Sunday, March 02, 2014

சோழர்கள் தமிழர்களா? அல்லது தெலுங்கர்களா?

(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உலகப் புகழ் பெற்ற ராஜ ராஜ சோழனும் அவனது சோழப் பரம்பரையும், தமிழர்கள் என்பதை விட தெலுங்கர்கள் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.)

______________________________________________

பார்ப்பனர்களும், மதவெறியர்களும், சாதிவெறியர்களும், ராஜ ராஜ சோழனுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவதற்கான காரணம் மிகவும் தெளிவானது:

//ராஜராஜன் ஆட்சியில் ஆலயங்கள் அனைத்திலும் மாறுபட்ட பூஜைமுறைகள் தடைசெய்யப் பட்டு, ஆகமமுறை கட்டாயமாக்கப் பட்டது. இந்த ஆதிக்கக் கட்டமைப்புக்கு செவி சாய்க்கவும், செய்து முடிக்கவும் பிராமணர்கள் தேவைப் பட்டார்கள். அரசரின் கட்டளையை ஏற்று நடந்ததால், பிராமணர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப் பட்டன.... மதங்களைக் கொண்டு மக்களைக் கட்டுப்படுத்தவும் ஒற்றுமையோடு செயல்படவும் பிராமணர்களின் பங்களிப்பு அவசியம் என்று ராஜராஜன் நினைத்தார். இதனால் சோழர்கள் காலத்தில் ஆதிக்கத்தின் கருவியாக பிராமணர்கள் செயல்பட்டார்கள்.

ராஜராஜன் காலத்தில் பிராமணர் ஆதிக்கம் மட்டுமில்லாமல், வேளாளர்களின் ஆதிக்கமும் அதற்குச் சமமாக இருந்தது. நில நிர்வாகம் செய்யும் ஆதிக்கம் அவர்களிடம் இருந்தது. வேளாண்மை செய்யும் புதிய நில உரிமையாளர்கள் அனைவரும் வேளாளர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். பிராமணர்களுக்கும், வேளாளர்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருந்ததால், ஜாதி ஏற்றத்தாழ்வுகளும் அடிமைமுறைகளும் அக்காலக் கட்டத்தில் நிலவி வந்தன. ஒரு சாரார் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தப் பட்டார்கள் என்பது மறுக்க முடியாத இன்னொரு உண்மை.

அதிகச் சலுகைகள் அனுபவித்து வந்த பிராமணர்களையும், வேளாளர்களையும் எதிர்த்து நிறைய போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இவ்விருவரையும் எதிர்ப்பவர்கள், இருபதினாயிரம் காசுகள் தண்டம் செலுத்த வேண்டும் என்றும், தண்டம் செலுத்தத் தவறினால் நில உரிமை பறிக்கப்படும் என்று இது போன்ற கிளர்ச்சிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப் பட்டன. இதனால் சாதிப்பிளவும், உரிமைப் போராட்டங்களும் அக்காலகட்டத்தில் நிலவியது உண்மை தான்.//
- ச. ந. கண்ணன் எழுதிய ராஜராஜ சோழன் நூலில் இருந்து.
_________________________________________________________________________________

இந்தக் கட்டுரை முழுவதும், ராஜ ராஜ சோழன் போன்ற பிற்காலச் சோழர்கள் பற்றியது ஆகும். சோழர்கள் உண்மையிலேயே தமிழர்கள் தானா? அல்லது ஆரிய மயப் பட்ட தெலுங்கர்களா? சோழர்களின் வரலாற்றில் எந்த இடத்திலும், அவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. "தமிழர் திருநாள்" என்று கருதப் படும் தைப் பொங்கலைக் கூட சோழர்கள் கொண்டாடி இருக்கவில்லை.

 //தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாக எது இருந்தது? தைப்பொங்கல்? கிடையாது. .... சோழர் ஆட்சிக் காலத்தில் இந்திர விழாவுக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு ஆண்டின் தொடக்கத்தில் விழா எடுக்கிற மரபு பல ஆண்டுகளாக சோழ நாட்டில் இருந்து வந்துள்ளது. கி.பி. 13 ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான், வேளாளர் சமூகத்தினரால் தைப்பொங்கல் தமிழர்களின் முதன்மையான விழா ஆனது. இதனால் ராஜராஜ சோழன் காலத்தில் மட்டுமல்ல, சோழர் காலம் வரைக்கும் உழவர்களின் விழாவாகப் பொங்கல் இருந்தது கிடையாது.// - ச. ந. கண்ணன் எழுதிய "ராஜ ராஜ சோழன்" என்ற நூலில் இருந்து.

சோழர்கள் தமிழர்கள் என்று நீண்ட காலமாக நம்பப் பட்டது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் தேசியவாதிகள் (அவர்களும் உண்மையான தமிழர்களா என்பது சந்தேகம்) அந்தக் கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வந்துள்ளனர். ஆனால், வரலாற்றில் எங்கேயும் சோழர்கள் தமிழர்கள் என்று நிரூபிப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடையாது. மேலும் சோழர்கள் தெலுங்கர்கள் என்பதை, ஆந்திரப் பிரதேச வரலாற்று நூலும் கூறுகின்றது. (The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D.)

சோழர்கள் ஆண்ட ஆந்திரா மாநிலப் பகுதிகளை, நமது தமிழ் தேசியவாதிகள் யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. சோழர்கள் தமது தலைநகரத்தை ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு மாற்றி இருக்கலாம். தமிழ்ப் பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கலாம். சோழர்கள் பிராமணர்களை குடியேற்றினார்கள். ஆகம சைவ மதத்தை பின்பற்றினார்கள். சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால், அவர்களது குடிமக்களும், போர்வீரர்களுமாக தமிழர்களே பெரும்பான்மையாக இருந்துள்ளார்கள்.

ச. ந. கண்ணன் எழுதிய ராஜ ராஜ சோழன் என்ற நூலில், சோழர்களின் பூர்வீகம் பற்றி தெளிவாக குறிப்பிடப் படவில்லை. சோழ அரச பரம்பரையினர் தங்களுக்கு தமிழ்ப் பெயர்களை சூட்டிக் கொண்டிருக்கலாம். அதெல்லாம் சோழர்கள் தமிழர்கள் என்று நிரூபிக்க போதுமானவை அல்ல. சோழர்களுக்கு முன்னர் தஞ்சையை ஆண்ட முத்தரையர்கள் கன்னடர்கள் என்று குறிப்பிடப் படுகின்றது. பல்லவர்கள், முத்தரையர்களை வெளியேற்றுவதற்கு, சோழர்களை பயன்படுத்தி உள்ளனர். அநேகமாக, சோழர்களும் முத்தரையர்களின் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், வெவ்வேறு இனக் குழுக்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம். அந்தக் காலங்களில் உறவினர்களே ஒருவரோடு ஒருவர் பங்காளிச் சண்டையில் ஈடுபடுவது சாதாரண விடயம்.

ஆரம்ப கால சோழர்கள், பல்லவர்களின் அடியாட் படையாக இருந்துள்ளனர். சோழ பரம்பரையின் முதலாவது மன்னன் விஜயாலன், பல்லவர்களின் பேரில் முத்தரையர்களுக்கு எதிரான போரை நடத்தியுள்ளான். அதற்கு பிரதியுபகாரமாக, பல்லவர்கள் தஞ்சையை சோழர்களுக்கு பரிசளித்தார்கள்.  (சோழர்களின் புலிக் கொடி கூட, பல்லவர்களிடம் இருந்து கடன் வாங்கியது தான்.) பிற்காலத்தில் பலமான இராணுவ சக்தியாக வளர்ந்த சோழர்கள், பாண்டியர்களையும், பல்லவர்களையும் போரில் வென்று, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டார்கள். அதே நேரம், கன்னட சாளுக்கியர்களுடன் திருமண உறவுகள் வைத்துக் கொண்டார்கள்.

சோழர்களின் படைகளில், தமிழ்ப் போர்வீரர்கள் பெரும்பான்மையாக இருந்துள்ளனர். இந்தோனேசியா, மலேசியா, சீனா போன்ற நாடுகளுடனான வணிகத் தொடர்புகள் காரணமாகவும், நிறைய தமிழ் வணிகர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அதற்காக தமிழர்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். ஆனால், அதன் அர்த்தம் சோழர்கள் தமிழர்கள் என்பதல்ல. குடிமக்கள் தமிழர்களாக இருந்தாலும், அவர்களை ஆண்டவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. உலகில் உள்ள வரலாறு முழுவதும் மன்னர்களைப் பற்றி மட்டுமே எழுதப் பட்டுள்ளது. அன்று வாழ்ந்த மக்களைப் பற்றி யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. அதனால் தான் இந்தக் குழப்பம்.

தமிழகத்தில் சோழர்களின் வரலாற்றைக் கூறும் சரித்திர நூல்களில், "சோழர்களின் பூர்வீகம் பற்றி எதுவும் தெரியாது" என்று எழுதி இருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்களுக்கு எதுவும் தெரியாதா? அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லையா? ஏனென்றால், ஆந்திரா பிரதேச வரலாற்றைக் கூறும் சரித்திர நூல்களில், சோழர்களின் பூர்வீகம் குறித்த தெளிவான தகவல்கள் உள்ளன. 

ஆந்திரா வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும், சோழர்களின் பூர்வீகம் பற்றிய தகவல் மட்டுமே வித்தியாசம். மற்றும் படி, சோழ மன்னர்களின் பெயர்கள்,வரலாற்றுத் தகவல்கள் இரண்டு இடத்திலும் ஒத்துப் போகின்றன. ஒரு எழுத்துக் கூட வித்தியாசம் இல்லை என்பது தான் ஆச்சரியம்.

ஆந்திரா மாநில வரலாற்றைக் கூறும் நூல்களில் எல்லாம், சோழர்கள் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள். சுருக்கமாக: சோழர்கள் ஆந்திரப் பிரதேச வரலாற்றின் ஓர் அங்கம். ஆந்திராவில் அவர்களை "சாளுக்கிய சோழர்கள்" என்று அழைத்தார்கள். ஏனென்றால், தென்னிந்திய சோழ சாம்ராஜ்யம், சாளுக்கியர்களுடனான ராஜதந்திர உறவுகள் இன்றி சாத்தியப் பட்டிருக்காது. சோழர்களுக்கும், சாளுக்கியர்க்ளுக்கும் இடையில், பரம்பரை பரம்பரையாக நெருக்கமான திருமண உறவுகள் இருந்து வந்துள்ளன.

தமிழக சரித்திர ஆசிரியர்கள், சோழர்களின் தென்னிந்திய சாம்ராஜ்யத்தை சோழர்கள் மட்டுமே ஆண்டதாக கருதுகிறார்கள். அதற்கு மாறாக, அது ஒரு "சாளுக்கியர் - சோழர்களின் கூட்டு சாம்ராஜ்யம்" என்று, தெலுங்கு சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதனால் தான், ஆந்திராவில் சோழர்களை, "சாளுக்கிய சோழர்கள்" என்று அழைக்கிறார்கள். அது மட்டுமே வித்தியாசம். "ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், குந்தவை, கங்கை கொண்ட சோழபுரம்....." இது போன்ற வரலாற்றுக் குறிப்புகள், ஆந்திரா சரித்திர நூல்களிலும் அப்படியே எழுதப் பட்டுள்ளன.

அதாவது, சோழ மன்னர்களின் பெயர்களும், வரலாற்றுக் குறிப்புகளும் எந்த மாற்றமும் அடையவில்லை. ஆனால், ஆந்திராவில் தெலுங்கு சோழர்கள் என்றும், தமிழ்நாட்டில் அவர்களை தமிழ்ச் சோழர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமே வித்தியாசம். சோழர்களை ஒரு மொழித் தேசியத்திற்குள் திணிக்கும் போக்கு, பிற்காலத்தில் (இருபதாம் நூற்றாண்டில்) தோன்றி இருக்க வேண்டும். ஒரு பக்கம் தெலுங்கு தேசியவாதமும், மறுபக்கம் தமிழ் தேசியவாதமும் அரசியல் சக்திகளாக வளர்ந்து வந்தன. சரித்திர ஆசிரியர்களும் ஏதாவது ஒரு தேசியத்தை சார்ந்து எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.


மேலதிக தகவல்களுக்கு:

1. ராஜ ராஜ சோழன், ச.ந. கண்ணன்
2. A History of Vijayanagar: The Never to be Forgotten Empire, by Suryanarain Row 
3. The History of Andhra Country, 1000 A.D.-1500 A.D., by Yashoda Devi 
4. History of the Andhras, by Durga Prasad


பின்னிணைப்புகள்:


ராஜ ராஜ சோழன் தனது மகள் குந்தவியை சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளான். சாளுக்கிய, சோழ வம்சாவளியை காட்டும் வரைபடம். (நன்றி: History of the Andhras, by Durga Prasad)21 comments:

பொற்கோ said...

intha pathiva patiththathil sirippu thaan varukirathu. intha kaalaththil ippatiyum pathivelutha eppati mutikirathu!

தமிழ்க் காதலன் said...

வெறும் எழுத்தாளர்களின் கதைப்புனையும் கற்பனைகளுக்கு இடம் தரும் வகையில் இந்த பதிவின் போக்கு இருக்கிறது. வரலாற்று தடங்களை சரியாக உற்றுநோக்காமல் வெங்கியை பற்றிய வரலாறும் சரிவர புரியாமல், யாரோ ஒரு தெலுங்கை உயர்த்தி பிடிக்க விரும்பிய மனிதனின் அல்லது சமூகத்தின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டது மட்டுமே புலனாகிறது. தெலுங்கு சோழர்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகிறோம் என்பதும், சாளுக்கிய, துளுவ தேசியத்தோடான உறவுநிலை பற்றிய சரியான தெளிவில்லாமல், பொதுவாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் படியாக உள்ளது. இது ஒரு புகழ் தேடல் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

கலையரசன் said...

ஒரு கேள்வி. உங்களது பெற்றோர் காலத்தில் இருந்து சிங்களப் பிரதேசமான கொழும்பு நகரில் வாழ்ந்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்களை சிங்களவர்கள் என்று கருதிக் கொள்ள வேண்டுமா? இந்தக் கேள்வி உங்களுக்கு அபத்ததமாகப் படுவது போன்றது தான், சோழர்கள் பற்றிய உங்களது கருதுகோளும் உள்ளது. ராஜ ராஜ சோழன் தஞ்சாவூரில் இருந்து ஆட்சி செய்தான். இன்றைய தஞ்சாவூர் தமிழ் நாட்டுக்கு சொந்தமானது. ஆகவே சோழர்களும் தமிழர்கள் தான் என்று நிறுவுவது அபத்தமானது.

சோழர்கள் தமிழர்களாக இருக்கலாம், அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் தமிழர்கள் தான் என்று அறுதியிட்டு கூற முடியாது. அதற்குப் பல காரணங்களை தந்துள்ளேன். சோழர்களுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்கள் காலத்திலேயே, தஞ்சாவூரில் கன்னடர்கள் குடியேறி விட்டார்கள். இதனை நான் கூறவில்லை. ராஜ ராஜ சோழன் பற்றிய தமிழ் நூலில் எழுதியுள்ளது.

சோழர்கள் போன்று, முத்தரையர்களும் தமிழ்ப் பெயர்களை வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் கன்னடர்கள். தஞ்சையை சுற்றிலும் உள்ள பகுதிகளை ஆட்சி செய்த பல்லவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் ஈரானிய அரச வம்சத்தை சேர்ந்தவர்கள். தெற்கே இருந்த பாண்டியர்கள் மட்டுமே தமிழ் மன்னர்கள். இந்தப் பின்னணியை கொண்டு பார்க்கும் பொழுது, பல்லவர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்த சோழர்கள் தமிழர்கள் ஆக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு.

"சாளுக்கிய சோழர்கள்" என்பது, குலோத்துங்கனுக்கு பிந்திய சோழர்களை குறிப்பது அல்ல. ராஜ ராஜ சோழன் கூட சாளுக்கிய சோழ பரம்பரை தான். அதற்குக் காரணம், தென்னிந்தியாவில் சாம்ராஜ்யம் ஒன்றை அமைப்பதற்காக, சோழர்கள், கிழக்கு - மேற்கு சாளுக்கியர்களுடன் இராஜ தந்திர உறவுகளை பேணி வந்தனர். இன்று நாங்கள் சாளுக்கிய சோழர்கள் அவர்களை சாளுக்கிய சோழர்கள் என்று பிரித்து ஆராய்ந்து, இலகுவாக புரிந்து கொள்ளலாம். அது, அந்தக் காலத்தில் இருந்த, பிற சோழர் அரச பரம்பரைகளில் இருந்து, அவர்களை தனியாக பிரித்து அறிவதற்கான முயற்சி மட்டுமே. உண்மையில், அன்று எல்லோரும் தம்மைத் தாமே சோழர்கள் என்று தான் அழைத்துக் கொண்டிருப்பார்கள். எந்த சோழர்? என்று கேள்வி எழும் அல்லவா? மேலும், சோழர்கள் தமிழர்களா அல்லது தெலுங்கர்களா என்பது அவர்களது பரம்பரை சம்பந்தமானது.

சோழர்கள் தமிழர்களின் பகுதிகளை ஆண்டார்கள் என்பதை நான் எங்கேயும் மறுக்கவில்லை. தமிழர்களை ஆண்டார்கள் என்ற காரணத்திற்காக, ஆட்சியாளர்களும் தமிழர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அன்று வாழ்ந்த, சாதாரண தமிழர்கள் அதைப் பற்றி எல்லாம் அக்கறைப் படுபவர்கள் அல்ல. இருபதாம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்கள் அறிமுகப் படுத்திய தேசியவாதக் கண்ணாடி கொண்டு, நாம் பண்டைய காலத்தை பார்க்க முடியாது. அது தவறு. இன்றுள்ள சமுதாய அமைப்பு, அரசியல் கருத்துக்கள், அன்று இருக்கவில்லை. அன்றிருந்த சமுதாய அமைப்பு வேறு. அந்தக் காலத்தில், மன்னரோ, மக்களோ எந்த இனத்தை சேர்ந்தவர், எந்த மொழியை பேசுகிறவர் என்று யாரும் கவலைப் படவில்லை. அன்று யாருக்கும் அந்த உணர்வே இருக்கவில்லை.

இரவுப்பறவை said...

//ஆரம்ப கால சோழர்கள், பல்லவர்களின் அடியாட் படையாக இருந்துள்ளனர். சோழ பரம்பரையின் முதலாவது மன்னன் விஜயாலன், பல்லவர்களின் பேரில் முத்தரையர்களுக்கு எதிரான போரை நடத்தியுள்ளான்//

EARLY CHOLAS எனப்படும் ஆரம்பகாலச் சோழர்களின் காலம் தொடங்குவது 300 BCE.

ஆனால் பல்லவர்களின் மொத்த காலமே (உங்கள் விக்கியை மூலமாக கொண்டால் கூட) 2-9 CE தான்.
இவர்கள்(சோழர்கள்) அவர்களிடம்(பல்லவர்களிடம்) அடியாட்களாக இருந்தார்கள் என்கிறீர்களே இதற்கு தரவு என்ன?

CE க்கும் BCE க்கும் உங்களுக்கு வித்யாசம் தெரியும்தானே?

கலையரசன் said...

//EARLY CHOLAS எனப்படும் ஆரம்பகாலச் சோழர்களின் காலம் தொடங்குவது 300 BCE.//

மன்னிக்கவும். இந்தக் குழப்பம் எனது தவறு தான். இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே, இது பிற்கால சோழர்கள் சம்பந்தமானது என்று குறிப்பிட்டு இருக்கிறேன். எனினும் கொஞ்சம் தெளிவாக எழுதி இருக்க வேண்டும்.

பிற்காலச் சோழர்களின் ஆரம்ப கால சோழர்களை பற்றித் தான் அவ்வாறு குறிப்பிட்டேன். சங்க கால சோழர்களை அல்ல. பிற்கால சோழ பரம்பரையின் ஆரம்ப கால மன்னர்களான விஜயாலன் போன்றோர், பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சிற்றரசர்களாக இருந்துள்ளனர். பல்லவர்கள் உத்தரவுக்கு இணங்க போரிட்டு வந்தனர். அதனால் பல்லவர்களின் நம்பிக்கைக்கு உரிய சிற்றரசர்களாக இருந்துள்ளனர்.

இதற்கு ஆதாரம், சோழர்களைப் பற்றிய அனைத்து வரலாற்று நூல்களிலும் எழுதப் பட்டுள்ளது.

காரிகன் said...

கலையரசன்,
வழக்கம் போல எழுதுவதைப் போலே (இஸ்லாமிய சார்பாக) இதில் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டீர்களோ என்று தோன்றுகிறது. வரலாற்றை புரட்டிப் போடும் துணிச்சல் அதிகமாகவே இருக்கிறது உங்களிடம். என்ன ஒன்று. உங்கள் விருப்பங்களை எழுதுவதோடு கொஞ்சம் உண்மையையும் சேர்த்து எழுதலாமே.

suriyamohan said...

Kalai Brief History About முத்தரையர்கள். Thanks

Vijithan said...

ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ் என்ற ஒரு மொழி தான் தென் இந்தியாவிலே இருந்ததாக வரலாறு சொல்கிறது.ஏனைய மொழிகள் தமிழில் இருந்து தோன்றியதாக சொல்லப் படுகிறது.நீங்கள் ராஜ ராஜ சோழன் மட்டும் தான் சோழர் தொடக்கம் என்பது போல் எழுதியிருக்கிறீர்கள்.1ம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே கரிகால சோழன் ஆட்சியும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சோழர் ஆட்சி இருந்த்தா வரலாறு கூறுகிறது.தமிழ் சோழர்கள் ஆந்திராவில் ஆட்சி செய்ததாக ஏன் எழுத முடியாது.ஊகிப்பது எல்லாம் சரியென்று எழுதாதீர்கள்.பிழையான தகவல்களை மக்களிடம் சேர்க்காதீர்.

tamil tamilsuvinth said...

kalai arasan thaangal tamil thaane...muthalil tamilin thonmai patri therinthu kollungal.....appuram varalatrin methu ungal punai karthukalai pukuthalam...

vimmy said...

i am not sure about vijayalaya cholan as a telugu peson but i have clearly noticed that many historians wrote "last Chola king" lost the war against s kannada due to no co operation among army generals with the king because he was adopted from their blood relative in present andhra region/chalukyas

தென்காசி சுப்பிரமணியன் said...

இதில் திட்டுவதற்கு எதுவும் இல்லை. ஆனால் மேற்கோள் கொடுத்த நூலில் அனைத்தும் உண்மையல்ல. எடுத்துக்காட்டுக்கு கல்வெட்டுகளை கொண்டு உறுதிப்படுத்திய சோழர் பரம்பரையைத் தருகிறேன்.

1. இராராஜன்-->இராஜேந்திரன்-->இராஜேந்திரனின் இரண்டாவது மகன் இராஜேந்திரச் சோழன் (இவனது அண்ணன் போர்க்களத்தில் கொல்லப்பட்டான்)

2. இராராஜன்-->இராஜேந்திரன்-->இராஜேந்திரனின் மூன்றாவது மகன் இராஜாதிராஜன்

3. இராராஜன்-->இராஜேந்திரன்-->இராஜேந்திரனின் நான்காவது மகன் வீரராஜேந்திரன்-->அதிவீரராஜேந்திரன்-->வாரிசு இல்லை.

அதனால் அநாபாயச் சாளுக்கியன் என்ற சாளுக்கிய மன்னன் சோழனாகப் பதவியேற்றான். இவன் இராஜேந்திரச் சோழனின் மகளுக்கும் சாளுக்கியனுக்கும் பிறந்த தெலுங்கன்.

மேற்கோள் காட்டிய நூலில் உள்ள தவறுகள்:

1.விக்கிப்பீடியாவை மேற்கோள் காட்டியது. விக்கிப்பீடியா என்பது மூன்றாம் நிலைத் தரவுதளம். அதை மேற்கோள் காட்டுவது ஒரு வரலாற்று நூலுக்கு மிகவும் கேடானது. நான் விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக உள்ளவன் என்பதையும் நினைவுருத்துகிறேன்.
2. கல்வெட்டின் எண்ணை மேற்கோள் காட்டாது வரலாற்று ஆசிரியர் நூலை மேற்கோள் காட்டியது.

சோழர்கள் தெலுங்கரானது கி.பி. 1070ல் அநாபாயச் சாளுக்கிய குலோத்துங்கச் சோழன் பதவியேற்ற நாளின் பிறகே. அவன் பதவியேற்றதும் ஈழத்தை கைவிட்டான். தெலுங்கனான அவன் சாளுக்கிய நாட்டின் அரசியலிலேயே கவனம் செலுத்தியது தான் அதற்குக் காரணம். தமிழன் எக்கேடுகெட்டால் தெலுங்கனுக்கு என்ன?

அவன் பதவியேற்று அடுத்த ஆண்டு வலங்கை இடங்கை கல‌கங்கள் வெடித்தன. அப்படியும் அந்தத் தெலுங்கன் தமிழகத்தை கவனிக்கவில்லை. தெலுங்கன் பதவியேற்றதும் தமிழரை கைவிட்டான்.

இது உணர்ந்த்துவது யாதெனில் தமிழன் கையில் இருந்து தெலுங்கனுக்கு தமிழ்கத்தின் ஆட்சி போனால் தமிழகம் நாசமாகும் என்பது தான்.

தென்காசி சுப்பிரமணியன் said...

நீங்கள் ஆய்வாலர்கள் எழுதிய சார்புத்த்னமை நூல்களை படித்து மேற்கோள் காட்டுவதை விட்டு கல்வெட்டுகளை நேரே படித்து மேற்கோள் காடுவதே சிறந்தது.

Jaimani said...

திராவிடர்கள்...

நீங்கள் இப்படியெல்லாம் சண்டை போடுவீர்கள் என்றுதான்..... ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விட்டார்கள்.... திராவிடர்கள்...

நீங்கள் சொல்லுகிற எல்லாம் இங்கிருந்துதான் நகர்ந்தன......

திராவிடர்கள்...

அங்கேயே குறுப்பிட்டு விட்டார்கள் சாளுக்கிய சோழர்கள் என்று ..... இதில் மற்று கருது சொல்ல தேவை இல்லை....

நீங்கள் சொல்லுகிற பல்லவர்கள்...

ராஜா ராஜன் காலத்தில் அழிந்து போய்விட்டார்கள்.....

மிதுலன் said...

ஏற்கனவே தமிழன் தன்பலம்அறியாது பாகனுக்கு அடிமையான யானைபோல் வந்தேறி ஆரியர்களாலும் திராவிடர்களலும் இலவசங்களுக்கும் போதைக்கும் அடிமையாகி விடுபடமுடியாமல் தமிழன் கிடக்கும்போது தெலுங்கர்களையும் மலையாளிகளையும் இந்திக்காரர்களையும் தோளில் சுமக்கும் அடிமைகளாக மீண்டும் தமிழர்களை மாற்றும் போக்கிலான கட்டுரைகளை தயவுசெய்து தவிர்க்கவும் கலையரசனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்

pointbalaji said...

எவன் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் எழுதலாம் .( தமிழ் சங்கம் வளர்த்த சோழர்கல் ) ராஜராஜ சோழன் தேவர் ஒரு உருது முஸ்லிம். ஆப்க்கானிலிருந்து வந்தவன். தேவர் என்றால் உருது மொழியில் வந்தேறி என்று அர்த்தம். சந்தோசம்

SaraK said...

ராஜ ராஜ சோழன் திருவாசகம், தேவாரம் கண்டேடுத்த பின் 40 ஓதுவார்களை கொண்டு தினமும் பாடுவதற்காக அவர்களுக்கு தங்க இடம், உணவு மேலும் பல வசதிகள் செய்து கொடுத்ததாக. தருமபுரம் ப. சுவாமிநாதன்(http://www.kaumaram.com/audio_k/dsaudio03_u.html) எடுத்த ஒரு சைவ பாட வகுப்பு ஒலிப்பதிவில்(audio) கேட்டுள்ளேன். பல்லவர்கள் கல்வெட்டில் இருக்கும் வட சொற்க்கள் தஞ்சை கல்வெட்டில் கிடையாது..

ஆனாலும் ஒரு சந்தேகம் இருக்க தான் செய்கிறது... இந்த ராஜ ராஜ- 'ஜ' என்னும் வட சொல் எப்படி ஒரு தமிழ் மன்னனின் பெயரில் வந்திருக்கும்...

Aravindhan S said...

ராஜ ராஜ சோழனின் இயற்பெயர் அருண் மொழித்தேவன்.பிராமணர்களின் அறிவுருத்தலால் தன் பெயரை இராஜ ராஜன் என மாற்றிக்கொண்டார்.

tamilselva said...

குலோத்துங்கனுக்கு பிறகு தெலுங்கு சோழர் மரபு உருவாகிறது என்பது தெளிவு அரைகுறையாய் வரலாற்றை படித்துவிட்டு இப்படி எழுதவது தவறு தலைப்பை மாற்றவும் அல்லது கட்டுரையை நீக்கவும்

Siva Esan said...

முழுமையானதாக படிக்க வில்லை இவர் சோழர்கள் பற்றி

Siva Esan said...

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன நமக்கா இந்த நிலை

jayaram jai said...

ஆங்கிலத்தில் அடிகோள் காட்டியபோதே தெரிகிறது இது முற்றிலும் போலியான கட்டுரை என்று....ஆதாரம் இருந்தால் சோழர் கால கல்வெட்டு காட்டுங்க