Monday, April 26, 2010

வத்திகானின் ஒரேயொரு பெண் பாப்பரசி!

உலக கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசராக ஒரு பெண் தெரிவாவது இன்று வரை நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் யோஹானா என்ற பெண் பாப்பரசி வத்திக்கானின் தலைவியாக பதவி வகித்துள்ளார். கி.பி. 855 ம் ஆண்டளவில், பாப்பரசரர் லியோ IV ன் மறைவுக்குப் பின்னர் ஒரு பெண் தெரிவானாரா? வரலாற்று ஆவணங்களில் காணப்படாத இந்த மர்மக்கதை பற்றி இதுவரை பல ஆராய்ச்சி நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அண்மையில் அது திரைப்படமாகவும் (ஜெர்மன் மொழியில்) தயாரிக்கப் பட்டது. தற்போது ஐரோப்பிய திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.



பெண் பாப்பரசர் கருதுகோளை ஆதரிப்பவர்கள், அதற்கான சான்றுகளை வத்திக்கான் அழித்து விட்டதாக வாதிடுகின்றனர். டேன் பிரவுன் போல பலர் வத்திகானை வைத்து விறுவிறுப்பான புனைகதைகளை எழுதி வருவதாக வேறு சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதே வேளை, இந்தக் கதை வேறொரு தளத்தில் வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது. "வத்திக்கான் தனது இரண்டாயிரம் ஆண்டு கால, பழமைவாத கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள வேண்டும். இப்போதாவது ஒரு பெண்ணை பாப்பரசராக தெரிவு செய்ய முன்வர வேண்டும்."

பெண் பாப்பரசர் பற்றிய நூலை இணையத்திலும் வாசிக்கலாம்:
THE FEMALE POPE: THE MYSTERY OF POPE JOAN

நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படம் குறித்த அலசல்:
sitestat

3 comments:

manjoorraja said...

இந்த வாரம் நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள்.

பாப்பரசி பற்றிய தகவலுக்கு நன்றி.

shortfilmindia.com said...

வாழ்த்துகள்

கேபிள் சங்கர்

Kalaiyarasan said...

நன்றி மஞ்சூர் ராசா, கேபிள் சங்கர்