Sunday, August 30, 2009

ஈரானிற்குள் சி.ஐ.ஏ. நடத்தும் இரகசிய யுத்தம்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்து நீண்ட காலமாகி விட்டது. மேலெழுந்தவாரியாக பிரச்சார யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதைப் போலதோன்றினாலும், மறைமுகமாக தனது கூலிப்படைகளினூடாக இரத்தம் சிந்தும்ஆயுதப்போராட்டத்தையும் நடத்தி வருகின்றது. ஈராக்கில் தளமமைத்துள்ளமுஜாகிதீன் கல்க் என்ற ஈரானிய எதிர்ப்பியக்கம் வெளிப்படையாகவேஅமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றது. இதே நேரம் பாகிஸ்தானைதளமாக கொண்டு இயங்கி வரும் "ஜன்டுல்லா" என்ற தீவிரவாதக் குழுவிற்குஅமெரிக்கா இரகசியமாக உதவி வருவதை ABC தொலைக்காட்சிஅம்பலப்படுத்தியுள்ளது. 2005 ம் ஆண்டு, முன்னாள் அமெரிக்க அமைச்சர் டிக்சென்னிக்கும், அப்போது பாகிஸ்தானில் பதவியில் இருந்த முஷாரப்பிற்கும்இடையில் ஏற்பட்ட இரகசிய உடன்படிக்கையின் பின்னர் இந்த பதிலிப்போர்ஆரம்பமாகியுள்ளது.

பலுச்சி மொழி பேசும் மக்கள் ஈரானிற்குள்ளும் வாழ்கின்றனர். பாகிஸ்தானின்பலுச்சிஸ்தான் மாகாணம் ஈரான் எல்லையில் அமைந்துள்ளமைகுறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மாகாணத்தின்பிரிவினைக்காக சில ஆயுதமேந்திய இயக்கங்கள் போராடி வந்தன. அவை யாவும்பாகிஸ்தானிய இராணுவத்தால் ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டன. எஞ்சியஆயுதபாணிகளை "ஜன்டுல்லா" என்ற பெயரில் ஒன்று திரட்டி, ஈரானுக்குள்சென்று போரிட அனுப்பி வைக்கப்படுகின்றனர். அமெரிக்கா நேரடியாக உதவிசெய்யா விட்டாலும், ஈரானிய புலம்பெயர் அமைப்புகள் மூலம் பணப் பரிமாற்றம்செய்கின்றது. ஜன்டுல்லா தலைவர் அப்த் எல் மாலிக் ரெகி ஒரு மாஜிதாலிபானும், போதைவஸ்து கடத்தல்காரனுவார்.

ரெகி தலைமையிலான சில நூறு போராளிகள் எல்லை கடந்து ஈரானுக்குள்நுழைந்து, ஈரானிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களை கடத்தி கொலைசெய்து வருகின்றனர். இதுவரை ஒரு டசினுக்கும் அதிகமான சிப்பாய்களைகடத்தி கொலைசெய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதை நிரூபிக்கும் வீடியோப்பிரதிகளை அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்தது. இதே நேரம்ஈரானில் ஸஹடன் நகரத்தில் பெப்ரவரி இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில், வண்டியில் சென்ற பதினோரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் என்று இரண்டு ஜன்டுல்லாதீவிரவாதிகளை ஈரானிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அவர்கள் தாம்பாகிஸ்தான் பலுச்சிஸ்தான் பகுதி முகாமில் பயிற்சி பெற்றதைஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய தொலைக்காட்சி அறிவித்தது. சி... தீவிரவாதிகளை பின்னணியில் இருந்து இயக்கி வருவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ள போதிலும், சி... இதனை மறுத்துள்ளது.


Saturday, August 29, 2009

தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! - மருதையன்

"கிளர்ச்சிகரமான சூழ் நிலை சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகிவிடும் என்று அரசியற்கட்சித் தலைவர்கள் அஞ்சினர். மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும் என்று வெளிப்படையாகவே கூறினர்.
ஆக, புலி ஆதரவாளார்களான மேற்குறித்த தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சியை விரும்பவில்லை என்பதையே இது சுட்டி நின்றது."
- மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலச் செயலாளர் மருதையனின் நேர்காணல். நன்றி: இனியொரு இணையத்தளம்
............................................................................................................

இனியொரு: ஈழப் பிரச்சனை தொடர்பாக அண்மைக் காலங்களில் பல கட்சிகள் ஆர்வம் காட்டி வருவதுடன் மட்டுமல்லாது பல போராட்டங்களையும் முன்நின்று நடாத்தியுள்ளன. மக்கள் கலை இலக்கியக் கழகம் இப்போராட்டங்களின் எவ்வாறு பங்குவகித்தது?

கிளிநொச்சித் தாக்குதல் தீவிரமடையத் தொடங்கிய காலப்பகுதியில், தா. பாண்டியன், பழ.நெடுமாறன் போன்ற அரசியல் வாதிகள், இந்திய அரசே தலையிடு போன்ற சுலோகங்களுடன் போராட்டங்களை ஆரம்பித்தனர். கலைஞர் கருணாநிதி தலைமையில் பெரும்பாலான போராட்டங்களை நடத்தினர். அவர் தலைமையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு பிரதான நோக்கங்களுக்காக,
1. போரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவும்
2. இது இந்திய மேலாதிக்கம் முன்னின்று நடத்தும் போர் என்பதை அம்பலப் படுத்துவதற்காகவும்,

கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து தமிழகம் தழுவிய அளவில் பிரச்சாரங்களும் போராட்டங்களும் இலங்கைத் தமிழர்களுக்காக நடாத்தியுள்ளோம்.
சென்னையில் இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் முன்னால் முதலில் மறியல் போராட்டத்தை ஏற்பாடு செய்தோம். இப் போராட்டத்தில் நூற்றுக் கணக்கான தோழர்கள் கைது செய்யப்படார்கள். இந்திய மேலாதிக்கத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் நோக்கிலேயே இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் வாயிலில் இப் போராட்டத்தை நடத்தினோம். இதே வகையான போராட்டங்கள் ஏனைய மாவட்டப் பகுதிகளிலும், குறிப்பாக திருச்சி இராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் முன்னதாகவும், ஏனைய நகரங்களில் அரச அலுவலக வாயிலிலும் மறியல், சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறோம். அனேகமாக எல்லா மாவட்டத் தலை நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

இனியொரு: முத்துக்குமார் தீக்குளித்த பின்னதான உணர்ச்சிகரமான அரசியல் சூழலில் உங்கள் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருந்தது?

முத்துக்குமார் தீக்குளிப்பிற்குப் பின்னர், ஓய்வடைந்த நிலையிலிருந்த போராட்டங்கள் புத்துயிர் பெறலாயின. போராட்டங்க ஓய்வடைந்த சூழலில் விரக்தி மனப்பான்மை நிலையிலிருந்தே அவர் தீக்குளிக்கிறார். இதன் பின்னர் உத்வேகமடைந்த போராட்டங்கள் பொதுவாக தமிழகம் தழுவிய அளவில் மாணவர்களாலும் வழக்குரைஞர்களாலும் முன்னெடுக்கப்படுகின்றன. இப்போராட்டங்களில் எமது அமைப்பு மிக முக்கிய பங்காற்றியது.
ஆறு மாவட்டங்களில் மாணவர்களைத் திரட்டி வேலைநிறுத்தம் செய்து போராட்டங்களை நடத்தினோம். சில இடங்களில் சிபி ஐ மாணவர்கள் சிலர் கலந்து கொண்டனர். மற்றைய இடங்களில் ஏனய மாணவர் அமைப்புக்கள் எதுவும் இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தவில்லை. கல்லூரி மாணவர்கள் அனைவரையும் அழைத்துவந்து சாலை மறியல் செய்வது, வேலை நிறுதம் செய்வது, ஊர்வலங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

இவற்றையெல்லம் மீறி, அக்டோபரில் ஆரம்பித்த போராட்டமானது, ஜனவரி 26ம் திகதி குடியரசு தினத்தன்று அண்ணாசாலையில் மிகப்பிரமாண்டமான போராட்டமாக நடத்தப்பட்டது. அதற்குப் பின்னரும் பல்வேறு வழிகளில் ஈழப் போராட்டம் தொடர்ந்தது.
உண்மையிலேயே முத்துக்குமார் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுத் தான் இந்த முடிவை எடுத்திருந்தார். போராட்ட வடிவம் என்ற முறையில் நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாதாயினும், ஈழத் தமிழ் ஆதரவு உணர்வு கொண்டவர்களை அணிதிரளச் செய்வதற்கு முத்துக்குமார் தீக்குளித்த பின்னதான உணர்ச்சிகரமான அரசியல் சூழல்ஒரு ஆரம்பமாக அமைந்தது.

தமிழ் நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், அவர் பல சந்தர்ப்பங்களில் எமக்கு ஆதரவளிப்பவர், அவரது மரணச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுகிறார். இந்த சந்தர்ப்பத்தில், நாம் இதனை ஒரு கிளர்ச்சியாக மாற்ற வேண்டும் என்று கருத்தை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தோம். திரு வெள்ளையனும் இந்தக் கருத்தில் மிகத் உறுதியுடனிருந்தார்.

மறுநாள் காலையில் அரசியற் கட்சித் தலைவர்கள் வருகிறார்கள். வை.கோ, தா.பாண்டியன், திருமாவளவன், நெடுமாறன் போன்ற புலி ஆதரவுத் தலைவர்கள் மரண ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் உடனடியாக அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

இந்த நிலையில் நாமும், வெள்ளையனும் இதனை மக்கள் எழுச்சியாக, மிகப்பெரிய ஊர்வலமாகத் தயார்படுத்தி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இதை இந்த அரசியள் கட்சித் தலைவர்கள் அனைவரும் நிராகரிக்கிறார்கள்.

இனியொரு : ஏன் இவர்கள் இவ்வாறான போக்கை எதிர்த்தார்கள்?

அங்கு மக்கள் கணிசமான அளவு கூடியிருந்தனர். அங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், நாடகங்கள், பாடல்கள் என்று கிளர்ச்சி மனோபாவம் கூடியிருந்தவர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது.

இவ்வாறான கிளர்ச்சிகரமான சூழ் நிலை சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகிவிடும் என்று அரசியற்கட்சித் தலைவர்கள் அஞ்சினர். மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும் என்று வெளிப்படையாகவே கூறினர்.
ஆக, புலி ஆதரவாளார்களான மேற்குறித்த தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சியை விரும்பவில்லை என்பதையே இது சுட்டி நின்றது.

இதன் பின்னர் அரங்கத்தினுள் இந்தத் தலைவகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படாமல், கூடியிருந்த மக்களிடம் அபிபிராயம் கேட்பதாக முடிவெடுக்கப்பட்டது.
வெள்ளையன் பின்னதாக வெளியே வந்து ஒலிவாங்கியின் முன்னால் கூடியிருந்த மக்களிடம் பேச ஆரம்பித்தார். இம்மரண ஊர்வலம் குறித்து இரண்டு கருத்துக்கள் இருப்பதாகவும், அதில் முதலாவது உடலை உடனே எடுக்கவேண்டாம், ஓரிரு நாட்கள் வைத்திருந்து மக்களைத் திரட்டிப் பின்னதாக பெரிய ஊர்வலமாக நடத்தலாம் என்று ஆரம்பித்து மற்றைய கருத்தைக் கூற ஆரம்பித்த போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், முதலாவது கூறியது தான் சரியான கருத்து எனச் சத்தமிட்டு மற்றக் கருத்தைச் சொல்வதற்கே இடம்வைக்கவில்லை.

அப்படியிருந்தும் இரண்டாவது கருத்தை நீங்களே கூறுங்கள் என்று திருமாவளவன் கையில் மைக்கைக் கொடுக்கிறார். அங்கு கூடியிருந்த மக்கள் திருமாவளவனைப் பேசவே அனுமதிக்கவில்லை. அதனால் தவிர்க்க முடியாமல் மக்கள் விருப்பப்படியே இறுதி ஊர்வலத்தை நடத்துவதற்கு ஒத்துக்கொண்டனர்.

இதன் பின்னர் திருமாவளவன், நெடுமாறன், பாண்டியன் உட்பட அனைத்துத் தலைவர்களும் அந்த இடத்திலிருந்து அகன்று விடுகிறார்கள்.

இவ்வாறு இறுதி ஊர்வலத்தை எழுச்சி மிக்கதாக நடத்தவேண்டும் என்று எமது தோழர்கள் இவர்களுடன் போராடியது ஒருபுறமிருக்க, இதற்காகப் போராடிய செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள், போன்ற பல தரப்பினர் கூடியிருந்த மக்கள் மத்தியிலிருந்தபோதும், கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இவர்களெல்லாம் வெளியேறிய பின்னர் இரண்டு நாட்கள் உடல் வைக்கப்பட்டிருந்தது. பெருந்தொகையான மக்கள் திரண்ட பின்னர் எழுச்சிக் குரல்களோடு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தின் போது எமது தோழர்கள் ஈழ ஆதரவு வீதி நாடகத்தை நடத்திய வண்ணம் முன்னால் சென்றனர்.

இனியொரு: மற்றைய பாராளுமன்ற வழிக் கட்சிகளும் நீங்களும் நடத்திய போராட்டங்களிடையேயான வேறுபாடு என்ன?

ம.க.இ.க மாணவர்களை அணிதிரட்டி நடத்திய போராட்டங்கள் தவிர தன்னிச்சையாகப் பல இடங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். பல இடங்களில், உதாரணமாக, திருச்சி போன்ற பகுதிகளில் இதற்குத் தலைமை தாங்கிய மாணவர்கள் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அரச படைகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சென்னையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களை அணிதிரட்ட முயன்ற எமது தோழர்களை போலிசார் மூர்க்கத் தனமாகத் தாக்கி, குறிப்பாக ஐந்து தோழர்கள் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை வெளியே எடுப்பதற்காக வக்கீல்கள் போராட வேண்டியிருந்தது.

தவிர, வழக்குரைஞர்கள் போராட்டம் என்பது குறித்துக் காட்டத்தக்கது.ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என்று பல தரப்பு வர்க்கப்பிரிவுகளைச் சார்ந்தவர்களை எடுத்துக்கொண்டால் அதில் தொடர்ச்சியாக விட்டுக்கொடுப்பற்ற போராட்டத்தை நடத்தியவர்கள் வழக்குரைஞர்களே ஆவர். இவர்களின் போராட்டத்தில் நீதிமன்றப் புறக்கணிப்பு என்பது கோடிட்டுக் காட்டத்தக்கது. இது தவிர சோனியா காந்தியின் கொடும்பாவி எரிப்பு, காங்கிரஸ் கட்சிக் கொடி எரிப்பு போன்ற போராட்டங்கள் மதுரை போன்ற இடங்களில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் மத்தியிலும் சரி, மதுரையிலும் சரி, மற்றும் திருச்சி, கரூர் தஞ்சாவூர், தூத்துக்குடி, திருவெண்ணாமலை, போன்ற பல பகுதிகளில் எமது தோழர்களான வழக்குரைஞர்கள் முன்னணியிலிருந்து இப்போராட்டத்தை நடத்தினர். ஈழ ஆதரவுப்ப் போராட்டதை சென்னை உயர் நீதி மன்றத்தில் நடத்தியவர்கள் மீது போலிஸ் நடத்திய மூர்க்கமான தடியடிக்கும் ஒரு பின்புலம் உண்டு.

சிதம்பரம் கோவிலில் சமஸ்கிருதத்திற்கு எதிராகத் தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை எமது அமைப்பினூடாக நடத்தி வெற்றிகண்டிருந்தோம். இது ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளாக முடியாத ஒரு காரியமாக இருந்து வந்தது. இதற்கான சட்டரீதியான உரிமையை வழக்காடி வெற்றிபெற்றோம். இவ்வுரிமைக்கான நீதிமன்ற ஆணையை இரத்துச் செய்வதற்காக, சுப்பிரமணிய சுவாமிகள் தலையிடுகிறார். இவரை சிதம்பரம் கோவிலில் விசேட பூஜைகளை மேற்கொண்டு, தீட்சகர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.

இனியொரு: இடையில் ஒரு கேள்வி, சுப்பிரமணிய சுவாமிக்கும் ஈழப்பிரச்சனைக்கும் என்ன தொடர்பு?

சுப்பிரமணிய சுவாமி தீவிரமான புலி எதிர்ப்பாளர் என்பது ஒருபுறமிருக்க புலிகளைக் காரணம் காட்டியே மொத்த இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் செயற்படுபவர். பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு உறுதுணையாக இருப்பவர். சீ.ஐ.ஏ இன் இந்திய ஏஜன்ட். தொழில் முறை அரசியல் புரோக்கர். இவைதான் இவரின் அடிப்படைத் தகுதிகள்.

தமிழ் பாடுவதற்கான உரிமையை இரத்துச்செய்யக் கோரி சிதம்பரம் கோவில் தீட்சகர்கள் தாக்கல் செய்த மேன் முறையீட்டில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பிக்கவே அவர் அங்கு வந்திருந்தார். அங்குதான் அவரை வழக்குரைஞர்கள் முட்டையால் அடிக்கிறார்கள். இதனைச் செய்த வழக்குரைஞர்கள், எங்களது தோழர்கள் உள்பட, ஈழமக்களுக்கு ஆதரவான போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தவர்கள். இதற்கெதிராக நீதிபதிகள், இவ்வாறெல்லாம் நீதிமன்றத்துள் நடந்துகொள்ளக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்த போது, சுப்பிரமணிய சுவாமிகளை வெளியேறுமாறு முழக்கமிட்டார்கள் வழக்குரைஞர்கள்.
இதையொட்டிய சம்பவங்களுக்குப் பின்னரே போலிசார் தடியடிப்பிரயோகம் நடத்தி மூர்க்கமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் இச்சம்பவங்களை ஈழப் போராட்டத்தைத் திசை திருப்புவதற்கு அரசு பயன்படுத்திக் கொண்டது.

இவற்றையெல்லம் மீறி, அக்டோபரில் ஆரம்பித்த போராட்டமானது, ஜனவரி 26ம் திகதி குடியரசு தினத்தன்று அண்ணாசாலையில் மிகப்பிரமாண்டமான போராட்டமாக நடத்தப்பட்டது. அதற்குப் பின்னரும் பல்வேறு வழிகளில் ஈழப் போராட்டம் தொடர்ந்தது.

இனியொரு: அரசியல் சார்ந்த வேறுபாடு எவ்வாறு அமைந்திருந்தது?


போராட்ட வடிவங்கள் அவை எவ்வளவு போர்க்குணம் உடையதாக அமைந்திருந்தது என்பது ஒருபுறமிருக்க, போராட்டத்தின் நோக்கம், அது என்ன அரசியலை மையப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்பதில் எனையவர்களுக்கும் எங்களுக்கும் பாரிய வேறுபாடு இருந்தது.
முக்கியமாக இந்திய மேலாதிக்கத்தை அம்பலப்படுத்துவது, ஈழத் தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமைக்குக் குரல் கொடுப்பது, போரை நிறுத்துவது போன்றவற்றிற்கான அரசியலை மையப்படுத்தியே எமது போராட்டங்கள் நடந்தன. ஆனால் எனைய கட்சிகளின் கோரிக்கையானது படிப்படியாக மாற்றத்திற்கு உள்ளாவதாக அமைந்திருந்தது.
ஆரம்பத்தில் அவர்களின் கோரிக்கை மனிதாபிமான உதவி, இந்திய அரசின் தலையீடு, சோனியா கருணைகாட்ட வேண்டும், என்றவாறு காலத்திற்குக் காலம் மாற்றமடைவதாக அமைந்திருந்தது.
ஒருகட்டத்தில் கருணாநிதி காங்கிரசோடு கூட்டு என்ற அடிப்படையில் போராட்டத்திலிருந்து விலகிச்சென்ற சூழலில், பலர் இந்திய அரசிற்கு எதிராகவும் பேச ஆரம்பித்தார்கள்.

அவ்வாறு இந்திய அரசிற்கு எதிராகப் பேச ஆரம்பித்த போதும் கூட, தொப்புள் கொடி உறவு, நம்முடைய இனம், நமது இனம் அங்கே செத்துக்கொண்டிருக்கிறது, தமிழன் என்ற காரணத்தாலேயே இந்திய அரசு செவிமடுக்கவில்லை, இவைதான் அவர்கள் முவைத்த சுலோகங்கள்.

அதற்குப் பிறகு இவர்கள் ராஜபக்சேயினுடைய கையாட்கள், சீனாவோடு இலங்கை கூட்டுச் சேர்ந்துள்ளது, இந்தியாவின் கையைப் பலப்படுத்த தமிழர்களுக்கு உதவ வேண்டும், புலிகள் இந்தியாவின் ஆதரவாக மாறுவார்கள், என்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

இனியொரு: ஈழத் தமிழர்கள் மீதான திட்டமிட்ட படுகொலை தமிழகத்தில் ஒரு அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியிருந்ததா?


இனப்படுகொலை குறித்து அன்றாடம் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள், தொலைக்காட்சிச் செய்திகள் மக்கள் மத்தியில் ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தியிருந்தது உண்மை. ஆனால் அது தமிழகம் தழுவிய ஒரு அரசிய எழுச்சியை ஏற்படுத்தியது என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று.

வழக்குரைஞர்களின் போராட்டம் கூட, உதாரணமாக, சென்னையில் ஒரு எண்ணாயிரம் வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள், அனைவருமே இப்போராட்டங்களில் பங்கெடுத்திருந்தாலும் இதில் முன்னின்று தொடர்ச்சி கொடுத்தவர்கள் ஒரு ஐம்பது பேரளவிலேயே இருக்கும். ஏனையவர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போன்றவற்றைச் செய்திருந்தார்கள். மாணவர்களையும் கூட ஒரு முறை இருமுறைக்கு மேல் அணிதிரட்டுவதென்பது மிக க்கடினமானதாகவே இருந்தது.

இதில் கருணாநிதி அரசின் துரோகமும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஊர்வலங்களில் பங்குகொள்ளக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள். குறிப்பாக கல்லூரித் தலைமையாசிரியர்களை மாணவர்களைப் போராட்டங்களில் பங்குகொள்ள அனுமதிக்கக் கூடாது என எச்சரித்திருந்தனர். அவர்களே சொந்தப் போறுப்பில் மாணவர்களைப் போராட்டங்களில் பங்குகொள்ளக் கூடாது என எச்சரித்திருந்தனர். இவ்வாறு கருணாநிதி அரசு போராட்டங்களை முடக்குவதில் தீவிரம்காட்டியது. ஆக, இவ்வாறான தடைகள் துரோகங்களுக்கு மத்தியில் இது மாபெரும் எழுச்சியாக உருவெடுத்ததாகக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்தே.

இனியொரு:ஈழ ஆதரவுப் போராட்டங்கள் மாபெரும் எழுச்சியாக உருவெடுக்காமைக்கான வேறு ஏதும் புறக்காரணங்கள் உள்ளனவா?


கிளிநொச்சித் தாக்குதல், அந்தத் தாக்குதல் தீவிரமடை ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து தான் போராட்டங்கள் ஆரம்பமாகின்றன. அதற்கு முன்பதாக, 2002 இலிருந்து 2006 வரை சமாதானம். அப்போது இப்பிரச்சனை குறித்து யாரும் பேசியதில்லை. போர் தொடங்கிய காலம் முதல், பத்திரிகைச் செய்திகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழப்பிரச்சனை பேசப்பட்டது. ஒரு சில ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

ஈழத் தமிழர்கள் மீதான ஒடுக்கு முறை, அதற்கெதிராக நாம் போராட வேண்டும் என்பது குறித்த ஒரு தொடர்ச்சியான பிரச்சாரம், மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகத் திரட்டப்படுவதற்கான பிரச்சாரமும் அதற்கான பின்புலமும் இங்கு அமைந்திருக்கவில்லை.
இங்கு இருக்கக் கூடிய பிரதான கட்சிகள் இப்பிரச்சனையை குறைந்தபட்சம் பேசக்கூட இல்லை.
83 இலிருந்தே, பற்றி எரியும் போது அதைக் குறுகிய காலத்திற்கு கையிலெடுத்துக் கொள்வதென்பதை ஒரு வழமையாகக் கொண்டிருந்தன.
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது, அவர்கள் மீதான தொடர்ச்சியான அடக்கு முறையை எதிர்த்து சுயனிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்நிறுத்துவது. இவ்வாறான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பது என்பது எந்தக்கட்சியிடமும் கிடையாது.

வை.கோ தனி ஈழம் தான் தீர்வு என்று பேசும் போது அவர் கூட்டு வைத்துக்கொள்ளும் ஜெயலலிதா இப்படிப் பேசினால் காஷ்மீரை பிரித்துக்கொடுக்கத் தயாரா என்று கேட்பார். ப.ம.க ராமதாஸ் தனி ஈழம் தான் தீர்வு என்றும் பேசுவார் அது இல்லை என்றும் பேசுவார். ஒரு இனத்தின் தன்னுரிமை, பிரிந்து போகும் உரிமை என்பதை இவர்கள் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. காஷ்மீருலும் ஏனைய பகுதிகளிலும் நடைபெறும் போராட்டங்களின் போது செலுத்தப்படும் இராணுவத்தின் அடக்குமுறையை ஆதரிப்பவர்கள்.

அவர்களுடைய ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டங்கள், தீவிரவாதம், பயங்கரவாதம் என்பது தான் அவர்களுடைய கருத்து. அந்த அடிப்படையில், இவர்களால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை அரசியல் ரீதியாக ஆதரிக்கவோ அதற்கு நியாயமான பங்களிப்பை வழங்கவோ இவர்களால் முடியாது. அதிகபட்சம், தமிழர்கள் என்ற அடிப்படையில் உணர்ச்சி பூர்வமாகக் கிடைக்கக் கூடிய ஆதாயத்திற்காக அவர்கள் ஆதரவளிக்கிறார்கள்.

இனியொரு: ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் தமிழக மத்தியில் உண்டா?

தன்னுரிமைக்கான, சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம் தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் இல்லை. இக்கருத்தானது ஈழத்தின் நிலைமைகளைப் புரிந்து கொள்வதிலிருந்து வந்த கருத்து அல்ல. இந்தியாவில், பிரிவினை வாதத்திற்கு எதிராக, பிரிந்து போவதற்கு எதிராக இங்கு செய்யப்பட்ட பிரச்சாரம் இருக்கிறது அல்லவா? அதிலிருந்து தான் இந்த மனநிலை உருவானது.

மக்களைப் பொறுத்தவரையில், ஈழப்பிரச்சனைக்கு அப்பால், தேர்தல் அரசியலின் வழியாக அரசியல் அற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அரசியல் அற்றவர்களாக ஆக்கப்பட்டிருப்பதில் பல காரணிகள் பங்காற்றுகின்றன. அதில் முக்கியமாக, தேர்தல் அரசியலில் இவர்கள் பேசும் முறையானது, மக்கள் வாழ்க்கைக்கும் பேசும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்ற சூழலை உருவாக்கி நிலை நாட்டிவிட்டார்கள். “நீ எஸ்டேட் வாங்கியிருக்கிறாய், நான் வாங்கவில்லை”, “நீ மகனுக்குச் சொத்துச் சேர்த்திருக்கிறாய், நான் அப்படியில்லை” போன்ற மோதல்களின், பட்டிமன்றங்களின் பார்வையாளர்களாகத் தான் மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அதனால் மக்களைப் பொறுத்த வரையில், பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும், சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும், நீங்கள் உங்கள் வேட்பாளர்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்டால், வீதி சற்று நன்றாக அமைய வேண்டும், மின்சாரம் கிடைக்கவேண்டும், குழாயில் தண்ணி வரவேண்டும் என்பார்கள்.இதனால் மக்கள் அரசியல் விவகாரங்களிலிருந்து அன்னியப்பட்டுப் போயிருக்கிறார்கள்.

தவிர, தொலைக்காட்சி, நுகர்வியல் போன்ற கூடுதல் விடயங்கள்.
இவை எல்லாவற்றையும் தவிர, ஈழப்பிரச்சனையை முன்வைத்து, அவர்களுடைய சுயநிர்ணய உரிமை நியாயமானது என்ற அரசியற் திசை நோக்கி மக்கள் அரசியல் மயப்படுத்தப்படவில்லை.
நடைபெற்ற பல போராட்டங்களை எடுத்துக்கொண்டால் கூட, அவர்களும் தமிழர்கள், நாங்களும் தமிழர்கள் என்ற புரிதலை முன்வைத்தே போராட்டங்களும் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வகையில் இந்திய இராணுவத்தை அனுப்புதல் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் போது கூட மக்கள் அதற்கு ஆதரிக்கும் போக்குகே காணப்பட்டது. இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களைக் காப்பாற்று என்ற முழக்கத்தின் பின்னாலான அபாயத்தைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு பலவீனமாக அரசியலே இங்கு காணப்பட்டது.

இந்திய இராணுவம் 87 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது தொடர்பாக தமிழ் நாட்டு மக்களின் மனோநிலை எவ்வாறு இருந்தது,?

எமது அமைப்பைப் பொறுத்தவரை இந்திய இராணுவம் (IPKF) அனுப்பப்படுவதற்கு முற்பகுதியிலிருந்தே புலிகளின் பாசிசப் போக்கை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறோம். ஆனால் IPKF இற்கு எதிராக அவர்கள் போராடத் தொடங்கியபோது அப்போராட்டத்தை ஆதரித்து எமது அமைப்பும் (ம.க.இ.க) அது சார்ந்த அமைப்புக்களும் தான் பிரச்சாரங்கள் மேற்கொண்டன.
மற்றவர்களெல்லாம், அதிகபட்சம், அனியாயமாக இந்திய இராணுவச் சிப்பாய்கள் உயிரிழக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தையே அறிக்கைகளாக முன்வைத்தனர். இது ஒரு படையெடுப்பு, இது ஒரு ஆக்கிரமிப்பு என்ற வகையில் யாரும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

இனியொரு: ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதன் பின்னான நிலைமைகள் எவ்வாறு அமைந்தன?

ராஜீவ் காந்தி யின் கொலை தமிழக மக்கள் மத்தியில் ஈழப்பிரச்சனை குறித்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறமுடியது. ஆனால் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, தினமணி, ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பார்ப்பன ஊடகங்கள், ஈழ எதிர்ப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்தன. ராஜீவ் காந்த்க் கொலை என்பது, தமிழ், தமிழினம், திராவிடம் என்பவற்றிற்கு எதிரான ஒரு மூர்க்கமான பிரச்சார நடவடிக்கையைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான ஒரு வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது.

பயங்கரவாதம் பிரிவினைவாதம் எனக் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அடக்குமுறை கடுமையாக ஏவிவிடப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணிசமான அளவிற்கு மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள்.

நாங்கள் மட்டும்தான் ராஜீவ் காந்தியின் கொலைக்காக் கண்ணீர்வடிக்க வேண்டியதில்லை. அவரது ஆட்சியில் ஈழ மக்களுக்குத் துரோகமிழைக்கப் பட்டிருக்கிறது என்று பிரச்சாரம் மேற்கொண்டோம். போலிசாரின் கடுமையான அடக்குமுறை, அடிதடி, சிறைப்பிடிப்பு என்பவற்றிக்கு மத்தியில் நாம் இவ்வாறான ஈழ ஆதரவுப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போது, புலிகளின் தலைவர்களில் ஒருவரான கிட்டு இந்தக் கொலையை ம.க.இ.க கூடச் செய்திருக்கலாம் என எம்மைக் காட்டிக்கொடுக்கும் வகையில் அறிக்கை விடுத்திருந்தார்.

இனியொரு: எந்த அரசியல் கட்சிகள் இவ்வாறான ஈழத்தமிழ் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தன?

அதில் ஜெயலலிதாவின் பாத்திரம் மிக மிக முக்கியமானது. அவரின் நடவடிக்கைகள் காங்கிரசை விஞ்சியதாக இருந்தது. அதற்குப் பின்னர் ஒரு நெடிய இடைவெளி இருந்தது. அதன் பின்னர் தமிழ் நாட்டிலிருந்து, இதன் பின்னர் ஈழப் போராட்டம் தொடர்பாகப் பேசுபவர்கள் எழுதுபவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஜெயலலிதாவின் அடக்கு முறை கருணாநிதியின் தி.மு.க கட்சிக்கு எதிராகவும் ஏவிவிடப்பட்டது. பல உறுப்பினர்கள் தாக்கப்பட்டார்கள். கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்கள். ஆனால் இந்த அடக்கு முறைகளுக்கு எதிரான எதிர் வினை போர்க்குணாம்சத்தோடு ம.க.இ.க வின் தரப்பிலிருந்து மட்டுமே முன்னெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் கிளினொச்சி வீழந்த பின்னரும் கூட இங்குள்ள தேர்தல் கட்சிகள், அங்கே எதுவுமே நடக்கவில்லை, இராணுவத்தினரை உள்ளே இழுத்து புலிகள் நசுக்கி விடுவார்கள் என்றே பேசிவந்தனர்.

இனியொரு: தமிழகம் குறித புலிகளின் அரசியல் தமிழ் நாட்டில் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்திற்று?

புலிகள் யாருடை அரசியலை, ஆதரவை தமிழ் நாட்டில் விரும்பினார்களோ, கோரினார்களோ அவர்களெல்லாம் ஆளும்வர்க்கக் கட்சிகளாக அல்லது முழு நிறைவான சந்தர்ப்பவாதிகளாகவோ தான் இருந்தார்கள். அவர்கள் தங்களது சந்தர்பவாத அரசியலுக்கு உட்பட்ட அளவில் தான் இதில் பாத்திரமாற்றியிருக்கிறார்கள், ஆற்ற முடியும்.
ஒரு நல்ல உதாரணம், யாழ் கோட்டை புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட போது, பாரதீய ஜனதா வின் ஆட்சி இருந்தது. அப்போது, பா.ம.க, தி.மு,க, ம.தி.மு.க ஆகிய அனைவருமே மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள்.
அப்போது அந்த முற்றுகையைப் புலிகள் கைவிட வேண்டும் என்றும், இந்திய அரசு தலையிட்டு அதைத் தடுக்கவேண்டும் என்று இலங்கை அரசு இந்திய அரசைக் கோருகிறது. புத்த பிக்குகள் உட்பட பல இலங்கை அரசு சார்ந்தவர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள்.

இங்கு வந்து இந்திய இராணுவத்தைப் புலிகளுக்கு எதிராக அனுப்புமாறு கோருகிறார்கள். அப்போது கருணாநிதி யூகோஸ்லாவியா போன்ற ஒரு தீர்வை முன்வைக்கலாம் எனக் கூறுகிறார். அதைப் வாஜ்பாய் கடுமையாகக் கண்டிக்கிறார். அப்போது மாறன் பின்வாங்கி அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்கிறார். கருணாநிதி மௌனம் சாதிக்கிறார். தனி நாடு ஒருபோதும் சாத்தியமில்லை என்றும் முற்றுகையை விலக்கிக் கொள்ளச் சொல்லியும் இந்திய அரசு புலிகளை மிரட்டுகிறது. அந்தத் தருணத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகச் சொல்லிக் கொண்டிருந்த நெடுமாறனின் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் இம்மிரட்டலை ஒரு மிகப்பெரிய வெற்றியாகச் சொல்லுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் சிங்களப் பேரினவாத அரசிற்கு ஆதரவாக, தமிழ் மக்களின் உரிமைக்கு எதிராக இந்திய அரசு தலையிடுகிறது என்ற அரசியல் ரீதியான விமர்சனத்தைக்கூட இவர்கள் முன்வைக்கவில்லை.

இப்படிப்பட்ட மண்குதிரைகள் மீது தான் புலிகள் சவாரி செய்தார்கள். இவ்வான முழுச் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை நம்பித்தான் தமிழ் நாட்டில் தமது ஆதரவுத் தளத்தை நெறிப்படுத்தினார்கள்.
இந்தமாதிரியான சக்திகள் அவர்களின் சொந்த நலன்களிற்கு ஏற்றவாறே தமது ஈழ அரசியலை நகர்த்திச் சென்றனர்.
83 இல் இனப்படுகொலை நடந்த போது தமிழ் நாடே ஸ்தம்பித்துப்போனது. ஆனால், இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்தே 2009 இல் கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது எதிர்ப்பார்த்தளவில் எதுவும் நடக்கவில்லை.

Friday, August 21, 2009

"யூரோப்போல்": ஐரோப்பாவில் பயங்கரவாத எதிர்ப்புப் போர்


ஐரோப்பாவில் பயங்கரவாதத்திற்கெதிரான போர்... உலகில் ஐரோப்பாவின் பொருளாதார, இராணுவப் பாத்திரம், முன்றாம் உலகத்துடனான நீண்ட காலத்தொடர்பு, அதைவிடப் புவியியல் அமைவிடம் என்பன ஐரோப்பாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

இஸ்லாமியத் தேசியத் தீவிரவாதிகள் அமெரிக்காமீது பாய்வதற்கு ஐரோப்பாவைத் தளமாகப் பயன்படுத்துவதாக அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு. 2004 ல் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் உள்ளூர் இடதுசாரித் தீவிரவாதிகளை அடக்குமாறு கிரேக்கம் மீதான அமெரிக்காவின் உத்தரவு. ஐரோப்பா ஒன்று சேரும் வேளையில், பிரிவினைவாதிகளை ஒன்று சேர்ந்து அடக்குவோம் என்ற பொது ஐரோப்பியப் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை என்பன மூன்றாம் உலகப் போருக்குள் ஐரோப்பாவையும் இழுத்துக் கொண்டு வந்துவிட்டன.

மூன்றாம் உலக (போர்) தத்துவம் ஒன்று 1968 ல் மேற்கு ஐரோப்பாவெங்கும் இடம்பெற்ற மாணவர் எழுச்சியின் போது சிலரால் முன்வைக்கப்பட்டது. ஏகாதிபத்திய வல்லரசுகளின் அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் மூன்றாம் உலக மக்களுக்கு ஆதரவாக, "ஏகாதிபத்திய பூதத்தின் அடிவயிறான" ஐரோப்பாவில் தாக்க வேண்டும் என்ற அரசியற் கோட்பாட்டை சிலர் நடைமுறைக்குக் கொண்டுவர விரும்பினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் "செம்படைப்பிரிவு" என தமது இயக்கத்திற்குப் பெயரிட்டுக் கொண்ட ஆயுதந்தரித்த புரட்சிக்குழு. இவர்கள் மேற்கு ஜேர்மனியின் நகரங்களில் நகர்ப்புற கெரில்லா நடவடிக்கைகளான பொருளாதார இலக்குகளுக்குக் குண்டுவைத்தல், தொழிலதிபர்களைக் கடத்திச்சென்று கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில் வேடிக்கை என்னவெனில் இந்தத் தீவிர வாத இயக்கத்தில் இருந்த இளைஞர்களில் சிலர் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்களின் நெருங்கிய நண்பர்களின் பிள்ளைகளாயிருந்தமையே. இவர்கள் தமது மூன்றாம் உலகப் போரின் அங்கமாக பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுடன் கூட்டுச்சேர்ந்து விமானக்கடத்தல்களிலும் ஈடுபட்டனர்.

வெற்றிகரமாக முடிந்த விமானக் கடத்தல் நாடகமொன்று கிறீஸ் (கிரேக்கம்) தலைநகரான ஏதெனில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து அமெரிக்க உளவு நிறுவனம் கிரேக்கத்தை "நம்பமுடியாத" நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிட்டது. அது ஓரளவு உண்மையுந்தான். இரண்டாம் உலகப்போரின் பின்னர் தோல்வியடைந்த கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை கிறீஸ் சந்தித்துள்ளது. தோல்வியடைந்ததின் காரணமே பிரிட்டஷ்-அமெரிக்கத் தலையீடுதான். ஆயுதங்களைக் கீழே போட்ட கம்யூனிஸ்ட்டுகள் அரச ஸ்தாபனங்களின் பல பகுதிகளிலும் ஊடுருவி விட்டிருந்தார்கள். இதனால் ஐரோப்பாவில் ஒரு "வித்தியாசமான நாடாக" கிறீஸ் இன்று வரை தெரிகின்றது. பாலஸ்தீன , குர்திஸ் விடுதலைப்போராட்டங்களுக்கு இங்கே பெருமளவு மக்கள் ஆதரவு உண்டு. இருப்பினும் கிரேக்க அரசாங்கம் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துப்போகின்றது.

எழுபதுகளில் ஆண்ட கிரேக்க சமூக ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்தின் ஊடாக சோஸலிசத்தைக் கொண்டுவந்துவிடும் என அஞ்சியதாலோ என்னவோ அமெரிக்க சி.ஐ.ஏ யின் ஆதரவுடன் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்த இராணுவச் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அவ்வாறு, 17 நவம்பர் 1975 ல் எதன்ஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற மாணவரின் மறியல் போராட்டத்தை பாதுகாப்புப் படைகள் மூர்க்கமாக அடக்கியதில் பலர் கொல்லப்பட்டனர். அந்தத்தினத்தை நினைவு கூறும்முகமாக சில தீவிரவாத இளைஞர்களால் "நவம்பர் 17" என்ற பெயரில் ஆயுதந் தரித்த தலைமறைவு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.


இராணுவ சர்வாதிகாரம் மறைந்து, பாரளுமன்ற ஜனநாயகம் வந்த பின்னரும் "நவம்பர் 17" ன் போராட்டம் தொடர்ந்தது. இராணுவ ஆட்சிக்கு உடந்தையாகவிருந்த உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது அமெரிக்க உளவு நிறுவன அதிகாரிகள், பிரிட்டிஷ் இராணுவத் தலைமையதிகாரிகள் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலரும் ஆச்சரியப்படுமளவிற்கு சுட்ட சூத்திரதாரிகள் யாரும் நீண்டகாலமாகப் பிடிபடவில்லை. இது "நவம்பர் 17" ற்கு அரச மட்டத்தில் இருந்த ஆதரவைக்காட்டியது. இப்படியான சம்பவங்கள் முதலாம் உலகமான ஐரோப்பாவில் நடப்பது அமெரிக்க-பிரிட்டிஷ் அரசுகளுக்கு கண்ணைக் குத்தும் முள்ளாகத் தெரிந்தன. இதே நேரம் 2004 ஒலிம்பிக்ஸ் நடத்துவதற்கு கிறீஸ் தெரிவானது. ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கும் வேளையில் "நவம்பர் 17" என்ற இயக்கம் இருக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது.

2001 செப்டம்டர் 11, அமெரிக்காவை மட்டுமன்றி ஐரோப்பாவையும் மாற்றிவிட்டது. அமெரிக்கா அறிவித்த "பயங்கர வாதத்திற்கெதிரான போர்" பின் லாடனுக்கு எதிரானது மட்டுமேயென சிலர் நினைத்துக் கொண்டிருக்கையில், அதன் அர்தத்ம் பரந்துபட்டது என்பது விரைவிலேயே தெரிந்தது. அமெரிக்க அரசு தயாரித்த "சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின்" பட்டியலில் "நவம்பர் 17" ன் பெயரும் உள்ளது. "நவம்பர் 17" ன் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் கிறீஸின் மீது தடைகள் கொண்டுவரப்படும் என அமெரிக்கா மிரட்டியது. இந்த மிரட்டல் பலனுமளித்தது. குண்டு வைக்கப்போய் காயமடைந்த ஒரு நபர் பிடிபட்டதை தொடர்ந்து, "மக்களின் மனதைக் கவர்ந்த மர்ம வீரர்கள்" பிடிபட்டார்கள். இவர்களில் பலரும் மக்கள் மத்தியில் சாதாரண மனிதர்களாக வாழ்ந்து வந்தமை பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்தக் கைதுகளுக்குப்பின் முகமில்லாமல் இருந்த இயக்கத்திற்கு முகம் கிடைத்தது. குறைந்தது ஒருமாதமாகிலும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், யாவிலும் நவம்பர் 17 பற்றிய செய்திகள், விவாதங்கள் மட்டுமே இடம்பெற்று அந்த இயக்கத்திற்கு என்றுமில்லாத பிரபல்யத்தை தேடிக்கொடுத்தது.

"நவம்பர் 17" ன் கதை முடிந்ததென கிரேக்க அரசு நிம்மதிப் பெருமூச்சு விடுகையில் இடியென இறங்கியது இன்னொரு செய்தி: தொலைதூரத் தீவொன்றிலிருக்கும் இராணுவ முகாமின் ஆயுதக்கிடங்கில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் களவாடப்பட்டுவிட்டன. வழமைபோல் யாரும் பிடிபடவில்லை. கிறீஸ் பல திடுக்கிடும் செய்திகளுக்காகக் காத்திருக்கிறது.

இதிலிருந்து மிகவும் வேறுபட்ட கதை ஐரோப்பிய நாடுகளில் ஒளிந்திருக்கும் அல்-கைதா உறுப்பினர்களைத் தேடும் வேட்டை. செப்டம்பர் 11 விமானக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஜேர்மனியில் வசித்து வந்தார்கள் என்ற தகவல் வெளியான அன்றிலிருந்தே ஜேர்மனி, இத்தாலி , ஸ்பெயின், போன்ற நாடுகளில் பின்லாடனின் அல்கைதா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது அவ்வாறு சந்தேகப்படும் பலர் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளிலிருந்து கிடைத்த பொதுவான முடிவானது இவர்கள் தமது எதிரியான அமெரிக்காவைத் தாக்க ஐரோப்பாவைத் தளமாகப் பாவிக்கின்றனர் எனத் தெரிவிக்கின்றது.

இதனால் "அப்பாடா, நாம் தப்பினோம்" என்று ஐரோப்பியர் ஆறுதலடையலாம். ஆனால் அமெரிக்கா விடுவதாகவில்லை. பயங்கரவாதத்திற்கெதிரான போரில் ஐரோப்பாவையும் துணையாக வருமாறு அறைகூவல் விடுக்கின்றது. இப்போதைக்கு ஒத்துப் போனாலும் அமெரிக்க-ஐரோப்பிய முரண்பாடுகள் அவ்வப்போது தலைகாட்டாமல் இல்லை. இவற்றைவிட ஐரோப்பிய ஒன்றிணைவின் பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு புதிய பரிமாணம் பெற்றிருக்கின்றது. முன்பு ஒரு நாட்டின் தீவிரவாதிக்கு இனனொரு நாட்டில் அடைக்கலம் அளிக்கப்பட்டது.

இத்தாலியின் செம்படைப்பிரிவுத் தீவிரவாதிகளுக்குப் பிரான்ஸில் அடைக்கலம் கிடைத்தது. ஸ்பெயினின் பாஸ்க் மாநில பிரிவினைவாதிகளுக்கு பெல்ஜியத்தில் அரசியல் தஞ்சமும், பிரான்ஸில் தளமமைக்கும் வசதியும் கிடைத்தன. ஆனால் இவையெல்லாம் இப்போது பழைய கதை. பாஸ்க் பிரிவினைவாதிகள் பிரான்ஸிலிருந்து நாடுகடத்தப்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகளின் (இடதுசாரி) தீவிரவாத மற்றும் பிரிவினை கோரும் குழுக்களை கண்காணிக்க "யூரோப்போல்"(Europol) என்றழைக்கப்படும் ஐரோப்பியப் பொலிஸ் அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காவல்துறை "இன்டர்போல்" லை முன்னுதாரணமாகக் கொண்டு, யூரோப்போல் உருவாக்கப்பட்டது. இருப்பினும் யூரோப்போல் அதிகாரம், ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும். யூரோப்போலின் கண்காணிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் மேற்குறிப்பிட்ட வகை இயக்கங்கள் தவிர, தீவிர சூழலியவாதிகள், வெளிநாட்டு விடுதலையியக்கங்கள், அவர்களின் ஆதரவாளர்கள், ஆகியனவும் அடங்கும்.

Tuesday, August 11, 2009

ஈராக்: 'பாத்' கட்சியின் தோற்றமும் விடுதலைப் போரும்


ஈராக்கின் மத்தியில் உள்ள ஒரு சிறிய நகரம் அது. அங்கேயிருக்கும் சந்தை மைதானத்தில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடக்கப்போகும் விபரீதத்திற்குச் சாட்சி சொல்லக் காத்திருக்கின்றனர். ஊர் மக்களுக்கு மத்தியில் ஒரு இளைஞன் மரத்தோடு கட்டி வைக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கு நேர் எதிரே வேட்டைத்துப்பாக்கியுடன் ஒரு முதியவர் இறுகிய முகத்துடன் குறிபார்த்து விட்டுத் தயங்குகிறார். "சுடு" என உத்தரவிடுகின்றனர் சுற்றியுள்ள சிலர். துப்பாக்கியிலிருந்து சீறிப்பாய்ந்த தோட்டா இளைஞனின் காலைக் காயப்படுத்துகிறது. அத்துடன் அந்த முதியவர் மயங்கி விழுகிறார். அவரிடமிருந்து விழுந்த துப்பாக்கியை எடுத்த இன்னொரு இளைஞன் கட்டப்பட்டவனைச் சுட்டுக்கொல்கிறான்.

இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கொல்லப்பட்ட இளைஞன் மறைந்திருந்த போராளிகளை அமெரிக்கப் படைகளுக்குக் காட்டிக்கொடுத்த குற்றத்திற்காக ஊர்மக்களின் வற்புறுத்தலினால் அவனுக்குத் தண்டனை வழங்கியவர்கள் அவனது தந்தையும் தம்பியும்.

ஈராக்கில் தற்போது நடந்துகொண்டிருக்கும் யுத்தத்திற்கு பொதுமக்களின் ஆதரவு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதற்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு உதாரணம். அமெரிக்கப்படைகள் ஈராக்கை ஓரிரு மாதங்களில் கைப்பற்றியவுடன் அங்கே எந்த எதிர்ப்பியக்கமும் வராது எனத் திட்டவட்டமாகக் கூறினர் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள். வியட்னாமுடன் ஒப்பிடமுடியாது என ஆரூடம் கூறினர். இருப்பினும் ஈராக் மெல்ல மெல்ல வியட்னாமாகி வருவதை பலர் தற்போது ஒத்துக்கொள்கின்றனர். முதலாவது வளைகுடா யுத்தத்தின்போது இறந்த அமெரிக்கப்படையினரின் எண்ணிக்கையைவிட தற்போது நடக்கும் கொரில்லாப்போரில் இறந்த படையினரின் எண்ணிக்கை அதிகம். இது ஈராக்கைக் கைப்பற்றுவதற்கான போரில் இறந்த படையினரைவிட அதிகம். இவை அமெரிக்க அரசு வழங்கிய உத்தியோக பூர்வ அறிக்கையிலிருந்து பெறப்பட்டவை.

ஈராக் போரில் இறக்கும் படையினரைப்பற்றிய சரியான எண்ணிக்கை அறிவிக்கப்படுவதில்லை. பல மரணங்கள் "விபத்துகளில்" ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகின்றன. அங்கே தினசரி சராசரி 20 தாக்குதற் சம்பவங்கள் நடைபெறுவதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இராணுவ வாகனத் தொடர்கள் கண்ணிவெடியில் சிக்குதல், நடந்து செல்லும் படையினர் தெருவோர மிதிவெடிக்கு அகப்படல் போன்ற அன்றாட தாக்குதல் சம்பவங்களைத் தவிர அரசியல் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தாக்குமளவிற்கு எதிர்ப்பியக்கம் வளர்ந்துள்ளது. பலருக்குப் "புரியாத விடயமாக" ஐ.நா சபை, செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்களும் தாக்கப்பட்டுள்ளன.

முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்ட ஈராக் விடுதலைப்போராட்டம், அமெரிக்கப் படைகள் நாட்டினுள் வந்தவுடனேயே ஆரம்பிக்கவில்லை. அதற்குச் சிறிது காலம் எடுத்தது. திடீரென நடந்த ஆட்சி மாற்றத்தால் தடுமாறிப்போன மக்கள் அமெரிக்க இராணுவத்திடம் இருந்து நிறையவே எதிர்பார்த்தார்கள். சதாமால் ஓரங்கட்டப்பட்டிருந்த பிற அரசியல் சக்திகளுக்கு இடம் கொடுக்கும் வகையில் பொதுத் தேர்தல்கள நடாத்தப்பட்டு ஜனநாயக ஆட்சி நடப்பதை மக்கள் விரும்பினர். நாட்டின் பொருளாதார மீள்கட்டுமானம் விரைவாக நடக்கவேண்டுமென அவர்கள் கோரினர். அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. பொதுத் தேர்தலையோ ஜனநாயகத்தையோ காணவில்லை. ஒரே இரவில் வேலையிழந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் அதிர்ஷ்டக்காரருக்கு மட்டுமே வேலை கிடைப்பதைக் கண்டனர். அதிருப்தி அமைதி வழி ஊர்வலமாகி அமெரிக்கப்படைகளின் நிலைகளை முற்றுகையிட்டபோது, அமைதியிழந்த படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இறந்தவர்களின் சடலங்களைப் புதைக்கும் போது பலர் ஆயுதமேந்திப் போராடப்போவதாகச் சூளுரைத்தனர். ஈராக்கின் நீண்ட கெரில்லாப் போர் இவ்வாறுதான் ஆரம்பமாகியது.

ஒவ்வொரு நாளும் நடக்கும் தாக்குதற் சம்பவங்களைப் பார்க்கும்போது இவை மிகச் சிறப்பபாக ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்படுவதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் இவற்றை நடத்துவது யார் என்பதில்தான் வேறுபட்ட அபிப்பிராயங்கள் கூறப்படுகின்றன. பதவியிழந்து தூக்கில் தொங்கிய சதாம் ஹுசையினின் ஆதரவாளர்கள்தான் இவர்கள் என்கிறது அமெரிக்கா. அரபுப் பத்திரிகையாளர்கள் புதிய இஸ்லமியத் தேசியவாத இயக்கங்கள் உருவாகியுள்ளதாகக் கூறிவருகின்றனர். இதற்கிடையே மறக்காமல் அவ்வப்போது அல்-கைதாவின் பெயரும் அடிபடும். இந்த ஊகங்கள் மேலெழுந்தவாரியாகச் சரிபோல தோன்றினாலும் அறுதியிட்டுக் கூறமுடியாது உள்ளன. ஒரு சில சதாம் ஆதரவாளர்களினால் பெரும்பான்மை ஆதரவைத் திரட்ட முடிந்தது எபபடி? புதிய இயக்கங்கள் எப்படி நுட்பமான இராணுவத் தந்திரோபாயங்களை கையாள்கிறார்கள்? மதத்தை முக்கியமாக முக்கியமாகக் கருதாத சமூகத்தினுள் அல்-கைதா நுழைந்தது எப்படி?

மத்திய கிழக்கு நாடுகளில் ஈராக் இராணுவம் பிரமாண்டமானது. பல சிறப்புப் படையணிகளைக் கொண்டது. இதற்கும் மேலாக தசாப்தகால ஈரானுடனான போரில் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டது. இத்தகைய இராணுவம்தான் ஈராக்கை ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் பிராந்திய வல்லரசாகக் காட்டியது. மார்ச் 2003 ல் நடந்த அமெரிக்கப் படையெடுப்பின்போது சேவையிலிருந்த படைவீரர்கள் நான்கு லட்சத்திற்கும் அதிகம். ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றிய நாளில் இருந்து அவ்வளவு வீரர்களுக்கும் ஒரே நாளில் வேலை பறிபோனது. வேறு எந்த வேலையும் தெரியாத அவர்களின் எதிர்காலம் என்ன? என்பதைப்பற்றி ஆக்கிரமிப்பாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பாக்தத்தில் முன்னாள் இராணுவ வீரர்கள் வேலை கேட்டு ஊர்வலமாகப் போனபோது இவ்வாறு கூறினார்கள்: "வேலை கிடைக்காவிட்டால் எதிர்ப்பியக்கத்தில் இணைந்து கொள்வோம்". அன்று சொன்னதைத் தற்போது செயலில் காட்டுகிறார்கள்.

சதாம் ஹுசையினுக்கும் பிற ஆட்சியாளருக்கும் அமெரிக்கா படையெடுக்கப்போவது முன்கூட்டியே தெரிந்திருந்தது. ஒருபக்கம் நாட்டினுள் நுழையும் எதிரிப்படைகளை எதிர்த்துச் சண்டையிடும் பொறுப்பை பெதாயின் படையினரிடமும், மறுபக்கம் பாக்தாத்தை பாதுகாக்கும் கடமையைக் குடியரசுப் படையினரிடமும் ஒப்படைக்கப்பட்டது. இவர்களின் எதிர்ப்பு வீணாகி அந்நியப்படைகள் நாட்டை ஆக்கிரமிக்கும் பட்சத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டன. அதாவது வியட்னாம் பாணியிலான நீண்ட கெரில்லாப் போராட்டத்திற்கு அப்போதே திட்டமிடப்பட்டுவிட்டது.

இரகசியமாகவும், பகிரங்கமாகவும் பல திட்டங்கள் தீட்டப்பட்டன. சிறு ஆயுதங்கள் (AK47) பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இது முன்கூட்டியே நடைபெற்ற விடயம். தற்போது கடைசி தருணத்தில் துப்பாக்கிகள், ஆர்.பி.ஜி ரொக்கட் லோஞ்சர்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவற்றை இராணுவ அதிகாரிகள் தத்தமது வீடுகளுக்குக் கொண்டுபோய் பதுக்கி வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஆயுத விநியோகம் மட்டுமல்லாது நிறுவனமயமாக்கல் விடயத்திலும் கவனம் செலுத்தப்பட்டது. கிராமங்கள், நகரங்கள் எங்கும் "செல்" எனப்படும் சிறு சிறு இரகசியக் குழுக்கள் அமைக்கப்பட்டன. குறைந்தது மூன்று பேரும், கூடியது பத்துப்பேரும் கொண்டவையாக குழுக்கள் உருவாக்கபபட்டன. இலகுவில் கொண்டு செல்லக்கூடிய ஆயுதங்களை மாத்திரமே இவர்கள் வைத்திருப்பர். எந்த இடத்தில் எந்தத் தாக்குதல் செய்வதென்பதை அந்தக் குழு மட்டுமே சுதந்திரமாக முடிவு செய்யும். அதாவது ஒரு குழு ஓரிடத்தில் என்ன செய்யப்பபோகிறது என்பது அடுத்த குழுக்களுக்குத் தெரியாது. தாக்குதல் திட்டங்கள் மட்டுமல்ல உறுப்பினர்களைப்பற்றிக் கூட அடுத்த குழுக்களுக்கு எதுவும் தெரியாது. இதனால் எங்காவது ஒரு நபர் இராணுவத்திடம் அகப்பட்டு சித்திரவதையினால் சக போராளிகளைக் காட்டிக் கொடுத்தாலும் கூட பிற குழுக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

உலகில் பலர் ஈராக் என்றால் சதாம் ஹுசைன் மாத்திரம்தான் என்றுதான் அறிந்து வைத்திருக்கின்றனர். சதாம் தலைமை தாங்கிய பாத் கட்சி பற்றி அதன் அரசியல் வரலாறு பற்றி அறிந்தவர்கள் மிகக்குறைவு. சதாம் என்ற "தனிநபர்" ஈராக்கை ஆளவில்லை. அதற்குப் பின்னால் பாரம்பரியம் மிக்க பாத் கட்சி இருந்தது. அதற்கெனக் குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தம் இருந்தது.

பாரிஸ் பலகலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சிரிய கிறிஸ்தவரான மிஷெல் அஃப்லக்கின் சிந்தனையில் பிறந்த அரபுத் தேசியவாதத்தின் நிறுவனமயமாக்கல்தான் பாத் கட்சி . சதாம் என்னதான் அதிகார மமதையில் ஆட்சி புரிந்தாலும், பாத்தின் அரசியற் கொள்கைகளை பின்பற்றியவர் என்பதை மறுக்கமுடியாது. அப்போது சிரிய ஆட்சியாளர்கள் தம்மை "இடதுசாரி பாத்" என்றும் ஈராக்கியரை "வலதுசாரி பாத்" என்றும் அழைத்தனர். ஈராக் பாத்தில் சதாம் அசைக்க முடியாத தலைவராக இருந்தது உண்மை. ஆனால் கட்சி தனது செல்வாக்கை நாடு முழுவதும் பரப்பியிருந்தது. அவ்வப்போது கட்சி பொதுத்தேர்தல்கள் நடாத்தப்பட்டன. அதிக சுதந்திரமற்ற , ஜனநாகமற்ற சூழ்நிலை நிலவிய போதும் ஈராக்கை சதாம் என்ற தனிநபர் மட்டுமல்ல பாத் கட்சியும் சேர்ந்தே ஆட்சி செய்தது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளால் நியமிக்கப்பட்ட மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் மூலமே பாத் கட்சி ஆட்சிக்கு வந்தது. கொரில்லாப் போராட்டம், வெகுஜனக் கிளர்ச்சிகளை ஒழுங்குபடுத்தல் என்பன பாத் கட்சி வந்த பாதைகள். மூன்றாம் உலக நாடுகளின் பிற விடுதலை இயக்கங்களைப் போல் காலணிய ஆட்சிக்கு எதிராக பிரதேச தேசியவாதத்தை தனது அரசியலாக முன்னெடுத்தது. இத்தகைய பின்னணியில் வந்த பாத் கட்சி தற்போது சீர்குலைந்து அழிந்து போய்விட்டதாகக் கருதுவது யதார்த்தத்தை மறுப்பது போலாகும். சதாமின் காலத்தில் தொழில்முறை அரசியல்வாதிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது உண்மை. நிர்வாகத் தேவைகருதி பலதரப்பட்டவர்களையும் சேர்த்துக் கொள்வதுண்டு. ஆனால் தற்போது நடப்பது அந்நிய ஆக்கிரமிப்புக் கெதிரான தேசிய விடுதலைப் போராட்டம். ஆகவே இன்றைய நிலையில் தேவையற்ற பலர் கழற்றி விடப்பட்டதும் அத்தகைய உதிரிகள் அமெரிக்கருடன் கூட்டுச்சேர்வதும் நடந்தது. அப்படியானவர்களில் பலர் அமெரிக்கப்படைகளால் கைது செய்யப்பட்டதால் அல்லது சரணடைந்ததால் பாத் கட்சியின் கதை முடிந்தது என தவறாகக் கணிப்பிடப்பட்டது.

அமெரிக்க அரசு என்னதான் சதாமின் ஆதரவாளர்களே தற்காலத் தாக்குதல்களுக்குக் காரணம் என்று திரும்பத் திரும்பக் கூறினாலும் அது வெறும் பிரச்சாரமாகவே அமைந்து விடுகிறது. சதாம் என்ற சர்வாதிகாரியை அப்புறப்படுத்தவேதான் ஈராக் போனதாகவும் பதவியிழந்த சர்வாதிகாரியின் ஆதரவாளர்களை அடக்கும் பணி இருப்பதால்தான அங்கே தொடர்ந்து இருப்பதாகவும் சாட்டுச் சொல்லத்தான் இந்தப் பிரச்சாரம் செய்யப்படுகிது. இதன் அர்த்தம் இன்னும் எத்தனை அமெரிக்கப் படையினர் இறந்தாலும்அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறும் நோக்கம் தற்போது இல்லை என்பதே . எதிர்ப்பைச் சமாளிக்க மேலதிக படையினர் குவிக்கப்படலாம். பிறநாட்டு இராணுவங்களை அனுப்பும்படி கோரப்படலாம்.

எது எப்படியிருப்பினும் அமெரிக்கப் படையினருக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் பாத் கட்சியினாலேயே தலைமை தாங்கப்படுவது தற்போது தெளிவாகியுள்ளது. அவர்களின் யுத்த தந்ரோபாய முறைதான் முன்குறிப்பிட்ட சிறு போராளிக்குழுக்களை அமைக்கும் முறை. இந்தப்போர் முறையை முன்னொரு காலத்தில் சோவியத் யூனியனும் சொல்லிக் கொடுத்திருந்து. அன்று சோவியத் யூனியன் வழங்கிய AK47 , ஆர்.பி.ஜீ , சாம் போன்ற சிறு ஆயுதங்கள் இன்று உலகின் அதிநவீன ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்க இராணுவத்தை எதிர்க்கப் பயன்படுகின்றன. இவற்றின் முன்னாள் அதியுயர் தொழில் நுட்பம் தோற்றுப்போகிறது.

ஈராக்கின் போராட்டம் இஸ்லாமியவாதிகளால் முன்னெடுக்கப்படுவதாக சிலர் கூறிவருகின்றனர். பிற அரபுநாட்டுச் செய்தி ஊடகங்கள் இது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஏற்கெனவே சதாம் ஹுசைனை தமது போட்டியாளராக வெறுத்த அரபு நாடுகளின் மத்திய தர வர்க்கமே இந்தச் செய்தியைப் பரப்பிவருகிறது. இருப்பினும் ஈராக்கில் இஸ்லாமிய வாதிகளும் போராடுவது உண்மைதான். ஒருகாலத்தில் எதிரிகளாகவிருந்த மதசார்பற்ற பாத் கட்சிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் இடையில் "எனது எதிரியின் எதிரி எனக்கு நண்பன்" என்ற அடிப்படையிலான கூட்டு ஏற்பட்டுள்ளமை பலரை வியக்க வைத்துள்ளது. ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு நீடிக்கும் காலம்வரையில் இந்தக் கூட்டணியும் நீடிக்கும்.

போராட்டத்தில் பிற அரபு நாடுகளில் இருந்து வந்த தொண்டர்கள் பங்குபற்றுவது உண்மைதான். இருப்பினும் பெரும்பான்மையான போராளிகள் ஈராக்கியப் பிரஜைகள் என்ற உண்மையை அமெரிக்க அரசு உலகிற்கு மறைத்து வருகின்றது. தொடரும் வேலையில்லாப் பிரச்சினை, அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாமை, இராணுவக் கெடுபிடி , உள்நாட்டுக் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளாத அந்நிய நாட்டுப்படைகளின் அத்துமீறல்கள் என்பன அதிக இளைஞர்களை போராளிகளாக்கி வருகின்றன. முன்பு சதாமின் ஆட்சி இதைவிட பரவாயில்லை என்று கூறப் பலர் தலைப்பட்டுள்ளனர்.

ஈராக்கில் அமெரிக்கப் படைகளுக்கெதிரான போராட்டம் தொடர்வது ஈரான், சிரியா போன்ற அயல்நாடுகளுக்கு மகிழ்ச்சி தரும் விடயம். ஈராக் புதைசேற்றில் அமெரிக்கா சிக்கிக் கொண்டு தவிப்பதைப் பல நாடுகள் ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றன.

(பிற்குறிப்பு: இந்த ஆய்வுக் கட்டுரை சில வருடங்களுக்கு முன்னர் ஈராக்கில் போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது. ஈராக்கிய விடுதலைப் போரின் பின்னணித் தகவல்களை அறிய விரும்புபவர்களுக்காக இங்கே பதிவிடுகின்றேன்.)

Thursday, August 06, 2009

படைப்புகளின் பட்டியல்



_______________________________________________________________

227.வார்சோ ஒப்பந்த அகதிகள்

226.போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை

225.அமெரிக்காவின் புராதன பொதுவுடைமை சமுதாயம்

224.இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா

223.கதிர்காமக் கந்தா! இனவாதிகளுடன் உனக்கும் பங்கா?

222.ராஜபக்ஷவுக்கு முதல் மரியாதை! முருகனின் துரோகம்!!

221.சுவிஸ் தமிழ் "மேட்டுக்குடி தொழிலாளர்கள்"

220.சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை

219.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!

218.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...

217.Günter Wallraff நூல் அறிமுகம் : "Aus der schönen neuen Welt"







1.தெருக்களில் வாழும் ஜெர்மன் ஏழைகளின் கதை2.கனவான்களின் ஜெர்மனியில் ஒரு கருப்பன் படும் பாடு3.கால் சென்டர்கள்: "இங்கே பொய்கள் மட்டுமே விற்கப்படும்!"4.ஏமாற்றுவது எமது தொழில் - Call Centre ஊழியரின் வாக்குமூலம்


216.அமைதிப் படைக்கு அஞ்சும் இஸ்ரேல்

215.ஹலால் செக்ஸ்" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்

214.தென் கொரிய கப்பல் தகர்ப்பு மர்மம்

213.இரண்டாம் உலகப்போரும், முடிவுறாத மொழிப்போரும்

212. மத்தியில் மன்னராட்சி, மாநிலத்தில் சமஷ்டி

211. மதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம்!

210. தென் கொரிய கப்பல் தகர்ப்பு மர்மம்

209.கிறீஸ் மக்களைத் தாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்

208.ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !



207.சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்Part 1Part 2Part 3Part 4Part 5Part 6


206.தற்கொலைத் தாக்குதல்களை தோற்றுவித்தவர் யார்?(கேள்வி - பதில்)

205.பொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்

204.கிழக்கு தீமோர்: சுதந்திரம் உண்டு, சோறு இல்லை!

203.ஸ்பெயின்: ஒரு ஐரோப்பிய போரின் ஆறாத ரணம்

202.கொசோவோ: ஒரு பொருளாதார அடியாள் உருவான கதை

201. லண்டனை மீட்ட ஊர்காவல் படைகள்

200."நாம் தமிழர், நமது மொழி ஆங்கிலம்" - லண்டன் தமிழர்

199.கோயிலில்லா லண்டனில் குடியிருக்க வேண்டாம்

198.பிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்

197.உழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்

196.லண்டன் உங்களை வரவேற்கிறது!

195.கர்த்தரே! பாவிகளான பாதிரிகளை மன்னியாதேயும்!!

194.சுவிட்சர்லாந்து ஈழத்தமிழரின் காலனியாகிறதா?

193.இரண்டாவது ஈழப் போரின் நினைவுக் குறிப்புகள்

192.வறுமை ஒழிப்பு ஒரு வரலாற்றுக் கடமை

191.கிரீஸ்: ஒரு மேற்கைரோப்பிய தேசம் திவாலாகின்றது

190.ஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது

189. வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கிறது!

188.அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்

187.புலம்பெயர்ந்த தமிழ் தேசியம்

186.ஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியங்கள்

185.ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா?

184."அகதிகளின் டைட்டானிக்" கப்பலின் சோகக் கதை

183.கடவுளின் நிறம் என்ன?

182.இஸ்லாம்: ஒரு வெற்றிகரமான வெளிவிவகார அரசியல்

181.வாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்

180. இஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்

179. இஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி

178. வெளிநாட்டு மோகம் எதுவரை?

177.ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப் படைகள்

176. இங்கே சோஷலிசத்தில் இருந்து விடுதலை அளிக்கப்படும்

175. ஜப்பான்: மேற்கே உதிக்கும் சூரியன்

174. அல்லாஹ் யாருக்கு சொந்தம்?

173. இலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள்

172. ஜெர்மனி மீண்டும் உலக வல்லரசாகின்றது

171. ஒன்றிணைந்த ஜெர்மனி : மறைந்திருக்கும் ஆபத்து

170. சுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்

169. திபெத் மடாலய மர்மங்கள்

168.ஜனநாயக நாடுகள் திணிக்கும் சர்வாதிகாரம்

167.இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்

166.ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்

165.இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்

164.தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனியரும்

163.போர்க்களமான புனித பூமி

162. காந்தாரம் முதல் காஷ்மீரம் வரை

161. RACISM = நிறவெறி + சாதிவெறி + இனவெறி

160.ஸ்ரீ லங்கா ஜனாதிபதியை கைது செய்வது தொடர்பாக...

159. எழுதாதே எதிர்ப்பேன்

158. இருண்ட ஐரோப்பாவை நோக்கி...

157. ஒல்லாந்தரின் தேசங்கடந்த கஞ்சா வணிகம்

156. மனித அழிவில் லாபம் காணும் மரண வியாபாரிகள்

155. லெபனான் : இது ஹிஸ்புல்லா தேசம்

154.சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்

153.ஈழம் இழந்தோம் இந்தியாவில் சரண் புகுந்தோம்

152.ஐரோப்பாக் கண்டத்தை கண்டுபிடித்த ஈழ அகதிகள்

151. ஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்

150. ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்

149. சரத் பொன்சேகாவும் ஜனாதிபதி தேர்தலும், சில பின்னணித் தகவல்கள்
  

148. தென்னிலங்கையின் பாதாள உலகப் போர்

147. பாழடைந்த வீட்டில் குடி புகுந்தால் சிறைத்தண்டனை

146. ஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்

145. தலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்

144. உய்குர் துருக்கிஸ்தான், சீனாவின் துரதிர்ஷ்டம்

143. 9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்

142. குர்து மலையோரம் வீசும் இரத்த வாடை

141. ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? பகுதி - 2

140. ஐரோப்பாவின் எரியும் வாயு பிரச்சினை

139. "யூரோப்போல்": ஐரோப்பாவில் பயங்கரவாத எதிர்ப்புப் போர்

138. ஈராக்: 'பாத்' கட்சியின் தோற்றமும் விடுதலைப் போரும்

137. அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்

136. கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள்

135. பிலிப்பைன்சில் அமெரிக்காவின் பில்லி சூனியம்

134. நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

133. ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? பகுதி - 1

132. மேலைத்தேய நாசகார நாகரீகம்

131. இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்

130. சிம்பாப்வே: வெள்ளையனே வெளியேறு

129.ஈரான் தேர்தல்: "எல்லா வாக்கும் இறைவனுக்கே!"

128.தமிழீழ விடலைகளின் தறுதலைக் கூட்டணி

127.ஈழத்தின் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள்

126.துருக்கியில் தொடரும் "ஈழப் போர்"

125.நாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம்

124.புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்

123.மதத்தின் பொருளாதார அடிப்படைகள்

122.பெண்ணடிமைத்தனமும் மதவாத சட்டங்களும்

121.இஸ்லாமிய மத அரசியலின் தோற்றம்

120.மத அடிப்படைவாதம் : ஒரு மேலைத்தேய இறக்குமதி

119.வங்கத்தில் மையங்கொள்ளும் அரசியல் புயல்

118.தமிழீழம் சாத்தியமா? - ஓர் ஆய்வு[பகுதி-1]

117.அநாதை தேசங்கள்[தமிழீழம் சாத்தியமா?பகுதி-2]

116.கம்போடியாவின் கண்டம் ஒரு இந்துக் கோயில்

115.கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்

114.அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD)

113.கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்

112.ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !

111.நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !

110.ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை

109.காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்

108.ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1

107.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏

106.திரையில் கலாச்சார மோதல், மறைவில் வல்லரசு மோதல் (Part 2)

105.1418 ம் ஆண்டு - சீனர்கள் உலகத்தை கண்டுபிடித்தனர் (Part 1)

104.ஷரியா: ஏழைகளுக்கான மலிவு விலை சட்டம்

103.வட கொரியா: அணு குண்டு இராஜதந்திரம்

102.புதிய தாலிபான் யுத்த தந்திரங்கள்

101.சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்

100.வாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்

99.போக்கிரிகளின் புகலிடம் அமெரிக்கா - ஒரு வரலாற்று மீள்பார்வை

98.யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்

97.தடுப்பு முகாம்கள்: ஆங்கிலேயரின் மாபெரும் கண்டுபிடிப்பு

96.கிரீஸின் மனித உரிமை மீறல்கள்: ஐரோப்பாவின் களங்கம்

95.கிரீஸில் புரட்சிகர ஆயுதப்போராட்டம் ஆரம்பம்

94.திருமணங்கள் கிரிமினல்களால் நிச்சயிக்கப்படுகின்றன

93.கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்

92.மீண்டும் லெனினிடம்?

91.துபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது



90.உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா?[பகுதி -1][பகுதி -2][பகுதி -3][பகுதி -4]


89.பெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை

88.பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வருகிறார்

87.பொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்

86.இஸ்லாமியத் தாயகக் கனவுகள்

85.சவூதி அரேபியா: வறுமையின் நிறம் பச்சை

84.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்

83.சர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்

82.ஐஸ்லாந்தில் புரட்சி, ஆட்சியாளர் மிரட்சி

81.குழந்தைகளை கடத்தும் வெள்ளையின மேலாண்மை

80.சர்வதேச விடுதலைப் போர்களின் திருத்தந்தை

79.ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம் (அல் கைதா: 2)

78.அல் கைதா என்ற ஆவி

77.விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள்

76."எயுஸ்கடி": ஐரோப்பாவின் மூத்தகுடி "

75.இஸ்ரேலை காக்கும் பைபிள் கனவுகள்

74.தாய் மொழியில் பேசுவது குற்றம்!

73.ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட அரச பயங்கரவாதம்

72.வளர்ந்த நாட்டில் ஊழல் இல்லையா? (சைப்ரஸ் தொடர்-3)

71.ஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)

70.இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்

69.தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை

68.நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா?

67.கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது

66.கிறிஸ்துமஸ் தாத்தாவின் நிறவாதம்

65.ஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை

64.யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு

63.அதிகம் சம்பாதிப்பது தேச நலனுக்கு கேடாகலாம்

62.கணணி மென்பொருளே! கலியுக பரம்பொருளே!!

61.கிழக்கே நகரும் உலக அதிகார மையம்

60.சோமாலியா, உலகின் குப்பைத் தொட்டியா?

59.இன்று கடற்கொள்ளையர்கள், நாளை கம்பெனி முதலாளிகள்

58.சுதந்திர சுரண்டல் வலையம்

57.உங்கள் கணணியில் உதிரம் வடிகின்றது!

56.பொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிகளும்

55.ஆங்கில மோகமும் தமிழின் தாகமும்

54.ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாடு

53.டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...

52.பெரு: மீண்டும் ஒளிரும் பாதை

51.இருபத்தியோராம் நூற்றாண்டின் அடிமை வியாபாரம்

50.லாபம் முதலாளிகளுக்கு, நட்டம் மக்களுக்கு

49."கொல்லுவதோ இனிமை!" - ஈராக்கில் அமெரிக்க இராணுவம்

48.மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு

47.வீடு வரை கனவு, காடு வரை கடன்

46.வள்ளல் புஷ் வழங்கும் "வங்கி சோஷலிசம்"

45.சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு

44.மனித அழிவில் லாபம் தேடும் வங்கிகள்

43.எண்ணைக் கிணறு வெட்ட வகுப்புவாதப் பூதம் கிளம்பியது

42.பாகிஸ்தானில் மதவாத அரசியல் கட்சிகளின் வளர்ச்சி

41.பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து!

40.நிதியால் சிறுத்த ஐஸ்லாந்து சினத்தால் சிவக்கிறது

39.ஓர் உலக வல்லரசு உருவாகின்றது

38.இஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்

37.பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்

36.ஒபாமாவின் பார்வை காஷ்மீர் பக்கம்

35.கொல்லுவதோ இனிமை!" - ஈராக்கில் அமெரிக்க இராணுவம்

34.பனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு

33.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"

32.ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை

31.ஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு

30.உலகப்போரில் மறைக்கப்பட்ட கறுப்பு வீரர்கள்

29.ஆண்டு"0",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு

28.ரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்

27.இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்

26.லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்

25.ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்

24.சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்

23.ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள்

22.குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை

21.சைப்பிரசில் ஓர் ஈழம்

20.ஐரோப்பிய கலாச்சாரப் புரட்சி

19.வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்

18.அவதியறோவா(நியூசிலாந்து): பூர்வீக பயங்கரவாதம்

17.நெதர்லாந்து: புதுமணத்தம்பதிகளை பிரிப்போம்

16.இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்

15.அகதி வைரஸ் 2.0 (Made in Holland)

14.இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்

13.தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்

12.உலக ( உணவுக் கலவர) வங்கி

11. மியான்மரின் துயரமும் நிவாரண மாய்மாலமும்

10.வட கொரியாவில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்

9.திபெத் : மதம், விளையாட்டு, அரசியல்

8.இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது

7.வெள்ளை ரஷ்யா, கடைசி சோவியத் குடியரசு

6.துபாய், முதலாளிகளின் சொர்க்கபுரி

5.குர்திஸ்தான், துருக்கியின் துயரம்

4.மொரோக்கோ, முரண்பாடுகளின் தாயகம்

3.சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்

2.சிம்பாப்வே: கறுப்பர்களின் கடமை

1. கியூபா, கம்யூனிசம் நிரந்தரம்


__________________________________