Friday, November 04, 2011

போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு!


இயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக "இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்" என்று அழைக்க முடியுமா? ஏழாம் அறிவு எனும் திரைப்படம், "போதி தர்மர் ஒரு தமிழன்" என்பதால், தமிழர்கள் எல்லோரும் பெருமைப் பட வேண்டுமென்கிறது.

போதி தர்மன் என்ற புத்த பிக்குவின் பௌத்த மதப் பின்னணியை மறைத்து, அவனை ஒரு தமிழனாக மட்டும் பார்க்க வேண்டும் என்று கோருகின்றது. மதத்தை விட, மொழியே முக்கியம் என்று கருதும் தமிழ் இன உணர்வாளர்களுக்கு, போதி தர்மன் ஒரு தமிழ்- பௌத்தன் என்பதை ஏற்றுக் கொள்ள தயக்கம் ஏன்? தமிழ் இன உணர்வு என்ற போர்வையின் கீழ் மறைந்திருக்கும், இந்து மத உணர்வு இங்கே வெளிப்படுகின்றது.

சில வருடங்களுக்கு முன்னர் பகத் சிங் பற்றிய திரைப்படம் வெளியானது. அன்றிலிருந்து சீக்கிய தேசியவாதிகள், பகத்சிங்கை தமது நாயகனாக தூக்கிப் பிடிக்கின்றனர். பல வரலாற்று நாயகர்களின் பாத்திரம், அவர்களின் கொள்கைகளுக்கு முரணாக திரிபுபடுத்துவது உலகெங்கும் நடப்பது தான். இந்து மத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ராஜராஜ சோழன், தமிழ் தேசியவாதிகளால் மாபெரும் தமிழனாக புகழப் படுகிறான். போதி தர்மர், பௌத்த மதத்தை பரப்பிய மதகுரு என்ற உண்மை மறைக்கப் பட்டு வருகின்றது. 7 ஆம் அறிவு என்ற ஜனரஞ்சக சினிமாவின் புண்ணியத்தால், "ஒரு வீரத் தமிழனாக" மறு அவதாரம் எடுத்துள்ளார்.

தமிழர்கள் மறந்து விட்ட போதி தர்மனை அறிமுகப் படுத்தக் கிளம்பிய சினிமா, அந்த மகானின் வரலாற்றை திரிபு படுத்த வேண்டிய அவசியம் என்ன? வரலாற்றையும், நிகழ்கால கற்பனைக் கதையையும் கலந்து தயாரிப்பது சினிமாவில் வழமையானது தான். Davinci code என்ற ஆங்கிலத் திரைப்படம் கூட, அவ்வாறான கதை தான். அதிலே, வரலாற்றுக்கு இசைவாக நிகழ்கால கற்பனையை அமைத்திருப்பார்கள். ஆனால், 7 ம் அறிவு கூறும் 6 ம் நூற்றாண்டு வரலாற்றுக்கும், நிகழ்கால சம்பவங்களுக்கும் இடையில் எந்த வித தொடர்புமில்லை.

7 ஆம் ஆறிவு சினிமா பற்றி வரும் கடுமையான விமர்சனங்கள், அந்த படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 7 ம் அறிவு, ஒரு அபத்தமான கதையை வைத்து எடுக்கப் பட்டுள்ளமை அவர்களுக்கே தெரிகின்றது. அதனால் இப்போது, படத்திலே வரும் ஈழ ஆதரவு வசனங்களை மேற்கோள் காட்டி ஆதரவு தேடுகின்றனர். "தமிழீழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியதற்காக" ஜெயலலிதாவை ஆதரிக்குமாறு கோரியவர்கள் தான், இந்த நியாயத்தையும் முன் வைக்கிறார்கள்.

ஜெயலலிதா முதல் முருகதாஸ் வரை, சில வசனங்களை மட்டுமே பேசி தமிழனை ஏய்க்கலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு பெரும்பான்மை ஓட்டுகளையும், முருகதாசுக்கு பெட்டி நிறைய பணத்தையும் அள்ளிக் கொடுப்பதற்கு, குறிப்பிட்ட சில வசனங்களே போதும். இதெல்லாம் ஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து நடந்து வரும் கூத்துகள் தான். ஈழத்தில் தமிழன் செத்துக் கொண்டிருப்பான். தமிழகத்தில் அதைக் காட்டியே பிழைப்பு அரசியல் நடத்துவார்கள். 7 ஆம் அறிவு சினிமாவும், ஈழத் தமிழரின் பிணங்களைக் காட்டி காசு வசூல் பண்ணுகின்றது.

போதி தர்மரை தமது காவிய நாயகனாக கொண்டாடத் தொடங்கியிருக்கும் தமிழ் உணர்வாளர்கள்,அவர் ஒரு "தமிழ் பௌத்த பிக்கு" என்ற உண்மையை கூறுவதில்லை. ஏழாம் அறிவு திரைப்படமும் இந்த தகவலை வேண்டுமென்றே மறைத்துள்ளது. போதி தர்மர் பௌத்த மதத்தை சேர்ந்த மாமேதை என்பதாலும், சீனாவில் பௌத்த மத பிரசங்கம் செய்ததாலும் தான் உலகப் புகழ் பெற்றார். பௌத்த மதத்தின் ஒரு கிளையான, ஜென் (Zen) பிரிவை தோற்றுவித்தவரும் அவரே. இன்றைக்கும் சீனா, ஜப்பான் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் ஜென் பௌத்தர்கள் போதி தர்மரின் தத்துவ போதனைகளை கற்கின்றனர். 7 ஆம் அறிவு திரைப்படம், தமிழர்களுக்கு போதி தர்மரை அறிமுகப் படுத்துவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே, மேற்கத்திய நாடுகளில் நன்கு அறிமுகமானவர்.

போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும், அவரின் போதனைகள் அடங்கிய நூல்கள், ஆங்கிலத்திலும், பிற ஐரோப்பிய மொழிகளிலும் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இந்த நூல்கள் யாவும், மேலைத்தேய நகரங்களில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன. சீனாவில் மட்டுமல்ல, மேலைத்தேய நாடுகளில் கூட, தலைசிறந்த தத்துவ அறிஞராக போற்றப்படும் போதி தர்மரை, ஏழாம் அறிவு திரைப்படம் அவமானப் படுத்தியுள்ளது.

போதி தர்மரை குங்பூ ஆசிரியராகவும், சித்த வைத்தியராகவும் மட்டும் காட்டுகின்றது. போதி தர்மரின் போதனைகளை தேடிப் படிக்கும் தமிழன் அறிவாளியாகி விடுவான். அதன் பிறகு, ஒரு மாமேதையை தமிழகம் மறந்த காரணம் என்ன என்று ஆராயத் தொடங்கி விடுவான். அதற்கு இடம் கொடுக்கலாமா? தமிழனின் ஆறாவது அறிவை மழுங்கடிப்பது தானே, ஏழாவது அறிவு தயாரித்தவர்களின் நோக்கம்? புத்திசாலித் தமிழன் ஆபத்தானவன். அதனால், சிந்திக்கும் திறனன்ற "வீரத் தமிழன்" தான் அவர்களுக்கு தேவை.

"போதி தர்மரை எத்தனை தமிழர்களுக்கு தெரியும்?" இந்தக் கேள்வியை ஒரு ஆவணப் படத்தில் வருவது போன்று, திரைப் படத்தில் கேட்கின்றார்கள். தமிழர்கள் எல்லோரும் தெரியாது என்று கையை விரிக்கிறார்கள். அதே நேரம், சீனர்களுக்கு நன்கு தெரிந்துள்ளது. அதிலும் "ஒ யா.. குங்பூ மாஸ்டர்" போன்ற பதில்களை மட்டும் பதிவு செய்கிறார்கள். மேற்கொண்டு பேசுவதற்கு சீனர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. அதற்கு இடம் கொடுத்தால், சீனர்களை தமிழர்களை அழிக்க தேடி வரும் வில்லன்களாக காட்ட முடியுமா? விசாரணையை அத்துடன் நிறுத்திக் கொண்டு, சூர்யாவின் சர்க்கஸ் வித்தை, ஸ்ருதிஹாசனின் மரபியல் ஆராய்ச்சி என்று கதை நகருகின்றது.

சரி, அவர்கள் தான் விசாரிக்கவில்லை, ஒரு சராசரித் தமிழனுக்கு தேடல் இருக்காதா? அந்த அளவுக்கு தமிழன் புத்திசாலி இல்லை என்று தெரியாமலா, முருகதாஸ் ஏழாம் அறிவு படம் எடுத்திருப்பார்? முதலில், போதி தர்மர் காஞ்சிபுரத்தில் பிறந்தார் என்ற ஒற்றைத் தகவலை வைத்தே, அவரை தமிழன் என்று டைரக்டரால் நம்ப வைக்க முடிந்திருக்கிறது. போதி தர்மர், பௌத்தராக மதம் மாறிய பிராமணர் என்று, அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"பார்ப்பனர்கள் என்போர் வடக்கே இருந்து வந்த ஆரியர்கள்," என்ற திராவிட கற்பிதங்களினால் உருவான தமிழ் தேசியம், பிராமண போதி தர்மரை தமிழர் என்று நம்புவது எங்கேயோ இடிக்கிறது. ஏழாம் அறிவு திரைப்படம் கூறுவது போல, "போதி தர்மர் ஒரு பல்லவ இளவரசர்" என்ற கூற்று எங்கேயும் நிரூபிக்கப் படவில்லை. இதனை வெறுமனே சினிமாக்காரர்களின் வரலாற்றுத் திரிபாக மட்டும் கருத முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள் திணிக்கும் ஆதிக்க அரசியலும் அதனுள் அடங்கியுள்ளது.

ஏழாம் அறிவு திரைப்படத்தில், போதி தர்மரின் மரபணு கொடுத்து உயிர்ப்பிக்கப் பட்ட கதாநாயகன் பேசும் வசனம் ஒன்று : "மதமாற்றம், இனமாற்றம் காரணமாக தமிழர்கள் தமது அறிவியல் செல்வத்தை இழந்து விட்டார்கள்." போதி தர்மர் காலத்து அறிவியல் பிறகு எப்படி காணாமல் போனது? அதனை யார் அழித்தார்கள்? தமிழர்களை யார் மதமாற்றம், இனமாற்றம் செய்தார்கள்? மரபணுவால் உயிர்ப்பிக்கப் பட்ட போதி தர்மரின் மறு அவதாரத்திற்கு இந்த உண்மைகள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கின்றது. ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் புத்த மதம் பரவியிருந்தது.

தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் பெரும்பான்மை தமிழ் மக்களின் மதங்களாக இருந்தன. தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் ஐம்பெரும் காப்பியங்களில், சிலப்பதிகாரம் தவிர்த்து மற்ற நான்கும் பௌத்த மதப் பின்னணியில் எழுதப் பட்டுள்ளன. ஐரோப்பியர்கள் வானாந்தரங்களில் வாழ்ந்த காலத்தில், பீகாரில், நாலந்தா பல்கலைக்கழகம் இயங்கிக் கொண்டிருந்தது. (கி.மு. 5 - கி.பி. 1193) அதில் கல்வி கற்பதற்கு சீனாவில் இருந்தும் மாணவர்கள் வந்தனர். ஏழாம் அறிவு திரைப்படத்தில் காட்டப்படும் காஞ்சிபுரம் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, நாலந்தா பல்கலைக்கழகமும் பௌத்த மத மேற்படிப்புக்காக உருவாக்கப் பட்டவை. அங்கே அறிவியல் பாடங்களும் போதிக்கப் பட்டன.

வடக்கே இஸ்லாமியரான துருக்கிய இனத்தவர்களின் படையெடுப்பினால், நாலந்தா பல்கலைக்கழகமும் அதன் அறிவியல் செல்வங்களும் அழிக்கப் பட்டன. தெற்கில், இந்துக்களான பல்லவர்களின் படையெடுப்பினால் காஞ்சிபுரத்தின் அறிவுச் செல்வங்கள் அழிக்கப் பட்டன. பல்லவர்கள் பௌத்த, சமண மடாலயங்களை தீ வைத்துக் கொளுத்தினார்கள். சமணக் கோயில்களும், பௌத்த விகாரைகளும் இந்துக் கோயில்களாக மாற்றப் பட்டன. பௌத்த, சமண மதங்களை சேர்ந்த தமிழர்கள், பலவந்தமாக இந்துக்களாக மதமாற்றம் செய்யப் பட்டனர். மதம் மாற மறுத்தவர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

சைவ மத நாயன்மார்களான சம்பந்தரும், சுந்தரரும், திருநாவுக்கரசரும் கட்டாய மதமாற்றத்திலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்கள். தமிழ் பேசும் பௌத்தர்களையும், சமணர்களையும் கழுவேற்றிக் கொன்ற கதைகளை தேவாரங்களிலும் பாடி வைத்துள்ளனர். இந்தக் கொடுமைகள் எல்லாம் பல்லவர் காலத்தில் நடந்தேறின.

தமிழர்கள் தமது தொன்மையான அறிவியலை இழந்த வரலாறு இது தான். காஞ்சிபுரத்தில் பௌத்த மத தமிழர்கள் வளர்த்த அறிவுச் செல்வத்தை அழித்த பல்லவ அரச வம்சம்சத்தில், போதி தர்மர் எப்படிப் பிறந்திருக்க முடியும்? இது ஒரு மாபெரும் வரலாற்று மோசடி அல்லவா? தமிழர்களின் எதிரிகளை நல்லவர்களாக காட்டுவதற்காக வரலாற்றை திரிக்கும் ஏழாம் அறிவு, ஈழத் தமிழர்களுக்காக உருகுகிறது. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை தான் ஞாபகம் வருகின்றது.

டாவின்சி கோட் திரைப்படம் எடுத்தவர்கள், கிறிஸ்தவ நாட்டை சேர்ந்தவர்கள். அதன் பெரும்பான்மையான பார்வையாளர்களும் கிறிஸ்தவர்கள் தான். இயேசுவின் புதல்வி பற்றி கற்பனை கலந்து படம் தயாரிக்கும் தைரியம் அவர்களுக்கு இருந்தது. டாவின்சி கோட் தயாரித்தவர்கள் நினைத்திருந்தால், நிகழ்கால அரசியளுக்கேற்றவாறு முஸ்லிம்களை வில்லன்களாக காட்டியிருக்கலாம். ஆனால், அந்த திரைப்படத்தின் வில்லன்கள் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர்கள். கிறிஸ்தவ கடும்போக்காளர்களின் எதிர்ப்பை மீறி, திரைப்படத்தை வெளியிட்டார்கள்.

ஏழாம் அறிவு தயாரித்தவர்களுக்கு, அந்த தைரியம் கிடையாது. மரபணு கொடுத்து உயிர்ப்பித்த நவீன போதி தர்மன் யாரை பழிவாங்கத் துடித்திருப்பார்? தமிழ்நாட்டில் பல்லவர்களின் வாரிசுகளை தேடிச் சென்று வேட்டையாடியிருப்பார். போதி தர்மன் எதற்காக, தனக்கு இன்றைக்கும் தெய்வ ஸ்தானம் வழங்கி கௌரவிக்கும் சீனர்களுடன் முரண்பட வேண்டும்?

திரைப்படத்தில் சீன வில்லனின் ஹிப்னோடிச வித்தைகளை கண்டு வியந்த சூர்யாவுக்கு, சுருதிஹாசன் கூறுவார்: "இதுவும் தமிழர்களின் நோக்குவர்மம் கலை. போதிதர்மரால் கொண்டு செல்லப்பட்டது." இதைக் கேட்ட சூர்யா: "எப்பேர்ப்பட்ட துரோகம்" என்று கொதிப்பார். யார் யாருக்கு துரோகம் செய்தார்கள், என்பது மரபணுவால் உயிர்ப்பிக்கப்பட்டவருக்கு தெரியாதா?

களரி (குங்பூ), நோக்குவர்மம் (ஹிப்னோடிசம்) போன்ற தமிழரின் தொன்மையான கலைகள், இந்து மன்னர்களான பல்லவர்களின் காலத்தில் தானே புறக்கணிக்கப் பட்டன? அதனால் தானே, இன்றுள்ள தமிழர்களுக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை? அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், போதி தர்மர் சொல்லிக் கொடுத்த கலைகளை சீனர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையில்லையா? போதி தர்மர் தென்னிந்தியாவில் இருந்து வந்த பௌத்த துறவி என்பதை, சீனர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை.

போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் சீனத் திரைப்படத்தை இணையத்திலேயே பார்வையிடலாம்.(Bodhidharma - The Master of Zen) சீனத் திரைப்படத்தில், தென்னிந்தியாவில் இருந்து வந்த போதி தர்மர், தியானத்தையும், குங்க்பூ தற்காப்புக் கலையையும் போதிப்பது விபரமாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இதற்கு மாறாக, ஏழாம் அறிவு என்ற தமிழ்த் திரைப்படம், போதி தர்மரின் வரலாற்றைத் திரித்து அவரை அவமதிக்கிறது. சுருக்கமாக சொன்னால், "தமிழனுக்கு துரோகமிழைக்கும் தமிழனை வீரனாகக் காட்டுவது" தான் ஏழாம் அறிவின் திரைக்கதை.

ஏழாம் அறிவு திரைப்படத்தின் இறுதியில், சூர்யா தமிழனின் உணர்வைத் தூண்டும் வசனங்களை அடுக்குவார். யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததால், தமிழர்களின் அறிவுடைமை இழக்கப் பட்டது. உண்மை தான். ஆனால், போதி தர்மனுக்கு, 6 ம் நூற்றாண்டில் தான் படித்த காஞ்சிபுரம் நூலகம் எரிக்கப்பட்ட வரலாறு தெரியவில்லை. யாழ்ப்பாண நூலகத்தை எரித்த சிங்கள இனவெறியர்களினதும், காஞ்சிபுரம் நூலகத்தை எரித்த இந்து மதவெறியர்களினதும் நோக்கம் ஒன்றாகவே இருந்துள்ளது.

ஏழாம் அறிவு எடுப்பதற்கு முன்னர், போதி தர்மனை பற்றி ஆராய்ச்சி செய்த டைரக்டர் முருகதாசுக்கு இது தெரியாமல் இருக்க முடியாது. அதையெல்லாம் சொன்னால், தணிக்கைக் குழுவினர் கத்திரிக்கோல் போட்டு விடுவார்களா? "பக்கத்து நாட்டில் தமிழனை அழித்த ஒன்பது நாடுகளின் துரோகம்" பற்றி சொல்லத் தெரிந்தவர்களுக்கு, தைரியமாக அந்த நாடுகளை பெயரிடத் தெரியவில்லை. வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் களத்தில் நின்றுள்ளனர். செய்மதிப் படங்களை வழங்கியுள்ளனர். ஈழத் தமிழர்கள் இந்தியாவை தமது தாய்நாடு போன்று நம்பினார்கள். ஒருவர் எமது நம்பிக்கைக்கு எதிராக நடப்பது தான் துரோகம்.

ஏழாம் அறிவு, இந்திய அரசு மீதான விமர்சனங்களை கவனமாகத் தவிர்க்கின்றது. அதற்கு காரணம் இல்லாமலில்லை. ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததும், முப்பது வருடங்களின் பின்னர் அதனை முடித்து வைத்ததும் இந்தியா தான். "இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை என்பதாலும், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தொப்புள்கொடி உறவுகளாலும்," இந்தியா தமது பக்கம் நிற்கும் என்று ஈழத்தமிழர்கள் நம்பினார்கள். உண்மையில், இந்திய மேலாதிக்க நலன்களுக்காக, ஈழத்தமிழர்கள் பொம்மைகளாக ஆட்டி வைக்கப் பட்டனர். சீனாவுடனான வர்த்தகப் போட்டியில், ஈழத்தமிழர்களை இந்தியா சார்பானவர்களாக தொடர்ந்து வைத்திருக்கவே விரும்புகின்றது. தமிழகத்தில் சில அதிரடி அரசியல்வாதிகளும், திரையுலக பிரமுகர்களும் பொம்மலாட்டக் காரர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

ஹாலிவூட்டில் அரசியல் கலந்த ஜனரஞ்சக திரைப் படங்கள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையுடன் எடுக்கப் படுவது இரகசியமல்ல. ஏழாம் அறிவு புகட்டும் தமிழ் இனவுணர்வு சாயம் படத்திலேயே வெளுத்து விடுகின்றது. புத்தரை விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றாக திணிக்கத் தெரிந்த இந்து மதமல்லவா? போதி தர்மரை காட்டி, தமிழனின் மூளைக்குள் இந்துத்துவா சிந்தனை திணிக்கப் படுகின்றது. ஏழாம் அறிவு வெறும் பொழுதுபோக்குப் படமல்ல. திரைப்படத்தைப் பார்க்கும் கோடிக்கணக்கான தமிழர்களை வசியப்படுத்தி, இந்திய மேலாதிக்க திட்டங்களுக்கு ஆதரவாக வென்றெடுக்கும் உள்நோக்கம் கொண்டது. அது தான் "நோக்கு வர்மம்". ஒரு திரைப்படம் மூலம், தமிழர்களின் கண்களைக் கட்டும் கண்கட்டி வித்தை.

***************
முன்னைய பதிவு : - "ஏழாம் அறிவு" திரைப்படம் மறைக்கும் உயிரியல் போர் வரலாறு

108 comments:

Krishnavel TS said...

வரலாறு முழுமையாக படிக்காத ஒரு சுத்த அரை வேக்காட்டுத்தனமான (௭ ஆம் அறிவு குழுவினை விட௦) பேத்தல்

அஹோரி said...

தல,
பதிவ முழுசா படிகல. ஒரே வழ வழ . நறுக்குன்னு எழுது தல.
ஒன்னு புரிஞ்சிக்கணும் மொதல்ல,
இந்து மதம் அனைத்து மதங்களையும் தன்னுள் அரவணைத்த மதம். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் புத்தரும் ஒரு அவதாரம். இந்து மதத்தை தொடும் முன் தெளிந்த அறிவு தேவை.

அடுத்தது,
பதிவில் இருக்கும் படி முருகதாஸ் எதையும் மறைக்க வில்லை. முருகதாஸ் கருத்துகளை ஆதரிச்சே ஆகவேண்டியது காலத்தின் கட்டாயம்.

கடைசியா,
தமிழ வச்சி காசு பார்த்த ஜென்மத்த திட்டனும்னா , நீ(ங்க) திட்ட வேண்டிய ஒரே ஆள் கருணாநிதி மட்டுமே.

வர்ர்ட்டா

தமிழ் செல்வா said...

bodhidharmar thamizhar enra varalaatru unmaiyai yen maraikka ninaikkireerhal. naan kalaiyakam thodarnthu vaasikkiren. unkalathu samooka pankalippu unnathamaanathu, aala akala paarvai udaiyathu. aanaal bodhidharmanil sarukkiyathu therikirathu. varalaatru aayvukalil avar thamilara. ki.pi. ainthaantham nootraandil then indiavil thamil mozhi pesiyavre paravi irunthanar. athu akkaala thamizh. yesu aramaik mozhi pesiya arabu yoodhare,

சீனு said...

//போதி தர்மரை குங்பூ ஆசிரியராகவும், சித்த வைத்தியராகவும் மட்டும் காட்டுகின்றது. போதி தர்மரின் போதனைகளை தேடிப் படிக்கும் தமிழன் அறிவாளியாகி விடுவான். அதன் பிறகு, ஒரு மாமேதையை தமிழகம் மறந்த காரணம் என்ன என்று ஆராயத் தொடங்கி விடுவான். அதற்கு இடம் கொடுக்கலாமா? தமிழனின் ஆறாவது அறிவை மழுங்கடிப்பது தானே, ஏழாவது அறிவு தயாரித்தவர்களின் நோக்கம்? புத்திசாலித் தமிழன் ஆபத்தானவன். அதனால், சிந்திக்கும் திறனன்ற "வீரத் தமிழன்" தான் அவர்களுக்கு தேவை.//

அபத்தம்.

மாசிலா said...

Thanx sharing this excellent post.

R.Puratchimani said...

நல்லா எழுதிரிங்க
//இயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக "இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்" என்று அழைக்க முடியுமா? ஏழாம் அறிவு எனும் திரைப்படம், "போதி தர்மர் ஒரு தமிழன்" என்பதால், தமிழர்கள் எல்லோரும் பெருமைப் பட வேண்டுமென்கிறது. போதி தர்மன் என்ற புத்த பிக்குவின் பௌத்த மதப் பின்னணியை மறைத்து, அவனை ஒரு தமிழனாக மட்டும் பார்க்க வேண்டும் என்று கோருகின்றது. மதத்தை விட, மொழியே முக்கியம் என்று கருதும் தமிழ் இன உணர்வாளர்களுக்கு, போதி தர்மன் ஒரு தமிழ்- பௌத்தன் என்பதை ஏற்றுக் கொள்ள தயக்கம் ஏன்? தமிழ் இன உணர்வு என்ற போர்வையின் கீழ் மறைந்திருக்கும், இந்து மத உணர்வு இங்கே வெளிப்படுகின்றது//

இதுபோல் இனிமேல் ஹிட்லர் ஒரு கிருத்துவன், பெரியார் ஒரு இந்து என்று சொல்வீர்களா?

Ampan said...

இந்துக்கள் மட்டுமா தமிழர்? இலவசம் என்றால் கண்டபடி எழுதிறதா?

vignesh said...

ஆனால் போதிதர்மர் புத்தரை வணங்கும் காட்சி ஒன்று போதிதர்மர் வரும் காட்சிகளில் வருகிறது... அவர் பெளத்த மதத்தை சேர்ந்தவர் என்பதை மறைக்கவேண்டும் என்ற நோக்கம் இருந்தால் இந்த காட்சி படத்தில் வந்திருக்காது....இது என்னதான் போதிதர்மறை மையமாக வாய்த்த கதையாக இருந்தாலும், அவரை பற்றிய ஆவன படம் அல்ல.... எனினும் தமிழ் மக்களுக்கு ஏற்ப அந்த வகையான தமிழ் உணர்வுகளை கொஞ்சமாவது பரப்ப முயன்றுள்ளார் இயக்குனர்... அவர் தமிழ் நாட்டில் பிறந்துள்ளார், அதுவும் ப்ராம்மனறாய் பிறந்துள்ளார் என்றால் கண்டிப்பாக தமிழராக தான் இருந்திருப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை... ... அவர் தமிழ் பேசும் நாட்டில் மட்டும் பிறக்கவில்லை, தமிழ் நாட்டில் அதுவும் காஞ்சிபுரத்தில் பிறந்திருக்கிறார் என்ற பிறகும் அவர் தமிழற என்ற கேள்வி வியப்பாக இருக்கிறது... அவர் தமிழர் என்ற உண்மை " Shao Lin temple" லையே பதிக்க பதிக்க பட்டுரிக்கிறது... வரலாறு முக்கியம் அமைச்சரே....!!!!

Vesta vijay said...

point ku vanga boss..

இளங்கோ சிதம்பரம் said...

இந்தப் பதிவை யாரோ ஒருவர் ஃபேஸ்புக்கில் எனக்கு அனுப்பியதால் படிக்க நேர்ந்தது. என்ன ஒரு பேத்தல்!!!
உண்மையிலேயே போதி தருமர் யாரென்று தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு தெரியாது, அவர் பௌத்தர் என்பதால் மழுங்கடிக்கப்பட்டது என்பது உங்கள்து கற்பனை.

எந்த ஒரு மதமும் அரசியலிலோ மன்னராட்சியிலோ ஈடுபட்டால் அதற்கு அந்த நாட்டில் வரவேற்ப்பு இருக்காது. இருந்தாலும் அது விரைவில் அழித்து போகும். அதுவே பௌத்தத்திற்கு தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்ப்பட்டது. அதுவே இலங்கையிலும் மற்ற எல்லா பௌத்த மதம் சார்ந்த நாடுகளிலும் நாம் காணப்போகும் உண்மை.

பல்லவர்கள் பௌத்தர்களோடு உடன்பட்டு வாழ்ந்தார்கள் என்பதற்கு மகாபலிபுரத்தில் பல சான்றுகள் உள்ளன. உங்கள்து டார்வின்சி கோட் படத்தின் மேட்கோள் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆக, ஒரு மதமோ படமோ தன்னை தானே தரக்குறைவாகவோ அல்லது அது தன் குறைகளை ஒத்துகொள்வதாகவோ இருந்தாலே அது நல்ல படம். அது தானே உங்கள் கொள்கை?

டார்வின்சி கோடில் சொல்லப்பட்டது உண்மையென பல வரலாற்று பதிவகள் அதை உறுதிப்படுத்துகின்றன. வாடிகனும் ஐரோப்பிய நாடுகளின் அரசியலில் கோலோச்சியதால் வந்த வினை தான் அது - பௌத்தமும் அப்படியே. இந்து மதம் ராஜாங்க விஷ்யங்களி தலையிடவே இல்லை அப்படி இருக்க யாரும் யாரையும் கொன்று தான் அதை வளர்க்க வேண்டும் என்பதில்லை.

தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் மேல் அனுதாபம் உண்டு. ஆனால் எப்பொதுமே இலங்கை தமிழனுக்கு அவன் மட்டும் தான் சுத்தமான அறிவுப்பூர்வமான தமிழன் என்ற மிதப்பு என்றுமே உண்டு - தமிழ்நாட்டு தமிழர்களை வசைபாடுவதே உங்களது வாடிக்கை. உங்களது ஏழாம் அறிவை கண்டதையும் துப்பாமல் ஆதாரங்களோடு உள்ள விஷயங்களில் ஈடுபடுத்துங்கள்!

M. Paandian said...

ஆசிரியரே, நீங்களும் செய்ய மாட்டிங்க செய்றவைங்களையும் விடமாடிங்க.

நொட்டை சொல்றதுக்கு ஒரு Blog-கு உங்களுக்கு. போங்கப்பா போங்கப்பா போய் பிள்ளை குட்டிங்கள படிக்கவைங்க.

anandkamal said...

Bodhi dharmar oru Tamizhan/Indian enbadhai edharkaaga china maraithadhu ?????????????????
DHAAMU endru peyarai matriyadhan vullartham enna..?????
Adhai kandu pidithu soliya murugadaasai edharku kurai solgureergal endru enaku theriyavillai......
panathirkaaga indha padam endraal adhai naan voppu kolla maaten,murugadaas 1000 kadhaigal eludhuvaar...

Kalaiyarasan said...

//ஆனால் போதிதர்மர் புத்தரை வணங்கும் காட்சி ஒன்று போதிதர்மர் வரும் காட்சிகளில் வருகிறது... அவர் பெளத்த மதத்தை சேர்ந்தவர் என்பதை மறைக்கவேண்டும் என்ற நோக்கம் இருந்தால் இந்த காட்சி படத்தில் வந்திருக்காது....//

போதி தர்மர் சீனாவுக்கு போகிற வழியில் பௌத்த மதத்தில் சேர்வதைப் போல காட்டியிருக்கிறார்கள். சீனாவிலும் அவர் இந்துவாகவே வாழ்ந்தார் என்று காட்ட முடியுமா? படத்தில் வரும் சூர்யாவின் போதி தர்மர் வேடம், ஒரு இந்து சந்நியாசியின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றது. உங்களுக்கு தெரிந்த வரையில், புத்த பிக்குகள் அப்படியா இருப்பார்கள்?

இளங்கோ சிதம்பரம் said...

//போதி தர்மர் சீனாவுக்கு போகிற வழியில் பௌத்த மதத்தில் சேர்வதைப் போல காட்டியிருக்கிறார்கள். சீனாவிலும் அவர் இந்துவாகவே வாழ்ந்தார் என்று காட்ட முடியுமா? படத்தில் வரும் சூர்யாவின் போதி தர்மர் வேடம், ஒரு இந்து சந்நியாசியின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றது. உங்களுக்கு தெரிந்த வரையில், புத்த பிக்குகள் அப்படியா இருப்பார்கள்?//

நீங்கள் நிஜமாகவே உலக் நடப்புகள் தெரியாதவரா அல்லது ஒரு வாதத்திற்காக ஏதேதோ சொல்கிறீர்களா? ஒவ்வொரு முறை இலங்கை கிரிக்கெட் அணி வேறொரு நாட்டிற்கு பயணம் போகும் போதும் ஒரு (ஒரே பிஃகு) புத்த பிஃகு எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் கயிறு கட்டி விடுவார். அவர் உடுத்தியிருக்கும் உடையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அல்லது 2000 வருடங்களுக்கு முன்பு பிஃகுகளின் ஆடை அலங்காரம் தங்கள் அகக்கண் முன் விரிந்ததா?

Kalaiyarasan said...

//எந்த ஒரு மதமும் அரசியலிலோ மன்னராட்சியிலோ ஈடுபட்டால் அதற்கு அந்த நாட்டில் வரவேற்ப்பு இருக்காது. இருந்தாலும் அது விரைவில் அழித்து போகும்.//

அப்படியா? இந்து மதமோ, அல்லது கிறிஸ்தவ மதமோ அரசியலிலும், மன்னராட்சியிலும் ஈடுபடவே இல்லையா? அவையெல்லாம் அழிந்து விட்டனவா? அவற்றிற்கு நாட்டில் வரவேற்பு கிடையாதா?

//பல்லவர்கள் பௌத்தர்களோடு உடன்பட்டு வாழ்ந்தார்கள் என்பதற்கு மகாபலிபுரத்தில் பல சான்றுகள் உள்ளன. //

சிறிலங்காவில் சிங்கள அரசும் இது போன்ற "சான்றுகளை" வைத்திருக்கின்றனவே? ஒரு ஆக்கிரமிப்பு போருக்குப் பின்னர் எஞ்சிய மக்கள் உடன்பட்டு வாழத் தானே வேண்டும்? வேறு வழி என்ன? அந்த சான்றுகளை பல்லவர்கள் தானே குறித்து வைத்திருப்பார்கள்? அவர்கள் தாங்கள் நடத்திய இனப்படுகொலைகளை எல்லாம் எழுதுவார்களா?

//இந்து மதம் ராஜாங்க விஷ்யங்களி தலையிடவே இல்லை அப்படி இருக்க யாரும் யாரையும் கொன்று தான் அதை வளர்க்க வேண்டும் என்பதில்லை. //

எல்லா மத அடிப்படைவாதிகளும், இவ்வாறு தான் தங்களுடைய மதம் அன்பை மட்டுமே போதிக்கிறது, ராஜாங்க விடயங்களில் தலையிடுவதில்லை என்று புளுகிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அதற்கு நேர்மாறானதாக இருக்கிறது. நீங்கள் ஒரு இந்து என்பதற்காக அந்த மதத்தின் பெயரால் நடந்த இனப்படுகொலைகளை ஆதரிக்க வேண்டுமென்ற அர்த்தமில்லையே?

//தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் மேல் அனுதாபம் உண்டு. ஆனால் எப்பொதுமே இலங்கை தமிழனுக்கு அவன் மட்டும் தான் சுத்தமான அறிவுப்பூர்வமான தமிழன் என்ற மிதப்பு என்றுமே உண்டு - தமிழ்நாட்டு தமிழர்களை வசைபாடுவதே உங்களது வாடிக்கை.//

ஏழாம் அறிவு திரைப்படம் இந்திய வரலாற்றுக் கதையை வைத்து எடுக்கப் பட்டுள்ளது. இந்திய வரலாறு பற்றிய விமர்சனத்தை இந்தியத் தமிழன் மட்டுமே முன்வைக்கலாம், இலங்கைத் தமிழனுக்கு அந்த உரிமை கிடையாது என்று கூறுகின்றீர்களா? "ஈழத்தமிழர்கள் இப்படித் தான் அரசியல் நடத்த வேண்டும்." என்று தினசரி பாடமெடுக்கும் தமிழக அரசியல் குருக்களின் நாட்டாண்மை குறித்து உங்கள் கருத்தென்ன?

Kalaiyarasan said...

//நீங்கள் நிஜமாகவே உலக் நடப்புகள் தெரியாதவரா அல்லது ஒரு வாதத்திற்காக ஏதேதோ சொல்கிறீர்களா? ஒவ்வொரு முறை இலங்கை கிரிக்கெட் அணி வேறொரு நாட்டிற்கு பயணம் போகும் போதும் ஒரு (ஒரே பிஃகு) புத்த பிஃகு எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் கயிறு கட்டி விடுவார். அவர் உடுத்தியிருக்கும் உடையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? //


நீங்கள் தொலைக்காட்சியில் கிரிக்கட் விளையாட்டுப் போட்டியின் போது மட்டுமே புத்த பிக்குகளை பார்த்திருக்கிறீர்கள் என்று புரிகின்றது. நான் பல ஆண்டுகள் கொழும்பு நகரில் வாழ்ந்தவன். நான் இதுவரையில் எந்தவொரு பிக்குவையும் சூர்யாவின் போதிதர்மர் தோற்றத்துடன் காணவில்லை. புத்த பிக்குகள் எல்லோரும் மொட்டையடிக்கப்பட்ட தலையுடன், தாடி, மீசை இல்லாமல், காவி உடையுடன் காணப்படுவார்கள். பௌத்த சங்கத்தில் துறவியாக சேரும் ஒவ்வொருவருக்கும் அது கட்டாயம். நீங்கள் ஒரு தடவை இலங்கை சென்று பார்த்து விட்டு வாருங்கள். கொஞ்சம் அயல் நாட்டு நடப்பாவது தெரியட்டும்.

Jega said...

இதே படத்தை ஹாலிவூட்ல எடுத்திருந்தா ஆஹா ஓஹோ என்பாய்ங்க. நாம எடுத்தா சவுண்டு குடுப்பாய்ங்க. ஒரு தமிழனோட முயற்சிய இன்னொரு தமிழன் சப்போட் பண்றதில்ல. இந்தப் படத்தை ஒரு சீனன் பாத்தா, கண்டிப்பா நல்ல காமெண்ட் குடுப்பான். 

இளங்கோ சிதம்பரம் said...

//அப்படியா? இந்து மதமோ, அல்லது கிறிஸ்தவ மதமோ அரசியலிலும், மன்னராட்சியிலும் ஈடுபடவே இல்லையா? அவையெல்லாம் அழிந்து விட்டனவா? அவற்றிற்கு நாட்டில் வரவேற்பு கிடையாதா?//

இந்தியாவில் அவ்வாறு கோலோச்சிய மதங்கள் அழிந்து விட்டன. தங்கள் நாட்டில் இன்னும் தான் இன்னும் புத்த பிக்குகள் செல்வாக்கோடு இருக்கிறார்கள். கிறிஸ்தவ மதம் எங்கெல்லாம் ராஜாங்க விஷயத்தில் தலையிட்டதோ அங்கு அதன் வீரியம் குறைந்தபின் தான் அது கோலோச்சியது (உதாரணம்: இத்தாலி). உங்கள் இனப்படுகொலைக்கு காரணமே புத்த மதத்தவர்கள் தான். இந்து மதம் - Is a way of life (வாழ்க்கைத் தத்துவம்), அதனால் யாரையும் மதமாற்றம் செய்யும் வழியேயில்லை. நான் இந்து மதத்தில் குறைகளே இல்லை என்று சொல்ல மாட்டேன் ஆனால் நீங்கள் கூறும் குறை இல்லை என்று மட்டும் ஆணித்தரமாக சொல்ல முடியும். நீங்கள் இந்துவாக வேண்டுமானால் அந்த முறைப்படி வாழ்ந்துவிட்டு போங்கள் - எந்த ஐயரும் வந்து உங்களுக்கு குடமுழுக்கு செய்து மாற்றியதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

//சிறிலங்காவில் சிங்கள அரசும் இது போன்ற "சான்றுகளை" வைத்திருக்கின்றனவே? ஒரு ஆக்கிரமிப்பு போருக்குப் பின்னர் எஞ்சிய மக்கள் உடன்பட்டு வாழத் தானே வேண்டும்? வேறு வழி என்ன? அந்த சான்றுகளை பல்லவர்கள் தானே குறித்து வைத்திருப்பார்கள்? அவர்கள் தாங்கள் நடத்திய இனப்படுகொலைகளை எல்லாம் எழுதுவார்களா? //
ஏனய்யா வரலாற்றை தங்களது இப்போதைய நிலையோடு ஒப்பிட்டு பார்க்கிறீர்கள். இப்பொழுது சிங்களவன் அப்படி செய்தால் அதை எழுதுவதற்கு உங்களைப் போன்றோர் இருக்கிறீர்கள், அதே போல எங்கெல்லாம் ஒரு மதமோ ஒரு இனமோ ஒடுக்கப்படுகிறதோ அதன் எஞ்சியிருப்பவர்கள் ஏதாவது தடங்களை அதை பற்றிய விமர்சனங்களி விட்டு செல்வார்கள். இப்போது நீங்கள் செய்வது போல.. நீங்கள் சொல்லும் இந்துக்கள் இனப்படுகொலை செய்ததற்கு சான்றுகள் ஆதாரம் என்ன? அப்படி எல்லாவற்றையுமே அழித்துவிடத்தான் முடியுமா.. யூதர்களுக்கு இழைத்த அநீதி என்ன உலகிற்கு தெரியாமலேயேவா போய்விட்டது?

//எல்லா மத அடிப்படைவாதிகளும், இவ்வாறு தான் தங்களுடைய மதம் அன்பை மட்டுமே போதிக்கிறது, ராஜாங்க விடயங்களில் தலையிடுவதில்லை என்று புளுகிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அதற்கு நேர்மாறானதாக இருக்கிறது. நீங்கள் ஒரு இந்து என்பதற்காக அந்த மதத்தின் பெயரால் நடந்த இனப்படுகொலைகளை ஆதரிக்க வேண்டுமென்ற அர்த்தமில்லையே? //

எந்த ஒரு உன்மையான (அவன் எந்த மதத்தவனாகவும் இருக்கட்டும்) "மனிதனும்" இனப்படுகொலைகளை ஆதரிக்க மாட்டான். அதை அவன் மதமே செய்திருந்தாலும். உங்களிடம் கேட்பது நீங்கள் அள்ளித்தெளிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் என்ன. ஆதாரம் கேட்பவர்களை எல்லாம் மதவாதிகளாக்கும் "திராவிட கழக" குணம் உங்களுக்கும் இருக்கிறது.

தமிழக அரசியல் தலைவர்களை தமிழ்க மக்களே கண்டுகொள்ளாத போது அவர்களை நினைத்தும் அவர்கள் கூற்றையுமே தினம் தினம் நினைத்து மொத்த தமிழ் மக்க்ளையும் எடைபோடும் உங்களை என்ன சொல்வது. தமிழ் மக்கள் - இந்துக்களோ, முஸ்லீம்களோ யாரோ அவர்களது ஆதரவு இலங்கை தமிழர்களுக்கு உண்டு. ஆனால் எங்கள் சுயநல் தலைவர்களையும் பண்த்தாசை பிடித்த திரைப்படங்களையும் வைத்து எங்கள் எடைபோட வேண்டாம் - எங்கள் மதங்களையும் தான்.

Shan said...

The name Bodhidharma clearly depicts that he is a non hindhu and the time frame mentioned in the movie is referred as 'Kalapirar' kalam in tamil during which tamil nadu was practising budhisim. What is precisely your issue that u have with this movie?

இளங்கோ சிதம்பரம் said...

விவாதம் உடையைப் பற்றியது மட்டுமே. சினிமா ஒரு வியாபார ஊடகள் - வரலாற்று சிதைவு என்பது புத்தககளிலும், சினிமாக்களிலும் சாதாரணம். ஒவ்வொரு வருடம் கடக்கும் போதும் வரலாறு திரிகிறது. ஆக உங்களுக்கும் எனக்கும் பிக்குகள் அப்போது எப்படி இருந்தார்கள் என்பது தெரியாதபோது அதைப் பற்றி எப்படி பேசமுடியும்? எங்களுக்கு இப்படம் உண்மையா இல்லையா என்பதுபற்றி கவலையில்லை, இப்படி ஒருவர் இருந்தார் என்று இப்படம் மூலம் தெரிந்த்தே போதும். அவர் என்ன மதம் என்று ஆராயவேண்டிய அவசியம் இல்லை... உங்களுக்கு இது ஒரு இந்து மத துவேஷ வடிகாலாக மட்டுமே இதை பார்க்க முடியும்.

Raza said...

தமிழுக்காக ஒன்றுமே செய்யாமல் 'நான் தமிழன், நீ தமிழன் கிடையாது' என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள். அதற்கு கரணம் எங்கே கிடைக்கும் சலுகைகள் கை விட்டு போய் விடுமோ என்ற பயம் தான். தமிழ் நாட்டில் இந்து மதம், புத்த மதம் வேண்டாம், அனால் மற்ற மாநிலங்கலில் புத்த மதம் வேண்டும், அதுவும் பெயரளவில் தான். அரசாங்க சலுகைகளை அனுபவிக்க மட்டும் இந்து மதம் வேண்டும் (இந்து மத பாதியாகவும் வேறு மத பெயர் பதியகவும் வெய்து கொல்வார்கள்), மற்ற சலுகைகளை அனுபவிக்க வேற்று மதம் வேண்டும் (வாரம் ஒரு முறை பிரியாணி மற்றும் பல). இந்தியர்களை பிரிக்க வெள்ளையர்கள் பயன் படுத்திய ஆயுதத்தை நம் தமிழ் நாட்டில் ஒரு சூனியாகாரனும் அவன் குடும்பமும் நன்றாகவே பயன் படுத்தி பல லட்சம் கோடி ஊழல் செய்துஇருக்கிறது. தன் குடும்ப நலனிற்காக பல லட்ச தமிழ் உயர்களை பலி கொடுத்தான் அந்த சூனியக்காரன். இன்று தமிழன் என்றும், நாத்திகன் என்றும் சொல்லும் இந்த கூட்டம், இந்தியாவிலே தோன்றிய இந்து மற்றும் புத்த மத கடவுள் கிடையாது என்று கூறுகிறது. அனால் கலாச்சாரமே தெரியாத வெளி நாட்டு மதக் கடவுள் மட்டும் இந்த கும்பலுக்கு உண்டு. இவர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. உரிமை, உரிமை என்று கேட்டு எல்லா சலுகைகளையும் அனுபவிக்கும் இவர்கள், வேறு எந்த இந்தியரும் அந்த உரிமையை அடைய கூடாது என்பதே நோக்கம். இந்த நாட்டில் நான் எதிலும் பங்கு வகிக்க மாட்டேன், அனால் இந்த நாடு எனக்கு எல்லாவற்றிலும் சலுகை அளிக்க வேண்டும் என்பார்கள். "உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான், கடமையோ கடமை என்று காரியம் செய்தல் என்ன" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

இவர்களை பொறுத்தவரை நமக்கு 'குறள்' கொடுத்தவர் (வள்ளுவர்) கூட தமிழன் கிடையாது.

Kalaiyarasan said...

//Bodhi dharmar oru Tamizhan/Indian enbadhai edharkaaga china maraithadhu ?????????????????
DHAAMU endru peyarai matriyadhan vullartham enna..?????
Adhai kandu pidithu soliya murugadaasai edharku kurai solgureergal endru enaku theriyavillai //
போதி தர்மர் ஒரு தமிழர் (தென்னிந்தியர்) என்பதை சீனர்கள் மறைத்தாக உங்களுக்கு யார் சொன்னார்கள்? முருகதாசா?
போதி தர்மர் பற்றிய சீனத் திரைப்படத்தின் இணைப்பை, கட்டுரையிலேயே கொடுத்திருக்கிறேன். அந்தப் படத்தில், போதி தர்மன் தென்னிந்தியாவில் இருந்து வந்த புத்த துறவி என்று சொல்லப்படுகின்றது. சீன மொழிப் படம் என்றாலும், ஆங்கில உப தலைப்புகள் உள்ளன. ஒரு தடவை அந்த படத்தைப் பார்த்து விட்டு எழுதுங்கள்.
http://www.youtube.com/watch?v=VsFA7aTRISM&feature=share

Karnan said...

நான் அறிந்த வரையில் , புத்தரின் முதல் சீடர் அனந்தர் , அவரை தான் போதி தர்மர் என்றும் சிலர் கூறுகின்றனர் . அவர் புத்த மதத்தை பரப்புவதற்காக தான் சீனா சென்றார் இது வரலாறு , அனால் படத்தில் வேறு விதமாக கூறுகின்றார்கள் . குங்க்பு கலை இந்தியாவில் இருந்து தான் சென்றது , இதில் கருத்து வேறுபாடு கிடையாது .. அதற்கும் களரிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது . . இது வரையிலும் 7aam அறிவின் விமர்சனம் .

இலங்கை தமிழர்களுக்காக இங்கே இருந்து பேசி பயனில்லை . இலங்கை தான் சென்றாக வேண்டும் . பண்டய காலத்தில் , இந்து மதத்தைச் சார்ந்தவர்களும் இருந்தார்கள் , புத்த மதத்தை சார்ந்தவர்களும் இருந்தார்கள் , சமண மதத்தைச் சார்ந்தவர்களும் இருந்தார்கள் .. புத்த மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமோ , சமண மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமோ இருக்கவில்லை . இந்து மத அரசர்கள் தான் சமணத் துறவிகளை கழுவில் ஏற்றினார்கள் .. இது வரலாறு ... அதற்காக அந்த காலத்தில் வாழ்ந்த ஒட்டு மொத்த இந்துக்களையும் குறை கூறுவது எப்படி நியாயம் ??? இந்துக்களை மட்டும் குறிப்பிடும் போது "இந்து மத தீவிர வாதிகள் என்று ஏன் கூறுகிறீர்கள் ??????? ....

இந்து அரசர்கள் அவ்வாறு கழுவில் ஏற்றியதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் .

அவர்கள் தமிழர் என்று தானே சொல்கிறார்கள் .. சொல்லிட்டு போகட்டுமே ... ஒரு கிறிஸ்தவன் தமிழனாக இல்லையா , ஒரு முஸ்லிம் தமிழனாக இல்லையா , ஒரு இந்து தமிழனாக இல்லையா ,( இவர்கள் அனைவரும் இந்தியர்களாக இல்லையா ) வணங்கும் தெய்வங்கள் வேறாக இருக்கலாம் , ஆனால் அவர்கள் தாய் மொழி தமிழ் தானே , பிறந்து , வளர்ந்து , இருக்கும் இடம் தமிழ் நாடு தானே , தமிழன் என்ற உணர்வை ஏற்படுத்தி கொடுக்கும் படம் இது .. (இதில் மதம் என்கிரிந்து வந்தது )

அவர்கள் போதி தர்மரை , இந்தியர் என்று சொன்னாலும் , தமிழர் என்று சொன்னாலும் , அவர் நம்மவர் .. தயவு செய்து இப்படி எழுதி , எங்கள் மனதை புண் படுத்தாதீர்கள் ...

(ஒரு விஷயம் , ஜாதிகள் , மதங்கள் மனிதனால் தோற்று விக்கப்படவை , ஆதி காலத்தில் ... இலை தழைக்கொண்டு உடலை மறைத்து , மிருகங்களை வேட்டையாடி உண்டவர்கள் தான் , இன்று விஞ்ஞானத்தில் , பகுத்தறிவில் (ஆறாம் அறிவு ) , பண்பாட்டில் (மனிதனாக பேசுகிறேன் ) சிறந்து விளங்குகிறோம்.

thuse said...

இவர் ஒரு தமிழன் எனும் போதே பெருமை அடைய வேண்டும்
தனக்கு தெரிந்ததால் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் எண்ணம், தமிழனில் பெருமை அடைய செய்யும் விடயம் ,நல்ல விடயங்களை மறக்கதிர்கள்
பல்லவர் காலத்தில் சமண பௌத்த மதங்கள் தான் சைவ வைணவர்களை மதம் மாற செய்தார்கள் ,அதனால் தான் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறை அற்புதங்களாலும் பதிக்க பாசுரங்களாலும் மக்களை இறைவன் மீது நம்பிக்கை அடைய செய்தார்கள் ,அத்துடன் சமணர்கள் தான் நாவுக்கரசரை தமது மதத்திற்க்கு மாற்றுவதற்கு சுண்ணாம்பு அறையில் அடைதர்கள் ,யானையால் கொள்ள ஏவினார்கள் ,நஞ்சு கலந்த உணவு கொடுத்தார்கள், பிறகு கடலில் கட்டி போட்டார்கள் அவ்வாறு கொடுமை செய்து சமண பௌத்த சமயத்துக்கு பலவந்தமாக மதமாற்றம் செய்தவர்கள் சமண பௌத்தர்கள் என்பதை விளங்கி கொள்ளவும் . சமண பௌத்தர்கள் தான் மத மறாதவர்களை படுகொலை செய்யவும் துணிந்தனர் என்பதே தான் வரலாற்று உண்மை .
பல்லவர் காலம் தமிழ் வளர்சி அடைந்த காலம் .
'ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததும், முப்பது வருடங்களின் பின்னர் அதனை முடித்து வைத்ததும் இந்தியா தான்' என்பது உண்மைதான் , ஆனால் ஈழ தமிழனுக்கு குரல் கொடுக்க தமிழ்நாட்டு தமிழன் இருக்கிறன் என்பதை முருகதாஸ் உறுதிபடுத்தி இருக்கிறார் என்பதை விளங்கி கொள்ளவும்

fourfires said...

pallavargalin kaalathil budha madham azhikkappattadha????? kachipurathin noolagam azhikappattadha??? pallavargal braminargala?? ayya umaku varalaaru theriyuma? alladhu theriyumena kaattikolla vizhaigireergala??? edhir kural koduka aal illayenil enna vendumaanalum pesa mudikiradhu allava?? naanum pallava mannai sernthavan thaanaiya.. varalaaru padika vaaipu kidaika villayenil varalatru puthinangalai oru murai padithu paarungal.. palava varalatrai, aatchi murayai thelivu pada vaikum "sivagamiyin sabatham" padiyungal.. pallavargal vandha vazhi innum yaarukum theriyadhu.. adharkul avar oru braminar endru mudivu seivadhu abatham.. avargal aatchi pala aandu kaalam kaanchi mannil kolocha kaaranam avargal samaya saarbinmai than.. idharku sandrugal pala en oor kaanchipurathil indurm irkiradhu.. nagarin merku paguthiyil ulla samana kovilil indrum palavaradhu aatchi murayai paaratum ooviyangalai neevir kaanalam.. naan idhu varai azhika ninaikum aatchiku aravanaipu kodukum ooviyanai kandathumillai ketadhumillai.. melum padathin iyakunar adhai varaltru padamaga eduka villai.. vasool edhir paarkum masala padamaga than eduthu irukirar.. aagave than thelungu pathippil bodhidharmar aandhira maanilam kundurilum, hindhi padhippil thaaravilum pirandhadhaga solli irukirar.. aaga avar kootrugalil kurai solli payan illai.. inge oru karuthai thelivu pada purindhu kolla vendum.. idhu indhiya. indhusthanam.. inge mudhalil vaazhndhadhu indhukkal.. bouthargal alla.. indhu madham budha madham thonriya pala kodi aandukalu munbe thoriyadharku aadharangal eralam.. indhu madham anaithu madhangalayum aravanaikum madham.. enave kataya madha maatram ingu thevaye illai.. palavargalin kaaranamaaga kalariyum, noku varmamum thalli vaika pattadha??? palava arasargalil thalai sirandhavargalana simma vishu pallavarum, magendhira pallavarum, maamalarum, noku varmathil thalai sirandhavargal. idhil maamalar(narasimma pallavar) kalariyil per ponavar enbadhai avar punai peyar kooda parai saatrum.. kadaisiyaga umaku or vendukol, thamizhanaga irundhu thamizhai valarka vendam, thayai koorndhu thavaraga parapaatheer..

Anonymous said...

like king ashoka ,he might be in fond of buddhism as kings son he's trained in self defence too and all other 63 fundamental arts of tamil.its not mathematics to refer various formula to conclude answer this history life of great,finaly due to killing of lives he's set to buddhism not against hindu.no one cannot oppose it,except the intouchable sin that created by those bloody aryan(brahmin)

Anonymous said...

I don't like this, if tamilan means hindhu only na? who's told U?.,

read 1000 times before u post as in public

Ram said...

Yaaraiyavadhu thappu soldradhukku mattum ipdi vaai kiliya paesatheriyudhu... Modhalla kaasu kuduthu theatre'ku poi padatha innoru vaati paathuttu, aproma blog yeludhunga sir. Adhula shruthi'oda research parambarai DNA'la irukkara talent'a thirumba kondu vara mudiyum'ngaradhu dhan'ae thavira... avarukku thirumba 6th century'la nadandha dhellam nyabagam varum'na research panninanga?????? Yaaravadhu konjam urupputtra koodadhu, yedhayavadhu solli nasamakkidanum illa??

Karthikeyan Kathirvelu said...

நல்லது செய்யவும் மாட்டாங்க
செய்யரவங்கள விடவும் மாட்டாங்க?

Chozhathozhan said...

Chumma neenga buthisali, agandra paarvai ullavarnu kaatikrathukukaga kura sollanum nu sollirukeenga... Athu epding Avarapathi sonna nalla vishayamellam maranthitu thedi kandupudichu ipdi... kura solreenga.. Avanga edutha intha muyarchiya paratunga.. Pls..

Ajay said...

Most of this article against hinduism, which we not enccouraged. It is not possible to tell all truth in one film. This article also hide current situation of converting Hindus to other religions.

queshen hussain said...

yow, murugadas pathatule,poo podanum...

baskar said...

//போதி தர்மர், பௌத்தராக மதம் மாறிய பிராமணர் என்று, அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "//ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்கிறார்கள் எதை நம்புவது என்றே தெரியவில்லை. நீங்களாவது எதை வைத்து சொல்கிறீர்கள் என்று கூறுங்கள்.

Unknown said...

mapla ne en da 8th sense nu flim eduka kudadhu......................................

Damu said...

Regarding the appearance of Bodhidharma (from Wikipedia):

Throughout Buddhist art, Bodhidharma is depicted as a rather ill-tempered, profusely bearded and wide-eyed barbarian. He is described as "The Blue-Eyed Barbarian" in Chinese texts.

I do not see anything wrong in the way the film depicted Bodhidharma's appearance.

Suresh said...

ஹிந்துசம், பௌத்தம் மற்றவையும் .. கன்னடம்,தெலுகு,மலையாளம் அத்துணையும் தமிழ் மட்டுமே பேசியாகவேண்டும் ... தமிழ் மண்ணை தொடும் போது!!!
ஆதாரம்: கோயம்புத்தூர் வாழ் ஆந்திர மக்களை கேளுங்கள், சென்னை வாழ் பௌத்தர்களை கேளுங்கள்,
இந்தியாவின் ஏதோ ஒரு மூலை-இல் பிறந்து தமிழ் நாட்டிற்கு வரும் ஐ.பி.ஸ் அதிகாரிகள் கூட பேசித்தான் ஆகவேண்டும் என்பதும் ஒரு போது கட்டயம்.எல்லாருக்கும் ஆதியும் தமிழ் தான்!!!!

Human said...

By seeing this comments, it is come to know that he is opposed to hindhu religion. I have no belief in religions and all. I think Murugadoss is better than this person who have commented these. Atleast he said that Bodhidharman is a Tamizhan. And I want to tell that these martial arts were given by Lord Shiva to this world to sustain to keep our body and mind good. And Buddha, Jesus, Mahaveera, Bodhidharman were spread these things to this world. But people made them as god and separate religion for them like how chinese worshiping Bodhidharman. In that film, there is one dialogue came "see those people as scientist and not God" -which was a nice one.

vickysir said...

THavarugal varalatru sambavaingalil varuvatu oru iyalbana visayam ,poovodu naarum manakum enbadhu pola ivaium kalanthu thaan vandhu vidugindrana AAnaal intha thiraipadam bodhidharmarai patri makalidam pesa vaithirupadhu oru nalla muyarchi ,piragu pallavargal mudhalil samana , buddha samaiyaingalaiyea sarindhavargal,pinbu thaan thirunavakarasarin bodhanaiyal avargal 7 m nutrandil avargal hindu madhathi thaluvinar Reference Sivagamiyin sabadham varalatru naval matrum tamilvaralaru

Pradeep said...

Nam thamizh varalaatril eppade oru manithar erunthulaar enbathai ulagm arivathu ethuvae muthan murai..

Thiramabiyum Arivum Mikkavargal tamizhargal (Andrum , Endrum)

Ippadipatavargalai Patri arinthu kolvathum Thamil ena varalaatrai ulagukku solvathu miga avasiyam !
Melum Vinyanathukku upyogamanavaigal erukkum nammathu varalaatrai Therinthu Kolla ethil Aarvam kaata
7aam arivu oru munnode...

ethu pala.. sanga kaala arinyargalai ulagukku kanmbikka.. manathil ennam ullavargalukku oru Oondrukol enbathu mattum thinnam !!

Unknown said...

யாரு எல்லாம் விமர்சனம் எழுதுவது என்று விவஸ்தை இல்லாமல் போய்விட்டது...அரை குறையாக படித்தவர்கள் விமர்சனம் எழுதினால் இப்படி தான் இருக்கும்..

ddd said...

yeppa saami un sontha kathai soga kathai ya ellam emmpa sergura. unmaiya mattum sollu. athayum SHORT a sollu. Romba lenthiyaaaaaaaaaaaaaaaa pothu brother.

arun said...

டேய் நீங்க எப்படி படம் எடுத்தாலும் அதை குறைதான் சொல்வீங்க .............7 ஆம் அறிவை பற்றி இவ்வளவு விடயம்/ கருத்து சொன்ன இந்த இணையதளத்தால் அதனை நிருபிக்க முடியுமா ..........7 ஆம் அறிவை படைத்த முருகதாஸ் ஒன்னும் வரலாற்று ஆய்வாளர் இல்லை ......அவரால் இயன்ற அளவு அவர் விடயங்களை பதிவு செய்துள்ளார் .............80 கோடி செலவு செய்து அவர்கள் தமிழர்களை பற்றி ஒரு நல்ல விடயத்துடன் தான் எடுத்துள்ளார்கள் .....................................உங்கள மாதுரி ஆட்கள் இருக்குற வரைக்கும் ஒன்னும் புடுங்க முடியாது ..........இவளோ பேசுறீங்களே இதே போதி தர்மர பத்தி சரியான வரலாற்றை ஆதாரத்தோடு சொல்லுங்கள் பாக்கலாம்....ஈழத்தில் போர் நடந்து 3 ஆண்டுகள் முடிந்து விட்டது இந்த 3 ஆண்டுகளில் ஒருவர் அதுவும் முருகதாஸ் தான் மிகவும் தைரியத்தோடு இலங்கையை சாடி இருக்கிறார் வேறு எவரும் இவர் அளவுக்கு தைரியமாக சொல்லவில்லை ..........போங்க டா போங்க

Kalaiyarasan said...

//ஆக உங்களுக்கும் எனக்கும் பிக்குகள் அப்போது எப்படி இருந்தார்கள் என்பது தெரியாதபோது அதைப் பற்றி எப்படி பேசமுடியும்? //

புத்த பிக்குகள் இப்படித் தான் உடை உடுத்த வேண்டும், மொட்டை அடித்திருக்க வேண்டும் என்பது புத்தர் காலத்தில் கொண்டு வந்த விதிகள். இது பற்றி புத்த மத நூல்களில் எழுதப்பட்டுள்ளன. அவை 2000 வருடங்களாக அப்படியே மாறாமல் இருக்கின்றன. சும்மா விதண்டாவாதம் செய்யாதீர்கள். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியா விட்டால் , அதனை கேட்டு அறிய வெட்கப் படத் தேவையில்லை. ஷவோலின் கோயிலில் "போதி தர்மர் ஒரு தமிழன்" என்று எழுதி வைக்கத் தெரிந்தவர்களுக்கு, புத்த பிக்குகளுக்கான விதிகளை எழுதி வைக்கத் தெரியவில்லையாம்.

Kalaiyarasan said...

//நீங்கள் அள்ளித்தெளிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் என்ன.//

"போதி தர்மன் ஒரு தமிழன். பல்லவ இளவரசன்." என்றெல்லாம் முருகதாஸ் வரலாற்றை திரித்து சொன்னால், அதற்காக அவரிடம் ஆதாரம் கேட்க மாட்டீர்கள். ஆனால், உண்மையான வரலாற்றை எழுதினால் என்னிடம் ஆதாரம் கேட்பீர்கள். பிராமண மதம், களப்பிரர் காலத்தில் தமிழகம் போன்ற நூல்களில் உள்ள தரவுகளைக் கொண்டு தான் இந்தக் கட்டுரையை எழுதினேன். அந்த நூல்கள் இன்றைக்கும் தமிழ் நாட்டில் உள்ள புத்தக கடைகளில் கிடைக்கின்றன. தேடி எடுத்து வாசியுங்கள். இந்து மதத்தின் மறைக்கப்பட்ட வரலாறு பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

//In the south of India while there was no overt persecution of Buddhists at least two Pallava rulers Simhavarma and Trilochana are known to have destroyed Buddhist stupas and have had Hindu temples built over them. Bodhidharma, a patriarch of Zen Buddhism was of the original Kshatriya caste.// http://en.wikipedia.org/wiki/Decline_of_Buddhism_in_India

Sudarsan said...

I had the 6th sense not to see 'The 7th sense' and I am responding on the basis of your comments - without any knowledge of what was there in the movie. As the name itself indicates, 'Bodhidharma' was a Buddhist - there is no doubt about this.

Hindus and Jains of the 10th and 11th century hated the fame of Nalanda, and tried to destroy it once - Turkic marauders finished of Nalanda with the help of Buddhists. How? Under the excuse of 'ahimsa', 2000 able-bodied students of Nalanda refused to defend themselves against just 18 men on horseback. I hold the Nalanda management responsible for the final destruction.

As a Vaishnavite, I refuse to believe that a Veda-denying Buddha was an incarnation of Vishnu - this is an idaichcherugal.

Some saints, like Thirumazhisai AzhvAr, dabbled in other faiths like Saivam, Sakyam (Buddhism) and Samanam (Jainism), but none seem to have documented royal sanction for violence and forceful conversion to Hinduism. For that matter, there was no such thing as Hinduism at that time.

Thinking Hearts said...

அரை வேக்காட்டுதனமும் அசட்டுத்தனமும் கலந்த ஒரு கலவை!

Thinking Hearts said...

நோக்கு வர்மம் - A new perspective

http://ragsgopalan.blogspot.com/2011/10/nokku-varmam.html

Balajichinnakonda said...

Bodhidharma was a Buddhist monk who lived during the 5th/6th century and is traditionally credited as the leading patriarch and transmitter of Zen (Chinese: Chán, Sanskrit: Dhyāna) to China. According to Chinese legend, he also began the physical training of the Shaolin monks that led to the creation of Shaolinquan. However, martial arts historians have shown this legend stems from a 17th century qigong manual known as the Yijin Jing.

Little contemporary biographical information on Bodhidharma is extant, and subsequent accounts became layered with legend, but some accounts state that he was from a Brahman family in southern India and possibly of royal lineage.[1] [2]. However Broughton (1999:2) notes that Bodhidharma's royal pedigree implies that he was of the Kshatriya warrior caste as royals cannot be Brahmins as per the Indian caste system. There have been many different versions about his place of birth, one being that he is from Kanchipuram in Tamil Nadu, India.[3][4][5][6][7][8][9]

Kalaiyarasan said...

// இதை முருகதாஸ் இன்னொரு கிரகவாசிகளிற்கு படமாக கொடுத்திருந்தால் மட்டுமே நம்பியிருப்பார்கள். நாளை மகிந்த ராஜபக்ஸ கூட தமிழனாக வரலாற்றில் காட்டப்படலாம். முல்லையின் கொலைகளம் கூட சாந்தி வனம் என பெயர் சூட்டப்படலாம்.// - கட்டுரைக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் இருந்து.

Unknown said...

எந்த நாட்டுலயும் ஒரு பிராமணர் ஆட்சி செலுத்தியது இல்லை... தெளிவான வரலாறே இல்லை...இதுல இன்னொரு சாதாரண விஷயம் முருகதாஸ் இந்த கதைய சொல்லி தான் கல்லா கட்டணும்னு இல்ல... He has his own market value... உங்கள் பதிவில் எனக்கு உடன்பாடு இல்லை...

Shiva Arumugam said...

வாழ்த்துக்கள் .... அருமையாக தெளிவு படுத்தியுள்ளீர்கள்...
இப் பதிவை குறை சொல்பவர்கள்
உண்மையிலேயே இவர்கள் போதிதர்மனுக்காக பாடுபட்டு பேசவில்லை இவர்கள் முழுக்க முழுக்க முருகதாஸ் மற்றும் சூர்யாவுக்காக பேசுகிறார்கள்!!! 7ஆம் அறிவை பார்த்து தான் தமிழன் என்று பெருமைபடுகிறார்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள் இப்படி பட்டவர்கள் இருக்கும்போது எப்படி எடுத்து உண்மையை சொன்னாலும் இந்த மொக்கு சனங்களுக்கு ஒன்றுமே புரியாதது ...!!!வேதனைக்குறிய விடயம்!!!

சீனு said...

கண்டுபிடிச்சிட்டீங்க Goldenshiva. வாழ்துக்கள் ;)

vishwa said...

நண்பரே,

உங்களது விமர்சனம் போதிதர்மர் தமிழரா, ஆரியர அல்லது திராவிடரா என்பதா?
எந்த வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதா?
தமிழ் வரலாற்றுக் குறிப்புகளை போகிப்பண்டிகை என்ற ஒன்றை உருவாக்கி, தமிழ் பேசும் இந்து
பார்ப்பனர்கள் (ஆரியர்கள்) அழித்துவிட்டார்கள் எனவே போதிதர்மர் தமிழரல்ல என்பதா?
இலங்கைத் தமிழர்கள் மட்டுமே தமிழர்கள், தமிழ் நாட்டுத் தமிழர்கள் யார் என்பதா?
முருகதாசின் கதாநாயகன் பாத்திரம் முழுக்க முழுக்க வியாபரத்தனமானது என்பதா?
சற்று விளக்கமாகக் கூறவும்.
மற்ற கேள்விகள் பிறகு கேட்கப்படும்!
விச்வா.

PORTFOLIO GROUP 11 said...

இப்படி ஒரு பதிவை நீங்கள் எழுத தூண்டியதே முருகதாசின் 7ம் அறிவு திரைப்படம்தானே...! இத்திரைப்படத்தை பார்த்த பிறகுதானே நீங்களும் போதிதர்மரை பற்றி அறிந்து கொள்ளுவதற்கு எங்கு எங்கெல்லாம் தேடி இருப்பீர்கள்... உங்கள் ஆதங்கம் விளங்குகின்றது. ஆனால் தமிழையும் இந்து மதத்தையும் பற்றிய அறிவு சிறிது குறைவு போலவே தெரிகின்றது உங்களின் பதிவில்... இவைகளைப்பற்றியும் கொஞ்சம் அதிகமாக தேடி படிச்சுவிட்டு இவ்வாறான பதிவு எழுத வந்து இருந்து இருக்கலாம்...

வலிப்போக்கன் said...

இருக்குன்னு சொல்ற ஆறாவது அறிவையே ஒழுங்காக பயன்படுத்த தெரியமா சனங்க டாஸ்மாக் முழ்கிகிட்டு இருக்கு இதுல ஏழாம் அறிவா? உண்மையை சொல்வதற்குகூட ஏழாம் அறிவு தயாரித்தவர்களுக்கு தைரியம் கிடையாது. பின்னுாட்டமிட்டவர்களே! ஆறாவது அறிவை பயன்படுத்தவில்லை
என்றுதான் தெரிகிறது.

HS said...

http://www.buddhistdoor.com/download/data_eng.html

Bodhidharma was born around the year 440 in
Kanchi, the capital of the southern Indian kingdom of
Pallava. He was a Brahman by birth and the third son of
King Simhavarman.

Sanjay said...

கலையரசன் நீஙகள் ஒரு விடயத்தை மறந்து விட்டீகள். 7 ம் அறிவு கூற வருவது. போதிதர்மர் புத்த மதமோ அல்லது இந்து மதமோ என்ற விடயமோ அல்ல. தமிழராகிய நாம் இழந்தது என்ன என்று மட்டுமே. சீனாவுக்கு தற்காப்பு கலை மற்றும் அக்குபன்சர் மருத்துவ முறையை அறிமுகப்படுத்தியவர் போதிதர்மர். 7 ம் அறிவு கூறும் படி போதிதர்மர் தமிழராக இருந்தால் அது தமிழருக்கு தான் பெருமை.

வரலாற்றை விடுங்கள் அவை காலத்துக்கு காலம் மற்றப்பட்டவை. இங்கு மொழி மட்டுமே விவாதம். மதம் அல்ல‌
"தமிழ் இன உணர்வு என்ற போர்வையின் கீழ் மறைந்திருக்கும், இந்து மத உணர்வு இங்கே வெளிப்படுகின்றது"

உங்களை போல் சிலர் மதம் எது மொழி எது என்று தெரியமல் தவிக்கிறார்கள். இதே பிர‌ச்சனை இலங்கையில்.
இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள பிர‌ச்சனை ஆனால் மூன்றாவது இனம் உள்ளது. அது முஸ்லிம்.
அப்போ இலங்கையில் முஸ்லிம்கள் யார் அவர்கள் பேசும் மொழி என்ன ?

மனிதராகிய நாம் வரலாற்றில் விட்ட தவறை திரும்பி பார்ப்பது 7 ம் அறிவு
நான் முருகதாஸ் மற்றும் சூர்யா ரசிகர் அல்ல‌

Dinesh said...

Neengalthan thevai illatha karuthukalai koorugirirgal... nanraga padiyungal bodhi dharmavin vaalkai varalaru...
NEENGAL VIJAY FAN AH?

roshini said...

mokka podatha ya.... Oru nalla vishayam sonna yethukalanalum paravala kutham solla mothala vanthuruva.. Unaku bodhidharma yarunu munadiye theriuma unaku murugadoss nala thana therium so just shut up

Kalaiyarasan said...

Little contemporary biographical information on Bodhidharma is extant, and subsequent accounts became layered with legend, but some accounts state that he was from a Brahmin family in southern India and possibly of royal lineage.[1] [2]. However Broughton (1999:2) notes that Bodhidharma's royal pedigree implies that he was of the Kshatriya warrior caste as royals cannot be Brahmins as per the Indian caste system. There have been many different versions about his place of birth, one being that he is from Kanchipuram in Tamil Nadu, India.[3][4][5][6][7][8][9]

http://en.wikipedia.org/wiki/Bodhidharma

Kalaiyarasan said...

//கலையரசன் நீஙகள் ஒரு விடயத்தை மறந்து விட்டீகள். 7 ம் அறிவு கூற வருவது. போதிதர்மர் புத்த மதமோ அல்லது இந்து மதமோ என்ற விடயமோ அல்ல. தமிழராகிய நாம் இழந்தது என்ன என்று மட்டுமே.//அதைத் தானே, இந்த கட்டுரை முழுவதும் கூறியிருக்கிறேன். தமிழகத்தில் பௌத்த மதமும், சமண மதமும், விஞ்ஞான அறிவியலை வளர்த்து வந்தன. பிற்காலத்தில் படையெடுத்து வந்த இந்து மன்னர்கள், பௌத்த, சமண மதங்களை மட்டும் அழிக்கவில்லை. 7 ம் அறிவு கண்டுபிடித்த விஞ்ஞான அறிவியலையும் சேர்த்தே அழித்தனர். இந்த உண்மையை கூறும் தைரியம், சூரியாவுக்கோ, முருகதாசுக்கோ கிடையாது. ஏதோ தமிழன் தானாகவே அறிவியலை அலட்சியப் படுத்தி மறந்து விட்டதாக கூற விளைகிறார். அதாவது 7 ம் அறிவு படம் தமிழனுக்கு பெருமை சேர்க்கவில்லை, மாறாக இழிவு படுத்துகிறது.


//உங்களை போல் சிலர் மதம் எது மொழி எது என்று தெரியமல் தவிக்கிறார்கள். //

ஐயா, உண்மையிலேயே கட்டுரையை புரிந்து தான் வாசித்தீர்களா? அவ்வாறு தவிப்பது நானல்ல, மாறாக 7 ம் அறிவு எடுத்த முருகதாஸ் குழுவினர். இந்தக் கருத்தை கட்டுரையின் இறுதியில் வலியுறுத்தியிருக்கிறேன். அதாவது, தமிழ் உணர்வு என்ற பெயரில் இந்து மத உணர்வை திணிப்பது தான் இந்த திரைப்படத்தின் நோக்கம். இல்லாவிட்டால், தமிழனின் அறிவியலை இந்து மதமே அழித்தது என்று சொல்லத் தயக்கமேன்? ஏனென்றால், அவர்கள் அடக்கப்பட்ட தமிழன் சார்பாக பேசவில்லை. மாறாக, தமிழனை அடக்கி ஒடுக்கியவர்களை காப்பாற்றுவதற்காக பாடுபடுகிறார்கள். இந்த உண்மையை நீங்கள் உணராத வரைக்கும், உங்கள் தலையில் தொடர்ந்து மிளகாய் அரைப்பார்கள்.

Jona said...

இது ஒரு தமிழனைப்பற்றிய வரலாறே தவிர இதற்குள் மதத்தை நுழைப்பதை அனுமதிக்க முடியாது......
ஒரு தமிழன் இந்துவாக தான் இருக்க வேண்டும் இல்லை....
அவ்வாறு நோக்கினால் புத்த மத ஸ்தாபகரே ஒரு தமிழர் தானே......

Sanjay said...

சீன மருத்துவத்தில் உள்ள எத்தனையோ விடயங்கள். தமிழ் ஆயுள் வேத மருத்துவத்துடன் ஒத்துள்ளது. (சான்று உள்ளது)
சீன நாகரீகத்தை விட தமிழரின் நாகரீகம் பழமையனது. இதிலிருந்து தெரிவது நாகரீகத்தை காட்டியவன் தமிழன்.
ஆனால் உங்களை போன்றவர்கள் தமிழராக இருந்து கொண்டு ஏற்க மறுப்பது அவமானம்

Sanjay said...

திருத்தம்
"இயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக "இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்" என்று அழைக்க முடியுமா?."

பெத்தலஹெமில் அதிகம் பெயர் பேசுவது Hebrew மொழி. இயேசு கிறிஸ்து பேசிய மொழி Hebrew
கணிப்பு
http://www.ethnologue.com/show_country.asp?name=IL

dollwina said...

உங்களுக்கு முருகதாஸ் பிடிக்கலன்னு சொல்லுங்க.ஏன் இப்படி அபத்தமா உளறி இருக்கீங்க? தமிழர்கள் தெரிந்து கொள்ளாத விஷயத்தை கற்பனை கலந்து சொல்லி இருக்கார். எனக்கு ஒரு சந்தேகம். நீங்க சீனா ஆதரவாளரா? இல்ல முருகதாஸ் க்கு எதிரியா? இப்போதான் தெரியுது. தமிழன் ஏன் ஜெயிக்க முடியல்லன்னு. தமிழன் பண்ணா பாராட்ட மாட்டிங்களே? ஆனா ஹாலிவுட் படத்த மட்டும் புகழுறீங்க?முடிஞ்சா உங்க பதிவை அழிச்சுடுங்க....

சீனு said...

// தமிழகத்தில் பௌத்த மதமும், சமண மதமும், விஞ்ஞான அறிவியலை வளர்த்து வந்தன. பிற்காலத்தில் படையெடுத்து வந்த இந்து மன்னர்கள், பௌத்த, சமண மதங்களை மட்டும் அழிக்கவில்லை. 7 ம் அறிவு கண்டுபிடித்த விஞ்ஞான அறிவியலையும் சேர்த்தே அழித்தனர்.//

நீங்க சொல்றது தான் உண்மை. அந்த உண்மையைத்தான் உரக்க சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது பாஸிசம்.

படையெடுத்து வந்த இந்து மன்னர்களா? அப்போ பௌத்த மதம் எங்கிருந்து படையெடுத்து வந்து முன்பிருந்த இந்துக்களை பௌத்தர்களாக மாற்றியது? உங்கள் உளரல் சகிக்கலை...

//அதாவது, தமிழ் உணர்வு என்ற பெயரில் இந்து மத உணர்வை திணிப்பது தான் இந்த திரைப்படத்தின் நோக்கம்.//

சரி! உங்கள் கூற்றுப்படியே வைத்துக்கொண்டாலும், அதே இடத்தில் கிருத்துவ/இஸ்லாமியம் திணிக்கப்பட்டால் பேசமாட்டீர்கள்.

சரி!

காட்டான் said...

///சீனாவிலும் அவர் இந்துவாகவே வாழ்ந்தார் என்று காட்ட முடியுமா? ///அப்படி ஏன் காட்ட வேண்டும்??? அவரை ஒரு தமிழராக தான் காட்டினார்களே ஒழிய இந்துவாக காட்டினார்களா??? அப்படி எனில் தமிழர்கள் அனைவரும் இந்துக்கள் என்கிறீர்களா? ஏன் துட்ட கைமுனு படைகளிலே தமிழ் மொழி பேசும் பவுத்தர்கள் இருந்தார்களே .


நீங்கள் சொல்லுகிறீர்கள் போதி தருமரை காட்டிய உடை பவுத்தர்களுடயது இல்லை என்று ..ஆனால் நீங்கள் பகிர்ந்துள்ள முதலாவது புகைப்படத்தை பாருங்கள் ...அநேகமாய் அது நீங்கள் இணையத்தில் தேடியதாக தான் இருக்கும்.. முருகதாஸ் கூட தான் இணையத்தில் தான் போதி தர்மர் பற்றிய தகவல்களை கண்டதாக சொல்லியுள்ளார்.. ஆகவே நீங்கள் பகிர்ந்துள்ளது போன்ற படங்களை மையமாக வைத்து அவர் போதி தருமரை தன் கற்பனையில் உருவாக்கி இருக்கலாம்.. அத்துடன் பவுத்த துறவிகள் "இன்று"மொட்டை அடித்த தலையுடன் தான் இருப்பார்கள் என்கிறீகள்.. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இவ்வாறு தான் இருந்திருப்பார்கள் என்பதில் என்ன நிச்சயம்..

காட்டான் said...

///தமிழ் உணர்வு என்ற பெயரில் இந்து மத உணர்வை திணிப்பது தான் இந்த திரைப்படத்தின் நோக்கம். /// உண்மையிலே ஒரு சாதாரண சினிமா ரசிகனாக இந்த படம் பார்க்கும் போது எனக்கு இந்து மத உணர்வோ இல்லை வேறு எந்த மத உணர்வுகளே துளியும் எட்டி பார்க்கவில்லை.

theiva said...

padatha mulusa olunka unnippa parthiddu elutha vaanka sir... padaththa neenka theliva kavanichchu parthiruntha neenka eluthiyirukkirathu evvalavu periya poi endu unkalukke therium... they don't hide anything abt podi saththuvar... neenka sonna avalavayum(maraiththathaaka) avanka vadivaaye kaaddi irukkanka... muthalla poi padaththa parunka sir.. appuram vanthu kathayunka

சீனிவாசன் said...

இயேசு யாரென்று கேட்டால் அராபிய யூதன் என்று சொல்வது எத்தனை அபத்தமாயிருக்கும், அதே போலத்தான் இங்கு பலபேர் உளறியிருக்கின்றனர். போதிதர்மருக்கு பெருமை பெளத்ததினால் வந்தது, போதி தருமரிடம் இருந்து பெளத்ததை கழித்துவிட்டால் எதுவுமே மிஞ்சாது வரலாற்றில் போதி தர்மர் என்ற பெயரும் இருக்காது. இதை அனைவரும் ஒப்புகொள்வீர்கள் என நினைக்கிறேன். இந்து மதத்திற்கு எதிராய் தோன்றியதே பெளத்தம். பெளத்ததின் அறிவியலையும் மருத்துவத்தையும் அழித்தது இந்து மதமே. இங்கு உயிர் வாழவே முடியாத காரணத்தினாலேயே பெளத்தர்கள் இந்தியாவைவிட்டு ஓட வேண்டியதாகியது. ஆனால் திரைப்படம் இதற்கு மாறாய் போதிதர்மரை இந்து மரபில் காட்டுவது மோசடியானது.இதைத்தான் கட்டுரை சொல்கிறது. எண்ணாயிரம் சமணர்களை கழுவிலேற்றி மதுரையில் கொன்றதுதான் அப்பாதைய இந்து தமிழ் மரபு இதில் பெருமை கொள்ள ஒன்றுமில்லை. தமிழர்கள் இம்மாதிரியான படுகொலைகளை செய்தனர் என்பதில் வெட்கம்தான் அடைய முடியும்.

எஸ் சக்திவேல் said...

> ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததும், முப்பது வருடங்களின் பின்னர் அதனை முடித்து வைத்ததும் இந்தியா தான்.

ஆம், என் கருத்தும் இதுவே.

Thabo Sivagurunathan said...

தமிழர்களுடைய பலவீனமே இதுதான்.சாதாரண சினிமா ஒன்றையே இவ்வளவு தூரம் விமர்சிக்கிறீர்களே ?நாங்கள் ஒருபோதுமே ஒன்று சேரப்போது இல்லை .இதுதான் தமிழர்களுடைய நிலைமை.7 ஆம் அறிவு ஒரு Documentary Film இல்லை அதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.ஒரு சாதாரண பொழுது போக்கு சினிமாவில் எல்லோரையும் போல் வெறும் மசாலா சினிமாவை எடுக்காமல் ஒருசில நல்ல கருத்துக்களுடன் ஒரு மசாலா சினிமாவை எடுத்திருப்பதற்கே இயக்குனரை பாராட்டியிருக்கவேண்டும் .நீங்கள் சொல்வது போல் வரலாற்றின் பலவிடயங்களை இந்தப்படம் சொல்லவில்லைதான் .நீங்கள் அவற்றை இப்படி ஒரு Commercial cinema இல் எதிர்பார்ப்பதே முட்டாள்தனம் .நீங்கள் போதிதர்மரை பற்றி இந்த திரைப்படம் வருவதற்குமுன் ஒரு பதிவு எழுதி இருந்தீர்கள் என்றால் ,அல்லது போதி தர்மரை பற்றி ஆராய்ச்சி செய்து இருந்தீர்கள் என்றால் ,அல்லது போதிதர்மரை பற்றி நாலு பேருக்கு சொல்லி இருந்தீர்கள் என்றால் உங்களுடைய இந்த விமர்சனங்களுக்கு ஒரு நியாயம் இருக்கும்.இந்த படத்தை பார்த்த பின்பே பலபேருக்கு போதி தர்மரை பற்றி தெரிந்திருக்கும் அல்லது அவரை பற்றி ஆராய வேண்டும் என்ற ஒரு அவா ஏற்பட்டிருக்கும்.அதற்காகவே இந்த திரைப்படத்தை எடுத்தவர்களை பாராட்டலாம் . முருகதாஸ் ஒன்றும் ஏதாவது ஒரு இந்துமத அமைப்பை சேர்ந்த முக்கிய புள்ளியோ , அல்லது இந்தியாவின் அதிமுக்கிய கொள்கை வகுப்பாளரோ இல்லை, இங்கு குறிப்பிடப்பட்டது போன்று சிலவற்றை பூசி மறப்பதற்கு! அவருடைய பார்வைக்கு எட்டியவரை ஒரு நல்ல சினிமாவை செய்திருக்கிறார் அவ்வளவுதான் .இதேமாதிரி கருத்துக்களை திணித்து இன்னும் பத்து படங்களை அவர் எடுத்திருந்தார் என்றால் அப்போது அவருடைய படங்களை விரும்பி பார்க்கும் ஒருவர் அந்த கருத்துக்களின் பால் ஈடுபாடு கொள்ள சந்தர்ப்பம் அதிகம் .அப்போது நீங்கள் இயக்குனரின் கருத்துக்களை விமர்சிக்கலாம் ,போதி தர்மரை அவர் அவமதிக்கின்றார் என்று வாதிடலாம் .இங்கு யாருமே சுதந்திரமாக கருத்தை சொல்லமுடியாது சொல்லி இருந்தால் அவர் திரைப்படத்தை வெளியிட்டிருக்க முடியாது .இலங்கை பிரச்னை பற்றி ஒரு சில வசனங்களே திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது .அவற்றையே இலங்கையில் தணிக்கை பண்ணிவிட்டார்கள்.அந்த சில வரிகள் தணிக்கை பண்ணும் அளவிற்கு இருந்திருக்கின்றதுதானே?.முருகதாஸ் ஒரு மக்கள் புரட்சியை இலங்கையில் ஏற்படுத்திவிடுவார் என்றா இலங்கை அரசாங்கம் தணிக்கை பண்ணியது ?அல்லது இது ஒரு வெறும் commercial cinema என்பது இலங்கை அரசாங்கத்திற்கு தெரியாதா ?அந்த ஒரு சில நிமிடங்கள் தமிழ் உணர்வை அந்தவரிகள் சற்று தூக்கி நிறுத்தியது என்பது தான் உண்மை .நோக்கம் எதுவாக இருந்தாலும் அதிலும் ஒரு நன்மை கிடைத்திருக்கிறதுதானே?இந்த படத்தை பார்த்துவிட்டு ஒருவரும் அதை வரலாற்றின் ஒரு முக்கிய ஆவணமாக தூக்கிபிடிக்கபோவது இல்லை .நீங்கள் படம் பார்க்கும் கொஞ்ச நேரமாவது தமிழ் உணைவை தூக்கி நிறுத்தியது தானே ?அதற்காவது இந்த படத்தை வரவேற்கலாமே ? இயக்குனர் தனது இருப்பையும் தாயாளிப்பாளரின் இருப்பையும் நிலை நிறுத்திக்கொண்டு கருத்துக்களை கூறியிருக்கிறார் அவ்வளவுதான் .இதை பல்லவர்களின் சமண,பௌத்த அழிப்பிற்கு இனையாயாக நீங்கள் பார்ப்பதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.இந்துக்களை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் இந்த படம் இந்துக்களை பற்றி குறிப்பிடவில்லை .தமிழர்களை பற்றிதான் குறிப்பிடுகிறது .தமிழர்கள் எல்லோரும் வரலாற்றில் இந்துக்களாகவா இருந்தார்கள் ?நீங்கள் ஏன் உங்களுடைய இந்துத்துவ எதிர்ப்பை இந்த திரைப்படத்துடன் தேவை இல்லாமல் தொடர்புபடுத்துகின்றீர்கள் .ஏதோ இயக்குனரை ஒரு காஞ்சிமட ஆச்சாரியார் Range இக்கு சித்தரிக்கிறீர்கள் .அவர்கள் இந்துத்துவ உணர்வை விதைக்கிறதாக சித்தரிக்கிறீர்கள் .அவர்காளால் மூளைச்சலவை செய்யப்படும் அளவிற்கு திரைப்படம் பார்ப்பவர்கள் முட்டாள்கள் அல்ல. நீங்கள் குறிப்பிட்டது போல் சாதாரண ரசிகர்களின் இந்துத்துவ உணர்வை இந்த படம் தூண்டப்போவதும் இல்லை .நீங்கள் தான் புதிய கோணத்தில் சிந்தித்து முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுகிறீகள் .தயவு செய்து இந்த திரைப்படத்தை வரவேற்கிற வர்களை எல்லாம் இந்து முத்திரை,முருகதாஸ் முத்திரை குத்தாதீர்கள்.

Namasivayam said...

தமழ் பேசும் ஒருவர் கிறிஸ்தவராகவோ முஸ்லீமாகவோ இருக்கும் பொழுது அவர் பெளத்தராக இருப்பதில் எந்த தவரும் இல்லை...

தற்பொழுது தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தமிழர்களே மற்றும் நமது சகோதரர்களே...

போதிதர்மர் பிறப்பதற்கு முன்றே நம் தமிழ் மொழி தோன்றியிருப்பதற்கு சான்றுகள் உள்ளன...

ஒரு தமிழன் Zen மதத்தை உருவாக்கலாம்...

மொழியை மொழியாக மட்டுமே பாருங்கள் ... அதில் மதத்தையும் சாதியையும் நுலைக்காதீர்கள்...

உங்களது 6ஆம் அறிவை தூண்டியிருக்கிறது என்றால் 7ஆம் அறிவின் உண்மையை/வெற்றியை புரிந்துகொள்ளலாம்...

இந்த விமர்சனத்திற்கு நன்றி - எதிர்கருத்துகளை சற்று உள் நோக்கினால் இப்பொழுது உள்ள மக்களிடம் சாதி/மத வேறுபாடு குறைந்து "சகோதரதுவம்" நிலவுவது வரவேற்கத்தக்கது... அதற்கு மதிப்பு கொடுத்து உடனடியாக உங்கள் Post ஐ delete செய்யவும்...

RK said...

hello till now we dont know who is Bodhi Dharma....Why did not bhuddists in India or Tamil Nadu did not bring him to limelight?????

It is a shame on thepart of bhuddists did not popularise him. Take the blame before blaming others. Cinema is taken to fill the Makers' pockets only...None of the cinemas can create any revolution here nowadays...

Appadiyurundirundal, Vai.Ko and seeman ellam Aatchikku Vandhirukkalam

R Ramakrishnan

Ranjith said...

I know the tamil cinema and india /tamilnadu politics are taking the Thamizh and Thamizhan as gaining tools for their moto as a cheating beggers taking their bowl. But the truth is Thamizh language is not a religion language. There are lot of legends lived in ancient history. But we don't have exact real proof. Bodhi dharmar is one of them. Now his name giving some profit to 7th Sense Team. But aleast somebodies(working as cinefield/theatre labours) earning money for their few days life. So forgive them who are using his name for earning more money. Finally I believe neither you and 7th Sense Team.

En makkal... intha pc-la Thamizh font illai. athanala thaan english...aana kattayam ethavathu english grammar thappu irukka thaan seiyum. manichirunga makkale.

Gayathri Banukumar said...

Aravind munjenma gyabagam vantha maathiri sollureenga. Bhodhidramaroda genetical characteristics vanthathaathaan solluraanga. Neenga unga thaatha mathiri nadakureenga, Avara maathiri varayureenganu sonna athukaga avaroda vazhkaila nadantha nigazhchigal ellam ungaluku gyabagam vanthuduma? Ippo thamilnaatula vaazhura orutharku yethirunaadugal thitam pathi sonna enna reaction kodukanumo athathaan Aravind character think panna maathiri iruku.

G.AruljothiKarikalan said...

மதம் என்பதோ நாடு என்பதோ மாற்றி கொள்ள கூடியது, மொழி மாற்றிகொள்ள இயலாதது.... கட்டுரையாளருக்கு இந்த அடிப்படை அறிவு இல்லாததால் கட்டுரை கால் இல்லாத கட்டமாக உள்ளது

Kalaiyarasan said...

//தமிழர்களுடைய பலவீனமே இதுதான்.சாதாரண சினிமா ஒன்றையே இவ்வளவு தூரம் விமர்சிக்கிறீர்களே? நாங்கள் ஒருபோதுமே ஒன்று சேரப்போது இல்லை .இதுதான் தமிழர்களுடைய நிலைமை.//
தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, உலகில் எந்த இனத்தை எடுத்தாலும் பல்வேறு பட்ட கருத்துகளை கொண்டவர்கள் இருக்கவே செய்வார்கள். அது இயற்கை. இந்த யதார்த்தை நீங்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். உங்களைப் போன்று உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சிந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. தமிழர்களின் ஒற்றுமை என்ற பெயரில் ஹிட்லரின் இனவாத பாசிச கருத்துகளை திணிக்காதீர்கள்.

//ஒருசில நல்ல கருத்துக்களுடன் ஒரு மசாலா சினிமாவை எடுத்திருப்பதற்கே இயக்குனரை பாராட்டியிருக்கவேண்டும் .நீங்கள் சொல்வது போல் வரலாற்றின் பலவிடயங்களை இந்தப்படம் சொல்லவில்லைதான் .நீங்கள் அவற்றை இப்படி ஒரு Commercial cinema இல் எதிர்பார்ப்பதே முட்டாள்தனம் //
பணம் சம்பாதிப்பது தான் இயக்குனரின் நோக்கம் என்று ஒப்புக் கொள்கிறீர்கள். சினிமாவில் வந்த நல்ல கருத்துகள் என்ன? தமிழனின் அறியாமையை இயக்குனர் தனக்கு சாதகமாக பயன்படுத்துகின்றார். இதனை கட்டுரை முழுக்க தெளிவு படுத்தியிருக்கிறேன்.

//நீங்கள் போதிதர்மரை பற்றி இந்த திரைப்படம் வருவதற்குமுன் ஒரு பதிவு எழுதி இருந்தீர்கள் என்றால் ,அல்லது போதி தர்மரை பற்றி ஆராய்ச்சி செய்து இருந்தீர்கள் என்றால் ,அல்லது போதிதர்மரை பற்றி நாலு பேருக்கு சொல்லி இருந்தீர்கள் என்றால் உங்களுடைய இந்த விமர்சனங்களுக்கு ஒரு நியாயம் இருக்கும்.//
போதிதர்மர் யாருக்குமே தெரியாத ஒருவர் அல்ல என்ற உண்மையை கட்டுரையில் எடுத்துக் கூறியிருக்கிறேன். அவர் ஒரு புத்த மத தத்துவஞானி என்ற விடயம் உலகம் முழுவதும் ஏற்கனவே தெரிந்தது தான். ஆனால், தமிழன் என்று சொல்லிக் கொள்ளும் தமிழ் தேசியவாதிகள் அவரை புறக்கணித்தே வந்தார்கள். அதற்கு காரணம், சிங்களவன் மீதான கோபத்தாலும், பெரும்பான்மை இந்துக்கள் என்பதாலும், இயல்பாகவே புத்த மதம் பற்றி அறிவதில் நாட்டம் இருக்கவில்லை. முருகதாஸ் கூட, படத்தில் போதி தர்மர் புத்த மதத்திற்கு செய்த சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், உங்களைப் போன்றவர்கள் ஆதரித்திருக்க மாட்டீர்கள். ஆனால் போதி தர்மரின் கொள்கைகளுக்கு முரணாக, அவரை ஒரு தமிழ்த் தேசியவாதி போன்று திரிபுபடுத்தி காட்டியதால் தான், இவ்வளவு ஆதரவாளர்களை பெற்றுக் கொள்ள முடிந்தது. இயேசு ஒரு யூதன், முகமது ஒரு அரேபியன், கார்ல்மார்க்ஸ் ஒரு யூதன், கென்னடி ஒரு ஐரிஷ்காரன், லெனின் ஒரு ரஷ்யன், ஸ்டாலின் ஒரு ஜோர்ஜியன். இவர்கள் எல்லோரும் தாம் பிறந்த இனத்தினால் பெருமை அடைந்தார்களா, அல்லது தாம் நம்பிய கொள்கையால் பெருமை பெற்றார்களா? நீங்களும் ஒரு தமிழன். போதி தர்மரும் ஒரு தமிழன். போதி தர்மர், புத்த மதத்திற்கு சேவை செய்யாமல், உங்களைப் போன்ற தமிழனாக மட்டும் இருந்திருந்தால் அவருக்கு இந்த புகழ் கிடைத்திருக்குமா?

சீனிவாசன் said...

நண்பர் namasக்கு //மொழியை மொழியாக மட்டுமே பாருங்கள் ... அதில் மதத்தையும் சாதியையும் நுலைக்காதீர்கள்... //- அதையேதான் நானும் சொல்கிறேன், வெட்டி பெருமை பேச பெளத்தமதவாதியை தமிழினவாதியாக திரிக்க வேண்டாம்.

Kalaiyarasan said...

//இதேமாதிரி கருத்துக்களை திணித்து இன்னும் பத்து படங்களை அவர் எடுத்திருந்தார் என்றால் அப்போது அவருடைய படங்களை விரும்பி பார்க்கும் ஒருவர் அந்த கருத்துக்களின் பால் ஈடுபாடு கொள்ள சந்தர்ப்பம் அதிகம் .//

தமிழன் மனதில் அடிமை உணர்வை விதைப்பதற்கு பத்துப் படங்கள் எடுக்கத் தேவையில்லை. இந்த ஒரு படமே போதும். தமிழர்களின் அறிவியல் எப்படி மறக்கப் பட்டது? அதனை யார் அழித்தார்கள்? ஏன் அழித்தார்கள்? இவற்றை கட்டுரையில் எடுத்துக் காட்டியிருக்கிறேன். இந்த வரலாற்று உண்மைகள் தமிழனுக்கு மறைக்கப் பட்டு வந்துள்ளன. முருகதாசும் படத்தில் அதனை மறைக்கிறார். படத்தின் ஆதரவாளர்களும் மறைக்கிறார்கள். போதி தர்மர் ஒரு புத்த மத துறவி என்ற தகவலைக் கூட, கண்டும் காணாமல் பாசாங்கு செய்பவர்களை நீங்களே இங்கே பார்க்கிறீர்கள் தானே? இவர்கள் எல்லாம் தமிழனின் இழந்த பெருமையை மீட்டெடுக்கப் போகிறார்களா? முருகதாஸ் வரலாற்று உண்மைகளை படத்தில் காட்டியிருந்தால், (அதற்கு தான் டாவின்சி கோட் படத்தை உதாரணமாக காட்டினேன்) அப்போது தெரிந்திருக்கும், நீங்கள் போற்றும் தமிழரின் ஒற்றுமையின் தார்ப்பரியம்.

//இலங்கை பிரச்னை பற்றி ஒரு சில வசனங்களே திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது .அவற்றையே இலங்கையில் தணிக்கை பண்ணிவிட்டார்கள்.அந்த சில வரிகள் தணிக்கை பண்ணும் அளவிற்கு இருந்திருக்கின்றதுதானே?.//

கோடிக்கணக்கான தமிழர்கள் வாழும் இந்தியாவில் கிடைக்கப்போகும் இலாபம் எவ்வளவு? வெளிநாடுகளில் காண்பிக்கப் படுவதால் கிடைக்கும் மேலதிக வருமானம் எவ்வளவு? இலங்கையிலே இந்தப் படம் தடை செய்யப்பட்டாலும், அவர்களுக்கு எந்த வித நஷ்டமும் இல்லை. இலங்கைப் பிரச்சினை பற்றிய "பஞ்ச் டயலாக்குகளை" இடைச்செருகல் செய்வதன் மூலம், "தமிழ் உணர்வாளர்களையும்" படத்தை பார்க்க வைக்கலாம். அதனால் கிடைக்கும் மேலதிக வருமானத்தை இழப்பதற்கு முருகதாஸ் முட்டாளா? பார்வையாளர்களை நீங்கள் மட்டும் தான் தமிழர்களாக கருதுகிறீர்கள். முருகதாசை பொறுத்த வரையில் ரூபாய் நோட்டுகள்.

//முருகதாஸ் ஒரு மக்கள் புரட்சியை இலங்கையில் ஏற்படுத்திவிடுவார் என்றா இலங்கை அரசாங்கம் தணிக்கை பண்ணியது ?அல்லது இது ஒரு வெறும் commercial cinema என்பது இலங்கை அரசாங்கத்திற்கு தெரியாதா ?//

இலங்கையில் நடந்த போரை விமர்சிக்கும் சில சிங்களத் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றிற்கு கான் உலகத் திரைப்பட விழாவில் பரிசுகளும் கிடைத்துள்ளன. ஆனால், அந்த தயாரிப்பாளர்களுக்கு இலங்கை அரசு கடும் நெருக்கடிகளை கொடுத்தது. இந்தியாவில் எத்தனையோ இயக்குனர்கள், இந்திய அரசை விமர்சிக்கும் படங்களை எடுத்து பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அந்தளவு தைரியம் முருகதாசிடம் கிடையாது. தமிழனுக்கு துரோகம் இழைத்த இந்திய அரசை விமர்சித்து வசனம் அமைத்திருந்தால், இந்நேரம் படம் தடை செய்யப் பட்டிருக்கும். "தமிழனுக்கு துரோகம் இழைத்த ஒன்பது நாடுகளின்" பெயரைக் கூட சொல்ல முடியவில்லை. அது மட்டுமல்ல, "இந்திய இராணுவத்துடன் சண்டை போடுமாறு" சீன வில்லனிடம் கூறுவார். இதே இந்திய இராணுவம் தானே ஈழத் தமிழர்களையும் அழித்தது?

//அந்த ஒரு சில நிமிடங்கள் தமிழ் உணர்வை அந்தவரிகள் சற்று தூக்கி நிறுத்தியது என்பது தான் உண்மை .நோக்கம் எதுவாக இருந்தாலும் அதிலும் ஒரு நன்மை கிடைத்திருக்கிறதுதானே?//

அந்த போதை தரும் சுகமே போதும் என்கிறீர்கள். இதற்காக நீங்கள் காசு கொடுத்து படம் பார்க்க தேவையில்லை. ஏற்கனவே வைகோ, சீமான் என்று பலர் இலவசமாக அந்த போதை மருந்தை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் "தமிழ் இனவுணர்வு" எனும் மெகா சீரியல் கடந்த முப்பதாண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல, இந்தியத் தமிழனுக்கும் எந்த நன்மையையும் இதுவரை விழைந்ததில்லை. இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான தொப்புள்கொடி உறவுகள், இருபது மைல் கடல் எல்லை தாண்டி வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் தானே, சிங்கள அரசு தமிழர்களை கொன்று குவித்தது?

Kalaiyarasan said...

// இயக்குனர் தனது இருப்பையும் தாயாளிப்பாளரின் இருப்பையும் நிலை நிறுத்திக்கொண்டு கருத்துக்களை கூறியிருக்கிறார் அவ்வளவுதான் .இதை பல்லவர்களின் சமண,பௌத்த அழிப்பிற்கு இனையாயாக நீங்கள் பார்ப்பதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.//

கிறிஸ்தவ மதத்தை வில்லனாக சித்தரித்த டாவின்சி கோட் எடுத்தவர்களின் துணிவு, இயக்குனரிடம் அறவே கிடையாது. இதனை ஆரம்பத்திலேயே கூறி விட்டேன். பல்லவர்களின் புத்த, சமண மத அழிப்புக்கும், படத்திற்கும் இடையில் தொடர்பே இல்லையா? அப்படியானால், இயக்குனர் சொல்ல விளையும் "தமிழர்களின் அறிவியல் அழிவு" யாரால் ஏற்பட்டது? மடத்தமிழன் தானாகவே அவற்றை அலட்சியப் படுத்தினானா?

//இந்துக்களை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் இந்த படம் இந்துக்களை பற்றி குறிப்பிடவில்லை .தமிழர்களை பற்றிதான் குறிப்பிடுகிறது .தமிழர்கள் எல்லோரும் வரலாற்றில் இந்துக்களாகவா இருந்தார்கள் ?//

நானும் அதைத் தான் சொல்கிறேன். தமிழர்களின் அறிவியல் அழிக்கப் பட்டதே திரைப்படத்தின் அடிநாதம். தமிழர்கள் புத்த, சமண மதத்தவர்களாக இருந்த காலத்தில் தான் அறிவியல் வளர்ந்தது. பிற்காலத்தில் வந்த இந்து மதம், தமிழர்களை கட்டாய மதமாற்றம் செய்தது மட்டுமல்ல, தமிழர்களின் அறிவியலையும் அழித்தது. இந்த உண்மையை முருகதாசும், நீங்களும் புறக்கணிக்கும் காரணம் என்ன? ஏழாம் அறிவு திரைப்படம், போதி தர்மரை மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கின்றது.

//நீங்கள் ஏன் உங்களுடைய இந்துத்துவ எதிர்ப்பை இந்த திரைப்படத்துடன் தேவை இல்லாமல் தொடர்புபடுத்துகின்றீர்கள் .//

ஆக்கிரமிப்பாளர்களை காப்பாற்ற முனைவது தெரிகின்றது. பௌத்த-சிங்கள பேரினவாதத்தை எதிர்க்காமல் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி பேச முடியுமா? அதே போல, தமிழகத்தில் நடந்த இந்து மதவெறி அடக்குமுறையை எதிர்க்காமல், தமிழனின் இழந்த அறிவியல் பற்றி பேச முடியுமா? எப்போதும் அடக்குமுறையாளர்களின் அடிவருடிகள் மட்டுமே அவற்றைப் பற்றி பேச மாட்டார்கள்.

//நீங்கள் குறிப்பிட்டது போல் சாதாரண ரசிகர்களின் இந்துத்துவ உணர்வை இந்த படம் தூண்டப்போவதும் இல்லை .நீங்கள் தான் புதிய கோணத்தில் சிந்தித்து முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சு போடுகிறீகள் //

நான் சில சாதாரண கேள்விகளை கேட்டிருந்தேன். அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. போதி தர்மன் ஒரு தமிழன் மட்டுமல்ல, பௌத்த மத ஞானி. இந்த உண்மையை கண்டுகொள்ளாதது போல பாசாங்கு செய்பவர்களின் உள்நோக்கம் என்ன? தமிழர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக irunthaal என்ன? அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை? நீங்கள் தான் மதத்திற்கு அப்பாற்பட்ட தமிழ் உணர்வாளர் ஆயிற்றே? தமிழர்களின் அறிவியலை யார் அழித்தார்கள் என்ற வரலாற்று உண்மையை திரைப்படம் மறைக்கும் உள்நோக்கம் என்ன? அவற்றை இந்தக் கட்டுரையில் எடுத்துக் கூறியும், நம்பாதவர்களாக, அல்லது கண்டுகொள்ளாமல் நடிக்கிறார்கள். எதற்காக? போலி தமிழ் இனவுனர்வாளர்களின் அடிமனதில் உள்ள இந்துத்துவா சிந்தனை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

Thabo Sivagurunathan said...

உங்களுடைய பின்னூட்டங்களுக்கு விமர்சனங்கள் என்னிடம் இருக்கிறது .நேரமின்மையால் உடனே பதிலளிக்க முடியவில்லை .அலுவலக அலுவல்களை முடித்துவிட்டு வருகிறேன் ,மேலும் விவாதிக்கலாம் !

Krishan said...

உங்கள் கருத்துக்கள் ஒரு பக்க சார்பானவை இவளவு நாலும் போதிதர்மரை பேசாத நீங்கள் இன்று அதை பற்றி பேச எடுக்க தூண்டுகோலாக அமைந்தது இந்த ஏழாம் அறிவு திரைகாவியதினாலே மறைக்கப்பட்ட உண்மையை இந்தியர்களுக்கு வெளிக்கொண்டுவந்த முருகதாசுக்கு நன்றி கூறுவதை விடுத்தது எதிர்ப்பது சரியாகப்படவில்லை. படத்தில் சீனர்கள் போதிதர்மன் இந்தியாவில் இருந்து வருவதை மறைகின்றார்கள் என்று காட்டவில்லையே. உம்முடைய பதிவு பெரிதும் முரணாகவே காணப்டுகின்றது. இது சினிமா போட்டிக்காக போடப்பட்ட பதிவாகவே அப்பட்டமாக தென்படுகின்றது

Krishan said...

உங்கள் பதிவு ஒருபக்க சார்பாகவே காணப்டுகின்றது. தமிழனாக பிறக்கும் ஒவ்வருவனும் ஹிந்துவும் இல்லை சீனர்களாக பிறக்கும் ஓவருவனும் பௌத்த மதத்தை சார்ந்தவனும் இல்லை ஆனால் அவன் பேசும் மொழியே அவனை அடையாளம் காட்டும் ஓர் கருவி ஆகும் அப்படி இருக்கையில் முருகதாஸ் போதிதர்மன் தமிழன் என்று கூறுவதில் குறைகான்பது தவறு. மேலும் ஏழாம் அறிவு படத்தில் சீனர்கள் போதிதர்மன் இந்தியாவில் இருந்து தான் வந்தார் என்று அவர்கள் மறைபதாக எங்கும் கூறப்படவில்லை. ஏழாம் அறிவு என்ற திரை காவியம் உருவாக்கப்படவில்லை என்றால் இன்றும் போதித்ர்மன் யார் என்று இதுவரைக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உலகத்தமிழர்களும் தெரிந்து கொண்டிருகமாட்டர்கள். உம்முடைய பதிவும் எழுதபட்டிருகாது. இப்பதிவு முற்றிலும் சினிமா பழிவாங்கல் போல் அப்பட்டமாக தெரிகின்றது.

Inba said...

Watch a sentence!! Reservation, recommendation and corruption leads to the talented minds to run away from this country!!! This dialogue comes when sruthihasan describe her research in front of the scientist!! None of them criticizes that!! the dialogue is really absurd!!

Kalaiyarasan said...

கட்டுரையை எதிர்த்து பின்னூட்டமிட்ட அறிவாளிகளிடம் இருந்து, கட்டுரை எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?

- தமிழர்கள் பெருமைப்படுமளவிற்கு, போதிதர்மன் தமிழ் மொழிக்காற்றிய தொண்டு என்ன?

- போதி தர்மன் ஒரு புத்த மதத் துறவி என்பதையும், அவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காலத்தில் பௌத்த மதம் அரச மதமாக இருந்ததையும் 7 ஆம் அறிவு மறைக்கும் காரணம் என்ன?

- தமிழர்கள் போதி தர்மனை ஏன், எப்படி மறந்தார்கள்? இடையிலே நடந்த மாற்றம் என்ன?

- தமிழர்களுக்கு போதி தர்மன் பற்றி தெரியாததற்கு காரணம், கட்டாய இந்து மதமாற்றம் என்பது எனது தரப்பு வாதம். இல்லை என்றால், ஆயிரக்கணக்கான வருடங்களாக சீனர்களால் நினைவு வைத்திருக்க முடியும் என்றால், தமிழர்களால் முடியாமல் போன காரணம் என்ன?

- போதிதர்மனை கடவுளாக வணங்கும், அவர் கற்றுக் கொடுத்த கலைகளை வளர்க்கும் சீனர்கள் செய்தது துரோகமா? "போதிதர்மனுக்கு தமிழர்கள் துரோகம் செய்து விட்டது" போன்ற கருத்தை தான் திரைப்படம் உருவாக்குகிறது. நான் அதனை மறுக்கிறேன். இவை எல்லாம் இந்துமத ஆக்கிரமிப்பின் காரணமாக நடந்த மாற்றங்கள் என்பது எனது வாதம். அதனை மறுக்கும் நீங்கள் கொடுத்த விளக்கம் என்ன?

- படத்தில் சூர்யா பேசும் வசனங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, "இந்த அறிவியலை எல்லாம் மடத்தமிழன் தனது அலட்சியத்தால் மறந்து விட்டான்." என்று தமிழன் மேல் பழி போடுவதாக தெரிகின்றது. இது தமிழனை இழிவு படுத்துவதாக உங்களுக்கு தெரியவில்லையா?

அ. வேல்முருகன் said...

ஒரு நேர்மையான விமர்சனமாகவே இருக்கிறது. ஆனால் பின்னுட்டமிட்ட பெரும்பான்மையானவர்களின் விமர்சனங்கள் வேடிக்கையாகவே தோன்றியது.

இந்தியாவில் தோன்றியதாக சொல்லப்படும் மதம் ஏன் இங்க பின்பற்றப்படவில்லை என்பதை யாரும் சிந்தித்து பார்க்க வில்லை.

90 களில் மத்தியில் சீன மொழியில் போதி தர்மரை பற்றி படம் வந்திருக்கிறது என்றால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை. அவர்கள் அறியாதது எற்கதக்கதல்ல என்ற தொனி.

தங்கள் கேள்வி அவர்கள் பதில் அளிக்கப் போவதில்லை

அவர்கள் எதிர் பார்த்து வந்த விமர்சனம் இதுவல்ல என்பதால்
அவர்கள் அறிந்து கொள்ள போவதுமில்லை. அறிய முயற்சி செய்யப் போவதுமில்லை

Jagadeesh Lakshmanan said...

தங்கள் இடுகையில் போதிதர்மர் பெருமையைக் காட்டிலும், பௌத்தமதத்தில் தங்க்ளுக்கு இருக்கும் அக்கரை நன்கு வெளிப்படுகிறது.

பின்னூட்டங்களில் போதிதர்மர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்ன என வினவியது நகைப்புக்குறியதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவர் தமிழர் எனும் காரணத்திற்காக தமிழுக்காக உழைக்கவேண்டும் என்று தாங்கள் எதிர்நோக்கினால், தமிழகத்தில் பாதி தமிழர்களை விரட்டியடிக்கவேண்டியது தான்! உலக அளவில் சாதித்த எத்துணையோ நபர்களை நாம் இந்தியர் என்றும் தமிழர் என்றும் மார்தட்டவில்லையா? இரண்டு தலைமுறைக்கு முன்னே அமெரிக்கக் குடியுரிமை வாங்கிய இராமகிருஷ்ணன் வெங்கட்ராமனை நாம் கொண்டாடவில்லையா? அதே முறையில் தான் போதிதர்மன் எனும் வீரனை, ஒரு துறவியை இப்படம் கொண்டாடியிருக்கிறது!

போதிதர்மர் பிறப்பால் ஒரு பார்ப்பனன் என்று கூறும் நீங்கள், அவர் பௌத்தர் என்பதை ஏழாம் அறிவு மறைப்பதாக எவ்வாறு கூறுகிறீர்கள்? அவர் பௌத்தர் என்பதை மறைக்க எண்ணுவது வடிகட்டிய முட்டாள்தனம்! போதீதம்மா (போதீதர்ம:) எனும் பெயரே புத்தனின் நெறிகளை அறிந்தவன் என்று பொருள்படும் நிலையில்? யாரை சிரிக்க வைக்க இந்த கதை????

அவர் பல்லவ இளவரசர் என்பதற்கு ஆதாரத்தை கேட்கிறீர்கள்? விக்கிபீடியா-வில் தாரளமாக பாருங்கள். அவர் பல்லவ மன்னரின் மூன்றாம் மகன் என்பதற்கான ஆதரங்களை!

பிறகு என்ன? பௌத்தம் பல்லவர் காலத்தில் அரசு மதமாக இருந்தது??? தயை கூர்ந்து இதுபோல் யாரும் கதை கட்டாமல் இருங்கள்! பௌத்தமும் பல மதங்களுள் ஒன்றாக இருந்தது, தவிர பௌத்த மதத்தை அரச மதமாக அறிவித்த எந்த போத்தரையனையும் வரலாறு அறியவில்லை!

ஏழாம் அறிவு திரைப்படத்தின் நோக்கம் தமிழரது கலைகள் தமிழர் அறியாவழியில் வாழ்ந்து வருகிறது என்பதை தெரியப்படுத்தவே தவிர, பௌத்த மதத்தவரை இந்துவாகவோ சமணராகவோ காட்டுவது அல்ல! போதிதர்மர் உடை இந்துத் துறவி போல் இருப்பது பற்றி அவரே கவலைக்கொள்ளவில்லை?! அவரது ஓவியங்களையும், மற்ற சீன வரலாற்றுக் குறிப்புகளையும் கொண்டே படத்தின் முதல் இருபது நிமிடங்கள் படமாக்கப் பட்டிருக்கின்றன. மொத்தத்தில், இது உலகின் மிகப்பழைமையான இனங்களில் ஒன்றான தமிழினத்திற்கு ஏற்றப்படும் ஒளிதீபமே தவிர, பிறிதொரு மத்தத்தினருக்கு ஏற்றப்படும் வழிபாட்டுத் தீபம் அல்ல!!!

Kalaiyarasan said...

As a sign of their renunciation of wordly values, monks and nuns shave off all their facial and cranial hair, and wear the traditional ochre or orange robe.
- The Elements of Buddhism, by John Snelling(ISBN 1-86204-027-3)

nivi said...

7am arivu therai padathula bodhidharmar thamizharnu matu dha solaragala thavira avar hindhu illa budha madhathai sandhavar yendra pakathuka varala...apadi avaga avar budha madhathai pinpatriyadha maraika nenaithirundha..6ai nurandil bothidharmar oru buddhar claiyai vanaguvadhai kanbithu iruka mataga..yean ivalo nala indha bodhidharmara pathi nega kuda pasunadhu kedayadhu.but INDHA PADAM PATHA PINBUDHA UNGALUKUM BODHIDHARMAR NEYABAGATHUKU VANDHARO??????????
endha padathi nokam oru thalaicrandha thamizhanai makaluku neyabam paduthathana thavira vara endha nokamun irupadhaga thariya villai....

Kalaiyarasan said...

முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு பிராமணக்குடியினர் என்று சிலர் கருதுகிறார்கள். பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
http://ta.wikipedia.org/wiki/பல்லவர்

The Pallavas of Kanchi

In the 3rd century AD, there arose an obscure kingdom in the southern part of India. Headquartered at Kanchi, their kings called themselves Pallavas. Conspiracy theorists have suggested that the Pallavas of Kanchi might well have been an offshoot of the Parthians or Pahlavas of Iran. They point out evidences as their preference for Aryan motifs than Dravidian ones and their choice of the Parthian mascot the Lion as the emblem of the Pallava kingdom. Moreover, the greatest Pallava king Narasimhavarman styled himself 'Mahamalla' or 'Great Wrestler'. It is interesting to know that in modern Hindi and Urdu the word 'Pehelvan' derived from 'Pahlava' means 'wrestler'.

The Pallava kingdom emerged as the paramount power in South India in the 6th century AD. Its kings Mahendravarman and Narasimhavarman conquered most of peninsular India and even colonized Sri Lanka, Burma and parts of South-East Asia. After wielding supremacy over these lands for over two hundred years, the Pallava kingdom finally fell in the 9th century AD giving away to the expanding Chola Empire. A connection between the Pallavas of South India and the Pahlavas of Iran hasnt been discarded yet, however, any concrete proof confirming such an association is yet to be found.

http://en.wikibooks.org/wiki/Iranian_History/The_Later_Arsacids#Parthians_after_the_fall_of_the_Empire

Fact Finder said...

Hinduism, those who know themselves will know the reality. For Upanishad, reality is something that cannot be learnt. Anybody cannot teach reality but instead, reality must be discovered through the steps mentioned earlier. Nevertheless, one must go through the long process of physical, mental and moral preparation. One must learn how to differentiate self from non-self, reality from appearance, must possess strength to reject all non-essential and not real, therefore the process of self-realization can be attained and consequently embark on the searching process of reality which is ātman-brahman.

Then let us stop to talk About Hinduism ,start to think by our own mind to searching about truth and reality ,we shall find the reality and oneness of monotheism and real superior and almighty

chola.nagarajan said...

நல்ல விமரிசனம். சரியான பார்வையில் பதிவாகியுள்ளது. இது ஏதோ தமிழர்களுக்காக மெனக்கெட்டிருக்கிறார்கள் என எண்ண வேண்டாம். இப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் போதிதர்மன் ஒரு தெலுங்கன் என சொல்லப்படுவதாக அறிகிறேன். நம்ம இயக்குநர் லட்சணம் அம்பலமாகிபோச்சு. இவர்கள் வியாபாரத்திற்காக எதுவும் செய்வார்கள்.
-சோழ. நாகராஜன்

Fact said...

Dont mix cinema and history
By 7 am arivu movie we know about one
indian monk bodhi dharmar.
Thats all, its a film only.
Not a history for bodhi dharmar.
But we definitely appreciate that movie. Because after that movie only
all of the tamilans need know about bodhi dharmar and also their own history.

ஜாபர் அலி said...

தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ்ப் பௌத்தம் தொடர்பான ஒரு முக்கிய ஆவணத்தை இங்கு முன்வைக்கிறது. சமீபத்தில் சென்னையின் ஆசிய நிறுவனம் (Institute of Asian Studies) நடத்திய ”ஆசியாவின் ஒருங்கிணைந்த பண்பாட்டிற்கு தமிழ்ப் பங்களிப்பு” எனும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட முக்கிய கட்டுரை ஒன்றும், அங்கு இந்தியாவிலேயே முதன்முறையாக காட்சிக்கு வந்த போதிதருமர் பற்றிய அரும் பொருள் காட்சியின் படங்களையும், அக்காட்சியின் முக்கியத்துவம் பற்றிய ஆவணத்தையும் இங்கு காணலாம். பௌத்த மரபில் பெருவழி எனப்படும் மஹாயான நெறியில் மிக முக்கிய அம்சமாக இருக்கும் ஜென் வழி ஒரு தமிழர் உருவாக்கிய வழி என்பதற்கான ஆதாரங்களை இங்கு காணலாம். இதற்கான ஆதாரங்கள் முற்றும் முழுவதுமாக தமிழகத்தில் அழிக்கப்பட நிலையில் சீன, கொரிய, ஜப்பானிய ஆவணங்கள் இப்பேருண்மையை நிலைநாட்டுவதில் துணை புரிகின்றன. எனவே இக்கருத்தரங்கில் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்கள் சரித்திர முக்கியதுவம் வாய்ந்ததாக அமைகிறது. இந்திய அமெரிக்கரான ஜோசப் ஆரண்ஹ பெருமுயற்சி எடுத்து சீனா இருமுறை சென்று பல விஷயங்களை ஆவணப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமானது, போதிதருமர் களப்பிரர் காலத்தைச் சேர்ந்தவர் என்பதும். இவரே ஜென் நெறியின் முதல் மகன் என்றும், இவரே தமிழக வர்மக்கலையின் நுணுக்கங்களை சீனாவில் பரப்பியவர் என்பதும் முக்கியமானவை. போதிதர்மர் பற்றிய ஆவணங்கள் தமிழகத்தில் முற்றும் முழுவதும் அழிக்கப்பட்டிருப்பதை மனதில் கொண்டு இவர் களப்பிரர் என்று கூறுகிறார். பின்னால் வந்த பல்லவ மன்னர்கள் களப்பிரர் பற்றிய ஆவணங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதாக இவர் நம்புகிறார். தமிழகத்தின் இருண்ட காலம் என்று களப்பிரர் காலத்தைச் சொல்வது மிகக்குறைந்த ஆவணங்கள் (வரலாற்று சான்றுகள்) கிடைப்பதன் காரணத்தினாலும் என்று கொள்ளலாம். மேலும் இவரது போதிதருமர் பற்றிய காட்சியில் ஷவோலின் கோயில் திரைச்சீலை ஓவியங்கள் எப்படி கருத்த நிறமுடைய ஒரு புத்த பிட்சு சீனர்களுக்கு வர்மக்கலையைக் கற்றுத்தருகிறார் என்பதையும் காட்டும். சீனர்களிடமிருந்து வேறுபடுத்த `தாமோ` என்றழைக்கப்படும் போதிதருமர் கருப்பாகவும், கால், கைகளில் முடி அதிகமாக இருப்பதாகவும் காட்டி இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது!

முழுக்கட்டுரைக்கு:
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=474&Itemid=615

ஜாபர் அலி said...

ஜோஸஃப் ஆரன்ஹ-வின் உரை...இங்கே...http://www.aaari.info/08-10-24Aranha.htm

Anban said...

போதிவர்மன் பல்லவ மன்னரின் மகன் என 7 ஆம் அறிவில் சித்தரித்ததில் தவறு ஒன்றும் இல்லை.அதிகமான செய்திகள் அவர் ஒரு பல்லவ மன்னர் குலத்தைச் சார்ந்தவர் என்றுதான் கூறுகிறது. அவர் ஒரு பிராமணராக இருக்கலாம் என்ற தகவல்தான் உளது.ரோகர் பாய்ஸ் என்பவரும் " Bothi Dharman was a Tamil Prince turned Budhist Monk" என்றுதான் குறிப்பிடுகிறார்.ஆனால் பிராமணர் அல்லாதவர் ஒருவர் பிரபலமானவராக இருந்தால் அவருக்குப் பூணூல் அணிவித்துப் பார்ப்பதில் அவர்களுக்கு நிகர்அவர்கள்தான். ஏனென்றால் அவர்களுக்கு அவர்கள்தான் உலகில் சிறந்த அறிவாளிகள், மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்ற எண்ணம்.

கணேஷ் said...

இந்த பதிவை விட அதன் பின்னூடங்கள், வாத பிரதி வாதங்கள் சுவையாக உள்ளன

Venkatesh said...

hello sir neenga enna than ithula solla varreenga onnu tamil ah pathi pesanum illana podhi dharmara pathi pesanum athum illana eela thamilara pathi pesanum . ana inga neenga ellaraum pathi pesi over oh scene create panreenga. apdi ungalukku tamil arvam irunthuchuna netherland la irunthu tamil nadukku vanthu tamil solli kudukalamey?katha udurathukkum oru alavu vendum ok va sir..

Palani velu said...

It is a shame that we don't know our history, made not to know them. The educational system now available carefully tailor-made and avoid the works of our past. Who did this? Why? Is it not that, if we know worth of them we will not be what we are! A system is steadily at work in the form of a religion to keep us under their control. A generation without knowledge of its history cannot survive.
Hindu religion should survive at any cost. That is why they push everything aside which belittle them, including bothitharma and his teaching! Why should he went otherwise to unknown country, China because he was not accepted or followed here.

Unknown said...

சிறப்பான ஆய்வும் பார்வையும். வாழ்த்துகள் தோழர் .

Unknown said...

Anyhow முருகதாசின் 7ம் அறிவு film is good only.
before releasing d movie we all dont know about bodhidharmar.But now this film makes us to debate about this useful matter.This was n great sucess to that director n d whole film team.HE tried to deliver some useful matter for all us.we always congratz and encourage d people who came up with new iformations and different creations.

Unknown said...

hi...good..

Krish said...

Nalla pathivu

Unknown said...

இது போன்ற கேவலமான ஒரு கட்டுரையை அல்லது ஒரு கருத்தை இது வரை நான் படித்ததும் இல்லை கேட்டதும் இல்லை ..................................

மதமா,தமிழா என்று வந்தால் தமிழே முதன்மை என்று சொல்லும் நமது தமிழ் இனம் ...........இதுதான் நமது தமிழ் மரபு ......

இந்த கட்டுரை இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் முற்றிலும் அமைக்கபட்டிருக்கிறது .......இந்துக்கள் மதம் மாற்றினார்கள் என்பது மிகவும் கேலிக்குரியது ........அதைவிட இந்தியா முழுவதும் பௌத்தம் பரவி இருந்தது என்பது சிரிபிற்குரியது ..........

இதில் முக்கிய சிரிபிற்குரிய செய்தி .........திருநானுக்கரசர் பௌத்தர்களை இந்துக்களாக மாற்றினாராம் ...............ஹா ஹா ஹா
என்னே உமது புலமை .........
இது பற்றாத குறைக்கு சம்பந்தரும் , சுந்தரரும் வேறு ..............

மூட தெரிந்து கொள் இந்தியாவின் (முக்கியமாக தென் இந்தியாவின் தமிழன் ) ஆதி இந்து மதத்தை சார்ந்தவன் என்று ...............

பௌத்தம் எப்போது வந்தது என்று உனக்கே தெரியும் ........சற்று திரும்பி பார் உன் வரலாற்றை ............

பௌத்தத்தை அவமான படுத்துவது என் கொள்கை அல்ல ........தேவை இல்லாமல் இது போன்ற இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட வேண்டாம் ..................

Unknown said...

I don't understand why everybody say "Hindu religion" when you talk about history? It's never been told that Hindu is religion nor a caste. Hindu's are the people whose believing, culture and type of worship are similar. There is no particular god.
That's the reason there is a saying " Only by birth a person can be hindu. not by converting". Please readout the books, epics whatever you guys are referring on their comments or blog, search for the word "Hindu" in any place. None of the books refers Hindu as religion. Only during 17th/18th Century, when Western countries invaded third world countries and they wanted to group the these people by any one religion, so that they can conquer easily and for some other reasons which again a big topic to be discussed.

Rajesh said...

poda loose
remove the article
JAI HIND(U)

Asanthan said...

Indha bathilai neengal vaasippeergalo ilayo, idhai vaasikka nerum matrorukkaaga padhigondren.
Ungal bhathil sariyanathu... aanal ilanga thamizhar idatthil thaandhan suttha,arivu poorvamaana thamizhan endra midhappu ullathaaga therivitthulleergal. Oru eezha thamizhan endra vagayil naan ondrai thelivupaduttha voeumbugindren, neengal paartha anaivarum ezhumaaraaga thenpattavargal endru ennugiraen, sila velai ungal kangalukko allathu butthikko thenpatta oru maayatth thotramaagavum irukkalaam. Naan koorum, pinvarum sila adippadaigalai kondu purinthukolveergal ena nambugiren.
©Ilangaitth thamizh: ithu thamizhaga makkal matthiyil oru vetru mozhi pondre paravalaaga unarappadugondrathu.munnar neengal pesiyathum ivvaaraana thamizhe... kaalppokkil thiribadainthamai em kuttrmalla. Ivvaaraana kittathatta suttha thamizh pesuvathaal ilangai thamizhan midhappu kaatugiraan endra paarvai ungalukku aerpattirukkalaam.
©kalaachaara pinnani:naangal em naattil thamizh edhirpu irunthaalum , naam thamizh marabuglayum, mozhi arivinayum siruvayathinarkku kalvi aaramaba kaalatthil irunnthe pothithu varugindrom. Avaralukkaana thamizh mozhi arivu adhigam. Thamizhagtthai pola thaniaar padasaalaigalukkaana munnurimayinai ilangayil vazhanguvathillai, arasu palligalai purakkanippathumillai. Thaniyar paadasaalaigalil aangila mozhimoolam katrkum thamizhaga kuzhanthigalukku, thamih katrpathu thamizh pesuvathu evvalavu siramamaanathu enbathu emakku theriyaatha vidayamalla. Ilangai thamizhar matthiyil thamzh mozhimoolamaana kalviye ookkuvikkappadugindrathu
©thamizhil pesa thayangum , thamizhil aangila vaarthai kalapppindri pesa thinarum thamizhargal palaraye indraya thamizhagam uruvaakkugindrathu. Thamizhai pizhayaaga uccharitthaal,athu vetkapada vaendiya vidayam enbathaikooda unara mudiyaatha nilayayum , 60%english 40% thamizh kalanthu pesum nigazhcchi thogupalargalaye indruthamizh tholaikkaatchigal uruvaakkugindaramayum nitharsanam. Ivvaraanavai ingu aerpaduvathu kuraivu.
© naanum koorugiren thamizhaga makkalidam ippothum ilangai thamizhargal mel anudhaabam mattume ullathu. Enakku therintha pala thamizhaga ilaignargal eezhatthyum,eezha poraattathayum patri ariyaathavargalaagavum, eezha poraattathai kocchai padutthubavargalaagavum, eezha thamizhargal mael kaazhpunarchiyayum, izhivaana ennatthayum kondavargalaagavume ullanar, cricket enum thesiyatthai adhigamaaga munnilaipadutthubavargalaagavume irukkindranar. Agathi mugaamgalai patri naam endrume marppathillai nanbare.

©edhu evvaru iruppinun inngum 5 vagayaana thamizh puzhakkathil ullathu. Ithil sogamaana vidayam ennavendraal, thamizhaga tholaikkaatchigalinaalum thamizh thiraippadangalin aatheekkatthinaalum.. aaraavathaaga thamizhaga makkalai pondru thamizh pesum samuthaayam ondru uruvaagi varugindrathu. Kalaachaara seerazhivum thittamidappatta murayil sirappaaga nadaipetru varugindrathu.

Idhe nilai thodarndhaal,:: Neengal kooriya "Midhappu" ellam izhanthu, verum pirappaal mattum eezhatthamizhanaaga iruppavargalaii kaanakoodiya baakkiyam ungalukku vegu tholavil illai