ஐரோப்பிய நாடுகளில் வருடாவருடம் குளிர்காலம் ஆரம்பித்து விட்டால்போதும், உள் வீட்டை சூடுபடுத்தும் கவலையும் வந்து விடும். ஐரோப்பாவில்எரிவாயு நாடாளாவிய குழாய் பாதைகளால் வீட்டுக்கு வீடு விகியோகிக்கப்படுகின்றது. உறையவைக்கும் பனியில் விறகு கொளுத்தி நெருப்பில் குளிர்காய்ந்த காலங்களை ஐரோப்பியர் மறந்து விட்டனர். தற்கால நவீனகட்டடங்களும் எரிவாயு மூலம் இயக்கப்படும் மைய வெப்பமாக்கும்தொழில்நுட்பத்தை கொண்டே கட்டப்படுகின்றன. இவ்வாறு ஐரோப்பியரின்வாழ்வில் தவிர்க்கவியலாத எரிவாயு வட (அட்லாண்டிக்) கடலில் மட்டுமேகாணக்கிடைக்கிறது. நோர்வேயிலும், நெதர்லாந்தின் வட கடலிலும் அகழப்படும்எரிவாயு, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியானாலும், முழு ஐரோப்பியவீடுகளையும் வெப்பமாக்கும் அளவிற்கு போதுமானதல்ல. இதனால் பிரான்ஸ்அல்ஜீரியாவில் இருந்தும், பிற ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் இருந்தும் தமக்குவேண்டிய எரிவாயுவை பாரிய குழாய்கள் மூலம் இறக்குமதி செய்துகொள்கின்றன.
ஐரோப்பிய யூனியன் வந்த பின்னர், எரிபொருள் இறக்குமதி கொள்கையும்மையப்படுத்தப் பட்டது. 2007 ம் ஆண்டில் மட்டும், ஐரோப்பிய யூனியன் 500 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயும், 250 BCM (பில்லியன் சதுர மீட்டர்) எரிவாயுவும் இறக்குமதி செய்துள்ளது. இதில் 150 BCM ரஷ்யாவில் இருந்துவருகின்றது. எரிவாயுவை நேரடியாக குழாய் ஊடாக மட்டுமல்லாது, அதனைதிரவ இயற்கை வாயுவாக (LPG) மாற்றி கப்பல்களில் கொண்டு செல்லலாம். (இலங்கை, இந்தியாவில் சிலிண்டரில் வருவது LPG யாக மாற்றப்பட்ட எரிவாயு). ஆனால் எண்ணை பாரிய கொள்கலன்களில் கொண்டுவரப்படுவதைப் போல, எரிவாயுவை கொண்டுவர முடியாது. அதனை கொள்கலன்களில்அடைப்பதற்கும், பின்னர் பாவனைக்குரியதாக மாற்றுவதற்கும் அதிக செலவுபிடிக்கும். ஐரோப்பா மிகக் குறைந்த அளவு எரிவாயுவை கட்டார் போன்றநாடுகளில் இருந்து இவ்வாறு கப்பல் மார்க்கமாக பெற்றுக் கொள்கின்றது. ஆனால் ரஷ்யாவில் இருந்து அதிக அழுத்தம் கொண்ட குழாய்களின் மூலம்எரிவாயு கடத்தப்படுவது மிக மலிவானது. ஆனால் அதில் ஒரு பிரச்சினை. ரஷ்யா ஒவ்வொரு வருடமும் எரிவாயுவின் விலையை உயர்த்தி வருகின்றது.
2001 ம் ஆண்டு, ஆயிரம் சதுர மீட்டருக்கு 130 டாலர் ஆக இருந்த ரஷ்ய எரிவாயு, 2008 ம் ஆண்டு 370 டாலர் ஆக அதிகரித்தது. மேற்கு ஐரோப்பா மட்டுமல்ல, முன்னை நாள் சோவியத் குடியரசுகளான உக்ரைன், பெலாருஸ் போன்றநாடுகளும் ரஷ்ய வாயுவில் தான் தங்கியுள்ளன. மேற்கு ஐரோப்பா நோக்கி வரும்ஐந்து குழாய்கள் இந்த குடியரசுகளின் ஊடாக வருகின்றன. பெலாருஸ் ஊடாகவட மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், உக்ரைன் ஊடாக தென் கிழக்கு ஐரோப்பியநாடுகளுக்கும் எரிவாயு விநியோகம் செய்யப்படுகின்றது. சோவியத் யூனியன்இருந்த காலங்களிலேயே இந்தக் குழாய்கள் நிர்மாணிக்கப்பட்டு ஏற்றுமதிசெய்யப்பட்டது. இரும்புத் திரையை கிழித்துக் கொண்டு வந்த எரிவாயுவைவாங்கிக் கொண்டு தான், மேற்கு ஐரோப்பா அன்று சோவியத் யூனியனுக்குஎதிரான அரசியல் செய்து கொண்டிருந்தது. அந்த வீராப்பு இன்றும் தொடர்கின்றது.
சோவியத் கால பொருளாதாரக் கொள்கையின் படி, ரஷ்ய எரிவாயுவை உக்ரைன்சலுகை விலையில் வாங்கி வந்தது. அன்று சோவியத் யூனியன் என்றகூட்டமைப்பின் கீழ் இருந்ததால் அந்த சலுகை. இன்று தனி நாடாக பிரிந்தபின்னரும் அதே விலைக்குறைப்பு சலுகை தனக்கு வேண்டும் என்று உக்ரைன்அடம் பிடிக்கின்றது. சோஷலிசம் மறைந்து முதலாளித்துவ பொருளாதாரம் வந்தபின்னர், ரஷ்யா தனது எரிவாயுவை சந்தையில் கொண்டு வந்து விற்றது. உக்ரைனும் மேற்கு ஐரோப்பா போல, சந்தை விலையை கொடுக்க வேண்டும்என்று நிர்ப்பந்தித்தது. பேரம் பேசலின் பின்னர் ஓரளவு அதிக விலை கொடுக்கஉக்ரைன் ஒப்புக் கொண்டது. ஆயினும் ரஷ்யா வருடந்தோறும் கொஞ்சம்கொஞ்சமாக விலையை அதிகரித்து சந்தை விலையை எட்டப் பார்க்கின்றது.
பல வருடங்களாக இந்த வியாபாரம் திரைமறைவில் நடந்து வந்ததால், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. 2004 ம் ஆண்டு, உக்ரைனில் "ஒரேஞ்புரட்சி" என்றழைக்கப்படும் ஆட்சி மாற்றத்தின் மூலம் மேற்குலக சார்பு அரசுபதவிக்கு வந்தது. அந்த அரசு பகிரங்கமாகவே ரஷ்யாவுக்கு எதிராகவும், ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாகவும் அரசியல் பேசி வந்தது. இதனால்ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்தது. ரஷ்யாவும்தனது அரசியல் எதிரியை பழிவாங்க எரிவாயு விலையை அதிரடியாக இரண்டுமடங்காக உயர்த்தியது. உக்ரைனோ ஐரோப்பா உதவிக்கு வரும் என்றநினைப்பில், விலை அதிகரிப்பிற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ரஷ்யாஉக்ரைனுக்கான எரிவாயு விநியோகத்தை இடை நிறுத்தியது. பதிலடியாகஉக்ரைன் தனது நாட்டின் ஊடாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும்குழாய்களை மூடி விட்டது. கடந்த வருடம் குளிர்காலத்தில் சூடு பிடித்த இந்தநாடகத்தால், பல ஐரோப்பிய நாடுகளின் பொது மக்கள் அதிகமாகப்பாதிக்கப்பட்டனர். பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளில், எரிவாயு விநியோகம்முற்றாக தடைப்பட்டது. மக்கள் சில நாட்கள் - 10 செல்சியஸ் கடுங்குளிரில்வீட்டிற்குள் நடுங்கிக் கொண்டே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
புதிதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தாம், எரிவாயு நெருக்கடியில் அதிகமாகப் பாதிக்கப்பட்டன. இதே நேரம் தடங்கலின்றிஎரிவாயு கிடைத்துக் கொண்டிருந்த மேற்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவின்அடாவடித் தனத்திற்கு பணியக் கூடாது என்று வீராப்பு பேசின. தாம் மாற்றுஎரிபொருள் விருத்தி செய்யப் போகிறோம் என சூளுரைத்தன. ஆனால்நடைமுறை எப்போதும் சொல்வது போல இலகுவாக இருப்பதில்லை. மாற்றுஎரிபொருள் உற்பத்தி செய்வது நீண்டகாலம் எடுப்பதுடன், அதிக செலவைகொடுக்கும். அதே நேரம் மத்திய ஆசியாவில் இருந்து புதிய குழாய்கள் மூலம்எரிவாயு இறக்குமதி செய்யும் திட்டங்களும் பலன் தர இன்னும் பலவருடங்களாகலாம். அத்தோடு பல அரசியல் பிரச்சினைகளை தீர்க்காமல் அதுசாத்தியமாகப் போவதில்லை.
மத்திய ஆசியாவில் கசகஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் அசர்பைசான்ஆகிய நாடுகள், ஐரோப்பாவிற்கு எரிவாயு விற்க முன்வந்துள்ளன. இந்தநாடுகளில் இருந்து கஸ்பியன் கடல் ஊடாக தான் குழாய்களை நிர்மாணிக்கவேண்டும். நிலத்தை விட கடலில் குழாய்ப் பாதை நிர்மாணிப்பது அதிக செலவுபிடிக்கும். இன்னொரு பிரச்சினை, இந் நாடுகளில் இருந்து நிர்மாணிக்கப்படும்குழாய்கள் துருக்கி ஊடாகத் தான் வர வேண்டும். துருக்கி அதைக்காட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை தரும் படி கேட்கும். இன்று வரை துருக்கிசேர்வதை விரும்பாத ஐரோப்பிய ஒன்றியம், அதற்கு சம்மதிக்குமா? ஈரான்உலகில் பெருமளவு நிலக்கீழ் எரிவாயு இருப்பை கொண்டுள்ள நாடு. ஐரோப்பாஇன்றைய சர்வதேச அரசியல் சதிராட்டத்தில் இருந்து விடுபட்டு, ஈரானுடன்நட்புரிமை பாராட்ட முன்வருமா?
மேற்குறிப்பிட்ட நடைமுறை சிக்கல்களால், ஐரோப்பிய யூனியன் வேறுவழியின்றி மீண்டும் ரஷ்யாவை சரணடைய வேண்டிய நிலையில் உள்ளது. இதேநேரம் எரிவாயு உற்பத்தி நாடுகளின் "ஒபெக்" உருவாக வேண்டும் என்றயோசனையை முன் வைத்து கட்டார், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது. எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள், தமக்கென "ஒபெக்" என்றசர்வதேச ஸ்தாபனம் ஒன்றின் மூலம் சர்வதேச சந்தையில் எண்ணை விலையைதீர்மானிக்கும் சக்தியை பெற்றுள்ளன. அப்படி ஒரு "எரிவாயு ஒபெக் நிறுவனம்" நடைமுறைக்கு வந்தால், அது எரிபொருள் இறக்குமதியில் தங்கி இருக்கும்ஐரோப்பாவை இன்னும் அதிகமாக பாதிக்கும். 2006 ம் ஆண்டு, ஹெல்சிங்கிநகரில், ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவும் "புதிய எரிபொருள் ஒப்பந்தம்" ஒன்றிற்கான மாநாட்டை கூட்டின. அந்த மாநாட்டில் எந்தவொரு முடிவும்எடுக்கப்படவில்லை.
ரஷ்ய நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தியில் ஏகபோக உரிமை கொண்டுள்ளன. அதனை உடைத்து, ஐரோப்பிய எரிபொருள் கம்பனிகளை ரஷ்யாவில் முதலீடுஅனுமதிக்குமாறு கோரப்பட்டமையே மாநாடு குழம்பக் காரணம். ஐரோப்பியர்கள்தமது நாட்டில் சில குறிப்பிட்ட துறைகளில் பிற நாட்டவர்கள் முதலீடு செய்வதைதடுத்து வருகின்றன. அதே நேரம் "சுதந்திர சந்தைப் பொருளாதாரம்" என்றஅழகான சொல்லாடலை பயன்படுத்தி பிற நாடுகளில் முதலீடு செய்து வந்தன. ரஷ்யாவில் அந்தப் பருப்பு வேகவில்லை. தனது எரிபொருள் துறையில்ஐரோப்பிய நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டுமானால், ஐரோப்பாவில்உள்ள அணு உலைகளில் ரஷ்ய நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கவேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டது. மாநாட்டில் விவாதிக்கப்பட்டவிடயம் பற்றி அடக்கி வாசிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஊடகங்கள் ரஷ்யஎதிர்ப்பு பிரச்சாரங்களை முடுக்கி விட்டன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குபிறகு, யெல்ட்சின் தலைமை தாங்கிய, பலவீனமான ரஷ்யா இன்று இல்லை. யெல்ட்சின் காலத்தில் ஐரோப்பியர்கள் பல ரஷ்ய நிறுவனங்களை அடிமாட்டுவிலைக்கு வாங்கி வந்தார்கள். அந்தக் காலம் இப்போது மலையேறி விட்டது.

4 comments:
ஒரே ஒரு கேள்வி...
நீங்கள் எந்தத் துறையில் இருக்கிறீர்கள்? பொருளதாரம்? தொழிநுட்பம்?
ஏதோ பாடசாலைப் புத்தகத்தில் எல்லா விவரங்களையும் விளக்கிச் சொல்வது போல் விளக்கியிருக்கிறீர்கள்.
நன்றாக எழுதியுள்ளீர்கள்.
உங்களது பாராட்டுதலுக்கு நன்றி கனககோபி. கணக்கியல் துறையில் வேலை செய்த போதிலும் அனைத்தையும் அறியும் ஆர்வம் காரணமாக பல்வேறு பட்ட விஷயங்களை கற்று வருகிறேன். பரந்து விரிந்த இந்த உலகம் தான் நான் பயின்ற பல்கலைக்கழகம்.
நல்ல விளக்கமான இடுகை.
பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி....
வழக்கம் போலவே வித்தியாசமாக ஒரு நல்ல பதிவு நன்றி.
Post a Comment