போர்களின் திருத்தந்தை

79.ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம் (அல் கைதா: 2)

78.அல் கைதா என்ற ஆவி

77."அல்கைதா இல்லை!" ஆதாரங்களுடன் ஒரு ஆவணப்படம்

76."எயுஸ்கடி": ஐரோப்பாவின் மூத்தகுடி "

75.இஸ்ரேலை காக்கும் பைபிள் கனவுகள்

74.தாய் மொழியில் பேசுவது குற்றம்!

73.ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட அரச பயங்கரவாதம்

72.வளர்ந்த நாட்டில் ஊழல் இல்லையா? (சைப்ரஸ் தொடர்-3)

71.ஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)

70.இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்

69.தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை

68.நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா?

67.கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது

66.கிறிஸ்துமஸ் தாத்தாவின் நிறவாதம்

65.ஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை

64.யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு

63.அதிகம் சம்பாதிப்பது தேச நலனுக்கு கேடாகலாம்

62.கணணி மென்பொருளே! கலியுக பரம்பொருளே!!

61.கிழக்கே நகரும் உலக அதிகார மையம்

60.சோமாலியா, உலகின் குப்பைத் தொட்டியா?

59.இன்று கடற்கொள்ளையர்கள், நாளை கம்பெனி முதலாளிகள்

58.சுதந்திர சுரண்டல் வலையம்

57.உங்கள் கணணியில் உதிரம் வடிகின்றது!

56.பொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிகளும்

55.ஆங்கில மோகமும் தமிழின் தாகமும்

54.ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாடு

53.டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...

52.பெரு: மீண்டும் ஒளிரும் பாதை

51.இருபத்தியோராம் நூற்றாண்டின் அடிமை வியாபாரம்

50.லாபம் முதலாளிகளுக்கு, நட்டம் மக்களுக்கு

49.காசு ஒரு பிசாசு! (அனைவருக்குமான பொருளியல்)

48.மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு

47.வீடு வரை கனவு, காடு வரை கடன்

46.வள்ளல் புஷ் வழங்கும் "வங்கி சோஷலிசம்"

45.சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு

44.மனித அழிவில் லாபம் தேடும் வங்கிகள்

43.எண்ணைக் கிணறு வெட்ட வகுப்புவாதப் பூதம் கிளம்பியது

42.பாகிஸ்தானில் மதவாத அரசியல் கட்சிகளின் வளர்ச்சி

41.கம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்

40.பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து!

39.நிதியால் சிறுத்த ஐஸ்லாந்து சினத்தால் சிவக்கிறது

38.ஓர் உலக வல்லரசு உருவாகின்றது

37.இஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்

36.பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்

35.ஒபாமாவின் பார்வை காஷ்மீர் பக்கம்

34.கொல்லுவதோ இனிமை!" - ஈராக்கில் அமெரிக்க இராணுவம்

33.பனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு

32.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"

31.ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை

30.ஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு

29.உலகப்போரில் மறைக்கப்பட்ட கறுப்பு வீரர்கள்

28.ஆண்டு"0",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு

27.ரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்

26.இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்

25.லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்

24.ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்

23.சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்

22.ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள்

21.குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை

20.சைப்பிரசில் ஓர் ஈழம்

19.ஐரோப்பிய கலாச்சாரப் புரட்சி

18.வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்

17.அவதியறோவா(நியூசிலாந்து): பூர்வீக பயங்கரவாதம்

16.நெதர்லாந்து: புதுமணத்தம்பதிகளை பிரிப்போம்

15.இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்

14.அகதி வைரஸ் 2.0 (Made in Holland)

13.இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்

12.தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்

11.உலக ( உணவுக் கலவர) வங்கி

10.வட கொரியாவில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்

9.திபெத் : மதம், விளையாட்டு, அரசியல்

8.இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது

7.வெள்ளை ரஷ்யா, கடைசி சோவியத் குடியரசு

6.துபாய், முதலாளிகளின் சொர்க்கபுரி

5.குர்திஸ்தான், துருக்கியின் துயரம்

4.மொரோக்கோ, முரண்பாடுகளின் தாயகம்

3.சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்

2.சிம்பாப்வே: கறுப்பர்களின் கடமை

1. கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்

8 comments:

Pragash said...

வணக்கம் கலைஅரசன் அற்புதமான விடயங்கள், ஆனால் இதற்கு முன்னர் அறிந்திராத தகவல்கள் தமிழீழ விடலைகளின் தறுதலைக்கூட்டணி, கடிததலைப்பு விடுதலை இயக்கங்கள், ஆபிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள் எல்லாமே அசத்தல். நாங்களும் ஏதோ ஆசைப்பட்டு பதிவுகள் ஆரம்பித்து ஏதேதோ கிறுக்கிவிட்டு இந்தப்பக்கம் திரும்பி பார்த்தால் நீங்கள் பட்டையை கிளப்புறீங்கள்.பேசாமல் சொந்தபதிவுகளை நிறுத்தி விட்டு தங்களின் வாசகர் வட்டத்தில் சேர்ந்து விடலாம் ஏனெனில் தங்கள் பதிவுகள் எனது வாசிப்பு பசிக்கு சரியான தீனியாக அமைந்துவிட்டது. இதற்கு முன்னர் கிடைத்ததெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொரி போன்றது. தொடரட்டும் உங்கள் எழுத்து.

Kalaiyarasan said...

பாராட்டுதலுக்கு நன்றி, பிரகாஷ். தமிழ் இலக்கியப் பரப்பில் எனது கட்டுரைகள் தனித்துவமானவை. எனது எழுத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. வாசகர்களின் அறிவுப்பசிக்கு தீனி போடுவது எனது கடமை.

Pragash said...

வணக்கம் கலைஅரசன்!
உணமையில் தற்கொலை தாக்குதல் முறையை உலகிற்கு முதன்முதலில அறிமுகப்படுத்தியவர்கள் யார்?. இஸ்புல்லா தேசம் கட்டுரையை படித்தவுடன் சிறு சந்தேகம். தெளிவுபடுத்தவும்

Kalaiyarasan said...

வணக்கம் பிரகாஷ்,
உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முன்னதாக சிறு வேண்டுகோள். இந்தப் பின்னூட்டத்தை சம்பந்தப்பட்ட ஹிஸ்புல்லா பதிவில் இட்டிருந்தால் மற்றவர்களும் படிக்க உதவியிருக்கும்.
தற்கொலைத் தாக்குதல்களை இற்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே "இஸ்மாயில்" என்ற இஸ்லாமிய மதப்பிரிவினர் அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் தற்கொலைக் கொலையாளி, பொது இடத்தில் காத்திருந்து அரசியல் தலைவரை கொலை செய்வான். அந்த இடத்திலேயே அகப்பட்டு மடிவான். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜப்பானிய, ரஷ்ய படைவீரர்கள் எதிரியின் நிலைக்குள் சென்று தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்கள். நவீன பாணி(எமக்கு அறிமுகமான) தற்கொலைத் தாக்குதல்களை அறிமுகப்படுத்தியவர்கள் ஈரானிய இஸ்லாமிய புரட்சிப் படையினர். ஈரான்-இராக் போரின் போது ஒரு தற்கொலைப் படையே களமிறக்கப்பட்டது. ஈரானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஹிஸ்புல்லாவிடம் இருந்து புலிகளும் நவீன தற்கொலைத் தாக்குதல் உத்திகளை கற்றுக் கொண்டார்கள்.

Pragash said...

வணக்கம் கலை அரசன்! நிராஜ் டேவிட் தயாரித்து வழங்கும் ஜிடிவியின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி பற்றி அறிந்துள்ளீர்களா? இந்தியாவின் இலங்கை தமிழர்கள் பால் உள்ள கரிசனத்தை பற்றி விலாவாரியாக விபரிக்கப்பட்டுள்ளது. கேட்கும் போதே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. இந்தியாவின் கொடூர அணுகுமுறை பற்றி யுடியூப் தளத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

Kalaiyarasan said...

வணக்கம் பிரகாஷ்,
நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சியை அறிந்திருக்கவில்லை. நேபாளம் முதல் ஈழத்தமிழர் வரை இந்தியாவின் கரிசனமும், அணுகுமுறையும் எப்போதும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளன. தமிழ் தேசியத்தின் அபிலாஷைகள் இந்திய சாம்ராஜ்யத்தின் வழியை தடை செய்கின்றன. இந்தியா எழுபதுகளில் லட்சக்கணக்கான சிங்கள இளைஞர்களைக் படுகொலை செய்வதற்கு இலங்கை அரசுக்கு உதவியதைப் பற்றி அறிந்திருக்கவில்லையா?
மேலாதிக்க எண்ணம் கொண்ட பிராந்திய வல்லரசின் சுயரூபம் தமிழருக்கு இவ்வளவு காலம் தாழ்த்தி தான் தெரிய வந்ததா? இந்தியா தாய்நாடு என்று நம்பியிருந்த தமிழர் சிலருக்கு கிடைத்த ஏமாற்றத்தின் வெளிப்பாடு அது.

Pragash said...

வணக்கம் கலைஅரசன்! கடந்தகால,நிகழ்கால அரசியல் நகர்வுகள் பற்றி அறியும் பொழுது இயல்பாகவே சில சந்தேகங்கள் தோன்றுவதுண்டு. அந்த வகையில் இலங்கையில் இந்திய தலையீடுகள் பற்றி அறிந்துகொண்டிருந்த பொழுதுகளில்! பொதுவாகவே இந்தியாவின் இலங்கை தலையீடு என்பது அதன் பிராந்திய ஆதிக்க நலன் சார்ந்ததாகவே இருந்துள்ளது. தமிழர் பிரச்சினை அதற்கு ஓர் துருப்புச்சீட்டு என்பது தெளிவான உண்மை. அப்படி இருக்கையில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதால் தான் இந்திய புலிகள் முரண்பாடு தோன்றியதாக கூறப்படுவது எந்த அளவிற்கு சரியாக இருக்கமுடியும். ராஜீவை படுகொலை செய்திருக்காவிட்டலுமே ஏதேனும் ஒரு வழியில் இந்திய புலிகள் முரண்பாடு தொடரத்தான் செய்திருக்குமே என நான் சந்தேகப்படுகின்றேன். உங்களுடைய விளக்கமும் வேண்டுகின்றேன். ஒரு பக்கம் போராளி குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கிக்கொண்டே மறுபக்கம தமிழ் தேசியத்தை சிதைப்பதற்காக தமிழர் பிரதேசங்களில் இந்திய படை கஞ்சா பயிரிட்ட கதையொன்றை அறிந்திருந்தேன்.

Kalaiyarasan said...

வணக்கம், பிரகாஷ், இது போன்ற விவாதங்களை வேறொரு பதிவில் நடத்தினால் நன்றாக இருக்கும். பட்டியலை பார்வையிட வரும் பிற வாசகர்களின் கவனத்தை சிதறடிக்காமல் விட்டுவிடுவோம்.