கத்தோலிக்க பல்கலைக்கழகம், "கார்ல் மார்க்ஸ் பல்கலைக்கழகம்" என்று மறுபெயர் சூட்டப்பட்டது. மார்க்ஸ், லெனின், மாவோ ஆகியோரது படங்கள் மேற்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களை அலங்கரித்தன. அவை நடந்து நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன. 1968 பிரெஞ்சு மாணவர் எழுச்சி தந்த விளைவுகள் பற்றி திரும்பி பார்க்கும் வேளை, அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டே, வரலாற்றை பார்க்க மறுக்கும் பலர் எம்மிடையே உள்ளதையும் கவனிக்க வேண்டும். இன்று "ஐரோப்பிய கலாச்சாரம்" என்றும், "ஐரோப்பிய ஜனநாயகம்" என்றும் நாம் காணும் பல மேற்கு ஐரோப்பிய மாணவர் போராட்டங்களின் பலன்கள் என்பதை பலர் அறிவதில்லை. தற்போதும் சில திரைப்பட தயாரிப்பாளர்களும், இடதுசாரி எழுத்தாளர்களும் 1968 புரட்சியை பற்றி, மக்களுக்கு தவறாக காட்ட விளைகின்றனர். அன்றைய இளைஞர்கள் கட்டற்ற பாலியல் உறவு வேண்டினர் என்று கொச்சைப்படுத்தும் "ட்ரீமர்ஸ்" படம், மக்களுக்கு தவறான வரலாற்றை போதிக்கின்றது. "கனவு காண்பவர்கள்" என்ற தலைப்பே, புரட்சி என்பது வெறும் கனவு மட்டுமே என்று எடுத்தியம்புகின்றது.
உண்மையில் 1968 மே மாதம் பாரிஸ் பல்கலைக்கழகங்களில் இடம் பெற்ற மாணவர் புரட்சி, சூனியத்தில் இருந்து தோன்றவில்லை. அதற்கு முன்னரே ஜேர்மனிய மாணவர்களும், அமெரிக்க மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். "ஹிட்லரின் பிள்ளைகள் நாம், நாசிச கடந்த காலத்துடன் கணக்கு தீர்க்க வந்திருக்கிறோம்." என்ற முழக்கத்துடன் பெர்லின் மாணவர் போராட்டம், மேற்கு ஜெர்மனியில் பதவிகளில் இருந்த முன்னாள் நாசிச அனுதாபிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே ஆரம்பத்தில் முன்வைத்தது. பின்னர் "செம்படை பிரிவு"(RAF) என்ற ஆயுதகலச்சாரத்தை நம்பும் தீவிரவாத குழுவாகியது வேறு கதை. அதே போல தசாப்த காலம் நீடித்த வியட்நாம் போரை நிறுத்திய அமெரிக்க மாணவர் போராட்டம், பின்னர் ஹிப்பி கலாச்சாரமாக சீரழிந்தது தனிக்கதை.
அப்போது ஐரோப்பாவில் ஒரு கலாச்சாரப் புரட்சி (அரச ஆசீர்வாதத்துடன்) மக்களின் வாழ்க்கையை, சிந்தனையோட்டங்களை மாற்றியது. மதங்கள் நிர்ணயித்த பழமைவாத கட்டுப்பாடுகள் தளர்ந்தன. பாலியல் சுதந்திரம் ஐரோப்பிய கலாச்சாரத்தின் ஓரங்கமாகியது. மேலும் மார்க்சையும், மாவோவையும் படித்து விட்டு மாணவர்கள் கோரிய "அதிகபட்ச ஜனநாயகம்", வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாணவர்கள் பங்கு, தொழிலாளர் நலன் குறித்து தீர்மானிப்பதில் தொழிற்சங்கத்தின் பங்கு என்பன அதன் பின்னரே ஏற்பட்டன. பலர் நினைப்பது போல, இத்தகைய அம்சங்கள் "ஐரோப்பாவின் மூலவளங்கள்" அல்ல. அவை யாவும் அறுபதுகளில் இடம்பெற்ற மாணவர் புரட்சியின் பலன்கள்.
அன்று இருந்த ரஷ்ய சார்பு கொம்யூனிஸ்ட் கட்சிகள் யாவும் புரட்சிக்கு விரோதமாக இருந்ததால், மாணவர்கள் வெறுப்படைந்திருந்தனர். அதனால் தான் ஆங்காங்கே பல ஆயுதபோரட்டத்தில் நம்பிக்கை கொண்ட தீவிரவாத இயக்கங்கள் தோன்றின. பிரான்சில் Action Directe, ஜெர்மனியில் Rotte Armee Fraktion, இத்தாலியில் Red brigade, பெல்ஜியத்தில் CCC, என்பன குண்டுவெடிப்புகள், அரசியல் தலைவர்கள், முதலாளிகளை கொலைசெய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டன. ஜனநாயக வழியில் போராட நினைத்த மாணவர்கள் மாவோயிச கட்சிகளை நிறுவினர். இன்று தீவிரவாத இயக்கங்கள் மறைந்து விட்டன. மாவோயிச கட்சிகள் ஓரளவிற்கு நிலைத்து நிற்கின்றன.
அன்றிருந்த ரஷ்ய சார்பு கொம்யூனிஸ்ட் கட்சிகள், "ஸ்டாலினிச விரோத" அரசியலால் பாதிக்கப்பட்டு, மிதவாத நிலைஎடுத்ததும், புரட்சி ஏன் வெல்லவில்லை என்பதற்கான காரணம். ஸ்டாலினுக்கு பின்னர் வந்த குருஷேவ், ஏகாதிபத்திய எதிர்ப்பு போரை நிராகரித்து, "சமாதான சகவாழ்வு" என்ற புது சித்தாந்தம் வகுத்தால்; கருத்து வேறுபாடுகளை கொண்ட சீன, அல்பேனிய கொம்யூனிஸ்டுகள் மூன்றாம் கொம்யூனிச அகிலத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ரஷ்ய வழியை பின்பற்றிய பிற கொம்யூனிஸ்ட் கட்சிகளை "திரிபுவாதிகள்" என்றழைத்தனர். தாம் மட்டுமே புரட்சிகர பாதையில் செல்வதாக கூறினர். இதனாலேயே அறுபதுகளில் மேற்கு ஐரோப்பாவில் எழுச்சியுற்ற மாணவர்கள், மாவோவை பின்பற்றினர். இந்த வரலாற்று தொடர்ச்சியை காண மறுக்கும் சில இடதுசாரி எழுத்தாளர்கள், "1968 புரட்சியின் தோல்விக்கு" வேறு காரணங்களை தேடுகின்றனர்.
உண்மையில் அன்றைய புரட்சி வெற்றியடையாவிட்டாலும், நிச்சயமாக தோல்வியடையவில்லை. காலம்காலமாக ஐரோப்பிய மக்களின் வாழ்க்கையை தீர்மானித்த பழமைவாதிகள் செல்வாக்கற்ற சிறுபான்மயினராகினர். அந்த இடத்தை தனி மனித சுதந்திரம் பிடித்துக்கொண்டது. உண்மையில் லிபரல்களுக்கும் பிடித்த விடயம் அது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தமை, பல ஜனநாயக உரிமைகள் கிடைத்தமை என்பன, அறுபதுகளில் இடம்பெற்ற மாணவர் புரட்சியின் பெறுபேறுகள். மேற்கு ஐரோப்பிய அர
சுகள் அவ்வப்போது வெடிக்கும் மக்கள் போராட்டங்களை அங்கீகரித்து, சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் தனது இருப்பையும் தக்கவைத்துக் கொள்கின்றன. இந்த வளைந்து கொடுக்கும் தன்மை, ஆண்டாண்டு காலமாக மக்கள் போராடி பெற்ற உரிமைகளை, தான் "மனவுந்து கொடுத்த" சலுகைகள் போல காட்டிக்கொள்ள உதவுகின்றது. அதனாலே தான் இன்று உலகில் பலர், 1968 பிரெஞ்சு புரட்சியை போன்ற பல விடயங்களைப் பற்றி கேள்விப்படாதவர்களாக உள்ளனர்.
உண்மையில் 1968 மே மாதம் பாரிஸ் பல்கலைக்கழகங்களில் இடம் பெற்ற மாணவர் புரட்சி, சூனியத்தில் இருந்து தோன்றவில்லை. அதற்கு முன்னரே ஜேர்மனிய மாணவர்களும், அமெரிக்க மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். "ஹிட்லரின் பிள்ளைகள் நாம், நாசிச கடந்த காலத்துடன் கணக்கு தீர்க்க வந்திருக்கிறோம்." என்ற முழக்கத்துடன் பெர்லின் மாணவர் போராட்டம், மேற்கு ஜெர்மனியில் பதவிகளில் இருந்த முன்னாள் நாசிச அனுதாபிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே ஆரம்பத்தில் முன்வைத்தது. பின்னர் "செம்படை பிரிவு"(RAF) என்ற ஆயுதகலச்சாரத்தை நம்பும் தீவிரவாத குழுவாகியது வேறு கதை. அதே போல தசாப்த காலம் நீடித்த வியட்நாம் போரை நிறுத்திய அமெரிக்க மாணவர் போராட்டம், பின்னர் ஹிப்பி கலாச்சாரமாக சீரழிந்தது தனிக்கதை.
பிரான்ஸ் மட்டுமே புரட்சியின் விளிம்பிற்கு சென்று மீண்டது. பாரிஸ் நகர பல்கலைக்கழக நிர்வாகத்தை கைப்பற்றிய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர் மத்தியிலும் புரட்சியை முன்னெடுப்பது குறித்து வகுப்புகள் எடுத்து, இயக்கமாக்கினர். தொழிற்சாலைகளை கைப்பற்றிய தொழிலாளர்கள், அவற்றை தாமே நிர்வகித்தனர். இருப்பினும் வன்முறை பிரயோகிக்க தயாராக இருந்த அரச இயந்திரம், அதனோடு ஒத்துழைத்த கொம்யூனிஸ்ட் கட்சி போன்ற காரணங்களால் புரட்சி வெற்றியடையவில்லை. அன்று மாணவர் தலைவர்களாக இருந்தவர்கள், தற்போது நிர்வாகிகளாகவும், முதலாளிகளாகவும் மாறியுள்ளனர். உண்மையில் மேற்கு ஐரோப்பா அன்றும் புரட்சிக்கு தயாராக இருக்கவில்லை. அவர்கள் கேட்ட சீர்திருத்தங்களை வழங்கி விட்டு, தமது இருப்பை காப்பாற்றிக் கொண்டன அரசாங்கங்கள்.
அப்போது ஐரோப்பாவில் ஒரு கலாச்சாரப் புரட்சி (அரச ஆசீர்வாதத்துடன்) மக்களின் வாழ்க்கையை, சிந்தனையோட்டங்களை மாற்றியது. மதங்கள் நிர்ணயித்த பழமைவாத கட்டுப்பாடுகள் தளர்ந்தன. பாலியல் சுதந்திரம் ஐரோப்பிய கலாச்சாரத்தின் ஓரங்கமாகியது. மேலும் மார்க்சையும், மாவோவையும் படித்து விட்டு மாணவர்கள் கோரிய "அதிகபட்ச ஜனநாயகம்", வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாணவர்கள் பங்கு, தொழிலாளர் நலன் குறித்து தீர்மானிப்பதில் தொழிற்சங்கத்தின் பங்கு என்பன அதன் பின்னரே ஏற்பட்டன. பலர் நினைப்பது போல, இத்தகைய அம்சங்கள் "ஐரோப்பாவின் மூலவளங்கள்" அல்ல. அவை யாவும் அறுபதுகளில் இடம்பெற்ற மாணவர் புரட்சியின் பலன்கள்.
அன்று இருந்த ரஷ்ய சார்பு கொம்யூனிஸ்ட் கட்சிகள் யாவும் புரட்சிக்கு விரோதமாக இருந்ததால், மாணவர்கள் வெறுப்படைந்திருந்தனர். அதனால் தான் ஆங்காங்கே பல ஆயுதபோரட்டத்தில் நம்பிக்கை கொண்ட தீவிரவாத இயக்கங்கள் தோன்றின. பிரான்சில் Action Directe, ஜெர்மனியில் Rotte Armee Fraktion, இத்தாலியில் Red brigade, பெல்ஜியத்தில் CCC, என்பன குண்டுவெடிப்புகள், அரசியல் தலைவர்கள், முதலாளிகளை கொலைசெய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டன. ஜனநாயக வழியில் போராட நினைத்த மாணவர்கள் மாவோயிச கட்சிகளை நிறுவினர். இன்று தீவிரவாத இயக்கங்கள் மறைந்து விட்டன. மாவோயிச கட்சிகள் ஓரளவிற்கு நிலைத்து நிற்கின்றன.
அன்றிருந்த ரஷ்ய சார்பு கொம்யூனிஸ்ட் கட்சிகள், "ஸ்டாலினிச விரோத" அரசியலால் பாதிக்கப்பட்டு, மிதவாத நிலைஎடுத்ததும், புரட்சி ஏன் வெல்லவில்லை என்பதற்கான காரணம். ஸ்டாலினுக்கு பின்னர் வந்த குருஷேவ், ஏகாதிபத்திய எதிர்ப்பு போரை நிராகரித்து, "சமாதான சகவாழ்வு" என்ற புது சித்தாந்தம் வகுத்தால்; கருத்து வேறுபாடுகளை கொண்ட சீன, அல்பேனிய கொம்யூனிஸ்டுகள் மூன்றாம் கொம்யூனிச அகிலத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ரஷ்ய வழியை பின்பற்றிய பிற கொம்யூனிஸ்ட் கட்சிகளை "திரிபுவாதிகள்" என்றழைத்தனர். தாம் மட்டுமே புரட்சிகர பாதையில் செல்வதாக கூறினர். இதனாலேயே அறுபதுகளில் மேற்கு ஐரோப்பாவில் எழுச்சியுற்ற மாணவர்கள், மாவோவை பின்பற்றினர். இந்த வரலாற்று தொடர்ச்சியை காண மறுக்கும் சில இடதுசாரி எழுத்தாளர்கள், "1968 புரட்சியின் தோல்விக்கு" வேறு காரணங்களை தேடுகின்றனர்.
உண்மையில் அன்றைய புரட்சி வெற்றியடையாவிட்டாலும், நிச்சயமாக தோல்வியடையவில்லை. காலம்காலமாக ஐரோப்பிய மக்களின் வாழ்க்கையை தீர்மானித்த பழமைவாதிகள் செல்வாக்கற்ற சிறுபான்மயினராகினர். அந்த இடத்தை தனி மனித சுதந்திரம் பிடித்துக்கொண்டது. உண்மையில் லிபரல்களுக்கும் பிடித்த விடயம் அது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தமை, பல ஜனநாயக உரிமைகள் கிடைத்தமை என்பன, அறுபதுகளில் இடம்பெற்ற மாணவர் புரட்சியின் பெறுபேறுகள். மேற்கு ஐரோப்பிய அர

______________________________________________
2 comments:
////ஸ்டாலினிச விரோத" அரசியலால் பாதிக்கப்பட்டு, ////
என்று கூறி உள்ளீர்கள் அதற்கு சற்று விரிவான விளக்கம் அளிக்க முடியுமா?
மேற்கு ஐரோப்பிய பாடநூல்களில் ஸ்டாலின் ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரி, கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்த கொலைகாரன், என்று தான் எழுதப்பட்டுள்ளது. ஊடகங்களிலும் ஸ்டாலினின் கொலைகள் தொடர்பான செய்திகள் அடிக்கடி வரும். தொடர்ச்சியான பிரச்சாரம் காரணமாக, ஐரோப்பிய மக்கள் மனதில் ஸ்டாலின் குறித்து எதிர்மறையான எண்ணம் ஆழமாக பதிந்து விட்டது. அதனால், ஸ்டாலின் பெயரை சொல்லி அரசியல் நடத்துவது மிகவும் கடினமாகி விட்டது. பல ஐரோப்பிய கம்யூனிச கட்சிகள், ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளவில்லை என பகிரங்கமாக அறிவிக்க வேண்டியதாயிற்று.
Post a Comment