Saturday, October 30, 2010

மேலைத்தேய நிதியில் நடந்த தமிழ் இனப்படுகொலை


"இராணுவ, தொழில்நுட்ப உதவிகள் யூத தேசத்தின் ஊடாக சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டன. அமெரிக்காவின் ஒப்புதலின் பேரிலேயே அது நடைபெற்றது. அமெரிக்க தூதுவராலயத்தில் இஸ்ரேலிய நலன்பேணும் பிரிவு திறந்து வைக்கப்பட்டது. சிறிலங்கா கடற்படையை பலப்படுத்த இஸ்ரேல் உதவியது. அதனோடு ஷின்பெத் ஆலோசகர்கள் விசேஷ அதிரடிப் படைக்கு (STF) பயிற்சியளிக்க வந்தார்கள்."
 - விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் எழுதிய War and Peace நூலில் இருந்து.

தமிழ் பேசும் மேற்கத்திய விசுவாசிகள், தமது இயல்பான கம்யூனிச வெறுப்பின் காரணமாக சீனா, ரஷ்யா பற்றி எல்லாம் திட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஈழத்தில் தமிழ் இனவழிப்புக்கு இஸ்ரேலும், மேற்கத்திய நாடுகளும் வழங்கிய உதவி குறித்து வாய் திறக்க மாட்டார்கள். தமிழ் ஊடகங்களும் அவர்களின் ஆதிக்கத்தில் இருப்பதால், அந்த தகவல்களை தமிழ் மக்கள் அறிய விடாது இருட்டடிப்புச் செய்வார்கள்.


சிறிலங்கா அரசு நடத்தி முடித்த தமிழ் இனப்படுகொலைக்கு அனுசரணை வழங்கிய மேலைத்தேய நாடுகள் குறித்த சிறிய ஆவணம் இது. அந்த தகவல்களை தொகுத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய இடதுசாரிக் கட்சியான Green Left க்கு நன்றி. (Green Left: Sri Lanka: The West backs genocide)


ஒரு சில வாய்வழி கண்டனங்களைத் தவிர, ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது மேற்கத்திய நாடுகளோ இலங்கை அரசின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கையில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் பொழுது, ஐ.நா. பாதுகாப்பு சபை, ஐ.எம்.எப். வழங்கிய US$1.9 பில்லியன் கடனை தடுக்கவில்லை. கார்டியன் பத்திரிகை தகவலின் படி, "சிறிலங்கா மீது அத்தகைய தண்டனை தேவையில்லை என்று 15 உறுப்பினர் குழுவைக் கொண்ட பாதுகாப்பு சபை முடிவெடுத்தது."

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Robert Blake ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறினார்: "பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு அமெரிக்கா இலங்கை அரசுக்கு உறுதியான ஆதரவை தெரிவிக்கின்றது.... இலங்கை இராணுவத்திற்கு தேவையான பயிற்சியையும், ஆயுத தளபாடங்களையும் அமெரிக்கா வழங்கி வருகின்றது." ( Human Rights Features Report, June 2007 )

அமெரிக்கா,"சர்வதேச இராணுவ கற்கைகளுக்கும் பயிற்சிக்குமான திட்டத்தின்" (IMET) கீழ், இலங்கைக்கு வருடந்தோறும் $500,000 வழங்கி வருகின்றது. அந்நிய இராணுவ நிதியுதவியின் கீழே 2006 ம் ஆண்டு, மேலதிகமாக ஒரு மில்லியன் டாலரும், அந்நிய நாட்டு நிதியுதவியாக $7.4 மில்லியன் டாலரும் வழங்கப்பட்டன.

2007 ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இலங்கைக்கு நேரடி இராணுவ உதவி வழங்குவதை நிறுத்தியது. இருப்பினும் போர் நடந்து கொண்டிருந்த வேளை, இந்தியாவும், அமெரிக்காவும் புலனாய்வுத் தகவல்களை வழங்கின. (Christian Science Monitor ) இந்த உதவிகள் யாவும் இலங்கை அரசின் யுத்த செலவினத்திற்கு பெரிதும் உதவியுள்ளன.

பிரிட்டன் கூட இலங்கைக்கான ஆயுத விற்பனையில் நேரடியாக ஈடுபட்டது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் Joan Ruddock : "எனது விசாரணையின் படி கடந்த காலாண்டில் மட்டும் 7 மில்லியன் பவுன் பெறுமதியான ஆயுதங்கள் விற்றமைக்கான தரவுகள் கிடைத்துள்ளன. கவச வாகனங்கள், கனரக இயந்திரத் துப்பாக்கிகள், வேறு இராணுவ உபகரணங்கள் போன்றவற்றை விற்க அனுமதி வழங்கப் பட்டிருந்தது."

"2006 க்கும் 2008 க்கும் இடைப்பட்ட காலத்தில் 12 மில்லியன் பவுன் பெறுமதியான பிரிட்டிஷ் ஆயுதங்கள் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளன." (Socialist Worker, May 12)


இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த காலத்தில் அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி உறுப்பினர் Bob Brown, ஒரு கண்டனப் பிரேரணையை முன்மொழிந்தார். ஆனால் அவுஸ்திரேலிய அரசு அதனை விவாதத்திற்கு விட மறுத்து விட்டது. அதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிய காரணங்கள் பின்வருமாறு:
- "படுகொலைக்கு எந்தத் தரப்பு பொறுப்பு என்பது தெளிவில்லாமல் உள்ளது." - Labor Senator, Joe Ludwig.
- "தமிழர் தரப்பினாலேயே இனப்படுகொலை செய்யப்பட்டது." - Labor Senator, Steve Hutchins (Parliamentary Debate )


2007-08 ஆண்டுகளில், அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்குமிடையில் $280 மில்லியன் வர்த்தகம் இடம்பெற்றதை இங்கே குறிப்பிட வேண்டும்.

பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரத்திற்கான வல்லரசுப் போட்டிக்குள் இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது. இந்து சமுத்திரம் பூமியின் மிகப்பெரிய சமுத்திரம் அல்ல. ஆனால் உலகில் 70 % எண்ணெய்க் கப்பல்களும், 50 % சரக்குக் கப்பல்கள் இந்து சமுத்திரத்தின் ஊடாகவே பயணம் செய்கின்றன. இந்து சமுத்திரத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்கள் முழு ஆசியாவையும் கட்டுப்படுத்துகின்றனர்." என்றார் அமெரிக்க கடற்படை தளபதி Alfred Maher.

இந்தக் காரணத்தினால் தான் சீனாவும் இலங்கை இராணுவத்திற்கு உதவி வழங்கியது. $37.6 மில்லியன் சீன ஆயுதங்களை வாங்குவதற்கு இலங்கை அரசு ஒப்பந்தம் செய்தது. ஆறு F7 யுத்த விமானங்களை சீனா இலவசமாகவே வழங்கியது. (Stockholm International Peace Research Institute ) "சீனாவின் நோக்கம் புரிந்து கொள்ள கடினமான ஒன்றல்ல.

சீனாவுக்கான சவூதி எண்ணெய் விநியோகத்தை பாதுகாக்கவும், கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பவும் $1 billion செலவில் ஒரு துறைமுகத்தை கட்டிக் கொண்டிருக்கிறது."(The Times) இலங்கை அரசு அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின்னரே, சீனா வேண்டிய ஆயுத, இராஜதந்திர உதவிகளை செய்தது.

Friday, October 29, 2010

ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்

"1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும், இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்."(By Way of Deception: The Making of a Mossad officer)

"இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் இருந்தே இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வந்துள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரையில் யுத்தத்தை நடத்துவதற்கு மொசாட் வழிகாட்டி வந்துள்ளது. இலங்கையில் ஈழப்போரை முடிக்க விடாது தொடர்வதற்காக, மொசாட் இந்தியாவிலும் செல்வாக்கு மிக்க பெரும்புள்ளிகளை வளைத்துப் போட்டது. RAW விற்குள்ளும் மொசாட் ஆட்கள் இருந்தனர். இந்தியப் படைகளை அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்ததாலும், இஸ்ரேலிய ஆயுதங்கள் பிடிபட்டதாலும், ராஜீவ் காந்தியை மொசாட் தீர்த்துக் கட்டியிருக்கலாம். பழியை புலிகள் மீது சுமத்துவதற்கு சுப்பிரமணிய சுவாமி போன்ற மொசாட் கையாட்கள் உதவினார்கள்."

இதுவரை வெளிவராத பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை முன்னாள் மொசாட் அதிகாரி Victor Ostrovsky தனது நூலில் வெளிக் கொணர்ந்துள்ளார். By Way Of Deception என்ற அந்த நூலில், ஈழப்போரில் மொசாட்டின் பங்களிப்பு பற்றி வந்த குறிப்புகளை சுருக்கமாக தொகுத்துத் தருகிறேன்.

இலங்கையில் மொசாட் இரண்டு தரப்பினருக்கும் பயிற்சியளித்து ஆயுதங்களை கொடுத்து வந்தது. கம்போடியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் உள்ள இஸ்ரேலியரின் நிறுவனங்கள் ஆயுதங்களை விநியோகம் செய்தன. இலங்கையை அதிக இலாபம் தரும் ஆயுத சந்தையாக மாற்றுவதே மொசாட்டின் நோக்கம்.

1983 ல் தமிழர்கள், சிங்களவர்களிடம் இருந்து சுதந்திரம் கோரி போராடத் தொடங்கினார்கள். சிங்கள ஜனாதிபதி ஜெயவர்தனே 50 மொசாட் அதிகாரிகளை பயிற்சிக்காக அழைத்திருந்தார். அவர்கள் மாதுறு ஓயா என்னும் இடத்தில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளித்தனர். அது ஒன்றும் இரகசியம் அல்ல. அன்று எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்த செய்தி தான்.

1984 லிலும் 1985 லிலும் தமிழ்ப் போராளிகள் இஸ்ரேலுக்கு பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த நூலின் ஆசிரியரான விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி அவர்களை பயிற்சி முகாம்களுக்கு கொண்டு சென்று, பயிற்சி முடிந்தவுடன் அனுப்பி விடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இந்தியாவில் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருந்த மொசாட் ஆள் ஒருவர், பயிற்சிக்கு அனுப்பி வைக்கும் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். இலங்கையில் யுத்தம் வெடித்தவுடனே RAW அதிகாரிகளை மொசாட் அணுகியது.

1984 ஜூலை மாதம் RAW வில் இருந்த சில அதிகாரிகள் தமிழர்களை கொமாண்டோ பயிற்சிக்காக அனுப்பும் பொறுப்பை ஏற்றனர். அவ்வாறு பயிற்சிக்கு அனுப்பப்பட்ட தமிழ்ப் போராளிகள் TELO அமைப்பை சேர்ந்தவர்கள். இந்தியாவுடன் நெருங்கிய உறவை பேணி வந்ததாலேயே அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்த ஒழுங்குகளை மேற்கொண்ட RAW அதிகாரிகளுக்கு மொசாட் BCCI வங்கி இலக்கம் ஒன்றின் ஊடாக பணம் அனுப்பியது.

அதே நேரம் தமிழர்களின் எதிரிகளான சிங்கள இராணுவத்திற்கும் இஸ்ரேலில் பயிற்சி வழங்கப்பட்டது. இஸ்ரேலியர்கள் இந்த தகவலை தமிழர்களுக்கோ, இந்திய அரசுக்கோ தெரிவிக்காது இரகசியமாக வைத்திருந்தனர். பயிற்சிக்கு வந்த இரண்டு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத படி பிரித்து வைக்கப்பட்டனர். டெல் அவிவ் நகரத்திற்கு அருகில் Kfar Sirkin எனும் தளத்திலேயே அந்த இரண்டு வார கொமாண்டோ பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இரண்டு வார பயிற்சிக்கு பின்னர், ஹைபா நகருக்கு அருகில் உள்ள Atlit என்ற மிக இரகசியமான கடற்படை முகாமுக்கு தமிழர்களை கொண்டு சென்றனர். அங்கு வைத்து மேலதிக பயிற்சிகளை வழங்கி விட்டு திருப்பி அனுப்பினார்கள். அவர்களை அனுப்பி விட்டு அந்த இடத்திற்கு சிங்களப் படையினரை கொண்டு வந்தார்கள். தமிழ் போராளிகளிகளுக்கு சொல்லிக் கொடுத்த போர்த்தந்திரங்களை எவ்வாறு சமாளிப்பது என்று கற்றுக் கொடுத்தனர்.

இஸ்ரேலியர்கள் பயிற்சிக்காக சிங்களப் படையினரிடம் பெருமளவு பணத்தை அறவிட்டார்கள். ஒவ்வொரு சிங்களவரும் ஒரு நாள் பயிற்சிக்கு 300 டாலர் கட்ட வேண்டும். சிறிலங்கா இராணுவக் குழு ஒன்றுக்கான மூன்று மாத பயிற்சிக்கு ஒன்றரை மில்லியன் டாலர்கள் அறவிட்டார்கள். ஹெலிகாப்டர் பயிற்சிக்கு ஒரு மணித்தியாலம் 5000 டாலர்கள். கனரக ஆயுத பயிற்சிக்கு பாவிக்கப்பட்ட ஷெல்களுக்கும் இஸ்ரேலியர்கள் பணம் வசூலித்தார்கள். உதாரணத்திற்கு பசூக்கா (ரொக்கட் லோஞ்சர் போன்ற சுடுகருவி) பயிற்சிக்கு பாவிக்கப்பட்ட ஷெல் ஒன்று 220 டாலர். கனரக மோர்ட்டார் பயிற்சிக்கு பாவித்த ஷெல் ஒன்று 1000 டாலர்.

தமிழ் போராளிகள் மத்தியில் நிதிப்பற்றாக்குறை காணப்பட்டதால், இஸ்ரேலியர்கள் அவர்களிடம் பணம் கேட்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக தமிழர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மிகப் பெரிய போருக்கு முதலீடு செய்வதாக கருதிக் கொண்டனர். யுத்தம் தீவிரமடைந்தால் ஆயுதங்களின் தேவை அதிகரிக்கும். அப்போது இலங்கை இராணுவத்திற்கு பல கோடி பெறுமதியான ஆயுதங்களை விற்று பெரும் இலாபம் சம்பாதிக்கலாம் என கணக்குப் போட்டார்கள்.

1985 ல், இலங்கையில் உளவு நடவடிக்கைகளுக்கான இணைப்பு அதிகாரியாக Rafi Eytan அனுப்பி வைக்கப்பட்டார். இஸ்ரேலிய வேதியல் நிறுவனம் ஒன்றின் உத்தியோகத்தர் என்ற போர்வையில் அவர் இலங்கையில் உளவு பார்த்தார். 1987 ல், அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனவுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். தமிழ்ப் பிரதேசங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து, 3000 இந்தியப் படைகளை அனுப்பினார். யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அல்லது கண்டெடுத்த ஆயுதங்களில் பல இஸ்ரேலிய தயாரிப்புகள். அதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்த இஸ்ரேலியர்களை வெளியேற்றுமாறு ராஜீவ் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கையில் சமாதானம் ஏற்பட்டால் தமது ஆயுத விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் என்று மொசாட் அஞ்சியது. மொசாட்டிடம் இருந்து பணம் வருவது நின்று விடும் என்று சில RAW அதிகாரிகளும் பயந்தனர். அப்போதே ராஜீவ் காந்திக்கு எதிரான சதி ஆரம்பமாகி விட்டது. இஸ்ரேலின் ஆயுத விநியோகம் தடுக்கப்பட்டதால் 21 மே 1991 ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். படுகொலைக்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக, ராஜீவ் மீது இலக்கு வைக்கப் பட்டிருப்பதாக யாசீர் அரபாத் எச்சரிக்கை விடுத்திருந்தார். ராஜீவ் காந்தியை கொன்ற RDX வெடிகுண்டு இஸ்ரேலிய தயாரிப்பு என நம்பப்படுகின்றது. ராஜீவ் கொலை விசாரணை இரகசியமாக நடத்தப்பட்டது. நீதிமன்ற ஆவணங்கள் பகிரங்கப் படுத்தப் படவில்லை.

"தற்கொலைக் குண்டுதாரி" என கருதப்படும் நபருக்கு என்ன நடந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. சுப்பிரமணிய சுவாமி என்ற பிரமுகர் இஸ்ரேலின் சம்பளப் பட்டியலில் இருந்தார். அவர் விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததாக தொடர்ந்து எழுதி வந்தார். இஸ்ரேல் விடுதலைப் புலிகளுக்கு அல்ல, டெலோ அமைப்பை சேர்ந்தவர்களுக்கே இராணுவப் பயிற்சி வழங்கி வந்தமை மீண்டும் குறிப்பிடத் தக்கது. ராஜீவை தற்கொலைக் குண்டுதாரி கொல்லவில்லை. அவருக்கு வைக்கப்பட்ட குண்டு, TELO -RAW - Mossad கூட்டு நடவடிக்கையாக இருக்கலாம்.

அதன் பிறகு இலங்கையில் யுத்தமும், கொலைகளும் தொடர்ந்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல் ஆயுதம் விற்று மில்லியன் டாலர்களை சம்பாதித்து விட்டது. 1988 ல், தென்னிலங்கையில் பிரேமதாசாவுக்கும், லலித் அத்துலத்முதலிக்கும் இடையில் ஜனாதிபதி பதவிக்கு போட்டி ஏற்பட்டது. லலித் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில், மொசாட்டின் சம்பளப் பட்டியலில் இருந்தவர் தான். ஆனால் தற்போது தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக இஸ்ரேலுக்கு எதிராக திரும்பினார். பிரேமதாச காலத்தில் தான், மொசாட் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சியளித்தது. இலங்கையில் மொசாட் பயிற்சி முகாம்களை அமைக்க உதவியதாக, பிரேமதாசாவுக்கு எதிராக லலித் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதனால் அவரும் கொலை செய்யப்பட்டார்.

சந்திரசுவாமி என்ற பிரமுகர் RAW வுடனும், மொசாட்டுடனும் தொடர்பு வைத்திருந்ததை இந்திய நீதிபதி ஜெயின் கண்டறிந்தார். BCCI (Bank of Credit and Commerce International ) வங்கி மூலமே, சந்திரசுவாமிக்கும் மொசாட்டுக்குமான தொடர்பு ஏற்பட்டது. Agha Hasan Abedi என்ற பாகிஸ்தானிய பிரஜை BCCI வங்கியை நிறுவினார். அது இன்று 78 நாடுகளில், 400 கிளைகளுடன் இயங்கி வருகின்றது. அதன் சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலர்கள். லண்டனில் தலைமையகத்தை கொண்டிருந்தாலும், இலகுவாக கறுப்புப் பணத்தை மாற்றக் கூடிய லக்சம்பெர்க்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலியர்களும் இரகசிய பணப் பரிமாற்றங்களை BCCI ஊடாகவே செலுத்துகின்றனர். லண்டனில் இருந்த BCCI கிளை (Sloane Street branch ) ஒன்றின் மூலம் பாலஸ்தீன தீவிரவாதி அபுநிதால் பணம் பெற்று வந்ததாக, பிரிட்டனின் MI5 க்கு தெரிய வந்தது. மொசாட் மட்டுமல்ல, பாகிஸ்தானின் ISI, இங்கிலாந்தின் MI6, அமெரிக்காவின் CIA, எல்லாமே BCCI வங்கியை பயன்படுத்தினார்கள்.


Victor Ostrovsky எழுதிய By way of Deception நூல் பற்றிய விபரங்களுக்கு: 
By Way of Deception: The Making of a Mossad officer

By Way of Deception;Book Review,by Sachi Sri Kantha
By Way of Deception
Victor Ostrovsky

Mossad in Sri Lanka: The Genesis of LTTE

In Sri Lanka, Mossad trains, arms, and equips both sides — through its Cambodian Zim Shipping empire, and through its holdings in South Africa — and perpetrates false flags whenever there is talk of peace. Mossad’s goal is to maintain the lucrative arms market, plus the local drug trade that helps pay for those arms.
When the Tamils started fighting the Singhalese for independence in 1983, the Singhalese President Junius Jayawardene brought in 50 Mossad officers to train his security forces at a place called Maduru-Oya. This was not secret. It was in all the newspapers.
From that point on, Mossad armed, trained, and equipped both sides. (Since the Tamil forces are smaller than the Sri Lankan army, the zio-media calls the Tamils “terrorists.”)
In 1991 Victor Ostrovsky, author of By Way of Deception, told Indian Abroad news service that Mossad brought many Tamils to Israel for training in 1984 and 1985. “These groups kept coming and going. When I was in Mossad, it was part of our routine job to take them to training camps and make sure they got training worth what they paid for, no more and no less. The Singhalese paid in cash.”
Ostrovsky said the arrangement for training was made by the Mossad liaison in India, who lived there under a British passport.
We know from sources other than Ostrovsky that shortly after the war broke out in Sri Lanka, Mossad approached a group of officers from India’s Research and Analysis Wing (RAW, which is India’s equivalent to the CIA). In July 1984 this inner RAW circle arranged with Mossad to send Tamils to Israel for commando training. Mossad paid the RAW team for this by setting up accounts for them in the BCCI bank. (More about this below.) The Tamil commandoes that went to Israel became known as the TELO. They are separate from the main Tamil rebels, known as the LTTE (Liberation Tigers of Tamil Eelam).
Meanwhile Mossad simultaneously trained the Tamils’ enemies (the Singhalese) in Israel, but did not tell the main Tamil army, or the main Indian government, or anyone else. In Israel they kept both the groups apart. Their purpose for this, as always, was to fan the war to a fever pitch, and make a fortune as the Goyim kill each other.
Each group had 60 members. Training started with a two-week basic commando course at an Israeli base known as Kfar Sirkin near Tel Aviv. This is a fairly large base, but on one occasion the two groups passed within a few yards of each other while they were out jogging.
After the two-week basic course, the Israelis took the Tamils to Atlit, a top-secret naval commando base at Haifa. Meanwhile Singhalese were brought in for basic training back at the Kfar Sirkin base. After the Tamils completed advanced training in Haifa, they were moved out, and the Singhalese were brought in to learn how to deal with all the techniques the Israelis had just taught the Tamils.
Mossad had to dream up punishments and night training exercises to keep both groups busy, so they wouldn’t run into each other in Israel. Sometimes the situation was hectic, but the Mossad agents were tickled to deceive the Goyim while preparing them to kill each other.
The Jews made a tidy sum training the Singhalese. Ostrovsky writes in his book By Way Of Deception that, “Israel charged each of the 60 Singhalese $300 per day, for a total of $18,000 per day. For a three-month course, Israel charged them $1.6 million. In addition, Israel charged them $5,000 to $6,000 an hour for helicopter rental, with as many as 15 helicopters being used in a typical training exercise. The Israelis also charged for special training ammunition. A bazooka shell, for example, cost about $220 a unit, while heavy mortars were about $1000 each.”
Apparently Mossad did not charge the Tamils, which had little money at that point. Instead, they regarded the Tamil training as an investment toward their goal of getting a major war going in Sri Lanka. Then they could make a financial killing off the physical killing. As noted above, the Tamil commandos formed an elite splinter group known as the TELO, which was separate from the LTTE. The TELO was tied in with the inner circle of India’s RAW (the intelligence agency) — unknown to the overall Indian government.
At one point the Jews worried because 27 Indian commandos also came to Israel for training, and the Jews could not let the Indians see the Tamils or the Singhalese. Therefore the Sayret Matcal took over the training regime for the Tamils and the Singhalese. The Sayret Matcal is a commando-recon group that executed the false-flag raid in Entebbe Uganda (1976).
So the Jews trained Tamils, Singhalese, and Indian commandoes, preparing them all to kill each other.
Meanwhile back in Sri Lanka itself, Mossad did everything possible to escalate the massacres on all sides into a full-scale war.

Wednesday, October 27, 2010

பல்லினக் கலாச்சார ஜெர்மனியின் மறைவு

ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல் சமீபத்தில் வெளிநாட்டவர் பற்றி கூறிய கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகின. அது வரை காலமும், தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் மட்டுமே கூறி வந்த சொற்கள், ஒரு தேசத்தின் அதிபரின் வாயில் இருந்து உதிர்ந்தன. அக்டோபர் 16 அன்று, CDU கட்சியின் இளைஞர் அணியின் கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே, அவர் அந்தக் கருத்தை தெரிவித்திருந்தார். "ஜெர்மனியில் பல்லினக் கலாச்சார சமூக அமைப்பு தோல்வியடைந்து விட்டது." இன்னும் ஒரு படி மேலே சென்று, "கீழைத்தேச பிற்போக்கு கலாச்சாரங்களை கொண்ட மக்கள், உயர்ந்த மேலைத்தேய நாகரீகத்திற்கு மாற வேண்டும்." என்று கூறியிருப்பார். ஆனால் அப்படியான கூற்றுகள், அவரை இன்னொரு ஜெர்மன் பேரினவாதியாக இனங்காட்டியிருக்கும். நல்ல வேளை அதனோடு நிறுத்திக் கொண்டார். ஹிட்லர் காலத்தில் இருந்து இன்று வரை, ஜெர்மன் கலாச்சாரம், மரபு, பாரம்பரியம் இவற்றை கட்டிக்காப்பதிலேயே குறியாக கொண்ட மலைவாழ் மக்களைக் கொண்ட பவாரியா மாநிலத்திலே அந்த வரலாற்றுப் பிரசித்தி வாய்ந்த உரை இடம்பெற்றது. அன்று சமூகமளித்த பவாரியா மாநில முதல்வர் Horst Seehofer "ஜெர்மனி தனது ஆதிக்க கலாச்சாரத்திற்கு விசுவாசமாக இருக்கும். பல்லினக் கலாச்சாரத்தை எதிர்க்கும்." என்றார். காத்திருக்கும் ஆபத்துகளுக்கு கட்டியம் கூறுவது போல அமைந்தது அந்த உரை.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் அவமானகரமான தோல்விக்குப் பின்னர், ஜெர்மன் ஆதிக்கக் கலாச்சாரம் குறித்து பேசுவது தவிர்க்கப்பட்டது. புதிய ஜெர்மன் அரசு, நாசிஸ காலத்து குற்றவுணர்ச்சியை மறைப்பதற்காக, ஜெர்மனி ஒரு பல்லினக் கலாச்சார நாடு என்ற பிம்பத்தை ஏற்படுத்த பாடுபட்டது. உண்மையில் அயலில் இருந்த நாடுகளை விட மேற்கு ஜெர்மனி, பல்லினக் கலாச்சாரங்களை கொண்ட மக்களை உள்வாங்கிக் கொண்டது. கலாச்சார விழாக்கள், பிற மதங்களுக்கான வழிபாட்டு சுதந்திரம் என்பன, தாராளமாக அனுமதிக்கப்பட்டன. உதாரணத்திற்கு ஹம் என்ற நகரத்தில் கட்டப்பட்டுள்ள இந்துக் கோயிலுக்கு சென்றால், ஒரு யாழ்ப்பாணக் கோயிலுக்கு சென்ற உணர்வு ஏற்படும். வருடாந்த திருவிழாவின் போது, பிரதான வீதி வழியாக தேர் இழுத்து செல்லும் கண்கொள்ளாக் காட்சியையும் காணலாம். ஜெர்மன் முழுவதும் இந்துக் கோயில்களுக்கு மட்டுமல்ல, நூற்றுக் கணக்கான மசூதிகளுக்கும் அரசு மானியம் கொடுக்கின்றது. இதெல்லாம் மேலைத்தேய கனவான்களின் தாராள மனப்பான்மையைக் காட்டுகின்றது என்று நீங்கள் கருதினால், அது உங்கள் தவறு.

"Multiculti" என்று ஜெர்மனியர்கள் செல்லமாக அழைக்கும் பல்லினக் கலாச்சார சமூகம், துர்க்கியரின் வருகையுடன் தோற்றம் பெற்றது. போரில் அழிவுற்ற ஜெர்மனியை மீளக் கட்டியெழுப்ப துருக்கியில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தருவிக்கப்பட்டனர். வளைகுடா நாடுகளில் தெற்காசிய தொழிலாளர்கள் தேவைப்பட்டது போன்ற சூழ்நிலை அது. ஆரம்பத்தில் வளகுடா நாடுகளில் இருந்த நிலைமையைப் போன்றே ஜெர்மனியிலும் காணப்பட்டது. வேலைக்கு வருபவர்கள் ஒரு காலத்தில் இந்த நாட்டிலேயே குடும்பத்துடன் தங்கி விடுவார்கள், என்று யாரும் நினைக்கவில்லை. ஜெர்மன் அரசும், அவர்களை வேலைக்கு அமர்த்திய முதலாளிகளும், மக்களும் அன்று இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. பொதுவாகவே, வேலைக்கு போய் வந்து முகாம்களில் முடங்கிக் கொள்ளும் அந்நிய தொழிலாளர்கள், ஜெர்மன் மக்களுடன் சேராமால் தாமரையிலைத் தண்ணீர் போல வாழ்ந்து வந்தனர்.

துருக்கியர்கள் மட்டும் ஜெர்மனிக்கு கட்டுமானப் பணிகளுக்காக கொண்டு வரப்படவில்லை. இத்தாலி, ஸ்பெயின், போர்த்துகல் போன்ற நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களும் வந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட காலம் சம்பாதித்து விட்டு அவர்கள் எல்லாம் தமது நாடுகளுக்கு திரும்பி விட்டனர். ஐரோப்பிய பொருளாதார ஒருங்கிணைப்பு காரணமாக, அவர்களின் நாடுகளின் பொருளாதாரம் வளர்ந்தது. அதனால் அந்நிய தேசத்தில் காலம் தள்ளுவதை விட, சொந்த தாயகம் திரும்புவதே மேல் எனத் தீர்மானித்து விட்டனர். ஆனால் துருக்கியில் மட்டும் நிலைமை மாறவேயில்லை. அது ஒரு வறிய நாடாகவே தொடர்ந்திருந்தது. ஐரோப்பிய கூட்டமைப்புடனும் சேர்க்கப்படவில்லை. இது போன்ற சாதக, பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்த துருக்கியர்கள் ஜெர்மனியிலேயே தங்கி விட விரும்பினார்கள். ஜெர்மன் அரசும் தவிர்க்கவியலாது, குடும்ப ஒருங்கிணைப்புக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த சில மாதங்களிலேயே, மேற்கு ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினை உணரப்பட்டது. ஆரம்பத்தில் கிழக்கு ஜெர்மனியில் இருந்து அகதிகளாக வருபவர்களைக் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்ப எண்ணினார்கள். அதே நேரம் அயலில் இருந்த சோஷலிச நாடுகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் அகதிகள் வருவார்கள் என்று காத்திருந்தார்கள். பல வருடங்களாகியும் அவர்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் அகதிகள் வரவில்லை. எல்லைப்படையினரின் கடுமையான கண்காணிப்பு மாத்திரமல்ல, கிழக்கு ஜெர்மனி உட்பட, சோஷலிச நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் அதற்கு காரணம். இருப்பினும் அதிகளவு சலுகைகளை வழங்கும் அகதிச் சட்டங்களை ஜெர்மன் அரசு திருத்தவில்லை. காரணம்: நாசிஸ கால குற்றங்களுக்காக வெட்கப்பட்டு, உலகில் நல்ல பேர் எடுப்பதற்காகவே அத்தகைய சட்டங்கள் இயற்றப்பட்டன. 1980 ம் ஆண்டு, ஜெர்மனியர்கள் சிறிதும் எதிர்பாராத அகதிகள் வந்தார்கள். துருக்கியில் ஏற்பட்ட இராணுவ சர்வாதிகார அடக்குமுறை காரணமாக, ஆயிரக்கணக்கான துருக்கியர்கள் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அவர்களைத் தொடர்ந்து 1983 கறுப்பு ஜூலை இனக் கலவரம் காரணமாக, பெருந்தொகை ஈழத்தமிழர்கள் வந்து சேர்ந்தார்கள். இவர்களைத் தவிர வேறு பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும் அகதி தஞ்சம் கோரினார்கள்.

அநேகமாக ஐரோப்பிய தொழிலாளர் சமூகத்தினர், ஜெர்மன் மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டனர். முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்து வந்த அகதிகள் என்றாலும், தென் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தொழிலாளர் என்றாலும், அவர்களது இரண்டாவது தலைமுறை ஜெர்மனியர்களாக மாறி விட்டது. தோல் நிறம் வெள்ளை என்பதும், ஒரே மதமான கிறிஸ்தவத்தை பின்பற்றியதும், ஜெர்மனியராகும் நடைமுறையை இலகுவாக்கியது. ஆனால் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் துருக்கிய சமூகம் ஜெர்மனியராக மாறுவதை, ஜெர்மன் அரசு விரும்பவில்லை. அதற்காக ஏற்படுத்தப்பட்ட கொள்கை தான் "பல்லினக் கலாச்சாரம்". அதாவது துருக்கியர் தமது தனித்துவமான கலாச்சாரத்தை, மதத்தை தொடர்ந்து பேணி வரலாம். அவர்கள் ஜெர்மன் சட்டங்களை மதித்து நடந்தால் போதும். ஏற்கனவே அமெரிக்காவிலும் இதே போன்ற கொள்கை பின்பற்றப் படுகின்றது. உலகின் எந்த மூலையில் இருந்து வந்தாலும், தனித்துவமான கலாச்சாரத்தை, மதத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது. குடியுரிமை வழங்கும் தினத்தில் மட்டும் "அமெரிக்க அரசுக்கு விசுவாசமாக இருப்பேன்" என்று உறுதிமொழி எடுத்தால் போதும்.

"தன்னுடைய நாட்டில் எங்களுடைய கலாச்சாரத்தை கட்டிக் காக்க அனுமதிக்கிறானே. ஆஹா... இந்த வெள்ளைக்காரனுக்கு தாராள மனசு!" என்று பல தமிழர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். தமிழர்கள் மட்டுமல்ல, துருக்கியர் போன்ற பிற இனத்தவரும் அவ்வாறு தான் சிலாகித்து பேசி வந்தனர். ஆனால் "உண்மையில் வெள்ளைக்காரனின் மனசுக்குள் என்ன இருந்தது?" என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. உலகில் எந்தவொரு கலாச்சாரமும், அந்நிய கலாச்சாரத்தின் கூறுகளை உள்வாங்கிக் கொள்வது சாதாரணம். "விக்டோரியா மகாராணி காலத்து ஆங்கிலேய கலாச்சாரக் கூறுகள் பல, தமிழ் கலாச்சாரமாக மாறியுள்ளன" என்ற உண்மை, இன்றைக்கும் பல தமிழர்களுக்கு தெரியாது. அது போன்று அந்நிய கலாச்சாரத்தின் சங்கமத்தால், ஜெர்மன் கலாச்சாரம் மாறுபடுவதை ஜெர்மன் அரசு விரும்பவில்லை. அந்நிய கலாச்சார ஊடுருவலை முன்கூட்டியே தடுப்பதற்கு கண்டுபிடித்த தந்திரம் தான் "பல்லினக் கலாச்சார சமூகம்."

பல்லினக் கலாச்சார சமூகம் பிற நாடுகளில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஜெர்மனி போன்ற சில ஐரோப்பிய அரசுகள் அதனை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டன. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர், யூதர்கள் தனித்துவமான கலாச்சாரத்துடன், சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செறிவாக வாழ்ந்ததனர். அதனால் யூதர்களை இலகுவாக குறிவைத்து ஒடுக்க முடிந்தது. இன்று அதே போன்ற நிலையில் பல்வேறு சமூகங்கள் வாழ்கின்றன. அவர்களை பொதுவாக வெளிநாட்டவர் என்றோ, அல்லது அந்நிய குடியேறிகள் என்றோ அழைக்கலாம். ஆனால் பல்லினக் கலாச்சாரம் என்ற மாயத்திரைக்குப் பின்னால் அவர்கள் ஓரங்கட்டப் படுகின்றனர். உதாரணத்திற்கு லண்டன் மாநகரில் இந்தியர்கள் செறிந்து வாழும் சவுத்ஹோல் பகுதி போல, பல்வேறு ஐரோப்பிய நகரங்களில் அரேபிய, துருக்கிய பகுதிகள் காணப் படுகின்றன. அந்த மக்கள் தாமாகவே தனது இனசனத்துடன் ஒரே இடத்தில் வாழ விரும்பியதை மறுப்பதற்கில்லை. ஆனால் அரசும் அதைத் தான் எதிர்பார்த்தது. அன்று "எமது நாடு பல்லின சமூகங்களை கொண்டது." என்று கூறியதும், இன்று "பல்லினக் கலாச்சாரம் தவறு" என்று கூறுவதும், எல்லாமே நாடகம்.

"ஒற்றை ஜெர்மன் தேசியத்தை மறுத்து, பல்லின கலாச்சாரங்களைக் கொண்ட ஜெர்மனியாக" காண்பித்துக் கொண்டிருந்த காலம் மாறி விட்டது. ஜெர்மன் அரசியல்வாதிகள், தைரியமாக "பிற்போக்கான இஸ்லாமிய சமூகத்தின் அபாயம்" குறித்து பேசுகின்றனர். அத்தகைய மாற்றம் எப்படி ஏற்பட்டது? 9 /11 க்கு பின்னர் உலகத்தை அடியோடு மாற்றிய அமெரிக்காவுக்கே அந்தப் பெருமை போய்ச் சேருகின்றது. அமெரிக்காவிலேயே இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் மேலெழுந்து வருகின்றது என்றால், ஜெர்மனியில் அது சாத்தியமில்லையா? இஸ்லாமியரையும், வெளிநாட்டவர்களையும் ஒன்று சேர குற்றஞ்சாட்டுவதன் மூலம் தான் ஜெர்மன் தேசியவாதத்தை மீளக் கட்டியமைக்கலாம். ஜெர்மன் நாட்டு அரசியல் விவகாரங்களை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு புரியும். ஒரு காலத்தில் "ஜெர்மன் தேசியம்" என்று சொல்வதே கெட்ட வார்த்தை என்றிருந்த காலம் மலையேறி விட்டது. இன்று யாருக்கும் வெட்கமில்லை. ஜெர்மன் தேசியத்தின் அவசியம் குறித்து பலர் பேசி வருகின்றனர். பெரும்பான்மைக் கட்சிகளில் இருந்தே அத்தகைய குரல்கள் ஒலிக்கின்றன.
***************

Tuesday, October 26, 2010

"ஆண்டவன் ஆணை! இனப்படுகொலை செய்வீராக!" - பைபிள்

மனித குலத்திற்கு விரோதமான இனவழிப்பு செய்யுமாறு மதங்களே போதிக்கின்றன. விவிலிய நூலில் (பழைய ஏற்பாடு) உள்ள சில வாக்கியங்கள் திடுக்கிட வைக்கின்றன. இனவழிப்பு என்ற அத்திவாரத்தின் மீது தான் இஸ்ரேல் கட்டப்பட்டது. அதற்கு விவிலிய நூலே சாட்சி கூறுகின்றது.

"நாம் அனைத்து நகரங்களையும் கைப்பற்றினோம், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் அழித்தோம். ஒருவரையும் விட்டு வைக்கவில்லை." (Deuteronomy 2:34)

"ஆண்டவர் யாஹ்வே உங்களுக்கு உரிமையாக்கிய நகரங்களில், மூச்சு விடும் எதையும் உயிரோடு விடாதீர்கள்." (Deuteronomy 20:14-15)


"ஐ நகரத்தவர்களை இஸ்ரேலியர்கள் பாலைவனம் வரையில் விரட்டிச் சென்று கொன்றார்கள். ஐ நகரத்திற்கு திரும்பி வந்து அங்கே வாழ்ந்த அனைவரையும் கொன்றார்கள். அன்று மட்டும் ஆண்களும், பெண்களுமாக பன்னீராயிரம் ஐ நகர மக்கள் கொலை செய்யப்பட்டனர்." (Joshua 8:24-25)


The Bible: A Manual for Genocide


The Bible: A Manual for Genocide (Vimeo)The Bible: A Manual for Genocide

Monday, October 25, 2010

சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்

["தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"]
(பகுதி: ஐந்து)

"தமிழ் சியோனிஸ்ட்கள்" இருக்க முடியுமா? "ஆம்" என்று பதிலளிக்கின்றனர் யூத சியோனிச சித்தாந்திகள். ஒருவர் சியோனிஸ்ட் என்பதற்கு அவர்கள் கூறும் வரைவிலக்கணம் இது: "நீங்கள் யூதர்களை தனி இனம் என்று நம்புகிறவரா? யூதர்களின் தாயக உரிமையை ஏற்றுக் கொள்கிறவரா? அப்படியானால், இஸ்ரேலில் வசிக்கா விட்டாலும், யூதராக இல்லாவிட்டாலும், நீங்கள் ஒரு சியோனிஸ்ட்!" இஸ்ரேலுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் தமிழர்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும் வாக்கியங்கள் இவை.
If you believe that the Jews are a people, and support the right of the Jews to a national home, and you are willing to stand up for that right when it is challenged, then you can call yourself a Zionist, whether or not you belong to any organized Zionist group or accept any "official" definition, and whether or not you live in Israel or plan to live in Israel - and whether or not you are Jewish. (http://www.zionism-israel.com/zionism_definitions.htm )

"இரண்டு, மூன்று யூத மதகுருக்கள் (Rabi) ஒன்று சேர்ந்தால், அங்கே சண்டை சச்சரவு ஏற்படும்." என்பது ஒரு யூத பழமொழி. யூதர்கள் பல வகையான அரசியல் கருத்துகள் கொண்டவர்கள் என்பது இன்று வரை யதார்த்தமான விடயம். ஆரம்பத்தில் இருந்தே சியோனிஸ்ட் கொள்கையை பின்பற்றுபவர்கள், ஒன்றில் முதலாளித்துவ வலதுசாரிகளாக, அல்லது சோஷலிச இடதுசாரிகளாக இருந்து வருகின்றனர். இந்தப் பிரிவினர் ஒருவரோடு மற்றவர் கதைப்பதில்லை. இரண்டு வேறு உலகங்களில் வாழ்கின்றனர். ஆனால் இஸ்ரேல் என்ற தேசத்தின் இருப்பிற்கு, ஒருவர் மற்றவரில் தங்கியிருக்கின்றனர். பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியனை ஆதரித்த யூதர்களும், அமெரிக்காவை ஆதரித்த யூதர்களும் எவ்வாறு சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இஸ்ரேலியரிடம் இருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது. "தமது கருத்துகளுடன் உடன்படுபவர்கள் மட்டுமே தமிழர்கள்." என்று வாதாடும் இஸ்ரேலிய அனுதாபிகள், எந்த வகையிலும் யூதர்களுடன் ஒப்பிடப்பட முடியாதவர்கள்.

19 நூற்றாண்டில் ஆஸ்திரியாவை சேர்ந்த தியோடோர் எழுதிய "யூத தேசம்" என்ற நூல், இஸ்ரேலிய தேசியவாதத்தை அறிமுகப் படுத்தியது. பாசலில் (Basel) கூடிய முதலாவது சியோனிச இயக்க மாநாட்டிலும், யூத தேசம் எங்கே, எப்படி உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்படவில்லை. சொல்லப்போனால், இரண்டாம் உலகப்போர் வரையில் இஸ்ரேல் சாத்தியமா என்பது, அவர்களுக்கே தெரியாமல் இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ரஷ்ய யூதர்கள், பாலஸ்தீனத்தை தாயகமாக் கருதி, அங்கே சென்று குடியேறினார்கள். அவர்கள் அங்கே சென்று குடியேறினார்களே தவிர இஸ்ரேல் என்ற தேசத்தை அமைக்க வேண்டும் என்று எண்ணியிருக்கவில்லை. 19 ம் நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பாவில் தேசியவாத அரசுகள் தோன்றின. அதனால் மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் மத்தியில் இஸ்ரேலிய தேசியவாத சிந்தனை பரவியதில் வியப்பில்லை. அவர்களும் பாலஸ்தீனத்தில் நிலங்களை வாங்கி குடியேறுவதே சாத்தியமான நடைமுறை என நம்பினார்கள்.

1917 ம் ஆண்டு, பிரிட்டனின் தலை சிறந்த இரசாயனவியல் விஞ்ஞானி வைஸ்மன் (Weizman ), அன்றைய வெளிவிவகார அமைச்சர் பல்போர் (Balfour ) உடன் செய்து கொண்ட ஒப்பந்தமே, இஸ்ரேல் தேசத்திற்கான முதல் படி. அப்போதும் உகண்டாவில் இஸ்ரேல் என்ற புதிய தேசத்தை ஏற்படுத்துவதே பிரிட்டிஷாரின் திட்டமாக இருந்தது. தீவிர வலதுசாரி சியோனிஸ்ட் வைஸ்மன் அதற்கு உடன்படவில்லை. ஜெருசலேம் யூதர்களின் பாரம்பரிய பிரதேசம் என்றும், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வெளிவிவகார அமைச்சர் ஒப்பந்தம் செய்ய உடன்பட்ட போதிலும், தான் சந்தித்த யூதர்கள் அத்தகைய தாயக கோட்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பதை தெரிவித்தார். "(அன்றைய) ரஷ்யாவில் கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளான யூதர்கள், எதற்காக அத்தகைய அடைக்கலத்தை தேடவில்லை?" என்றும் குழம்பினார்.(Balfour and Weizmann: The Zionist, the Zealot and the Emergence of Israel by Geoffrey Lewis)

பிரிட்டிஷ் அமைச்சரவையில் இருந்த ஒரேயொரு யூதரான எட்வின் மோந்தாகு (Edwin Montagu) இஸ்ரேலிய தாயக கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. "பாலஸ்தீனத்தில் பத்து வீத சிறுபான்மையினரான யூதர்கள் எவ்வாறு இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்க முடியும்?" என்று வாதிட்டார். "அத்தகைய தேசத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அந்நியர்களாக கருதப் படுவார்கள். அதே நேரம் பிற உலக நாடுகளில் யூதர்கள் அந்நியர்களாக கருதப் படுவார்கள். பல்போர்-வைஸ்மன் ஒப்பந்தம் உலகம் முழுவதும் யூதர்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கும்." என்று தீர்க்கதரிசனத்துடன் கூறினார். யூதர்களின் பிரச்சினைக்கு ஐரோப்பாவினுள்ளே தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.(Balfour and Weizmann: The Zionist, the Zealot and the Emergence of Israel by Geoffrey Lewis) எட்வின் இந்தியாவுக்கான அரசு அதிகாரியாக பதவி வகித்தவர். அவரது காலத்தில் தான் ஜாலியன்வாலாபாக் படுகொலை இடம்பெற்றது. படுகொலைக்கு உத்தரவிட்ட ஜெனரல் டயரை, எட்வின் துணிவுடன் கண்டித்தார்.

பல்போர்-வைஸ்மன் ஒப்பந்தம் மத்திய கிழக்கின் பூகோள அரசியலை தலைகீழாக மாற்றியது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியில் முக்கியமான கொள்கை அது. பாலஸ்தீனத்தை காலனிப்படுத்திய பிரிட்டிஷார், யூதர்கள் கைகளில் ஆட்சியை ஒப்படைத்து விட்டு வெளியேறி விட்டனர். ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தினத்தை இஸ்ரேலிய யூதர்கள் கொண்டாடி வருகின்றனர். பாலஸ்தீனர்கள் அதனை துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர். இந்த இடத்தில் ஈழத்தமிழரும் ஆச்சரியகரமான ஒற்றுமையை கொண்டுள்ளனர். இலங்கையில் அரசியல் நிர்ணய சட்டமாக எழுதப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரி சோல்பரியின் யாப்பு, சிங்களவர்கள் கைகளில் அதிகாரத்தை ஒப்படைத்தது. அதனால் தமிழ் தேசியவாதிகள், சோல்பரி யாப்பு எழுதப்பட்ட சம்பவத்தை "தமிழரின் துக்க தினம்" எனக் கூறி வருகின்றனர்.

நிச்சயமாக யூதர்கள் மீது கரிசனை கொண்டு, பிரிட்டன் அந்த ஒப்பந்தத்தை செய்யவில்லை. சோழியன் குடுமி சும்மா ஆடாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வரலாற்றை படித்தவர்களுக்கு தெரிந்த உண்மை அது. ஆகவே இஸ்ரேல் என்ற யூத தாயக கோரிக்கையை பிரிட்டன் (ஓரளவேனும்) ஏற்றுக் கொண்ட காரணம் என்ன?

1. ஒப்பந்தம் எழுதப்பட்ட காலத்தில் முதலாம் உலகப்போர் நடந்து முடிந்திருந்தது. ரஷ்யாவில் கம்யூனிச போல்ஷெவிக்குகள் ஆட்சிக்கு வந்தனர். ட்ராஸ்கி போன்ற பல யூதர்கள் போல்ஷெவிக் கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருந்தனர். அடக்கப்பட்ட யூதர்கள் மத்தியில், கம்யூனிச ரஷ்யா நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரேலிய தேசியவாதத்தை வளர்ப்பதன் மூலம், ரஷ்ய யூதர்களை தான் பக்கம் ஈர்க்கலாம் என பிரிட்டன் நினைத்திருக்கலாம்.
2. முதலாம் உலகப்போர் முடிவில் உலக வல்லரசாக மாறிய அமெரிக்க அரசாங்கத்திலும் யூதர்கள் இருந்தனர். அங்கே யூத முதலாளிகளின் செல்வாக்கு அதிகரித்திருந்தது. ஒப்பந்தம் மூலம் அமெரிக்க அரசினதும், யூத முதலாளிகளினதும் ஆதரவு கிட்டும் என்று பிரிட்டன் நம்பியிருக்கலாம். உலகப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
3. துருக்கியரிடம் இருந்து அரபு பிரதேசங்களை விடுதலை செய்ய பிரிட்டன் உதவியது. ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகள் அரேபிய விடுதலைப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. சிரியாவையும், லெபனானையும் பிரான்ஸ் பிரித்து எடுத்து தனதாக்கியது. பாலஸ்தீனத்தை பிரிட்டன் தனது பாதுகாப்பில் வைத்திருந்தது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற புதிய தேசத்தை உருவாக்குவதன் மூலம், ஐரோப்பிய நவ-காலனித்துவத்தை நிலை நிறுத்தலாம்.
4. 1917 ல் ஒப்பந்தம் எழுதப்பட்ட அதே காலகட்டத்தில் தான் வளைகுடா நாடுகளில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய் வளத்தை கண்காணிக்க நம்பிக்கையான அடியாள் தேவை. இஸ்ரேல் அந்தக் கடமையை செய்யும்.
(தொடரும்)

Sunday, October 24, 2010

18 வது திருத்தம்: அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதிக்கே!

Sri Lankan constitution and democratic rights

S. G. Punchihewa

சட்டத்தை கேள்விக்குள்ளாக்குவதும், உண்மை பேசுவதும் எமது நாட்டில் மரண பயத்தை உண்டாக்கியுள்ளது. இந்நாட்டில் எத்தனையோ சட்ட நிறுவனங்கள், ஆணைக்குழுக்கள், சுற்றறிக்கைகள், ஆணைகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் நீதி மட்டுமே அரிதாகக் கிடைக்கின்றது. ஊழலை ஒழித்துக் கட்டுவதிலும் பார்க்க, அதனை பகிரங்கப் படுத்துபவரே ஒழித்துக் கட்டப் படுகின்றார். தாக்கியவர் இன்றி எவரும் காயப்படலாம். கடத்தியவர் இன்றி எவரும் காணாமல்போகலாம். மூன்று ஊடக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டன. போலிஸ் இன்னும் புலன் விசாரணை செய்து கொண்டிருக்கின்றது. சந்தேகத்தின் பேரில் தீப்பெட்டிகள் தடுத்து வைக்கப்படலாம். Text Color

ஜனாதிபதி எவ்வளவு சக்தி வாய்ந்தவர்?
1990 ல், யு.என்.பி. ஆட்சியில் இருந்த போது, கானாமல்போவதற்கும், கொலைகளுக்கும் எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. ரிசார்ட் டி சொய்சா என்ற எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலரும் காணாமல் போன சம்பவத்தை குறிப்பிடலாம். பின்னர் அவரது பிணம் மொரட்டுவ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. அவசரகால நிலைப் பிரகாரம் எதிர்ப்பு நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டிருந்தன. தடையை மீறி கருத்தரங்குகளும், சந்திப்புகளும் இடம்பெற்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் இருந்து இரண்டு பேர் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். "ரிசார்ட் சொய்சாவுக்கு என்ன நடந்தது?" அன்றைய ஜனாதிபதியை நோக்கி கேள்வி எழுப்பிய அந்த இருவரில் ஒருவர் மகிந்த ராஜபக்ச, மற்றவர் எமது நண்பரான பிரகீத் எக்னேக்ளிகொட. இன்று "பிரகீத்துக்கு என்ன நடந்தது?" என்ற அதே போன்ற கேள்வியை மகிந்த ராஜபக்சவிடமும் எழுப்ப வேண்டிய சோகமான முரண்நகை தோன்றியுள்ளது.

அரசியல் அமைப்பு சட்டத்தின் 18 ம் திருத்தம், பதவிக் காலத்திற்கு இருந்த வரையறையை நீக்கியுள்ளது. தற்போது அவர் தெரிவானால் நிரந்தரமாக (6 வருட தவணைகள்) பதவியில் நிலைக்கலாம். 18 வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், சுதந்திரமான ஆணையகத்தினால் தேர்தல்கள் நடத்தப்பட மாட்டாது. மாறாக அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதியே தீர்மானிப்பார். ஏனென்றால் ஆணையகத்தின் உறுப்பினர்களை அவரே நியமிக்கிறார். ஆணையகம் தேர்தல்களை நடத்துகின்றது. தேர்தல்களை நடத்துவதற்கு காவல்துறையின் சேவை அவசியம். போலிஸ் தலைமை அதிகாரியையும் அவரே நியமிப்பார். அரசாங்க ஊழியர்கள் அநேகமாக எல்லா தேர்தல் கடமைகளையும் முன்னெடுப்பார்கள். ஆனால் பொதுநல சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியாலேயே நியமிக்கப்படுகின்றனர். யாராவது சுதந்திரமான, நீதியான தேர்தலை எதிர்பார்க்க முடியுமா? அப்படி ஒன்று இதுவரை இருந்ததுமில்லை, இனி இருக்கப் போவதுமில்லை.

தலைமை நீதியரசரையும், உச்ச நீதிமன்ற நீதிபதியையும், அரச சட்டத்தரணியையும் அவரே தீர்மானிக்கிறார். அதனோடு அவர் தன்னை பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் நியமித்துக் கொள்கிறார். தேர்தல்களில் பெருமளவு பணத்தை செலவழிக்கிறார். எந்த திகதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதையும் அவரே தீர்மானிக்கிறார். கடைசி மாகாண சபை தேர்தல்கள் எல்லாம் ஒரே நாளில் நடத்துவதற்கு பதிலாக, தனித்தனியாக நடத்தப்பட்டன.

அரசியல் அமைப்பு சட்டத்தில் உறுதிப்படுத்தப் பட்ட அதிகாரங்கள் சில:
70 (1): ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு, ஒத்தி வைப்பதற்கு, அல்லது கலைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கலாம்.
70 (1a) பொதுத் தேர்தல் நடந்த திகதியில் இருந்து ஒரு வருட காலம் முடியும் வரையில், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்காமல் வைத்திருக்கும் அதிகாரத்தை வழங்குகின்றது.
31 (3) A (a) (1): தற்போதைய பதவிக்காலத்தின் நான்காவது ஆண்டு நிறைவடைந்த பின்னர், ஜனாதிபதி எந்நேரமும் அடுத்த தவணைக்கான தேர்தலை அறிவிக்கலாம்.

அவர் தனது அதிகாரத்தை பிரயோகிக்கும் காலத்தில் இடம்பெறும் அதிகார துஷ்பிரயோகம், சட்ட மீறல், அல்லது தவறிழைப்பதற்கு எதிராக மக்களுக்கு எந்தவொரு சட்ட ரீதியான பரிகாரமும் கிடையாது. ஏனென்றால் (35) வது ஷரத்தின் பிரகாரம் அவர் தண்டனைகளுக்கு அப்பாற்பட்டவராவார்.

அரச ஊடகம் என்றாலென்ன, தனியார் ஊடகம் என்றாலென்ன, அனைத்து ஊடகங்களும் அவரது கட்டுப்பாட்டின் கீழே வருகின்றன. அரச ஊடகம் நேரடியாக அவரது செல்வாக்கின் கீழே உள்ளது. தனியார் ஊடகம் தனது சொத்துகளை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அரச பரப்புரைகளுடன் ஒத்துப் போகின்றன. ஊடக பிரச்சாரம், பதாகைகள், விளம்பர தட்டிகள் எல்லாம், மக்களின் மனதில் ஜனாதிபதியின் மேலான மதிப்பை அதிகரிப்பதற்காக பயன்படுகின்றன. ஒவ்வொரு நாளும் மாபெரும் ஆட்சியாளர் பற்றிய சித்திரம் காட்சிப் படுத்தப் படுகின்றது.

மக்கள் திரளின் முன்னால் பேசப் போகும் போதெல்லாம், ஒரு குழந்தையை கையில் ஏந்திய பெண்ணை திடீரெனக் காண்கிறார். மாமனிதர் அந்தக் குழந்தையை வாங்கி தூக்கிப் பிடிக்கிறார், சிரிப்பூட்டுகிறார், தாயுடன் சில வார்த்தைகளை பரிமாறிக் கொள்கிறார். ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வை படம்பிடித்துக் காட்ட தயாராக இருக்கின்றனர். தொடர்ந்து சில நாட்களுக்கு திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகும்.

உரிமை மீறல்களை எதிர்த்து மக்கள் போராடும் பொழுது, அது "தேசத்தின் பாதுகாப்புக்கு" அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டு, ER அல்லது PTA சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அது எப்போதும் அதிகாரத்தை கொண்டிருப்பவரின் மொழியிலேயே வரையறுக்கப்படும். அவர்கள் தேசத்தின் பிரஜைகள். அவர்கள் பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பு. இந்த அமைப்பை அலட்சியப் படுத்தும் அனைவரும், அதனால் பயனடைபவர்களே ஆவர்.

பன்னிரண்டு பாராளுமன்ற குழுக்கள் உள்ளன. அவற்றில் இரண்டு:
* பொதுநல
அமைப்புகளுக்கான குழு
* பொதுநல நிதிகளுக்கான குழு.

இந்தக் குழுக்கள் அரசாங்கத்தின் செலவுகளை மேற்பார்வையிடலாம். கணக்கு நிலுவைகளை சரிபார்ப்பதற்கான இந்தக் குழுவின் தலைவரை எதிர்க்கட்சியில் இருந்து தெரிவு செய்வதே சம்பிரதாயமாகும். தற்போது அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆகவே எந்த கையாடலும் அம்பலமாகலாம்.

பாராளுமன்றம் மேற்பார்வையிடும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது. ஆணைக்குழுக்களாலும், விவாதங்களாலும், கூட்டங்களாலும், கேள்விகளாலும் அந்த அதிகாரங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டன.

எமது சுதந்திரத்தின் அடிப்படை

எமது நாட்டின் நிலை என்ன? நாம் எமது தசைகளுக்கு உணவூட்டும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளோம். எமது உடலைப் பாதுகாப்பது எப்படி? சுகாதார அமைச்சினால் காக்கப்படும் நோய்கள் அவை.

ஆட்சியாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையே நாம் நினைக்க வேண்டும். நாம் பெறும் கல்வியின் அடிப்படை என்ன? அடிமையாகும் பயிற்சிக்கான பாடத்திட்டங்கள். சட்டம் என்பது காகிதத்தில் அச்சிடப்பட்ட எழுத்துக்கள் மட்டுமே. நீதியான தீர்ப்பு என்பது சட்டபூர்வ எந்திரன்களால் உச்சரிக்கப்படும் ஒரு தொகுதி சொற்கள். தேசபக்தி இனவாதிகளின் மூர்க்கமாகி விட்டது. அரசியல் பயிற்சியின் விளைவு என்ன? சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து சாக்கடையாக மாறி வருகின்றது. தற்போது அவர்கள் எமது இறுதிப் பொக்கிஷமான ஆன்மாக்களை திருடுகிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் சுதந்திரத்தின் அடிப்படை என்ன? ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் சுதந்திரமாக சுடலாம். குற்றவாளிகளை அம்பலப் படுத்துபவர்கள் பட்டப் பகலில் கொலை செய்யப்படுவார்கள். போலிஸ் அதன் பிறகு என்ன செய்யும்? கொலையானது ஒரு இனத்தெரியாத நபரினால் செய்யப்பட்டது என்பதை நிரூபிப்பதற்காக, தகவல்களைத் தேடுவார்கள். இறந்தவனின் மரணத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறும்.

ஒரு பிரஜையின் கடமை என்ன? நடந்தவை எல்லாவற்றையும் மறந்து விட்டு, அரச ஊடகம் சொல்வதை நம்ப வேண்டும்.

ஒருவர் கேட்கக் கூடாத கேள்விகள் இவை:
- யார், எப்படி கொலை செய்தார்கள்?
- கடத்தல் புரியும் படைகளை அனுப்புவது யார்?
- கொலை செய்யும் துப்பாக்கிகளை யார் வைத்திருக்கின்றனர்?
-உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கொலைகள், தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள் நடைபெறுவது எவ்வாறு சாத்தியமாகின்றது?

சட்டத்தை கேள்விக்குள்ளாக்குவதும், உண்மை பேசுவதும் எமது நாட்டில் மரண பயத்தை உண்டாக்கியுள்ளது. இந்நாட்டில் எத்தனையோ சட்ட நிறுவனங்கள், ஆணைக்குழுக்கள், சுற்றறிக்கைகள், ஆணைகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் நீதி மட்டுமே அரிதாகக் கிடைக்கின்றது. ஊழலை ஒழித்துக் கட்டுவதிலும் பார்க்க, அதனை பகிரங்கப் படுத்துபவரே ஒழித்துக் கட்டப் படுகின்றார். தாக்கியவர் இன்றி எவரும் காயப்படலாம். கடத்தியவர் இன்றி எவரும் காணாமல்போகலாம். மூன்று ஊடக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டன. போலிஸ் இன்னும் புலன் விசாரணை செய்து கொண்டிருக்கின்றது. சந்தேகத்தின் பேரில் தீப்பெட்டிகள் தடுத்து வைக்கப்படலாம்.

வடக்கில் அவர்கள் கூறும் வெற்றியானது, திரைமறைவில் முழு நாட்டிற்குமான அடக்குமுறையாக உள்ளது. இந்த நிலைமை குறித்து நீங்கள் பேசினால், அது அந்நிய நாட்டு சாதியாகவோ, அல்லது புலிகளின் குரலாகவோ மாசு கற்பிக்கப்படலாம். இந்த தேசத்தில் இரண்டு வகையான மக்கள் மட்டுமே உள்ளனர். ஜனாதிபதி அவற்றை பின்வருமாறு வகைப்படுத்துகின்றார்: "இந்த தேசத்தை நேசிக்கும் ஒரு பிரிவினர். மற்றவர்கள் துரோகிகள்." இந்த நாட்டை நேசிப்பவராயின் நீங்கள் ஒன்றில் அடங்கிப் போக வேண்டும், அல்லது மௌனமாக இருக்க வேண்டும். அதிகாரத்திற்கான பேராசை இந்த நாட்டில் சட்டமாகி விட்ட மோசமான தருணம் இது. அதனால் வடக்கில் இருந்து தெற்கு வரை தெளிவை விருத்தி செய்வது பயங்கரமான கனவாக இருக்கும். மக்கள் போராட்டம் மட்டுமே இந்த நிலையை மாற்றும்.

ஜனாதிபதி தனது முதலாவது பதவிக்காலம் ஆரம்பமான போது எடுத்த உறுதிமொழி இது. நவம்பரில் இரண்டாவது தடவை அதே உறுதிமொழியை எடுக்கலாம்.
"நான்,... மனப்பூர்வமாக உறுதியாக அறிவிக்கிறேன்: நான் விசுவாசத்துடன் இந்த கடமையை நிறைவேற்றுவேன்.... இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம்.... இலங்கை குடியரசுக்கு நான் விசுவாசமாக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் நிர்ணய சட்டத்தை பாதுகாப்பதற்கு முடிந்த அளவு பாடுபடுவேன். "

அது ஒரு உரையாக இருந்த போதிலும், வித்தியாசமாக அர்த்தப்படலாம். இதுவரை காலமும் அவரது செயல்களில் இருந்து உண்மையான அர்த்தத்தை பிரித்தறியலாம். யுத்தத்தை தவிர, அவர் கூறிய எதையும் நிறைவேற்றவில்லை. அவர் செய்தவை எல்லாம் சட்டத்திற்கு மாறானவை.

"நான், ... மனப்பூர்வமாக உறுதியுடன் அறிவிக்கிறேன்: நான் ஜனாதிபதிக்குரிய கடமைகளை நிறைவேற்ற மாட்டேன். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் அமைப்பு சட்டத்தின் படியும், சட்டத்தின் படியும் நடக்க மாட்டேன். இலங்கை குடியரசுக்கு விசுவாசமாக இருக்க மாட்டேன். எனது குடும்பத்திற்கு விசுவாசமாக முடிந்த அளவு பாடுபடுவேன். சட்டத்தை மீறுவதுடன் அராஜகத்தை தூக்கிப் பிடிப்பேன். கொள்ளைக்காரர்களின் உரிமைகளுக்காக பாடுபடுவேன். நான் இத்தனை காலமும் செய்தவற்றை தொடருவேன் என உறுதி கூறுகின்றேன். "

அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இரத்து செய்வதாக கூறினார். அதைச் செய்வதற்குப் பதிலாக, இன்னும் அதிக அதிகாரங்களை திரட்டிக் கொண்டு, அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாகி விட்டார்.

மக்கள் போராட்டம் மட்டுமே நிலைமையை மாற்றும். அது நடக்கலாம்!

(S.G Punchihewa இலங்கையில் பலரும் அறிந்த எழுத்தாளர், கவிஞர், மனித உரிமைகள் ஆர்வலர். 2005 ம் ஆண்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தேசிய மனித உரிமைகள் ஆணையகத்திற்கு நியமிக்கப்பட்டார். அரசமைப்பு பிரதிநிதிகள் குழுவொன்று அந்த நியமனத்தை செய்ய வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி, திரு. புஞ்சிஹேவ அந்த பதவியை ஏற்க மறுத்து விட்டார். இன்று இலங்கையில் பகிரங்கமாக மாற்றுக் கருத்துகளுக்காக குரல் கொடுக்கும் மிகச் சில நபர்களில் ஒருவர். அவரது அண்மையை உரைகளில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி இது.)
(ஆங்கில மூலப்பிரதியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.)

Wednesday, October 20, 2010

டென்மார்க் தமிழரைக் கவர்ந்த ஆப்பிரிக்க நூல் - சில குறிப்புகள்

10 -10 -10 அன்று, டென்மார்க் நாட்டில், வயன் நகரில், "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" நூல் அறிமுகம் இனிதே நிறைவேறியது. டென்மார்க் இலக்கிய ஆர்வலர், கரவைதாசனின் "இனி" அமைப்பின் சார்பில் ஒருங்கமைக்கப்பட்டது. வயன் நகர கலாச்சார மையம், அன்றைய நிகழ்வையொட்டி மறைந்த டென்மார்க் தமிழ் இலக்கியவாதி முல்லையூரான் ஞாபகார்த்த மண்டபமாகியது. விடுமுறை நாளை பயனுற கழிக்க விரும்பிய டென்மார்க் தமிழர்கள் 150 பேரளவில் நிகழ்வுக்கு சமூகமளித்தமை குறிப்பிடத் தக்கது. டென்மார்க் ஐரோப்பாவின் சிறிய நாடுகளில் ஒன்று. லண்டன், பாரிஸ் நகரங்களைப் போலல்லாது, டென்மார்க் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், 300 கி.மி. தூரத்தில் இருந்து கூட நூல் அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்தனர். நேரம் பிந்தியும் சிலர் வந்து கொண்டிருந்தமையால், மண்டபம் நிறைந்து காணப்பட்டது.


கலையரசனின் "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" நூலை விமர்சித்து, இரண்டு பேச்சாளர்கள் வேறு பட்ட பார்வையில் சொற்பொழிவாற்றினார்கள். முதலில் விமர்சித்த டென்மார்க்கில் வாழும் மனோதத்துவ டாக்டர் கதிர்காமநாதன், தமிழில் இது போன்ற நூல் வருவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார். கலையரசன் இந்த நூலை எழுதுவதற்கு முன்னர், நெதர்லாந்தில் அகதியாக வாழ்ந்த காலத்தில் பல ஆப்பிரிக்கர்களோடு பழகியிருக்கிறார். சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார். இவற்றை நூலை வாசிக்கும் பொழுது அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார். "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" என்ற தலைப்பு ஏன் வந்தது என நூலாசிரியர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "ஆப்பிரிக்காவில் இருந்து தான் மனித இனம் தோன்றியது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை மெய்ப்பிக்கும் பொருட்டு அந்த தலைப்பு வைக்கப் பட்டிருக்கலாம்." என தான் கருதுவதாக குறிப்பிட்டார்.

டாக்டர் கதிர்காமநாதன் தனது விமர்சனத்தில் இன்னொரு விளக்கத்தையும் கேட்டிருந்தார். ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு இல்லை என்றும், அங்கே கோத்திரங்கள் அல்லது இனக்குழுக்கள் மாத்திரம் இருப்பதாகவும், இது பற்றிய விளக்கம் தருமாறு நூலாசிரியரை கேட்டுக் கொண்டார். தனக்கு ஏற்கனவே ஆப்பிரிக்கா பற்றிய பரிச்சயம் இருப்பதாகவும், தன்னிடம் வரும் ஆப்பிரிக்க நாடுகளின் நோயாளிகளிடம் இருந்தே பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் கூறினார். அவர்கள் கூறிய கதைகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் நூலில் வரும் பல தகவல்களை புதிதாக கேள்விப்படுவதாக சில உதாரணங்களை குறிப்பிட்டார். சிம்பாப்வேயில் அகப்பட்ட கூலிப்படையினருடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மார்க் தாட்சர் விவகாரம், வெகுஜன ஊடகங்களில் வெளிவராத செய்தியாகும். கட்டுரைகளின் தலைப்புக்கள் கவித்துவம் மிக்கதாக இருந்தமை தன்னைக் கவர்ந்ததாக தெரிவித்தார். "நைல் நதி, ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு" போன்ற தலைப்புகளின் உள்ளடக்கத்தை சிலாகித்துப் பேசினார்.

இரண்டாவதாக நூலை விமர்சித்த பவுசர் பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார். பவுசர் இலங்கையில் வெளிவந்த மூன்றாவது மனிதன், தற்போது லண்டனில் இருந்து வரும் எதுவரை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராவார். "சமூக நலன் சார்ந்த சிறந்த நூல்களை பதிப்பிடுவதில் புகழ் பெற்ற கீழைக்காற்று பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்தே ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற நூலின் முக்கியத்துவம் தெளிவாகின்றது." என்ற முகவுரையுடன் ஆரம்பித்தார். பவுசர், ஆப்பிரிக்க நாடுகளின் பிரச்சினையை, ஏகாதிபத்திய தலையீடு என்ற கோணத்தில் இருந்து பார்த்தார். குறிப்பாக கொங்கோவின் முதலாவது பிரதமர் லுமும்பா கொலையில், பின்னணியில் இருந்த ஏகாதிபத்திய சதி பற்றிய கண்டனங்களை முன்வைத்தார். கொங்கோவில் அண்மைக்காலமாக நடந்த யுத்தத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மாண்ட போதிலும், வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாததை சாடினார். மேலும் சுதந்திரமடைந்த ஆப்பிரிக்க நாடுகளின் சட்டங்கள் யாவும், காலனிய எஜமானர்களால் எழுதப்பட்டவை, அவற்றை மாற்ற முடியாது என்பதையும் நினைவூட்டினார்.

இறுதியாக நன்றியுரை கூற எழுந்த கலையரசன், டாக்டர் கதிர்காமநாதன் கேட்ட விளக்கங்களுக்கு பதில் கூறி தனது உரையை ஆரம்பித்தார். ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற தலைப்பு அர்த்தம் பொதிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பியர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்தில், எகிப்தில் உயர்ந்த நாகரீகம் கொண்ட சமுதாயம் காணப்பட்டது. ஐரோப்பியர்களின் நாகரீகம் கிரேக்கத்தில் தோன்றியது என்று சொல்கின்றனர். ஆனால் அதே கிரேக்கர்கள், எகிப்தில் இருந்தே நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். இது போன்ற வரலாற்று தகவல்கள் பல நூலில் பலவிடங்களிலும் வருகின்றமையை சுட்டிக் காட்டினார். மேலும் ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு, சோமாலியா, மொரிட்டானியா போன்ற நாடுகளில் இருப்பதை எடுத்துக் காட்டிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கதிர்காமநாதன் குறுக்கிட்டார். "சோமாலியாவில் இனக்குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்டன, அவை சாதிகள் இல்லை." என்றார். அதற்குப் பதிலளித்த கலையரசன், "ஆப்பிரிக்காவில் இனக்குழுக்கள் இருப்பதையும், அவற்றுள் ஏற்றத்தாழ்வு நிலவுவதையும் மறுக்கவில்லை. ஆனால் இங்கே சாதி அமைப்பு என்பது தீண்டாமையை அடிப்படையாக கொண்டது. சோமாலிய சமூகம் கோத்திரங்களாக பிளவுண்ட போதிலும், சாதிகளும் இருக்கின்றன." இதன் பொழுது மேடையில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரவைதாசன், "சாதியமைப்பு இந்திய உபகண்டத்திற்கு மட்டும் உரிய சிறப்பம்சம் அல்ல. ஜப்பானிலும் சாதிகள் இருக்கின்றன." என்றார்.

கலையரசன் தனது உரையில், "ஐரோப்பியர்கள் எம்மையும், ஆப்பிரிக்கர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். முன்னாள் காலனிய அடிமை நாடுகள் என்ற வகையில் எமது நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படிப்பினையை பெற்றுக் கொல்லலாம்." என்று தனது உரையை முடித்துக் கொண்டார். ஆப்பிரிக்கா பற்றிய நூல்கள் தமிழில் அரிதாகவே வந்திருந்த படியால், கலந்து கொண்ட மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக செவிமடுத்துக் கொண்டிருந்தனர். விமர்சனங்கள் முடிவுற்றதும், ஆர்வ மேலீட்டுடன் ஆளுக்கொரு நூலை வாங்கிச் சென்றனர். டென்மார்க்கில் வளர்ந்த இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் கூட வந்து நூல் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. வந்திருந்த மக்கள் எல்லோரும், டென்மார்க்கில் நூல் அறிமுகத்தை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறத் தவறவில்லை. இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

(டென்மார்க் நிருபர்)

Sunday, October 17, 2010

ஆப்பிரிக்காவில் சாதி தீண்டாமைக் கொடுமை

ஆப்பிரிக்காவில் சாதிகள் தொடர்பாக நான் முன்னர் எழுதிய குறிப்புகள்,(ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்) தமிழ் இலக்கிய வட்டத்தினுள் ஒரு வெடிகுண்டைப் தூக்கிப் போட்டது போன்ற அதிர்ச்சியை தோற்றுவித்தது. நிறையப் பேர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை அல்லது நம்பவில்லை என்பதை, எனக்கு கிடைத்த எதிர்வினைகளில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.
சாதி அமைப்பு தெற்காசிய நாடுகளுக்கே பொதுவானது என்ற பொதுப்புத்தியில் உறைந்த கற்பிதத்தை உடைப்பது அவ்வளவு இலகுவானதல்ல. முதலில் ஆப்பிரிக்க நாடுகளின் சமூக அமைப்பை ஆராய்ந்த பின்னரே, இந்திய சாதியமைப்புடம் ஒப்பிட முடியும். ஆய்வுக்கு தேவையான தரவுகளை சேகரிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதால், ஆப்பிரிக்க சாதிகளைப் பற்றி எழுதுவதை தள்ளிப்போட்டேன். இருப்பினும் அச்சில் வெளியான எனது முதலாவது நூலான "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" பல வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளானது. "ஆப்பிரிக்க சமூகங்கள் இனக்குழு, அல்லது கோத்திரங்களாக பிரிந்துள்ளன. அதனை இந்திய சாதிகளுடன் ஒப்பிட முடியாது." என்ற வாதம் ஆணித்தரமாக முன்வைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் அத்தகைய பிரிவுகள் இருப்பது உண்மை தான். ஆனால் அதற்குமப்பால் சாதிய தீண்டாமை முறையும் சில நாடுகளில் நிலவுகின்றது. இந்தக் கட்டுரையில் சோமாலியா பற்றி விபரிக்கிறேன்.

ஆப்பிரிக்காவில் சாதிகள் இல்லை என்று எதிர்வினையாற்றுபவர்கள் முதலில் பின்வரும் யதார்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுகிறேன்.
1. எமது ஆப்பிரிக்க உலகம் பற்றிய பார்வை ஐரோப்பியர்களுடையது. ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் எவ்வாறு உலகத்தை பார்க்கிறார்களோ, அப்படியே நாமும் பார்க்கிறோம். இதுவரை காலமும் தமிழில் சர்வதேசம் பற்றி வந்த தகவல்கள் ஆங்கில மூலத்தில் இருந்து பெறப்பட்டவை. அதனால் ஆங்கிலேயரின் எண்ணவோட்டத்தை நாமும் பின்பற்றுவது தவிர்க்கவியலாத விளைவாகிப் போனது.
2. ஆப்பிரிக்கா என்பது ஒரு கண்டத்தைக் குறிக்கும் சொல். பூகோள படிப்பை இலகுவாக்க மனிதன் வகுத்த பிரிவு அது. ஆகையினால் ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் பொதுவான கலாச்சாரம், சமூகப் பின்னணி இருக்க முடியாது. தென் ஆப்பிரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க சமூகங்களை, சோமாலியா போன்ற வட ஆப்பிரிக்க சமூகங்களுடன் ஒப்பிட முடியாது. இரண்டுக்கும் இடையில் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. ஆசியா என்று கூறி விட்டாலே, இந்திய, சீன சமூகங்களை ஒரே மாதிரியானவையாக கருத முடியுமா?
3. இன்று வரை சாதி என்றால் என்னவென்று சரியான வரைவிலக்கணம் இல்லை. ஐரோப்பியர்கள் சாதிகள் என்பது செய்யும் தொழிலை அடிப்படையாக கொண்டது என்று கருதினார்கள். நூறாண்டுகளுக்கு முன்னர் நிலப்பிரபுத்துவ ஐரோப்பாவில் அப்படியான நிலைமை இருந்தது. மேலும் Caste என்ற சொல் போர்த்துகீச/ஸ்பானிய மூலத்தைக் கொண்டது. தென் அமெரிக்கா காலனியாதிக்கத்திற்கு உள்ளான பொழுது அந்தச் சொல் தோன்றியது. ஸ்பெயின்/போர்த்துகலில் இருந்து வந்து சென்ற ஆளும் வர்க்கம், தென் அமெரிக்காவில் பிறந்தவர்கள், கலப்பினத்தை சேர்ந்தவர்கள், இவர்களைக் குறிக்க Caste என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். அநேகமாக ஐரோப்பிய கோணத்தில் இருந்தே, இன்று பலர் சாதியத்தை புரிந்து கொள்கின்றனர். ஆனால் சாதியம் என்பது அந்தளவு இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

சோமாலியாவில் 1991 ல் சியாத் பாரெயின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் நாட்டை சின்னாபின்னப் படுத்திய உள்நாட்டு யுத்தம் வெடித்தது. வெளிநாடுகளில் அந்த யுத்தத்தை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. சோமாலியா முழுவதும் சோமாலியா மொழி பேசுகிறார்கள், அனைவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள். எதற்காக இப்படி குழுக்குழுவாக சண்டையிட்டு மடிகிறார்கள் என்று கேட்டுக் கொண்டனர். ஒன்றில் மதப்பிரச்சினைக்காக, அல்லது மொழிப் (இனப்) பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே யுத்தங்கள் நடைபெறுகின்றன என்று தான் அவர்கள் கற்றிருக்கிறார்கள். ஓரளவு உள்நோக்கி ஆராய்ந்தவர்கள் மட்டும், சோமாலியாவில் இனக்குழுக்கள் (கோத்திரங்கள்) அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ளன என அறிந்து கொண்டனர். உண்மை தான். சியாத் பாரே அரசாங்கத்தை கவிழ்த்தவர்கள் ஹவியே சமூகத்தினர். ஜெனரல் ஐடீத் அவர்களது தலைவர் தான். ஆரம்பத்தில் அது இனக்குழுக்களை பிரதிநிதித்துவப் படுத்திய யுத்த பிரபுக்களுக்கு இடையிலான மோதலாக இருந்தது. பின்னர் அது உட்பிரிவுகளுக்குள்ளும் நடந்தது.

ஆப்பிரிக்காவில் இனக்குழு அல்லது கோத்திரம் என்பது பொதுவான மூதாதையரைக் கொண்ட சமூகமாகும். ஒவ்வொரு இனக்குழு சமூகமும் தமது பாட்டன், பூட்டன் பெயரை எல்லாம் ஞாபகமாக வைத்திருக்கின்றன. அதாவது ஒரு இனக்குழுவை சேர்ந்தவர்கள் உறவினராக இருக்க வாய்ப்புண்டு. அகமண முறை மூலம் மட்டுமே அந்த பரம்பரைப் பெருமையை பேணுவது சாத்தியம். இந்திய சாதிய அமைப்பில் கோத்திரம் என்றும், சாதிய உட்பிரிவுகள் என்றும் அழைப்பார்கள். இந்திய அமைப்பில், கோத்திரங்கள் யாவும் அநேகமாக உயர் சாதியினரிடையே மட்டுமே காணப்படும் சிறப்பம்சம் ஆகும். சோமாலியாவிலும் அவ்வாறு தான். தரோட், ஹவியே, இசாக், டிர் என்பன நான்கு முக்கிய கோத்திரங்கள். இவைகள் எல்லாம் உயர் சாதியை சேர்ந்தவை. சோமாலியாவில் காணப்படும் உயர்சாதி கோத்திரங்கள் பின்வருமாறு: Kuulbeer, Hildid, Khayr, Hubane, Aden, Aarsade, Howie, Afarta Ganbar, Gaakaab, Madaraale,Magtal, Omar, Hussein . மேற்குறிப்பிட்ட கோத்திரங்கள் நிலவுடமையாளர்கள் மட்டுமல்ல, தம்மை உயர்வாகக் கருதிக் கொள்பவர்கள். அவர்கள் உயர்ந்தவர்கள் என்றால் தாழ்ந்தவர்களும் இருக்கத் தானே செய்வார்கள்? பின்வருவன சோமாலியாவில் தாழ்ந்த சாதிகளாக கருதப்படுகின்றன. Madhiban, Maxamed Gargaarte, Muuse-Darye, Tumaal, Yibir, Howle, Mahaad-Bare . இவற்றையும் நீங்கள் இனக்குழுக்கள் என்று அழைக்கலாம். ஆனால் சில நேரம், மிட்கன் என்ற தாழ்த்தப்பட்ட சாதியின் உட்பிரிவுகளாக கருதப்படுகின்றன என்பது மட்டுமே வித்தியாசம்.

இன்றைக்கு நாம் காணும் சோமாலியா தேசத்தில் மட்டும் சோமாலியர்கள் வாழவில்லை. அந்த நாட்டுடன் எல்லைகளைக் கொண்ட அயல் நாடுகளிலும் சோமாலிய இன மக்கள் வாழ்கின்றனர். குறிப்பாக எத்தியோப்பியாவின் கிழக்கு மாகாணத்திலும், ஜிபூத்தியிலும் சோமாலியர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். கென்யாவிலும் கணிசமான அளவு சோமாலிய மக்கள் வாழ்கின்றனர். 1991 யுத்தத்தின் பின்னர், அகதிகளாக புலம்பெயர்ந்த சோமாலியர்கள், பிரிட்டன், நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்கின்றனர். மேற்குறிப்பிட்ட நாடுகளில் எல்லாம் சோமாலியாவில் இருந்தது போல சாதிய பிரிவினை காணப்படுகின்றது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளிலும், ஒரு சாதியினர், மற்ற சாதி வீடுகளுக்கு போகமாட்டார்கள். தேநீர் கூட அருந்த மாட்டார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலும் அந்தந்த சாதிக்குள் திருமணம் செய்யும் கலாச்சாரம் நீடிக்கின்றது. புலம்பெயர்ந்த மேற்கத்திய நாடுகளில் பொருளாதார வசதி இருக்கிறது. அதனால் ஒருவர் மற்றவரில் தங்கியிருக்க தேவையில்லை.

புலம்பெயர்ந்த நாடுகளிலேயே சாதிப் பிரிவினை தொடர்கிறது என்றால், தாயகமான சோமாலியாவில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும்? தாழ்த்தப்பட்ட சாதிகள் ஓரளவு உரிமை பெற்றவர்களாக வாழ்ந்தது, சியாத் பாரே ஆட்சிக் காலத்தில் தான். இத்தாலி/பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த சில வருடங்களில், சதிப்புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தார் சியாத் பாரே. சோமாலியாவை சோஷலிச நாடாக அறிவித்தவுடன் நிற்காது, செயலில் இறங்கினார். வர்த்தக ஸ்தாபனங்கள தேசியமயமாகின. கூட்டுறவுப் பண்ணைகள் உருவாகின. காலனிய மொழியான ஆங்கிலம் அகற்றப்பட்டு, நிர்வாகத்தில் சோமாலிய மொழி புகுத்தப்பட்டது. சோமாலிய தேசியத்தை வளர்ப்பதன் மூலம், சாதிகளாக, கோத்திரங்களாக பிளவுண்ட சோமாலியர்களை ஒன்று சேர்க்கலாம் என நம்பினார். இந்திய சமூகங்களில் ஒருவர் என்ன சாதி என்று நேரடியாக கேட்பது போலவே, சோமாலியாவிலும் வழக்கம் இருந்தது. சியாத் பாரே அந்த வழக்கத்தை ஒழித்தார். (இதனால் வேறு வழிகளில் சாதி அறியும் முறை தொடர்ந்தது.) சாதிய அடக்குமுறைகளில் ஈடுபட்ட உயர் சாதியை சேர்ந்த பலர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் அரசுப் பணிகளில், குறிப்பாக இராணுவ அதிகாரிகளாக அமர்த்தப்பட்டனர். இவை யாவும் சியாத் பாரே காலத்தில் நடந்த புரட்சிகர மாற்றங்கள்.

தாழ்த்தப்பட்ட சாதியினர் இராணுவத்தில், அதுவும் அதிகாரிகளாக பதவிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்க விடயம். வரலாறு முழுவதும், (இன்றும் தான்) தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்கள் ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. தங்கள் உரிமைகளுக்காக கிளர்ந்தெழுந்த போதெல்லாம், உயர்சாதியினரால் கொடூரமாக அடைக்கப்பட்டனர். உயர் சாதி கோத்திரங்கள் தமக்குள் மோதிக் கொள்ளும் போது மட்டும், தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள் கைகளில் ஆயுதம் கிடைக்கும். அதாவது உயர்சாதி நிலவுடமையாளர்களின் அடியாட்களாக மட்டுமே வைத்திருக்கப்பட்டார்கள்.

தமது சாதி முன்னேற்றத்திற்கு சங்கம் அமைக்கும் உரிமை, உயர் சாதி கோத்திரங்களுக்கு மட்டுமே உள்ளது. சோமாலியாவில் இன்று வரை தாழ்த்தப்பட்ட சாதியினர் நிறுவனமயப்பட முடியாது. இந்தியாவில் தலித் சாதியினரை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் இருக்கின்றன. சோமாலியாவில் அதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. எப்போதாவது தாழ்த்தப்பட்ட சாதியினர் தைரியத்தை வரவழைத்து சங்கம் அமைக்க முன்வந்தால், அவர்கள் மீது அடக்குமுறை ஏவிவிடப்படும். உரிமைக்குரல் எழுப்புவோரை கொலை செய்வது, அவர்கள் குடிசைகளை எரிப்பது, அவர்கள் குடும்பத்து பெண்கள் மீது பலாத்காரம் பிரயோகிப்பது, இவை எல்லாம் உயர்சாதியினர் ஏவிவிடும் வன்முறைகள். அதற்கு நீதி கேட்டு காவல்துறையிடமோ, நீதிமன்றத்திலோ முறைப்பாடு செய்ய முடியாது. ஏனெனில் அங்கேயிருப்பவர்களும் உயர்சாதியினர் தான்.

சோமாலியாவில் உயர்சாதியினர் மட்டுமே நிலங்களை சொந்தமாக வைத்திருக்க முடியும். அதனால் பெரும் நிலவுடமையாளர்களும், பணக்காரர்களும் உயர்சாதியினர் என்பது அதிசயமல்ல. அவர்கள் பண பலத்தால், ஆயுதங்களையும் சேர்த்து வைத்திருக்கின்றனர். அதனால் உயர்சாதி கோத்திரங்களுக்கு இடையிலான தகராறுகள் ஆயுத முனையில் தீர்க்கப்படுகின்றன. ஒரு கோத்திரத்தை சேர்ந்தவர் கொல்லப்பட்டால், அல்லது பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டால், பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி விடுவார்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். தீங்கு செய்தவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்க முடியாது.

சியாத் பாரேயின் புரட்சிகர அரசுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் ஆதரவு வழங்கியதில் வியப்பில்லை. ஆனால் சியாத் பாரே அரசு கவிழ்ந்த பின்னர் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் போது, அரசுக்கு கொடுத்த ஆதரவுக்காக பழிவாங்கப்பட்டார்கள். அதனை தட்டிக் கேட்கவோ அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினர் பக்கம் நிற்கவோ, எந்தவொரு உயர் சாதி கனவானும் வரவில்லை. இதனால் உள்நாட்டுப் போரில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். மேற்குலகில் சோமாலியருக்கு அரசியல் தஞ்சம் வழங்கிய நாடுகளில் இந்த விடயம் தெரியும். இதனால் சில உயர்சாதி அகதிகளும், தம்மை தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்தவர்களாக பொய் கூறி அகதி அந்தஸ்து பெற்றனர். (அகதிமுகாமில் வாழ்ந்த சோமாலியர்கள் வழங்கிய தகவல்.)

சோமாலியர்கள் செய்யும் தொழில் கூட அவர்களது சாதியை தீர்மானிக்கின்றது. இந்திய சமூகத்தில் செட்டியார்கள், வெள்ளாளர்கள் போல, சோமாலிய உயர்சாதியினரும் ஒன்றில் விவசாயத்தில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பார்கள். இந்திய சமூகத்தில் உள்ளது போலவே, சோமாலிய தாழ்த்தப்பட்ட சாதியினர் உயர்சாதி வீடுகளில் குடிமை வேலை செய்து பிழைத்து வந்தனர். அவர்கள் சிறு துண்டு நிலமேனும் சொந்தமாக வைத்திருக்க முடியாது. ஆனால் குத்தகை விவசாயியாக இருக்க முடியும். உயர்சாதி வீடுகளில் ஆண் குழந்தை பிறந்தால், அல்லது பெண் பிள்ளை திருமணம் முடித்தால், யிபிர் சாதியினருக்கு சிறு தொகை பணம் கொடுப்பார்கள். அதாவது இந்திய சமூகத்தில் வண்ணார்கள் போன்றவர்கள் இபிர்கள்.
According to a Somali professor at the Department of African Studies, University of Florida in Gainsville, the Yibir are not a clan but an occupational class "found everywhere in Somalia"(http://www.unhcr.org/refworld/topic,463af2212,4860acd02,3ae6acab34,0.html)

இபிர் சாதியினர் இஸ்ரேலில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று ஒரு கதை உண்டு. அதனாலும் அவர்கள் மீதான அடக்குமுறை அதிகம். சோமாலிய சாதிய அமைப்பில் வந்தேறு குடிகள், பூர்வீக மக்களுக்கு இடையிலான வேறுபாடும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சோமாலியா மொழி பேசும் உயர்சாதியினர் அரேபிய வம்சாவளியினர் என நம்புகின்றனர். இது இந்தியாவில் ஆரிய வம்சாவளியினராக கருதப்படும் பிராமணருடன் ஒப்பு நோக்கத்தக்கது. இந்திய பிராமணர்கள் பல வர்ணங்களாக அல்லது கோத்திரங்களாக பிரிந்துள்ளதைப் போலவே, சோமாலிய உயர்சாதியினரும் இனக்குழுக்களாக (clan) பிரிந்துள்ளனர். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினர் சோமாலியாவின் பழங்குடியினர் என சமூக-விஞ்ஞான ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதை மெய்ப்பிப்பது போல அவர்கள் பேசும் சோமாலிய மொழி சற்று மாறுபாடான வட்டார மொழிகளாக காணப்படுகின்றது. இதை விட வெளிப்படையாக தெரியக்கூடிய தோற்ற வேறுபாடுகள் எதுவும் கிடையாது.

சோமாலியாவில் உள்ள சாதி அமைப்பு அந்த நாட்டிற்கு உரிய தன்மைகளைக் கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் சாதி அடக்குமுறை பெருமளவில் காணப்படும் இன்னொரு நாடு மொரிட்டானியா. அதைப் பற்றி விரிவாக பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம். சோமாலியாவில் நிலவும் சாதி அமைப்புமுறை, சாதிய ஒடுக்குமுறைகளை பற்றிய தகவல்களை தந்துதவிய, நெதர்லாந்து வாழ் சோமாலிய அகதிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலதிக விளக்கம் தேவைப்படுவோர் கீழ்வரும் சுட்டிகளில் வாசிக்கலாம்.

The Yibir in Somalia: A Plight of a Caste Group
Brief Review of Somali caste systems
Siad Barre

Wednesday, October 13, 2010

இனவழிப்பு சாதனையாளன் கொலம்பஸை கௌரவிக்கும் அமெரிக்கர்கள்


அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 12 ம் தேதி, கொலம்பஸ் என்ற கொலை வெறியனை நினைவு கூர்ந்து விழா எடுக்கிறார்கள். "கொலம்பஸ் தினம்" ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒரு முக்கியமான விடுமுறை தினம். கொலம்பஸ் அமெரிக்காவை "கண்டுபிடித்த" கதையை பாலர் பாடசாலையில் இருந்தே சொல்லிக் கொடுக்கிறார்கள். யார் இந்த கொலம்பஸ்? கரீபியன் தீவுகளில் வாழ்ந்த இரண்டு லட்சம் மக்களை இரு வருடங்களில் இனவழிப்பு செய்த சாதனையாளன். ஒன்பது வயது சிறுமிகளைக் கூட பாலியல் அடிமைகளாக்கிய கயவன். அமெரிக்காவில் முதன் முதலாக அடிமை வாணிபத்தை அறிமுகம் செய்த அயோக்கியன். இன்று உயிரோடிருந்தால், மனித குலத்திற்கு எதிரான குற்றம் இழைத்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பான்.
அதற்கெல்லாம் ஆதாரம் உண்டா? கொலம்பஸ் தானே எழுதி வைத்த தினக்குறிப்புகள் இருக்கின்றன. கொலம்பஸின் ஆட்களில் ஒருவரான பார்த்தலோமே லாஸ் காஸாஸ், கொடுமைகளால் மனம்வருந்தி எழுதிய குறிப்புகள் இருக்கின்றன. அவற்றில் அமெரிக்க மக்களை இனவழிப்பு செய்த கொடூரங்கள் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளன. இன்று யாரும் இவற்றை நினைவு கூற விரும்புவதில்லை. வரலாற்றுப் பாடநூல்களும் சம்பிரதாயத்திற்காக என்றாலும் குறிப்பிடுவதில்லை. இனவழிப்பு செய்த கொலம்பஸை தேசிய நாயகனாக விழா எடுத்துக் கௌரவிக்கும் வெட்கக்கேடு அமெரிக்காவில் நடக்கின்றது. இதை அறியாத பல தமிழர்கள், அமெரிக்கர்கள் நாகரீமானவர்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கொலம்பஸ் தினம் கொண்டாடப் பட வேண்டுமென அரசுக்கு பிரேரணை செய்தது Knights of Columbus என்ற அமைப்பு. இது ஒரு வெளிநாட்டவருக்கெதிரான நிறவெறிக் கொள்கை கொண்ட கத்தோலிக்க அமைப்பு. அவர்கள் கொலம்பஸை தமது பிள்ளைகளுக்கு கத்தோலிக்க ஆதர்ச நாயகனாக காட்டினார்கள். 1934 ம் ஆண்டு, ஜனாதிபதி பிராங்கலின் ரூஸ்வெல்ட் கொலம்பஸ் தினம் என்ற விடுமுறை நாளை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். முதன் முதலாக அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல என்பது இன்று அனைவருக்கும் தெரிந்த உண்மை. செவ்விந்திய பூர்வீக குடிகள், பதினான்காயிரம் வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் என்றும் கூற முடியாது. Leif Ericson என்ற கடலோடி தலைமையில், ஸ்கன்டிநேவியாவில் இருந்து வந்த வைகிங் மக்கள், கனடாவில் நியூபவுன்லாந்து மாகாணத்தில் குடியேறி வாழ்ந்தனர்.

12 அக்டோபர் 1492 ம் ஆண்டு, கொலம்பஸ் பஹாமாஸ் தீவுகளில் காலடி எடுத்து வைத்த காலத்தில், அங்கே அரவாக்ஸ் இன மக்கள் வாழ்ந்து வந்தார்கள். சமாதான விரும்பிகளான அந்த மக்களைப் பற்றி கொலம்பஸ் தினக்குறிப்பில் இவ்வாறு எழுதி வைத்தார்.
"அவர்கள் தம்மிடம் இருப்பதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். கேட்பதற்கெல்லாம் இல்லை என்று மறுப்புக் கூறுவதில்லை....."
"அரவாக்ஸ் மக்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. அவர்களது சமூகத்தில் குற்றவாளிகள் இல்லை, கைதிகள் இல்லை, சிறைகள் இல்லை. எமது கப்பலான சாந்தா மரியா கரைதட்டி உடைந்த பொழுது, கப்பலில் வந்தோரையும், பொருட்களையும் மீட்க அரவாக்ஸ் மக்கள் உதவி செய்தனர். கப்பலில் இருந்த ஒரு பொருளையேனும் அவர்கள் ஒளித்து வைக்கவில்லை..."

இவ்வாறு மனமுவந்து உதவி செய்த நேர்மையான அரவாக்ஸ் மக்களுக்கு கொலம்பஸ் செய்த கைம்மாறு என்ன? அந்த மக்களை அடிமைகளாக்கி தங்கச் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கினான். இருப்பதை பங்கிட்டு மகிழச்சியாக வாழ்ந்த மக்கள், இன்னலுற்று மனமொடிந்து தற்கொலை செய்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கூட்டாக தற்கொலை செய்தனர். அரவாக்ஸ் பெண்களை கொலம்பஸின் ஆட்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அதைப் பற்றி கொலம்பஸ் இவ்வாறு எழுதியுள்ளார்: "இளம் பெண்களுக்கான கேள்வி அதிகரித்த காரணத்தால், அவர்கள் 9 , 10 வயது சிறுமிகளை தேடிச் சென்றார்கள்..."

அரவாக்ஸ் அடிமைகளை இறக்கும் வரை இரத்தத்தை பிழிந்து வேலை வாங்கினார்கள். ஒரு செவ்விந்திய அடிமை தினசரி குறிப்பிட்ட கோட்டா தங்கம் எடுத்துக் கொடுக்கா விட்டால், தண்டனையாக இரு கைகளையும் வெட்டினார்கள். அடிமை முறைக்கு எதிர்ப்புக் காட்டிய அரவாக்ஸ் தொழிலாளியின் மூக்கையும், காதுகளையும் அறுத்தனர். அடிமை விலங்கை உடைத்துக் கொண்டு தப்பியோடி பிடிபட்டால் உயிரோடு கொளுத்தினார்கள். கொலம்பஸ் தனது இரண்டாவது பயணத்தில் வேட்டை நாய்களை கொண்டு வந்தான். தப்பியோடும் அடிமைகள் மீது நாய்களை அவிழ்த்து விடுவார்கள். தப்பியோடியவர்களை வேட்டையாடும் நாய்கள், அவர்களை கடித்துக் குதறி, கை வேறு, கால் வேறாக பிய்த்து விடும். கொலம்பஸின் ஆட்கள் தமது வேட்டை நாய்களுக்கு மாமிச உணவு தீர்ந்து விட்டால், அரவாக்ஸ் இனக் குழந்தைகளை வெட்டி உணவளித்தார்கள்! ஸ்பெயினில் இருந்து நீண்ட கடற்பயணம் செய்து வந்தவர்களை விருந்தாளிகளாக ஏற்று உபசரித்த அரவாக்ஸ் மக்களுக்கு, கொலம்பஸ் செய்த நன்றிக்கடன் அப்படியானது. தான் செய்த கொடூரங்களுக்காக கொலம்பஸ் வருந்தியதாக தெரியவில்லை. கிறிஸ்தவர்களை அடிமைகளாக வைத்திருக்க கத்தோலிக்க சட்டம் அனுமதிக்கவில்லை. அதற்காக கொலம்பஸ் ஒரு தந்திரம் செய்தான். செவ்விந்திய குடிமக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு தடை விதித்தான். கிறிஸ்தவர்கள் அல்லாதோரை கொன்றாலும் பாவம் இல்லை அல்லவா?

ஜெர்மனியில் ஹிட்லரை தேசிய நாயகனாக கொண்டாடினால் உலகம் எந்தளவு அதிர்ச்சி அடையும்? மனித நேயம் மிக்கவர்களாக உலகிற்கு காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், கொலைவெறியன் கொலம்பஸை தேசிய நாயகனாக கொண்டாடுவதைக் கண்டு யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஏன்? உலக வரலாறு முழுவதும் இனப்படுகொலையாளர்கள் மாவீரர்களாக போற்றப் பட்டு வந்திருக்கிறார்கள். ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன்.... உதாரணத்திற்கு சில. இதையெல்லாம் தெரிந்தாலும் மூடி மறைக்கும் அறிவுஜீவிகள் தான்; ஸ்டாலின், மாவோ எத்தனை பேரை கொலை செய்தார்கள் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். "மேலைத்தேய நலன்களுக்காக கொலை செய்பவர்கள் பரிசுத்தவான்கள். அதனால் அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கலாம்."

Thursday, October 07, 2010

நூல் அறிமுகம்: "அகதி வாழ்க்கை"

"அகதி வாழ்க்கை" எனும் நூல் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? அதற்கான அரசியல்-சமூக காரணி என்ன? அகதிகள் எவ்வாறான வழிகளில் ஐரோப்பிய நாடுகளை வந்தடைகின்றனர்? அவர்கள் அடைக்கலம் கோரும் நாடுகள் எவை? அடைக்கலம் கோரும் வரையிலான பயணப்பாதை என்ன? வழியில் எத்தகைய இன்னல்களை கடந்து வருகிறார்கள்? ஐரோப்பிய நாடுகளில் உள்ள அகதிகளுக்கான சட்டங்கள், அகதிகளை விசாரிக்கும் முறை எப்படி உள்ளது? அவர்களுக்கான வதிவிடப் பத்திரங்கள் எவை? தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன? புலம் பெயர்ந்த நாடுகளில் வதிவிட அனுமதி கிடைத்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைந்துள்ளது? ஐரோப்பிய சமூகத்தில் அவர்களுக்கான இடம் என்ன? புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள்?

இது போன்ற பல அரிய தகவல்கள் அடங்கிய நூல். விலை: இந்திய ரூபாய் 100 ,- நூலை இணையத்தில் (online ) வாங்கலாம்.

https://www.nhm.in/shop/978-81-8493-477-9.html

Sunday, October 03, 2010

அந்தார்டிகாவிலும் தீராத இனப்பிரச்சினை

லத்தீன் அமெரிக்கா முழுவதும் ஸ்பானியா போன்ற ஐரோப்பிய மொழிகளே பேசப்படுவதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். பூர்வீக செவ்விந்திய இன மக்களின் மொழிகள் அடக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றன. அல்லாவிடின் நவீன காலத்திற்கேற்ப வளர்ச்சி அடையாத காரணத்தால், அந்த மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை குறைந்து செல்கின்றது. தென் அமெரிக்காவில் பொலீவியா, குவாதமாலா போன்ற நாடுகளில் செவ்விந்திய பழங்குடியினரின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அவர்களுக்கிடையே வேறு பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதற்கு மாறாக, சிலியில் மட்டும் ஒரே மொழி பேசும் மக்கள், தமக்குரிய தாயக பூமியைக் கொண்டுள்ளனர். அந்தார்டிகாவுக்கு அண்மையில் உள்ள தென் சிலியில் மாபுச்சே மொழி பேசும் மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர். மொத்த சனத்தொகையில் பத்து வீதமான, அதாவது பத்து லட்சம் மாபுச்சே இன மக்கள் தமக்குரிய தாயக மண்ணில் வாழ்கின்றனர். இவர்களை விட மூன்று லட்சம் மாபுச்செக்கள் தலைநகர் சாந்தியாகோ டெ சிலியிலும், ஆர்ஜென்தீனாவிலும் காணப்படுகின்றனர்.

சிலியில் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய அடித்தட்டு மக்களான மாபுச்செக்களின் சொந்த மண் அந்நிய முதலாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. சர்வாதிகாரி பினோச்செயின் தீவிர வலதுசாரி ஆட்சிக் காலத்தில், மாபுச்செக்களின் பாரம்பரிய பூமி விலை பேசி விற்கப்பட்டது. பணம் படைத்த யாரும் நிலங்களை வாங்கி தமது சொந்தமாக்கிக் கொள்ள முடிந்தது. இதற்கெதிராக மாபுச்சே மக்கள் உரிமை கேட்டு போராடிய பொழுது, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு விட்டது. ஜனநாயக தேர்தலில் தெரிவானவர்கள் ஆட்சியில் உள்ளனர். இருப்பினும் பினோச்சே கால பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழே, மாபுச்சே ஆர்வலர்கள் கைது செய்யப்படுகின்றனர். விசாரணை இன்றி தடுத்து வைக்கப்படுகின்றனர்.

மாபுச்சே ஆர்வலர்களை அரசு சிறையில் அடைத்த போதிலும், அவர்களது உரிமைக்கான போராட்டம் அடங்கவில்லை. சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களது உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக பெல்ஜியத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பெல்ஜியத்தில் உள்ள இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள், சிலி தூதுவராலயத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். சர்வதேச தோழமை மாபுச்சே மக்களின் நியாயமான கோரிக்கைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளது.

உண்ணாவிரதம் தொடர்பாக மாபுச்சே ஆர்வலர்கள் வெளியிட்ட அறிக்கை:
"எல் மான்சானோ" சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் கைதிகளான நாம், இத்தால் மாபுச்சே மக்களுக்கும், சர்வதேச கவனத்திற்கும் எமது அறிவிப்புகள் பின்வருமாறு:
- நாம் 12 ஜூலை 2010 அன்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கிறோம்.
- அநீதியான போலிஸ், நீதி மன்ற நடவடிக்கைகளை எதிர்த்தும், சிறைச்சாலைகளில் மனதளவிலும், உடலளவிலும் எமக்கு நடைபெறும் சித்திரவதைகளை எதிர்த்தும் இந்த போராட்டத்தை அறிவிக்கிறோம்.
- மாபுச்சே விடுதலை அமைப்பை அடக்குவதற்காக, சிலி அரசு எமது நியாயமான போராட்டத்தை கிரிமினல்மயப் படுத்தியுள்ளது. எம் மீது கடுமையான பாஸிச அடக்குமுறைச் சட்டங்களை அமுல்படுத்துகிறது.

எமது கோரிக்கைகளாவன:
- பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இரத்து செய்.
- மாபுச்சே மக்களின் பிரச்சினைகளை இராணுவ நீதிமன்றங்களில் விசாரிப்பதை நிறுத்து
- அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்
- மாபுச்சே தாயகப் பூமியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தை வாபஸ் வாங்கு
- மாபுச்சே மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி.

இங்ஙனம்,
மாபுச்சே அரசியல் கைதிகள்
Concepción,
12 ஜூலை 2010


Chile hunger strike puts focus on Indians' plight
Mapuche

Saturday, October 02, 2010

ஐ.நா.அறிக்கை: "அமெரிக்க குடிமகனை இஸ்ரேல் படுகொலை செய்தது"

மே 31 காஸாவிற்கு உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற மாவி மர்மரா என்ற நிவாரணக் கப்பல் இஸ்ரேலிய படையினரால் தாக்கப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்த தொண்டர்கள் பலர் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். "நிவாரணக் கப்பலில் இருந்தவர்கள் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாகவும், அதனால் தற்காப்புக்காக சுட்டதாகவும்" இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை நியாயப்படுத்தியது.

தற்போது ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் (United Nations High Commissioner for Human Rights) நியமித்த உண்மை கண்டறியும் குழு சம்பவத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தாக்குதலில் கொல்லப்பட்ட தொண்டர்களின் பிரேத பரிசோதனை முடிவுகளை வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. பிணங்களின் மீது காணப்பட்ட காயங்களை வைத்து பார்க்கும் பொழுது, அவர்கள் மிக அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாகின்றது. மரண தண்டனை நிறைவேற்றும் பாணியில் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக 19 வயது (துருக்கி வம்சாவளி) அமெரிக்க பிரஜையான டோகனின் மரணம் சந்தேகத்திற்கிடமின்றி படுகொலை என நிரூபிக்கப் பட்டுள்ளது. அந்த இளைஞன் கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டு வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போதே சுடப்பட்டான். முதுகிலும், காலிலும் காயம் பட்டு சுயநினைவின்றி விழுந்து கிடந்தான். அதன் பிறகே பிடரியிலும், முகத்திலும் சுட்டதால் அவனது உயிர் பிரிந்துள்ளது.

ஐ.நா. அறிக்கை வருவதற்கு முன்னமே துருக்கி அரசு டோகனின் பிரேத பரிசோதனை முடிவுகளை அமெரிக்க தூதுவராலயத்திற்கு வழங்கி இருந்தது. தூதுவராலயம் அமெரிக்க நீதி அமைச்சுக்கு அனுப்பியிருந்தது. அதன் பிறகு எந்த செய்தியும் இல்லை. நீதி அமைச்சு இது குறித்து கருத்துக் கூற மறுத்து வருகின்றது. ஒரு அமெரிக்க குடிமகன் இஸ்ரேலிய படையினரால் படுகொலை செய்யப்பட்ட போதிலும், ஒபாமா நிர்வாகம் எல்லாம் தெரிந்தும் மௌனமாக இருக்கிறது. இஸ்ரேலுடனான உறவு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இஸ்ரேலிய படையினரின் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதது போல நடிக்கிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு:


Friday, October 01, 2010

எகுவடோரில் ஜனநாயக அரசைக் கவிழ்க்க சதி

"ஜனாதிபதியைக் கொல்வதற்கு உங்களுக்கு தைரியமிருந்தால் இங்கேயே இப்போதே என்னை கொலை செய்யுங்கள்." கலகம் செய்த போலிஸ் படையினருக்கு முன்னால் எக்குவடோர் ஜனாதிபதி கொறேயோஸ் ஆற்றிய உரை. ஜனாதிபதி பேசி முடிப்பதற்குள் கலகக்கார பொலிசாரின் கண்ணீர்ப் புகை வீச்சினால் காயமுற்று வைத்தியமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எக்குவடோர் இராணுவம் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், ஒரு சதிப்புரட்சி தடுக்கப்பட்டது.

எக்குவடோர் போலிஸ், பாதுகாப்புப் படைகள் இதுவரை காலமும் அனுபவித்து வந்த சலுகைகளை இரத்து செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. தாம் அனுபவித்து வந்த வசதிகளையும், சலுகைகளையும் இழக்க விரும்பாத காவல்துறை திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கவிக்க எத்தனித்தது. கலகக்கார போலீசார் விமான நிலையத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர். இருப்பினும் இராணுவம் ஜனாதிபதி பக்கம் நின்றதால், சதிப்புரட்சி பிசுபிசுத்துப் போனது.

எகுவடோரின் மொத்த சனத்தொகையில் அரைவாசி செவ்விந்திய பூர்வீக மக்கள். 2007 ம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் ஏறிய இடதுசாரி ஜனாதிபதியான கொறேயோஸ், எக்குவடோர் நாட்டை சோஷலிச பாதையில் கொண்டு செல்ல விரும்பினார். அயல் நாடான வெனிசுவேலாவின் பொலிவார் சோஷலிஸ்ட் சாவேசுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். வெனிசுவேலா போலவே எக்குவடோர் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகும். இதனால் நேற்றைய சதிப்புரட்சியின் பின்னணியில் அமெரிக்காவின் கை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் ஜனநாயக விரோத சதிப்புரட்சியை கண்டித்துள்ளனர். இருப்பினும் ஜனநாயக காவலனான அமெரிக்க அரசு மௌனம் சாதிக்கின்றது. இதனை அவதானித்த கியூப வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், "சதிப்புரட்சியை கண்டிக்க முன்வருமாறு" அமெரிக்காவை அழைத்துள்ளார்.

Possible Correa coup involves US meddling?

வெனிசுவேலாவின் சர்வதேச தொலைக்காட்சி சேவையான Telesur எகுவடோரின் கடைசி செய்திகளை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது. இங்கேயுள்ள சுட்டியை அழுத்தவும்.