
இலங்கையில் முதன்முதலாக இஸ்லாமிய மதம் அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப் பட்டது. அதே காலத்தில் இந்தியாவிலும் கேரளா கரையோரம் இஸ்லாம் என்ற புதிய மதத்தை கண்டுகொண்டது. உண்மையில் இஸ்லாமிய மதத்தின் தோற்றத்திற்கு முன்னரே, அரேபிய வணிகர்கள் இந்திய உப கண்டத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். பண்டைய காலத்தில் வருடக்கணக்கான கடல் போக்குவரத்தின் ஆயாசம் காரணமாக, புலம்பெயர்ந்த நாட்டில் தங்கி விட்டவர்களும் உண்டு. இவையெல்லாம் இந்திய உபகண்டத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சங்கதிகள்.
நெடுந்தீவு, மன்னார் கரையோரங்களில் பிரமாண்டமாக நிற்கும் பவோபப் மரங்களை இன்றும் காணலாம். கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஆலமர இனத்தை சேர்ந்த பவோபப் மரங்கள், அரேபிய வணிகர்களால் கொண்டு வரப்பட்டன. பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும் மரங்களை, இஸ்லாமுக்கு முந்திய அரேபியர்கள் தெய்வமாக வழிபட்டனர். இந்தக் காலத்தில் மத நம்பிக்கையாளர்கள் சாமிப் படங்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். அது போல, பண்டைய அரேபியர்கள் பவோபப் மரங்களை இலங்கையில் நட்டு வணங்கியிருக்க வாய்ப்புண்டு. இவர்களை விட, முத்துக் குளிக்கும் அரேபிய சுழியோடிகள் ஆயிரம் ஆண்டுகளாக மரிச்சுக்கட்டி (மன்னார்) வந்து சென்றனர். ஈழத்து முத்துக்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி இருந்த காலம் அது. பண்டைய துறைமுகமான சிலாபத்துறையில் இருந்து முத்துகள் மூட்டை மூட்டையாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின. நிச்சயமாக, ஏற்றுமதி வாணிபத்திலும் அரேபியர் ஆதிக்கம் செலுத்தினார்கள். 16 ம் நூற்றாண்டில், போர்த்துக்கேயர் வரும் வரையில் அரேபிய ஏகபோகம் தொடர்ந்தது.
இந்த விபரங்களை எல்லாம் இங்கே கொடுக்கக் காரணம், எவ்வாறு பக்கச் சார்பான கருத்துகள் தகவல் சுதந்திரத்தை தடுக்கின்றன என்பதைக் காட்டத்தான். அரேபியர் என்ற இனத்தை, இஸ்லாம் என்ற மதத்தின் பிரிக்கவியலாத அம்சமாக கருதப்படுகின்றது. மேற்குலகில் இருந்து கிழக்குலகம் வரையில், இந்த கருத்தியல் பொதுவானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஈழத்துடன் வர்த்தக உறவு கொண்டிருந்த அரேபியர்கள், ஓமான் அல்லது யேமன் நாட்டை சேர்ந்தவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமியராக இருந்திருக்க வாய்ப்பில்லை. கி.பி. 500 ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய இஸ்லாம் என்ற புதிய மதம், அரேபிய தீபகற்பம் முழுவதும் பரவ நீண்ட காலம் எடுத்தது.
லெபனான் முதல் ஓமான் வரையிலான நிலப்பரப்பு சுமார் இரண்டாயிரம் கி.மி. தூரம் கொண்டது. ஒட்டகத்தின் துணை கொண்டு கடப்பதற்கு மாதக்கணக்காகும். இந்தியாவை போல, அரேபிய தீபகற்பமும் ஒரு துணைக் கண்டம்.

துபாய், அபுதாபி ஆகிய வளைகுடா செல்வந்த நாடுகள், தமது கலாச்சார பாரம்பரியத்தை அருங்காட்சியகத்தில் போற்றிப் பாதுகாக்கின்றனர். அங்கே அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடி மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் எனப் பார்க்க முடியும். அதே கலாச்சாரத்துடன், அரபு மொழியில் "பெதூயின்" என அழைக்கப்படும் நாடோடிகள் இன்று அருகி வரும் பழங்குடியினராவர். எந்தப் பயிரும் முளைக்காத கட்டாந்தரையில் (பாலைவனம் என்பதற்கு அரபியில் பல சொற்கள் உள்ளன) ஆடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை மட்டுமே வளர்க்க முடியும். பெதூயின்கள் ஒரு இனக்குழுச் சமுதாயம். அவர்களுக்கென்று ஒரு அரசனோ, தேசமோ கிடையாது. "எமக்கென்று ஒரு நாடு இல்லையே" என்று கவலையும் இல்லை. ஒவ்வொரு நாடோடிக் குழுவுக்கும் ஒரு மூத்தோர் தலைவராக இருப்பார். மூத்தோர் வாய் வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். எந்த இடத்தில் கூடாரம் அடிக்க வேண்டும்? எந்த தரை கால்நடைகளுக்கு உகந்தது? எங்கே நிலத்தடி நீர் உண்டு? இதையெல்லாம் குழுத் தலைவர் தீர்மானிப்பார்.
அரபு நாடோடிக் குழு (அல்லது குலம்) ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயருண்டு. அவர்களின் மூதாதையர் ஒருவரின் பெயரை தமது குழுவுக்கு சூட்டியிருப்பார்கள். அந்தக் குழுவின் உறுப்பினர் யாவரும், பொதுவான மூதாதையர் ஒருவரின் வம்சாவழி எனக் கூறிக் கொள்வார்கள். குலத் தலைவர் ஒரு பரம்பரைப் பதவி, அல்லது உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டிருப்பார். அவர்கள் தமது தலைவரை "ஷெரீப்" (பன்மை: அஷ்ரப்) என்று அழைத்தனர். பெதூயின் குழுக்கள் எந்த நகரத்தையும் கட்டவில்லை. எந்த சரித்திரத்தையும் எழுதி வைக்கவில்லை. அவர்களின் இலக்கியம் முழுவதும் கர்ண பரம்பரைக் கதைகளாகவும் செய்யுள்களாகவும் இருந்தன. அவையெல்லாம் பரம்பரையாக கடத்தப்படும் வாய்வழி இலக்கியங்கள். செய்யுள்கள் பெரும்பாலும் குலத் தலைவரின் வீர தீர பராக்கிரமங்களை பறைசாற்றின. இஸ்லாம் "அறியாமையின் காலகட்டம்" எனக் குறிப்பிடும் காலத்து அரபி செய்யுள்கள் பலவற்றில் காமரசம் ததும்பி வழிந்தன. இன்று சில அரபு புத்திஜீவிகள், அந்த செய்யுள்களை இஸ்லாமுக்கு முந்திய அரேபியரின் பாலியல் சுதந்திரத்திற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.
அரபு பெதூயின் குலங்கள் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வது சர்வ சாதாரணம். கால்நடைகளை பிறிதொரு குலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையிட்டு செல்வார்கள். அல்லாதுவிடின் ஒரு கிணறு தமதே என்று ஆதிக்கத்தை நிலைநாட்ட பார்ப்பார்கள். இது போன்ற சம்பவங்கள் யுத்தங்களை தோற்றுவிக்கும். சாதாரண பெதூயின் இளைஞன் சிறு வயதில் இருந்தே யுத்தத்திற்கும், கடுமையான பாலைவன வாழ்க்கைக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்கிறான். பெதூயின்களின் போர்க்குனாம்சமும், நாடோடி வாழ்க்கை முறையும் பிற்காலத்தில் இஸ்லாமிய படையெடுப்புகளின் வெற்றிக்கு காரணமாகின. அப்போது கூட அவர்கள் தனித்தனி குலங்களாக தான் போரிட்டார்கள். அவர்களுக்கு உலகில் வேறெதையும் விட குலப்பெருமையே முக்கியமானது. உயிரை விட மானம் பெரிதென்று கருதுபவர்கள். ஒன்றுக்கொன்று ஜென்ம விரோதிகளான அரபு குழுக்களை இஸ்லாம் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ப்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.
எந்த ஒரு அரேபியனும் தான் சார்ந்த குலத்தை விட்டு பிரிந்து செல்ல மாட்டான். அப்படி சென்றால், ஆளரவமற்ற பாலைவனப் பூமியில் தனித்து வாழ முடியாது. அரசாங்கமோ, வேறெந்த நிர்வாகமோ இல்லாத ஒரு சமூகத்தில், குல உறுப்பினர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். இஸ்லாம் இந்த சவாலை செயலூக்கத்துடன் எதிர்கொண்டது. "உம்மா" என்ற அமைப்பை ஸ்தாபித்தது. ஒரு குலச் சமுதாயம் வழங்கிய பாதுகாப்பை உம்மா வழங்கியது. ஏற்கனவே இருந்த குலக் கட்டமைப்பை உடைத்து, முஸ்லீம் என்ற புதிய சமூகத்தினுள் உள்வாங்கியது. பெதூயின்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். தமது பிரதேசத்திற்குள் ஒரு அந்நியன் வந்தாலும், உபசரித்து வழி அனுப்பி வைப்பார்கள். தொடர்பூடகம் எதுவுமற்ற அன்றைய காலகட்டத்தில், அந்நிய விருந்தாளிகள் செய்தி பரிமாறும் தூதுவர்களாக விளங்கினர். புதிய மதமான இஸ்லாம், இந்த "ஊடகத்தை" திறமையாக கையாண்டது. "இஸ்லாம் என்ற புதிய மதம்" பற்றிய செய்தியை அரேபிய தீபகற்பம் முழுவதும் காவிச் சென்று பரப்பினார்கள்.
இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர், அரேபியர்கள் அனைவரும் நாகரீகமடையாத நாடோடிகளாக வாழ்ந்தனர் என்பது அறியாமை. யேமன் தேச அரேபியர்கள் மூவாயிரம் வருட நாகரீகத்தை கொண்டவர்கள். அணை கட்டி நீர்ப்பாசனம் செய்யுமளவிற்கு தொழிநுட்ப தேர்ச்சி பெற்றிருந்தனர். சிரியா அரேபியர்கள் கிறிஸ்தவ ராஜ்ஜியம் ஒன்றை ஸ்தாபித்திருந்தார்கள். மாளிகைகளில் வாழ்ந்த மேட்டுக்குடியினர் கிரேக்க மொழியில் அரசகருமமாற்றினர். செங்கடல் கரையோர ஜெத்தா போன்ற நகர மக்கள் விவசாயத்திலும், வணிகத்திலும் சிறந்து விளங்கினர். மெக்கா நகரில் முகமது தலைமையிலான சிறு குழு, இஸ்லாம் என்ற புதிய மதத்தை பிரச்சாரம் செய்தது. மாற்று உலகிற்காக போராடிக் கொண்டிருந்த முஸ்லிம்களை, அரேபியர்கள் தேடித்தேடி அழிக்கத் துடித்தார்கள்.
(தொடரும்)
16 comments:
அருமையான கட்டுரை. அடுத்த பாகத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
மரங்கள் இலங்கையில் என்ன பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன?
அதன் ஆங்கில பதத்தையும் இணைத்திருந்தால் இலகுவாக இணையத்தில் மேலதிக தகவல்களை தேடமுடியும் அல்லவா?
Ummah (Arabic: أمة) is an Arabic word meaning "community"
எனவே உம்மா என்பது அமைப்பல்ல. அது சகல முஸ்லிம்களையும் குறிக்கும். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என்ற அடிப்படையில் ஒருவரை ஒருவர் பாதுகாத்தனர்.
இப்படித்தான் ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் தாங்கள் 'கக்கிய', 'இந்திய(?)வரலாறில்', "ஆரியர் வருகை" என்றும் "மொகலாயர் படையெடுப்பு" என்றும் பொய்யாக மத துவேஷத்தை பச்சிளம் குழந்தைகள் மனதில் விஷமாய் விதைத்தனர்.
இப்போது, கண்டவரெல்லாம், கண்டதையும் பதிவு என்ற பெயரில் வாந்தி எடுக்க பதிவுலகம் என்ற பெரிய வாஷ் பேசின் வந்து விட்டதால், நீங்கள், //இந்திய உபகண்டத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு...// என்று படிப்போர் மனதில் அணுகுண்டை விதைக்கிறீர்கள். அந்தகாலத்தில் ஏதய்யா இந்தியா? சேர/சோழ/பாண்டிய/பல்லவ/சாளுக்கிய/கலிங்க படைஎடுப்புகளை எல்லாம், 'சைவப்படைஎடுப்பு' என்றோ, 'வைனவப்படைஎடுப்பு' என்றோ, 'ஹிந்துப்படைஎடுப்பு' என்றோ 'புத்தப்படைஎடுப்பு' என்றோ நாம் படித்ததே இல்லையே? அதென்னா? "இஸ்லாமியப்படைஎடுப்பு"? இதெல்லாம் வடிகட்டிய நயவஞ்சகம் இல்லையா?
இஸ்லாம் பற்றி எதையாவது உளற வில்லை என்றால் ஹிட்ஸ் வர மாட்டேங்குதா? பின்னூட்டம் போட மாட்டேன்கிறார்களா? ஓட்டுக்கள் குறைகிறதா?
பதிவை அதற்கு மேலே படித்தால் ஒன்றுமே விளங்க வில்லை. சரியான குப்பை பதிவு. குப்பைத்தொட்டியில் எறிந்தால் கூட அத்தொட்டிக்குத்தான் கேவலம்.
வணக்கம் தோழரே,
இங்கே Barbar Temple - ல் (B.C.2300முற்பட்டது என்று குறிப்பு உள்ளது)என்று ஒரு கோயில் இருந்தது என்றும்,அதிலிருந்து தொல்பொருள் ஆராச்சியாளர்களால் எடுக்கப்பட்ட காப்பரினால் செய்யப்பட்ட மயில் போன்றதொரு பறவையும்,கோயில் அமைப்பின் மாதிரியும் மற்றும் சில சிலைகளும் Bahrain National Museum - தில் காட்சிக்கு வைத்துள்ளனர், மற்றும் Barbar Temple இன்றும் மக்கள் வந்து பார்த்து செல்கின்றனர் .நேரம் கிடைக்கும் பொழுது என்னுடைய இடுக்கையில் Bahrain National Museum - என்று போட்டோக்களை இட்டுள்ளேன் பார்க்கவும்.
இதை தாங்கள் இடுக்கையில் வெளியிட வேண்டும் என்று அவசியம் இல்லை. இதை தாங்களுக்கு ஒரு செய்தியாகவே தெரியப்படுத்த விருப்புகின்றென்.
கேட்கலாமா வேண்டாமா என தெரியவில்லை.அரபி மொழி பேசுபவர்கள் அரபுக்கள். அவர்கள் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் போது இஸ்லாமிய அரபுக்கள். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் கிறிஸ்தவ அரபுக்கள். முஸ்லீம்கள் எனப்படுபவர்கள் யார்?, இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்பதா?. முஸ்லீம் என்பது மதம் சார்ந்த சொல்லா?, கொஞ்சம் கிறுக்குத்தனமான கேள்வி போல இருந்தால் மன்னிக்கவும்.
என்ன கொடும சார்,
- அந்த மரங்களை ஆங்கிலத்தில் Baobab என்று சொல்கிறார்கள். அதற்கான விக்கிபீடியா சுட்டி இது: http://en.wikipedia.org/wiki/Baobab
- முஸ்லிம் சமூகம் என்பதும் ஒரு அமைப்புத் தான்.
aambalsamkannan,
பஹ்ரைன் சிலைகள் பற்றிய அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. பிற வாசகர்களுக்கும் அவை பிரயோசனமாக இருக்கும்.
பிரகாஷ், முஸ்லிம் என்றால் "இறைவனுக்கு அடிபணிபவன்" என்று அர்த்தம். இஸ்லாம் தோன்றிய பின்னர், அந்த மதத்தை பின்பற்றியவர்கள் தம்மை முஸ்லிம்கள் என அழைத்துக் கொண்டனர். அது ஒரு அடையாளப்படுத்தல்.
கலையரசன் ஒரு சின்ன சந்தேகம் மன்னாரில் பெருக்க மரம் என்று சொல்வார்கள் என நினைக்கிறன். நானும் மன்னார் சென்ற போது பார்த்திருக்கிறேன். பெரிய சுற்றளவைக் கொண்டிருந்தாலும் உயரம் குறைவாக இருந்தது. Baobab மரமானது ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்டது உயர்ந்தது. அகன்றது. பெருமளவு நீரை சேமித்து வைக்கக்கூடியது. அதுவும் மன்னாரில் உள்ள மரமும் ஒன்றுதானா?
தர்ஷன், நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். எதற்கும் தாவரவியல் அறிஞர்களை கேட்டுத் தெரிந்து கொள்ளவும். சில வேளை பேராதனை தாவரவியல் பூங்காவில் வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
ம்ம் இரண்டும் ஒன்றுதான் நண்பரே இப்போதுதான் தேடித் பார்த்தேன். அது Baobob மரம் என்பது எனக்கு புதியத் தகவல் நன்றி. மாணவர்களுக்கு விந்தையான தாவரங்கள் பற்றிக் கற்பிக்கும் போது Baobob தாவரங்கள் இலங்கையில் இல்லை. ஆபிரிக்காவில் உள்ள ஒருவகை தாவரங்கள் எனவே சொல்லிக் கொடுத்திருந்தேன். இப்போதுதான் மன்னாரில் உள்ள மரமும் அதுவும் ஒன்று எனத் தெரிகிறது. நன்றி
நல்ல கட்டுரை. தொடரட்டும் உங்கள் இந்த நடுநிலைமையான பணி.இருந்தாலும் தலாய்லாமா பற்றி உங்கள் கருத்துகளை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
இஸ்லாமுக்கு முந்தைய அரபு உலகமும்,அரபிகளும் காட்டு மிராண்டிகளாகதானே இஸ்லாமிய எழுத்தாளர்களால் சொல்லப்படுகிறது.ஆனால் உங்களின் கட்டுரை எதோ அரபுகள் இஸ்லாமுக்கு முன்பே நல்ல நிலையில் நாகரீகத்தோடு வாழ்ந்ததாக சொல்லுகிறதே?இதில் எது உண்மை!
முகம்மது பிறப்பதற்கு முன்னரே அரபியாவில் சிறந்த நாகரீகம் இருந்தது. பிரமீடுகள் முகம்மதுவிற்கு முன்னர் கட்டப்பட்டது. உலகஅதிசயமான பிரமீடுகளைக் கட்டக் கூடிய சிவில் பொறியியல் அறிவு, பிணங்களை அழுகாமல் பாதுகாக்கக்கூடிய உயிரியல் அறிவு , விவசாயம் உடை ,வான சாஸ்திரம் மருத்துவம் போன்ற அனைத்து துறைகளிலும் அவர்கள் சிறந்த அறிவு கொண்டவர்களாகவே இருந்தார்கள். அற்று உலகில் புகழ்பெற்ற அறிவு பெற்ற கலாச்சாரக்குழுவினர் மூன்றுதான். 1. இந்துஸ்தான் 2. ஆரேபியா 3. கிரேக்கம். முகம்மது மதச்சண்டையை முன்வைத்து அரேபிய மக்களை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியவர். முகம்மதுவிற்கு பின்னர் அச்சமூகம் ஒரு போர் குணம் மிக்க அடாவடி மதவாத அடிப்படை
வாத சமூகமாக மாறிப்போனது. அதன்சிந்தனையில்குரான் மட்டுமே இருந்தது. பிரமாண்டமான யுத்தங்களை மட்டும் நடத்தி அரேபிய சமூகம் உலகில் இரத்தக் களறிக்கு காரணமானது. சிலை வணக்கம் பாவம் என்ற முகம்மதுவின் போதனை தவறானது. சிலைவணக்கம் தேவையா ! தேவையில்லையா என்பதுதான் கேள்வி.சிலை வணக்த்தை ஒழித்து விட்டால்உலகம் சுவனமாகிவிடும் என்று முகம்மது நினைத்தார். அவரே சிலை வணக்த்தை ஒழிக்க 45 சிறு பெரும்யுத்தங்களை நடத்தி ஆயிரக்கணக்கான அரேபியர்கள் சாவதற்கும், பெண்கள் கற்பிழந்து அடிமையாக அல்லல்படுவதற்கும் காரணமாக இருந்தார்.அவர் இறந்தபின்னும் அடிதடி ஒயவில்லை. கலிபா அபுபக்கர் ,உமர் , போன்றவர்கள் கொல்லப்பட்டனர். 3வது கலிபாவும் கொல்லப்பட்டார. 4 கலிபாபதவிக்கு முகம்மதுவின் மருமகனும், மகம்மதுவின் குழந்தை மனைவி ஆயிசாவின் உறவனருக்கும்ஏற்பட்ட போட்டியில் ஆயிசா பெரும் படையுடன் முகம்மதுவின் மருமகளை எதிர்த்து போர்புரிந்து தோற்றுப் போனார். battle of camel என்று வரலாறு கூறும் யுத்தம் முஸ்லீம்களும் முஸ்லீம்களும் செய்த சகோதர யுத்தம் ஆகும். முகம்மது இரத்தக்களறியில் இஸ்லாமியப பயிர் வளர்த்தார். இன்னும் அது மனித இரத்தத்தை -காபீர்களை - முஸ்லீம் அல்லாத மக்களைக் காவு எடுத்துக்கொண்டேயிருக்குது.
----------------------------------------------------
வாதீடு: 087
"கப்பல் ஓட்டிய மரக்காயர் யாவரோ?"
பொருல்:
"தம்புல்ல என்ப, தம்முடய்ய பில்லய்யே."
"வாப்பா என்ப, வாருங்கோ அப்பாவே."
"உம்மா என்ப, உயிர் கொடுத்த அம்மாவே."
கப்பல் மனி:
னியூசிலாந்து தேசத்தின் தலய்மய்யிடமான வெலிங்டன் அருங்காட்சியகத்தில், கப்பலுக்குரிய, தமிலு எலுத்துடன் கூடிய, ஒடய்ந்த வென்கல மனி ஒன்ரு பேனிக் காக்கப்பட்டு வருது. அந்த ஒடய்ந்த வென்கல மனியின் விலிம்பில், "முகய்யதீன் வக்குசுடய்ய கப்பல் உடய்ய மனி" என்ரு எலுதப்பட்டு உல்லதாகச் சொல்லப்படுது. அந்த ஒடய்ந்த வென்கல மனியய், 1836ஆம் ஆன்டில் வில்லியம் கோல்ன்சோ (William Colenso) என்னும் இங்கிலாந்து தேசத்தின் மதப் போதகர், னியூசிலாந்து தேசத்தின் வெங்கேரி (Whangarei) என்னும் இடத்தின் அருகில் வசித்த ஆதிமக்கலிடம் இருந்து, கன்டெடுத்ததாகச் சொல்லப்படுது. இதன்மூலம் பல னூட்ரான்டுக்கு முன்பே, இலம்பிரய்போட்ரியார் ஒருவர், கடல் வனிகத்தில் ஈடுபட்டு இருந்ததும், அவர் னியூசிலாந்து தேசத்துக்கே சென்ரு சேர்ந்த விபரமும் தெரியவருது.
----------------------------------------------------
வரலாற்று உண்மைகளையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளவும் நடுநிலையோடு சிந்திக்கவும் உதவும்.
Post a Comment