//சிங்கள "பேரினவாதத்தையும்", தமிழ் "இனவாதத்தையும்" சமப் படுத்தலாமா?// இப்படியான ஒரு கேள்வியின் மூலம் நியாயப்படுத்தலை செய்ய முனைபவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கேள்வியை நான் கேட்கவுமில்லை, தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை. பொதுவாக இப்படியான கேள்விக்கு பின்னால் உள்ள அபத்தங்களை மட்டுமே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
Thursday, December 09, 2021
தேசியவாதம், பேரினவாதம், இனவாதம்: நியாயப்படுத்தல்களின் அரசியல்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Wednesday, December 08, 2021
திருமுருகன் காந்தியின் திருகோணமலை கோளாறு பதிகம்
திருகோணமலையின் முக்கியத்துவம் குறித்து திருமுருகன் காந்தி சில மாணவர்களுக்கு பாடம் நடத்தும் காணொளி பார்க்கக் கிடைத்தது. (https://twitter.com/i/status/1466347425136791561) அதில் அவர் பல தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாறு, புவியியல், சமூகக் கட்டமைப்பு குறித்து அரைகுறை அறிவுடன் பகிரப் படும் இது போன்ற தகவல்களால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை. அத்துடன் ஆபத்தான விளைவுகளையே உண்டாக்கும்.
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Wednesday, December 01, 2021
ஈழத்தமிழரை கேவலப்படுத்தும் மே 17 இயக்க அயோக்கியர்கள்
மே 17 இயக்கத்தினர், தங்களை எப்போதும் நாம் தமிழர் கட்சியிடம் இருந்து பிரித்துப் பார்ப்பார்கள். தங்களை "நாலும் தெரிந்த அறிவுஜீவிகள்"(?) மாதிரி காட்டிக் கொள்வார்கள். ஆனால் புலிகளுக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்றால் மட்டும் எந்தளவு பொறுக்கித்தனத்திற்கும் கீழிறங்கி செல்வார்கள். அவர்கள் பக்க தவறுகளை சுட்டிக் காட்டி விட்டால் "ராஜபக்சே கைக்கூலி" என்று நாம் தமிழர் பாணியில் இவர்களும் திட்டுவார்கள். கடைசியில் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று நிரூபித்து விடுவார்கள்.
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Monday, November 29, 2021
வலதுசாரி (தமிழ்த்) தேசியவாத அறிவுஜீவிகளின் வர்க்கத் துவேஷம்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Wednesday, November 24, 2021
அவுஸ்திரேலிய துன்பத் தமிழ் வானொலியில் சாதிய வன்மம்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, ஈழத்து சாதிய வன்கொடுமைகள் பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் நடத்தும் வானொலியிலும் சாதிய வன்மம் எதிரொலித்தது.
யார் அந்த சாதிவெறியர்?
இன்பத்தமிழ் என்ற வானொலியை நடத்தும் நெறியாளர், ஒரு நேரலை நிகழ்வில் "கீழ் சாதி!" என்று சாதிய வன்மத்துடன் பாய்ந்துள்ளார். சில தினங்களின் பின்னர் இது தொடர்பான கண்டனங்கள் சமூகவலத்தளம் ஊடாக பரவியதால் அந்த நேரலைப் பதிவு பேஸ்புக்கில் அழிக்கப் பட்டு விட்டது. இருப்பினும் வானொலியின் நெறியாளர் சாதிவெறி வன்மத்துடன் பேசிய ஒளிப்பதிவு எனது கைகளுக்கு கிடைத்துள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன?
இது தொடர்பாக உறுதிப்படுத்தப் பட்ட தகவல்களை இங்கே தருகிறேன்.
அவுஸ்திரேலியாவில் இன்பத் தமிழ் என்ற வானொலி சேவை கடந்த இருபத்தைந்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதை நடத்தியவரின் சமூகச் சீர்கேடான பழக்கவழக்கங்கள் காரணமாக இடையில் நிறுத்தப் பட்டிருந்தாலும், மறுபடியும் இணையத்தில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த வானொலியின் உரிமையாளரான பாலசிங்கம் பிரபாகரன் தன்னை ஒரு தீவிர தமிழ்தேசிய செயற்பாட்டளராக காட்டிக் கொள்பவர். முன்பு புலிகள் இருந்த காலத்தில் அவர்களை அண்டி பிழைப்பு நடத்தியவர். தற்போதும் மாவீரர் நிகழ்வுகளை முன்நின்று நடத்தி தன்னை ஒரு புலி அனுதாபியாக காட்டிக் கொள்பவர்.
பாலசிங்கம் பிரபாகரன் தனது தீவிர புலி ஆதரவை காட்டுவதற்காக, ஈழத்து அரசியல் களத்தில் மிதவாத TNA யை நிராகரித்து விட்டு, தீவிரவாத TNPF கட்சியை ஆதரித்து வருகிறார். அதனால் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சர்ச்சைக்குரிய வானொலி நிகழ்ச்சிக்கு கஜேந்திரகுமாரை அழைத்து பேசியுள்ளார். இந்த உரையாடல் Zoom செயலி மூலம் பதிவுசெய்யப்பட்ட படியே, இணைய வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது.
யார் இந்த கஜேந்திரகுமார்?
கஜேந்திரகுமார் முன்பு TNA க்குள் இருந்த காலத்தில், புலிகளால் ஆசீர்வதிக்கப் பட்டவர் என நம்பப் பட்டார். இவரது பாட்டன் ஜி.ஜி. பொன்னம்பலம் தான் ஈழத்தில் முதலாவது வெள்ளாள ஆதிக்க சாதியினருக்காக தமிழ்க் காங்கிரஸ் என்ற சாதிக் கட்சியை உருவாக்கியவர். தற்போது அவரது பேரன் கஜேந்திரகுமார் அந்தக் கட்சியை நடத்தி வருகிறார். இதனது சின்னத்தின் பெயரில் சைக்கிள் கட்சி என்றும் அழைக்கப் படுகின்றது.
இன்பத்தமிழ் வானொலியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கஜேந்திரகுமார், வழமை போல பூகோள அரசியல் பாடம் நடத்தி, தனது மேற்குலக அடிவருடித்தனத்தை நியாயப் படுத்திக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஒரு நேயர், இது தொடர்பாக தனது எதிர்க் கருத்துகளை முன்வைத்திருந்தார். மேற்கத்திய நாடுகளிடம் கையேந்தும் பூகோள அரசியல் வாய்ச் சவடால்களால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப் போவதில்லை என்றும் எமது அயல்நாடான இந்தியாவை பகைக்காமல், அதன் உதவியுடன் தீர்வுக்காக முயற்சிப்பதே சிறந்தது என்று தனது கருத்தை முன்வைத்திருந்தார்.
நிச்சயமாக இந்தக் கருத்து நெறியாளர் பாலசிங்கம் பிரபாகரனுக்கு உவப்பானதாக இருந்திருக்காது. அவர் கஜேந்திரகுமார் கட்சிக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார்.
கஜேந்திரகுமாரை கேள்வி கேட்டவர் அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் வசித்து வருகிறார். நெறியாளருக்கு நன்கு தெரிந்தவர். அதனால் தனது அரசியல் எதிரியை தாக்குவது என்ற பெயரில் மிக மோசமான தனிமனித தாக்குதல் நடத்தினார்.
எதிர்க் கேள்வி கேட்டவரை ஆளுமை அழிப்பு அதாவது Character assasination செய்வது ஒரு பாசிசப் பண்பாடு. கருத்து சுதந்திரத்தை மதிக்காத சர்வாதிகார மனநிலை. ஜெர்மனியில் நாசிச கொடுங்கோலர்கள் தம்மை விமர்சித்தவர்கள் மீது எத்தகைய வன்மைத்தை கொட்டினார்கள் என்பதை வரலாறு கற்பிக்கின்றது. நாசிகளின் அதே மாதிரியான வன்மத்தை அன்று நெறியாளர் வெளிப்படையாகக் காட்டினார்.
"இவர் கையாலாகாத ஒருவர்... சுமந்திரனின் செம்பு..."
"கீழ்த்தரமான சிந்தனை உள்ளவர்..."
"விடுதலைப் போராட்டத்தில் இவரது அண்ணன் கொல்லப் பட்டார் என்பதற்காக இவருக்கு தமிழ்த்தேசியம் பேசுவோரை கண்ணில் காட்ட முடியாது..."
"இவர்கள் தமிழ்த்தேசியப் பரப்பில் இருந்து நீக்கப் பட வேண்டியவர்கள்..."
இப்படி தனிமனித தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த பொழுது இடைமறித்த நேயர் "என்ன உங்கள் குரல் கொன்னை தட்டுகிறது?" என்று கேட்டிருக்கிறார். ஒருவேளை "குடித்து விட்டு உளறுகிறாயா?" என்ற அர்த்தத்தில் கேட்டிருந்தாலும் அதில் தவறேதுமில்லை. சம்பந்தப்பட்ட நெறியாளரின் ஒழுக்க சீர்கேடுகள் ஊரறிந்த இரகசியம்.
ஆனால், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியற்ற நெறியாளர் மிகக் கேவலமான சாதிய வன்மத்தை கக்கினார்.
"இவன் இதற்குப் பிறகு பல பதிவுகளை போடுவான்..."
"கீழ்த்தரமான பதிவுகளை போடுகிற கீழ்சாதி இவன்!"
"சாதிக்கேற்ற குணம் தான் அவருக்கு இருக்கிறது!"
இப்படிக் கூறுவது இவர் வாழும் அவுஸ்திரேலியாவில் Racial Discrimination Act 1975 என்ற சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய மிக மோசமான இனப்பாகுபாடு காட்டும் குற்றம் ஆகும்.
இன்பத்தமிழ் வானொலியில் இவ்வாறு நெறியாளர் பிரபாகரன் பகிரங்கமாக சாதிய வன்மத்தை கக்கிய நேரம், ஒரு தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார். ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் தலைவராக காட்டிக் கொள்ளும் கஜேந்திரகுமார், தனக்கு முன்னால் நடந்த சாதிய வன்கொடுமையை கண்டும் காணாமல் கடந்து சென்றமை கண்டனத்திற்கு உரியது. இவருக்கு தமிழர்களின் இன உரிமை பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? இப்படியானவர் தான் ஜெனீவா சென்று தமிழ் மக்களுக்கு தீர்வு வாங்கித் தரப் போகிறாராம்.
பிந்திக் கிடைத்த தகவலின் படி, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக கஜேந்திரகுமாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து "ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?" என்று கேட்டிருந்தார். அதற்கு அவர் தான் அந்த நேரம் முகத்தை சுழித்தேன் என்று பதில் கூறி இருக்கிறார். இது தான் ஒரு பொறுப்புள்ள தலைவரின் பதில்? சரி, அப்போது தான் எதிர்வினை ஆற்றவில்லை. நிகழ்ச்சி முடிந்த பின்னர், அதற்கு அடுத்த நாளாவது கண்டனம் தெரிவித்திருக்கலாம் அல்லவா? இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும், இன்னமும் கஜேந்திரகுமாரிடம் இருந்தோ, அவரது கட்சியில் இருந்தோ எந்தவொரு கண்டன அறிக்கையும் வெளிவரவில்லை. இதன் மூலம் கஜேந்திரகுமார் தானும் சாதிவெறியர்களின் பக்கம் நிற்கிறேன் என்பதை மறைமுகமாக நிரூபிக்கிறார். TNPF என்பது ஒரு சாதிக் கட்சி தானென்பது மறுபடியும் நிரூபிக்கப் பட்டுள்ளது.
இந்தப் பதிவு YOU TUBE வீடியோவாகவும் பதிவேற்றப் பட்டுள்ளது:
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Sunday, November 21, 2021
துருக்கியில் ஒரு கம்யூனிஸ்ட் மேயர்!
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Wednesday, November 03, 2021
ஈழ தேச மாயையும் முஸ்லிம் தேசிய இனப் பிரச்சினையும்
திருப்பூர் குணா எழுதிய "இஸ்லாமிய தேசிய மாயைகளும் ஈழச் சிக்கலும்" நூலில் பல தவறான தகவல்கள் உள்ளன. சில இடங்களில் தமிழ் மொழி அடிப்படைவாத அல்லது தமிழ்ப்பேரினவாத மனநிலையுடன் எழுதப் பட்டுள்ளது. இந்த தகவல் முழுக்க முழுக்க தவறானது:
//இந்த நேரத்தில் இசுலாமியர்கள் தமது கல்வி மொழியாக சிங்களத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தமிழ் மொழி இசுலாமியர்களின் தாய்மொழி அல்ல என்றும் இசுலாமியத் தலைமை பிரச்சாரம் செய்தது. இசுலாமிய மாணவர்கள் பெரும்பான்மையாகக் கல்வி கற்கின்ற பாடசாலைகளில் தமிழ் அதிபர்களை நியமிக்கக் கூடாதென்றும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.//
உண்மையில் சிங்களப் பகுதிகளில் வாழும் முஸ்லிம் மாணவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பாடசாலைகளில், இன்றைக்கும் தமிழ் தான் போதனா மொழியாக உள்ளது. (ஒரு இந்து/கிறிஸ்தவத் தமிழர் கூட இல்லாத) சிங்களப் பிரதேசங்களில் வாழும் இஸ்லாமியர்கள் இன்றைக்கும் தமிழை தாய்மொழியாக கொண்டுள்ளனர். அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். தமது பிள்ளைகளை தமிழ் மொழியில் படிக்க வைக்கிறார்கள்.
நூலில் உள்ள இந்த தகவல் முழுவதும் கற்பனை. ஒரு புனையப்பட்ட கட்டுக்கதை. இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை:
//1986-இல் யாழ்ப்பாணத்தில் இஸ்லாமிய இளைஞர் அமைப்பு ஒன்று 782 உறுப்பினர்களுடன் பலமான நிலையில் இருந்துள்ளது. யாழ்ப்பாண இசுலாமியர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் அதுதான் கையாண்டு வந்திருக்கிறது. மட்டுமல்லாமல் இசுலாமிய இளைஞர்கள் எந்த தமிழீழ ஆயுதக்குழுக்களிலும் பங்குபெறக் கூடாதென்று வாய்மொழி உத்தரவும் பிறப்பித்திருந்தது. அந்த நேரத்தில் அங்கு 30-க்கும் மேற்பட்ட தமிழீழ ஆயுதக்குழுக்கள் செயற்பாட்டில் இருந்திருக்கின்றன. இவற்றில் பல இசுலாமிய இளைஞர்கள் சேர்ந்து செயல்படவும் ஆரம்பித்துள்ளனர். இது யாழ்ப்பாண இசுலாமியர் விசயத்தில் தமிழீழ ஆயுதக்குழுக்கள் தேவையின்றி மூக்கை நுழைப்பதாக கருதப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அனைத்து தமிழீழ ஆயுதக்குழுக்களுக்கும் அழைப்பு விடப்பட்டது. ஜின்னாஹ் வீதியிலுள்ள எஸ்.ஏ.சீ.நிலாம் அவர்கள் வீட்டு வளாகத்தில் நடந்த கூட்டத்தில் 36 தமிழீழ ஆயுதக்குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இசுலாமிய சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட கூட்டத்துக்கு ஹிஜாஸ் என்பவர் தலைமை தாங்கியிருக்கிறார். “முஸ்லிம் சமுதாயத்தை தமிழ் ஆயுதக்குழுக்களால் கையாள முடியாது. அதனால் முஸ்லிம்கள் குறித்த எந்தப் பிரச்சினையானாலும்; அதை இஸ்லாமிய இளைஞர் அமைப்பிடம் கையளிக்க வேண்டும். அதை அவர்களே தீர்த்து வைப்பார்கள். அத்துடன் முஸ்லிம் இயக்கங்கள் மீது எந்தத் தமிழ் ஆயுதக்குழுவும் அத்துமீறக்கூடாது. தன்னிச்சையாக செயல்படவும் கூடாது” என்று தமிழீழ ஆயுதக்குழுக்களுக்கு அறிவுத்தப்பட்டது. இதனை தமிழீழ ஆயுதக்குழுக்கள் ஏற்றுக்கொண்டு ஒப்பமிடவும் செய்தன.//
1986ம் ஆண்டு அங்கே 36 தமிழீழ இயக்கங்கள் இருக்கவில்லை. இது முழுக்க முழுக்க தவறான தகவல். 1984ம் ஆண்டு தொடக்கத்திலேயே மொத்தம் 5 இயக்கங்கள் தான் இருந்தன. 1986 ம் ஆண்டு ஏனைய இயக்கங்களை அழித்து விட்டு புலிகள் ஏகபோக உரிமை கோரினார்கள். எஞ்சிய ஈரோஸ் மட்டும் புலிகளுடன் சமரசம் செய்து கொண்டது. அத்தகைய நிலையில் ஒரு "பலமான" இஸ்லாமிய இளைஞர் அமைப்பு இருந்திருக்க சாத்தியமே இல்லை. இது முழுக்க முழுக்க ஒரு கட்டுக்கதை.
*****
திருப்பூர் குணா எழுதிய "இஸ்லாமிய தேச மாயைகளும் ஈழச் சிக்கலும்" என்ற நூல் மீதான விமர்சனம். இலங்கையில் உள்ள முஸ்லிம் தேசிய இனப்பிரச்சினை பற்றிய கிளப் ஹவுஸ் கூட்டம். பகுதி - 1
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Sunday, October 03, 2021
யாழ் வட்டுக்கோட்டையில் சாதிவெறித் தாக்குதல்!
**********
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Saturday, August 21, 2021
1953 மக்கள் எழுச்சி - இலங்கையில் வர்க்கப் போராட்டம்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Saturday, July 24, 2021
இலங்கை தொழிற்சங்க போராட்டம் - ஒரு மறைக்கப்படும் வரலாறு
- ஆசியாவிலேயே முதலாவது தொழிற்சங்கம் இலங்கையில் தான் தொடங்கியது. 1893 ம் ஆண்டு ஐரோப்பிய முதலாளிகளின் அச்சகங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கமாக ஒன்றிணைந்தனர்.
- 1) ஒழுங்கமைக்கப் படாத தொழிற்துறைகளிலும் கூட சம்பளம் நிர்ணயிப்பதற்கான குழு உருவாக்கப்பட்டது.
- 2) தனியார் நிறுவனங்கள் தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
- 3) தொழிலகங்களில் நடக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
- 4) வேலை நேர இடைவேளை, வேலை செய்யும் நேரம் ஆகியன தீர்மானிக்கப் பட்டன.
- 5) பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை கிடைத்தது. அதைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்வது தடுக்கப்பட்டது.
- 6) தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சமூக நலப் பாதுகாப்பு சலுகைகள் கிடைத்தன.
- 7) தனியார் நிறுவன முதலாளிகள் கூட தொழிலாளர் நலத்துறை அதிகாரியை கலந்தாலோசிக்காமல் பணி நீக்கம் செய்ய முடியாது.
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Thursday, July 22, 2021
1977 இனக்கலவரம்: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Wednesday, July 21, 2021
ஜகமே தந்திரம் படம் பேசும் புலி எதிர்ப்பு அரசியல்
2009 ம் ஆண்டு, புலிகள் மக்களைக் கூட்டிக் கொண்டு முள்ளிவாய்க்கால் வரை சென்றமைக்கு "அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும்" என்ற காரணம் சொல்லப் பட்டது. புலிகளின் உறுப்பினர்கள் பகிரங்கமாகவே இதைச் சொன்னதாக முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்த பலர் என்னிடம் தெரிவித்து இருந்தனர்.
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Tuesday, July 20, 2021
ஹிஷாலினி மரணம் - சுரண்டப்படும் சிறார் தொழிலாளர்கள்
- "பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும்."
- "சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது ஒரு சிறுவர் உரிமை மீறல்."